Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழித்ததனால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் ; வவுனியாவில் சம்பந்தன்

Featured Replies

 புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

sammanthan.JPG

வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர்,

நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலை நாங்கள் பகிஸ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையாமல் எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும். 

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. அவர் ஜனாதிபதியாகி 10 வருடங்கள் எமது மக்கள் பட்ட துயரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. 

அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தினை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உரிமை மீறல்கள் அடிப்படை உரிமை மீறல்கள் நாள்தோறும் நடைபெற்றது. எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை பகிஸ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக அதிகார பகிர்வு சம்பந்தமாகவும் மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அதிகார பகிர்வு. 

அதி உச்ச அதிகாரப்பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2006 ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தினை கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதி உச்ச அதிகார பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.  தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர். 

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கள தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் அதனை மக்கள் ஏற்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68602

  • தொடங்கியவர்

மக்களின் ஆதரவு இருக்கின்றமையால் நாங்கள் எதைச்செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம் : மாவை 

(எம்.நியுட்டன்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியானமுடிவைத்தான் எடுத்து மக்களுக்கு அறிவித்துள்ளது எமக்குள்ள கடமையை நாங்கள் சரியாகச் செய்துள்ளோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்தார்.

mawai_senadhiraja.jpg

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள் மற்றும் பல்கலைகழக மாணவர்களின் ஒருமைப்பாடுகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தொரிவிக்கையில்

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள் சிந்தித்துதான் முடிவுகள் எடுத்துள்ளோம் மற்ரவர்கள்போல் நாம் செயற்பட முடியாது.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னேடுத்த முடிவுகளுக்கு கூட நாங்கள் நிதானமாகவே செயற்பட்டோம் நாங்கள் முடிவுகளையோ அறிக்கைகளையோ விட்டுவிட்டு மாணவர்களின் சந்திப்புகளுக்கு வரவில்லை வாக்கு உரிமையை கருத்தில் எடுத்து நாம் ஒன்று கூடினோம் தீர்மானங்கள் ஏடுத்தோம். அதனை வைத்து முன்னகர்தினோம் பேச்சுவார்த்தைகள் நடாத்தினோம் என தெரவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதுவும் கூறவில்லை ஏன்றார்கள் தற்போது புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்து விட்டு அவர்களின் மேடைகளில் ஏறவில்லையேன கூறுகிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது ஏன்பதைப்பார்த்து சிலரும் தமக்கு சாதகமாக விடயங்களை செய்வதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் நாங்கள் மேடைகளில் ஏறித்தான் ஆதரவு திரட்டவேண்டும் என்றில்லை நாங்கள் எமது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் எமது ஆதரவாளர்களுடன் இணைந்து செயலாற்ரத் தொடங்கி விட்டோம்.

 நாங்கள் எதைச் செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம். சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக மக்களை வாக்களிக்கச் செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டோம் கலந்துரையாடல்களை செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68582

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

 புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

sammanthan.JPG

வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர்,

நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

 

தேர்தல்

வடக்கில்....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

 புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

தெய்வமே உங்கட வாயில இருந்தா இந்த வார்த்தைகள் வந்தது?!

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.  தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர். 

தமிழ் மக்களை யார் ஏமாற்றுவதைப்பற்றி ஐயா குறிப்பிடுகிறார் என்று தெரியலையே?!

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கள தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் அதனை மக்கள் ஏற்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

இந்த ஒரு தகவலே போதுமே அவரை தோற்கடிக்க!

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

இந்த ஒரு தகவலே போதுமே அவரை தோற்கடிக்க!

என்ன இப்படிச்சொல்லிப்போட்டியள்?

அவர்  சாணக்கியர் எண்டல்லோ ஊரில  சொல்லினம்??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

என்ன இப்படிச்சொல்லிப்போட்டியள்?

அவர்  சாணக்கியர் எண்டல்லோ ஊரில  சொல்லினம்??

அப்பிடி நம்புபவர்களுக்கு தான் அப்பிடி!
பெரும்பாலான தமிழர்களுக்கு உண்மை தெரியும், அதனை வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

அப்பிடி நம்புபவர்களுக்கு தான் அப்பிடி!
பெரும்பாலான தமிழர்களுக்கு உண்மை தெரியும், அதனை வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் சொல்லும்.

தமிழருக்கு நீண்டதூரப்பார்வையில்  நன்மை  தரும் முடிவுகளை 

தற்போதைக்கு தமிழர்கள் எடுக்கமாட்டார்கள்

அதனால் கூட்டமைப்பும்

அதனைத்தொடர்ந்து தேசியக்கட்சிகளுமே ஆட்சி  செலுத்தும்

இறுதியில் தேசியக்கட்சிகளிலேயே படர்ந்து விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் நம்பிக்கையில் தவறொன்றும் இல்லையே. I

  • தொடங்கியவர்

கோத்தாபய என்னும் பேராபத்தை தவிர்க்க, தமிழ்மக்கள் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பாவிக்கவேண்டும் - சுமந்திரன்

கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்கவேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

IMG_6035_1600_1067.JPG

அத்துடன் இத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொடர்ந்தும் கொடூரமான குடும்ப ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, பொதுஜன பெரமுன தரப்பினர் குடும்ப உறுப்பினரான கோத்தபாய ராஜபக்சவை இம்முறை களமிறக்குகின்றனர்.இந்த வேளையில் இது சிங்கள மக்களுக்கான தேர்தல், சிங்கள தலைவர்களுக்கான தேர்தல் எனவே இந்த தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டுமென சிலர் கூறுகின்றனர்.சிலர் யாருக்கென்றாலும் பறவாயில்லை, வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறன கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

எமது குடும்பத்தைக் கொன்றொழித்த ராஜபக்ச குடும்பம் எவ்வாறு 2005ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியது என்று நாம் பார்க்கவேண்டும்.அந்தத்தேர்தலில் எங்களுடைய வாக்களிப்பு தவிர்ப்பினால்தான் ராஜபக்ச குடும்பம் ஆட்சிபீடம் ஏறியது.அவர்கள் ஆட்சிபீடம் ஏறி, எமது இனத்தைக் கொன்றொழித்தார்கள், பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஒரு கொடூரமான ஆடசி ஆவர்களுடைய ஆட்சிக்காலத்தில்இடம்பெற்றது.

ராஜபகசகடும்பம் தமிழ் மக்கள் வேண்டமென ஒதுக்கினார்கள்.அவ்வாறு எந்தமக்களை வேண்டாமென ஒதுக்கினார்களோ, அந்த தமிழ் மக்களாலேயே அவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டார்கள்.அவ்வாறு அவர் தோற்கடிக்கப்பட்டபிற்பாடு, நான் ஈழத்தின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்டேன் என மகிந்த ராஜபக்ச உரை நிகழ்த்தினார்.எங்குடைய ஒரே ஆயுதம் வாக்குரிமையாகும். அதை பகிஸ்கரிக்கவேண்டும், அல்லது அந்த ஆயுதத்தை பாவிக்கக்கூடாதெனக் கூறுவதற்கு எவருக்கும் அருகதையில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டுத் தேர்தலின்போது ரணில் விக்கிரசிங்க எமக்கு சமஸ்டி தருவதாக கூறினார். எனினும் நாம் அந்தத் தேர்தலை நாம் வாக்களிக்காது பகிஸ்கரித்தோம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் எம்மிடம் ஆயுதபலமிருந்தது. தற்போது அந்த ஆயுதபலமும் எம்மிடமில்லை.வாக்குரிமை என்பது எம்மைப் பாதுகாப்பதற்கான ஆயுதமாகும். அந்த ஆயுதத்தையும் கீழே வைக்கும் படியாக, சிலர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலே 35வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக ஜனாதிபதியாக வருவார். தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக, ஜனாதிபதி தேர்வுசெய்யப்படமாட்டார் என்றில்லை. எனவே தமிழ் மக்களும் வாக்களிக்கவேண்டும்.

கோத்தாபய ராஜபக்ச என்பவர், ராஜபக்ச குடும்பத்திலேயே மிகவும் மோசமான ஒருவராவர். கடந்த கால யுத்தமும் அவருடையதுதான். கடந்த காலங்களில் "இது கோத்தாபாயவின் யுத்தம்" என்ற நூலும் வெளியிடப்பட்டது.

எனவே தமிழ் மக்களாகிய நாம், வாக்களிக்காமல் பகிஸ்கரிப்புச்செய்து அத்தகைய கொடூரமானவர்களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றப்போகின்றோமா.?

இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையில்இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமது மக்களுக்கு சார்பான பல வாக்குறுதிகளை அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளார்.

அரசியல்தீர்வு தொடர்பாக, ஒருமித்த பிளவுபடாத நாட்டிற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி முன்வைத்துள்ளார்.இவ்வாறாக வாக்குறுதி வழங்குவதற்காவது அவருக்கு துணிவிருக்கின்றது.அவ்வாறான தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வாக்குறுதிகள் எதுவும் கோத்தபாயவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை . அதற்கான துணிவும் அவரிடம் இல்லை.

நாம் கடந்த ஜனவரியில் அரசியலமைப்புத் தொடர்பில், ஒரு திட்ட வரைபை பாராளுமனறில் முன்வைத்துள்ளோம். அதை நாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி அந்த விடையத்தை நாம் முழுமையாக்கக்கூடிய சூழ் நிலையும் இருக்கின்றது.சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக அதிகமாக தமிழ்மக்கள் வாக்களிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கவேண்டுமென கோரிக்கையாக கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

 

https://www.virakesari.lk/article/68613

5 hours ago, ஏராளன் said:

இந்த ஒரு தகவலே போதுமே அவரை தோற்கடிக்க!

EI7AQaPU4AApxt_?format=jpg&name=medium

EI7ARJtUYAA1rXm?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாருக்கு வாக்களித்தாலும் தோற்க்கப்போவது தமிழர்கள்தான்.  இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனையும் அவரது குடும்பத்தையும் கொன்றுவிட்டு.. சம்பந்தன் அழிப்பு என்று சொல்வது எப்படி அபந்தமோ.. அப்படியான அபந்தத்தையே சம் சும் மாவை கும்பல்.. தமிழ் மக்களின் அழிப்பை.. புலி அழிப்பாக மட்டும் சித்தரிப்பது.

இதே புலிகளை பயங்கரவாதிகள் என்றும்.. இவர்களை அழித்தால்.. தீர்வு கிட்டும் என்று நம்பியவர்கள்.. சொல்லிக் கொண்டோர்.. சொல்லிக் கொண்டு யுத்தம் செய்தவர்களுக்கு வால்பிடித்தோரில்..  இந்தக் கும்பலைச் சேர்ந்தோரும் அடங்குவர். 

இன்று தமிழ் மக்களின் வாக்குச் சீட்டுக்காக.. புலிகள் மீது பச்சாந்தாபப் பேச்சுக்களோடு.. புலி அழிப்பென்று.. ஒரு தமிழினப் படுகொலைக்கு முத்திரை குத்தி.. தங்களின் சிங்கள எஜமான விசுவாசத்தையும் வெளிப்படுத்த தவறவில்லை.. இந்த கேடுகெட்ட.. சம் சும் மாவை கும்பல். 

இவர்களுக்கும் ஒட்டுக்குழு தலைவன் டக்கிளசுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அழிந்தது தனக்கு சந்தோஷம் என சொன்ன ஆள்தான் இவரு அதனால்தான் திருகோணம்லைக்கு போய்வர முடிந்ததாக சொன்ன ஆளு இப்ப கேம் ஆடுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புலிகள் அழிந்தது தனக்கு சந்தோஷம் என சொன்ன ஆள்தான் இவரு அதனால்தான் திருகோணம்லைக்கு போய்வர முடிந்ததாக சொன்ன ஆளு இப்ப கேம் ஆடுது

உதுகளின்ரை  குத்துக்கரணங்களை 77ம் ஆண்டிலை இருந்து பாக்கிறம் தானே.
 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உதுகளின்ரை  குத்துக்கரணங்களை 77ம் ஆண்டிலை இருந்து பாக்கிறம் தானே.
 

இவங்களை நம்பி இன்னும் சிலர் பின்னாலே போறதும் இல்லாமல்பாடம் வேற படிப்பிக்கிறாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.