Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஆகா, இலங்கையில் உள்ள மதப்பிரச்சினை, இனப்பிரச்சினை எல்லாவற்றையும் எவ்வளவு வேகமாக யாழ். பல்கலைக்கழக சின்னத்துடன் நீங்கள் தீர்த்துவிட்டீர்கள் பாருங்கள். அடுத்த சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு உங்களை நாங்கள் பிரேரிக்க போகிறோம், சம்மதமா? எம் மதமும் சம்மதமா?😃

38 minutes ago, ampanai said:

அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும்  🙂 ? 

பரிசு கொடுப்பவரை சொன்னேன்.

எந்த மதத்தை சார்ந்தவர் பரிசு தந்நதால் பரிசு தருபவரின் மதத்துக்கு ( மேலும் அதிகம் பெறலாம் என்ற நப்பாசையுடன்🤑 ) பரிசு பெறுபவர் மதம் மாறுவார்? 😜

Edited by கற்பகதரு

  • Replies 134
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

மலையைக் கிள்ளி அல்ல கொல்லி. உங்களுக்கு அதன் அர்த்தம் புரிய்வில்லை போலும் ☹️

மலையைக் கொல்லி - என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்கள் மதம் மாறுகின்றார்கள் என்று பலர் புலம்புகின்றார்கள். 

மத மாற்றத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சாதியம்.

சாதி வேறுபாடுகளால் ஒதுக்கப்படுபவர்களுக்கு மதம் மாறுவது ஒரு ஆறுதலையும் புதிய நம்பிக்கையையும் கொடுக்கலாம். 

கொடியில் தொங்குவது நந்தி ஆகட்டும், சிங்கம் ஆகட்டும் கருடன் ஆகட்டும்... இனம், மதம் என்று பரந்து விரியமுன் மூலமுதல் ஆரம்பம் சாதியமே.

கலியாணம் பேசட்டோ?

பேசட்டோ; பேசலாம் பேசலாம் பேஷாய் பேசலாம்; சாதியை சொல்லிவிட்டு.

சாதி பாகுபாடுகளில் இருந்து வெளியில் வராதவரை தமிழர் சுயநிர்ணயம் எல்லாம் வெறும் கனவே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

யாழில் இயந்திரம் கொண்டு தேர் இழுப்பர்கள். சக மனிதனை சாதி பாகு பாட்டில் பிரிப்பது ஒதுக்குவது/ஒடுக்குவது எல்லாம் நடக்கும். அந்த மனிதன் தனக்கு பிடித்த ஒரு மதத்தில் போய் இணைந்து இறைவனை வழிபட்டால் குய்யோ முறையோ என கத்தி மதம் மாற்றுகின்றான் என உழையிடுவது. சீ என்ன உலகம்.

 மனிதன் தனக்கு பிடித்த ஒரு மதத்தில் போய் இணைந்து இறைவனை வழிபட்டால் யார் என்ன செய்யப் போகிறார்கள்?

மதம் மாறுவதற்கு இலஞ்சமாகக் கொடுக்கும் சோற்றுப் பொட்டலம்தான் இங்கே பிரச்சனை.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, ampanai said:

அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும்  🙂 ? 

பரிசு கொடுப்பவரை சொன்னேன்.

நோபல் பரிசு வழங்குபவரின் வெறுப்பிற்கு, தன் வாழ்நாளில் உட்பட்டிருக்காதவராக  இருக்க வேண்டும்.

யூத சியோனிஸத்திற்கு எதிராக இயங்காதவராக இருக்க வேண்டும். 

அப்படிப்பட்டவரைத் தான், நோபல் பரிசு கமிட்டி பரிசீலிக்கும்.

பரிசு பெறுபவரின் மதம் ஒரு பிரச்சனையல்ல.

இது எழுதாத விதி.

  • தொடங்கியவர்

யானைக்கு மதம் பிடிக்க என்ன காரணம் ?  என தேடலில் அறியக்கூடியதாக உள்ளது.

ஆனால், மனிதனுக்கு ஏன் 'மதம்' பிடிக்கின்றது என்ற தேடல் பல நூற்றாண்டுகளாக .... தொடர்கின்றது !

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

மதம் மாறுவதற்கு இலஞ்சமாகக் கொடுக்கும் சோற்றுப் பொட்டலம்தான் இங்கே பிரச்சனை.

எவ்வளவு இயலாமையில் மதம் மாறுகிறார்கள் சைவர். இதனை மாற்ற முயலாமல் சைவத்தின் காவலர் நாம் போல்  வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கிறோம். வன்னி போரின்போது பாதிக்கப்பட்ட மக்களோடு கூட இருந்து, உதவி செய்து தம் உயிரையே விட்டிட பாதிரிமார் நினைத்திருந்தால்: அத்தனை மக்களையும் மதம் மாற்றியக்கலாம். அவர்கள் அதை செய்யவில்லை. மனித நேயத்துடன் எல்லோருக்கும் உணவளித்துவந்தார்கள்.  அப்போது அங்கிருந்த மக்கள் மதம் மாறவில்லை அவர்களின் உணவுக்களஞ்சியத்தை நம்மவர் இராணுவத்துக்கு உளவு சொல்லி அழிப்பித்தார்கள்.  எந்த அழுத்தமும் இல்லாமல் தத்தம் மதத்தை பின்பற்றினார்கள் கிறிஸ்தவ நாடுகளில் தஞ்சம் அடைந்த சைவர்களை மதம் மாற்றியா தஞ்சம் கொடுத்தார்கள்? சிங்களவன் எதுக்கெடுத்தாலும் புலியை அழித்தோம் என்று எல்லா பிரச்சனைகளையும் அதற்குள் புதைத்து விடுகிறான். நாம் எமது பிரச்சனைகளை தட்டிக்கழித்துக்கொண்டு மதமாற்றம் என்று ஏமாற்றுகிறோம். நாம் எமது சமுதாய பிரச்னையில் உண்மையாய் உழைத்தால் கிறிஸ்த்தவர்களால் எப்படி மதம் மாற்ற முடியும்? அல்லது சைவர்கள் ஏன் அவர்கள் பின்னால் ஓடுகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

 மனிதன் தனக்கு பிடித்த ஒரு மதத்தில் போய் இணைந்து இறைவனை வழிபட்டால் யார் என்ன செய்யப் போகிறார்கள்?

மதம் மாறுவதற்கு இலஞ்சமாகக் கொடுக்கும் சோற்றுப் பொட்டலம்தான் இங்கே பிரச்சனை.
 
அக்கோய் மாங்குயில் என்ன சுருதி மாறுது ? 😂ஏதும் எழுத்துப் பிழையோ ?

சாப்பாட்டுப்பார்சல்தான் உங்கள்  பிரச்சனையா 😜 சாப்பட்டுப் பார்சல் கொடுக்காமல் மதம் மாற்றலாம் என்கிறீர்களா 😂 எங்கோ இடிக்குதே. 

2 hours ago, ampanai said:

யானைக்கு மதம் பிடிக்க என்ன காரணம் ?  என தேடலில் அறியக்கூடியதாக உள்ளது.

ஆனால், மனிதனுக்கு ஏன் 'மதம்' பிடிக்கின்றது என்ற தேடல் பல நூற்றாண்டுகளாக .... தொடர்கின்றது !

 சுய நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சைவ ஆன்மீக  சொற்பொழிவாளர் கூறிய கருத்து: ஒரு கோவிலுக்கு சொற்பொழிவுக்குகாக போயிருந்தபொழுது, சைவ கோயிலுக்கு அருகில் இருந்த கிறிஸ்தவ தேவாலயம் பற்றி குறிப்பிட்டு கண்டித்து  பேசும்படி அழைக்கப்பட்டிருந்தாராம். அவரும் இன்று இந்தப்பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுவது என்ற நோக்குடன்தான்  அமர்ந்தவர், கண்களை உயர்த்திப்பார்த்தபோது அங்கே வயல்வெளிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்  விளக்குகள் தெரிந்ததாம். காரணம் கேட்ட போது, இவரின் ஆன்மீக  உரையை கேட்பதற்காக வந்திருந்த சைவர்களுக்கு உள்ளே  வர அனுமதிக்கவில்லை அந்த ஆலய நிர்வாகம். இந்த லட்ஷணத்தில்  எப்படி அவரால் கிறிஸ்தவ ஆலயம் பற்றி கதைக்க முடியும்? இதுதான் நம்ம சமய பற்று.   இதில் நம்ம குறைபாடுகளை மறைத்து சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் என்று அவர்களை இழிவு படுத்துவது, நமது வங்குரோத்துப் புத்தியே அல்லாமல் பற்று ஒன்றும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, satan said:

எவ்வளவு இயலாமையில் மதம் மாறுகிறார்கள் சைவர். 

இயலாமையில் யாரும் மதம் மாறுவதில்லை.

மாறுபவர்களுக்கு கிறிஸ்தவ மதத்தின் மூட நம்பிக்கைகள் தெரிய வாய்ப்பில்லை.

யாரெல்லாம், பைபிளை முழுமையாக வாசிக்கவில்லையோ, அவர்கள்தான் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறார்கள்.

இயேசு அறியாத பைபிளை முழுமையாக வாசித்தால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.

அதைத்தான், பெரும்பாலும் மேற்குலகில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

13 hours ago, ampanai said:

யானைக்கு மதம் பிடிக்க என்ன காரணம் ?  என தேடலில் அறியக்கூடியதாக உள்ளது.

ஆனால், மனிதனுக்கு ஏன் 'மதம்' பிடிக்கின்றது என்ற தேடல் பல நூற்றாண்டுகளாக .... தொடர்கின்றது !

பிற நம்பிக்கையைச் சார்ந்த மக்களை 'சாத்தான்' என்று தூற்றுவதும், உங்களின் மத நம்பிக்கையில் உள்ளதுதான், அப்படித்தானே!

11 hours ago, Kapithan said:

சாப்பாட்டுப்பார்சல்தான் உங்கள்  பிரச்சனையா 😜 சாப்பட்டுப் பார்சல் கொடுக்காமல் மதம் மாற்றலாம் என்கிறீர்களா 😂 எங்கோ இடிக்குதே. 

சாப்பாட்டைக்  கொடுக்காமல்,  இயேசுவே அறியாத, இயேசுவிற்குப் பின்னால் யாராலோ எழுதப்பட்ட பைபிளின் புராணங்களை போதித்துப் பாருங்கள்.

யாரும் ஏற்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மாங்குயில் said:

இயலாமையில் யாரும் மதம் மாறுவதில்லை.

மாறுபவர்களுக்கு கிறிஸ்தவ மதத்தின் மூட நம்பிக்கைகள் தெரிய வாய்ப்பில்லை.

யாரெல்லாம், பைபிளை முழுமையாக வாசிக்கவில்லையோ, அவர்கள்தான் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறார்கள்.

இயேசு அறியாத பைபிளை முழுமையாக வாசித்தால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.

அதைத்தான், பெரும்பாலும் மேற்குலகில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பிற நம்பிக்கையைச் சார்ந்த மக்களை 'சாத்தான்' என்று தூற்றுவதும், உங்களின் மத நம்பிக்கையில் உள்ளதுதான், அப்படித்தானே!

சாப்பாட்டைக்  கொடுக்காமல்,  இயேசுவே அறியாத, இயேசுவிற்குப் பின்னால் யாராலோ எழுதப்பட்ட பைபிளின் புராணங்களை போதித்துப் பாருங்கள்.

யாரும் ஏற்க மாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை மதமாற்றம் என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை நிலைதான்.🤔

ஆனால் ஒரு பிடி சோற்றுக்காக மதம் மாறுகிறார்கள் என்கிறீர்களே நீங்கள் எங்கோ..... போய்விட்டீர்கள்.😂

அதுசரி ஒருபிடி சோற்றுக்குக் கூட வக்கின்றியா அம்மக்களை வைத்திருக்கிறீர்கள். 😡 எங்கேயிந்த் குய்யோ முய்யோ கோஸ்ரி.

கூப்பிடுங்கள் அவர்களை..

நாக்கைப் பிடுங்குகிறமாதிரி நாலு கேள்வி கேட்போம் 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, satan said:

 வன்னி போரின்போது பாதிக்கப்பட்ட மக்களோடு கூட இருந்து, உதவி செய்து தம் உயிரையே விட்டிட பாதிரிமார் நினைத்திருந்தால்: அத்தனை மக்களையும் மதம் மாற்றியக்கலாம். அவர்கள் அதை செய்யவில்லை. 

பாதிரிமாரின் குணத்தை படம் பிடித்துக் காட்டுகிறீர்கள்.

வறுமையில் இருக்கும் மக்களுக்கு, கிறிஸ்தவ மதம் மாற்றும் கோஷ்டிகளோ, அல்லது வேறு எந்த NGO  க்களோ பெரிதாக ஒன்றும் செய்வதில்லை.

அவர்களைப் பாதுகாப்பதும் தொடர்ந்த உதவிகளை செய்வதும், ஸ்ரீலங்கா அரசு மட்டுந்தான்.

எனக்கு ஒன்று புரியவில்லை ...அது ஏன் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக எழுதும் கருத்துக்கள் எல்லாம் புது IDஇல் இருந்து வருகின்றன....?????

  • தொடங்கியவர்

நான் எனது மதத்தையும் சேர்ந்தவன் அல்ல 
நான் எந்த சாதியையும் சேர்ந்தவள் அல்ல 

இவ்வாறான ஒரு அத்தாட்சி பத்திரத்தை இந்தியாவில் பெற முடியும். 

வேறு நாடுகளில் இவ்வாறு உள்ளதா?,  என தெரியவில்லை. 

https://www.news18.com/news/buzz/no-caste-no-religion-tamil-nadu-woman-becomes-first-indian-to-get-certificate-after-9-year-old-battle-2038463.html

https://www.quora.com/How-do-I-get-No-caste-No-religion-certificate-in-India-officially

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

இந்த செயன்முறை தென் ஆசியக் கண்டத்தினருக்கு மிகச் சிறப்பான முறை. சாதியையும் மதத்தையும் பாலையும் காவிக்கொண்டு திரிவோருக்கு இந்த செயன் முறை பிரயோசனமற்றது.  ஏனென்றால் சாதியும் மதத்தையும் எவன் தூக்கிப் பிடிக்கின்றானோ அவன் ஒருவகையான ஊனமுள்ளவன்(என்னைப் பொறுத்த அளவில்). ஊனமுள்ளவன் தனது ஊனத்தை ஏற்ருக்கொள்ள மாட்டான். ஊனத்தை மறுப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் பீப்ஸ்,

முள்ளிவாய்க்காலிலும் திருந்தாத கூட்டத்துக்கு இப்போ இன்னொரு மேட்டர் வருகிறது. 

கொரோனாவுக்கு பிறகாவது திருந்திவீர்களா?

பார்க்கலாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

அப்ப வட்டா...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஹாய் பீப்ஸ்,

முள்ளிவாய்க்காலிலும் திருந்தாத கூட்டத்துக்கு இப்போ இன்னொரு மேட்டர் வருகிறது. 

கொரோனாவுக்கு பிறகாவது திருந்திவீர்களா?

பார்க்கலாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

அப்ப வட்டா...

உண்மையில் நான் எவரையும் அவர்களின் personality யில் கைவைக்க விரும்புபவனல்ல. அதனை இழிவானதாக கருதுபவன்.  

என் தகுதி எனக்கு ஓரளவு தெரியும். 

ஆனால் உண்மையை திட்டமிட்டு மறைக்க முயல்வதையும் எழியோரையும் இயலாதோரையும்  மென்மேலும் இழிவுபடுத்த முனைவதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மிகக்  கடுமையா எதிர்ப்பேன். 😎 

  • தொடங்கியவர்

பிரச்சனை : ஒருவர் மதம் மாறுவது இல்லை மாற்ற இன்னொரு பிரிவால் நிர்ப்பந்திக்கப்படுவது 

ஒரு பரிந்துரை செய்யப்பட்ட தீர்வு : 
1. ஒருவர் ஒரு மதமும் சாராமல் இருக்கலாம் 
2. ஒருவர் பல மதங்கள் சார்ந்தும் இருக்கலாம் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

உண்மையில் நான் எவரையும் அவர்களின் personality யில் கைவைக்க விரும்புபவனல்ல. அதனை இழிவானதாக கருதுபவன்.  

என் தகுதி எனக்கு ஓரளவு தெரியும். 

ஆனால் உண்மையை திட்டமிட்டு மறைக்க முயல்வதையும் எழியோரையும் இயலாதோரையும்  மென்மேலும் இழிவுபடுத்த முனைவதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மிகக்  கடுமையா எதிர்ப்பேன். 😎 

அந்த கருத்து யாழிலும், ஊரிலும், இந்து கிறிஸ்தவம் என பிரிந்து அடித்து கொள்வோருக்கு. நீங்கள் அந்த அடைப்பில் இல்லை.

30 minutes ago, ampanai said:

பிரச்சனை : ஒருவர் மதம் மாறுவது இல்லை மாற்ற இன்னொரு பிரிவால் நிர்ப்பந்திக்கப்படுவது 

ஒரு பரிந்துரை செய்யப்பட்ட தீர்வு : 
1. ஒருவர் ஒரு மதமும் சாராமல் இருக்கலாம் 
2. ஒருவர் பல மதங்கள் சார்ந்தும் இருக்கலாம் 🙂 

உங்களுக்கு கட்டாய மத மாற்றத்துக்கும்,  கட்டாயம் அற்ற மத மாற்றத்துக்கும் வித்யாசம் விளங்கவில்லையா?

வன்முறை மூலம் அல்லது வன்முறையை பாவிப்போம் என்ற மிரட்டல் மூலம், அல்லது ஒதுக்கி ஒன்றும் இல்லாமல் ஆக்குவதன் மூலம் மதம் மாற்றுவது கட்டாய மத மாற்றம். இப்போ இந்துக்களுக்கு பாகிஸ்தானில் நடப்பது, போர்துகேசர் காலத்தில் இலங்கையில் நடந்தது இவ்வகை.

உங்களுக்கு இப்போ இல்லாத ஒன்றை நாம் தருகிறோம் என ஆசை வார்த்தை ( பொய்யாகவேனும்) காட்டி தம் மதம் பக்கம் இழுப்பது கட்டாயம் அற்ற மத மாற்றம்.

படிப்பு, சோறு, குறைந்த பட்ச மனிதன் என்ற மரியாதையை நாம் தருகிறோம் வாருங்கள் என கூறி மதம் மாற்றுவதை எதிர்ப்பது ஜனநாயக விரோதம்.

இதற்கு நீங்கள் ஆற்ற கூடிய ஒரே எதிர் வினை உங்கள் மதத்தையும் இல்லாதவர்களுக்கு படிப்பு, சோறு, மனிதன் என்ற மரியாதை இன்ன பிறவை வழங்கும் ஒரு மதமாக மாற்றி அமைப்பது மட்டுமே.

மதங்களில் மீது நம்பிக்கை இல்லாத ஒரு அக்னொஸ்டிக் காக - என் பார்வையில் மதங்கள் எல்லாம் கோக், பெப்சி, இளநீர், பதன்நீர், தேனீர் போல. 

குடிபானத்தின் வேறு வேறு வகைகள்( எல்லாமே உடம்புக்கு கேடு என்பது வேறு).

இதில் ஒரு வகையை குடிப்பதால் நன்மை என நம்பவைக்கப் பட்டு மக்கள் இன்னொன்றை விட்டு அதற்கு தாவும் போது, இதில் சரி பிழை என்று ஏதுமில்லை. 

உங்கள் பிராண்டையும் அதிகம் விற்க வேணும் எண்டால், மற்றைய பிராண்டில் மக்கள் விரும்பும் விடயங்களை உங்கள் பிரான்டிலும் நீங்கள் கொடுக்கலாம். அல்லது கடையை மூடி விட்டு போகலாம்.

நாங்கள்தான் முதலில் இங்கே கடை போட்டோம், எங்கள் வாடிக்கையாளரை அவர்கள் எப்படி சுடலாம் என்று அழுது ஒரு பயனுமில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

மதங்களில் மீது நம்பிக்கை இல்லாத ஒரு அக்னொஸ்டிக் காக - என் பார்வையில் மதங்கள் எல்லாம் கோக், பெப்சி, இளநீர், பதன்நீர், தேனீர் போல. 

எல்லா மக்களும் விரும்பியோ விரும்பாமலோ அருந்தும் Drinks, நீங்கள் குறிப்பிட்டவை.

எல்லா மக்களும், எல்லா மதத்தையும் விரும்பி ஏற்பதில்லை.

  • தொடங்கியவர்
1 hour ago, goshan_che said:

உங்களுக்கு கட்டாய மத மாற்றத்துக்கும்,  கட்டாயம் அற்ற மத மாற்றத்துக்கும் வித்யாசம் விளங்கவில்லையா?

1. எப்பொழுது ஒருவர் ஒரு கருத்தை மூன்று வசனங்களுக்கு மேலாக முன்வைக்கின்றாரோ, அப்போதே அது அவரால் விளங்கப்படுத்த முடியாத விடயமாகின்றது 

2. எப்பொழுது "உங்களுக்கு ... விளங்கவில்லையா?" என எழுதும்பொழுதே கருத்து .....

3.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மாங்குயில் said:

வறுமையில் இருக்கும் மக்களுக்கு, கிறிஸ்தவ மதம் மாற்றும் கோஷ்டிகளோ, அல்லது வேறு எந்த NGO  க்களோ பெரிதாக ஒன்றும் செய்வதில்லை.

அவர்களைப் பாதுகாப்பதும் தொடர்ந்த உதவிகளை செய்வதும், ஸ்ரீலங்கா அரசு மட்டுந்தான்.

நான் வறுமையில் இருந்தேன்.

சிறீ லங்கா அரசின் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் போய் உணவு கேட்டேன். பணம் கேட்டார்கள். இல்லை என்றேன். உணவு தர மறுத்தார்கள்.

அரசாங்கத்தின் கச்சேரி அலுவலகத்தில் சென்று பணம் கேட்டேன். “பணம் தரலாம், கூட்டிப் பெருக்கும் வேலை செய்ய வேண்டும் “ என்று நிர்ப்பந்தித்தார்கள். 

2 hours ago, ampanai said:

பிரச்சனை : ஒருவர் மதம் மாறுவது இல்லை மாற்ற இன்னொரு பிரிவால் நிர்ப்பந்திக்கப்படுவது 

எப்படி இவர்கள் என்னை வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கலாம்? பணமும் உணவும் குடிமகனான எனது உரிமைகள் அல்லவா? ஆகவே, அவர்கள் நிர்ப்பந்தத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், பசிக்கிறதே, என்ன செய்யலாம் என்று நினைத்தபடி வீதியை கடந்த போது, “அப்போஸ்தலிக்க சபை” என்று போர்ட் போட்ட வீடு ஒன்றில் பலரும் கூடி நின்று மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார்கள். “பசிக்கிறது” என்றேன். “யேசு உன்னை நேசிக்கிறார்” என்று சொல்லி உள்ளே அழைத்து சென்று நிறைய உணவு தந்தார்கள். பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் சோத்து பார்சல் கட்டித்தந்தார்கள். 

சுவரில் யேசுவின் படத்துக்கு பக்கத்தில், “நான் பசியோடு வந்தேன். நீ எனக்கு உணவு தந்தாயா?” என்று எழுதி இருந்தது.  “நான் நோய்வாய்ப்பட்டபின் என்னால் வேலை செய்து உழைக்க முடியவில்லை.” என்றேன். “கண்ணதாசன் என்ற சினிமா கவிஞரை பற்றி தெரியுமா?” என்று கேட்டார்கள். “அவரை தெரியாதவர் யார்?” என்றேன் நான். “நாகேஷ் என்ற நகைச்சுவை நடிகரை அறிவாயா?” என்று கேட்டார்கள். “என்ன இப்படி கேட்கிறீர்கள்…அவருடைய படங்கள் பார்த்திருக்கிறேன்” என்றேன். கண்ணதாசன் எழுதிய, “யேசு காவியம்” என்ற புத்தகத்தை காட்டினார்கள். “கண்ணதாசனையும் நாகேஷையும் நிம்மதியாக வாழ வைத்த யேசு உன்னையும் அழைத்திருக்கிறார். மீண்டும் வா, குடும்பத்துடன் வா.” என்றார்கள். 

போகவா, இல்லை நல்லூர் கந்தனிடம் மீண்டும் போகவா? யாராவது ஆலோசனை தருவீர்களா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, கற்பகதரு said:

நான் வறுமையில் இருந்தேன்.

சிறீ லங்கா அரசின் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் போய் உணவு கேட்டேன். பணம் கேட்டார்கள். இல்லை என்றேன். உணவு தர மறுத்தார்கள்.

அரசாங்கத்தின் கச்சேரி அலுவலகத்தில் சென்று பணம் கேட்டேன். “பணம் தரலாம், கூட்டிப் பெருக்கும் வேலை செய்ய வேண்டும் “ என்று நிர்ப்பந்தித்தார்கள். 

பல நோக்கு கூட்டுறவு சங்கம், தர்ம ஆசுப்பத்திரியோ  'தன்சலோ' அல்ல.

அங்கு பணம் கொடுத்துத்தான், உணவு வாங்க வேண்டும். 

அங்குள்ள ஊழியர்கள், அங்குள்ள உணவைத் தூக்கித் தந்தால், அவர்களின் தொழில் போய் விடும்.

கூட்டிப் பெருக்கும் வேலை செய்தால், பணம் கிடைக்கும்தானே!

அந்தப் பணத்தில் வடிவாகச் சாப்பிடலாம்.
 
22 minutes ago, கற்பகதரு said:

 கண்ணதாசன் எழுதிய, “யேசு காவியம்” என்ற புத்தகத்தை காட்டினார்கள். “கண்ணதாசனையும் நாகேஷையும் நிம்மதியாக வாழ வைத்த யேசு உன்னையும் அழைத்திருக்கிறார். மீண்டும் வா, குடும்பத்துடன் வா.” என்றார்கள். 

 கண்ணதாசன் எழுதிய, “யேசு காவியம்” என்ற புத்தகத்தை உங்களுக்கு காட்டும்போது, "அர்த்தமுள்ள இந்து மதம்" என்ற புத்தகத்தையும் அவர்தான் எழுதினார் என்று நினைவூட்டத் தவறி விட்டீர்கள்.

ஆனால், கண்ணதாசனும், நாகேஷும் -  இயேசுவின்பின் போகவில்லை.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் எனது பல பதிவுகளை நீக்கிவிட்டது. கூறப்பட்ட காரணம் என்னால் எழுதப்பட்ட பல பதிவுகள் தனி நபரை இழிவுபடுத்துவதாக இருந்தது. இது கள விதிகளுக்கு முரணானது என்பதாக.

கள உறவுகளுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால்  எமது சமூகத்தின் ஒரு பிரிவினரை, சமூகத்தின் தாழ்த்தப்பட்ட, பலவீனமான பிரிவினரை இழிவுபடுத்துதல் ஏற்றுக்கொள்ளக் கூடியதா ? 😡

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 5:30 PM, Kapithan said:

உங்கள் உண்மையான முகம் இதுதான். 😡

யதார்த்தம் தெரியாமல் கனவுலகில் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு நனவுலகில் நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலோ நேர்மையோ அறிவோ இருப்பதில்லை. உங்களால்  காழ்ப்புணர்வை கொட்டத்தான் முடியும். அதற்குமேல் ஒரு பருக்கை சோற்றைத்தானும் ஈயமாட்டீர்கள்.😜

சோற்றுக்காக மதம் மாறுபவர்களுக்கு அவர்கள் தொடர்ந்து வாழ் நாள் முழுவதும் ஓசியில் சோறு குடுக்கின்றார்களா ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.