Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

கலியானம் பேசட்டா என்ற இந்த திரி நாலு படித்த  ஆட்களின் அலப்பறையாக போகுது.அதோட எங்கை படிச்சால் சுலபமாக வேலை எடுக்கலாம் என்டுதான் ஓட்டமே தவிர ஆரும் நாலு பேருக்கு வேலை கொடுப்பது பற்றி ஒன்டுமே இல்லை;

கல்யாணம் பேச வெளிக்கிட்டு கல்லூரிகளுக்கு போஸ்ட்மார்ட்டம் நடக்கின்றது.அதுவும் நல்லதுதான்.பயனுள்ள தகவல்கள் நிறைய வருகின்றது.......!   😂

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:

நீங்கள் சொல்வது 90' களில்.

இப்போதெல்லாம் மாறி விட்டது. நீங்கள் சொல்லும் கல்லூரிகளை விட, கொழும்பில் உள்ள சாதாரண பாடசாலைகளில் எல்லாம் திறமையாக சித்தியடைகிறார்கள்.

இப்போதுள்ள தொழில் வழங்குபவர்கள் பெரும்பாலும், மேற்படி கல்லூரிகளை பார்ப்பதில்லை.

மாங்குயில் சொல்வதே நியாயம்.

நான் முதல் வேலை தேடி விண்ணப்பித்த போது ஜோன் கீல்ஸ்.. தரப்பரிசோகர் இரசாயனப் பிரிவு.. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றேன். அதன் பின்னர் உயர்கல்விக்காக வேறு நாட்டிற்கு.. சென்று படிக்க வாய்ப்புக் கிடைத்ததால்.. அந்த வேலையை இடைநடுவில் விட்டாயிற்று. நான் வடக்கில் இருந்து தெற்கிற்கு போனவன். வடக்கில் தான் பெரும் பகுதி கல்வியை கற்றவன். 

என்னை மாதிரி பலர். வடக்கில் இருந்து தெற்கு போய் பின்.. தெற்கில் நல்ல நிறுவனங்களில்.. வேலை செய்து.. பின் புள்ளி அடிப்படையில் அவுஸி சென்று.. இப்போ நிரந்தர அவுஸி வாசிகள் ஆகியும் விட்டனர். 

அடிப்படை ஆங்கில அறிவும்.. ஆங்கில பேச்சுத்திறனும்.. துறைசார் அறிவும் இருந்தால்.. இந்தப் பள்ளிக்கூடப் பின்னணி.. பல்கலைக்கழகப் பின்னணி.. எதுவும் கவனத்தில் எடுக்கபடமாட்டாது. இத்தோடு அனுபவும் சேர்ந்தால்.. வேலை எடுப்பது கடினமே அல்ல. ஆனால் விடா முயற்சி அவசியம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

இது 90 களுக்கு பின்பல்ல அதற்கு முன்பே இருந்தது.

வடக்கில் இருந்து கொழும்பு போய் தத்தம் துறைகளில் கோலோச்சியவர்கள் எப்போதும் இருந்தார்கள். இவ்வாறு வங்கி, அரச உத்தியோகம், தனியார் நிறுவன நிர்வாகம் என பலதிலும் கொழும்பின் முண்ணனி பாடச்சாலைகளில் படிக்காதவர்களுக்கு வாய்புக் கிடைப்பதும், அவர்கள் தத்தம் துறையில் பிரகாசிப்பதும் காலங்காலமாக நடப்பதுதான்.

இங்கே யாரும் கொழும்பின் முண்ணணி பாடசாலையில் படிக்காவிட்டால், இலங்கையில் வேலையே கிடைக்காது என்று எழுதவில்லை. 

ஆனால் முண்ணணி பாடசாலைகளில் படிப்பதால் ஒரு added advantage நிச்சயம் உண்டு. அது சற்று மட்டுப் பட்டிருந்தாலும் இன்றும் உண்டு.

பிகு: உலகில் எங்கும், எந்த யூனிவர்சிட்டி, எந்த பாடசாலைக்கு போவதால் அனுகூலம் என்பதை இலகுவில் காட்ட கூடிய அலகு, அங்கே அரசியலில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது பிள்ளைகளை எங்கே அனுபுகிறார்கள் என்பது.

இலங்கையில் தற்போதைய அரசியல்வாதிகளையும், அவர்களின் பாடசாலைகளையும், அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் தற்போது போகும் பள்ளிகளையும் பார்த்தால் உண்மை விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கிரெமர் ஸ்கூலை விட ஸ்டேட் ஸ்கூல் நல்லம் என்பதோ, உலகில் 1ம் தரத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டை விட 500-600 க்குள் வரும் ஓபன் யூனிவர்சிட்டி நல்லம் என்பதோ, அதை வெண்ட பைதியக்காரத்தனம்.

இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான திரிபுக் கருத்து. இப்படி யாரும் இங்கு கருத்தெழுதவில்லை. 

1ம் இடத்தில் படிப்பதால்.. 500ம் இடத்தில் இருக்கும் 1ம் இடத்திடம் இல்லாத சிறப்பை மிதிக்கனும் என்று கிடையாது. தேவையான கல்வி 500 வது இடத்தில் கிடைக்கும் என்றால்.. 500வது என்ற விளம்பரச் சுட்டியை.. இலகுவாக புறக்கணித்துவிட்டு.. தேவையான தரமான கல்வி வழங்கப்படும்.. அந்த.. 500வது இடத்தில் 3ம் தரப்பால் வைக்கப்பட்ட யுனியை.. நாடுவதில் எந்தத் தவறும் கிடையாது. இதில் வெட்டிப் பெருமை தாக்கம் செய்ய முடியாது.  1ம் இடத்தில் படிப்பதால்.. வளர்க்கப்படும் வெட்டிப் பெருமைதான் கண்டிக்கப்படுகிறதே தவிர.. தேவைக்கு ஏற்ப சிறந்த கல்வி.. தேவையான கல்வி எங்கு வழங்கப்படுகிறதோ அதை தெரிவு செய்வது அவரவர் விருப்பம். இதில் வெட்டிப் பெருமை கொள்ள ஏதும் இல்லை. கல்வி அறிவு அனுபவ மட்டத்தை அதிகரிக்கும் ஒரு கருவி மட்டுமே.

1 hour ago, goshan_che said:

இங்கே யாரும் கொழும்பின் முண்ணணி பாடசாலையில் படிக்காவிட்டால், இலங்கையில் வேலையே கிடைக்காது என்று எழுதவில்லை. 

ஆனால் முண்ணணி பாடசாலைகளில் படிப்பதால் ஒரு added advantage நிச்சயம் உண்டு. அது சற்று மட்டுப் பட்டிருந்தாலும் இன்றும் உண்டு.

இந்தத் தொனியில் யாரும் கருத்தெழுதவில்லை.

பாடசாலைப் பின்னணி.. பல்கலைக்கழகப் பின்னணி இவற்றின் தாக்கம் இல்லாமலே தேவைப்படும் வேலையை முயற்சி செய்தால் எடுக்க முடியும் என்பதே சமர்ப்பிக்கப்பட்ட கருத்து.

ஏன் இதில் தேவையற்ற திரிபு. வீண் மூக்கு நுழைப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஆனால் முண்ணணி பாடசாலைகளில் படிப்பதால் ஒரு added advantage நிச்சயம் உண்டு. அது சற்று மட்டுப் பட்டிருந்தாலும் இன்றும் உண்டு.

கொழும்பில் உள்ள முன்னணிப் பாடசாலைகளில் படித்ததனால், வேலை தருபவர்கள் ஒரு Plus Point  ஆகப் பார்க்கும் காலம் ஒன்றிருந்தது.  

இப்போது கொழும்பில் அப்படி இல்லை.   இலங்கையில் இருக்கும்போது, எனது கல்வித் தகைமை வெறும் A/L தான்.   மேலும் மூன்று மொழியும் எனக்கு சரளமாக வாசிக்க, எழுத, பேசத்தெரியும்.

எனது, முதல்  நேர்முகத் தெரிவு பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல Advertising Agency. 

என்னுடன் நேர்முகத் தெரிவுக்கு வந்தவர்கள், பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருந்தனர். 

ஆனால், எனக்கே அந்த வேலை கிடைத்தது. காரணம், எனது மும்மொழி தேர்ச்சி மட்டுமல்ல, பாடசாலையில் படிக்கும் காலங்களில் விளையாட்டுகளில் கிடைத்த Certificates களும் ஒரு காரணம்.  விளையாட்டில் எனக்கு 60 க்கு மேற்பட்ட Certificates இருக்கிறது.

ஆக, எல்லா  தொழில் வழங்குபவர்களும், எங்கு படித்தாய், எதை படித்தாய் என்று ஒரு சிறு கோணங்களில் வைத்து, எம்மை எடை போடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான திரிபுக் கருத்து. இப்படி யாரும் இங்கு கருத்தெழுதவில்லை. 

1ம் இடத்தில் படிப்பதால்.. 500ம் இடத்தில் இருக்கும் 1ம் இடத்திடம் இல்லாத சிறப்பை மிதிக்கனும் என்று கிடையாது. தேவையான கல்வி 500 வது இடத்தில் கிடைக்கும் என்றால்.. 500வது என்ற விளம்பரச் சுட்டியை.. இலகுவாக புறக்கணித்துவிட்டு.. தேவையான தரமான கல்வி வழங்கப்படும்.. அந்த.. 500வது இடத்தில் 3ம் தரப்பால் வைக்கப்பட்ட யுனியை.. நாடுவதில் எந்தத் தவறும் கிடையாது. இதில் வெட்டிப் பெருமை தாக்கம் செய்ய முடியாது.  1ம் இடத்தில் படிப்பதால்.. வளர்க்கப்படும் வெட்டிப் பெருமைதான் கண்டிக்கப்படுகிறதே தவிர.. தேவைக்கு ஏற்ப சிறந்த கல்வி.. தேவையான கல்வி எங்கு வழங்கப்படுகிறதோ அதை தெரிவு செய்வது அவரவர் விருப்பம். இதில் வெட்டிப் பெருமை கொள்ள ஏதும் இல்லை. கல்வி அறிவு அனுபவ மட்டத்தை அதிகரிக்கும் ஒரு கருவி மட்டுமே.

இந்தத் தொனியில் யாரும் கருத்தெழுதவில்லை.

பாடசாலைப் பின்னணி.. பல்கலைக்கழகப் பின்னணி இவற்றின் தாக்கம் இல்லாமலே தேவைப்படும் வேலையை முயற்சி செய்தால் எடுக்க முடியும் என்பதே சமர்ப்பிக்கப்பட்ட கருத்து.

ஏன் இதில் தேவையற்ற திரிபு. வீண் மூக்கு நுழைப்பு. 

இதில் திரிபு ஏதும் இல்லை.

முயற்சி செய்தால், திறமை இருக்கும் யாரும் எந்த துறையிலும் மிளிரலாம். கட்டாயம் பள்ளிகூடமோ அல்லது பல்கலை கழகமோ போகவேண்டிய அவசியம் கூட இல்லை.

இதற்கு நல்ல உதாரணம் எடிசன்.  சிறு வயதில் பள்ளியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தாயாரால் கற்பிக்க பட்டவர்.

இன்னொரு நல்ல உதாரணம் ஐன்ஸ்டீன் - முதலில் சூரிச் இல் இருக்கும் முதல்தர சுவிஸ் பெடெரல் பொலிடெக்னிகில் சேர முயன்று முடியாமல் போக, இன்னொன்றில் சேர்ந்து படித்த ஐன்ஸ்டைந்தான் இன்று உலகில் மிகச் சிறந்த மேதையாக கொண்டாடப் படுகிறார்.

எனவே திறமை இருந்தால், முயற்சியும் இருந்தால் தரமான கல்வி நிலையங்களில் படிக்காமல் கூட மிளிரலாம் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் இங்கே அலசப்படுவது இந்த நிலையங்களில் படிப்பதால் added advantage, இருக்கிறதா? அவர்களின் முன்னேற்றம் சுலபமாகிறதா என்பதே.

இதற்கான பதில் நிச்சயமாக ஆம்.

இல்லை என்றால் யாரும் யூனிகளை தரவரிசை படுத்தி நேரத்தை வீணடிக்க மாட்டர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆனால் இங்கே அலசப்படுவது இந்த நிலையங்களில் படிப்பதால் added advantage, இருக்கிறதா? அவர்களின் முன்னேற்றம் சுலபமாகிறதா என்பதே.

இந்தக் கருத்தை யாரும் இங்கு நிராகரிக்கவில்லை. ஆனால்.. அந்த  added advantage.. வெறும்.. வெட்டிப் பெருமையை வளர்க்க பயன்படுத்தப்படுவதே.... கண்டிக்கப்படுகிறது.  அதைத் தான் நம்மவர்கள் பலர் செய்கின்றனர். அதுவே திருத்தப்படனும். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மாங்குயில் said:

கொழும்பில் உள்ள முன்னணிப் பாடசாலைகளில் படித்ததனால், வேலை தருபவர்கள் ஒரு Plus Point  ஆகப் பார்க்கும் காலம் ஒன்றிருந்தது.  

இப்போது கொழும்பில் அப்படி இல்லை.   இலங்கையில் இருக்கும்போது, எனது கல்வித் தகைமை வெறும் A/L தான்.   மேலும் மூன்று மொழியும் எனக்கு சரளமாக வாசிக்க, எழுத, பேசத்தெரியும்.

எனது, முதல்  நேர்முகத் தெரிவு பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல Advertising Agency. 

என்னுடன் நேர்முகத் தெரிவுக்கு வந்தவர்கள், பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருந்தனர். 

ஆனால், எனக்கே அந்த வேலை கிடைத்தது. காரணம், எனது மும்மொழி தேர்ச்சி மட்டுமல்ல, பாடசாலையில் படிக்கும் காலங்களில் விளையாட்டுகளில் கிடைத்த Certificates களும் ஒரு காரணம்.  விளையாட்டில் எனக்கு 60 க்கு மேற்பட்ட Certificates இருக்கிறது.

ஆக, எல்லா  தொழில் வழங்குபவர்களும், எங்கு படித்தாய், எதை படித்தாய் என்று ஒரு சிறு கோணங்களில் வைத்து, எம்மை எடை போடுவதில்லை.

இது உங்கள் அனுபவம். ஒத்துக் கொள்கிறேன் ஆனால் இதை வைத்து பொதுவில் இப்படித்தான் என சொல்ல முடியாதே?

நீங்கள் கொழும்பில் எங்கே படித்தீர்கள் என சொல்லவில்லை. ஆனால் நீங்கள் குறைந்த பட்சம் 2ம் நிலை நிலையங்கள் ஒன்றிலாவது படித்திருப்பிர்கள் என அனுமானிக்கிறேன்.

இங்கே பட்டதாரிகளையும் மீறி உங்களுக்கு அந்த வேலை கிடைக்க, உங்கள் நேர்முக தேர்வு பாங்கு, சான்றிதழ்கள், மற்றும் கொழும்பில் ஒரு பாடசாலையில் படித்த மும்மொழி அனுபவம் என்பன தானே உதவியது?

உங்களை போல சான்றிதழும், நேர்முக தேர்வு லாவகமும் கொண்ட ஆனால் மல்லாவியில் இருந்து வந்த தமிழும், சிங்களமும் மட்டும் தெரிந்த ஒருவருக்கு இந்த வேலை உங்களை தவிர்த்து கிடைத்திருக்குமா?

உங்களை மல்லாவி மாணவனிடம் இருந்து வேறு படுத்தியது, உங்களின் கொழும்பு படிப்பும், ஆங்கில திறனும். இதுதான் அவருக்கு மேலாக உங்களுக்கு இருந்த added advantage.

இதே போல உங்களை போலவே சகல தகுதியும் உடைய ஆனால் பரிதோமாவில் படித்த ஒருவர் வந்திருந்தால், அந்த வேலை அவருக்கு போயிருக்கும். இதுதான் யதார்தம்.

எல்லா நேரங்களிலும் இப்படி நடக்கும் என்பதல்ல. பாடச்சாலைகளை பார்க்காமல் வாய்ப்பு வழங்குபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

யூகே சிவில் சேர்விசில் இப்பொ blind sift முறைப்படிதான் தேர்வு நடத்துகிறார்கள். அதாவது உங்களை நேர்முகம் செய்பவருக்கு உங்கள் படிப்பு என்ன என்பது மட்டுமே தெரிவிக்கப்படும் ஆனால் எங்கே படித்தீர்கள் என்பதல்ல.

தரமான யூனிகள் சார்பாக conscious and unconscious bias ஐ குறைக்கும் நகர்வு இது.

ஆனால் தனியார்/ இலங்கையில் இந்த நடைமுறை கூட இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

இந்தக் கருத்தை யாரும் இங்கு நிராகரிக்கவில்லை. ஆனால்.. அந்த  added advantage.. வெறும்.. வெட்டிப் பெருமையை வளர்க்க பயன்படுத்தப்படுவதே.... கண்டிக்கப்படுகிறது.  அதைத் தான் நம்மவர்கள் பலர் செய்கின்றனர். அதுவே திருத்தப்படனும். 

வாதவூரனுக்கும், சுமேக்கும் ஏலவே சொன்னது போல, கல்வியை அணிகலனாக பாவிக்கும் போக்கை நான் இங்கே ஆதரித்து எழுதவில்லை என்பதோடு மட்டுமில்லாமல் அதை எதிர்த்தும் இதே திரியில் எழுதியுள்ளே. (போல்ட் செய்த பதிவுகளை பார்கவும்).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

எல்லா நேரங்களிலும் இப்படி நடக்கும் என்பதல்ல. பாடச்சாலைகளை பார்க்காமல் வாய்ப்பு வழங்குபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

 பிரதர் கோஷான், இப்பொழுது பெரிதாக கொழும்பில் எந்த பாடசாலையில் படித்தார் என்று தராதரம் பார்த்து, வேலை வழங்குவதில்லை.

என்னுடன் நேர்முகத் தேர்விற்கு வந்தவர்களில் ஒருவர், ஆனந்தா  கல்லூரி.

இன்னொருவர், இசிபதான கல்லூரி. மற்றவர்களை விசாரிக்கவில்லை. 

நான் கொழும்பில் A/L மட்டும்தான் படித்தேன். அது முன்னணிப் பாடசாலையல்ல. 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

மாங்குயில்,

இங்கே நாமிருவரும் நம் அனுபவ, அறிந்த அடிப்படையில் தர்கிக்கின்றோம்.

யூகே என்றால் ஆயுவுத் தகவல் கிடைக்கும். ஆனால் இலங்கையில் அப்படி ஏதும் இல்லை. 
 
எனவே இந்த தர்க்கம் இப்படி மாறி மாறி முடிவில்லாமல் போகலாம்😂

ஆனால் அமைச்சரவையை பார்த்தால் ஜனாதிபதி உட்பட்ட 16 கேபினெட் அமைசார்களில் 9 பேர் கொழும்பு முண்ணி பாடசாலையினர் (ஆனந்த, நாலந்த) . மிகுதியாய் இருப்போரில் 2 பேர் காலியின் முண்ணனி பாடசாலையான ரிச்மண்ட் கல்லூரியினர். அடுத்த சந்ததி நாமல், மகிந்தாநந்த வகையறாக்கள் முழுவதும் தோமியர்.

அதே போல் யுஎன்பி யில், ரணில், சஜித், மங்கள என்று எல்லாமே ரோயல் மயம். 

ஹக்கீம் ரோயல். விக்னேஸ்வரன் ரோயல். சுமந்திரன் ரோயல். கஜேந்திரகுமாரும் ரோயல். 

ராணுவத்திலும் பொன்சேக்காவை தவிர பெரும்பாலன உயர் அதிகாரிகள் இந்த பள்ளிகளில் இருந்தே.

கொழும்பு ஸ்டொக் எக்ஸ்சேன்சின் முதல் 5 கம்பெனிகளை பார்த்தால், தகவல் தெரிந்த 3 இல் இந்த பள்ளி மாணவர்கள்தான் CEOs.

இவ்வளவு ஏன் விளையாட்டில்? ரோயல், ஆனந்த, நாளந்த, ஜோசப்ஸ், க்கு வெளியே இருந்து வந்த 2 கேப்டன்கள் அரவிந்த (டி எஸ்) ஜெயசூரிய (மாத்தறை மகிந்த) என நினைக்கிறேன்.

தவிரவும் என் பள்ளித் தோளர்கள், என்னோடு டியூசன் படித்த வேற்று பள்ளி நண்பர்கள் இப்படி இன்னும் கொழும்பில் வாழ்பவர்கள், இப்போதும் தொடர்பில் உள்ளார்கள். எல்லாரும் தத்தம் வாழ்வில் நல்லதொரு நிலைக்கு வந்துவிட்டவர்கள்.

ஆனால் அத்தனை பேரும் பிள்ளைகளை இந்த பாடசாலையிகளில் சேர்க்கவென, தலையால் நடக்கிறார்கள்.

எனவே, என் சொந்த அனுபவம், அவதானம், அண்மையில் நான் கண்ட விடயங்கள் எல்லாவகையிலும் கொழும்பு முண்ணனி பாடசாலைகள் இலங்கையில், வேலை வாய்ப்பில் கொண்டிருக்கும் தாக்கம் சொல்லும் படியாக குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை.

கொழும்பான் 90களில் படித்து இருந்தாலும், இன்றும் கொழும்பில் வாழ்கிறார். அவருக்கு கள நிலவரம் எம் இருவரையும் விட தெளிவாக தெரியும் என நம்பலாம். அவரின் கூற்றும் என் அனுமானத்தை ஒட்டியே உள்ளது.

ஆனால் நாம் இங்கே தரவுகளின் அடிப்படையில் அன்றி, அனுபவங்களின் அடிப்படையில் வாதிடுவதால், இதற்கு மேல் உங்களை convince பண்ண முடியும் என நான் நினக்கவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

எனவே, என் சொந்த அனுபவம், அவதானம், அண்மையில் நான் கண்ட விடயங்கள் எல்லாவகையிலும் கொழும்பு முண்ணனி பாடசாலைகள் இலங்கையில், வேலை வாய்ப்பில் கொண்டிருக்கும் தாக்கம் சொல்லும் படியாக குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் நாம் இங்கே தரவுகளின் அடிப்படையில் அன்றி, அனுபவங்களின் அடிப்படையில் வாதிடுவதால், இதற்கு மேல் உங்களை convince பண்ண முடியும் என நான் நினக்கவில்லை.

பிரதர் கோஷான், 

உங்கள் தரவுகள் உண்மைதான் - ஒரு காலத்தில் இருந்தது. 

இப்போது, அரசியல்வாதிகளில் இருந்து - பணம் படைத்தவர்கள் வரை, தனியார் கல்லூரிகளைத்தான் நாடுகிறார்கள்.  மேலும், தனியார் பல்கலைக்கழகங்களைத்தான் நாடுகிறார்கள் - அதுவும் கொழும்பில்.

என் சகோதரியின் பிள்ளைகள்கூட, மொன்டெசூரியில் இருந்து,  A/L  வரை தனியார் பாடசாலையில்.

மேற்படிப்பும், தனியார் யுனிதான் - அதுவும் கொழும்பில் 2 வருடம்.

இறுதி வருடம்,  UK  இல் அல்லது AUSTRALIA  வில்.

ஆக, ராயல், நாளாந்த, ஆனந்த, விசாக எல்லாம் இப்போது எந்த Employers உம் பார்த்து, வேலை கொடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நல்ல பதில் கோஷான் 

இன்னும் நிலமை அப்படித்தான். பெயர் பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் இப்படியே. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பொதுவாக யாழில் படித்தவ‌ர்கள் கணிதம் போன்ற கடினமான பாடங்களில் நல்ல புள்ளிகள் பெறுவார்கள் ஆனால் ஆங்கிலம் அவ்வளவாக முடியாது,

மேலும் அவர்கள் socia interation, interpersonal skill  போன்றவற்றில் பலவீனமாக இருப்பர்கள். இவர்கள் பொதுவாக intovert ஆக‌ இருப்பர்கள் இதுவும் ஒரு காரணமாக இருக்ககலாம். இவளுக்கு சப்பி துப்பி பாடமாகி படித்தல் படிக்க மட்டுமே தெரியும் மற்றவர்களுடன் socially interact பண்ணி படிக்க மாட்டர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை வாசித்தபோது...

உங்களது பிள்ளைகள்  பாவம்

அவர்களது  படிப்பு  சார்ந்து  நீங்க  முடிவு எடுப்பதற்குள் பேரப்பிள்ளைகள் படிக்கத்தொடங்கி  விடுவார்கள்..😀.

(சும்மா  பகிடிக்கு)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மாங்குயில் said:

பிரதர் கோஷான், 

உங்கள் தரவுகள் உண்மைதான் - ஒரு காலத்தில் இருந்தது. 

இப்போது, அரசியல்வாதிகளில் இருந்து - பணம் படைத்தவர்கள் வரை, தனியார் கல்லூரிகளைத்தான் நாடுகிறார்கள்.  மேலும், தனியார் பல்கலைக்கழகங்களைத்தான் நாடுகிறார்கள் - அதுவும் கொழும்பில்.

என் சகோதரியின் பிள்ளைகள்கூட, மொன்டெசூரியில் இருந்து,  A/L  வரை தனியார் பாடசாலையில்.

மேற்படிப்பும், தனியார் யுனிதான் - அதுவும் கொழும்பில் 2 வருடம்.

இறுதி வருடம்,  UK  இல் அல்லது AUSTRALIA  வில்.

ஆக, ராயல், நாளாந்த, ஆனந்த, விசாக எல்லாம் இப்போது எந்த Employers உம் பார்த்து, வேலை கொடுப்பதில்லை.

நான் சொன்ன தரவுகள் எல்லாம் இப்போதைய நிலமை.

தவிரவும் நான் மேலே சொன்னது போல இந்த கல்லூரிகளில் சேர பணம் மட்டுமே போதுமானதாயும் இருப்பதில்லை.

எனவே பணம் இருப்பவர்கள் இன்னொரு தெரிவாக இண்டர் நேசனல் ஸ்கூலை நாடுகிறாரகள் (கவனிக்க - அவர்கள் கூட 1ம் தரத்துக்கு கீழான இலங்கை பாடசாலைகளிற்கு அனுப்பவில்லை).

தவிரவும் இப்படி இண்டர் நேசனல் ஸ்கூல் போகும் பிள்ளைகள் கொழும்பில் வேலை தேடுவதும் இல்லை. தேடினாலும் பெரும்பாலும் தனியார் துறையில் மட்டுமே கிடைக்கும்.

நீங்கள் சொல்வதை போல பலர் படிக்கிறார்கள். மூலைக்கு ஒரு வெளிநாட்டு யூனியின் கிளை வந்து விட்டதும் உண்மை.

ஆனால் இந்த பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்யும் எண்ணத்துடனே படிக்கிறார்கள். அவர்கள் நீங்கள் கூறியது போல, இலங்கையில் ரெண்டு வருடம், பிறகு வெளிநாட்டில் ஒரு வருடம், பிறகு முடிந்தால் அந்த நாட்ட்டிலே செட்டில் ஆவது அல்லது சிங்கபூர்,  அல்லது மத்திய கிழக்குக்கு போவது என்ற career graph ஐ 1ம் ஆண்டில் இருந்தே போட்டு, அதன்படி படிக்கிறார்கள்..

இது கொழும்பில் மட்டும் அல்ல, யாழில், மட்டக்களப்பிலும் அமோகமாக நடக்கிறது.

ஆனால் கொழும்பில் இந்த முறை 1995 ஆண்டில் இருந்தே உளது. இப்போ வேகம் எடுத்துளது (80 களின் முடிவில் விச்செளி இலங்கையின் முதலாவது சர்வதேச பாடசாலை ஆரம்பித்த போது என் - ஒன்று விட்ட சகோதரி ஒருவர் அதில் சேர்க்கப்பட்டார் - வெளிநாடுகளில் மாறி மாறி ஆங்கில மூலம் கற்ற அவருக்கு தமிழ் மீடியத்தில் 8ம் வகுப்பில் தொடர முடியவில்லை).

இந்த பிள்ளைகள் இலங்கை கல்வி முறையை பின்பற்றுவதும் இல்லை, இலங்கையில் வேலை தேடுவது அவர்கள் இலக்கும் அல்ல.

இவர்கள் இலங்கையில் இருந்தாலும் அந்த சிஸ்டத்துக்கு வெளியானவர்கள்.

இப்படியான உதாரணத்தை வைத்து இலங்கை பாடத்திட்டத்தில் படித்து, இலங்கையில் வேலை வாய்பு தேடுபவர்களின் நிலையை கணிக்க முடியாது.

5 minutes ago, விசுகு said:

இவற்றை வாசித்தபோது...

உங்களது பிள்ளைகள்  பாவம்

அவர்களது  படிப்பு  சார்ந்து  நீங்க  முடிவு எடுப்பதற்குள் பேரப்பிள்ளைகள் படிக்கத்தொடங்கி  விடுவார்கள்..😀.

(சும்மா  பகிடிக்கு)

😂 அதுகள் நம்ம சொல்வழி கேட்டாத்தானே 😂

40 minutes ago, colomban said:

நல்ல பதில் கோஷான் 

இன்னும் நிலமை அப்படித்தான். பெயர் பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் இப்படியே. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பொதுவாக யாழில் படித்தவ‌ர்கள் கணிதம் போன்ற கடினமான பாடங்களில் நல்ல புள்ளிகள் பெறுவார்கள் ஆனால் ஆங்கிலம் அவ்வளவாக முடியாது,

மேலும் அவர்கள் socia interation, interpersonal skill  போன்றவற்றில் பலவீனமாக இருப்பர்கள். இவர்கள் பொதுவாக intovert ஆக‌ இருப்பர்கள் இதுவும் ஒரு காரணமாக இருக்ககலாம். இவளுக்கு சப்பி துப்பி பாடமாகி படித்தல் படிக்க மட்டுமே தெரியும் மற்றவர்களுடன் socially interact பண்ணி படிக்க மாட்டர்கள் 

கொழும்பார்,

ஒரு பெரிய கிரனேட்டை கிளிப்பை கழட்டி வீசிவிட்டீர் காணும்😂

ஏரியாவே ரண களமாகப்போது.

ஓடித் தப்பும் ஐசே 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

என்னை மாதிரி பலர். வடக்கில் இருந்து தெற்கு போய் பின்.. தெற்கில் நல்ல நிறுவனங்களில்.. வேலை செய்து.. பின் புள்ளி அடிப்படையில் அவுஸி சென்று.. இப்போ நிரந்தர அவுஸி வாசிகள் ஆகியும் விட்டனர். 

இது ஒன்றும் புதிதல்லவே. 

உதாரணமாக இலங்கை பட்டயக்கணக்களர்கர் சங்கத்தில் உறுப்பினர் ஒருவர் கொமன்வெல்த் நாடுகளில் பயிற்சி செய்யலாம். அதுபோல் இலங்கை MBBS ஒருவர்  PLAB பரீட்சை செய்து இங்கிலாந்தில் GPஆக வேலை செய்யலாம். இது reciprocal agreement வழமையானது உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, goshan_che said:

இந்த பிள்ளைகள் இலங்கை கல்வி முறையை பின்பற்றுவதும் இல்லை, இலங்கையில் வேலை தேடுவது அவர்கள் இலக்கும் அல்ல.

இவர்கள் இலங்கையில் இருந்தாலும் அந்த சிஸ்டத்துக்கு வெளியானவர்கள்.

இப்படியான உதாரணத்தை வைத்து இலங்கை பாடத்திட்டத்தில் படித்து, இலங்கையில் வேலை வாய்பு தேடுபவர்களின் நிலையை கணிக்க முடியாது.

தனியார் இன்டர்நேஷனல் பாடசாலைகளில் படிப்பவர்கள், எல்லாரும் வெளிநாட்டில் கல்வியைத் தொடருவதும் இல்லை. வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்வதும் இல்லை.

தனியார் துறைகளில் அவர்களுக்கு இலகுவாக வேலை கிடைக்கிறது.

அரச துறைகளில்,  வேலை வாய்ப்பெடுப்பது கஷ்டம்.

இருந்தாலும், இன்டர்நேஷனல் பாடசாலைகளில் பயின்ற சிலருக்கு, இலங்கை பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

26 minutes ago, goshan_che said:

ஆனால் கொழும்பில் இந்த முறை 1995 ஆண்டில் இருந்தே உளது. இப்போ வேகம் எடுத்துளது (80 களின் முடிவில் விச்செளி இலங்கையின் முதலாவது சர்வதேச பாடசாலை ஆரம்பித்த போது என் - ஒன்று விட்ட சகோதரி ஒருவர் அதில் சேர்க்கப்பட்டார் - வெளிநாடுகளில் மாறி மாறி ஆங்கில மூலம் கற்ற அவருக்கு தமிழ் மீடியத்தில் 8ம் வகுப்பில் தொடர முடியவில்லை).

Wycherly International ஒரு நல்ல தரமான தனியார் பாடசாலை.

இப்போது எந்த நிலையில் இருக்குதோ தெரியாது.

நினைவூட்டியதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதர் கோஷான்,  

எனது மச்சான்,  Hatfield University இல், இன்ஜினியரிங் படித்தவர்.  அவர் படித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது.

அவர் நேர்முகத்தேர்விற்கு சென்ற சமயம்,  Oxford  University இல் படித்த ஒருவரும், லண்டனில் பிரபலமான ஒரு University இல் படித்த ஒருவரும், நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தார்களாம்.

இவர்கள் இருவருக்கும் வேலை கிடைக்கவில்லையாம்.

எனது மச்சானுக்கும்,   Liverpool இல் உள்ள யூனிவர்சிட்டி ஒன்றில் படித்த ஒருவருக்கும் வேலை கிடைத்ததாம்.

Oxford இல் படித்தவருக்கு, ஏன் வேலை கிடைக்கவில்லை என்று பின்னாளில்தான் தெரிய வந்ததாம்.

அவருக்கு தகைமைக்கு அதிகமான தகைமை இருந்ததுதான் காரணமாம்.

That means, the candidate is over-qualified for that Post.

அளவுக்கு அதிகமான தகமை உள்ளவர்களுக்கும் வேலை கிடைக்காது என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் சரி ஆனால் ஏன் படித்தவர்களிடம் தன்னம்பிக்கை மிகவும் குறைவாகவிருக்கின்றது?

இது திரிக்கு சம்பந்தமில்லா கேள்வி ஆனாலும் தோன்றியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

இது ஒன்றும் புதிதல்லவே. 

உதாரணமாக இலங்கை பட்டயக்கணக்களர்கர் சங்கத்தில் உறுப்பினர் ஒருவர் கொமன்வெல்த் நாடுகளில் பயிற்சி செய்யலாம். அதுபோல் இலங்கை MBBS ஒருவர்  PLAB பரீட்சை செய்து இங்கிலாந்தில் GPஆக வேலை செய்யலாம். இது reciprocal agreement வழமையானது உள்ளது

இங்கிலாந்தில் GP ஆக இருந்து மாரடிப்பதைவிட,  ஒருவர் MBBS ஆக இருந்தால் இலங்கையில் நன்றாக உழைக்கலாம்.

குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம் அங்கே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

பிரதர் கோஷான்,  

எனது மச்சான்,  Hatfield University இல், இன்ஜினியரிங் படித்தவர்.  அவர் படித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது.

அவர் நேர்முகத்தேர்விற்கு சென்ற சமயம்,  Oxford  University இல் படித்த ஒருவரும், லண்டனில் பிரபலமான ஒரு University இல் படித்த ஒருவரும், நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தார்களாம்.

இவர்கள் இருவருக்கும் வேலை கிடைக்கவில்லையாம்.

எனது மச்சானுக்கும்,   Liverpool இல் உள்ள யூனிவர்சிட்டி ஒன்றில் படித்த ஒருவருக்கும் வேலை கிடைத்ததாம்.

Oxford இல் படித்தவருக்கு, ஏன் வேலை கிடைக்கவில்லை என்று பின்னாளில்தான் தெரிய வந்ததாம்.

அவருக்கு தகைமைக்கு அதிகமான தகைமை இருந்ததுதான் காரணமாம்.

That means, the candidate is over-qualified for that Post.

அளவுக்கு அதிகமான தகமை உள்ளவர்களுக்கும் வேலை கிடைக்காது என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

உண்மைதான் சிலசமயம் இண்டர்வியூவிலேயே சொல்வார்கள் sorry you are over qualified என்று.

ஒரு ஆளை வேலைக்கு எடுக்கும் நேர்முக தேர்வு ஒரு செலவு, பயிற்சி, மெண்டரிங் இன்னொரு செலவு, பின்னர் அவருக்காக HR பைலை திறப்பது, பென்சன் கணக்கை திறப்பது எல்லாம் ஒருவரை வேலைக்கு எடுக்க ஒரு நிறுவனம் செய்யும் முதலீடுகள்.

இவ்வளவற்றையும் செய்து முடிக்க, 3 மாதத்தில் வேறு வேலைக்கு போனால் அத்தனை செலவும் வீண்.

நான் கூட அண்மையில் ஒருவரை நேர்முகம் செய்தேன். 32 ஆயிரம் £ சம்பளவேலை. மிகவும் பொருத்தமான ஆள். ஆனால் 2 வருடங்களுக்கு முன் இதே மனிதர் 50 ஆயிரம் வேலையில் இருந்து பின்னர் மகனுக்கு வருத்தம் என வேலையை விட்டவர். 6 மாதங்களுக்கு முன் மகன் இறக்க இப்போ மீண்டும் வேலை தேடும் படலம். எமது வேலைதான் முதல் அப்ளிகேசன்.

ஆள் நிலைக்காது என தெரிந்து விட்டது. நேரடியாக இதை கேட்பதை எமது நிறுவன கொள்கைகள் அனுமதிப்பதில்லை.  அவரின் கதையும் சோகமாய் இருக்க, அவரிற்கு offer ஐ கொடுத்து, அடுத்த நிலை ஆட்கள் 2 பேரை ரிசேவ் லிஸ்டில் போட்டேன். 

நினத்த மாதிரி, எமது suitability checks முடியமுன்னரே ஆள் அப்ளிகேசனை வாபஸ் வாங்கி விட்டார்.

இப்படி அதிகம் படிபதில் பல சிக்கல் உண்டு.

இது மட்டுமா, அதிகம் படித்த பெண்கள், தோதான மாப்பிள்ளை இல்லாமல், கரைசேர முடியாமல் முதிர்கன்னியாகும் நிலையும் நான் கண்டுள்ளேன்.

50 minutes ago, மாங்குயில் said:

இங்கிலாந்தில் GP ஆக இருந்து மாரடிப்பதைவிட,  ஒருவர் MBBS ஆக இருந்தால் இலங்கையில் நன்றாக உழைக்கலாம்.

குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம் அங்கே.

Quality of life (டிரைவர், வேலையாள், சனத்திடம் மரியாதை, சிறப்பு அதிதி அழைப்புகள் என) நல்லாய் இருந்தாலும், சம்பளத்தை ஒப்பிட்டோ, அல்லது பிள்ளைகள் எதிர் காலத்தை நினைத்தோ, ஊரில் என்னிடம் இங்கே வருவதை பற்றி வினவிய டாக்டர்கள் அதிகம்.

லண்டனில் வாழும் டாக்டர்கள் யாரும் ஊருக்கு போவதை பற்றி என்னிடம் விசாரிக்கவில்லை.

என்னை கேட்டால் எந்த நாட்டிலும் டாக்டராய் வேலை செய்வதற்கு, செக்குக்கு மாடாய் போகலாம். லோல் பட்ட வேலை 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அனைத்தும் சரி ஆனால் ஏன் படித்தவர்களிடம் தன்னம்பிக்கை மிகவும் குறைவாகவிருக்கின்றது?

இது திரிக்கு சம்பந்தமில்லா கேள்வி ஆனாலும் தோன்றியது

நானும் யோசிப்பதுண்டு.

நான் வைக்கும் எடுகோள்கள்

1. நாம் தன்னபிக்கையாளர் எனப் பார்ப்போர் உண்மையிலேயெ தன்னம்பிக்கையாளர் அல்ல (ஸ்டீவ் ஜாப்ஸ்). மாறாக முட்டாள்தனமாக ரிஸ்க் எடுக்கும் ஆக்கள். அவர்கள் எடுத்த ரிஸ்க் வேர்க் அவுட் ஆகிவிட்டதால் வென்றுவிட்டார்கள். இல்லாவிட்டல் தெருவில் நின்றிருப்பர்கள். நமக்கு தெரிந்தே இருக்காது.

2. Ignorance is bliss. அறியாமை ஒரு கொடை. ஒன்றை பற்றி அதிகம் படிக்க படிக்கத்தான் அதில் உள்ள ரிஸ்க் தெரியும். எனவே படித்தவர்கள் risk averse ஆகி விடுகிறார்கள். படிக்காதவர்கள் ரிஸ்கை பற்றிய விளக்கம் அதிகம் இல்லாமையால், என்ன ரிஸ்க் எடுக்கிறோம் என முழுதாக புரியாமலே ரிஸ்க் எடுத்து அதில் மிக சிலர் வெல்ல பலர் தோற்கிறார்கள்.

3. வென்றவர்களை நாம் தன்னம்பிக்கையாளர் என கொண்டாடி, தோற்றவர்களை மறந்தே விடுகிறோம்.

காந்தி, லிங்கன், மார்டின் லூதர் கிங், நேதாஜி, அம்பேத்கர், முகாபே இவர்கள் எல்லாம், hopeless நிலையில் இருந்த விடுதலை கோரிக்கைகளை, மாபெரும் எதிரிகளை முறியடித்து வென்று காட்டிய படித்த தன்னம்பிக்யாளர்கள்.

எல்லாரையும் விட சிறப்பானவர் பிரான்சையும், அமெரிக்காவையும் ஓட ஓட விரட்டிய, அதே நேரம் சைனாவுக்கும் சோவியத்துக்கும் சாய்ந்து கொடுக்காமலும் நின்ற மெத்த படித்த தன்னம்பிக்கையாளர் -ஹோ சி மின்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, goshan_che said:

இது மட்டுமா, அதிகம் படித்த பெண்கள், தோதான மாப்பிள்ளை இல்லாமல், கரைசேர முடியாமல் முதிர்கன்னியாகும் நிலையும் நான் கண்டுள்ளேன்.

இது எல்லா சமூகத்திலும் இல்லை.

அதிகம் படித்த பெண்ணுக்கு, அதேபோல் அதிகம் படித்த ஆண்தான் துணைவராக வர வேண்டும் என நினைப்பது, எல்லா சமூகத்திலும்  இல்லை.

விதி விலக்காக இருக்கலாம். பொதுவாக இல்லை.

அப்படி இருந்தாலும், பெண்களுக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் இருந்தாலேயொழிய.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மாங்குயில் said:

இது எல்லா சமூகத்திலும் இல்லை.

அதிகம் படித்த பெண்ணுக்கு, அதேபோல் அதிகம் படித்த ஆண்தான் துணைவராக வர வேண்டும் என நினைப்பது, எல்லா சமூகத்திலும்  இல்லை.

விதி விலக்காக இருக்கலாம். பொதுவாக இல்லை.

அப்படி இருந்தாலும், பெண்களுக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் இருந்தாலேயொழிய.  

உண்மைதான். யோசித்துப் பார்த்தால் எனக்கு தெரிந்த உதாரணங்கள் அத்தனையும், யாழ்-வெள்ளாள என்ற வட்டத்தில் இருந்தே வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.