Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல் Coronavirus News

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல் Coronavirus News

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?படத்தின் காப்புரிமை EPA

மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?

ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

மார்ச் 6 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதற்கு முந்தைய சில நாட்களில் நோய் கண்டறியப்பட்டது. அதில் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் 16 பேரும் அடங்குவர். பதற்றம் அதிகரித்து வருகிறது.

(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமை AFP

பள்ளிக்கூடங்களிலிருந்து அறிவுறுத்தல்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. சில இடங்களில் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அலுவலகங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த வார நிலவரத்தின்படி நாட்டில் 21 விமான நிலையங்கள், 77 துறைமுகங்களில் 600,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருந்தார்.

Presentational grey line

முறையாக எவ்வாறு கை கழுவலாம்

p086d47x.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு?

 
கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு?
Presentational grey line

அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, இரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது.

இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில், இந்த வைரஸ் பரிசோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இப்போது 15 பரிசோதனை நிலையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. போதிய எண்ணிக்கையில் N 95 முகக்கவச உறைகள் (மாஸ்க்) கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.

``எதிர்பாராத வகையில் தீவிரமாக நோய் பரவ நேரிட்டால், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா முழு அளவில் ஆயத்தமாக உள்ளது. நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம், உன்னிப்பாக நிலைமையை கவனித்து வருகிறோம், விழிப்புடன் இருக்கிறோம்'' என்று ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

இவையெல்லாம் நம்பிக்கையான விஷயங்களாக இருக்கின்றன. ஆனாலும் தீவிரமாக நோய் பரவினால், அதைத் தடுக்க இவை போதுமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

முதலில், விமான நிலையங்கள், துறைமுகங்களில் மருத்துவப் பரிசோதனைகள் செய்தாலும், எந்த அளவுக்கு இதன் தொற்று பரவியிருக்கும் என்பது தெளிவாகத் தெரியாது. வைரஸ் பெருகி நோயாக வெளிப்படுவதற்கான காலம் - தொற்று பரவி அறிகுறிகள் தென்படுவதற்கு இடைப்பட்ட காலம் - 14 நாட்கள் வரை இருக்கும் என்கின்றனர். அது 24 நாள் வரைகூட ஆகலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமை EPA

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளின் போது நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று ஊருக்குச் சென்றவர்கள், தொற்று பரவி அதை தங்களுடைய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குக் கொண்டு சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. ``விமான நிலையத்திற்கு வந்து சேருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது நல்ல விஷயம். அதைத் தொடர வேண்டும். ஆனால், இப்போது அது மட்டும் போதாது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள நடைமுறைகள் மூலமாக, வேறு சில கண்காணிப்பு நடைமுறைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்'' என்று உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறுகிறார்.

Presentational grey line

முகமூடிகள் அணிவது பாதுகாப்பானதா?

p08684y4.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொரோனா வைரஸ்: உண்மையில் முகமூடிகள் பயனுள்ளதா? சந்தேகம் எழுப்பும் நிபுணர்கள்

 
கொரோனா வைரஸ்: உண்மையில் முகமூடிகள் பயனுள்ளதா? சந்தேகம் எழுப்பும் நிபுணர்கள்
Presentational grey line

பொது சுகாதார வசதிகள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தாலும், போலியோவை ஒழித்ததில் மற்றும் 2009ல் பறவைக்காய்ச்சல் தொற்று நோயை சமாளித்ததில், மிக சமீபத்தில் நடந்த உயிர்பலி வாங்கும் நிபா வைரஸ் தீவிர தாக்குதலை சமாளித்தது ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. இந்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்கொண்ட தேசிய போலியோ கண்காணிப்புத் திட்டம் (NPSP), சமுதாய கண்காணிப்பு மற்றும் நேரடி தொடர்பு பரிசோதனை என்ற செயல்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இப்போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இந்த இரண்டு செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன. (சுகாதார அலுவலர்கள் சுமார் 450 பேரை தொடர்பு கொள்கின்றனர் என்றும் அதில் 3 மாநிலங்களில் ஐந்து இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்)

இந்தியாவில் போதிய அளவில் முகக்கவச உறைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றை ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் சளிக் காய்ச்சல் கண்காணிப்புக்கான திட்டம் உள்ளது - H1N1 உள்ளிட்டநான்கு வகையான ப்ளூ வைரஸ்கள் இங்கே காணப்படுகின்றன. ப்ளூ காய்ச்சலுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகளைக் கொண்ட பல மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை வழக்கமாக குளிர்பருவத்தில் காணப்படும் என்றாலும், இந்தியாவின் கோடை மற்றும் மழைக் காலங்களிலும் மக்களைத் தாக்குகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

வைரஸ் இல்லை என்று முதல்கட்ட பரிசோதனையில் தெரிய வந்த நபர்கள் மூலம், சமுதாயத்தில் அடுத்த நிலையில் இந்த வைரஸ் பரவுகிறதா என்பதை, இந்த சளிக் காய்ச்சல் கண்காணிப்புத் திட்டம் மூலம் கண்காணிக்கலாம் என்று நச்சுயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ``இதற்கு முன்பு இப்படி செய்திருக்கிறோம். மீண்டும் அதுபோல செய்ய முடியும். நம்மால் விரைவாக மருத்துவப் பரிசோதனை செய்ய முடியும். அது சாத்தியமானது.பெரும்பாலான கொவிட் -19 தொற்றுகள் லேசானவை'' என்று டெல்லியை சேர்ந்த தொற்று நோய்கள் துறை வல்லுநர் லலித் காந்த் கூறுகிறார்.

மற்ற சவால்கள்

எதிர்பாராமல் தீவிரமாக வைரஸ் பரவினால், இந்தியாவுக்கு வேறு சவால்கள் இருக்கும். இங்குள்ள பொது சுகாதார வசதியின் தரம் ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக உள்ளது. இப்போதுள்ள மருத்துவமனைகளில், திடீரென நோயாளிகள் வருகை அதிகரிப்பு காரணமாக, கூட்டம் அதிகரிக்கலாம். போதிய அளவுக்கு முகக்கவச உறைகள், கையுறைகள், கவுன்கள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தீவிரமாக நோய் பரவினால், அதை சமாளிக்க இந்தியா போராட வேண்டியிருக்கும் என்று நச்சுயிரியல் நிபுணர் ஜேக்கப் ஜான் கூறுகிறார்.

கொரோனா வைரஸ்படத்தின் காப்புரிமை Getty Images

``நாம் இன்னும் நமது நாட்டில் 21வது நூற்றாண்டுக்கான சுகாதார மேலாண்மை நடைமுறையை உருவாக்கவில்லை. எனவே, அந்த இடைவெளியின் பாதிப்பை எதிர்கொண்டாக வேண்டியிருக்கும்'' என்று scroll.in - இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Presentational grey line

அமெரிக்க ராணுவத்தை வியட்நாமில் வீழ்த்திய வைரஸ்: உலகை அச்சுறுத்திய ஃப்ளூ

p086415h.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவை வியட்நாமில் வீழ்த்திய வைரஸ்: உலகை அச்சுறுத்திய ஃப்ளூ - விரிவான தகவல்கள்

 
அமெரிக்காவை வியட்நாமில் வீழ்த்திய வைரஸ்: உலகை அச்சுறுத்திய ஃப்ளூ - விரிவான தகவல்கள்
Presentational grey line

மக்களை கூட்டமாக தனிமைப்படுத்துவது மற்றும் சீனாவை போல பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிப்பது ஆகியவை இந்தியாவில் சாத்தியமானதாக இருக்காது. அதற்குப் பதிலாக `இந்தியா வழியிலான தீர்வு' ஒன்றை நச்சுயிரியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். உரிய காலத்தில் வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து, வகைப்படுத்துவதை உறுதி செய்துவிட்டால், லேசான தொற்று பாதிப்புகளுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறச் செய்யலாம்; தீவிர நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கலாம் என்பதாக அந்தத் திட்டம் உள்ளது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு நிலைகளில் அவசரகால செயல்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும், சுகாதார வசதிகளில் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது

ரயில்வே சமையல் அறைகளில், மாஸ்க் அணிந்த சமையலர்கள் உணவு தயாரிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்படத்தின் காப்புரிமை AFP

சுகாதார சேவை தகவல் தொகுப்பு முழுமையானதாக இல்லை என்பதும் கவலைக்குரியதாக உள்ளது: மரணங்கள் மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதில் கூட இந்தியாவின் செயல்பாடு போதிய அளவுக்கு இல்லை - 77 சதவீத மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மரணத்துக்கான காரணத்தை டாக்டர்கள் பல சமயங்களில் தவறாகக் கணிக்கிறார்கள் என்று டொரன்டோவை சேர்ந்த குளோபல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது சளி காய்ச்சல் தொடர்பான மரணங்கள் பற்றி சிறு சிறு துண்டுகளாக மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன.

பழங்கதைகளும், தவறான எண்ணங்களும்

சமூக வலைதளங்கள் மூலம் பரவும் புரளிகள், பழங்கதைகள் மற்றும் தவறான எண்ணங்கள் இந்தத் தொற்று பற்றிய எதிர்வினையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

முகநூலுக்கு சொந்தமான வாட்ஸப் மூலம் வைரலாகப் பரவி வரும் ஒரு தகவலில் - பூண்டு, இஞ்சி, வைட்டமின் சி மற்றும் எலுமிச்சை ஆகியவை இந்த வைரஸ் தாக்காமல் பாதுகாப்பைத் தரும் என்று சொல்கிறது என்று உண்மை கண்டறியும் Alt News Science தளத்தின் ஆசிரியர் சுமையா ஷேக் தெரிவித்தார்.

``இது சிக்கலானது அல்ல என்பதால் இதுதான் மிகவும் வைரலான வாட்ஸப் தகவலாக உள்ளது. ஏனென்றால் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் `பெரிய மருந்து கம்பெனி ஏமாற்று வேலைகளை' முறியடிப்பதாக உள்ளன. எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டோ அல்லது இயற்கை தீர்வுகள் மூலமோ மக்கள் தாங்களாக சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது என்று மருந்து நிறுவனங்கள் கூறும்'' என்று டாக்டர் ஷேக் கூறுகிறார்.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், அரசின் ஒரு துறை ஒரு ஹோமியோபதி மருந்தை பரிந்துரை செய்துள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான இந்திய நாட்டின் ``மருந்து'' என்று அது குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?படத்தின் காப்புரிமை AFP

யோகா செய்யலாம், கஞ்சா பயன்படுத்தலாம், பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் உட்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் வேகமாகப் பரவுகின்றன. இதுபோன்ற அறிக்கைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் தரக் கூடாது என்று ஹர்ஷ்வர்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார். கைகளைக் கழுவுதல், உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் மருத்துவமனையை நாடுதல் என்ற எளிமையான முன்னெச்சரிக்கை விஷயங்களை கடைபிடிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்படுகின்றன.

இந்தியா விரைவாக செயல்பாட்டு திட்டத்தை உருவாக்கி, வெளிப்படையாக தெரியப்படுத்தி, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த - 24 மணி நேர ஹாட்லைன்கள் ஏற்படுத்தி, உதாரணமாக, இதுபற்றிய நிலவரம் குறித்து மக்கள் அதிக தகவல்கள் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும்.

``நோயின் தீவிரத்தன்மை மாறி வரும் நிலையில் அதற்குப் பொருத்தமான வகையில், ஆதாரங்களின் அடிப்படையிலான, மதிப்பிடப்பட்ட பயன்கள் குறித்த விரைவான திட்டமிடல் தேவைப்படுகிறது. பரந்த நாடு என்ற வகையில், செயல்பாடுகளும் முடிவுகளும் பரவலாக்கப்பட வேண்டும், ஆனால் நன்கு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் சுவாமிநாதன்.

பதற்றம் கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார். ஆனால், இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் இந்தியா மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டியுள்ளது.

Presentational grey line

கொரோனா வைரஸ்: கைகளில் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன?

p085wv49.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொரோனா வைரஸ்: கைகளில் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன

 

கொரோனா வைரஸ்: கைகளில் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன

https://www.bbc.com/tamil/india-51841166

இந்தியாவில் ஒன்றும் மட்டுப்படுத்த முடியாது.  மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை.  சாப்பாடு அங்காடிக்கு பின்னால் உள்ள சுவரில் ஒருவர் மலம் கழிப்பார் முன்னால் உள்ள சுவரில் இன்னொருவர் சிறுநீர் கழிப்பார்.  சுத்தம் சுகம் தரும் என்ற விடயம் இன்னும் அவர்களுக்கு விளங்கவில்லை.  

விளங்க படுத்த முயற்சிக்கும் போது யாராவது காலடியில் துப்புவார்.

நான் நாளைக்கு நான்கு தடைவை டெட்டாலில் தோய்ந்தேன்!😷

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் சீனா போல் குரோனா வைரஸ் பரவினால்  மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் மடிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னப்பா.. எல்லோரும் கழுவி கழுவி ஊத்துறீங்க.. கைகளை நன்றாக கழுவினால் கொரானா தொற்றை தவிர்க்க இயலுமா.? ரெல்  மீ..! 😊

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த அளவில்: தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அவசியமான இடங்களுக்கு மட்டும் போய் வந்து வீட்டில் இருக்க வேண்டும். கைகளையும் முகத்தையும் சோப் போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். நல்ல விட்டமின் சி உள்ள உணவு வகைகள், மஞ்சள் உணவில் சேர்க்கவும். நல்ல ரசம் வைத்து குடிக்கவும். இந்த வைரஸ் 3 - 5 அடி  வரை தான் பாயும். எனவே எட்ட நிண்டு கதைக்கவும். வெக்கை காலம்  வந்தால் அவைகள் பெரிதளவில் இறந்து விடும். இவற்றை தவிர பெருசா நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இறுதியில் கோரோனோ வைரஸ் , KODVID 19 என்று பயன்படுத்தினாலும் இது ஒரு வகை தடிமனே . ஆனால் பொல்லாத தடிமன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆச்சரியம் தரும் விடயம் என்னவென்றால் சென்னை போன்ற நகரங்களில் பிளாட் பாரத்தில்  படுத்து உறங்கும் மக்களை இந்த டெங்கு ,கொர்னோ போன்றவை தாக்குவதில்லையே அவர்கள் கை கழுவ எங்கு போவார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

மண் தின்று வளர்ந்த பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது முன்னோர்களின் கருத்து. சிறு வயதில் இருந்தே எல்லாவற்றயும் எதிர்கொண்டால் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஆனால் இது எல்லோருக்கும் ஒத்து வராது. ஏனெனில் மற்ற பல காரணிகள் இதனுள் அடங்கும். அத்துடன் நடைபாதையில் இருந்து மடிந்தவர்களை  பற்றி யார் கவலை படுகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, பெருமாள் said:

எனக்கு ஆச்சரியம் தரும் விடயம் என்னவென்றால் சென்னை போன்ற நகரங்களில் பிளாட் பாரத்தில்  படுத்து உறங்கும் மக்களை இந்த டெங்கு ,கொர்னோ போன்றவை தாக்குவதில்லையே அவர்கள் கை கழுவ எங்கு போவார்கள் ?

 

அவர்கள் பாக்கியசாலிகள்.

இறைவன் நாதியற்ற மக்களுக்கு அவர்களின் தகுதிக்கு மேற்பட்ட சுமையை இறக்குவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் நாட்டில் குள‌த்தில் ம‌க்க‌ள் குழிப்பின‌ம் அதே குள‌த்துக்கு ப‌க்க‌த்தில் க‌க்கா இருப்பின‌ம் , இருந்த‌ பிற‌க்கு அதே குள‌த்தில் குண்டியை க‌ழுவுவின‌ம் , அந்த‌ குள‌த்தில் புல‌ம் பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் குளிக்க‌னும் நோய் அவ‌ர்க‌ளின் உட‌ம்புக்குள் சீக்கிர‌மே வ‌ந்துடும் , ஆனால் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு அப்ப‌டியான‌ ஊத்தை த‌ண்ணீரில் குளித்து ப‌ழ‌கி போச்சு 😓

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அது என்னப்பா.. எல்லோரும் கழுவி கழுவி ஊத்துறீங்க.. கைகளை நன்றாக கழுவினால் கொரானா தொற்றை தவிர்க்க இயலுமா.? ரெல்  மீ..! 😊

புரட்சி,  இந்தியாவை... கழுவி  ஊத்துவதற்கு சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டு இருந்த எமக்கு,
இந்தத் தலைப்பு... ஒரு வரப்பிரசாதம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

புரட்சி,  இந்தியாவை... கழுவி  ஊத்துவதற்கு சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டு இருந்த எமக்கு,
இந்தத் தலைப்பு... ஒரு வரப்பிரசாதம்.  :grin:

எப்ப‌டா க‌ல் கைக்கு கிடைக்கும் எறிய‌லாம் என்று ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணா காத்து இருந்து இருக்கிறார் 😁 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பையன்26 said:

த‌மிழ் நாட்டில் குள‌த்தில் ம‌க்க‌ள் குழிப்பின‌ம் அதே குள‌த்துக்கு ப‌க்க‌த்தில் க‌க்கா இருப்பின‌ம் , இருந்த‌ பிற‌க்கு அதே குள‌த்தில் குண்டியை க‌ழுவுவின‌ம் , அந்த‌ குள‌த்தில் புல‌ம் பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் குளிக்க‌னும் நோய் அவ‌ர்க‌ளின் உட‌ம்புக்குள் சீக்கிர‌மே வ‌ந்துடும் , ஆனால் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு அப்ப‌டியான‌ ஊத்தை த‌ண்ணீரில் குளித்து ப‌ழ‌கி போச்சு 😓

இப்டியான இடங்களில் இருப்பவர்களுக்கு வருத்தங்கள் வருவது குறைவு பையா.
சகலவிதமான எதிர்ப்பு கிருமிகளும் உடம்பில் இருக்கும்.
எந்தநாளும் கை கால் கழுவி சுத்தம் சுகாதாரம் என்று திரிகிறவர்களுக்கே எந்த நோய் என்றாலும் உடன் தொற்றிக் கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 5:33 PM, nilmini said:

நல்ல விட்டமின் சி உள்ள உணவு வகைகள், மஞ்சள் உணவில் சேர்க்கவும். நல்ல ரசம் வைத்து குடிக்கவும்.

இதில் அல்லது இப்படிப்பட்ட உணவுப் பழக்கவழக்கம், நோய்களை எதிர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது போலவே இருக்கிறது.

விஞ்ஞான அடிப்படையிலான ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் இல்லைத்தான்.

ஏனெனில், இப்போதைய covid-19 இப்படிப்பட்ட உணவுப் பழக்கம் கொண்ட, ஆனால் மருத்துவ சுகாதார வசதிகள் குறைந்த,  ஒப்பீட்டளவில் போசாக்கு குறைந்த சனத்தொகையில் பதிகப்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

சார்ஸ் யிலும் இதே நிலைமை காணப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்

83215152_555042441756801_505013255792911

அதோ மேல உக்காந்து இருக்கான் பாருங்க..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரசினால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளப்போகின்றது இந்தியா- நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா மாறலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என இந்தியாவின் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் ஏனைய பகுதிகளில் வெற்றியளித்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் உலகின் இரண்டாவது அதிக சனத்தொகையை கொண்ட நாட்டில் பலனளிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

corona_india.jpg

இதுவரையில் இந்தியாவில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா தனது எல்லைகளை மூடுவதன் மூலமும் , நாட்டிற்குள் வருபவர்களை பரிசோதனை செய்வதன் மூலமும், நோய் தொற்றிற்கு உள்ளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிக்க முயல்வதன் மூலமும் வைரசினை கட்டுப்படுத்த முயல்கின்றது.

corona_india_i.jpg

இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவை நாளொன்றிற்கு 8000 மாதிரிகளை பரிசோதனை செய்யும்; விதத்தில் தனது திறனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சமூக தொற்று இன்னமும் ஆரம்பிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவையின தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கைகள் மாத்திரம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு போதுமானவையில்லை என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

corona_ind2.jpg

பெருமளவு சனத்தொகையையும் பலவீனமான சுகாதார உட்கட்டமைப்பினையும் கொண்டு நகரங்களில் சுய தனிமைப்படுத்தல்களும்,பரந்துபட்ட பரிசோதனைகளும் சாத்தியமில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே காணப்படுகின்ற போதிலும் ஏப்பிரல் பத்தாம் திகதியளவில் பத்து மடங்கு அதிகரித்து காணப்படும் என வைரஸ் குறித்த மேலதிக ஆராய்ச்சிக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் ஜக்கொப் ஜோன் தெரிவித்துள்ளார்.

இது மிகப்பெரும் பனிச்சரிவு என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஓவ்வொரு வாரமும் இது பெரிதாகிக்கொண்டு செல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அதிக கரிசனைக்குரிய மாநிலமாக மகாராஸ்டிராவே காணப்படுகின்றது.

இந்த மாநிலத்தில் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து மாநில அரசாங்கம் கிட்டத்தட்ட மாநிலத்தை முடக்கியுள்ளது.

india-coronavirus-10.jpg

மகாராஸ்டிரா இரண்டாம் கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ள மாநில சுகாதார அமைச்சர் நாங்கள் தற்போதே கட்டுப்படுத்தாவிட்டால் மூன்றாம் நான்காம் நிலைக்கு சென்றுவிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அளவிற்கு அப்பால் மக்கள் செறிந்து வாழ்வதே முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

தென்கொரியாவினால் நோய் அறிகுறி இல்லாதவர்களை கூட பரிசோதிக்க முடிந்தது,இந்திய சனத்தொகை காரணமாக இது சாத்தியமில்லை என வைத்தியர் சிறிநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

corona_india4.jpg

சமூக தனிமைப்படுத்தல் என்பது உயர் நடுத்தரவர்க்கத்தினர் மத்தியிலேயே சாத்தியம்,நகரபுற வறியவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் இது சாத்தியமில்லை என தெரிவித்துள்ள அவர் பெருமளவானவர்கள் ஒரே வீட்டில் வாழும் நிலையில் இது சாத்தியமில்லை மேலும் அவர்கள் தொழிலிற்கு செல்லும் இடங்களிலும் இது சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/78186

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.