Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மதங்களில் எதுவுமே புனித மதம் இல்லை.

நூற்றில் ஒரு வார்த்தை.

  • Replies 232
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

1. மாக்சின் கூற்றில் பொதிந்திருக்கும் உண்மை:

மதாபிமானம் எனும் உணர்வு போதைவஸ்து போலானாது - அது தலைக்கேறினால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த பிக்குவே, அவரை தடுக்காமல் அருகே நின்று வேடிக்கை பார்க்கும் மக்களே சாட்சி.

கால்மாக்ஸ் கூட்டங்கள், பெரும்பாலானவர்கள் இருந்தால், அவர்களுக்கு இருக்கும் போதை, மதவாதிகளுக்கு எதிராக எப்படித் திரும்பும், திரும்பி இருக்கிறது என்பதை வரலாறு தெளிவாக சொல்கிறது. 

இதற்கு கால்மாக்ஸ் தத்துவங்களும் விதிவிலக்கல்ல.

இந்த புத்த பிக்குவின் அசாதாரண நிகழ்வு, மதங்களின் விளைவாக ஏற்பட்டதல்ல.

சட்டங்களை மதித்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்த பொலிஸாரின் நிலையால் ஏற்பட்ட அமளிதுமளி.

அவ்வளவுதான்.

17 minutes ago, goshan_che said:

1. மாக்சின் கூற்றில் பொதிந்திருக்கும் உண்மை:

மதாபிமானம் எனும் உணர்வு போதைவஸ்து போலானாது - அது தலைக்கேறினால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த பிக்குவே, அவரை தடுக்காமல் அருகே நின்று வேடிக்கை பார்க்கும் மக்களே சாட்சி.

சாதாரணமாக ஒருவர் ஒருவரை அறைந்தால், என்ன ஏதென்று சூழ நிக்கும் மக்கள் விசாரிப்பார்கள். தடுப்பார்கள். 

ஆனால் இங்கே எல்லாருக்கும் மதப் போதை மிகுந்தபடியால் வேடிக்கை பார்கிறார்கள்.

இந்த நிகழ்வு மாக்சின் கூற்றை நிறுவியே உள்ளது.

அதென்ன மதங்களின் உண்மைதன்மை? வேதங்களில், குரானில் சொல்லப்பட்டவை எல்லாம் மதங்கள் சொல்பவைதானே?

உண்மையிலேயே அடிப்படைவாதிகள்தான் மதங்களை உண்மையாக பின்பற்றுகிறார்கள்.

2. கன்னிப் பெண் பிள்ளை பெறுவதில்லை. உடலுறவில் கன்னிமை கழிந்து, அதன் பின் பெண்ணின் உடலுக்குள் செல்லும் விந்து, கருப்பையில் இருக்கும் முட்டையை சூழ் கொண்டு - கருவாகி அண்ணளவாக 10 மாதத்தில் பிள்ளை பிறக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் கல்யாணம் வரை கன்னியாக இருந்து, கல்யாணத்தின் பின் கன்னியாக இல்லாமல் ஆகிய பெண் மூலமே பிறந்தோம்.

யேசு அப்படி இல்லை. அவர் மேரி வயிற்றில் கருவாகும் போது, மேரி ஒரு கன்னி என்று சொல்லபடுகிறது.

அதனால்தான் மேரி Virgin Mary. 
அதனால்தான் யேசுவின் பிறப்பு divine birth.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மாங்குயில் said:

கால்மாக்ஸ் கூட்டங்கள், பெரும்பாலானவர்கள் இருந்தால், அவர்களுக்கு இருக்கும் போதை, மதவாதிகளுக்கு எதிராக எப்படித் திரும்பும், திரும்பி இருக்கிறது என்பதை வரலாறு தெளிவாக சொல்கிறது. 

இதற்கு கால்மாக்ஸ் தத்துவங்களும் விதிவிலக்கல்ல.

இந்த புத்த பிக்குவின் அசாதாரண நிகழ்வு, மதங்களின் விளைவாக ஏற்பட்டதல்ல.

சட்டங்களை மதித்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்த பொலிஸாரின் நிலையால் ஏற்பட்ட அமளிதுமளி.

அவ்வளவுதான்.

1. மேலே போல்ட் செய்த கருத்தை நான் உங்களுக்கான என் 1ம் பதிவிலேயே சொல்லிவிட்டேன். சீனா, ரஸ்ய, கம்போடிய உதாரணங்களை காட்டி.

கால்மார்க்ஸ் கூறிய சித்தாந்தங்களும் போதைவஸ்து போல் மாறக்கூடியன, மாறியுமுளன என்பதை ஏற்பதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.

அதற்க்காக மதங்கள் போதை வஸ்துகள் என்ற மாக்சின் கூற்றில் உண்மை இல்லை என்றாகாதே.

2. பொலீசார் தலையிடாமல் போக இந்த வீடியோவில் பொலீசார் பிரசன்னம் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் தலையிட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் பெளத்த அடிப்படைவாதம் மிஞ்சிய இலங்கையில் ஒரு பிக்குக்கு அவ்வளவு பயம். இங்கே பிக்கு, பாதிரி இருவருக்கும் இடையான பிணக்கின் அடிப்படையே மதம்தான். இருவருமே தம் மதமே உயர்வானது, மற்றையோரின் மதம் சாத்தானினது என்று சிந்திப்பதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

2. கன்னிப் பெண் பிள்ளை பெறுவதில்லை. உடலுறவில் கன்னிமை கழிந்து, அதன் பின் பெண்ணின் உடலுக்குள் செல்லும் விந்து, கருப்பையில் இருக்கும் முட்டையை சூழ் கொண்டு - கருவாகி அண்ணளவாக 10 மாதத்தில் பிள்ளை பிறக்கும்.

கன்னிமை கழிந்தால்தான், பிள்ளை பிறக்கும் என்ற நியதி இல்லை.

ஓர் ஆணின் விந்தை, செயற்கையாக எடுத்து ஒரு கன்னிப் பெண்ணின் உடலில் கருப்பையில் வைத்தாலும், கருவாகி,  10  மாதத்தில் பிள்ளை பிறக்கும் 

உடலுறவின் மூலம்தான் பிள்ளை பிறக்கும்என்ற நியதி  தற்போது இல்லை.

அடுத்தது,  VIRGIN  என்றால், திருமணமாகாத பெண்

ஒரு பெண் திருமணமாகாமலும், கருத்தரிக்கலாம்.  திருமணம் என்பது ஒரு சடங்கு. அவ்வளவுதான்.

இயேசு பிறப்பதற்கு முன், யோசேப்பு என்பவர், மேரி என்பவரை திருமணம் செய்தார் என்றுதான், பைபிள் சொல்கிறது. 

அப்படிப் பார்க்கும்போது, மேரி என்பவர் - VIRGIN MARY அல்ல -   என்று தெரிகிறது.

அதனால்தான் யூதர்கள், இயேசுவையும் அவரின் தாயாரையும் மிகவும் அவதூறாகப் பழி தீர்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

1. மேலே போல்ட் செய்த கருத்தை நான் உங்களுக்கான என் 1ம் பதிவிலேயே சொல்லிவிட்டேன். சீனா, ரஸ்ய, கம்போடிய உதாரணங்களை காட்டி.

மேற்படி நீங்கள் குறிப்பிட்டு நாடுகளை சொன்னதாக நான் பார்க்கவில்லை.

இருந்தால் சொல்லுங்கள்.

8 minutes ago, goshan_che said:

கால்மார்க்ஸ் கூறிய சித்தாந்தங்களும் போதைவஸ்து போல் மாறக்கூடியன, மாறியுமுளன என்பதை ஏற்பதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.

அதற்க்காக மதங்கள் போதை வஸ்துகள் என்ற மாக்சின் கூற்றில் உண்மை இல்லை என்றாகாதே.

கால்மாக்ஸ் எல்லா மதங்களையும் ஆய்ந்து அறிந்தவர் அல்ல.

தனது கொள்கையை ஏற்காதவர்களுக்கு, சூட்டிய நாமம்தான்,  மதங்கள் எல்லாம் அபின்அடித்தவர்கள் பின்பற்றும் கொள்கைகள்.

அதனால்தான், கால்மாக்ஸ் கொள்கைகள் இப்போது, நூதனசாலைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

தற்போதைய மதவாதிகளுக்கு கால்மாக்ஸ் என்றால், யாரென்றே தெரியாது. 

அவரின் கொள்கைகளைப்பற்றி தூசு தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. 

15 minutes ago, goshan_che said:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மாங்குயில் said:

கன்னிமை கழிந்தால்தான், பிள்ளை பிறக்கும் என்ற நியதி இல்லை.

ஓர் ஆணின் விந்தை, செயற்கையாக எடுத்து ஒரு கன்னிப் பெண்ணின் உடலில் கருப்பையில் வைத்தாலும், கருவாகி,  10  மாதத்தில் பிள்ளை பிறக்கும் 

உடலுறவின் மூலம்தான் பிள்ளை பிறக்கும்என்ற நியதி  தற்போது இல்லை.

அடுத்தது,  VIRGIN  என்றால், திருமணமாகாத பெண்

ஒரு பெண் திருமணமாகாமலும், கருத்தரிக்கலாம்.  திருமணம் என்பது ஒரு சடங்கு. அவ்வளவுதான்.

இயேசு பிறப்பதற்கு முன், யோசேப்பு என்பவர், மேரி என்பவரை திருமணம் செய்தார் என்றுதான், பைபிள் சொல்கிறது. 

அப்படிப் பார்க்கும்போது, மேரி என்பவர் - VIRGIN MARY அல்ல -   என்று தெரிகிறது.

அதனால்தான் யூதர்கள், இயேசுவையும் அவரின் தாயாரையும் மிகவும் அவதூறாகப் பழி தீர்க்கிறார்கள்.

1. செயற்கை கருத்தரிப்பு முதல் முதலில் எத்தனையாம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது?

யேசு எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

யேசு பிறந்த காலத்தில் - பிள்ளை பெறுவதற்க்கான ஒரே வழிமுறை உடலுறவில் ஈடுபடுவது மட்டுமே.

2. உங்களுக்கு கிறீஸ்தவ theology பற்றி அதிகம் பரிச்சயம் இல்லை போலுளது. யேசுவை கன்னியின் மகன் என்றும், மேரியை கன்னித்தாய் என்றும் கூறக் காரணம். யேசு இறவனின் குமாரன் என்பதை நிறுவ. யோசேப்பு என்ற மனிதனின் விந்தில் இருந்து வந்த சாதாரண மனிதன் இல்லை யேசு. அவர் கன்னியாக இருந்த மேரியின் வயிற்றில் இறைவனால் ஆக்கப்பட்டவர். பிதா, சுதன், பரிசுத்த ஆவி எனும் holy trinity தான் கிறீஸ்தவத்தின் அடிப்படை கொள்கை.

3. கல்யாணமாக பெண் என்றால் spinster.

vigin என்றால் இதுவரை உடலுறவில் ஈடுபடாதவர். உசாத்துணைகள் கீழே.

https://dictionary.cambridge.org/dictionary/english/virgin 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

2. பொலீசார் தலையிடாமல் போக இந்த வீடியோவில் பொலீசார் பிரசன்னம் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் தலையிட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் பெளத்த அடிப்படைவாதம் மிஞ்சிய இலங்கையில் ஒரு பிக்குக்கு அவ்வளவு பயம். 

நீங்கள் சொல்வது உண்மைதான். 

பிற மதத்தினரை எவ்வளவு மோசமாக ஒரு பிக்கு திட்டினாலும், அடித்தாலும், கொன்றாலும், ஒருவரும் அந்தப்பிக்குகளைத் தாக்குவதற்கு துணிவதில்லை.

அப்படித் துணிந்தால், அடுத்த நாள் தாக்கியவரின் இனம் முழுமையாக அழித்தொழித்து சூறையாடப்படும் என்பதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள்.

23 minutes ago, goshan_che said:

. இங்கே பிக்கு, பாதிரி இருவருக்கும் இடையான பிணக்கின் அடிப்படையே மதம்தான். இருவருமே தம் மதமே உயர்வானது, மற்றையோரின் மதம் சாத்தானினது என்று சிந்திப்பதுதான்.

பிற மதங்களை, சாத்தானின்  மதங்கள் என்று சொல்லும் ஒரே மதம், கிறிஸ்தவ மதம்தான்.

சிங்கள மக்கள் வாழும் இடத்தில், கிறிஸ்தவ போதகர் நடத்திய மதப் பிரசாரம்தான், இந்த அடாவடிப் பிக்கு தலையிட்டு மேலும் மோசமாக்கியது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மாங்குயில் said:

மேற்படி நீங்கள் குறிப்பிட்டு நாடுகளை சொன்னதாக நான் பார்க்கவில்லை.

இருந்தால் சொல்லுங்கள்.

கால்மாக்ஸ் எல்லா மதங்களையும் ஆய்ந்து அறிந்தவர் அல்ல.

தனது கொள்கையை ஏற்காதவர்களுக்கு, சூட்டிய நாமம்தான்,  மதங்கள் எல்லாம் அபின்அடித்தவர்கள் பின்பற்றும் கொள்கைகள்.

அதனால்தான், கால்மாக்ஸ் கொள்கைகள் இப்போது, நூதனசாலைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

தற்போதைய மதவாதிகளுக்கு கால்மாக்ஸ் என்றால், யாரென்றே தெரியாது. 

அவரின் கொள்கைகளைப்பற்றி தூசு தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. 

3ம் பக்கத்தில் கற்பிதன்னின் கருத்துக்கும், வங்காலையானின் கருத்துக்கும் இடையான என் பின்னூட்டத்தில் உள்ளது.

முன்பே சொன்னதுதான்- எனக்கு மாக்ஸ்-அபின் மீதும் மயக்கம் இல்லை. அந்த கொள்கை தோற்றுப்போனதையிட்டும் கவலை இல்லை. அந்த கொள்கை மீது எனக்கு உடன்பாடும் இல்லை.

ஆனாலும் அவரின் மதங்கள் பற்றிய இந்த கண்ணோட்டமும் எனது கண்ணோட்டமும் ஒன்றே. எமது பார்வை மிகச் சரியானது என்பதை காலாகாலத்துக்கு நடக்கும் நிகழ்வுகள் மீள நிறுவுகிறன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

3. கல்யாணமாக பெண் என்றால் spinster.

vigin என்றால் இதுவரை உடலுறவில் ஈடுபடாதவர். உசாத்துணைகள் கீழே.

https://dictionary.cambridge.org/dictionary/english/virgin 

noun

a person who has never had sexual intercourse.
an unmarried girl or woman.

VIRGIN -  என்றால், திருமணமாகாத பெண், உடலுறவு கொள்ளாத பெண் என்றும் அகராதி சொல்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மாங்குயில் said:

noun

a person who has never had sexual intercourse.
an unmarried girl or woman.

VIRGIN -  என்றால், திருமணமாகாத பெண், உடலுறவு கொள்ளாத பெண் என்றும் அகராதி சொல்கிறது.

இதற்க்கான இணைப்பு ? நான் மேலே சுட்டியுள்ளது கேம்பிரிஜ் அகராதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

முன்பே சொன்னதுதான்- எனக்கு மாக்ஸ்-அபின் மீதும் மயக்கம் இல்லை. அந்த கொள்கை தோற்றுப்போனதையிட்டும் கவலை இல்லை. அந்த கொள்கை மீது எனக்கு உடன்பாடும் இல்லை.

ஆனாலும் அவரின் மதங்கள் பற்றிய இந்த கண்ணோட்டமும் எனது கண்ணோட்டமும் ஒன்றே. எமது பார்வை மிகச் சரியானது என்பதை காலாகாலத்துக்கு நடக்கும் நிகழ்வுகள் மீள நிறுவுகிறன.

கால்மாக்ஸ் கொள்கை தோற்றுப்போனதுபற்றி, கவலை இல்லை என்றுசொல்கிறீர்கள்.

அந்தக் கொள்கை மீது எனக்கு உடன்பாடும் இல்லையென்று சொல்கிறீர்கள்.

அந்தக் கொள்கை மீது உடன்பாடும் இல்லையென்றால்,  அவரின் மதங்கள்பற்றிய அவரின் கண்ணோட்டமும் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல்தானே இருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மாங்குயில் said:

கால்மாக்ஸ் கொள்கை தோற்றுப்போனதுபற்றி, கவலை இல்லை என்றுசொல்கிறீர்கள்.

அந்தக் கொள்கை மீது எனக்கு உடன்பாடும் இல்லையென்று சொல்கிறீர்கள்.

அந்தக் கொள்கை மீது உடன்பாடும் இல்லையென்றால்,  அவரின் மதங்கள்பற்றிய அவரின் கண்ணோட்டமும் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல்தானே இருக்க வேண்டும்?

ஒருவரின் ஒரு கண்ணோட்டத்துடன் உடன் படுவதால் அவரின் மொத்த கொள்கைகளுடனும் உடன்படுவதாகாது.

12 minutes ago, goshan_che said:

இதற்க்கான இணைப்பு ? நான் மேலே சுட்டியுள்ளது கேம்பிரிஜ் அகராதி.

https://www.lexico.com/definition/virgin

👆🏼இது ஆக்ஸ்போர்ட் 

நீங்கள் சொன்ன விளக்கம்

காலின்ஸ் டிக்சனரியில் கீழ கண்ட இணைப்பில் அமேரிக்க அர்த்தம் என்பதாக உளது.

https://www.collinsdictionary.com/dictionary/english/virgin

ஆனால் கிறீஸ்த theology, holy trinity, கத்தோலிக்கத்தில் மேரிக்கு இருக்கும் அந்தஸ்தை விளங்கி கொண்டால்- மேரி உடலுறவு இன்றி யேசுவை கருத்தரிதார் என்றே கிறீஸ்தவ மதம் சொல்கிறது என்பது புரியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

ஒருவரின் ஒரு கண்ணோட்டத்துடன் உடன் படுவதால் அவரின் மொத்த கொள்கைகளுடனும் உடன்படுவதாகாது.

கால்மாக்ஸ் கொள்கைகளில் உங்களுக்கு உடன்பாடு கிடையாது என்று சொல்கிறீர்கள்.

மதம் ஒரு கீழ்த்தரமான போதை, என்ற கால்மாக்ஸ் தத்துவத்தில் உடன்பாடு கிடையாது என்று ஏற்பதை தயங்குகிறீர்கள்.

14 minutes ago, goshan_che said:

இதற்க்கான இணைப்பு ? நான் மேலே சுட்டியுள்ளது கேம்பிரிஜ் அகராதி.

நான் சொன்னதை நீங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்.
 
noun

a person who has never had sexual intercourse.
an unmarried girl or woman.

VIRGIN -  என்றால், திருமணமாகாத பெண், உடலுறவு கொள்ளாத பெண் என்றும் அகராதி சொல்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்
Just now, மாங்குயில் said:

கால்மாக்ஸ் கொள்கைகளில் உங்களுக்கு உடன்பாடு கிடையாது என்று சொல்கிறீர்கள்.

மதம் ஒரு கீழ்த்தரமான போதை, என்ற கால்மாக்ஸ் தத்துவத்தில் உடன்பாடு கிடையாது என்று ஏற்பதை தயங்குகிறீர்கள்.

கால்மாக்ஸ் கொள்கைகள் பெரும்பாலும் பொதுவுடமையை வலியுறுத்துவன அதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனால் மதம் என்பது ஒரு கீழ்தரமான போதை என்பதை உணர, ஏற்க அவரின் பொதுவுடமை கொள்கைகளையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஒரு முதலாளியவாதியாக, அல்லது அணிசேராமலோ இருப்பவரும் கால்மாக்சின் மதம் பற்றிய இந்த பார்வையை மட்டும் ஏற்றுக் கொள்வதில் ஒரு முரணும் இல்லை.

தவிரவும் மதம் என்பது மனிதர்களால் உருவாகப் பட்ட ஒரு விடயம் என்பதும், அது ஒரு மிக மோசமான குழுநிலை மனப்பான்மையை வளர்க்கும் போதை என்பதும் நான் தற்சார்பாக துணிந்த துணிபு.

பின்னர் அதை மாக்ஸும் சொல்லி உள்ளார் என படிக்கும் போது, நான் அவரின் இந்த கருத்தில் உடன் படுகிறேன் என்பது இயற்கையானதுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, goshan_che said:

யோசேப்பு என்ற மனிதனின் விந்தில் இருந்து வந்த சாதாரண மனிதன் இல்லை யேசு. 

மேரி என்ற பெண், இயேசு பிறக்குமுன் திருமணம் செய்யவில்லை.

ஆனால், பைபிள் சொல்கிறது - இயேசு பிறக்கும் முன் மணமுடித்தார்.

இப்போது, பைபிள் ஆய்வாளர்கள், பைபிளில் எழுதப்பட்டதை மறுக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மாங்குயில் said:

மேரி என்ற பெண், இயேசு பிறக்குமுன் திருமணம் செய்யவில்லை.

ஆனால், பைபிள் சொல்கிறது - இயேசு பிறக்கும் முன் மணமுடித்தார்.

இப்போது, பைபிள் ஆய்வாளர்கள், பைபிளில் எழுதப்பட்டதை மறுக்கிறார்கள். 

ஐயா,

பைபிள் ஆய்வாளர் என்ன சொல்கிறார்கள். மேரியின் திருமண அத்தாட்சி பத்திரம் எங்கே என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாத சோலிகள் 😂.

அது யாரும் சதிக்கோட்பாட்டளருக்கு உவப்பான கருப்பொருளாக இருக்கலாம், எனக்கில்லை.😂

யேசு தேவகுமாரன், அவர் ஒரு அற்புதத்தின் மூலம் கன்னி மேரி வயிற்றில் உதித்தார் என்பது கத்தோலிக்கர் நம்பிக்கை (miracle birth).

தேவாலங்களில் “கன்னியாய் இருந்த மரியே வாழ்க, கர்த்தரினால் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே” “ஆமென்”

என்ற பிராத்தனை பாடப்படுவதை இன்றும் கேட்கலாம்.

இதை நம்பும் எந்த கிறீஸ்தவருக்கும், நித்தியின் ஜில்மால் கதைகளை கேலி செய்யும் தார்மீக உரிமை இல்லை.

இதை மட்டுமே நான் சொல்கிறேன்.

நன்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

தவிரவும் மதம் என்பது மனிதர்களால் உருவாகப் பட்ட ஒரு விடயம் என்பதும், அது ஒரு மிக மோசமான குழுநிலை மனப்பான்மையை வளர்க்கும் போதை என்பதும் நான் தற்சார்பாக துணிந்த துணிபு.

பின்னர் அதை மாக்ஸும் சொல்லி உள்ளார் என படிக்கும் போது, நான் அவரின் இந்த கருத்தில் உடன் படுகிறேன் என்பது இயற்கையானதுதானே.

கால்மாக்ஸ் கொள்கைகளில் உங்களுக்கு உடன்பாடு கிடையாது என்று சொல்கிறீர்கள்.

நீங்கள்  தற்சார்பாக துணிந்த துணிபுகூட, பின்னாளில் நீங்கள்  மாக்சிசத்தில் கண்ட உடன்படாத கொள்கை.  அப்படித்தானே!

மாக்சிசம் தோற்றுப் போவதுகூட, நீங்கள் கவலைப்படுவதில்லை.

மதம், ஒரு கீழ்த்தரமான போதை என்ற  கால்மாக்ஸ் தத்துவத்தை மாத்திரம் தூக்கிப் பிடிப்பது ஏனோ

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மாங்குயில் said:

ஏனென்றால், மாக்ஸ் சொல்லி இருக்கா விட்டாலும் என் முடிவு அதுதான்.

ஆனால் கோசானின் தற்துணிபு மீண்டும், மீண்டும் உண்மையாகிறது என எழுதினால், யார் அந்த கோசான்? என்ற கே(ள்)லி க்கு பதில் சொல்லியே என் காலம் ஓடிவிடும் என்பதால் - மாக்சை இழுக்கிறேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

கால்மாக்ஸ் கொள்கைகள் பெரும்பாலும் பொதுவுடமையை வலியுறுத்துவன அதில் எனக்கு உடன்பாடில்லை.

😎மக்கள் நல விரும்பிகள்  பலருடைய கருத்தும் இதுவே.

32 minutes ago, goshan_che said:

ஆனால் மதம் என்பது ஒரு கீழ்தரமான போதை என்பதை உணர, ஏற்க அவரின் பொதுவுடமை கொள்கைகளையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

மிகச் சிறந்த கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

நித்தியின் ஜில்மால் கதைகளை கேலி செய்யும் தார்மீக உரிமை இல்லை.

இதை மட்டுமே நான் சொல்கிறேன்.

நன்றி, வணக்கம்.

சிவ பெருமானின் அவதாரமான நித்தியானந்த சுவாமிகளின் சத்சங்கங்களை, “நித்தியின் ஜில்மால் கதைகளை” என்று எழுதி, எனது மத நம்பிக்கையை அவதூறு செய்துள்ள goshen_che க்கு தண்டனை வழங்குமாறு மட்டுறுத்துனர் நிழலி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஜெய் நித்தியானந்தம். 😫

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஏனென்றால், மாக்ஸ் சொல்லி இருக்கா விட்டாலும் என் முடிவு அதுதான்.

ஆனால் கோசானின் தற்துணிபு மீண்டும், மீண்டும் உண்மையாகிறது என எழுதினால், யார் அந்த கோசான்? என்ற கே(ள்)லி க்கு பதில் சொல்லியே என் காலம் ஓடிவிடும் என்பதால் - மாக்சை இழுக்கிறேன். 😂

ஐயோ என்ற உம்மா கோசான் தல சுத்துது வாப்பா😂😂

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான் இத்திரியை  முழுமையாக  வாசித்தேன்

வெட்கமாக இருக்கிறது

ஒருவரை  இன்னொருவர்  அடிப்பதும்

அதை மதம்  கொண்டு பார்ப்பதும்???

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

தமிழீழத்தில் மதப் பிரச்சாரங்கள் செய்வதற்கு  தடையுண்டா அல்லது மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி உண்டென்றால் அதற்கான வரையரைகள் என்ன ? 

தமிழீழத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மத நம்பிக்கை,வழிபாடு இருக்கும்போது ஒருவரின்  மதத்தை பற்றி இன்னொருவருக்கு பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று நீங்கள் கூறுங்கள் அதற்கப்புறம் அதற்கான பதிலை நான் கூறுகிறேன்.

எனக்கும் அப்பா இருக்கு,உங்களுக்கும் அப்பா  இருக்கு, என்னோட அப்பாதான் உண்மையானவர் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று   பிறர் வீடு தேடிபோய் பிரச்சாரம் செய்வதற்கு என்ன பெயர் என்று நீங்கள் கூறுங்கள் அதுக்கப்புறம் அதற்கான பதிலை நான் கூறுகிறேன்.

ஒரு தந்தையின் விந்தணுவின் அடையாளம்தான் நம்  எதிரே வரும் ஒவ்வொரு மனிதனும்.

அதுபோல்தான் மதம் கலாச்சாரம் எல்லாமே,

ஒவ்வொரு மனிதனின் பிறப்போடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை மாற்றும் முயற்சிக்கு பெயர் ஆன்மீகமா? அசிங்கமா?

எல்லோரும்போலவே பிறந்து வளர்ந்து,உண்டு உறங்கி, நோய்கள் வந்தால்வைத்தியரிடம்போய்..

பருவ காலத்தில் ஜோடிகள் சேர்ந்து பின்புகுட்டிகள்போட்டு,அந்திமகால ஓர்நாளில் செத்துபோகும் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் ஒப்பீட்டளவில்  எந்த வகையில் மற்ற மதங்களில் இருப்பவர்களைவிட உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் ஆகிறோம் என்று சொல்லுங்கள் உங்களுக்கான விடையை தேடிசொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மன்னிக்கவும் ரதி.

உங்கள் கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை.

1) நான் பெயரை மாற்றி வரும் அளவிற்கு இங்கு யாருடனும் குறிப்பிட்டு சொல்லும் அளவில் கருத்து முரண்பாடு ஏற்படவில்லை.

(வேறு பயரில் வருகிறேன் என்பது உண்மையே. பெயரை கூறுங்கள் பார்க்கலாம், முடிந்தால்😀)

2) என்னையும் சேர்த்துதான் எம் இனம் எனக்குறிப்பிட்டிருந்தேன். தனியே உங்களை சுட்டவில்லை. காயம் ஏற்படுத்தியிருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள்.

3) மரியாதைக் குறைவாக நீங்கள் எழுதியிருப்பினும் நான் அவ்வாறு பதிலளித்திருக்கப்  போவதில்லை. மரியாதைக்குரைவாக எழுதாததற்கு நன்றிகள்.

4) பாதிரிகளைப் பற்றி என்னிடம் கூருவதால் பயனில்லை. ஏனென்றால் நான் கோவிலுக்குப் போவதில்லை.

நான் உங்கள் பெயரை சொன்னால் நீங்கள் ஒத்துக் கொள்ள போறீங்களா என்ன ? ...உடனே பெயரை மாத்தி இன்னொரு பேரில் வருவீ ங்கள்😄

9 hours ago, கற்பகதரு said:

ஜெய் நித்தியானந்தம்.

நாளும் சத்சங்கம் கேளுங்கள். :100_pray:

உங்கட கதைகளை பார்த்தால் நான் என்னவோ சாமியாரைத் தேடி,தேடி  காலில் விழுந்து கொண்டு இருக்கிறேன் என்ற மாதிரி அல்லவா இருக்கு 😊
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் உங்கள் பெயரை சொன்னால் நீங்கள் ஒத்துக் கொள்ள போறீங்களா என்ன ? ...உடனே பெயரை மாத்தி இன்னொரு பேரில் வருவீ ங்கள்😄
 
நிச்சயமாக இல்லை. 

அண்மையில்தான் யாழில் இணைந்தேன். கைபேசியை மாற்றியதால் முன்னைய பெயரில் இணைய முடியவில்லை. பல செயலிகள் இயங்கவில்லை அல்லது எனக்கு புதிய கைபேசியை கையாளத்தெரியவில்லை.

நீங்கள் விரும்பினால் எனது முன்னைய பெயரைக் கூறுங்ககளேன் பார்க்கலாம்.😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.