Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு மாணவர்கள் இந்திய புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில் அக்கறை இல்லை -இந்தியத் துணை தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாணவர்கள் இந்திய புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில் அக்கறை இல்லை -இந்தியத் துணை தூதுவர்

யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில், இன்று கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இந்தியத் துணை தூதுவர் கே. பாலச்சந்திரன் வடக்கு மாணவர்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில், அக்கறைக் காட்டுவதில்லையென தெரிவித்தார்.இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களை தென்னிலங்கையில் இருக்கின்ற மாணவர்களே அதிகமாகப் பெறுவதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் புலமைப் பரிசில்களைப் பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது எனவும் மேலும் தெரிவித்தார்
 

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாணவர்கள்-இந்திய/

முதல்ல இந்தியாகாக்ரனை முன்னேற்றும் வழிய  பாருங்க । முதல் அவங்களுக்கு டாய்லெட், வீடு , பாடசாலை போன்றவற்றை கட்டி கொடுங்க। அப்புறம் மத்தவங்களை பார்க்கலாம்। 

16 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில், இன்று கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இந்தியத் துணை தூதுவர் கே. பாலச்சந்திரன் வடக்கு மாணவர்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில், அக்கறைக் காட்டுவதில்லையென தெரிவித்தார்.

இவனுக்கள் எல்லாத்தையும் சிங்களவனுக்கு குடுத்துப்போட்டு இப்ப நல்லா நடிக்கிறானுகள்.

வெளி நாட்டுக்கு போக வேண்டும் எனும் பட்டு வேட்டிக்கு ஆசைப்படுவதால் தான் தமிழ் மாணவர்களில் பலர் இந்திய புலமைப்பரிசுகளை நாடுகின்றனர் இல்லை என நினைக்கின்றேன். இந்தியா வின் கல்வித் தரம் அமெரிக்க ஐரோப்பிய கல்வித்தரங்களை ஒத்தது இல்லையாயினும் மிக மோசமானது அல்ல. IIT பல்கலைக்கழகத்தின் பல பீடங்கள் உலக அளவில் முதல் 50 இற்குள் வருவன. எஞ்சினியர் துறைப் படிப்புகளில் பல உலக அளவில் சிறந்த பலகலைக்கழகங்கள் இந்தியாவில் உள்ளன Indian (உதாரணம் Institute of Technology Bombay)

சென்னையில் அமைந்திருக்கும் புற்றுனோய் கல்வி தொடர்பான நிலையத்துக்கு (chennai cancer institute) பல ஆசிய நாட்டு மாணவர்கள் கல்வி கற்க தேடி வருகின்றனர்.

இலங்கையின் சிறந்த பலகலைக்கழகம் என்று நாம் பெருமைப்படும் பேரதேனியா பல்கலைக்கழகம் உலக அளவில் 1775 ஆகவும் யாழ் பல்கலைக்கழகம் 3426 ஆவதாகவும் உள்ளது.

எமக்கு நக்கல் அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் நிற்க மட்டுமே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளைஞருக்கு ஆயுதப் பயிற்சி குடுக்கும் போதே இரகசிய கமராவில் அவர்களை படம் பிடித்து தங்களின் நஜ வஞ்ச்க வேலையை நடத்தியதுபோல, இதிலும் எதையாவது திட்டம் வைத்துதான் செய்வான் இந்தியன். உங்களின் உதவியும் வேண்டாம் உபத்திரவமும் வேண்டாம். பட்டது போதும். தமிழன் தலை நிமிர்ந்து வாழ விரும்பாதவன், வாழ வைத்துவிடுவான். எல்லாம் வலைப்பின்னல். 

12 hours ago, நிழலி said:

 IIT பல்கலைக்கழகத்தின் பல பீடங்கள் உலக அளவில் முதல் 50 இற்குள் வருவன. எஞ்சினியர் துறைப் படிப்புகளில் பல உலக அளவில் சிறந்த பலகலைக்கழகங்கள் இந்தியாவில் உள்ளன Indian (உதாரணம் Institute of Technology Bombay)

 

IIT (Indian Institute of Technology) குறித்து நீங்கள் கூறிய கருது மிக உண்மை। மெட்ராஸிலும் இது அமைந்துள்ளது। இங்கு கல்வி கட்பவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு உண்டு। இருந்தாலும் துணைத்தூதுவர் கூறும் புலமைப்பரிசுகள் சாதாரண தர பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளே। 

  • கருத்துக்கள உறவுகள்

ch_dsc_0351_7.jpg?resize=1470,680

 வடை சுடுவதை நிப்பாட்டி .. முதலில் இங்கு தமிழ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு உயர்கல்விக்கு உறுதி செய்யுங்கப்பா.. வைகுந்தம் போவதை அப்புறம் பார்க்கலாம்.. 👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ch_dsc_0351_7.jpg?resize=1470,680

 வடை சுடுவதை நிப்பாட்டி .. முதலில் இங்கு தமிழ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு உயர்கல்விக்கு உறுதி செய்யுங்கப்பா.. வைகுந்தம் போவதை அப்புறம் பார்க்கலாம்.. 👍

சரியான கூற்று. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

தமிழ் இளைஞருக்கு ஆயுதப் பயிற்சி குடுக்கும் போதே இரகசிய கமராவில் அவர்களை படம் பிடித்து தங்களின் நஜ வஞ்ச்க வேலையை நடத்தியதுபோல, இதிலும் எதையாவது திட்டம் வைத்துதான் செய்வான் இந்தியன். உங்களின் உதவியும் வேண்டாம் உபத்திரவமும் வேண்டாம். பட்டது போதும். தமிழன் தலை நிமிர்ந்து வாழ விரும்பாதவன், வாழ வைத்துவிடுவான். எல்லாம் வலைப்பின்னல். 

அரசுகளால் வழங்கப்படும் புலமைப் பரிசில் என்பது ஒருவகை இலஞ்சம். அரசுகளின் கொள்கைகளை சார்பாக விரும்பியோ அல்லது அறியாமலோ அவர்களின் தாய்நாடுகளில் பரப்புரை செய்வர் அத்துடன் முகவர்களாகவும் செயற்படுவர். டெல்லி ஜவகர்லால் நேரு  பல்கலைக் கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று கல்வியை முடித்த எனக்குத் தெரிந்த பலர், இந்திய அரசின் முகவர்களாக செயற்படுகின்றனர்.

இதில் ஒன்றும் இரகசியம் கிடையாது. 

கல்வியாளர்களுக்கு அடுத்த நிலையில் ஊடகவியலாளர்கள் வருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாணவர்கள் மட்டுமல்ல , இலங்கையில் இருக்கும் எந்த மாணவர்களும் இவர்களது உதவியை பெறக் கூடாது 

On 2/1/2020 at 11:15 PM, ரதி said:

வடக்கு மாணவர்கள் மட்டுமல்ல , இலங்கையில் இருக்கும் எந்த மாணவர்களும் இவர்களது உதவியை பெறக் கூடாது 

இலங்கை தமிழ் மாணவர்களைப்பற்றி அவ்வளவாக தெரியவில்லை। இருந்தாலும் நிறைய சிங்களமானவர்கள் இந்த உதவியை பெற்றுக்கொள்ளுகிறார்கள்। மலையக மக்களுக்கு இந்த புலமைப்பரிசில் மிக உதவியாக இருக்கும்।

தமிழர்களுக்கு, குறிப்பா வடகிழக்கு தமிழர்களுக்கு குடுக்கவே கூடாது என்ட கொள்கை வைச்சிருந்த இந்தியக்காரன் இப்ப வடக்கில பிச்சை எடுக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.