Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக்காதல் இருக்கே...

Featured Replies

இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ?

சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோடு போட்டிக்கு படிச்சவன் ஒருத்தன் மேல ஒரு தனிக்கவனம் இருக்குமே.

என்னடா இவன் நாம எந்தப் போட்டிக்குப் போனாலும் வாறான்.ஒன்றில் அவன் முதலாவதா வருவான் இல்லாட்டி நாமதான் முதலாவது வருவம்.இருவரில் எவர் முதலாவதா வந்தாலும் வெளியில முறைச்சாலும் உள்ளுக்குள்ள சரி பறவாயில்லை அவன்தானே முதலாவதா வந்திருக்கிறான் என்று ஒரு சின்ன சந்தோசம் வந்து மனசின் மூலையில ஒட்டுமே ..அதான் காதலா?

இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு ரியூசனில் படிக்கிற பெடியங்களில ஒருத்தன் சரியா நாம எந்த மேசையில இருப்பம் என்று தெரிஞ்சு அதற்கு நேரா வந்திருந்துகொண்டு மாஸ்டர் கேள்வி கேக்கிற நேரமெல்லாம் நாம சரியாப் பதில் சொல்றமா இல்லாட்டா உதவி செய்யணுமா என்று ஒழுங்காப் பதில் சொல்லி முடிக்கும் வரைக்கும் ஒரு விதமான ரென்சன்ல இருப்பானே அந்த நேரம் பார்த்து நாம அவனைத் திரும்பிப் பார்த்தா ஒரு நிம்மதிப் புன்னகை ஒளிரும் அவன் முகத்தில..அதான் காதலா?

ரியூசன்ல நடக்கிற வினாடி வினா போன்ற போட்டிகளில் என்னதான் நம்மளோட மல்லுக்கு நின்று கஸ்டப்பட்டுப் போராடி கடைசில பெடியங்கள் தோத்துப் போனா இன்றைக்கு மாட்டினீங்கடா என்று மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டு அவங்களைத் திரும்பி ஒரு எகத்தாளப் பார்வை பார்க்கும்போது "சரிதான் போடி நீயும் உன்ர தெத்துப்பல்லும்..லுக்கு விட்டதும் காணும் போடி" என்று ஆற்றாமைல திட்டிட்டுப் போனாலும் போற வழியில நம்ம சைக்கிள் ரயர் பஞ்சராகி சைக்கிளை உருட்டிக்கொண்டு போறதைப் பார்த்திட்டு ரியூசன்ல நடந்த போர்மேகம் கலைந்து போனாலும் கொஞ்சம் முறைப்போடயே வந்து தன்ர சைக்கிளைத் தந்திட்டு நம்ம சைக்கிளை வாங்கிக் கொண்டுபோய் ஒட்டிக்கொண்டு வந்து தாறானே...அப்ப தாங்ஸ் என்றும் சொல்லாம ஒரு அசட்டுச் சிரிப்பு வருமே.. அதான் காதலா?

பெண்கள் பருவமடைந்ததும் ரியூசன்ல பெடியங்களோட சண்டை பிடிக்கிறது கொஞ்சம் குறைஞ்சிடும்.தெற்குப்பக்கமா

Edited by Snegethy

  • Replies 67
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா பழைய நினைவுகளை எல்லாம் மீட்கிறீர்களே

உங்களது நினைவு மீட்டல்கள் எனக்கும் எனது பழைய நினைவுகளை எண்ணி பார்க்க வைத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலை பற்றி நன்றாக சொல்லி இருக்கிறீங்க,எல்லோருக்கும் திடீர் என்று தங்களையும் அறியாம வாராது தான் காதல் அது ஒவ்வொரு வயதிலும் வருகின்ற ஒரு உள்ளுணர்வு ஆனால் ஒரு வயது எல்லையை கடந்து வருகிறது தான் உண்மையான காதல் என்பது நான் பார்த்தவரையில்.

  • கருத்துக்கள உறவுகள்

1 - 10 ம் வகுப்பு படிக்கும் போது வரும் காதல் , ஆணின் அல்லது பெண்ணின் அழகினைக் கொண்டுதான் பெரும்பாலும் வரும்.

வேறு காரணங்களினால் காதல் வந்தாலும், காதலிக்கப்படுபவர் ஒரளவு அழகாக இருக்க வேண்டும்.

காதலிக்கப்படுபவர் அவலட்சண தோற்றத்தில் இருந்தால் காதல் வருமா?

20வயதுக்கும் 30 வயதுக்கு வரும் போது, பிற்காலத்தினை யோசித்தும் தான் பெரும்பாலும் வரும்.

என்றாலும் காதலுக்கு வயது எல்லை இல்லே. எப்பவேணுமென்றாலும் வரும்.

எதுக்கும் கனடா லண்டனில் இருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கும் யாழ்கள உறவுகளை ஒருக்காக் கேட்டுப்பாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு அவர்களுக்கு காதலை பற்றி நன்றாக தெறிந்துள்ளது,தாங்கள் காதல் திருமணமா செய்தனீங்க,அந்த அனுபவத்தை எங்களுக்கு கூறுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு அவர்களுக்கு காதலை பற்றி நன்றாக தெறிந்துள்ளது,தாங்கள் காதல் திருமணமா செய்தனீங்க,அந்த அனுபவத்தை எங்களுக்கு கூறுங்களேன்

அடுத்தவைட விசயமென்றா விடுப்புக் கேக்கிறதில.. நம்மாக்கள் முன்னிலைல நிப்பினம்..என்றது உண்மைதான் போல..! :P :unsure:

காதல் கூட இப்ப வியாபாரமாப் போச்சுங்க. அவளவள் ஐஸ்கிறீம் குடிக்கவும்.. மக்டொனால்சில சாப்பிடவும் என்றே காதலிக்கிறாலுவள்..! :lol::unsure:

எனது சிற்றறிவுக்கு எட்டியவரை இப்போதைக்கு இதைப்பற்றி நான் அறிந்துவைத்துள்ள விடயங்களை இங்கே கூறுகின்றேன். :P இதைவாசித்துவிட்டு ஒருவரும் என்னுடன் சண்டைக்கு மல்லுக்கட்டிக் கொண்டு வரப்படாது... :(

காதல் என்றால் உண்மையா என்ன? உங்கள் ஆத்மாவுடன் நீங்கள் கலந்து ஒருமிப்பதை காதல் என்று கூறிக்கொள்ள முடியும். ஒரு ஆத்மஞானி காதலை விருப்பத்துடன் சேர்த்து குழப்பிக்கொள்ளகூடாது என்று கூறுகின்றார். அதாவது காதல் - Love வேறு. விருப்பம் - Like வேறு. நீங்கள் உண்மையில் உங்கள் ஆத்மாவை மட்டுமே காதலிக்க முடியும். மற்றவர்களை விரும்ப மட்டுமே முடியும். எனவே, அடுத்தமுறை யாரையாவது விரும்பினால் I love you என்று சொல்லாமல் I like you என்று கூறுங்கள்.

அது யாருக்கு வரும்? விருப்பம் எல்லோருக்கும் வரும். ஆனால், காதல் - உங்கள் ஆத்மாவை அனுபவிக்கும் உண்மையான உணர்வு எல்லோருக்கும் வந்தாலும் அதை எத்தனைபேர் சரியான முறையில் அனுபவிக்கின்றார்கள் என்பது அவரவருக்குத்தான் தெரியும்.

எப்ப வரும்? விருப்பம் எப்பவும் வரும். காதலும் எப்பவும் வரும்.

ஏன் வரும்? இயற்கை

எத்தனை முறை வரும்? நாம் மண்டையைப் போடும்வரை (சாகும்வரை) வரும். மண்டையைப் போட்டபின்பும் வருமா என்று நான் மண்டையைப் போட்டபின்புதான் கூறமுடியும்.

அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? விருப்பங்கள் தோற்கும். காதல் தோற்காது.

ஏன் எப்பிடித் தோற்கும்? இதற்கு சார்ல்ஸ் டார்வின் என்ற ஒரு விஞ்ஞானி கூர்ப்புக் கொள்கையில் மிகச்சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார். தக்கன பிழைத்தலும் அல்லாதன மடிதலும்! இந்த உலகம் போட்டி மயமானது. உணவு, உடை, உறையுள், மற்றும் விருப்பங்கள்... இதற்காக போட்டி... ஏனெனில் இந்த உலகத்திலுள்ள வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டது. எனவே, இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு தேவையான சாதகமான ஆற்றல்களை, அம்சங்களை கொண்டவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள், மற்றையவர்கள் செத்துமடிவார்கள்... அல்லது தோல்வி அடைவார்கள். இதில் விருப்பத் தோல்வியும் அடங்கும் (உங்கள் பாசையில் காதல் தோல்வி)

இதெல்லாம் யாருக்காவது தெரியுமா? ம் எனக்கு இதைப்பற்றி கொஞ்சம் தெரியும்.

இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ? உங்களைமாதிரியும் முன்பு யோசித்துள்ளோம்.

...அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அது அவனில் உள்ள விருப்பம்.

...அவன்தானே முதலாவதா வந்திருக்கிறான் என்று ஒரு சின்ன சந்தோசம் வந்து மனசின் மூலையில ஒட்டுமே ..அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...ஒரு நிம்மதிப் புன்னகை ஒளிரும் அவன் முகத்தில..அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...அப்ப தாங்ஸ் என்றும் சொல்லாம ஒரு அசட்டுச் சிரிப்பு வருமே.. அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...அவங்களில ஒரு மரியாதை வருமே அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...ஒரு பாதுகாப்புணர்வு வருமே அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்லணும் என்று அங்கலாய்க்குமே அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...அவசரமா சொல்லிட்டு ஓடிப்போவானே அப்ப வாறதுதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...எடுத்து வைத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த சிலிர்பு ஒரு நாளாவதிருக்கும். அப்ப அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...இவர்களில் ஒருவனோடயே இருக்க முடியாதா என்ற எண்ணம் வருமே அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டதில்லையே என்று நினைப்பமே அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...ஐயோ இவன் கதைக்கிறத உயிருள்ளவரை கேட்டுக்கொண்டேயிருக்கணும் போலத் தோணுமே அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

...இவனே நமக்குத் துணையா வந்தா நல்லா இருக்குமே என்று நினைக்கிறமே அதான் காதலா? இதுவும் விருப்பம்.. காதல் அல்ல..

இப்படி நான் சொன்ன வற்றில் எதைக் காதல் என்றுறது? மேலே நீங்கள் சொன்னவற்றில் ஒன்றுமே காதல் அல்ல. எல்லாமே விருப்பங்கள்.

உங்களுக்கேதும் விளங்குதா? கொஞ்சம் விளங்கின்றது.

மேலே நீங்கள் கூறியவற்றை - விருப்பங்களால் வந்த உணர்வுகளை - ஆத்மார்தமான உணர்வுகள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும், பப்பி லவ் என்பதை பப்பி லைக் என்றும், உங்கள் பாசையில் Matured love என்று கூறியதை Matured Like என்றும் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

காதலில் நீங்கள் தோல்வி அடைய முடியாது. விருப்பத்தில் மட்டுமே தோல்வி அடையமுடியும். காதல் என்றால் என்ன என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளமுடியும், மற்றவர்களால் இதை உணர்த்த முடியுமா என்று தெரியாது. எனவே உங்களால் உங்கள் ஆன்மாவை உணரமுடிகின்றதா பாருங்கள்... உங்கள் காதல் பயணம் நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளெடுக்கும் மூச்சில் இருந்து ஆரம்பிக்கின்றது. அது உங்களினுள்ளேயே எப்போது இருக்கின்றது, இருக்கும்... இவ்வாறு நான் சொல்லவில்லை. ஒரு ஆத்மஞானி சொல்கின்றார். நன்றி! :unsure:

காதலுக்கும் விருப்பத்திற்கும் இப்படியொருவேறுபாட

தெரியாதவிடையங்களை தெரியபடுத்தியதிற்கு நன்றி

எனியாவது காதல் வெற்றியடையட்டும் தெரிந்து கொள்வதை பகிர்த்து கொள்வது

நல்ல கலைஞ்னுக்கு அழகு இது யாழில் பூத்திருப்பது யாழுக்கே அழகு

அட காதல் என்றா இப்படியெல்லாம் என்று எனக்கு தெறியாமபோச்சே,எனக்கு இதுவரையிலும் என் அம்மா மீது மட்டும் தான் காதல் வந்திருக்கிறது.

காதல் கூட இப்ப வியாபாரமாப் போச்சுங்க. அவளவள் ஐஸ்கிறீம் குடிக்கவும்.. மக்டொனால்சில சாப்பிடவும் என்றே காதலிக்கிறாலுவள்..! :D:unsure:

தாத்தாவுக்கு நல்ல அநுபவம் போல

:(

காதலுக்கு மரியாதை செய்யும் உறவுகளுக்கு நன்றி :unsure:

காதலுக்கு மரியாதை செய்யும் உறவுகளுக்கு நன்றி :)

காதலுக்கு மரியாதை திரைபடம் பார்த்த உறவுகளுக்கு

:P

ஒருவேளை நீங்கள் மேலே கூறிய உணர்வுகள் எல்லாம் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் வௌ;வெறு நபர்களில் வருவதற்குப் பதிலாய் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் ஒரே நபரில் வந்தால்அது தான் காதலோ ?

அதாவவது, உங்கள் உதாரணங்களில் பங்கத்து வீட்டுப் பையன், சாவீட்டில் அழுத பையன், ரியூசனில் அருகிருந்த பையன், சைகிளிற்குப் பஞ்சர் ஒட்டிய பையன், அம்மா பற்றி உயர்த்திக் கதைக்கும் பையன், இவன் கதைப்பதை வாழ் முளுவதும் கேட்கலாம் போலுள்ளதே என நீங்கள் நினைக்க வைத்த பையன், பள்ளிக்கூடக் கலைவிழாவில் கைவிரல் தீண்டிய பையன், அனைத்துமே ஒரே பையன்... ?

சினேகிதி அந்த மாதிரி தான் எழுதியிருக்குறீங்க,அடுத்த தொடரையும் எழுதுங்க. கலைஞனின் விளக்கமும் நல்லாயிருக்கு..!

காதல் கூட இப்ப வியாபாரமாப் போச்சுங்க. அவளவள் ஐஸ்கிறீம் குடிக்கவும்.. மக்டொனால்சில சாப்பிடவும் என்றே காதலிக்கிறாலுவள்..!

அப்ப அவனவன் என்னத்துக்காக காதலிக்கிறாங்க ? :D:D

ஹும் என்ன சொல்லுறது .... பெண்கள் எல்லாரும் ஐஸ்கீரீம் சாப்பிடுறதும் மக்டோனால் ல போய் சாப்பிடுறதும்.ஆண்களால் தான் எண்டு சொல்லுற மாதிரி இருக்கே...... :( இல்லாட்டி தெரியவே தெரியாதா? இத சாப்பிடுவதற்காக காதலிப்பாங்களா ? :D:(

  • கருத்துக்கள உறவுகள்

ஹும் என்ன சொல்லுறது .... பெண்கள் எல்லாரும் ஐஸ்கீரீம் சாப்பிடுறதும் மக்டோனால் ல போய் சாப்பிடுறதும்.ஆண்களால் தான் எண்டு சொல்லுற மாதிரி இருக்கே...... :( இல்லாட்டி தெரியவே தெரியாதா? இத சாப்பிடுவதற்காக காதலிப்பாங்களா ? :D:(

ஓசில கிடைக்கனுமே. அதுக்குத்தான் லவ் பண்ணுறதும்.. ஐஸ்கிறீம் பார்.. பிசா கட்... மக்டொலாட் கூட்டிக் கொண்டு போ என்றதும்..! பொண்ணுங்க.. லேசுப்பட்ட ஆக்களில்ல..! :D:D

ஓசில கிடைக்கனுமே. அதுக்குத்தான் லவ் பண்ணுறதும்.. ஐஸ்கிறீம் பார்.. பிசா கட்... மக்டொலாட் கூட்டிக் கொண்டு போ என்றதும்..! பொண்ணுங்க.. லேசுப்பட்ட ஆக்களில்ல..! :D:(

அட எனக்கு இவ்வளவு நாளா தெறியாம போச்சு நாளைக்கு போய் டிரை பண்ணி பார்க்கிறேன் தாத்தா

:(

ஓசில கிடைக்கனுமே. அதுக்குத்தான் லவ் பண்ணுறதும்.. ஐஸ்கிறீம் பார்.. பிசா கட்... மக்டொலாட் கூட்டிக் கொண்டு போ என்றதும்..! பொண்ணுங்க.. லேசுப்பட்ட ஆக்களில்ல..! :lol::lol:

அப்ப இந்த உலகத்தில் லவ் எண்டது இருக்கா? :lol:

சரி காதலிக்குத்தானே இதெல்லாம் வாங்கிக் குடுக்கினம்.இதெல்ல என்ன இருக்கு. ஐஸ்கிரீமின் விலை என்ன ஒரு லட்சமா இரண்டு லட்சமா ? :lol: B) ;)

  • கருத்துக்கள உறவுகள்

கதையாக்கும் எண்டு வந்து எட்டிப்பார்த்தால் காதல் இப்படி எல்லாம் பேசப்படுதே.

காதல் ஒரு நரகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்த உலகத்தில் லவ் எண்டது இருக்கா? :huh:

சரி காதலிக்குத்தானே இதெல்லாம் வாங்கிக் குடுக்கினம்.இதெல்ல என்ன இருக்கு. ஐஸ்கிரீமின் விலை என்ன ஒரு லட்சமா இரண்டு லட்சமா ? <_< B) ;)

ஒரு காதலிக்கு ஒரு நாளைக்கு 10 பவுண்ஸ் படி 6 காதலிக்கு ஒரு வாரத்துக்கு எவ்வளவு செலவு..... கடைசியில ஆறும் ஆப்படிக்கிறது தானே நிஜம்.... :D:D:(:rolleyes:

கதையாக்கும் எண்டு வந்து எட்டிப்பார்த்தால் காதல் இப்படி எல்லாம் பேசப்படுதே.

காதல் ஒரு நரகம்

யாரது அங்கே சொர்க்கத்தை நரகமாக்கி விட்டு சென்றது கறுப்பி.....

அது சரி... ஒரு சந்தேகம்... பரீட்சையில்... சாதாரண் தரம் உயர் தரம்..... 8 டி அல்லது 4 எ எடுத்து றோட்டில் டிப் டாப் ஆக வெளிக்கிட்டு பசங்க கூட அரட்டை அடித்து கொண்டு நிற்க்கும் போது... போற வாற பெண்கள் எல்லாம் ஒரு நோக்கு நோக்குவார்களே.. அதற்க்கும் பெயர் காதலா?

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பெயர்தாணுங்க ஜொள்ளு

அந்த நாள் ஞபகம் நெஞ்சிலே வந்ததே...நண்பனே..நண்பனே...

இல்லை...நண்பியே...நண்பியே...

அடக் கடவுளே இங்க என்ன நடக்கு??

ஆகா இவ்வளவு சந்தேகமா? உங்கட கேள்விக்கெல்லாம் மாப்பி ஓரளவு பதில் கொடுத்திருக்கிறார் போல.

சரி மிகுதியையும் தொடர்ந்து எழுதுங்கோ. அப்புறம் இதைப்பற்றி கதைப்பம் ;)

  • தொடங்கியவர்

ஆகா மாப்ஸ் உங்களை என்ன பண்ணலாம் :blink:))

இன்னுமொருவன் சொன்னது போல இதெல்லாம் ஒருத்தர் மேல வரணும் என்றுதான் நினைக்கிறன் அது சாத்தியமா?? லவ் பண்றாக்கள் சொல்லுங்கோவன்...ரசி அக்கா கந்தப்பு என்னவோ சொல்றார் :-)))

ஒரு காதலிக்கு ஒரு நாளைக்கு 10 பவுண்ஸ் படி 6 காதலிக்கு ஒரு வாரத்துக்கு எவ்வளவு செலவு..... கடைசியில ஆறும் ஆப்படிக்கிறது தானே நிஜம்.... :lol::lol::lol::D

6 காதலிக்கா ..... ? :unsure: :angry:

ஏனப்பா 6 பேரைக் காதலிக்கிறீங்க .... ஒருவரைக் காதலிச்சா செலவு குறையும் தானே :lol: B)

காதலுக்கு கூட trial balance செய்யவேண்டிவரும் போல

6 காதலிக்கா ..... ? :unsure: :angry:

ஏனப்பா 6 பேரைக் காதலிக்கிறீங்க .... ஒருவரைக் காதலிச்சா செலவு குறையும் தானே :lol: B)

ஒருவர் கழன்றால் இன்னொருவர் என்று முன் ஜாக்கிரதை தான்

:P

காதலுக்கு கூட trial balance செய்யவேண்டிவரும் போல

ஏன் புரோவிட் அன்ட் லொஸ் அக்கவுண்ட் செய்து பலண்ச் சீட்டும் செய்யலாம்

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.