Jump to content

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்


Recommended Posts

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்

 

by : Dhackshala

Untitled-2.jpg

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அழித்திருந்தது என்பதை கடந்த காலத்தில் உணர்ந்திருந்தும் அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை மனித உரிமைகள் செயற்பட்டாளர்கள் ஒன்றுகூடினர் .

இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை இசைத்த பின்னர், மனித உரிமைகள் செயற்பாட்டளர் சுவஸ்திகா அருள்லிங்கம் கூறுகையில்,

“இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தேசிய கீதம் பாட உரிமையுண்டு. சிங்கள மற்றும் தமிழ் இரண்டுமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருப்பதை அங்கீகரிக்கவேண்டும்.

இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் குறைகள் எந்த வகையிலும் மொழி பிரச்சினைக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.

எவ்வாறாயினும் சிங்கள மொழி பேசாத மக்களை பாகுபாடு காட்டும் அல்லது புறக்கணிக்கும் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அளித்திருந்தது என்பதை கடந்த காலம் உணர்ந்திருந்தோம். இதுபோன்ற ஒரு வரலாறு மீண்டும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மொழியில்-தேசிய-கீத-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடப்பட்டதோ சிங்கள பெளத்த நாடொன்றின் தேசிய கீதம். இதற்கும் தமிழினத்திற்கும் உள்ள தொடர்பென்ன? நடைபெற்றது யாருக்கான சுதந்திர தினம்? சிங்கள பெளத்த நாட்டிற்கான சுதந்திர தினமே அதுவன்றி, தமிழர்களுக்குச் சுதந்திரதினம் இன்னும் அமையவில்லை என்பது எமக்கேன் தெரியாமல்ப் போனது?

அவன், தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடி, தனது மொழியில் தனது தேசிய கீதத்தைப் பாடுகிறான். இதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. நடைபெற்ற நிகழ்விற்கோ அல்லது பாடப்பட்ட தேசியகீதத்திற்குமோ எம்முடன் தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான் தமிழில் அவனது தேசிய கீதத்தைப் பாடுவதால் கிடைக்கப்போவது என்ன? அப்படி நான் தமிழில் பாடுவதால் மட்டும் நாடோ அல்லது கிடைத்த சுதந்திரமோ எனதாகிவிடுமா? இல்லையே! பிறகேன் நாங்கள் இதுபற்றிக் குத்திமுறிவான்?

இன்னும் சொல்லப்போனால், அவன் சரியாகத்தான் இதைச் செய்திருக்கிறான். நடப்பவற்றிற்கும், பாடப்பட்டதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்பதை அவனே ஏற்றுக்கொண்டபின், நாம் மட்டும் தமிழிலும் பாடுங்கள் என்று இரைஞ்சுவது நல்லதல்ல.

என்னைப்பொறுத்தவரை எனது தாய்மொழியில் என்னை ஆக்கிரமித்து நிற்பவனின் தேசிய கீதத்தைப் பாடுவதை முற்றாக வெறுக்கிறேன். அவனது தேசிய கீதத்தை என தாய்மொழியில் பாடுவதைக் காட்டிலும் எனது உதடுகளும் நாவும் அழுகிப் போனால்க் கூடப் பரவாயில்லை.

Link to comment
Share on other sites

பிரிவினவாதத்தை பலப்படுத்தியுள்ளது

தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடாமையானது, பிரிவினைவாதத்தை பலப்படுத்தியுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையர் என்ற அடையாளத்தைப் பகிர்ந்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பரவனவததத-பலபபடததயளளத/175-245021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கெண்டு தேசியகீதம் இருக்க.....என்ன கோதாரிக்கு சிங்களவனோடை தேசியகீதத்துக்கு அடிபடவேணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தமிழருக்கெண்டு தேசியகீதம் இருக்க.....என்ன கோதாரிக்கு சிங்களவனோடை தேசியகீதத்துக்கு அடிபடவேணும்?

இக் கேள்விக்குப் பதிலேதுமுண்டோ?

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்

எந்த மொழில பாடினாலும் இதுவரை சிங்கள கொலைகார தேசிய கீதத்தை ஒருநாளும் பாடினதும் இல்லை மதிச்சதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை மனித உரிமைகள் செயற்பட்டாளர்கள் ஒன்றுகூடினர் .

தமிழர் தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடிய சுதந்திரம் இலங்கையில் இருக்கிறது என்பதை பறைசாற்ற உதவியிருக்கிறார்கள் தமிழில் பாடியோர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
    • பலருடைய கருத்துக்கள், அவர்களது உண்மையான இயல்பை எல்லோருக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால்  அப்படியே தொடரட்டும் எனச் சீண்டுவதில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.