Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் மாநிலம், இரண்டாக பிரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

President aproves revoking all provisions of Article 370

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. குடியரசு தலைவர் ஒப்புதல்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கி குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

சட்டப்பிரிவு 370ன்கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இதனால் ரத்தாகிறது. குடியரசுத் தலைவரும் உடனடியாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த அதிரடி மற்றும் அவசர நடவடிக்கைகளை பார்த்தால் மீண்டும் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழ்நிலை உருவாகி உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/president-aproves-revoking-all-provisions-of-article-370-359194.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kashmir Special Status removed: What will heppen next in the valley?

மத்திய அரசு அதிரடி.. நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370.. 
காஷ்மீரில்... இனி என்ன எல்லாம் நடக்கும் தெரியுமா!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீரில் நிறைய அதிரடி மாற்றங்கள் வரும் காலங்களில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நிறைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகளுக்கு பிறகுதான் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிற மாநிலங்களைப் போல அல்லாமல் சில சிறப்பு உரிமைகள் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டன. அரசியல் சாசனப்பிரிவுதான் 370 இந்த சிறப்பு உரிமைகளை காஷ்மீருக்கு வழங்கி வருகிறது.

தற்போது இதை மத்திய அரசு மொத்தமாக நீக்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்.

ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது.

இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கு பொருந்தும்.

மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி. ஆனால் இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.

இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது என்று நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இனி அனைத்து துறை சார்ந்த மீது மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்கு கொண்டு வர முடியும்.

இனி வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அந்த ஆண்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியும். முன்பு இந்த அதிகாரம் கிடையாது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/kashmir-special-status-removed-what-will-happen-next-in-the-valley-359188.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

JK to be a union territory with legislature and Ladakh to be union territory without legislature

2 ஆக பிரிக்கப்படும் காஷ்மீர்.. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் அறிவித்துள்ளார்.

அதிரடி திருப்பமாக தற்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.

காஷ்மீரை இரண்டாக பிரிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு சில சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதில் முதலாவது காஷ்மீர் பிரிவினைவாதிகள் இதனால் மொத்தமாக முடக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு இடையிலும் சிக்கல் ஏற்படும். சிலர் ஜம்முவிற்காக போராடுவார்கள், சிலர் காஷ்மீருக்காக போராடுவார்கள், இன்னும் சிலர் லடாக்கிற்கு உரிமை கோருவார்கள். இதனால் மத்திய அரசின் கை ஓங்கும்.

இதன் மூலம் நிர்வாக ரீதியாகவும் இரண்டு பகுதிகளை எளிதாக நிர்வகிக்க முடியும் என்று பாஜக கருதுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/jk-to-be-a-union-territory-with-legislature-and-ladakh-to-be-union-territory-without-legislature-359190.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Home_Special_Block

அப்படியே 13ஆவது சட்டத்திருத்தையும் இலங்கை என்ற பக்கத்து நாட்டில் அமுலாக்கி விட்டால் .... மகிழ்ச்சி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

imran-kahan-720x450.jpg

காஷ்மீர் 370ஆவது சட்டப்பிரிவு இரத்து: பாகிஸ்தான் எதிர்ப்பு

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவு இரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளும்  ஐ.நா.அமைப்பும் தலையிட வேண்டுமென பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில்,  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவு இரத்து செய்யப்படுவதாக அறிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா,  குறித்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு  இரு யூனியன் பிரதேசமாக செயற்படும் என குறிப்பிட்டார்.

இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் பாகிஸ்தானும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்,  ”ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் பிரகாரம் சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது.

ஆனால் தற்போது  எடுக்கப்பட்டுள்ள முடிவு, காஷ்மீர் மக்களின் ஒப்புதலையோ பாகிஸ்தானின் ஒப்புதலையோ பெற்று மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே இது சட்டவிரோதமானது. ஆகையால் இந்தப் பிரச்சினைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து குரல் கொடுக்கும்” என தெரிவித்துள்ளது.

http://athavannews.com/காஷ்மீர்-370ஆவது-சட்டப்பிர/

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தானே வைக்கும் ஆப்போ யாருக்கு தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு கொழுத்தால் புத்துக்குள் இருக்காது.

ட்ரம்ப் தலையீட இதுவே சரியான தருணம் ;  இம்ரான் கான்

காஷ்மீர் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதால் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் இப்பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லை கட்டுப்பாட்டை தாண்டி பொதுமக்களை தாக்கியதை வன்மையாக கண்டிகின்றேன். அத்தோடு மனிதாபிபானம் மீறப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையிலேயே அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்து இப்பிரச்சிணைகளுக்கு  தீர்வு காண சரியான நேரம் இதுவென அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/61957

 

இந்தியா ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் இன்றைய அறிவிப்பிற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும் மேலும், இந்தியாவின் முடிவை தாங்கள் நிராகரிப்பதாகவும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் உயர் ஆணையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"ஐநா பாதுகாப்பு சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜம்மு காஷ்மீரின் அந்தஸ்தை இந்தியாவால் மாற்ற முடியாது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

 

'ஆபத்தான விளையாட்டு'

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY Image captionபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி

"இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. இது அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவோடு இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா.

இந்த நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பாகிஸ்தான் ஊடகமான துனியா நீயுஸிற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்ற கூட்டம்

இந்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதை தொடர்ந்து நாளை (ஆகஸ்டு 6) பாகிஸ்தானில் நாளை கூட்டு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் போராட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முசஃபராபாத்தில் போராட்டம் நடைபெற்றது.

https://www.bbc.com/tamil/global-49237975

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு கர்நாடகா போல ஏதோ ஒரு விடயத்தில் முட்டி கொள்ள போகினம் .. 😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

தனக்கு தானே வைக்கும் ஆப்போ யாருக்கு தெரியும்!

இது உள்ளக, வெளியக தாக்கங்கள்.

வெளியாகம்:

ஜம்மு காஷ்மீரை கிந்தியா இன்று உத்தியோக பூர்வமாக ஆக்கிரமித்திருக்கிறது.

கிந்தியவை சூழவுள்ள நாடுகளின் சந்தேகக்கண், வெறுப்புணர்வு அதிகரிக்கும்.

சொறி சிங்களம் 13 ஐ நீக்கலாம்.

வடகிழக்கை ஒரே நிர்வாக அமைப்பாக பிரிக்கும் படி கேட்பதற்கு, கிந்தியா குறுக்காக நிற்க முடியாது.

உள்ளகம்:

கிந்தியாவின் பெயரளவிலான மாநில நிவாக அலகு என்ற அரசைப்பு, துவம்சம் செய்யப்பட்டிருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரி இன அடையாளத்தை இழக்கிறோம்: சென்னையில் வசிக்கும் காஷ்மீர் இளைஞர் வேதனை

பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்
ஷகிர் பயஸ் Image captionஷகிர் பயஸ்

''காஷ்மீரி என்ற இன அடையாளத்தை இழந்துவிட்டோம். எங்கள் கொடியை, எங்கள் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அடையாளத்தை, எங்கள் அரசியலமைப்பை இழந்துவிட்டோம். இந்தியர்களாக மாற்றப்படுகிறோம்.''

இந்திய சுதந்திரத்திற்கு பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அதிகாரத்தை பறித்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான மசோதா மாநிலங்களவையில் (5 ஆகஸ்ட் 2019) நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இந்த மசோதா தங்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட முடிவாக கருதும் காஷ்மீர் இளைஞர் ஷகிர் பயஸ்ஸின் சொற்கள் அவை. ஆய்வு படிப்பிற்காக சென்னையில் வசிக்கும் அவர், இந்த மசோதா குறித்து பேசமுன்வந்தார்.

மசோதா நிறைவேறிய பின்னர் நாம் அவரை சந்தித்தபோது ஒருவித படபடப்புடன் இருந்தார்.

''கடந்த இரண்டு நாட்களாக யாரிடமும் பேசமுடியவில்லை. எங்கள் ஊரில் என்ன நடக்கிறது என்பதை ஏன் வெளிப்படையாக பேசமுடியாது. தரைவழி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரங்கள் நடந்தபோது அலைபேசி சேவை, இணையம் முடக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தரைவழி தொலைபேசி வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துகிறது,''என்கிறார் ஷகிர் பயஸ்.

காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம், தீவிரவாதிகள் இருப்பதாக அரசியல்வாதிகள் தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தார்கள் என்றும் காஷ்மீர் மக்கள் அமைதிக்காக ஏங்கிகொண்டிருந்தார்கள் என்றும் கூறுகிறார் ஷகிர் பயஸ்.

''ஒவ்வொரு ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை விதைக்கப்படும். மோதி அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்த்தும் அதுதான். ஆனால் மக்களை இருட்டில் இருக்கவைத்து, அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, என்னவிதமான ஜனநாயக முறையில் மசோதா நிறைவேற்றப்பட்டது என்று புரியவில்லை,''என்கிறார்.

''எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் அதன் விலை எங்களின் சுயமரியாதையாக இருக்கக் கூடாது. பல என்கவுண்டர் மரணங்கள், எதிர்த் தாக்குதல், கண்ணீர்புகைகுண்டு வீசப்படுவது, கற்கள் வீசப்படுவது என பல சம்பவங்களை காஷ்மீர்வாசிகள் பார்த்துள்ளனர். ஆனால் எங்கள் தாய்மண்ணில் நாங்கள் காஷ்மீரியாகவே இருக்கவிரும்பினோம். எங்களை இந்தியர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்,''என பயஸ் கூறும்போது அவரது விழிகள் குளமாகின.

காஷ்மீர்படத்தின் காப்புரிமைTAUSEEF MUSTAFA

நிர்வாக மேம்பாடு, இந்திய தேசத்தின் அங்கமாக மாற இந்த புதிய ஏற்பாடு உதவிசெய்யும் என அரசியல்வாதிகள் கூறுவதை ஏன் ஏற்க மறுக்கிறார் பயஸ். அவர் பதில் சொல்ல யோசிக்கவில்லை.

''நான் காஷ்மீரி என்ற அடையாளத்தை விரும்புகிறேன். எங்கள் ஊரில் இந்திய கொடியை நாங்கள் அதிகம் பார்த்ததில்லை. எங்கள் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க மக்களிடம் கருத்து கேட்கவில்லை. இதனால் நாங்கள் எப்படி இந்தியர்களாக உணர்வோம்,''என கேள்வியை முன்வைக்கிறார்.

kashmirபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சிறப்பு அந்தஸ்து போனதால் என்ன விளையும் என்ற பயம் அவரை துரத்துவதாக சொல்கிறார்.

''எங்கள் காஷ்மீர் அழாகான மாநிலமாக இருந்தது. இப்போது, சிறப்பு அந்தஸ்து இல்லை என்பதால், வணிகரீதியாக பல கடைகள், நிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் என்று தோன்றுகிறது. யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என விதிகள் மாறுவதால், எங்கள் மண்ணை நாங்கள் இழக்கும் நிலை ஏற்படும். மெல்ல மெல்ல காஷ்மீரி என்ற இனஅடையாளத்தை இழந்துவிடுவோம்,''என்கிறார் ஏக்கத்துடன்.

அவரது அலைபேசியில் புதிய செய்திகள் எதுவும் வரவில்லை. அதை எதிர்பார்த்தபடியே இருக்கிறார் பயஸ். ''நான் கடைசியாக தொடர்புகொண்டபோது, என் தம்பி மட்டும் வீட்டில் இருப்பதாக கூறினான். அம்மா,அப்பா ஹஜ் யாத்திரைக்கு சென்றுவிட்டார்கள். அதனால் அவர்கள் பத்திரமாக இருப்பார்கள் என்ற உணர்வு ஒருபக்கம் நிம்மதியை தந்தாலும், தம்பியிடம் பேசமுடியவில்லை. லடாக்கில் உள்ள ஒரு உறவினர் ஒருவரிடம் பேசமுடிந்தது. ஆனால் எங்கள் ஊரில் என்ன நிலைமை என்பதை நான் யாரிடமாவது பேசினால்தான், மனம் அமைதியடையும்,''என்கிறார்.

நாளை காஷ்மீர் செல்வதற்கான விமான டிக்கெட் அவரிடம் உள்ளது. ஆனால் தாம் செல்லமுடியுமா என்பது கேள்விக்குறி என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-49243075

J&K map

ec75edd1-c180-4655-9d74-c06debec8dde.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MtKailash_location.png

Kailash_south_side.jpg

கைலாச மலையும்.... சீனாவின் ஒரு பகுதிக்குள் வருகின்றது என நினைக்கின்றேன்.
அதனையும்  இந்தியா... பிரித்து எடுக்க முயற்சிக்குமா?

காஷ்மீருக்கான 370 பிரிவை நீக்க கோரி 27 ஆண்டுகளுக்கு முன்பே போராட்டம் நடத்திய பிரதமர் மோடி: சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரல்

Dkn_Tamil_News_2019_Jul__47252833843232.jpg

 

பிரதமருக்கு பாரத ரத்னா விருது:  

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் மாநிலத்தின் இரண்டாக பிரிக்கும் மசோதா மாநிலங்களவையில் வெற்றி பெற்றது. இது பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் சாதனையாக கருதப்படுகிறது.  இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ராட்லம் தொகுதி பா.ஜ.க எம்.பி. குமான்சிங் தோமர் கூறும்போது, காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி ,மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றார்.  காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டும் விதமாக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இவரது கருத்தை ரவிகிஷண், பிரக்யாசிங் தாக்கூர், விஜய்குமார் துபே, விஷ்ணு தத்  சர்மா உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்களும் வரவேற்றுள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=515952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

 

à®à¯à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯

உண்மையில்... காஷ்மீர் யாருக்கு சொந்தம்.

காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம் கிடையாது. காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் சொந்தம் கிடையாது. காஷ்மீர் எப்போதும் காஷ்மீரிகளுக்கே சொந்தம். அவர்கள் விருப்பப்பட்டால், நாங்கள் அவர்களுடன் இருப்போம்.

அவர்கள் வேண்டாம் என்றால் உடனே நாங்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவோம், இது முன்னாள் பிரதமர் நேரு காஷ்மீர் பிரிவினையின் போது கூறியது. ஆனால் அதே காஷ்மீர் தற்போது மொத்தமாக, அதிரடியாக பாஜக தலைமையிலான மத்திய அரசால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-and-nehru-family-keep-mum-about-kashmir-issue-359303.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு - காஷ்மீர்... பாலஸ்தீனமாக மாறப் போகின்றது.  (காணொளி.)

  • கருத்துக்கள உறவுகள்

அமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு எதிரானவர்கள்”

அமித் ஷாபடத்தின் காப்புரிமைNURPHOTO

காஷ்மீரிருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு, பழங்குடிகளுக்கு மற்றும் கல்விக்கு எதிரானவர்கள் என்றும், இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் வரலாற்று பிழையை திருத்தியுள்ளோம் என்றும் மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்க மசோதா தாக்கல் செய்தார். அங்கு அந்த மசோதா வெற்றி பெற்றதை அடுத்து இன்று மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இச்சூழலில், வாக்கெடுப்பு நடப்பதற்குமுன், மசோதாவுக்கு எதிராக கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா.

சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பழங்குடிகளுக்கு, பெண்களுக்கு மற்றும் கல்விக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்ட அமித் ஷா, இந்த சட்டப்பிரிவால் காஷ்மீரில் வாழ்ந்த பிராமணர்கள் விரட்டப்பட்டார்கள் என்றும், அப்போது சமத்துவம் எங்கே இருந்தது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைஸியின் கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, தாங்கள் வரலாற்று பிழையை செய்யவில்லை என்றும், ஏற்கனவே செய்யப்பட்ட வரலாற்று பிழையை திருத்தியுள்ளதாகவும் அமித் ஷா பேசினார்.

மேலும், "ஐந்தாண்டுகளுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்படவுள்ள மாற்றங்களை பார்த்து சட்டப்பிரிவு 370இன் பின்விளைவுகளை காஷ்மீர் மக்கள் புரிந்து கொள்வார்கள்," என்றார்.

ஒரே இரவில் ஜம்மு மற்றும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்துவிட்டது என்று பேசிய உறுப்பினர் மணீஷ் திவாரிக்கு பதிலளித்த அமித் ஷா, 1975ஆம் ஆண்டில் இந்த ஒட்டுமொத்த நாட்டையும் யூனியன் பிரதேசமாக மாற்றியது என்று பதிலடி கொடுத்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று குறிப்பிட்ட அமித் ஷா, இயல்பு நிலை திரும்பும்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார்.

https://www.bbc.com/tamil/india-49255901

Abolition of Article 370 sparks fears among north-east Indian states

Most of the states which have been accorded special provisions under Article 371 are in the northeast and the special status aims to preserve their culture, reports our New Delhi correspondent. 

https://www.thedailystar.net/india/news/abolition-article-370-sparks-fears-among-north-east-indian-states-1782526

 

Nagaland apprehensive after repeal of Article 370

  • கருத்துக்கள உறவுகள்

 

அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு; ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா கருத்து

article-370-us-urges-all-stakeholders-to-maintain-peace-stability-along-loc
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்டாகஸ்

வாஷிங்டன்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்திலும், காஷ்மீரில் நிலவும் சூழல்களையும், சம்பவங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

அரசமைப்புச்சட்டம் 370 பிரிவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் கொண்டு வந்து நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்தும், இரு மாநிலங்களாக பிரிக்கப்பட உள்ளது குறித்தும்,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அதன்பின் பிரதிநிதி, பி5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளின் தூதர்களிடம் நேற்று விளக்கம் அளித்தார்.

ஆனால், இந்தியாவின் இந்த நடவடிக்கையை சட்டவிரோதம், ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. 

1565070132.jpg
அதன்பின் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டாகஸ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அனைத்துத் தரப்பினரும் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் (பாகிஸ்தான், இந்தியா பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்). ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகள், விஷயங்களை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த அரசமைப்புச் சட்ட அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது தொடர்பாகவும், இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது குறித்தும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். 

ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உள்நாட்டு விஷயங்கள் என இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் குறித்துக் கவலை தெரிவித்துள்ளோம். ஏராளமானோர் ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அவர்களுடன் கலந்துபேசி முடிவு எடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளோம் " எனத் தெரிவித்தார்.
 

பிடிஐ

https://www.hindutamil.in/news/world/510295-article-370-us-urges-all-stakeholders-to-maintain-peace-stability-along-loc.html

  • கருத்துக்கள உறவுகள்

67734310_2589906587769440_89184273831538

On 8/6/2019 at 4:32 AM, ஏராளன் said:

எங்கள் காஷ்மீர் அழாகான மாநிலமாக இருந்தது. இப்போது, சிறப்பு அந்தஸ்து இல்லை என்பதால், வணிகரீதியாக பல கடைகள், நிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் என்று தோன்றுகிறது. யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என விதிகள் மாறுவதால், எங்கள் மண்ணை நாங்கள் இழக்கும் நிலை ஏற்படும். மெல்ல மெல்ல காஷ்மீரி என்ற இனஅடையாளத்தை இழந்துவிடுவோம்,''என்கிறார் ஏக்கத்துடன்.

இந்தியாவின் எஜமான் அமெரிக்காவுக்கு இதனால் இலாபம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.