Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

நூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ.படத்தின் காப்புரிமைEPA Image captionநூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ.

அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகளை உருவாக்கிய பிறகு தற்போது தனது 100-வது வயதில் தன் சொந்தக் காடுக்கு திரும்புகிறது.

கிராண்ட் டார்ட்டாய்ஸ் எனப்படும் நில ஆமை வகையைச் சேர்ந்த டீகோவின் பூர்வீகம் அமெரிக்க கண்டத்தில், ஈக்வடார் தீவில் உள்ள கோலபாகோஸ் தீவுகள்.

சாந்தா குரூஸ் தீவில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் திட்டத்துக்காக 1960களில் தேர்வு செய்யப்பட்ட 14 ஆண் ஆமைகளில் டீகோவும் ஒன்று.

இந்த இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் 2000 தரை ஆமைகள் உருவாக்கப்பட்டு அந்த இனம் அழிவில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வெற்றியில் டீகோவின் அதீத பாலுணர்வுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பாராட்டப்பட்டது.

டீகோ நூற்றுக்கணக்கான வாரிசுகளை உருவாக்கியது. சில கணக்குகளின்படி அந்த எண்ணிக்கை சுமார் 800.

இந்தத் திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, டீகோ தமது பூர்வீகத் தீவான கோலபாகோஸ் தீவுக் கூட்டத்தின் எஸ்பனோலா தீவுக்கு இந்த ஆண்டு திரும்பும் என்று கேலபாகோஸ் தேசியப் பூங்கா சேவை தெரிவித்துள்ளது.

40 சதவீத ஆமைகளுக்குத் தந்தை

1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.

டீகோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடீகோ

எஸ்பனோலாவுக்கு தாங்கள் அனுப்பிய ஆமைகளில் பெரும்பாலானவைக்கு பங்களித்தது டீகோதான் என்று பூங்காவின் இயக்குநர் ஜோர்ஜ் காரியோன் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

தமது இயற்கையான வாழ்விடத்துக்கு டீகோ திரும்புவதால் மகிழ்ச்சி நிலவுவதாக அவர் மேலும் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பனோலாவில் டீகோவின் இனத்தில் இரண்டு ஆண் ஆமைகளும், 12 பெண் ஆமைகளும் மட்டுமே இருந்தன. Chelonoidis hoodensis என்ற அறிவியல் பெயர் கொண்ட ஆமை இனத்தை பாதுகாக்கும் பணியில் அப்போதுதான் டீகோ ஈடுபடுத்தப்பட்டது. சொந்த இடத்துக்கு திரும்புவதற்கு முன்பாக தற்போது டீகோ தனிமையில் உள்ளது.

தனித்துவமான காட்டுயிர்கள், தாவரங்கள் கொண்ட கேலபாகோஸ் தீவுகள் யுனெஸ்கோ உலகப் பண்பாட்டுத் தலம் ஆகும். அதன் பல்லுயிர் வளம் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-51115956

  • கருத்துக்கள உறவுகள்

சீணனுக்குத் தெரிந்தால் தேடிப் பீடிச்சு, அடிச்சு, காயவைச்சு சூப்பாக்கி குடிச்சு முடிச்சுப் போடுவான். 

ஆமை கவனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

40 சதவீத ஆமைகளுக்குத் தந்தை

1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.

டீகோ

https://www.bbc.com/tamil/global-51115956

வெற்றிவாகை சூடிய தோழருக்கு வாழ்த்துக்கள்.😎

3 hours ago, ஏராளன் said:

டீகோ

ஆமைச் சிங்கனே
ஆமைச் சிங்கனே

உனை வாழ்த்த வயதில்லை
உன்னுடையதை வாழ்த்தி வணங்குகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை காலத்தில் தான் முன்னர் வாழ்ந்த அந்தத் தீவை ஆமை நினைவில் வைததிருக்குமா என்ன ??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை காலத்தில் தான் முன்னர் வாழ்ந்த அந்தத் தீவை ஆமை நினைவில் வைததிருக்குமா என்ன ??

 இதெல்லாம் ஆளாளுக்கு அடிச்சு விடுவதுதான் செய்திக்கு இதில் மேலே ஒராள் வாழ்த்து சொல்லி இருக்கு இன்னொரு ஆள் கவித எழுதி இருக்கு 😎😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

 இதெல்லாம் ஆளாளுக்கு அடிச்சு விடுவதுதான் செய்திக்கு இதில் மேலே ஒராள் வாழ்த்து சொல்லி இருக்கு இன்னொரு ஆள் கவித எழுதி இருக்கு 😎😎

ஐயோ தம்பியா சிரிச்சு முடியல்ல 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆமைச் சிங்கனே
ஆமைச் சிங்கனே

உனை வாழ்த்த வயதில்லை
உன்னுடையதை வாழ்த்தி வணங்குகின்றேன்

Ähnliches Foto Ähnliches Foto

ப்ளீஸ் நிழலி.... ஆமையினுடையதை, நாவூறு படுத்தாதீர்கள்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto Ähnliches Foto

ப்ளீஸ் நிழலி.... ஆமையினுடையதை, நாவூறு படுத்தாதீர்கள்.  :grin:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 2:17 PM, விசுகு said:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

விசுகர்... வயது வட்டுக்குள்ளை போனாலும்,
இப்படியான திரிகளில், கருத்து ✍️ எழுதாமல்  விட்டால்...
சாப்பிட்டது, செமிக்காத மாதிரி... பெரிய குடைச்சலாய்  இருக்கும்.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 2:17 PM, விசுகு said:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

விசுகு...... ஈழப்பிரியன், புங்கையூரான், நந்தன்... கோஸ்ட்டிகளை,  
இந்தப் பக்கம் காணவில்லை என்று, கவலையாயிருக்கப்பா.... 😥

இப்படி ஒரு திரி இருக்கு.... என்று,  அவர்களுக்கு..... தகவல் அனுப்பி விடுங்களேன்.
அவர்களும் வந்தால், வெள்ளிக்கிழமை  குசியாய் இருக்கும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு...... ஈழப்பிரியன், புங்கையூரான், நந்தன்... கோஸ்ட்டிகளை,  
இந்தப் பக்கம் காணவில்லை என்று, கவலையாயிருக்கப்பா.... 😥

இப்படி ஒரு திரி இருக்கு.... என்று,  அவர்களுக்கு..... தகவல் அனுப்பி விடுங்களேன்.
அவர்களும் வந்தால், வெள்ளிக்கிழமை  குசியாய் இருக்கும்.  🤣

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

இப்படியான நியூஸ், என்றால்... அவங்களுக்கு குளிராவது, கோதாரியாவது. 😀
கேள்விப்பட்ட  உடனே.... பதறியடிச்சு  ஓடி வந்திடுவாங்கள். 🥰

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை நீண்டகாலம் வலுவாக வாழக்கூடியது...... 100 வயதெல்லாம் அதுக்கு மனிதனின் 35/40 வயது போன்றது....அதை அங்கு இன்னும் கெத்தாக டூயட் பாட விட்டிருக்கலாம்......என்பது என் கருத்து....!  😂

அப்பாடா இனி எனக்கும் சாப்பிட்டது செமித்திடும்.....!  🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஆமை நீண்டகாலம் வலுவாக வாழக்கூடியது...... 100 வயதெல்லாம் அதுக்கு மனிதனின் 35/40 வயது போன்றது....அதை அங்கு இன்னும் கெத்தாக டூயட் பாட விட்டிருக்கலாம்......என்பது என் கருத்து....!  😂

அப்பாடா இனி எனக்கும் சாப்பிட்டது செமித்திடும்.....!  🤣

சுவியர்... 
அந்த ஆமை, வாழ்க்கை முழுவதும், இதே... தொழிலாக  "டூயட்" பாடிக்  கொண்டிருந்தால், 
குரல் கம்மி... வாய்  நோகும் தானே...  ஆமையும் பாவமெல்லோ.....  😍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்... 
அந்த ஆமை, வாழ்க்கை முழுவதும், இதே... தொழிலாக  "டூயட்" பாடிக்  கொண்டிருந்தால், 
குரல் கம்மி... வாய்  நோகும் தானே...  ஆமையும் பாவமெல்லோ.....  😍

எந்தத் தொழில் என்றாலும்  செய்யும் தொழிலை விரும்பி செய்தால் அலுப்பு வராது.....அதனால்தான் விஞ்ஞானிகள் எந்நேரமும் லாப்பிக்குள்ளேயே இருக்கிறார்கள். இது லவ்வுக்குள்ள திரியுது. மேலும் ஆமை என்ன அனிருத் மியூசிக்கில பாடவா போகுது, குரல் கம்மி வாய் நோக......!   😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

இல்லை.....அவரையும் எங்கடை இதுக்குள்ளை சேர்த்திட்டு பிறகு போட்டு கும்முவம். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

ஹாஹா

20 hours ago, குமாரசாமி said:

இல்லை.....அவரையும் எங்கடை இதுக்குள்ளை சேர்த்திட்டு பிறகு போட்டு கும்முவம். 

பார்ரா கும்முற ஆட்களை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பார்ரா கும்முற ஆட்களை 

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

Bildergebnis für ANPE SIVAM

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இதே ரொம்ப ரொம்ப குறைந்த அளவு எடுத்து விட்டிருக்கு ஃ

இந்த விஷயத்தில் குறைந்த அளவு எடுத்து விடுவது எவ்வளவு கடினமானது எங்களுக்கு என்று தெரியுமா??😍

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

எப்படி பார்த்திருப்பார் போல் தெரிகிறது  நம்ம ஆட்கள் விடுப்பு பார்த்து திரிவதே வழக்கம் 

3 hours ago, விசுகு said:

இதே ரொம்ப ரொம்ப குறைந்த அளவு எடுத்து விட்டிருக்கு ஃ

இந்த விஷயத்தில் குறைந்த அளவு எடுத்து விடுவது எவ்வளவு கடினமானது எங்களுக்கு என்று தெரியுமா??😍

நல்லா வருவீர்கள் இருவரும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.