Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் டெல்டா, அல்பா வைரஸ்கள் அடையாளம் : ஒரேநாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 10 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து 211 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன் 274 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Mayuran.JPG

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், செங்கலடி, வெல்லாவெளி, வாழைச்சேனை, வவுணதீவு, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 7 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் 211 பேராக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இருந்து எழுமாறாக எடுக்கப்பட்ட 3 பேரின்  பிசிஆர் பரிசோதனையின் மாதிரிகள் கொழும்பு ஜெயவர்தன பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனையடுத்து இதில் இருவருக்கு டெல்டா வைரசும். ஒருவருக்கு அல்பா வைரசும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் டெல்டா வைரஸ் தொற்று பரவியிருக்கின்றதுடன் ஒருவாரத்தில் 1982 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் 300 தொற்றாளர்கள் கண்டறியப்படுவதுடன் 5 க்கு மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர்.

ஆகவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் அப்போது தான் தொற்றை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/112169

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்கள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 77 ஆயிரத்து 633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் இதுவரையில், 43 ஆயிரத்து 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களை தொடர்ந்து காலி மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தில் இதுவரையில் 22 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

https://athavannews.com/2021/1236744

வடக்கில் 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா – 164 உயிரிழப்புகள் பதிவு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் ஐவர் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69 வயது) பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த (76 வயது) ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை,  மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உட்பட இருவர், நேற்று காலை உயிரிழந்திருந்தனர்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை  236ஆக அதிகரித்துள்ளது.

https://athavannews.com/2021/1236821

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ‘சுப்பர் டெல்டா’ பரவுகிறதா?: ஆய்வு நடத்தப்படுகின்றது என்கிறார் சந்திம ஜீவந்திர

இலங்கையில் புதிய கொவிட் திரிபுகளுடனா ‘சுப்பர் டெல்டா’ உருவாகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் ஒவ்வாமை, எதிர்ப்புச் சக்தி மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பிரதானியான கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமது ஆய்வுகளின் பிரகாரம் டெல்டா தொற்று பரவுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி கொழும்பில் நூறுவீதம் டெல்டா திரிபின் பரவலே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வெளி மாகாணங்களிலும் இந்தத் திரிபில் பரவல் இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது இங்கு சுப்பர் டெல்டா உருவாகி வருகின்றதா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும், இது குறித்த ஆய்வு அறிக்கையை இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-(3)
 
http://www.samakalam.com/இலங்கையில்-சுப்பர்-டெல்/

  • கருத்துக்கள உறவுகள்

தம்பானே பழங்குடியினர் 44 பேருக்கு கொரோனா தொற்று

தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி உட்பட  குடும்ப உறுப்பினர்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிய வருகிறது.

அவர்கள் சிலர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தம்பானே பழங்குடித் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின்  மனைவி மஹியங்கனை வைத்தியசாலையிலுள்ள கொவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பண்டைய கிராமமான தம்பானே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 115 பேருக்கு நடத்தப்பட்ட  அன்டிஜன் பரிசோதனையின் போது 44 பேருக்கு கொவிட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 44 பேருக்கு கொவிட் இருப்பது கண்டறியப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அண்மையில் கண்டியில் நிறைவடைந்த  தலதா எசலபெறஹராவின் போது தேன் பூஜைக்காக தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவன் குழுவினர் சென்றிருந்தனர். அத்துடன் அவர்களுக்கு ஏற்கவே பெரஹரா கலைஞர்களுக்கு வழங்கிய தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/112271

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அண்மையில் கண்டியில் நிறைவடைந்த  தலதா எசலபெறஹராவின் போது தேன் பூஜைக்காக தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவன் குழுவினர் சென்றிருந்தனர். அத்துடன் அவர்களுக்கு ஏற்கவே பெரஹரா கலைஞர்களுக்கு வழங்கிய தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அட... கண்டி  பெரஹராவில், வாங்கி வந்த கொரோனா.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அட... கண்டி  பெரஹராவில், வாங்கி வந்த கொரோனா.

பெரஹரா நடத்தி கொரோனாவைப் பரப்பிவிட்டு இப்போது வேடர்களையும் அல்லாட வைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பெரஹரா நடத்தி கொரோனாவைப் பரப்பிவிட்டு இப்போது வேடர்களையும் அல்லாட வைத்துள்ளனர்.

தலதா மாளிகை எசல பெரஹராவிற்கு 100 மில்லியன் ரூபா | Virakesari.lk

தலதா மாளிகையை.... 14 நாள் பூட்டி,   
பிரதம பிக்குமாரையும்,  தனிமைப் படுத்தப் போகின்றார்கள் போலுள்ளது.  :grin: 😂 🤣

-மைண்ட் வாய்ஸ்.- :grin:

கிருபன் ஜீ...  இந்தச்  செய்தியை, ஊர்ப் புதினத்தில் போட்டிருக்க வேண்டும்.
கதறி.. இருக்கும். மாறி... இங்கு வந்து போட்டு விட்டீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் 41 முதியவர்களுக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் 48 முதியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.அவர்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் வட்டுக்கோட்டை மற்றும் கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் 98 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்களில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 28 பேரையும் அவர்களது உடல் நிலையைக் கணித்து ஒரு பகுதியினர் வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினர் கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-கைதடி-முதியோ/

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் சிலர் காத்திருப்பதாகவும் முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் என மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்வு செய்தி தடுப்பூசி செலுத்துவதற்கு செல்லாமல் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டார்.(15)

http://www.samakalam.com/பொதுமக்கள்-அனைவரும்-இரண்/

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று யாரோ சமூக வலை ஊடகத்தில் ஒரு செய்தியைப் போட்டிருந்தார்கள். சாராம்சமாக: "யாழில் மரண வீதம் அதிகரிக்கிறது. மக்கள் உடனே பின்வரும் சுதேச மருத்துவர்களை அணுகி உடலின் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் பாணிகளை பெற்றுப் பருக வேண்டும்" என்று ஒரு பட்டியலும் கொடுத்திருந்தார்கள். 

இந்த "சுதேச மருத்துவ பாணிகள்" எனப்படும் பாம்பெண்ணைகளால் கோவிட் தொற்றையும் தடுக்க முடியாது, தொற்று வந்த பின் குணமாக்கவும் முடியாது. இவை நோயெதிர்ப்பை அதிகரிக்கின்றன என்பதும் கூட ஒரு நம்பிக்கை  மட்டுமே.

இந்த நிலையில் மக்களை இந்த ஆயுர்வேத மருந்தகங்களில் வரிசையில் நிற்க வைத்து மேலும் கொரனாவைப் பரப்பும் வேலையைச் செய்கிறார்களா யாழ் சுதேச மருத்துவப் பிரிவினர்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கொரனோ தொடக்கத்தின் பொது கோத்தா திறமையான நடவடிக்கை எடுக்கிறார் என்று கூறியவர்கள் இப்போ பாம்பெண்ணை பற்றி கதைக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கு கொரனோ தொடக்கத்தின் பொது கோத்தா திறமையான நடவடிக்கை எடுக்கிறார் என்று கூறியவர்கள் இப்போ பாம்பெண்ணை பற்றி கதைக்கிறார்கள் .

 பல மாதங்களுக்கு முன் வெற்றியாளன் என மார்தட்டியவர்கள் இன்று குத்துக்கரணம் அடித்த அதிசயத்தை நானும் கவனித்தேன். இவர்களின் குத்துக்கரணம் இன்றா நேற்றா நடக்கின்றது? அன்று தொடக்கம் அல்லவா நடக்கும் கூத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

இங்கு கொரனோ தொடக்கத்தின் பொது கோத்தா திறமையான நடவடிக்கை எடுக்கிறார் என்று கூறியவர்கள் இப்போ பாம்பெண்ணை பற்றி கதைக்கிறார்கள் .

அங்க சனம் மண்ணெண்ணைக்கே வழியில்லாமல் நிக்கிறது….

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, MEERA said:

அங்க சனம் மண்ணெண்ணைக்கே வழியில்லாமல் நிக்கிறது….

காசு இருந்தாலும் சாப்பாட்டு சாமான்கள் இல்லையாம். கொழும்புக்கு மட்டும் ரெலிபோன் எடுக்கிறவைக்கு சிறிலங்கா ஹப்பியாய் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு கொரனோ தொடக்கத்தின் பொது கோத்தா திறமையான நடவடிக்கை எடுக்கிறார் என்று கூறியவர்கள் இப்போ பாம்பெண்ணை பற்றி கதைக்கிறார்கள் .

3 hours ago, குமாரசாமி said:

 பல மாதங்களுக்கு முன் வெற்றியாளன் என மார்தட்டியவர்கள் இன்று குத்துக்கரணம் அடித்த அதிசயத்தை நானும் கவனித்தேன். இவர்களின் குத்துக்கரணம் இன்றா நேற்றா நடக்கின்றது? அன்று தொடக்கம் அல்லவா நடக்கும் கூத்துக்கள்.

நானும் கவனித்தேன்.  இஞ்சை…  நாலைந்து பேருக்கு, உந்த… வருத்தம் இருக்கு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் -யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்

நாட்டில் வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் நான்கு விடுதிகளில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 123 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா நோயாளிகள் உரியநேரங்களில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருக்கின்றது. குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தங்களைத் தாங்களே பார்த்துக்கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும். இவ்வாறு சில நாட்கள் பிந்தி வருகின்றமையால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். அதிகளவான காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்போது கட்டாயம் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக்கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது மிகச் சிறந்தது என தெரிவித்தார்.

20 சடலங்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில் 15 சடலங்கள் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் மேலதிகமாக சடலங்களை வைத்திருக்காமல் எரியூட்டும் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இரண்டு சடலங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள எரியூட்டல் நிலையங்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.

இதுதவிர யாழ். மாவட்டத்தில் உள்ள எரியூட்டும் நிலையத்திலும் சடலங்களை எரியூட்ட கிரமமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள எரியூட்டல் நிலையங்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். மரணமடைந்தவரின் உறவினர்கள் சிலரை எரியூட்டும் பகுதிக்கு அனுப்புவதுடன் உரிய முறையில் உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பலை கையளிக்கும் விடயத்தில் நாங்கள் சரியான முறையில் செயற்படுவோம் என தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/வீடுகளில்-இருக்கும்-நோயா/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நானும் கவனித்தேன்.  இஞ்சை…  நாலைந்து பேருக்கு, உந்த… வருத்தம் இருக்கு. 🤣

சிலருக்கு சில விடயங்களில் திறமை இருக்கும் அதுக்காக தான்தான் உலகிலே அறிவாளி மற்றவன் எல்லாம் முட்டாள் என்று முட்டாள்கள் நினைத்துக்கொள்வார்கள் .இன்னும் சிலருக்கு பிழைகளை கன நேரத்தில் சரி செய்யும் திறமை இருக்கும் ஆனால் எல்லா நேரமும் அந்த அதிர்ஷ்ட்டம் வேலை செய்யாது .இன்னும் சிலருக்கு பல்கலை போனாலே தலையில் கொம்பு முளைத்துவிடும் தான் சொல்வதுதான் சரி என்பார்கள் ஐன்ஸ்டின் உயிர்  பெற்று வந்து சொன்னால் கூட ஏற்க மாட்டார்கள்.

இங்கு கோத்தா கொரனோ வுக்கு எதிரா  திறமையான நடவடிக்கை எடுக்கிறார் என்றபோது கூட நாம் அமைதியாக இருந்தோம் ஆனால் பாருங்கள் உலகிலே பாரிய படையயனியை கொண்ட புலிகளை வென்ற எமக்கு கொரனோ ஒன்றும் பெரிதல்ல என்று அரசியல்வாதிகள் உளற தொடங்க எதிர்கருத்தை வைத்தோம் வழமை போல் புலியின் மீதுள்ள காழ்ப்புணர்வை கொட்ட அந்த சேதிக்கு வக்காலத்து வாங்கினார்கள் .

நாட்டில் மக்கள் எப்படி நடந்துகொள்ளணும் சுகாதார நடைமுறைகள் எப்படி இருக்கனும் கொரனோவால் தாக்கப்பட்டால் என்ன செய்ய வேணும் என்பதை அறிவுறுத்துவதை விட்டு உலகிலே புகழ் பெற்ற ராணுவம் உண்டு கொர்னோவை  இலகுவாக சாமளிப்பம் என்று சொல்ல அது இன்னும் மக்களை அசண்டைதனமாக பொறுப்பற்ற தன்மைக்கு கொண்டுபோகும் என்பதை சொல்லக்கூட முடியவில்லை அடுத்து தென்பகுதியில் கொரனோ நோயாளர்களை வடக்கிற்கு ஏன் கொண்டுவந்தார்கள் என்பதுக்கு யாரிடமாவது காரணம் தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கொழும்புக்கு மட்டும் ரெலிபோன் எடுக்கிறவைக்கு சிறிலங்கா ஹப்பியாய் தான் தெரியும்.

நாங்கள் வன்னிக்குப்போய் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் நின்ற பலருடன் கதைத்தபின்தான் கருத்தெழுதுகிறோம் என்பவர்களுக்கு அவர்களுடன் தொலைபேசி தொடர்புகள்கூட இருக்காதா குசா அண்ணை ?? நாங்கள் பிறகு கடுப்பாகி பெரிய வகுப்பெல்லாம் எடுக்கத்தொடங்கிவிடுவம் கண்டியளோ!!

  • கருத்துக்கள உறவுகள்

சில மதத்தலைவர்களின் போதனைகள் காரணமாக தடுப்பூசிக்கு எதிரான உணர்வுகள் உருவாகியுள்ளன – மருத்துவ நிபுணர்கள் கவலை

—–
தடுப்பூசிக்கு எதிரான அமைப்புகள்நாட்டில் உருவாவது குறித்து அச்சம்;
—–
தடுப்பூசிகள் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என சில பகுதிகளில் மதத்தலைவர்கள் போதிக்கின்றனர்
——————
image_8663554dd9-300x200.jpg
பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரம் செலுத்திக்கொள்ளும் நோக்கத்த்தை தவிர்த்துவிட்டு கிடைக்கின்ற எந்த தடுப்பூசியையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களிற்காக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தவிர ஏனைய 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத 30 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வருமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
image_840c2ce0b1-300x200.jpg
தடுப்பூசிக்கு எதிரான அமைப்புகள்நாட்டில் உருவாவது குறித்த அச்சத்தின் மத்தியிலேயே சுகாதார அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சில மதத்தலைவர்களின் போதனைகள் புராதன எண்ணங்கள் தவறான எண்ணங்கள் காரணமாக தடுப்பூசிக்கு எதிரான உணர்வுகள் தோற்றம் பெற்றுள்ளன.
தடுப்பூசிகள் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என சில பகுதிகளில் மதத்தலைவர்கள் போதிக்கின்றனர்,மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசிகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சிலர் உறுதியாக நம்புகின்றனர்.
இதன் காரணமாக 30வயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வில்லை,டெல்டாவின் புதிய மாறுபாடுகள் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ள சூழலிலும், மேல்மாகணத்திற்கு வெளியே டெல்டா பரவும் நிலையிலும் சுகாதார தரப்பினர் மத்தியில் இது குறித்து கரிசனை உருவாகியுள்ளது.
60வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னமும் 225000 பேர் இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வயதினை சேர்ந்த அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மருத்துவர்கள் மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
vaccination-300x208.jpg
 
தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்,தவறான கருத்துக்களின் பிடியிலிருந்து விடுபடுவது கடினம் எனினும் இதில் உண்மையில்லை,பொதுமக்கள் இந்த தவறான தகவல்களிற்கு பலியாகாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
https://thinakkural.lk/article/135575

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2021 at 18:08, பெருமாள் said:

இங்கு கொரனோ தொடக்கத்தின் பொது கோத்தா திறமையான நடவடிக்கை எடுக்கிறார் என்று கூறியவர்கள் இப்போ பாம்பெண்ணை பற்றி கதைக்கிறார்கள் .

பெருமாள், இதைப் பற்றி உரிய திரிகளில் உங்கள் பொய்களையும் வதந்திகளையும்  போதுமானளவு சுட்டிக் காட்டி விட்டாயிற்று!

பிறகும் ஏன் புதுசாகக் கிளறியள் என்று தெரியவில்லை? உரிய திரிகளில் பதில் சொல்ல முடிந்தால் , ஆதாரங்கள் தர முடிந்தால் தந்திருக்க வேண்டுமல்லோ? கவுண்டரின் வாழைப் பழக் கதை தானே பதிலாக வந்தது?😂

On 6/9/2021 at 06:08, Eppothum Thamizhan said:

நாங்கள் வன்னிக்குப்போய் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் நின்ற பலருடன் கதைத்தபின்தான் கருத்தெழுதுகிறோம் என்பவர்களுக்கு அவர்களுடன் தொலைபேசி தொடர்புகள்கூட இருக்காதா குசா அண்ணை ?? நாங்கள் பிறகு கடுப்பாகி பெரிய வகுப்பெல்லாம் எடுக்கத்தொடங்கிவிடுவம் கண்டியளோ!!

அட நீங்களும் இருக்கிறீங்களே? நேர பேசலாமே? முள்ளந்தண்டென்ன Teflon ஆ😂?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பெருமாள், இதைப் பற்றி உரிய திரிகளில் உங்கள் பொய்களையும் வதந்திகளையும்  போதுமானளவு சுட்டிக் காட்டி விட்டாயிற்று!

பிறகும் ஏன் புதுசாகக் கிளறியள் என்று தெரியவில்லை? உரிய திரிகளில் பதில் சொல்ல முடிந்தால் , ஆதாரங்கள் தர முடிந்தால் தந்திருக்க வேண்டுமல்லோ? கவுண்டரின் வாழைப் பழக் கதை தானே பதிலாக வந்தது?😂

நீங்கள் வயதுக்கு மூத்தவர் உங்கள் தகுதிக்கு என்னை வலிய  இழுத்து மட்டம் தட்டுவது ஒழுக்கமான மனிதர்கள் செய்யும் வேலை அல்ல .

மேலும் கருத்தாடலில் தேடிப்படியுங்கள் எனக்கு நேரம் கிடையாது என்று வார்த்தை இல்லாமல் உங்கள் கருத்தாடல்களை காண்பது அரிது என்னை பொய்யன் என்று தாக்குதல் மேற்கொள்வது உங்கள் பொழுது போக்கு பதிலுக்கு நானும் உங்களை பொய்யர் என்று கூறலாம் அது சபை நாகரிகம் அல்ல நான் பொய் சொன்ன கருத்துக்களை இங்கு உங்களால் நிரூபிக்க பாருங்கள் நல்ல கருத்தாளருக்கு அது அழகு அதைவிட்டு  தேடி படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது கருத்தல்ல .இல்லாவிடின் வழக்கம்போல் நீ பொய்யன்தான் என்று என்று சொல்லி  உங்கள் மனது ஆற வாழ்த்துக்கள் இத்துடன் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

பெருமாள், ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லியிருக்கிறேன் - நான் உங்களுக்கு பதில் தரக் கூடாது என்றால், என்னை இழுத்து நீங்கள் கருத்தெழுதக் கூடாது! அவ்வாறு எழுதினால் நேராகவே உங்களுக்கு பதில் தரும் உரிமை யாழ் விதி முறைப் படி எனக்கிருக்கிறது! - எனவே, உங்களிடமிருந்தே இந்த மரியாதை அட்வைசை நடமுறைப்படுத்துமாறு வேண்டுகிறேன்! 

எது உங்கள் வதந்தி, பொய் என்பதை உரிய திரியில் சுட்டிக் காட்டி விட்டே வந்தேன். அதன் பிறகு கூட அந்த ஊடகவியலாளர் துயர் பகிர்வுத் திரியில் தடுப்பூசிப் பாகுபாடு பற்றி வதந்தி பரப்பும் அளவுக்கு சிறிலங்காக் கோபம் உங்களுக்கு! உங்கள் சிறிலங்காக் கோபம் - அதில் நியாயம் இருந்தாலும்- எங்கள் மக்களுக்கு ஆப்பாக இறங்காமல் இருக்க வேண்டுமென்றே உங்கள் போன்றோரின் பொய்களைச் சவாலுக்குட்படுத்துகிறேன். பொது நன்மை கருதி இது தொடரும்!

எனவே, என் கருத்துகளுக்கு உரிய திரிகளில் மட்டும் நேராக பதில் எழுத இருந்தால் எழுதுங்கள்! சும்மா சின்னப் பிள்ளை மாதிரி திரி திரியாக நொட்டிக் கொண்டிருக்கப் படாது!😊

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

எது உங்கள் வதந்தி, பொய் என்பதை உரிய திரியில் சுட்டிக் காட்டி விட்டே வந்தேன். அதன் பிறகு கூட அந்த ஊடகவியலாளர் துயர் பகிர்வுத் திரியில் தடுப்பூசிப் பாகுபாடு பற்றி வதந்தி பரப்பும் அளவுக்கு சிறிலங்காக் கோபம் உங்களுக்கு! உங்கள் சிறிலங்காக் கோபம் - அதில் நியாயம் இருந்தாலும்- எங்கள் மக்களுக்கு ஆப்பாக இறங்காமல் இருக்க வேண்டுமென்றே உங்கள் போன்றோரின் பொய்களைச் சவாலுக்குட்படுத்துகிறேன். பொது நன்மை கருதி இது தொடரும்!

மற்றோர் கள உறவுடன் மல்லுக்கட்டி விட்டு இருக்கிற ஆத்திரத்துக்கு என்ரை பெயரை இழுக்கிறியல்.

பிழையான கருத்துக்களை யாழில் விதைத்தால் அதை சுட்டி காட்டுவதில் என்ன பிழை ?

அதன் மறு பெயர் நொட்டிக்கொண்டு என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் .

யாழ் நன்மை கருதி என்று நான் போடலாமா ?

🤣

நான் பொய் வதந்தி எழுதி இருந்தால்தானே உங்களால் நிரூபிக்க முடியும் .

எழுதாத ஒன்றைப்பற்றி திரிக்கு திரி பெருமாள் வதந்தி பொய் எழுதுகிறார் என்று சொல்லி கொண்டு திரிகிறீர்கள் இது தனிப்பட்ட தாக்குதல் .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

பெருமாள், பதில் மேலே சொன்னது தான்:103_point_down: !

"...நான் உங்களுக்கு பதில் தரக் கூடாது என்றால், என்னை இழுத்து நீங்கள் கருத்தெழுதக் கூடாது!" 

இந்த நச்சுச் சக்கரத்தை நீங்க தான் உடைக்க வேண்டும்! உரிய திரியில் பதில் சொல்லுங்கள்! ஏனைய திரிகளில் எட்ட நின்று கல்லெறியாமல் தவிருங்கள்!

சும்மா நொட்டிக் கொண்டிருப்பதும் பதில் சொன்னால் முறையிடுவதும் முதிர்ச்சியற்ற செயல்கள் - செய்யுங்கள், ஆனால் மற்றவர் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்!உங்களோடு அலட்டிக் கொண்டிருக்க நேரமில்லை! 

என்னை பொய்யன் வதந்தி யாழில் எழுதுபவன் என்று குற்றம் சொன்ன நீங்கள்  அதற்கு தகுந்த ஆதாரத்தை காட்டுங்கள் என்கிறேன் ? 

இங்கு யாழில் தவறாக ஒரு செய்தி பதியப்பட்டாலோ அல்லது வதந்தி கூறப்பட்டாலோ என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும் என்னை மட்டும் அல்ல நிர்வாகத்தையும் மலினப்படுத்துகிறீர்கள் .

5 hours ago, Justin said:

பெருமாள், இதைப் பற்றி உரிய திரிகளில் உங்கள் பொய்களையும் வதந்திகளையும்  போதுமானளவு சுட்டிக் காட்டி விட்டாயிற்று!

சக கருத்தாளர் மீது வன்மமும் குரோதமும் கொண்ட உணர்வுக்கு மேல் உள்ள உங்கள் எழுத்தே சாட்சி .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.