Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பெண் குழந்தை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரசவ அறை வாசலில்
"பெண் குழந்தை"
என்றதும்
அதுவரை
என் கண்ணில் இருந்த
ஈரம் ஏனோ
மெதுவாய் இதயத்தில்
இறங்கியது...
 
அவள்
கொலுசொலியிலும்
புன்னகையிலும்
வரும் இசை போல
இதுவரை எந்த
இசையமைப்பாளரும்
இசை அமைத்ததில்லை...
 
வீட்டில்
அதுவரை இருந்த
என் அதிகாரம்
குறைந்து போனது
அவள் பேச
ஆரம்பித்த பிறகு...
 
"அப்பாவுக்கு முத்தம்"
என நான் கெஞ்சும்
தோரணையில்
கேட்டால்
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
ஏதோ எனக்கு
சொத்தெழுதி வைத்த
புன்னகை வீசி செல்வாள்...
 
என்னுடன் தினமும்
விளையாடிய
என் ரோஜாப்பூ,
பூப்பெய்த நாளில்
கதவோரம் நின்று
என்னை பார்த்த
பார்வையில் இருக்கிறதடா
உலகின் அத்தனை
பிரிவினைவாதமும்...
 
அவள்
பாதுகாப்பாய் வீடு
திரும்பும் வரை
உயிரற்ற உடலாய்
காத்திருந்த நொடிகளில்,
செத்து பிழைக்கும்
நான்… தினம் தினம்
அவளை பிரசவித்தேன்...
 
இரு முறை தாய் வாசம்
தெரியவேண்டுமெனில்,
பெண் பிள்ளை
பெற்றெடுங்கள்...
 
மகள்களின்
நேசிப்பெனும் சிறையில்
விடுதலை இல்லை
ஆயுள் தண்டனை மட்டுமே...
 
மகளில்லாத
தந்தையர்களே,
சகோதரியில்லாத
ஆண் மகனே,
எங்கேனும் தனியாய்
பெண்ணைக் கண்டால்
சுதந்திரமாய் செல்ல விடுங்கள்…
தந்தைகள் காத்திருக்கிறோம்
அவள் வருகைக்காக…
 
படித்ததில் பிடித்தது   நன்றி 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிலாமதி said:
பிரசவ அறை வாசலில்
"பெண் குழந்தை"
என்றதும்
அதுவரை
என் கண்ணில் இருந்த
ஈரம் ஏனோ
மெதுவாய் இதயத்தில்
இறங்கியது...
 
அவள்
கொலுசொலியிலும்
புன்னகையிலும்
வரும் இசை போல
இதுவரை எந்த
இசையமைப்பாளரும்
இசை அமைத்ததில்லை...
 
வீட்டில்
அதுவரை இருந்த
என் அதிகாரம்
குறைந்து போனது
அவள் பேச
ஆரம்பித்த பிறகு...
 
"அப்பாவுக்கு முத்தம்"
என நான் கெஞ்சும்
தோரணையில்
கேட்டால்
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
ஏதோ எனக்கு
சொத்தெழுதி வைத்த
புன்னகை வீசி செல்வாள்...
 
என்னுடன் தினமும்
விளையாடிய
என் ரோஜாப்பூ,
பூப்பெய்த நாளில்
கதவோரம் நின்று
என்னை பார்த்த
பார்வையில் இருக்கிறதடா
உலகின் அத்தனை
பிரிவினைவாதமும்...
 
அவள்
பாதுகாப்பாய் வீடு
திரும்பும் வரை
உயிரற்ற உடலாய்
காத்திருந்த நொடிகளில்,
செத்து பிழைக்கும்
நான்… தினம் தினம்
அவளை பிரசவித்தேன்...
 
இரு முறை தாய் வாசம்
தெரியவேண்டுமெனில்,
பெண் பிள்ளை
பெற்றெடுங்கள்...
 
மகள்களின்
நேசிப்பெனும் சிறையில்
விடுதலை இல்லை
ஆயுள் தண்டனை மட்டுமே...
 
மகளில்லாத
தந்தையர்களே,
சகோதரியில்லாத
ஆண் மகனே,
எங்கேனும் தனியாய்
பெண்ணைக் கண்டால்
சுதந்திரமாய் செல்ல விடுங்கள்…
தந்தைகள் காத்திருக்கிறோம்
அவள் வருகைக்காக…
 
படித்ததில் பிடித்தது   நன்றி 

மனதை... மிகவும் நெருடிய கவிதை.
அந்தக் காலம், மீண்டும் வராதோ... என்று, 
கண்கள்  கலங்க வாசித்தேன்.

கவிதைக்கு.. நன்றி, நிலாமதி அக்கா. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.
வீட்டுக்கொரு பெண் கட்டாயம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:
இரு முறை தாய் வாசம்
தெரியவேண்டுமெனில்,
பெண் பிள்ளை
பெற்றெடுங்கள்...

 

நல்ல கவிதை நிலாமதி அக்கா,பெண்ணே தெய்வம் என்பர் பெரியார் .

  • கருத்துக்கள உறவுகள்
மகளில்லாத
தந்தையர்களே,
சகோதரியில்லாத
ஆண் மகனே,
எங்கேனும் தனியாய்
பெண்ணைக் கண்டால்
சுதந்திரமாய் செல்ல விடுங்கள்…
தந்தைகள் காத்திருக்கிறோம்
அவள் வருகைக்காக…
 
ஒரு பெண் பிள்ளையின் தந்தையாக  என்னை தொட்ட  வரிகள்....!   👍

@நிலாமதி, பகிர்வுக்கு நன்றி..அருமையான வரிகள், சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்தது. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று. எழுதியவருக்கு மிக்க நன்றிகள்.

"அவள்

பாதுகாப்பாய் வீடு

திரும்பும் வரை

உயிரற்ற உடலாய்

காத்திருந்த நொடிகளில்,

செத்து பிழைக்கும்

நான்"... 

அப்பப்பா கொடுமையான வலி...பெண்களை மதிக்காத சமூகம் என்றும் முன்னேறாது, நிச்சயம் வீழும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2019 at 6:45 AM, நிலாமதி said:
 
"ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
ஏதோ எனக்கு
சொத்தெழுதி வைத்த
புன்னகை வீசி செல்வாள்........”

கவி மொழியில் உறவும் தன் உணர்ச்சிப் பாடலும் மனசை தொடுகுது நிலாமதி. என்போல மகளில்லாத தந்தையர்கள் பாவம் .

 

Edited by poet

  • 2 weeks later...

அருமையான கவிதையை படித்து பகிர்ந்ததுக்கு  நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.