Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ தொற்றால் யாழில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு

April 17, 2021

mahesan.png

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக   யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாண மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம் தொடக்கம் 15ஆம் திகதி மாலை வரையிலான நிலைவரப்படி 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுக்கு இலக்காகி,  12 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 600 பேரளவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், 1784 குடும்பங்களைச் சேர்ந்த 5042 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுக் குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் தொடர்ந்து யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்க மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

https://globaltamilnews.net/2021/159457/

 

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா!

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 386 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்களில் 11 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1210640

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

 
1212-696x398.jpg
 12 Views

இலங்கையில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தொற்று அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தாமதமின்றி விதிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ, “தற்போது பல்வேறு வகையான வைரஸ் வகைகள் உலகில் வேகமாக பரவி வருகின்றன, அண்டை நாடான இந்தியா ஏற்கனவே அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக உலகளாவிய தொற்று எந்த நேரத்திலும் இலங்கையை பாதிக்கலாம். இதன் காரணமாக, நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அதன்படி, தற்போது ஆபத்தில் உள்ள நாட்டில், கொரோனாவை கட்டுப்படுத்த, அரசியல் தலைவர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை அவசியம்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=48132

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிக சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

 
12-65-696x458.jpg
 35 Views

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அதன் பின்னர் உருமாறி வருவது அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை தொற்றுகள் கண்டறியப்பட்டன.

இந்த வரிசையில் இலங்கையில் தற்போது புதிய திரிபு கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்து உள்ளார்.

இந்த வைரஸ் திரிபு இலங்கையில் 3-வது அலையை உருவாக்கக்கூடும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.ilakku.org/?p=48202

 

  • கருத்துக்கள உறவுகள்

72 மணிநேரம் மரக்கறிகளை வாங்க, விற்க முடியாது

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த மத்திய நிலையம் 72 மணிநேரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/72-மணநரம-மரககறகள-வஙக-வறக-மடயத/175-270305

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

 
unnamed-3-1-696x475.png
 9 Views

இலங்கையில்  கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை  ஒரு   இலட்சத்து 517 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்நோயால்  638 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில்  சுமார் இரு மாதங்களின் பின்னர் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, குருநாகல், ஆகிய மாவட்டங்கள் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது 111 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கிலும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை 436 தொற்றாளர்கள் வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். அதே நேரம் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளது. வவுனியாவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 193பேர் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில்  17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று பேரும், குச்சவெளி பிரதேசத்தில் 4 பேரும் கிண்ணியா பிரதேசத்தில் இருவரும், கந்தளாயில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அங்கு இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில்  89ஆவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=48242

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பரவி வருவது இங்கிலாந்து கொரோனா வைரஸ்

இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றானது  இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள B.1.1.7 என்ற உருமாறிய கொவிட் வகையைச்  சேர்ந்ததென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் மருத்துவர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) அதிக பரவும் தன்மை கொண்டது.
 

https://www.virakesari.lk/article/104510

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன -தாதிமார் சங்கம் கவலை

 
12-79.jpg
 22 Views

மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் நெருக்கடி நிலை காணப்படுகின்றது என அரசதாதிமார் அலுவலக சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 103,487 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே நேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 655 ஆக உயர்வடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து “பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்“ என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளிற்கான தேவை அதிகரித்துள்ளது என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து மேலும் தெரிவித்த சமன் ரத்னப்பிரிய, “இந்த நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை காண வேண்டும். அரசாங்கம் தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளை அனுமதித்துள்ளதாக தெரிவித்தாலும் 18 படுக்கைகள் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளன. .
 
மேல்மாகாணத்தில் நாளாந்தம் கொரோனாவைரஸ் 900 நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், தீவிரகிசிச்சை பிரிவுகளில் 193 கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்றன.
 
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், எதிர்காலத்தில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை எங்கு அனுமதிக்கப் போகின்றீர்கள்”  என்றார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வங்கியின் 23 கிளைகள் மூடப்பட்டன – பெருமளவு பணியாளர்களுக்கு கொரோனா

 
003-2-696x348.png
 22 Views

நாடு முழுவதும் உள்ள இலங்கை வங்கியின் 23 கிளைகள் இன்று அதிரடியாக மூடப்பட்டுள்ளன.

வங்கியின் ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து இலங்கை வங்கியின் தலைமையகத்தில் 50 பேருட்பட 70 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே 23 கிளைகளை உடனடியாக மூடிவிடுவதற்கு இலங்கை வங்கியின் தலைமையகம் முடிவெடுத்தது.

குறிப்பிட்ட 23 கிளைகளும் ஏழு மாகாணங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

https://www.ilakku.org/?p=48477

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எகிறிச் செல்லும் கொரோனா – நேற்று மாத்திரம் 1,466 பேருக்கு தொற்றியது

 
coronavirus.600.png
 23 Views

இலங்கையில் நேற்று மாத்திரம் 1,466 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படத் தொடங்கிய நாளிலிருந்து அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது. நேற்றுக் காலையிலிருந்து மாலை வரை 988 தொற்றாளர்களும், மாலையிலிருந்து இரவு வரை 478 தொற்றாளர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 953 ஆக எகிறியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் பட்டியலில் நேற்றும் 6 பேர் பதிவாகியுள்ள நிலையில் நாட்டில் கொரோனாவால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 9 ஆயிரத்து 209 நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளர்களின் சடுதியான அதிகரிப்பால் சிகிச்சை நிலையங்கள் நிரம்பி வழிகின்றன என்று சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=48486

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 19 பேர் கொரோனாவால் பலி

 
12-71-696x387.jpg
 14 Views

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார் படுத்தல்களை மேற் கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 19 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஒரு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

இதற்கு மேலதிகமாக இன்றைய தினம் கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றதனடிப்படையில் தேசிய ரீதியில் மற்றும் கோவிட் தடுப்பு செயலணியின் விதிமுறைகளுக்கு அமைய தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேபோல யாழ்மாவட்ட நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது. தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் பிரச்சனைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தல். அதனை பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக ஆராயப்பட்டது.

குறிப்பாக கடல்கடந்து மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் சிலவேளைகளில் ஏனைய தமிழ் நாட்டு மீனவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது கைதுகளும் இடம்பெற்றுள்ளன.

அதாவது சட்டவிரோத கடல் பயணங்கள் அதேபோல சட்டவிரோத தொடர்பாடல்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மீன்பிடி மக்களுக்கும் அத்தோடு கரையோரப் பகுதி மக்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயப்பட்டது.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் ஆராயபட்டதோடு தனிமைப்படுத்தல் நிலையங்களை தேவைக்கேற்ப அதிகரிப்பதற்குரிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

சுகாதார அமைச்சு , கோவிட் மத்திய நிலையத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தடைகள் வழிகாட்டல்களை தொடர்ச்சியாக பின்பற்றுதல் அதனை மாவட்ட நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து செயற்படுத்தல் தொடர்பாகவும் தீர்மானித்திருந்தோம்.

மேலும் நெரிசல் மிக்க நகரப்பகுதிகளில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில போக்குவரத்து ஒழுங்குகள், சில மாற்றங்களை பின்பற்றுதல் தொடர்பிலும். ஆலோசிக்கப்பட்டது.

வைத்தியசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறிப்பாக ஒக்சிஜன் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதாவது வடக்கு மாகாணத்தில் திருப்திகரமாக இருந்தாலும் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் ஆசனத்திற்கு அமைய பயணிகள் ஏற்றவேண்டும் இருந்தபோதும் தூர இடங்களுக்கான சேவைகளை அந்த விதத்தில் செயற்படுத்தும் போது சேவைகளை அதிகரிப்பது தொடர்பான ஒரு வேண்டுகோளை இலங்கை போக்குவரத்து சபை ,தனியாரிடம் கோரப்பட்டுள்ளது.

அவசர கால நிலைக்கு வடக்கு மாகாணம் தயாராக இருக்க வேண்டும் எனவ அறிவுறுத்தப்பட்டுள்ளது அந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

சகல வழிபாட்டு தலங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு ஆலயத்தில் மதகுரு மற்றும் உபயகாரருடன் மக்களின் பங்கு பற்றுதல் இன்றி ஆலய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

திருமண மண்டபங்களை பொறுத்தவரை சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்பு ஏற்கனவே தேசிய மட்ட சுகாதார வழி காட்டல் களுக்கமைய திருமண மண்டபங்களை இயங்கலாம் என்றும் ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வோரின் அவருடைய பெயர் பட்டியல் உட்பட பல விவரங்களை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் மண்டப உரிமையாளர்கள் அதற்குரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்ற வேண்டும் என இதனை கண்காணிப்பதற்கு பொலிஸ் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல சினிமா திரையரங்கு தொடர்பிலும் ஆராயப்பட்டது. யாழ் மாவட்டத்தில் 25 வீத பங்களிப்புடன் சினிமா திரையரங்கில் செயற்படுத்துவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது.

தற்போதைய கொரோனா நிலைமையில் யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அபாயமான நிலைமையினை எந்த நேரமும் எதிர்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.

யாழ் மாவட்ட மக்கள் இக்கட்டான நிலைமையை கடந்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

ஏற்கனவே அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்.

பொதுமக்கள் தேவைக்கு ஏற்றவாறு உங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யலாம் எனினும் தற்போதைய நிலையில் அரசானது பாரிய முடக்க நிலை அறிவிக்காது எனக் கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் ஒரு அசௌகரியத்தை எதிர்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்தகால அனுபவங்கள் இருக்கின்றன அவற்றை பின்பற்றி செயற்படல் நல்லது. ஆகவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை” என்றார்.

https://www.ilakku.org/?p=48541

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸால்  உயிரிழப்பு அதிகரிப்பு- சவேந்திரசில்வா

 
12-65-696x458.jpg
 21 Views

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸ் காரணமாகவே இலங்கையில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த சவேந்திரசில்வா,

“முன்னரை போல இல்லாமல் தற்போது நோய் தொற்றிற்கு ஆளாகி பத்து முதல் 14 நாட்களிற்குள் பொதுமக்கள் கடும் பாதிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

முன்னைய கொரோனா வைரஸ்களிடமிருந்து மாறுபட்ட விதத்தில் தற்போதைய வைரஸ் செயற்படுகின்றது.  அதிகளவானவர்கள் தொற்றிற்குள்ளாகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன.

முன்னர் கொரோனா  வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து முதல் 14வது நாளில் குணமடையத் தொடங்கினார்கள்.   இதன் காரணமாக உயிரிழப்புகள் குறைவாக காணப்பட்டன. ஆனால் புதிய வைரஸ் வேறுவிதத்தில் செயற்படுவதால் நாளாந்தம் ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதற்கு சமாந்திரமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன” என்றார்.

 

https://www.ilakku.org/?p=48548

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கை பார்த்தால் பிலவு வருடமும் போட்டு பிளந்து எடுக்கப்போகுது போலத்தான் கிடக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கண்டியைச் சேர்ந்த (85 வயது) பெண்ணொருவரும் வெலிமடையைச் சேர்ந்த (72 வயது) பெண்ணொருவரும் பொரலெஸ்கமுவைச்  சேர்ந்த (49 வயது) பெண்ணொருவரும் களுத்துறையைச் சேர்ந்த (77 வயது) ஆண்ணொருவரும் வத்தளையைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் நாவலப்பிட்டியவைச் சேர்ந்த (61 வயது) பெண்ணொருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது. இன்னும் 10 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1213517

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு கொத்தணி ! ஒரு வாரத்தில் 7 ஆயித்திற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் : பல பிரதேசங்கள் முடக்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் அதனை புத்தாண்டு கொத்தணி என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் விபரங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் இவ்வாறு 'புத்தாண்டு கொத்தணி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் மே மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அடுத்த இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட சகல மங்கள நிகழ்வுகளுக்கும் தடை விதித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

 

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாத்தளை , குருணாகல் , மொனராகலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. 

அதற்கமைய நாட்டில் இன்று மாலை வரை 8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

 

இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 1636 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 108 120 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95 975 பேர் குணமடைந்துள்ள போதிலும் , 10 764 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

 

அத்தோடு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாத்தளை , குருணாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகளும் , கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

 

அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, கலேவெல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பொலிஸ் பிரிவுகளும் , குருணாகல் மாவட்டத்தில் பன்னல மற்றும் குருணாகல் பொலிஸ் பிரிவும் , உடபதலாவ கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் கல்முனை மற்றும் ஹெலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பொலன்னறுவை மாவட்டத்தில் எலஹெர மற்றும் சருபிம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் பதுரலிய பொலிஸ் பிரிவில் பொலுன்ன , இங்குருடலுவ, மிடலான, மொரபிட்டிய, பெலெந்த, ஹெடிகல்ல மற்றும் மொரப்பிட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , போதலவ, பஹல, ஹவெஸ்ஸ, மிரிஸ்வத்த, பெலேவத்த வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , தீனியாவெல கிராம உத்தியோகத்தர் பிரிவும் , மீகஹாதென்ன பொலிஸ் பிரிவில் வல்லவிட்ட தெற்கு, மாகந்தவல , கட்டுயகெலே, வெல்மீகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

 

கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று மாலை வரை மாத்தளை , குருணாகல் ,மொனராகலை, களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, காலி மற்றும் பொலன்னறுவை ஆகிய 8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , 6 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரே நாளில் கொழும்பில் மாத்திரம் 500 இற்கும் அதிக தொற்றாளர்கள்

 

நேற்று வியாழக்கிழமை நாட்டில் இனங்காணப்பட்ட 1531 தொற்றாளர்களில் 533 தொற்றாளர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 146 தொற்றாளர்களும் கொழும்பில் ஏனைய பகுதிகளில் 387 தொற்றாளர்களும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

 

ஒருவாரத்தில் 7000 தொற்றாளர்கள்

 

இம்மாதம் 23 ஆம் திகதி முதல் கொவிட் பரவல் 3 ஆம் அலை ஆரம்பித்தது. அன்றிலிருந்து நேற்று வரை நாடளாவிய ரீதியில் 7764 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

கடந்த 23 ஆம் திகதி 969 , 24 ஆம் திகதி 895, 25 ஆம் திகதி 793 , 26 ஆம் திகதி 997 , 27 ஆம் திகதி 1111 , 28 ஆம் திகதி 1466 மற்றும் 29 ஆம் திகதி 1533 என கடந்த ஒரு வாரத்தில் இவ்வாறு 7000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

மேலும் 6 மரணங்கள்

 

கொவிட் தொற்றால் மேலும் 6 மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்னொருவரும் , கண்டி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய பெண்னொருவரும் , வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்னொருவரும் , வெலிமட பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்னொருவரும்,  களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆனொருவரும் , நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்னொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணி ! ஒரு வாரத்தில் 7 ஆயித்திற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் : பல பிரதேசங்கள் முடக்கம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

 
12-2-696x464.jpg
 22 Views

இலங்கையில் அவசியமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முடக்கல் நிலையால் கூட கொரோனா வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் பரவிய பி.1.1.7 திரிவு வைரஸ் பரவலே  இலங்கையில் உயிரிழப்பு மற்றும் கொரோனா தொற்று அதிகரிக்க  காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் படி இலங்கை தற்போது கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது.  ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 406 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களினாலும் கொரோனா தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகின்றது.

முன்னதாக விமான நிலையங்களை மூடுவது குறித்து இதுவரை இறுதி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்திருந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் ஆபத்தான கொரோனாவால், விமான நிலையங்களை மூடுமாறு சுகாதார வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின உதவி செயலாளர் நவீன் டி சொய்சா  கூறுகையில்,

தடுப்பூசிகள் என்பன வைரஸ்பரவலை கட்டுப்படுத்துகின்ற பக்க விளைவுகளை தடுக்கின்ற ஒரு வழிமாத்திரமே. தடுப்பூசிகளை அதிகரிக்கவேண்டும்  சில நாடுகள் இன்னமும் தடுப்பூசிகளை வழங்குவதை ஆரம்பிக்கவில்லை. தடுப்பூசிகளை பெறுவது இலகுவான விடயமல்ல.

இவ்வாறான சுழ்நிலையில் அரசாங்கம் ஏன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்த அலட்சியத்துடன் மக்கள் நடமாடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியது.

நாடு மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள நாட்டை முடக்கவேண்டும்.   பிசிஆர் சோதனைகளை அதிகரிக்காமல் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. அதிகரிக்கும் எண்ணிக்கையை மருத்துவமனைகளால் சமாளிக்க முடியாது” என்றார்

 

https://www.ilakku.org/?p=48655

 

  • கருத்துக்கள உறவுகள்

25 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம்- மரணச் சடங்குகள் தொடர்பில் அரசு விடுத்துள்ள புதிய அறிவிப்பு

 
news-update.jpg
 1 Views

ஒருவர் மரணித்தால் 24 மணித்தியாலத்தில் குறித்த மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா அல்லாத மரணச் சடங்குகளே இவ்வாறு இடம்பெற வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மரணச் சடங்கொன்றில் ஒரே நேரத்தில் ஆகக் குறைந்தது 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=48683

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை வந்தடைகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

இலங்கையை வந்தடைகிறது... "ஸ்புட்னிக்-வி"  தடுப்பூசி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik v) கொரோனா தடுப்பூசியின் 15 ஆயிரம் டொஸ் இலங்கையை வந்தடையவுள்ளது.

குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) இரவு இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து பெறப்படவுள்ள தடுப்பூசிகளின் முதற்கட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1213918

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் 21 பேருக்கு வைரஸ் தொற்று – இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டன

யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-கொடிகாமம்-ப-2/

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பரவும் திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டறிவு

 
IMG_0126-696x394.jpg
 21 Views

இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் திரிபடைந்த வைரஸ் இலங்கையில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது.

திரிபடைந்த B1.617 என்ற கொரோனா வைரசே இவ்வாறு ஒருவரக்குக் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர், கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் நேற்று மாலை வரை இலங்கையில் 15,500 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 84 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=49069

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் – I.H.M.E எச்சரிக்கை

 
1-33.jpg
 27 Views
இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா  தொற்றால் நாளாந்தம் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான (University of Washington’s Institute for Health Metrics and Evaluation) I.H.M.E தெரிவித்துள்ளது.
 
தற்போதைய புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்தசுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்மீ தெரிவித்துள்ளது.
 
செப்டம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் 20876 பேர் கொரோனாவைரசினால் உயிரிழப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஜூன்14 ம் திகதியளவில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும் நாளாந்தம் 264 பேர் கொரோனாவினால் உயிரிழப்பார்கள் என்றும் கூறியுள்ளது. எனினும் பின்னர் இந்த உயிரிழப்புகள் நாளாந்தம் 88 ஆக குறைவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
 
ஜூன் 16 ம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும் என்றும் I.H.M.Eதெரிவித்துள்ளது.
 
இலங்கையில் இது வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, உடையார் said:

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் – I.H.M.E எச்சரிக்கை

ஜனாதிபதி கோத்தாவினால் தான் கோரோனாவை கட்டுப்படுத்த  முடிந்தது என கூறியவர்கள் இப்போது என்ன மன நிலையில் இருப்பார்கள்? 😷

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள் பரவல்!

இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள் பரவல்!

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் பரவிவரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளங்காணப்பட்டுள்ளது.

கொழும்பு, குருநாகல், கண்டி, பொலன்னறுவை, மன்னார் மாவட்டங்களில் சில பகதிகளில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பி.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்தில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நல்லூரை மையமாக கொண்டு குறித்த வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என்ற இலங்கையில் திரிபடைந்த வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேசத்தல் நைஜீரியாவில் பரவும் வைரஸ் திரிபு அடையாளங் காணப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1214487

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த திரியை தொடக்கின சிங்கம் காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்துவிட்டார் அந்த திரி இன்னும் ஓடுது கொரனோ  மட்டும் இன்னும் பெருகிக்கொண்டு அதுபாட்டுக்கு தன்ரை வேலையை செய்யுது .......................................................

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமளிக்கும் வகையில் பரவும் கொரோனா – நேற்று 2,672 பேருக்குத் தொற்றியது

 
covid19-update-600.png
 3 Views

இலங்கையில் நேற்று 2 ஆயிரத்து 672 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை ஆகும். அதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனாத் தொற்றுக்குள்ளான 20 ஆயிரத்து 657 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 1,365 பேர் நேற்று குணமடைந்துள்ளதையடுத்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 463 ஆக உயர்வடைந்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=49157

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.