Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று அதிகாலை கனவில் வந்து மிரட்டியது; பேய் பீதியில் கிணற்றில் குதித்த வாலிபர்

Featured Replies

Dkn_Tamil_News_2019_Nov14__570079982280732.jpg

புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக அர்ச்சகர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் அரை மணி நேரம் போராடி ஸ்டீபனை வெளியே மீட்டனர். அவருக்கு சிறு, சிறு காயங்கள் இருந்ததால், முதல் உதவி சிகிச்சைக்கு பின் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் புதுக்கடை போலீசாரும்  வந்து விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஸ்டீபனிடம் போலீசார் கேட்ட போது, அவர் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததுடன், சிரிக்கவும் வைத்தது. அவர் போலீசில் கூறுகையில், இன்று அதிகாலை நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது 3 பேய்கள் என் கனவில் வந்தன.

நீ எங்களுடன் வந்து விடு. நாங்கள் உன்னை விட மாட்டோம் என்றன. அந்த உருவங்களை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என கூறிக்கொண்டு ஓட தொடங்கினேன். அந்த பேய்கள் என்னை துரத்தின. கடைசியாக நான் கோயில் கிணற்றுக்குள் விழுந்தேன். கிணற்றில் விழுந்தது கனவு தான் என்று நினைத்தேன். தண்ணீருக்குள் விழுந்த பின் தான் உண்மையிலேயே கிணற்றுக்குள் விழுந்ததை நான் உணர்ந்தேன் என்றார்.  இதை கேட்டதும் போலீசாரும் சிரித்தனர். இதற்கிடையே ஸ்டீபன் கூறும் தகவல் நம்பும்படியாக இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் கூறி உள்ளனர். ஏற்கனவே இந்த கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி உள்ளது. எனவே  புதையல் எடுக்கும் நோக்கத்துடன் யாராவது ஸ்டீபனை கிணற்றுக்குள் விழ வைத்து இருப்பார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

https://www.ndtv.com/tamil?pfrom=home-header-globalnav

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டீபன் கிறிஸ்தவ பெயர் குதிச்சது நாகதேவி கோயில் அப்ப ஊர் மக்கள் சந்தேகப்படுவது சரிதான் போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஸ்டீபன் கிறிஸ்தவ பெயர் குதிச்சது நாகதேவி கோயில் அப்ப ஊர் மக்கள் சந்தேகப்படுவது சரிதான் போலிருக்கு .

ஒவ்வொருவரும் தத்தமது சமயக் கிணறுகளில் குதித்தால் மட்டுமே அவர்கள் சொல்வதை நாங்கள் நம்புவோம் 😃

  • கருத்துக்கள உறவுகள்

👉🏿 இன்று, வெள்ளிக்கிழமை ஆதலால்... 
செய்தி வாசிக்கும், அவசரத்தில்...  👈🏿
இன்று அதிகாலை கன(டா)வில் வந்து மிரட்டியது; பேய் பீதியில் கிணற்றில் குதித்த வாலிபர்,
கனடாவில்... கிணறு இருக்குதா என்று கொஞ்ச நேரம்... 
என்ரை  மூளை, பயங்கரமாய்.. சித்திக்க வெளிக்கிட்டுது. :shocked:

அட... இது, இந்தியா செய்தி என்று, தாமதமாய் தான்.. புரிந்தது. :grin: 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இன்று அதிகாலை நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது 3 பேய்கள் என் கனவில் வந்தன.

செய்தியில் அதிகாலை என்றுள்ளது.. பேய் வர சான்ஸ் இல்லை..

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

அவரின்ர மனைவி காலை ரிபன் இட்டலிக்கு சட்னி அரைக்க எழுப்பி இருப்பர்..மனுசன் தினமும் இதே தொல்லையா போய்டுத்து என்டு ஒரு முடிவு எடுத்திட்டார்.. 😢

  • தொடங்கியவர்
41 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவில்... கிணறு இருக்குதா என்று கொஞ்ச நேரம்... 
என்ரை  மூளை, பயங்கரமாய்.. சித்திக்க வெளிக்கிட்டுது. :shocked:

ஆம். கனடாவில் கிணறுகள் உள்ளன, கண்டும் இருக்கின்றேன். .
ஆனால், பேய்களை கண்டதில்லை. பிசாசுகள் இருக்கலாம் 🤩

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ampanai said:

ஆம். கனடாவில் கிணறுகள் உள்ளன, கண்டும் இருக்கின்றேன். .
ஆனால், பேய்களை கண்டதில்லை. பிசாசுகள் இருக்கலாம் 🤩

நம்ப கஸ்ரமாய்... இருக்கு  அம்பனை.
ஒரு, கனடா கிணத்து.... படத்தை, போட்டுக் காட்டுங்களேன். :grin:

2 hours ago, தமிழ் சிறி said:


கனடாவில்... கிணறு இருக்குதா என்று கொஞ்ச நேரம்... 

 

 

57 minutes ago, தமிழ் சிறி said:


ஒரு, கனடா கிணத்து.... படத்தை, போட்டுக் காட்டுங்களேன். :grin:

இதில் இரட்டை அர்த்தம் ஒன்றும் இல்லை தானே ?:unsure:😜

  • தொடங்கியவர்
1 hour ago, தமிழ் சிறி said:

நம்ப கஸ்ரமாய்... இருக்கு  அம்பனை.
ஒரு, கனடா கிணத்து.... படத்தை, போட்டுக் காட்டுங்களேன். :grin:

இந்த வீடு விற்பனைக்கு உள்ளத்து. அதில் கிணற்று நீர் உள்ளதாம். எல்லா வீடுகளுக்கும் நகராட்ச்சியால் நீரை வழங்க முடியாது.  

https://www.realtor.ca/real-estate/21164832/3-bedroom-single-family-house-5036-heaslip-lane-port-hope-rural-port-hope

Property Land Size, Well Water, Property Taxes, Hydro, Property Been Sold In ""As Is "" Condition.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிழலி said:

இதில் இரட்டை அர்த்தம் ஒன்றும் இல்லை தானே ?:unsure:😜

ம்க்கும்.... நான், இதற்கு பதில் சொல்ல மாட்டேன். :grin:
எனக்கு...   எச்சரிக்கை புள்ளிகள் தர,  "பிளான்"  பண்ணுறியள்  போலை. கிடக்கு. :7_sweat_smile:  😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ampanai said:

அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார்.

எனக்கு  என்னமோ ஐய்யர்ரை மனிசியிலை பயங்கர டவுட். :wink:

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

எனக்கு  என்னமோ ஐய்யர்ரை மனிசியிலை பயங்கர டவுட். :wink:

என்னிடம் கைவசம் பச்சைகள் இல்லை கு.சா அவர்களே ( நீங்கள் ஒருக்காலும் கிணத்துக்க குதிக்க இல்லைதானே???? 🤣🤣🤣🤣🤣🤣)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, Maharajah said:

என்னிடம் கைவசம் பச்சைகள் இல்லை கு.சா அவர்களே ( நீங்கள் ஒருக்காலும் கிணத்துக்க குதிக்க இல்லைதானே???? 🤣🤣🤣🤣🤣🤣)

கிணத்தடிப்பக்கம் போறேல்லை ஆனால் துரவுப்பக்கம் தடக்குப்பட்டு விழுந்த ஞாபகம் இருக்கு மற்றும் படி கருக்கு மட்டை வேலி தாறுமாறாய் கீறின கதையள் எக்கச்சக்கம்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

கிணத்தடிப்பக்கம் போறேல்லை ஆனால் துரவுப்பக்கம் தடக்குப்பட்டு விழுந்த ஞாபகம் இருக்கு மற்றும் படி கருக்கு மட்டை வேலி தாறுமாறாய் கீறின கதையள் எக்கச்சக்கம்....🤣

அது ஒரு கனாக் காலம்.  

பிரபாகரன் காலத்தில் பிறந்ததை தவிர நாங்கள் வேறு ஒரு புண்ணியமும் செய்யவில்லை. 😭

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை விரதகாலங்கள் நல்ல விபரமாத்தான் கதைச்சிருக்கிறாங்கள். எல்லாரும் விவகாரமான ஆட்கள் போல🧐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, Maharajah said:

அது ஒரு கனாக் காலம்.  

பிரபாகரன் காலத்தில் பிறந்ததை தவிர நாங்கள் வேறு ஒரு புண்ணியமும் செய்யவில்லை. 😭

கருக்குமட்டை கீறினால்......கம்பி வேலியிலை தடக்குப்பட்டு விழுந்தால்.....கடியன் நாய் குலைக்க விழுந்தடிச்சு ஓடினால்.....அது கனாக்காலமே?🙃

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

கருக்குமட்டை கீறினால்......கம்பி வேலியிலை தடக்குப்பட்டு விழுந்தால்.....கடியன் நாய் குலைக்க விழுந்தடிச்சு ஓடினால்.....அது கனாக்காலமே?🙃

உண்மையை கூறுங்கள்,  அந்த நாட்களை நினைத்து தற்போது நீங்கள் மகிவுடையவில்லையா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.