Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன்

Militarised%20Pongal.JPG

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால், அவர்களின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் போதும் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். ஈழத் தமிழினம், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பை சந்தித்து வருகின்றது. குறிப்பாக பண்பாடு சார்ந்த இன அழிப்புக்களை மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் கண்ணுக்கு தெரியாத வகையிலும் இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழினம் தமது உயிரையும் உரிமையையும் காத்துக்கொள்ளுவதற்கு மாத்திரம் போராடவில்லை, மாறாக பண்பாட்டு உரிமைகளுக்காகவுமே ஆயுதம் ஏந்தியும் இன்று ஆயுதமற்றும் போராடுகின்றது.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது. ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் நாட்களல் நகர்ந்தாலும் ஈழத்தில் தமிழ் ஆண்டுப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்கின்ற பண்பாடு காணப்படுகின்றது. எத்தகைய போர்க் காலத்திலும் எறிகணைகள், குண்டு மழைக்கு மத்தியிலும் புதிய மண் பானை வைத்து பொங்கி சூரியனுக்கு படைத்துவிட்டு இடம்பெயர்கின்ற மக்கள் எமது மக்கள்.

பொங்கல் என்பது இரண்டு வித்தில் முக்கியத்தும் பெறுகின்றது. அது தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்பையும் மாண்பையும் எடுத்துரைக்கின்றது. தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபடுகிறவர்கள். அத்துடன் பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்ற கருணை கொண்டவர்கள். தைப் பொங்கலின்போது, பொங்கி சூரியனுக்கு படையல் செய்கிறோம். இந்த உலகம் சிறப்பாக நகர வேண்டும் எனில் இயற்றை சீராக இருக்க வேண்டும். இன்றைக்கு மனிதர்கள் இயற்கைக்கு எதிராக பல்வேறு செயல்களை செய்து, இயற்கை சீற்றங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள். பேரழிவுகள் இதனால் ஏற்படுகின்றன.

இயற்கையை தெய்வமாக வழிபட்டு, இயற்கையை பேணினால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படாது. தமிழ் மக்களின் பண்பாட்டில் இயற்கையை பேணி வணங்குகின்ற செயற்பாடுகள்தான் நிறைந்திருக்கின்றன. இயற்கையை பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களும் அறிவியலும்தான் தமிழ் மக்களின் வணக்க முறைகளின் பண்பாட்டு அம்சங்கள் எனலாம். அதில் முதன்மையானது தைப்பொங்கல் ஆகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தைப்பொங்கல் பண்பாடு ஆதிகால அம்சங்களில் இருந்து வெகுவாக மாறியிருக்கிறது. நாகரிகம், நவீன வாழ்க்கை முறையால் குக்கர் பொங்கலாக சுருங்கிய நிலமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் இந்திய அரசு தைப்பொங்கல் திருநாளை விடுமுறையாக அறிவிக்காமையும் தமிழக மக்களுக்கு பெரும் தாக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தில் பொங்கல் எப்படி? என்பதுதான் தமிழகத்தில் உள்ளவர்களதும் புலம்பெயர்ந்த மக்களதும் முக்கிய விசாரிப்பு. ஈழத்தில் வீட்டுக்கு வீடு இன அழிப்பு போரின் பலவிதமாக பாதிப்புக்கள். போரில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், சிறுவர் இல்லங்களிலும் தெருக்களிலுமாக உள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் தாய்மார்கள் ஒரு புறத்தில் கண்ணீரும் கம்பலையாகவும் தெருக்களில் இருந்து போராடுகின்றனர். சிறைகளில் அரசியல் கைதிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் கணவர் வருவார், அப்பா வருவார் என்று காத்திருக்கும் பெண்களும் குழந்தைகளும் இன்னொரு புறத்தில் துயர வாழ்வு வாழ்கின்றனர்.

இவர்களின் வீடுகளில் பொங்கல் எப்படி இருக்கும்? இந்த மக்களின் பொங்கல் துயரப் பொங்கல்தான். இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு வாழ்வை ஈழ மக்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ மலர்வதைப் போலவே ஈழ மக்கள் தமதது பண்பாட்டு பண்டிகைகளும் அனுசரித்துச் செல்கின்றனர். 2009இற்கு முன்னரான காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்களத்திலும் பொங்கல் செய்வார்கள். விடுதலைக்கான பொங்கலாக போராட்டம் நடந்த காலத்தில் புலிக் கோலமிட்டு, புதிய பானை வைத்து போர்க்களத்தில் பொங்கி தமிழ் பண்பாட்டை காத்தனர் விடுதலைப் புலிகள்.

போர் முடிந்து இந்தப் பத்தாண்டுகளில் எத்தனையோ பண்பாட்டு தாக்குதல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஈழத் தமிழ் மக்கள் முகம் கொடுத்து விட்டனர். ஈழ மக்களின் புனித ஆலயங்கள்மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்து சைவ சுவாமிகள்மீது தாக்குதல்களை சிங்கள காடையர்கள் செய்துள்ளனர். நிலத்தை பிடிப்பதும் புத்தர் சிலைகளை குடியேற்றுவதாக ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் செய்வதற்கு சிங்களப் பேரினவாதிகள் ஏற்படுத்திய தடைகளையும் இடையூறுகளையும் ஈழ மக்கள் மறந்திரார்.

அதைப்போல, முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலயத்தில், ஆயிரம் பானை வைத்து பொங்கல் செய்தபோது, அங்கு ஆலய வாளகத்தில் அடாத்தாக குடியேறி விகாரை காட்டிய சிங்கள பிக்கு பொங்கல் பானைகளை தூக்கி எறிந்து அட்டாசகம் செய்தமை, ஒரு பண்பாட்டு மீறலும் அழிப்புமாகும். இன்றைக்கு சைவ ஆலயங்களை இலக்கு வைத்து, விகாரைகளை கட்டுவது, புத்தர் சிலையை குடியேற்றுவது என்று ஈழத் தமிழ் இனத்தின் பண்பாடு மீது போர் தொடுக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் இராணுவமும் இராணுவ முகாங்களும். மறுபறத்தில் சிங்கள பிக்குகளும் புத்தர் சிலைகளும் என்று ஈழம் இன்று பண்பாடு போரை எதிர்கொள்கிறது.

இனியாவது தமிழர்களின் வாழ்வில் இன்னல்கள் அகல வேண்டும் என்று வேண்டியபடி பொங்குவோம். ஈழ மண்மீது உண்மையான வெளிச்சம் படர வேண்டும் என்று பொங்கி சூரியனுக்கு படையல் இடுவோம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீள வீடு திரும்ப வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாய் சிறையில் வாழ்பவர்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் இறைஞ்சி பொங்குவோம். பசுக்களுக்குகூட பொங்கி, வழிபட்டு, உணவுட்டும் பண்பாட்டை கொண்ட தமிழ் இனம், இன்று சிறைகளிலும் தெருக்களிலும் வாடிக் கொண்டிருக்கின்றது. உரிமையை இழந்து, பண்பாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகின்றது.

விடுதலையை வென்றெடுக்கும் போராட்டத்தையும் இனியெமது பண்பாடு ஆக்குவாம். அழிவுகளின் மத்தியிலும் பண்பாட்டுக் கூறுகளை கைவிடாதவர்களாய் வாழ்வோம். எமது இனத்தின் மொழி, பண்பாடு, நிலம், உயிரினங்கள் என்று அனைத்தையும் எத்தகைய சூழலிலும் பாதுகாத்து விடுதலையை வென்றெடுப்போம். பண்பாட்டு வழியிலும் போராட வேண்டிய நிலைக்கு ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில், பொங்கலைக்கூட ஒரு ஆயுதமாக பண்பாட்டு எழுச்சியாக பொங்க வேண்டும். குமுறும் எமது மனங்கள் போல எத்தனை துயரத்தின் மத்தியிலும் பொங்கல் பானையும் பொங்கட்டும்.

-தீபச்செல்வன். கட்டுரையாளர் கவிஞர் மற்றும் பத்திரிகையாளர்

http://www.vanakkamlondon.com/theepachelvan-16-01-2020/

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன்

ரஜினி தர்பார் படத்தையே பார்க்கிறார்கள் முக்கியமான பொங்கலை கொண்டாடுவது பெரிசு இல்லை.

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது.

ஈழத் தமிழ் மக்கள் எந்த ஆண்டில் தைப்பொங்கலை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினார்கள்?
ஈழத் தமிழ் மக்கள் சித்திரை மாதத்திலேயே தமிழ் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா துயரங்களின் மத்தியிலும் எங்கள் கலாச்சார அடையாளங்களை மறைக்காமல் இருப்பதும்  நமது பண்பாட்டின் கொடியை உயர உயர ஏற்றுவதும் மிக மிக முக்கியம்.  நாம் ஒருவர் என்பதை நாம் தலைபணிய மாட்டோம் என்பதையும் நாம் நீதியும் சமத்துவமும் உள்ள சமதான சகவாழ்வுக்கு ஆதரவானவர்கள் என்பதையும்  வெளி உலகுக்கும் நமக்கும் ஒருக்கும் தரப்பை சேர்ந்த மக்களுக்கும் உணர்த்த நமது கலாச்சாரத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதும் உயர்த்துவதும் முக்கியமான வழியாகும்.   எந்த நெருப்பு எமைச் சூழ்ந்தாலும்  எமது கலைகளின் கொடியை எமது கலாச்சாரத்தின் கொடியை எமது மொழியின் கொடியை மேலும் மேலும் உயர்த்துவோம். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2020 at 5:39 AM, விளங்க நினைப்பவன் said:

ஈழத் தமிழ் மக்கள் எந்த ஆண்டில் தைப்பொங்கலை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினார்கள்?
ஈழத் தமிழ் மக்கள் சித்திரை மாதத்திலேயே தமிழ் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை புதுவருடப்பிறப்பை சிங்களவர் மற்றும் உலகளாவிய இந்துக்களும் பஞ்சாபிகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளிலும் தமது புதுவருடமாக கொண்டாடுகிறார்கள்.

https://en.m.wikipedia.org/wiki/South_and_Southeast_Asian_solar_New_Year

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

சித்திரை புதுவருடப்பிறப்பை சிங்களவர் மற்றும் உலகளாவிய இந்துக்களும் பஞ்சாபிகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளிலும் தமது புதுவருடமாக கொண்டாடுகிறார்கள்.

தகவல் வழங்கியமைக்கு நன்றி.
இலங்கையில் தமிழ் புத்தாண்டு என்று சொல்லி கொண்டாடும் தமிழர்களும் சித்திரையில் தானே புதுவருடம் கொண்டாடுகிறார்கள்.
இப்படி இருக்க தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது என்று தீபச்செல்வன் சொல்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2020 at 9:39 AM, கற்பகதரு said:

சித்திரை புதுவருடப்பிறப்பை சிங்களவர் மற்றும் உலகளாவிய இந்துக்களும் பஞ்சாபிகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளிலும் தமது புதுவருடமாக கொண்டாடுகிறார்கள்.

https://en.m.wikipedia.org/wiki/South_and_Southeast_Asian_solar_New_Year

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

தகவல் வழங்கியமைக்கு நன்றி.
இலங்கையில் தமிழ் புத்தாண்டு என்று சொல்லி கொண்டாடும் தமிழர்களும் சித்திரையில் தானே புதுவருடம் கொண்டாடுகிறார்கள்.
இப்படி இருக்க தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது என்று தீபச்செல்வன் சொல்கிறார்

சிங்களவரும் வட இந்தியரும் கொண்டாடும் சித்திரை வருடப்பிறப்பை தமிழரும் தமது புத்தாண்டு என்று கொண்டாடுவது அவமானம் என்று எண்ணி, தைப்பொங்கலை வருடப்பிறப்பாக்கி விட்டார் அவர். சைவத்துக்கு எதிரான சில தமிழர் வள்ளுவர் பிறந்த நாள் என்று ஒன்றை புத்தாண்டாக்கி வள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறார்கள். சில ஈழத்தமிழர் பிரபாகரனின் பிறந்தநாளை புத்தாண்டாக்கி பிரபாகரன் ஆண்டை கணக்கிட்டு, பிரபாகரம் என்ற மதத்துக்கு இணையான ஒரு தத்துவத்தையே உருவாக்கி வருகிறார்கள். 

நானோ நித்தியானந்தத்தில் இறங்கி நித்தியனந்த புது. வருடத்தை தேடுகிறேன்.

ஜெய் நித்தியானந்தம் :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
On 1/28/2020 at 4:06 AM, கற்பகதரு said:

நானோ நித்தியானந்தத்தில் இறங்கி நித்தியனந்த புது. வருடத்தை தேடுகிறேன்.

ஜெய் நித்தியானந்தம் :100_pray:

தாங்கள் நித்தியானந்தத்தில் இறங்கி நித்தியனந்த புது வருடத்தை தேடுதல் தீங்கற்றது மற்றும் புது வருடங்களை உருவாக்கியதே அவன்  தானே.ஜெய் நித்தியானந்தம் :100_pray:
தங்கள் தனிப்பட்ட விருப்பபடி  இலங்கை தமிழர்களின் புத்தாண்டை மாற்றி அமைத்து புலுடாவிடும் தீபச்செல்வன் போன்றவர்களின் செயல்கள் ஏற்க முடியாதவை

On 1/29/2020 at 7:46 PM, விளங்க நினைப்பவன் said:

தாங்கள் நித்தியானந்தத்தில் இறங்கி நித்தியனந்த புது வருடத்தை தேடுதல் தீங்கற்றது மற்றும் புது வருடங்களை உருவாக்கியதே அவன்  தானே.ஜெய் நித்தியானந்தம் :100_pray:
தங்கள் தனிப்பட்ட விருப்பபடி  இலங்கை தமிழர்களின் புத்தாண்டை மாற்றி அமைத்து புலுடாவிடும் தீபச்செல்வன் போன்றவர்களின் செயல்கள் ஏற்க முடியாதவை

விளங்க நினைப்பவன் தீபச்செல்வன் செய்வது புலுடா என்றால்  ஆண்டுகளின் வரைமுறையை முட்டாள்தனமான அறுபது ஆண்டுகளுக்கும் குறுக்கி அந்த ஆண்டுகளில் ஒரு தமிழ் சொல் கூட இல்லாமல் பார்த்து  அதை தமிழ் புத்தாண்டாக எம்மை ஏற்க வைத்தவர்கள் எவ்வளவு பெரிய புலுடா கார‍ர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2020 at 5:11 PM, poet said:

எல்லா துயரங்களின் மத்தியிலும் எங்கள் கலாச்சார அடையாளங்களை மறைக்காமல் இருப்பதும்  நமது பண்பாட்டின் கொடியை உயர உயர ஏற்றுவதும் மிக மிக முக்கியம்.  நாம் ஒருவர் என்பதை நாம் தலைபணிய மாட்டோம் என்பதையும் நாம் நீதியும் சமத்துவமும் உள்ள சமதான சகவாழ்வுக்கு ஆதரவானவர்கள் என்பதையும்  வெளி உலகுக்கும் நமக்கும் ஒருக்கும் தரப்பை சேர்ந்த மக்களுக்கும் உணர்த்த நமது கலாச்சாரத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதும் உயர்த்துவதும் முக்கியமான வழியாகும்.   எந்த நெருப்பு எமைச் சூழ்ந்தாலும்  எமது கலைகளின் கொடியை எமது கலாச்சாரத்தின் கொடியை எமது மொழியின் கொடியை மேலும் மேலும் உயர்த்துவோம். 

வழி  பிறக்கும் வரை பொங்குவோம் 
எம் வாழ்வு விடியும் வரை பொங்குவோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.