Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இது எனக்கு புரியவில்லை ...
இதில் கோப பட என இருக்கு என்றே விளங்கவில்லை 

உங்களிடம் திமிர் இருந்தால்தான் கோபம்  வர வேண்டும் 
அது கொஞ்சம் இருப்பதாக எனக்கு படுகிறது.

நீங்கள் என்ன தகுதியை வைத்து லண்டன் வந்தீர்கள்?
உங்களின் அறிவுக்கு இலங்கையில் வேலை என்று இலங்கை அரசு உங்களை 
அனுப்பியா லண்டன் வந்தீர்கள்? 

நீங்கள் கிளிநொச்சியில் இருந்தால் நீங்கள் என்ன யோசிப்பீர்கள்?
நீங்கள் எதிர்பார்ப்பது அவர்களிடம் இல்லது இருக்கலாம் 
அது அவர்கள் குற்றமா? அல்லது உங்களைப்போல வெளிநாடு சென்று முன்னேறலாம் என்று சிந்திப்பதுதான் 
அவர்கள் குற்றமா? 

அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?
என்று உங்கள் கோபம் அவர்கள் மேல் வருகிறது?

நான் விளம்பரத்தில் இந்த நாட்டில் பிறந்தவர்கள் இன்ன தகுதியாவது இருக்க வேண்டும் என்றதன் பின்னரும் என்னை வெளிநாடு கூப்பிடு நான் அங்கு வந்து படித்து முடித்து டிகிரி எடுத்துத் தருகிறேன் என்று கூறுவது தவறாகவோ முட்டாள்த்தனமாகவோ உங்களுக்குத் படவில்லை. நான் அவர்களைத் தேடித் போகவும் இல்லை. அப்படியிருக்க எனக்கு கோபம் வந்ததுதான் உங்களுக்குத்  தவறாய்ப் படுகிறதோ ???? நான் நாட்டில் இருந்திருந்தாலும் இப்படி மற்றவர்கள் முட்டாள்கள் என்று எண்ணி மற்றவர் காசில் வெளிநாடு வர எண்ணியிருக்க மாட்டேன். அதனால் எனக்கு கோபமும் நீங்கள் கூறிய திமிரும் இருப்பதில் தவறென்ன ????

5 hours ago, Nathamuni said:

அப்படி எனக்கும் தோன்றியபடியால், நானும் கேட்டேன்...

ஆனால் MA என்று பொய் சொல்லி பிறகுதான் AL என்று தெரியவந்தது என்கிறார். அது கோவம் வரும் தானே.

உங்களுக்கு நல்ல குழப்பம். நான் அங்கு விளம்பரம் செய்திருந்தது மணமகன் லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்திருக்க வேண்டும் , MA ஆவது செய்திருக்கவேண்டும் என்று. தமக்கை தம்பியாரை எழுத்து எழுதிக் கூப்பிடுங்கோ தம்பி வந்து லண்டனில் படித்து டிகிரி வாங்குவாராம் என்றது.

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு நல்ல குழப்பம். நான் அங்கு விளம்பரம் செய்திருந்தது மணமகன் லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்திருக்க வேண்டும் , MA ஆவது செய்திருக்கவேண்டும் என்று. தமக்கை தம்பியாரை எழுத்து எழுதிக் கூப்பிடுங்கோ தம்பி வந்து லண்டனில் படித்து டிகிரி வாங்குவாராம் என்றது.

சிறு குழப்பம் தான் அக்கா... எல்லாம் வைரசு செய்யிற விளையாட்டு....

இப்ப விளங்குது. நீங்கள் கேட்டது உங்க பிறந்து BA பட்டும் வாங்கின மாப்பிளை. அங்கே இருந்து வந்த கால், பெடி A/L படிச்சவர். இங்க வந்து BA என்ன MA வே முடிப்பார், கெட்டிக்காரர் என்று.

நான் அவையள் A/L வைத்துக்கொண்டு BA வைத்திருக்கிறார் எண்டு பொய் சொல்லி இருக்கிறார் எண்டு விளங்கிப்போட்டன்.

அப்ப, மருதர் சொல்லுறது சரி தானே.

கலியாணம், இப்படி, அப்படி முயன்று பார்த்தால் தானே சரி வரும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

நாங்கள் எல்லாம் மற்றவர்கள் சொன்னதை கேட்டு நடந்தா முன்னேறினோம்?
முன்னேற துடிக்கிறவன் எல்லா கதவையும் தட்டித்தான் பார்ப்பான்.

உண்மையான அகதிகள் மட்டும் வாருங்கள் எனும்போது 
பொருளாதாரம் தேடிய நாம் எல்லாம் பொய் கதைகளுடன் 
வந்து அகதி என்ற  அந்தஸ்து பெறவில்லையா? 

நானும் நீங்களும் கூட இன்னமும் பெட்டிக்குள்தான் பார்க்கிறோம் 
இங்கு படித்துவிட்டு குப்பை கொட்டுபவர்களை விட 
திறமையான சிந்தனையுடன் நாட்டில் வசதி இன்றி பலர் இருக்கிறார்கள்.

ஒரு மனிதனை சிந்தனைதான் உருவாக்குகிறது 
சிந்தனையை தூண்டும் ஆலோசனைகளையும் அறிவையும் கொடுத்தால் 
எல்லா மனிதரும் முன்னேறலாம். 

சந்தர்ப்பத்தை தேடி கதவை தட்டுபவனுக்கு 
திறக்கும் முடிவை மூடும் முடிவை எடுப்பது வேறு 

கதவை தட்டியவனை .. அவனது தகுதியை பார்த்து 
ஏளனம் செய்வது வேறு. 

படித்துவிட்டுக் குப்பை கொட்டுபவர் பலர் இங்கு இருக்கலாம். ஆனால் அதற்காக படிக்காத ஒருவரைக் கூட்டி வந்து நாம் செலவழித்துப் படிப்பித்து கலியாணம் கட்ட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதுக்கு இங்கு இருக்கும் படிக்காத ஒருவரையே தெரிவு செய்யலாமே. உங்களுக்குத் தங்கை ஒருவர் இருந்தால் சீதனம் கொடுக்கத் தேவை இல்லை என எண்ணி நீங்கள் சிலவேளை இப்படியான ஒருவரைக் கூப்பிட்டு படிக்க வைத்துத் திருமணம் செய்துகொடுப்பீர்களாக்கும். நமக்கு அந்தளவு பரந்த மனமோ அறிவோ இல்லை மருது.

5 minutes ago, Nathamuni said:

சிறு குழப்பம் தான் அக்கா... எல்லாம் வைரசு செய்யிற விளையாட்டு....

இப்ப விளங்குது. நீங்கள் கேட்டது உங்க பிறந்து BA பட்டும் வாங்கின மாப்பிளை. அங்கே இருந்து வந்த கால், பெடி A/L படிச்சவர். இங்க வந்து BA என்ன MA வே முடிப்பார், கெட்டிக்காரர் என்று.

நான் அவையள் A/L வைத்துக்கொண்டு BA வைத்திருக்கிறார் எண்டு பொய் சொல்லி இருக்கிறார் எண்டு விளங்கிப்போட்டன்.

அப்ப, மருதர் சொல்லுறது சரி தானே.

கலியாணம், இப்படி, அப்படி முயன்று பார்த்தால் தானே சரி வரும். 

உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள் கட்டாயம் அப்படி ஒருவரைக் கூப்பிட்டு உங்கள் மக்களுக்குக்கட்டிக் கொடுப்பீர்களா ????

3 hours ago, goshan_che said:

என்ன நாதத்தார்,

என்னை விட criminal wastage of time அதிகமாக இந்த திரியில பண்ணுறியள் போல🤣.

உங்கட பேச்ச கேட்டு நானே கவிதை எழுத தொடங்கீட்டன் ஐயா 🤣

ஆளாளுக்கு ஒருத்தரையும் இந்தப் பக்கம் வரவிடாமல் செய்யுங்கோ 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என்ன நாதத்தார்,

என்னை விட criminal wastage of time அதிகமாக இந்த திரியில பண்ணுறியள் போல🤣.

உங்கட பேச்ச கேட்டு நானே கவிதை எழுத தொடங்கீட்டன் ஐயா 🤣

சும்மா தெரியாதே, கண நாளைக்கு பிறகு வந்தனான்.... அக்காவோட செல்லம் தானே... நாலு பேச்சு வாங்கினால் தானே சாப்பாடு இறங்கும்.

பாருங்கோ உங்களுக்கும் பேச்சு விழுது... வாற ஆக்களையும் வரவிடாமல் பண்ண வேணாமாம்..

உங்கட கவிதை அந்த மாதிரி... இருந்தது... உங்க மினக்கடாம அதை வடிவா எழுதி பதியுங்கோ. அது வரைக்கும் நான் நிண்டு வெட்டி ஆடுறன். சரியோ..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் விளம்பரத்தில் இந்த நாட்டில் பிறந்தவர்கள் இன்ன தகுதியாவது இருக்க வேண்டும் என்றதன் பின்னரும் என்னை வெளிநாடு கூப்பிடு நான் அங்கு வந்து படித்து முடித்து டிகிரி எடுத்துத் தருகிறேன் என்று கூறுவது தவறாகவோ முட்டாள்த்தனமாகவோ உங்களுக்குத் படவில்லை. நான் அவர்களைத் தேடித் போகவும் இல்லை. அப்படியிருக்க எனக்கு கோபம் வந்ததுதான் உங்களுக்குத்  தவறாய்ப் படுகிறதோ ???? நான் நாட்டில் இருந்திருந்தாலும் இப்படி மற்றவர்கள் முட்டாள்கள் என்று எண்ணி மற்றவர் காசில் வெளிநாடு வர எண்ணியிருக்க மாட்டேன். அதனால் எனக்கு கோபமும் நீங்கள் கூறிய திமிரும் இருப்பதில் தவறென்ன ????

எங்கள் நாட்டில் நாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் குண்டுபோடுவோம் 
என்று சிங்கள வெறிபிடித்த விமானப்படை சொல்வது போல கேட்க்கிறீர்கள் 

எதுக்கு என்ன எழுதுறது?

எனக்கு அவர்கள் மேல் எந்த தவறும் தெரியவில்லை 
நீங்கள் மாப்பிளை தேடி விளம்பரம் செய்து இருக்கிறீர்கள் 
அவர்களிடம் மாப்பிளை ஒருவர் இருந்து இருக்கிறார் 
உங்களைப்பற்றிய விபரமும் தொ இலக்கமும் அவர்களுக்கு ஒரு மூன்றாம் 
நபர் மூலம் கிடைத்து இருக்கிறது என்பதை நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள் 
இந்த மூன்றாம் நபர் அவர்களுக்கு என்ன சொன்னார் என்று தெரியவில்லை 
அவர்கள் உங்களுக்கு எந்த பொய்யையும் சொல்லவில்லை 
தங்கள் தகுதியையும் எதிர்கால நோக்கையும் சொல்லி இருக்கிறார்கள் 

நீங்கள் தேடுவதும் எதிர்பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்களை பொறுத்தது 
 
அவர்களிடம் டிகிரி இல்லை 
கிளிநொச்சியில் இருக்கிறார்கள் 
என்பதுக்காக உங்களுக்கு கோபம் வரும்போது 
உங்கள் கடந்த காலங்களையும் நினைத்துப்பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள் கட்டாயம் அப்படி ஒருவரைக் கூப்பிட்டு உங்கள் மக்களுக்குக்கட்டிக் கொடுப்பீர்களா ????

பாயிண்ட் அது இல்லை அக்கா.

மந்திரத்தில் மாங்காய் விழும் என்று இராமல், ஒரு கல்லாவது  மாங்காயை விழுத்தும் என்ற நம்பிக்கையில் நாலு கல்லை விட்டெறிந்து முயற்சி செய்து பார்ப்பதில் தவறு இல்லை. 

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், Everything to gain, nothing to lose  என்கிற வகையில் அவர்களது முயற்சியில் தவறு இல்லை என்பேன். 

(இப்ப பாருங்க, கோசன் ஓடி வருவார், இந்த ஆங்கில வசனத்துக்கு விளக்க உரையுடன்) 😀

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படித்துவிட்டுக் குப்பை கொட்டுபவர் பலர் இங்கு இருக்கலாம். ஆனால் அதற்காக படிக்காத ஒருவரைக் கூட்டி வந்து நாம் செலவழித்துப் படிப்பித்து கலியாணம் கட்ட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதுக்கு இங்கு இருக்கும் படிக்காத ஒருவரையே தெரிவு செய்யலாமே. உங்களுக்குத் தங்கை ஒருவர் இருந்தால் சீதனம் கொடுக்கத் தேவை இல்லை என எண்ணி நீங்கள் சிலவேளை இப்படியான ஒருவரைக் கூப்பிட்டு படிக்க வைத்துத் திருமணம் செய்துகொடுப்பீர்களாக்கும். நமக்கு அந்தளவு பரந்த மனமோ அறிவோ இல்லை மருது.

இங்கிருப்பவர்களுக்கு சீதனம் கொடுக்கும்போது 
ஏன் அங்கிருப்பவர்களுக்கு சீதனமும் கொடுத்து திருமணம் செய்ய கூடாது?
என்பது எனக்கு விளங்கவில்லை ......... இங்கிருப்பவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள்?

அவர்களை நீங்கள் திருமணம் செய்யுங்கள் அல்லது செய்திருக்கலாம் என்று நான் எழுதவில்லை 
அவர்கள் மேல் உங்களுக்கு வந்த கோபம் பற்றி தான் எழுதினேன். 

திருமணம் என்பது உங்கள் இஸ்ட்டபடி நடக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆளாளுக்கு ஒருத்தரையும் இந்தப் பக்கம் வரவிடாமல் செய்யுங்கோ 😂😂

மக்களே சொல்றத கேளுங்கோ, 

அக்கா ஏற்கனவே கதையோட கிளைமாக்ஸ் என்னெண்டு வாய் விட்டுட்டா 👇

உந்த கலியாணப் பேச்செல்லாம் மூண்டு மாதம் ஓடினாப் பிறகு பிள்ளை கெட்டிகாரி நிப்பாட்டி போட்டுது. 

உதுக்கு மேலேம் இந்த திரில நிண்டு ஏன் மினெக்கெடுறியள்🤪 (ஏதோ என்னாலானது).

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் மகளும் சொன்னாள்தான்.மூன்று மாதம் கழிய.

அந்த மூன்று மாதமும் நடந்ததும் எழுதத்தான் வேணும் 😃

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமுமா இந்தக் கதை ஓடுது..?

இந்த நிர்பயா கேஸாவது இன்றோடு முடிஞ்சது, ஆனால் இது தினத்தந்தி 'கன்னித்தீவு' போல நீளும்போலிருகே..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

எங்கள் நாட்டில் நாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் குண்டுபோடுவோம் 
என்று சிங்கள வெறிபிடித்த விமானப்படை சொல்வது போல கேட்க்கிறீர்கள் 

எதுக்கு என்ன எழுதுறது?

எனக்கு அவர்கள் மேல் எந்த தவறும் தெரியவில்லை 
நீங்கள் மாப்பிளை தேடி விளம்பரம் செய்து இருக்கிறீர்கள் 
அவர்களிடம் மாப்பிளை ஒருவர் இருந்து இருக்கிறார் 
உங்களைப்பற்றிய விபரமும் தொ இலக்கமும் அவர்களுக்கு ஒரு மூன்றாம் 
நபர் மூலம் கிடைத்து இருக்கிறது என்பதை நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள் 
இந்த மூன்றாம் நபர் அவர்களுக்கு என்ன சொன்னார் என்று தெரியவில்லை 
அவர்கள் உங்களுக்கு எந்த பொய்யையும் சொல்லவில்லை 
தங்கள் தகுதியையும் எதிர்கால நோக்கையும் சொல்லி இருக்கிறார்கள் 

நீங்கள் தேடுவதும் எதிர்பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்களை பொறுத்தது 
 
அவர்களிடம் டிகிரி இல்லை 
கிளிநொச்சியில் இருக்கிறார்கள் 
என்பதுக்காக உங்களுக்கு கோபம் வரும்போது 
உங்கள் கடந்த காலங்களையும் நினைத்துப்பாருங்கள். 

முக்கியமான விடயத்தை விட்டுவிட்டு எதோதேவையற்றதுக்கு கேள்விகேட்டு விடயத்தின் வீரியத்தைக் குறைக்கப் பார்க்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

சும்மா தெரியாதே, கண நாளைக்கு பிறகு வந்தனான்.... அக்காவோட செல்லம் தானே... நாலு பேச்சு வாங்கினால் தானே சாப்பாடு இறங்கும்.

பாருங்கோ உங்களுக்கும் பேச்சு விழுது... வாற ஆக்களையும் வரவிடாமல் பண்ண வேணாமாம்..

உங்கட கவிதை அந்த மாதிரி... இருந்தது... உங்க மினக்கடாம அதை வடிவா எழுதி பதியுங்கோ. அது வரைக்கும் நான் நிண்டு வெட்டி ஆடுறன். சரியோ..

காலங்காத்தால உங்கள் பதிவை வாசிச்சுச் சிரிக்க தட்டிகிட்டிப் போட்டுதோ என்கிறார் மனிசன்.

கவிதை அந்த மாதிரி எண்டுபோட்டு உடனேயே வடிவா எழுதி பதியுங்கோ எண்டால் என்ன அர்த்தம் ?????🤣

10 hours ago, Maruthankerny said:

இங்கிருப்பவர்களுக்கு சீதனம் கொடுக்கும்போது 
ஏன் அங்கிருப்பவர்களுக்கு சீதனமும் கொடுத்து திருமணம் செய்ய கூடாது?
என்பது எனக்கு விளங்கவில்லை ......... இங்கிருப்பவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள்?

அவர்களை நீங்கள் திருமணம் செய்யுங்கள் அல்லது செய்திருக்கலாம் என்று நான் எழுதவில்லை 
அவர்கள் மேல் உங்களுக்கு வந்த கோபம் பற்றி தான் எழுதினேன். 

திருமணம் என்பது உங்கள் இஸ்ட்டபடி நடக்கவேண்டும். 

அங்கிருப்பவர்களுக்கு சீதம் கொடுப்பது பற்றியல்ல நான் எழுதியது. வேண்டுமென்றே நீங்கள் விளங்காததுபோல் வேறு எழுதுகிறீர்கள். திரும்பத் திரும்ப உங்களுக்கு விளங்கப்படுத்தி எனக்குப் பயித்தியம் பிடிக்கப் போகுது. உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கோ நான் எழுதினது விளங்கவில்லை என்று. ???????

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

எங்கள் நாட்டில் நாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் குண்டுபோடுவோம் 
என்று சிங்கள வெறிபிடித்த விமானப்படை சொல்வது போல கேட்க்கிறீர்கள் 

எதுக்கு என்ன எழுதுறது?

எனக்கு அவர்கள் மேல் எந்த தவறும் தெரியவில்லை 
நீங்கள் மாப்பிளை தேடி விளம்பரம் செய்து இருக்கிறீர்கள் 
அவர்களிடம் மாப்பிளை ஒருவர் இருந்து இருக்கிறார் 
உங்களைப்பற்றிய விபரமும் தொ இலக்கமும் அவர்களுக்கு ஒரு மூன்றாம் 
நபர் மூலம் கிடைத்து இருக்கிறது என்பதை நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள் 
இந்த மூன்றாம் நபர் அவர்களுக்கு என்ன சொன்னார் என்று தெரியவில்லை 
அவர்கள் உங்களுக்கு எந்த பொய்யையும் சொல்லவில்லை 
தங்கள் தகுதியையும் எதிர்கால நோக்கையும் சொல்லி இருக்கிறார்கள் 

நீங்கள் தேடுவதும் எதிர்பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்களை பொறுத்தது 
 
அவர்களிடம் டிகிரி இல்லை 
கிளிநொச்சியில் இருக்கிறார்கள் 
என்பதுக்காக உங்களுக்கு கோபம் வரும்போது 
உங்கள் கடந்த காலங்களையும் நினைத்துப்பாருங்கள். 

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் நல்லா முடிச்சுப் போடுகிறீர்கள். கலியாணம் விடயமா ஒருவரிடம் தொலைபேசி இலக்கம் கொடுக்கும் போது இந்தா பிள்ளை. வெளிநாட்டில் இருக்கும் இளிச்சவாய் ஒன்று கலியாணம் பேசுது. எப்பிடியாகிலும் மடக்கிக் கட்டிக் குடு என்றா கூறி தொடர்பிலக்கம் கொடுப்பார்கள்.??? இலங்கையில் உள்ள திருமண வேவைகள் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்பது தொடக்கம் எல்லாம் விபரமாகக் கேட்டுப் பதிந்துவிட்டுத் தான் தொடர்பு தருவது. 

10 hours ago, Nathamuni said:

பாயிண்ட் அது இல்லை அக்கா.

மந்திரத்தில் மாங்காய் விழும் என்று இராமல், ஒரு கல்லாவது  மாங்காயை விழுத்தும் என்ற நம்பிக்கையில் நாலு கல்லை விட்டெறிந்து முயற்சி செய்து பார்ப்பதில் தவறு இல்லை. 

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், Everything to gain, nothing to lose  என்கிற வகையில் அவர்களது முயற்சியில் தவறு இல்லை என்பேன். 

(இப்ப பாருங்க, கோசன் ஓடி வருவார், இந்த ஆங்கில வசனத்துக்கு விளக்க உரையுடன்) 😀

எனக்கு கோபம் வருவது மட்டும்தான் தவறு உங்களுக்கும் 😃

5 hours ago, ராசவன்னியன் said:

இன்னமுமா இந்தக் கதை ஓடுது..?

இந்த நிர்பயா கேஸாவது இன்றோடு முடிஞ்சது, ஆனால் இது தினத்தந்தி 'கன்னித்தீவு' போல நீளும்போலிருகே..! :)

அவ்வளவு விஷயம் இருக்கே அண்ணா சொல்ல 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

மக்களே சொல்றத கேளுங்கோ, 

அக்கா ஏற்கனவே கதையோட கிளைமாக்ஸ் என்னெண்டு வாய் விட்டுட்டா 👇

உந்த கலியாணப் பேச்செல்லாம் மூண்டு மாதம் ஓடினாப் பிறகு பிள்ளை கெட்டிகாரி நிப்பாட்டி போட்டுது. 

உதுக்கு மேலேம் இந்த திரில நிண்டு ஏன் மினெக்கெடுறியள்🤪 (ஏதோ என்னாலானது).

Image result for moving emoji

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 12:46 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில இடங்களில் நடக்கலாம் அதுக்காக எல்லாரும் குடிக்கிறமாதிரி சொல்லுறியள். நாம் போகும் இடங்களில் இன்னும் அந்த அளவுக்கு இல்லை. எமது ஊரவர் உறவினர் உட்பட. விடிய எழும்பி ஒரு பால்கோப்பி குடிச்சால்தான் நின்மதியா இருக்கும்.

எனக்கு விடிய எழும்பி கள்ளுக்குடிக்கோணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு விடிய எழும்பி கள்ளுக்குடிக்கோணும்.

ஆர் வேண்டாம் எண்டது. உங்கட வாய் ,உங்கட காசு, உங்கட கள்ளு.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணப் பேச்சு 6

ஒரு திருமணப் பேச்சு இலங்கையில் இருந்து வந்தது. பையன் 15 ஆண்டுகளாக லண்டனில் வசிக்கிறார். இலங்கையில் பிறந்த பையன் ஓகேயா என்று மக்களிடம் கேட்டதற்கு இலங்கையில் பிறந்தவர்கள் பலருக்கு குறுகிய மனநிலைதான் அம்மா. இங்கு பிறந்த பிள்ளைகளை வைத்து வாழும் நுணுக்கமும் திறனும் பலரிடம் இல்லை. ஏன் உங்கள் ஆசையைக் கெடுப்பான். எதற்கும் கதைத்துப் பார்க்கிறேன். எனது வற்சப் இலக்கத்தைக் கொடுங்கள் என்றாள். இரண்டு நாட்கள் போன் வந்ததா வந்ததா எனக் கேட்டு எனக்கே டென்ஷனாக்கிவிட, அம்மா அவனுக்கும் என்ன பிரச்சனையோ கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் என்றாள் மகள்.

பெடியனின் பெற்றோர் கொழும்பில் இருக்கின்றனர். தமிழுக்குத்  தொண்டு செய்த ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர். பேரனார் போராட்ட காலத்தில் நிறைய தன் பங்கை ஆற்றியது தெரிந்ததனால் இந்தத் திருமணம் சரிவந்தால் நல்லது என நான் நினைத்தேன். பெற்றோர்களும் நன்றாகக் கதைத்துப் பேசுகின்றனர் என எண்ணிக்கொண்டு இருக்க ஐந்தாம் நாளாய்த்தான் அவனிடமிருந்து போன் வந்தது என்றாள் மகள்.போனில் நன்றாகத்தான் கதைக்கிறான். நாளை சிற்றிக்குள் சந்திக்கப் போகிறோம் என்றாள்.

அடுத்தநாள் அவனைச் சந்திக்கச் சென்ற மகள் அவன் எனக்குச் சரிவர மாட்டான் அம்மா. பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள் என்றாள். எனக்கு மனம் பதைக்க ஏனம்மா என்ன பிரச்சனை என்றேன்?. அவன் ஒரு சைக்கோ. விக்டோரியா ஈஸ்டேஷனில இரண்டுபேரும் சந்தித்சனாங்கள். பக்கத்தில இருக்கிற உணவகம் எதுக்கும் போவோம் என்று நான் கூற மூன்று உணவகங்களைப் பார்த்துவிட்டு தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி அரை மணிநேரம் என்னை அலைக்கழித்ததை நான் பொறுத்துக்கொண்டேன். அதன்பின்னர் இரண்டு தடவை டியூப் எடுத்து பின்னர் ஒரு யூனிவேசிற்றியின் காண்டீனுக்கு என்னை அழைத்துச் சென்றான். அவனிடம் பணம் இல்லையோ என்று எண்ணி என்ன உண்கிறாய் என்று கேட்காமலே இரண்டு பேகரை ஓடர் செய்தான். குடிப்பதற்கும் தனக்கு விரும்பியதைச் சொல்லிவிடுவானோ என்ற எண்ணத்தில் எனக்கு கோக் என்றேன். என்று மகள் மூச்சுவிட "உதெல்லாம் ஒரு பிரச்சனையா" என்றேன் நான்.

உதொண்டும் பெரிய பிரச்சனையே இல்லை அம்மா. பிறகு என்ன படிச்சனி ? எங்கே படிச்சனி? என்றெல்லாம் கேட்டுவிட்டு எத்தனை பேருடன் இதுவரை படுத்தனி என்று கூசாமல் கேட்கிறான். நான் ஆனால் கோபப்படவில்லை. ஏனென்றால் அவனுக்கு என்ன உளவியல் பிரச்சனை இருக்கிறதோ என்று எண்ணி, "என்னிடம் யாரும் இதுவரை இப்படிக் கேட்டதில்லை. ஆனாலும் இன்னொரு பெண்ணைப் பார்த்து நீ இப்படிக்கு கேட்டால் உன்னை அவர்கள் திட்டுவார்கள் என்பது ஒன்று. மற்றொன்று நீ பயித்தியம் என்று எண்ணுவார்கள்" என்றவுடன் அவன் என்னைக் கண்டபடி திட்டவாரம்பிக்க நான் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்துவிட்டேன் என்கிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதொண்டும் பெரிய பிரச்சனையே இல்லை அம்மா. பிறகு என்ன படிச்சனி ? எங்கே படிச்சனி? என்றெல்லாம் கேட்டுவிட்டு எத்தனை பேருடன் இதுவரை படுத்தனி என்று கூசாமல் கேட்கிறான்

வெளிநாடுகளில் வாழும் பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று நிறைய பேர் தப்புக் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதொண்டும் பெரிய பிரச்சனையே இல்லை அம்மா. பிறகு என்ன படிச்சனி ? எங்கே படிச்சனி? என்றெல்லாம் கேட்டுவிட்டு எத்தனை பேருடன் இதுவரை படுத்தனி என்று கூசாமல் கேட்கிறான். நான் ஆனால் கோபப்படவில்லை. ஏனென்றால் அவனுக்கு என்ன உளவியல் பிரச்சனை இருக்கிறதோ என்று எண்ணி, "என்னிடம் யாரும் இதுவரை இப்படிக் கேட்டதில்லை. ஆனாலும் இன்னொரு பெண்ணைப் பார்த்து நீ இப்படிக்கு கேட்டால் உன்னை அவர்கள் திட்டுவார்கள் என்பது ஒன்று. மற்றொன்று நீ பயித்தியம் என்று எண்ணுவார்கள்" என்றவுடன் அவன் என்னைக் கண்டபடி திட்டவாரம்பிக்க நான் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்துவிட்டேன் என்கிறாள்.

நீ எத்தனை பேரோட என்று முகத்திலடித்தால் போல் கேக்கவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வாழும் பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று நிறைய பேர் தப்புக் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.

இங்கு பிறந்து வளர்ந்த ஆண்பிள்ளைகள் இப்படி அநாகரீகமாக நடப்பதுமில்லை கேட்பதுமில்லை.

4 hours ago, ஏராளன் said:

நீ எத்தனை பேரோட என்று முகத்திலடித்தால் போல் கேக்கவேணும்.

அதைத்தான் நானும் சொன்னனான். மகள் சொன்னாள் அவன் போன்றவர்களுக்கு வேறு ஏதாவது தாக்கம் இருக்கும்.மேலும் நானும் கேட்டாலும் அவன் ஓம் என்று சொல்லிவிட்டுத் திமிராக இருப்பான். அவனுடன் எதுவும் இல்லை என்று முடிவெடுத்தபின் எதற்கு நான் டென்ஷன் ஆகவேண்டும் என்றாள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மூதேவி ஒரு பேகரை ஓசீல வேற திண்டிருக்கு😡

யார் சாப்பிட்டது??? நீங்கள் முதல்ல வாசிக்கவேணும் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யார் சாப்பிட்டது??? நீங்கள் முதல்ல வாசிக்கவேணும் ☹️

நீங்கள் எழுதியதில் புலவருக்கு சற்றுமயக்கமாகிவிட்டது. நான் நினைத்தேன் தங்கள் மகள் காசுகொடுத்து ஆர்டர் பண்ண அந்த நாகரீகம் தெரியாதவன் தின்றிவிட்டான் என்றுவாசித்துவிட்டேன். சொற்பிழை பொருட் பிழை பொறுத்தருள்க..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் எழுதியதில் புலவருக்கு சற்றுமயக்கமாகிவிட்டது. நான் நினைத்தேன் தங்கள் மகள் காசுகொடுத்து ஆர்டர் பண்ண அந்த நாகரீகம் தெரியாதவன் தின்றிவிட்டான் என்றுவாசித்துவிட்டேன். சொற்பிழை பொருட் பிழை பொறுத்தருள்க..

புலவர் சற்று நிதானமாக வாசிக்க வேண்டும். நானும் கொஞ்சம் அசந்து தான் போய்விட்டேன்.

அக்கோய், உங்கள் பிள்ளை நன்றாக தான் நிலைமையை கையாண்டு இருக்கிறார்.

இதுதான், அங்கிருந்து வருபவர்கள் மனவோட்டம். அவர்கள் எல்லாம் அங்கிருந்து தான் பெண் எடுக்கவேண்டும்.

அதேவேளை, பல்கலைகழக வாழ்வில் நமது பெண்பிள்ளைகள், தாய் தகப்பனுக்கு புரியாத வேறு வாழ்வு வாழ்வதும் சகஜம். உதாரணமாக இரண்டு ஆண்கள், மூன்று பெண்களாக வீடு எடுத்து இருப்பார்கள். அதில் ஒருஜோடியாவது ஒரு அறையில் தங்கி குடும்பமே நடாத்துவர். படிப்பு முடிந்ததும், திருமணம் செய்ய விரும்பாவிடில் கிளம்பி விடலாம். வார இறுதியில் ஜரோப்பா போய்வருவர். ஆனாலும் படிப்பிலும் கவனமாக இருப்பர்.

பெற்றோர்கள் இந்த நிதர்சனம் குறித்து புரிந்து கொள்ளவேண்டும். நாம் அங்கு பிறந்தாலும், பிள்ளைகள் இங்கே பிறந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டை புரிந்தால், கவலைபடதேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

புலவர் சற்று நிதானமாக வாசிக்க வேண்டும். நானும் கொஞ்சம் அசந்து தான் போய்விட்டேன்.

உண்மைதான் நாதம்ஸ். சிவாஸ் இப்பிடிச்செய்வான் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.🤭

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான் நாதம்ஸ். சிவாஸ் இப்பிடிச்செய்வான் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.🤭

வாழைப்பழம் மட்டுமே அடிச்சனியள் எண்டதை யாரோ உளவு பார்த்துவிட்டான் என்று புலம்பிய மாதிரி இருக்குதே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.