Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 12:08 PM, goshan_che said:

பிகு: நல்ல வேளையாக சிங்கள சிறுமி என எழுதினீர்கள். இதையே தமிழ் சிறுமி என எழுதியிருந்தால் - உங்களை குதறி இருப்பார்கள்😂

✔️உண்மை சிங்கள சிறுமி என எழுதியதினால் தமிழ் சேனாக்கள் கூல்டவுன் ஆகிவிட்டார்கள்😂

  • Replies 232
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

மதம்மாறுவதை, மாற்றுவதை நான் முற்றாக வெறுக்கிறேன். என்னை பொறுத்தவரை கொக்காகோலா உடம்புக்கு கூடாது ஆகவே நாளை முதல் நான் பெப்சி கோலாதான் குடிப்பேன் என்பவர்களுக்கும் மதம் மாறுபவர்களுக்கும் ஒரு வித்யாசமுமில்லை. ஆனால் மதம் மாற்ற, மாற (வன்முறை அற்ற முறையில்) சுதந்திரம் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

கருத்தாளர் எவ்வளவு எளிமையாக விளக்கமாக சொல்லியுள்ளார்.
ஆனால் என்ன விஷ்கி குடிப்பதை கைவிட்டு பிரண்டி குடிப்பதற்கும்  ஜனநாயகம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

"இந்த பின்னூட்டத்தில் "

இகழ்வு நெகிழ்ச்சியா ? அல்லது உயர்வு நவிர்ச்சியா ? 😜

பிழை இருப்பின் திருத்தலாம் 

இரெண்டும் இல்லை.

நாம் ஒரு விசயத்தை சொல்ல வந்திருப்போம், ஆனால் அதை இன்னும் நயம்பட இன்னொருவர் சொல்லி விடும்போது.

ப்...பா ... இதை, இவ்வளவு தெளிவாக நம்மால் விளங்க வைக்க முடியாது என்று தோன்றும் போது...

பரிமாறிக் கொண்ட மனப்பூர்வமான பாராட்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் என்ன விஷ்கி குடிப்பதை கைவிட்டு பிரண்டி குடிப்பதற்கும்  ஜனநாயகம் வேண்டும்.

விஸ்கி, பிரெண்டி குடித்து வெறிப்பதற்கு ஜனநாயகம் மட்டுமல்ல, மாக்சிசம், கம்யூனிசம் எல்லாம் தாராளமான சுதந்திரத்தைக் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கற்பகதரு அவர்கள் நித்தியானந்தாவின் மதத்திற்கு மாறியதை நான் முழு மனதுடன் ஏற்று கொள்கிறேன்.அவர் நித்தியானந்தா ரஞ்சிதாவின் கடவுள் கோட்பாடுகளை தன் சொந்த சிந்தனையை பாவித்து பகுத்தறிந்து, கற்றுணர்ந்து மதம் மாறி உள்ளார். மற்றவர்கள் மதம் மாறுவது போல் பேராசையினாலோ, அல்லது வந்த நோய் மாற வேண்டும் என்பதிற்காகவோ நோயால் இறந்து விடுவேன் என்ற பயத்தினாலோ  இறந்த பின்னர் சுவர்க்கத்தில் வாழலாம் என்ற ஆசையினால் அவர் மதம் மாறவில்லை.

மா ரஞ்சித மயி அவர்கள், லெனின் எடுத்த பக்தி படத்தில் நித்யாநந்த சரஸ்வதிக்கு செய்த ஆன்மீக சித்து விளையாட்டுகளை எனக்கும் அறிவிப்பாராயின்,

நானும் எனது மதங்கள் மீது நம்பிக்கை இல்லா நிலையில் இருந்து மாறத் தயராகவே இருக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கற்பகதரு said:

பெரியோர்களே, சொன்னால் கோவிக்க கூடாது, எம் பெரும் ஈழத்தமிழ் மக்களின் அவல நிலைக்கு உண்மையான காரணம் விளக்கக்குறைவு.

  1. ஒற்றுமை இல்லாமைக்கு காரணமும் விளக்கக்குறைவு. 
  2. எந்த ஒரு நாட்டின் வெளிப்படையான ஆதரவில்லாததற்கு காரணமும் விளக்கக்குறைவு.
  3. சாத்தியமில்லாத தீர்வுதிட்டங்களை தேடிய முயற்சிகளுக்கு காரணமும் விளக்கக்குறைவு.
  4. மதச்சண்டைக்கு காரணமும் விளக்கக்குறைவு.

இந்த சந்தர்ப்பத்திலே, மதங்களைப் பற்றிய விளக்கத்தை பார்க்கப் போகிறோம். பிறந்த நாளில் இருந்து நாம் எல்லோருமே எமது பெற்றோராலும், உற்றார் உறவினராலும், ஆசிரியர்களாலும் அவர்களின் மதம் பற்றிய அறிவும், கலாச்சாரமும், நம்பிக்கையும் ஊட்டப்பட்டு, தாராளமாக மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறோம். எம்மில் மிகப்பலர் தத்தமது மதங்களின் அறிவு, கலாச்சாரம், நம்பிக்கைகளில்  உண்மையாகவே ஊறி இருப்பதால் மற்ற மதங்களை புரிந்து கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கடினம் வரலாற்றில் பதிவான பொதுவான போக்கு.

16ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் இலங்கையை கைப்பற்றிய பின் ஈழத்தமிழரை பல்வேறு வகைகளில் மதம் மாறுமாறு நிர்ப்பந்தித்தார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. தாம் கைப்பற்றிய ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க யாழ்ப்பாணம் படுவேகமாக மதம் மாறி விட்டது. மதமாற்றம் 100 வீதம் என போர்த்துக்கேய ஆளுநர்கள் தமது ஆட்சியாளருக்கு அறிவித்தார்கள். எப்படி இது சாத்தியமானது? வேறு ஒன்றுமில்லை - போர்த்துக்கேயரின் விளக்கக்குறைவே இதை சாத்தியமாக்கியது. போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்தில் ஒருவர் இணைந்தால் அந்த மத நம்பிக்கைகளின்படி அவர் தனது முன்னைய மதத்தை கைவிட்டு விட்டார் என்பதே அதன் அர்த்தம். ஆனால் யாழ்ப்பாணத்தவரோ சைவர்கள். சைவ சமயத்தை பொறுத்தளவில் இன்னுமொரு கடவுளை கும்பிடுவதனால் சைவர்கள் சைவத்தை கைவிட்டதாக அர்த்தமாகாது. ஆகவே சைவர்கள் அனைவருமே தமது புதிய ஆட்சியாளரின் கடவுள்களையும் சேர்த்துக்கொண்டு கிடைத்த நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

இப்போது புத்த சமயத்துக்கு வருவோம். கத்தோலிக்கருக்கு முப்பரிமாண கடவுள் (TRINITY) இருப்பது போல, பௌத்தர்களுக்கும் முப்பரிமாண கடவுள் (Triple Gem) இருக்கிறது. பௌத்தத்தில் கடவுள் இல்லை என்பது நடைமுறையில் இல்லாத தத்துவம். இந்த பௌத்த முப்பரிமாண கடவுளின் பாகங்கள்:

  1. புத்தர்
  2. தர்மம்
  3. சங்கம் ஆகும்.

புத்தரை நாம் அறிவோம். தர்மம் என்பது பாளி மொழியில் எழுதப்பட்டு பிரித் ஓதப்படும் மந்திரங்கள் ஆகும். இந்த சப்தத்திலும் இராகத்திலும் கடவுளின் பெரும் சக்தி உள்ளதாக பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்த சக்தியை பெறுவதற்காக பிக்குகளை வீட்டுக்கு அழைத்து பௌத்தர்கள் பிரித் ஓதக்கேட்பார்கள். பிக்குகள் புத்தரின் எலும்புகளை கொண்ட பேழையை, பிரித் சக்தியை பெற இருப்பவரின் தலையில் தாங்கி வீட்டுக்கு கொண்டு வருவார்கள். இதுவே கடவுளின் ஒரு பாகமான புத்தர் ஆகும். பிரித் ஓதும் பிக்குகள் முன் பானையில் நீர் நிரப்பி ஒரு உருளை நூலின் முனைகளை நனைய விட்டிருப்பார்கள். பிரித் ஓதும் போது பிக்குகளும் சக்தியை பெற இருப்பவர்களும் நூலை பிடித்தபடி இருப்பர். ஓதி முடித்தபின், நூலை வெட்டி கைகளில் காப்புகளாக கட்டி விடுவர். இது கடவுளின் தர்மம் என்ற பாகமாகும்.

மூன்றாவது கடவுளின் பாகம் சங்கம். இந்த சங்கம் தான் பிக்குகள். ஆம், இவர்கள் பௌத்த மக்களின் கடவுள்கள். தமிழர்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை.

புத்தரின் எலும்புகளும், பிரித் ஓதலும், குடிப்பதற்கு பிரித் நீரும், கட்டுவதற்கு பிரித் நூலும் , பிக்குகளும் வீட்டுக்கு வராவிட்டால் பௌத்தர்கள் கடவுளின் ஆசியை பெற முடியாது.

மேலும், பேச்சுவழக்கில் இருந்த பௌத்த மந்திரங்களை எழுதி வைத்தவர்கள் (பாளியில்) சிங்களவர்களே. இலங்கையில் இருந்துதான் இந்த பாளி சுவடிகள், தாய்லாந்துக்கும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பிரதி செய்து கொண்டு செல்லப்பட்டன. பௌத்தம் இந்தியாவில் அழிக்கப்ட்டபோது அதை சிங்களவர்களே பாதுகாத்து உலகெங்கும் பரப்பினர். ஆகவே பிக்குகள் சிங்களவர்களுக்கு கடவுள்கள். பௌத்தம் இன்றும் உலகில் வாழ்வது சிங்கள பிக்குகளால்தான். இந்த கடவுள்களுக்கு கிறீஸ்தவம் போதிக்கும் போதகரை அறையாமல் வேறு என்ன செய்வார்கள்?

பிக்குவை கண்டால் குனிந்து கும்பிடுங்கள் - கடவுளின் தரிசனம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

image_9374aa11ef.jpg

இதை வாசிச்சு என்னால முடியல்ல😀 ...எப்படி இப்படி 😆எழுத முடியுது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதை வாசிச்சு என்னால முடியல்ல😀 ...எப்படி இப்படி 😆எழுத முடியுது 🤣

இதில் சிரிக்க என்ன இருக்கிறது?

சிங்கள மக்களுக்கு, புத்த = தம்ம = சங்க.

சங்கத்துக்கு அவர்களிடம் இருக்கும் ஆளுமையை தமிழர்கள் யாரும் இதுவரை சரியாக கணிக்கவில்லை, கையாளவில்லை.

இந்துக்கள் ஐயர்களை ஒரு பொருட்டாயும் மதிப்பதில்லை.

கிறீஸ்தவர்களும் கூட யேசு, மேரி, பைபிள்ளுக்கு நிகரான ஸ்தானத்தில் போப்பை வைப்பதில்லை.

பெளத்த சிங்களவர் மீது சங்கத்தினர் கொண்டுள்ள ஆளுகைக்கு ஓரளவுக்கு ஒப்பானது, இஸ்லாத்தில் முகமதுக்கு இருக்கும் இடம்.

இந்த பிக்குக்களை கையாளுவது எப்படி என்ற சூட்சுமத்தை நாம் அறியும்வரை -எம் உரிமைகளை வெல்ல முடியாது.

கற்பகதரு எழுதியதில் மிகவும் அவதானத்துக்குரியது,

ஆம், இவர்கள் பௌத்த மக்களின் கடவுள்கள். தமிழர்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை.

என்றவசனம். 

நாம் பிக்குகளை சிங்களவர்களின் மத குருக்களாக, ஆசான்களாக பார்கிறோம். ஆனால் அவர்களிடத்தில் பிக்குகளுக்கு இருக்கும் ஸ்தானம், கடவுளுக்கு நிகரானதது.  

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

சரியாகச் சொன்னீர்கள். 

கரையோர சிங்களவர்களுக்கும் கண்டிச் சிங்களவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை அறிந்திருந்த போதும் இப்படியொரு பக்கத்தை சிந்திக்கவில்லை. தொட்டுக் காட்டியதற்கு  நன்றிகள் இருவருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 9:36 PM, கற்பகதரு said:

பெரியோர்களே, சொன்னால் கோவிக்க கூடாது, எம் பெரும் ஈழத்தமிழ் மக்களின் அவல நிலைக்கு உண்மையான காரணம் விளக்கக்குறைவு.

  1. ஒற்றுமை இல்லாமைக்கு காரணமும் விளக்கக்குறைவு. 
  2. எந்த ஒரு நாட்டின் வெளிப்படையான ஆதரவில்லாததற்கு காரணமும் விளக்கக்குறைவு.
  3. சாத்தியமில்லாத தீர்வுதிட்டங்களை தேடிய முயற்சிகளுக்கு காரணமும் விளக்கக்குறைவு.
  4. மதச்சண்டைக்கு காரணமும் விளக்கக்குறைவு.

இந்த சந்தர்ப்பத்திலே, மதங்களைப் பற்றிய விளக்கத்தை பார்க்கப் போகிறோம். பிறந்த நாளில் இருந்து நாம் எல்லோருமே எமது பெற்றோராலும், உற்றார் உறவினராலும், ஆசிரியர்களாலும் அவர்களின் மதம் பற்றிய அறிவும், கலாச்சாரமும், நம்பிக்கையும் ஊட்டப்பட்டு, தாராளமாக மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறோம். எம்மில் மிகப்பலர் தத்தமது மதங்களின் அறிவு, கலாச்சாரம், நம்பிக்கைகளில்  உண்மையாகவே ஊறி இருப்பதால் மற்ற மதங்களை புரிந்து கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கடினம் வரலாற்றில் பதிவான பொதுவான போக்கு.

16ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் இலங்கையை கைப்பற்றிய பின் ஈழத்தமிழரை பல்வேறு வகைகளில் மதம் மாறுமாறு நிர்ப்பந்தித்தார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. தாம் கைப்பற்றிய ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க யாழ்ப்பாணம் படுவேகமாக மதம் மாறி விட்டது. மதமாற்றம் 100 வீதம் என போர்த்துக்கேய ஆளுநர்கள் தமது ஆட்சியாளருக்கு அறிவித்தார்கள். எப்படி இது சாத்தியமானது? வேறு ஒன்றுமில்லை - போர்த்துக்கேயரின் விளக்கக்குறைவே இதை சாத்தியமாக்கியது. போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்தில் ஒருவர் இணைந்தால் அந்த மத நம்பிக்கைகளின்படி அவர் தனது முன்னைய மதத்தை கைவிட்டு விட்டார் என்பதே அதன் அர்த்தம். ஆனால் யாழ்ப்பாணத்தவரோ சைவர்கள். சைவ சமயத்தை பொறுத்தளவில் இன்னுமொரு கடவுளை கும்பிடுவதனால் சைவர்கள் சைவத்தை கைவிட்டதாக அர்த்தமாகாது. ஆகவே சைவர்கள் அனைவருமே தமது புதிய ஆட்சியாளரின் கடவுள்களையும் சேர்த்துக்கொண்டு கிடைத்த நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

இப்போது புத்த சமயத்துக்கு வருவோம். கத்தோலிக்கருக்கு முப்பரிமாண கடவுள் (TRINITY) இருப்பது போல, பௌத்தர்களுக்கும் முப்பரிமாண கடவுள் (Triple Gem) இருக்கிறது. பௌத்தத்தில் கடவுள் இல்லை என்பது நடைமுறையில் இல்லாத தத்துவம். இந்த பௌத்த முப்பரிமாண கடவுளின் பாகங்கள்:

  1. புத்தர்
  2. தர்மம்
  3. சங்கம் ஆகும்.

புத்தரை நாம் அறிவோம். தர்மம் என்பது பாளி மொழியில் எழுதப்பட்டு பிரித் ஓதப்படும் மந்திரங்கள் ஆகும். இந்த சப்தத்திலும் இராகத்திலும் கடவுளின் பெரும் சக்தி உள்ளதாக பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்த சக்தியை பெறுவதற்காக பிக்குகளை வீட்டுக்கு அழைத்து பௌத்தர்கள் பிரித் ஓதக்கேட்பார்கள். பிக்குகள் புத்தரின் எலும்புகளை கொண்ட பேழையை, பிரித் சக்தியை பெற இருப்பவரின் தலையில் தாங்கி வீட்டுக்கு கொண்டு வருவார்கள். இதுவே கடவுளின் ஒரு பாகமான புத்தர் ஆகும். பிரித் ஓதும் பிக்குகள் முன் பானையில் நீர் நிரப்பி ஒரு உருளை நூலின் முனைகளை நனைய விட்டிருப்பார்கள். பிரித் ஓதும் போது பிக்குகளும் சக்தியை பெற இருப்பவர்களும் நூலை பிடித்தபடி இருப்பர். ஓதி முடித்தபின், நூலை வெட்டி கைகளில் காப்புகளாக கட்டி விடுவர். இது கடவுளின் தர்மம் என்ற பாகமாகும்.

மூன்றாவது கடவுளின் பாகம் சங்கம். இந்த சங்கம் தான் பிக்குகள். ஆம், இவர்கள் பௌத்த மக்களின் கடவுள்கள். தமிழர்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை.

புத்தரின் எலும்புகளும், பிரித் ஓதலும், குடிப்பதற்கு பிரித் நீரும், கட்டுவதற்கு பிரித் நூலும் , பிக்குகளும் வீட்டுக்கு வராவிட்டால் பௌத்தர்கள் கடவுளின் ஆசியை பெற முடியாது.

மேலும், பேச்சுவழக்கில் இருந்த பௌத்த மந்திரங்களை எழுதி வைத்தவர்கள் (பாளியில்) சிங்களவர்களே. இலங்கையில் இருந்துதான் இந்த பாளி சுவடிகள், தாய்லாந்துக்கும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பிரதி செய்து கொண்டு செல்லப்பட்டன. பௌத்தம் இந்தியாவில் அழிக்கப்ட்டபோது அதை சிங்களவர்களே பாதுகாத்து உலகெங்கும் பரப்பினர். ஆகவே பிக்குகள் சிங்களவர்களுக்கு கடவுள்கள். பௌத்தம் இன்றும் உலகில் வாழ்வது சிங்கள பிக்குகளால்தான். இந்த கடவுள்களுக்கு கிறீஸ்தவம் போதிக்கும் போதகரை அறையாமல் வேறு என்ன செய்வார்கள்?

பிக்குவை கண்டால் குனிந்து கும்பிடுங்கள் - கடவுளின் தரிசனம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

image_9374aa11ef.jpg

கற்பகதருவில் ஒரு கிளை அரசமரம்........!   👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ஆம், இவர்கள் பௌத்த மக்களின் கடவுள்கள். தமிழர்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை.

என்றவசனம். 

நாம் பிக்குகளை சிங்களவர்களின் மத குருக்களாக, ஆசான்களாக பார்கிறோம். ஆனால் அவர்களிடத்தில் பிக்குகளுக்கு இருக்கும் ஸ்தானம், கடவுளுக்கு நிகரானதது.  

பிக்குகள் எல்லாரும் வானத்தில் இருந்து விழுந்தவர்கள் அல்ல.

நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள்.

புத்த மக்கள் யாரும் அவர்களைக் கடவுள் என்று சொல்வதில்லை.

காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியேறும் சிங்களவர்கள், புத்த பிக்குகளை எதேச்சையாகக் கண்டால், அபசகுனம் என்று, தீட்டித் தீர்ப்பார்கள்.

சிங்களவர்களே புரிந்துகொள்ளாதபோது, தமிழர்கள் ஏன் அவர்களை புரிந்து கொள்ள  வேண்டும்.

அடிவாங்கிய கிறிஸ்தவ பாதிரியார், தூஷணத்தில் உமிழும் பிக்குவை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா?

பெரும்பாலான சிங்கள புத்தர்கள், பிக்குகளை மதிப்பதில்லை.

புத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அரசாங்கம். 

பிக்குகள் என்ன அநியாயங்கள் செய்தாலும், தட்டிக் கேட்காது, தண்டனை வழங்காது, அரவணைப்பது அரசாங்கம்.

பிற மதங்களின் வளர்ச்சி, புத்த மதத்தை இலங்கையில் இல்லாமல் செய்யும் என்றுநினைக்கிறது, அரசாங்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

இந்துக்கள் ஐயர்களை ஒரு பொருட்டாயும் மதிப்பதில்லை.

இந்துக்களின் தெய்வங்களையே, இந்துக்கள் மதிப்பதில்லை.

நம்மைப் போன்ற மனிதப் பிறவிகளான,  ஐயர்களை எப்படி மதிப்பார்கள்?

வேண்டுமானால், மனிதனாக மதிப்பார்கள்.  இது போதாதா?

இந்துக்கள் புத்திசாலிகள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

கிறீஸ்தவர்களும் கூட யேசு, மேரி, பைபிள்ளுக்கு நிகரான ஸ்தானத்தில் போப்பை வைப்பதில்லை.

இயேசு என்பவர், கடவுளின் குமாரன் என்றும் தெய்வ  சக்தி உள்ளவர் என்றும் சொல்கிறது  -  கிறிஸ்தவ நம்பிக்கை.

மேரி என்பவர், இயேசுவின் தாயார்.

பைபிள் என்பது, இயேசுவின் பின்னால் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.

இயேசுவுக்கும் மேரிக்கும் கொடுக்கும் அந்தஸ்து, நேற்று வந்த போப்பிற்கு யாரும் கொடுப்பதில்லை.

போப் என்பவர், பிற்காலத்தில்  ஏற்படுத்தப்பட்ட கத்தோலிக்க நிறுவனத்தின் ஒரு தலைவர்.  அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

பெரியோர்களே, சொன்னால் கோவிக்க கூடாது, எம் பெரும் ஈழத்தமிழ் மக்களின் அவல நிலைக்குஉண்மையான காரணம் விளக்கக்குறைவு.
 
என்ற கற்பகதருவின் கூற்றின் யதார்த்தம் இப்போ பலருக்கு உறைத்திருக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

பெரியோர்களே, சொன்னால் கோவிக்க கூடாது, எம் பெரும் ஈழத்தமிழ் மக்களின் அவல நிலைக்குஉண்மையான காரணம் விளக்கக்குறைவு.
 
என்ற கற்பகதருவின் கூற்றின் யதார்த்தம் இப்போ பலருக்கு உறைத்திருக்கக் கூடும்.

கட்டுப் பெட்டித்தனம்.

என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்

1 hour ago, மாங்குயில் said:

இந்துக்களின் தெய்வங்களையே, இந்துக்கள் மதிப்பதில்லை.

நம்மைப் போன்ற மனிதப் பிறவிகளான,  ஐயர்களை எப்படி மதிப்பார்கள்?

வேண்டுமானால், மனிதனாக மதிப்பார்கள்.  இது போதாதா?

இந்துக்கள் புத்திசாலிகள்.  

நீங்கள் இந்தியாவையும் அங்கு கோவிலில் பூசை செய்யும் பிராமணர்களையும் அவர்களின் உயர்வான நிலையையும் இலகுவில் மறந்துவிட்டீர்கள் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

பிக்குகள் எல்லாரும் வானத்தில் இருந்து விழுந்தவர்கள் அல்ல.

நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள்.

புத்த மக்கள் யாரும் அவர்களைக் கடவுள் என்று சொல்வதில்லை.

காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியேறும் சிங்களவர்கள், புத்த பிக்குகளை எதேச்சையாகக் கண்டால், அபசகுனம் என்று, தீட்டித் தீர்ப்பார்கள்.

சிங்களவர்களே புரிந்துகொள்ளாதபோது, தமிழர்கள் ஏன் அவர்களை புரிந்து கொள்ள  வேண்டும்.

அடிவாங்கிய கிறிஸ்தவ பாதிரியார், தூஷணத்தில் உமிழும் பிக்குவை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா?

பெரும்பாலான சிங்கள புத்தர்கள், பிக்குகளை மதிப்பதில்லை.

புத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அரசாங்கம். 

பிக்குகள் என்ன அநியாயங்கள் செய்தாலும், தட்டிக் கேட்காது, தண்டனை வழங்காது, அரவணைப்பது அரசாங்கம்.

பிற மதங்களின் வளர்ச்சி, புத்த மதத்தை இலங்கையில் இல்லாமல் செய்யும் என்றுநினைக்கிறது, அரசாங்கம்.

நீங்கள் யதார்த்தத்திலிருந்து விலகியிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

கட்டுப் பெட்டித்தனம்.

என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்

உங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

உங்களுடன் பல திரிகளில் தர்கித்துள்ளேன். நான் சொல்ல வந்ததை விளங்காமல், “துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு” என்ற ரீதியில் நீங்கள் ஒரு போதும் எழுதியதில்லை.

விளங்கி, அதற்கு மாற்றான கருத்தை முன்வைப்பீர்கள். இப்படியான தர்க்கங்களில் நாமும் பலதை விளங்கி கொள்ளலாம். ஏனையோர் எம்மிடம் இருந்து விளங்கினாலும் சந்தோசம்.

எல்லாருக்கும் இது வாய்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

மல்வது பீடம் அஸ்கிரிய பீடம் இரண்டினது அரசியல் வகிபாகம் தொடர்பாக யாராவது ஆழமாக விளக்க முடியுமா ?

இவை இரண்டினதும் அனுசரணையின்றி அரசியலில் நன்மை நடக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். கோட்டாபய இவற்றினை புறம் தள்ள முயன்றால் (ஒரு நப்பாசைதான்) SWRD Bandaranayake வுக்கு நடந்ததுதான் இவருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மாங்குயில் said:

காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியேறும் சிங்களவர்கள், புத்த பிக்குகளை எதேச்சையாகக் கண்டால், அபசகுனம் என்று, தீட்டித் தீர்ப்பார்கள்.

....................

பெரும்பாலான சிங்கள புத்தர்கள், பிக்குகளை மதிப்பதில்லை.

நான் ஏற்கனவே சொன்னது போல எங்கள் மதங்கள் வித்தியாசமானவை - எங்கள் மதங்களில் ஊறி வளர்ந்தவர்களுக்கு மற்ற மதங்களை புரிந்து கொள்வது கடினம். 

அதே வேளை நீங்கள் சொல்வதில் சில உண்மைகளும் உள்ளன.

சிங்களவர்கள் பிக்குகளை கடவுளாக கருதும் அதே வேளை, சிங்களவர்களில் பலர் நீங்கள் சொல்வது போல பிக்குகளை மதிப்பதில்லை - திட்டி தீர்க்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று வேறு மதங்களில் ஊறி வளர்ந்தவர்களுக்கு புரிவது கடினம். கடவுளை வெறுக்கிறார்களா? திட்டி  தீர்க்கிறார்களா? ஆம், செய்கிறார்கள்.

கடவுள்களான பிக்குகளின் சம்மதம் இல்லாமல் புத்தம் - தம்மம் - சங்கம் வந்து பிரித் ஓதி, நூல் கட்டி கடவுளின் அருளை பெற்று கொள்ள முடியாது. பிக்குகள் தான் அதை செய்ய வேண்டும். அவர்கள் தான் கடவுள்கள். ஆகவே சிங்களவர்கள் பிக்குகளுக்கு பயப்பிடுகிறார்கள். பிக்குகள் என்ற கடவுள்களுக்கு அவர்கள் அஞ்சி, அந்த கடவுள்களை கும்பிடுகிறார்கள். பிக்குகளை மதித்து, அவர்களின் அறிவு, கருணை பாசம் போன்றவற்றுக்காக பிக்குகளை கடவுள்கள் என்று சிங்களவர்கள் கருதவில்லை. மோசமான கயவர்களான பிக்குகளை கூட மக்கள் திட்டி திட்டியே, கடவுள் என்று கருதி அவர்களை அழைக்கும் போது விழுந்து கும்பிடுகிறார்கள். காரணம் பிக்குகளுக்கு கடவுளின் சக்தி இருப்பதாக சிங்களவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் நம்புகிறார்கள். 

கிறீஸ்தவர்கள் தமது போதகர்களுக்கோ அல்லது பாதிரிகளுக்கோ இப்படி கடவுள் சக்தி இருப்பதாக என்றும் கருதுவதில்லை, அவர்களை கும்பிடுவதும் இல்லை. அபூர்வமாக புதுமை செய்கிறேன் என்று ஏமாற்றும் போதகர்கள் கூட ஏசுவின் சக்தியால் செய்கிறேன் என்று ஒரு கணப்பொழுதில் ஏமாற்றி விட்டு பின்னர் மனிதனாகி விடுகிறார். ஆகவே கிறீஸ்தவ கலாச்சாரத்திலும் நம்பிக்கையிலும் ஊறி வளர்ந்தவர்களுக்கு பிக்குகளின் கடவுள் சக்தியை புரிவது கடினம். 

இவ்வாறான ஏமாற்று வேலைகள் மிகவும் குறைவாக இடம்பெறும் இந்து மதத்தில் ஊறி வளர்ந்தவர்களுக்கோ பிக்குகளின் கடவுள் நிலையை புரிந்து கொள்வது சாத்தியமே இல்லை. 

11 hours ago, ரதி said:

இதை வாசிச்சு என்னால முடியல்ல😀 ...எப்படி இப்படி 😆எழுத முடியுது 🤣

Edited by கற்பகதரு

7 hours ago, மாங்குயில் said:

இயேசு என்பவர், கடவுளின் குமாரன் என்றும் தெய்வ  சக்தி உள்ளவர் என்றும் சொல்கிறது  -  கிறிஸ்தவ நம்பிக்கை.

மேரி என்பவர், இயேசுவின் தாயார்.

பைபிள் என்பது, இயேசுவின் பின்னால் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.

இயேசுவுக்கும் மேரிக்கும் கொடுக்கும் அந்தஸ்து, நேற்று வந்த போப்பிற்கு யாரும் கொடுப்பதில்லை.

போப் என்பவர், பிற்காலத்தில்  ஏற்படுத்தப்பட்ட கத்தோலிக்க நிறுவனத்தின் ஒரு தலைவர்.  அவ்வளவுதான். 

முன்னரே எழுதியபடி கிறிஸ்தவர்கள் திருத்துவதை நம்புகிறார்கள். அதாவது பிதா(Father ), குமாரன்(Son ), பரிசுத்த ஆவி(Holy  Spirit ) .  எனவே கிறிஸ்தவர்கள் இந்த திரித்துவதில் உள்ள மூவரையும் வணங்குகிறார்கள்.

ஆனாலும் மரியாளுக்கு மரியாதையை செலுத்துவதே தவிர அவர் தெய்வம் இல்லை. மரியாளையும் இயேசு பெண்ணே (ஸ்திரீயே) என்றுதான் இயேசு வேதத்தில் அழைக்கிறார்.

பரிசுத்த வேதாகமம் ஏசுவுக்கு முன்பும் பின்பும் எழுதப்பட்ட ஒரு புத்தகம். இங்கு பழைய ஏட்பாடு , புதிய ஏட்பாடு என்று இரண்டையும் சேர்த்துதான் பைபிள் என்கிறோம்.

யூதர்கள் இப்போதும் பழய ஏட்பாடடை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் இயேசுவை ஏற்றுக்கொண்டு மெசியானிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனையோர் இயேசு வருவார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

போப்பும் ஒரு சாதாரண மனிதர்தான். அவருக்கு ஒரு மதத் தலைவர் என்று ஒரு மரியாதையே ஒழிய வேறொன்றுமில்லை. இருந்தாலும் அவர் இன்று ஒரு உலகத் தலைவர் போல தென்படுகிறார். இதட்கும் ஒரு காரணமுண்டு.

கிறிஸ்தவ மத நம்பிக்கையின்படி இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வந்து பரிசுத்தமாக ஜீவிப்பவர்களை எடுக்கும் ஒரு சம்பவம் சீக்கிரம் நடக்க போகிறது. அது ரகசிய வருகை என்றும் சொல்லப்படும். அதட்கு பின்னர் இந்த முழு உலகையும் ஒருவனே ஆளப்போகிறான். அவன்தான் அந்திகிறிஸ்து(Anti christ ) இது அநேகமாக போப்பாகத்தான் இருக்குமென்று ஒரு கருத்து இருக்கின்றது.

இந்த அந்தி கிறிஸ்துவினுடைய இலக்கம்தான் 666 . பைபிளின் கடைசி புத்தகத்தில் இது குறிக்கப்பட்டுள்ளது. இந்த யேசுகிறிஸ்துவைப்பற்றி இந்து , புத்த மதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் கன்னியிடத்தில் இவ்வுலகில் பிறந்து மறைந்ததாகவும் , மீண்டும் அவர் வருவார் என்றும் நம்புகிறார்கள். இந்து சமயத்தில் கிறிஸ்துவைப்பற்றிய காரியத்தை பின்னர் குறிப்பிடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கற்பகதரு said:

கடவுள்களான பிக்குகளின் சம்மதம் இல்லாமல் புத்தம் - தம்மம் - சங்கம் வந்து பிரித் ஓதி, நூல் கட்டி கடவுளின் அருளை பெற்று கொள்ள முடியாது. பிக்குகள் தான் அதை செய்ய வேண்டும். அவர்கள் தான் கடவுள்கள். 

பிக்குகள்தான் பிரித் ஓத வேண்டும் என்ற நிலைப்பாடு, சிங்கள மக்களிடம்  இல்லை. சாதாரண சிங்கள மக்களின் வீடுகளில்கூட,  பிரித் ஓதுகிறார்கள்.  அடுத்தது, சிங்கள பெரும்பான்மை மக்கள் எல்லாரும் பிக்குகளின் நூலைக் கட்டினால், நல்லது நடக்கும் என்று நம்புவதுமில்லை.

பிக்குகள் பிரித் ஓதி மக்களின் கைகளில் நூலைக் கட்டுவதால், அவர்கள் ஒருபோதும் கடவுள்கள் ஆவதில்லை.

மனிதர்களைக் கும்பிடுவதாலோ, சாஷ்டாங்கம் செய்வதாலோ, கும்பிடப்படுபவர் கடவுள்களாக ஒருபோதும் ஆவதில்லை.

புத்தம் சொல்வது, ஏறக்குறைய நாத்திகம்தான்.

கடவுள்கொள்கையை சொல்லும்  மதம் அல்ல, பவுத்தம்.

பிற்காலத்தில் உள்நுழைந்த புரோகித்தனம்தான், பிக்குகளின் அந்தஸ்து மக்கள் மத்தியில் உயரக் காரணம்.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Vankalayan said:

முன்னரே எழுதியபடி கிறிஸ்தவர்கள் திருத்துவதை நம்புகிறார்கள். அதாவது பிதா(Father ), குமாரன்(Son ), பரிசுத்த ஆவி(Holy  Spirit ) .  எனவே கிறிஸ்தவர்கள் இந்த திரித்துவதில் உள்ள மூவரையும் வணங்குகிறார்கள்.

இயேசு, கடவுளை மாத்திரம் வணங்கி வழிபடச் சொன்னவர்.

இயேசு, முக்கடவுளை வணங்குமாறு போதிக்கவில்லை.

இயேசுவிற்கு, திரித்துவம் (Trinity) என்றால் என்னவென்று  தெரியாது.

இயேசுவிற்கு பைபிள் என்றால்கூட, என்னவென்று தெரியாது.

இயேசுவிற்கு கிறிஸ்தவம் என்றால் கூட, என்னவென்று தெரியாது.

பைபிள் என்பது, இயேசுவின் பின்னால் எழுதப்பட்ட ஒரு கற்பனை கலந்த  புத்தகம்.

Just now, மாங்குயில் said:

இது உங்கள் தனிப்படட கருத்து. இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற கடடயமில்லை. கருத்து சுதந்திரம். கிறிஸ்தவன் என்ற ரீதியில் எனக்கு பைபிளைப்பற்றி நன்றாக தெரியும்.

மேலே நீங்கள் எழுதிய எல்லாவற்றிட்கும் பின்னர் வேதகாமத்திலிருந்து பதிலளிக்கிறேன். நீங்கள் பைபிள் வாசித்து தேறினவர் என்ற ரீதியில் உங்களுக்கு பதிலளிப்பேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Vankalayan said:

இது உங்கள் தனிப்படட கருத்து. இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற கடடயமில்லை. கருத்து சுதந்திரம். கிறிஸ்தவன் என்ற ரீதியில் எனக்கு பைபிளைப்பற்றி நன்றாக தெரியும்.

பைபிளை முழுமையாகப் படித்தால்,  நான் சொல்வது சரியா அல்லது பிழையா என்று புரியலாம்.

Just now, மாங்குயில் said:

பைபிளை முழுமையாகப் படித்தால்,  நான் சொல்வது சரியா அல்லது பிழையா என்று புரியலாம்.

நீங்கள் சொல்வது பிழை. நான் பைபிளை முழுமையாக விளங்கி வாசித்திருக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Vankalayan said:

நீங்கள் சொல்வது பிழை. நான் பைபிளை முழுமையாக விளங்கி வாசித்திருக்கிறேன். 

நான் சொன்னது பிழை என்பதை, மேற்கோள்காட்டி விளக்குங்கள்.

நீங்கள் சொல்வது சரியாக இருந்தால், ஏற்றுக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.