Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்து மூன்று தினங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்!

Featured Replies

24 minutes ago, MEERA said:

அதுதான் Spanish flu வந்து கொத்து கொத்தாக மடிந்தார்கள்...

எமது நாடுகளில் அவ்வாறான நோய்கள் மூலம் மக்கள் இறக்கவில்லை  என்பதற்கு என்ன ஆதாரம்? 

1950 களில் இந்திய மக்களின் வாழ்ககைக்காலம் வெறும் 36.6 வருடங களாகவும. இலங்கை மக்களின்  வாழ்க்கைக்காலம் 54 வருடங்களாகவும் இருந்து 2016 ல் அது இந்தியாவில் 67 வயதாகவும் இலங்கையில் 74 வயதாகவும் அதிகரித்தது ஏன் ? இந்த கேள்விக்கான விடையை தேடினீகள்  என றால்  உங்களுக்கான பதில் கிடைக்கும். 

Edited by tulpen

  • Replies 89
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

எமது நாடுகளில் அவ்வாறான நோய்கள் மூலம் மக்கள் இறக்கவில்லை  என்பதற்கு என்ன ஆதாரம்? 

1950 களில் இந்திய மக்களின் வாழ்ககைக்காலம் வெறும் 36.6 வருடங களாகவும. இலங்கை மக்களின்  வாழ்க்கைக்காலம் 54 வருடங்களாகவும் இருந்து 2016 ல் அது இந்தியாவில் 67 வயதாகவும் இலங்கையில் 74 வயதாகவும் அதிகரித்தது ஏன் ? இந்த கேள்விக்கான விடையை தேடினீகள்  என றால்  உங்களுக்கான பதில் கிடைக்கும். 

இந்த தரவை எங்கே எடுத்தீர்கள்?...அந்த கால கட்டத்தில் அபிவிருத்தி அடைந்த மக்களது ஆயுட் காலம் எவ்வளவு?
ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்வது யார் மரபு ?...அதை ஏன் இப்ப கடைப்பிடிக்கினம்?
ஒரு நாள் கூட  ஒரு வெள்ளையர்கள் சப்பாத்தை கழட்டி வைத்து போட்டு வீட்டுக்குள் போனதை நான் காணவில்லை 
இஞ்சி,உள்ளி, மஞ்சள்....போன்றவற்றை அதிகமாய் பாவிப்பவர்கள் யார்?...தற்போது  ஏன் எல்லோரும் அதை பாவிக்க தொடங்கி இருக்கினம்?
இப்படி கணக்க இருக்கு ...

நீங்கள் மதத்திற்கு எதிராய் கதைத்தீர்கள் ...இப்ப இனத்திற்கும் எதிராய் கதைக்கிறீர்கள்...மற்றாக்களுக்கு அறிவுரை சொல்வது என்பது வேறு ,எதற்கெடுத்தாலும் நொட்டை பிடிப்பது என்பது வேறு ...அதைத் தான் நீங்கள் செய்கிறீர்கள்.

காலங்கள் போக ,போக ஒருவரது  சராசரி ஆயுட் காலம் கூடிக் கொண்டு தான் போகும் 

எனது இனம் அதன் பாராம்பரியம் தொடர்பாக நான் பெருமை கொள்வதில் எந்தவொரு தப்பும் இல்லை. எனது இனம் தொடர்பாக நான் பெருமை கொள்ளாமல் வேறு யார் பெருமை கொள்ள முடியும்.

ஆனால் அந்தப் பெருமை இன்னொரு சமூகத்தை மட்டம் தட்டுவதன் மூலம் அடைவதாக இல்லாது இருப்பது அவசியம்.

அதேவேளை எல்லா சமூகத்திலுள்ளது போல எமது சமூகத்திலுள்ள குறைபாடுகளையும் இனங்கண்டு அதனை திருத்த முயல்வது நாம் மேன்மேலும் எம்மை நோக்கி பெருமையடைய வைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Quote
21 minutes ago, manimaran said:

நீங்கள் சொல்வது சரி ...ஆனால் இங்கே ஒருத்தரும் பிற இனத்தவரை மட்டம் தட்டவில்லை ...எங்கட இனத்தில் இதெல்லாம் செய்கிறார்கள் என்று பெருமையாய் சொல்லும் போது அடுத்த இனத்தில் இதெல்லாம் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை என்பதையும் சொல்லத் தான் வேண்டும் .
தவிர எம்மினத்தின் குறைகளை மட்டுமே சொல்லித் திரியும் சிலர் நிறைகளை சொல்லிக் காணவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இப்படியே தமிழர்கள் தமக்குள்  கற்பனையில் கிறுக்குத்தனமான இப்படி  எழுதி  தமக்குள்ளேயே பரப்பி தாமே  லைக் போட்டு விட்டு அதன் பின்னர் நிஜ உலகில் அடுத்தவன் நாடுகளில்  அவன்  சொல்லுவதையும் ஏன் சொந்த நாட்டிலேயே அடுத்தவனின் கீழ் அவனுக்கு  அடிமையாக  இருக்க வேண்டியதுதான். 

நீங்கள் சுவிஸ்ஸில் [இருப்பதுபோல, அப்படித்தானே?

25 minutes ago, ரதி said:

எங்கட இனத்தில் இதெல்லாம் செய்கிறார்கள் என்று பெருமையாய் சொல்லும் போது அடுத்த இனத்தில் இதெல்லாம் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை என்பதையும் சொல்லத் தான் வேண்டும் .

அவ்வாறெனில் பல நல்ல விடயங்களை நாம் வாழும் நாடுகளில் உள்ள மற்றய இனங்கள் செய்யும் போது ஆனால் அதனை நாங்கள் செய்யாது இருக்கும் போது அதனை ஒருவர் சுட்டிக்காட்டுவதும் சரியாகத்தானே இருக்கவேண்டும். 

4 hours ago, tulpen said:

1950 களில் இந்திய மக்களின் வாழ்ககைக்காலம் வெறும் 36.6 வருடங களாகவும. இலங்கை மக்களின்  வாழ்க்கைக்காலம் 54 வருடங்களாகவும் இருந்து 2016 ல் அது இந்தியாவில் 67 வயதாகவும் இலங்கையில் 74 வயதாகவும் அதிகரித்தது ஏன் ? இந்த கேள்விக்கான விடையை தேடினீகள்  என றால்  உங்களுக்கான பதில் கிடைக்கும். 

300-400 வருஷங்களா மேலைத்தேய ஆக்கிரமிப்புகளால் வந்த விளைவு!

உள்ளூர் அறிவு, அனுபவம் மிக நீண்டகால ஆக்கிரமிப்புகளால் மழுங்கடிக்கப்பட்டது

ஒரு 1000 வருட தரவுகளை எடுத்தால் உருப்படியா விவாதிக்கலாம். ஓரளவு பதிலும் கிடைக்கலாம்.

கொஞ்சம் விவரமா சிந்திச்சா 11 வருடம் முழு ஆக்கிரமிப்புக்குள்ள இருக்கிற தமிழரின் பின்னடைவுகள் நல்ல பாடமா இருக்கும். 

19 minutes ago, Rajesh said:

குறிப்பாக தஞ்சாவூரிலே அந்த   இன்று கூட     உலகம் வியக்கும் பெரிய   கோவிலை கட்டி ஆழ்கடலில் கப்பல் விட்டு மலேசியா இந்தோனேசியா வரை போய் உலக சக்கரவர்த்தியாக திகழ்ந்தவனும் முட்டாள் சைவ தமிழனே என்பது  பலருக்கு தெரியாது.

52 minutes ago, Rajesh said:

300-400 வருஷங்களா மேலைத்தேய ஆக்கிரமிப்புகளால் வந்த விளைவு!

உள்ளூர் அறிவு, அனுபவம் மிக நீண்டகால ஆக்கிரமிப்புகளால் மழுங்கடிக்கப்பட்டது

30 minutes ago, Dash said:

குறிப்பாக தஞ்சாவூரிலே அந்த   இன்று கூட     உலகம் வியக்கும் பெரிய   கோவிலை கட்டி ஆழ்கடலில் கப்பல் விட்டு மலேசியா இந்தோனேசியா வரை போய் உலக சக்கரவர்த்தியாக திகழ்ந்தவனும் முட்டாள் சைவ தமிழனே என்பது  பலருக்கு தெரியாது.

வல்லமை இருந்தபோது மேலைத்தேயன் எங்களை ஆண்டான். எம்மிடம் வல்லமை இருந்தபோது நாம் மலேசியா, இந்தோனேசியா வரை வென்று சக்கரவர்த்தியாக இருந்தோம்.

நாம் வென்ற மலேசியா, இந்தோனேசியா இன்று எம்மைவிட வளர்ச்சியடைந்ததாக இருக்கும்போது நாம் எப்படி பின்தங்கினோம்?

ஆண்ட இனம் அடிமையாக இருக்கும் நிலைமையை அடைய நாம் எப்படி காரணமாக இருந்தோம் என்று சிந்தித்து செயற்பட்டால் எமது சந்ததி எம்மைவிட தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படும். 

15 minutes ago, manimaran said:

நாம் வென்ற மலேசியா, இந்தோனேசியா இன்று எம்மைவிட வளர்ச்சியடைந்ததாக இருக்கும்போது நாம் எப்படி பின்தங்கினோம்?

அவங்க கிறிஸ்தவ மதமாற்றத்தை அனுமதிக்காம மதவாத நாடுகளாக உருப்பெற்றார்கள். அன்று பலம் பெற்றிருந்த தமிழர் அடக்குமுறைகளை மதமாற்றத்தை கட்டவிழ்த்து விடவில்ல.

அவங்க மதவாத நாடுகளாக உருப்பெற்ற. அதே நேரம் ஏனைய இனங்களை அடக்குவதில் பெருமளவு நேரத்தை செலவளிக்கவில்லை.

கேள்வி கேக்கிறதும் யோசிக்காம கண்ணை மூடிக்கொண்டு கேட்கப்படாது.

அப்ப எமது சந்ததி எம்மைவிட தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படும். 

1 hour ago, Eppothum Thamizhan said:

நீங்கள் சுவிஸ்ஸில் [இருப்பதுபோல, அப்படித்தானே?

ஆம் அப்படித்தான்.

1 hour ago, Rajesh said:

300-400 வருஷங்களா மேலைத்தேய ஆக்கிரமிப்புகளால் வந்த விளைவு!

உள்ளூர் அறிவு, அனுபவம் மிக நீண்டகால ஆக்கிரமிப்புகளால் மழுங்கடிக்கப்பட்டது

ஒரு 1000 வருட தரவுகளை எடுத்தால் உருப்படியா விவாதிக்கலாம். ஓரளவு பதிலும் கிடைக்கலாம்.

கொஞ்சம் விவரமா சிந்திச்சா 11 வருடம் முழு ஆக்கிரமிப்புக்குள்ள இருக்கிற தமிழரின் பின்னடைவுகள் நல்ல பாடமா இருக்கும். 

300- 400 வருடங்களாக அடுத்தவன் ஆக்கிரமிப்பில் இருந்ததே எமது முன்னோர்களின் பலவீனம் தானே. எமது முன்னோர்கள் பலமான இருந்திருந்தால் அடுத்தவன் எமது நாட்டை நெருங்கி இருக்க முடியுமா? ஆகவே வீண் பெருமை பேசாது எமது அடுத்த சந்ததியையாவது ஜதார்த‍த்தை சிந்திக்க செய்வோம். 

10 minutes ago, Rajesh said:

அவங்க கிறிஸ்தவ மதமாற்றத்தை அனுமதிக்காம மதவாத நாடுகளாக உருப்பெற்றார்கள். அன்று பலம் பெற்றிருந்த தமிழர் அடக்குமுறைகளை மதமாற்றத்தை கட்டவிழ்த்து விடவில்ல.

அவங்க மதவாத நாடுகளாக உருப்பெற்ற. அதே நேரம் ஏனைய இனங்களை அடக்குவதில் பெருமளவு நேரத்தை செலவளிக்கவில்லை.

கேள்வி கேக்கிறதும் யோசிக்காம கண்ணை மூடிக்கொண்டு கேட்கப்படாது.

அப்ப எமது சந்ததி எம்மைவிட தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படும். 

கிறிஸ்த்தவ மத மாற்றத்துக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம், அந்த நாடுகள் எல்லம் சைவ/ இந்து சமயத்தை விட்டு விலகி  இஸ்லாமியராகி 600 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அப்படி பார்த்தால். எனவே அவர்கள் மத மாற்றத்தை அனுமதிக்கமல் இல்லை. அதே போல் நாம் வளராமல் இருப்பதற்கு மதம் ஒரு காரணியல்ல, அதற்கு காரணம் எமது பொருளாதார மற்றும் அரசியலில் தவறான தீர்க்கதரிசனமற்ற முடிவுகளே

1 hour ago, Dash said:

குறிப்பாக தஞ்சாவூரிலே அந்த   இன்று கூட     உலகம் வியக்கும் பெரிய   கோவிலை கட்டி ஆழ்கடலில் கப்பல் விட்டு மலேசியா இந்தோனேசியா வரை போய் உலக சக்கரவர்த்தியாக திகழ்ந்தவனும் முட்டாள் சைவ தமிழனே என்பது  பலருக்கு தெரியாது.

இவ்வாறு சிலரால் பெருமை பேசப்படும் அந்த நீங்கள் கூறும் சக்கரவர்தித் தமிழர்கள் தமக்குள் முட்டாள்தனமாக  மோதியது தான் அதிகம்.  அதன் மூலம் தமது இறைமையை இந்திய தேசியத்திடம் இழந்து கொடுத்து அதன் கீழ் வாழ்கிறான். 

Edited by tulpen
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, manimaran said:

அவ்வாறெனில் பல நல்ல விடயங்களை நாம் வாழும் நாடுகளில் உள்ள மற்றய இனங்கள் செய்யும் போது ஆனால் அதனை நாங்கள் செய்யாது இருக்கும் போது அதனை ஒருவர் சுட்டிக்காட்டுவதும் சரியாகத்தானே இருக்கவேண்டும். 

மற்றவர் எதை சுட்டிக்காட்ட முனைகின்றார் என்பதை அவரது ஆரம்பகால கருத்துக்களிலிருந்து வந்தீர்களானால் எல்லாம் புரியும்.

8 minutes ago, tulpen said:

300- 400 வருடங்களாக அடுத்தவன் ஆக்கிரமிப்பில் இருந்ததே எமது முன்னோர்களின் பலவீனம் தானே. எமது முன்னோர்கள் பலமான இருந்திருந்தால் அடுத்தவன் எமது நாட்டை நெருங்கி இருக்க முடியுமா? ஆகவே வீண் பெருமை பேசாது எமது அடுத்த சந்ததியையாவது ஜதார்த‍த்தை சிந்திக்க செய்வோம். 

இத முதல்ல சொல்லி இருக்கணும்.

அளித்த விடை கடுமையா சுட்டபடியா, இப்ப புதுசா அவிழ்த்துவிடுறது நல்ல போக்கு இல்லை.

இப்பிடியான பிற்போக்கால தான் தமிழன் அடிமையா இருக்க வேண்டி வந்திச்சு.

இப்பிடி தொடர்ந்து குதர்க்கம் பண்றதால தான் தமிழன் முன்னேற்றம் மெதுவா இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது முன்னோர்கள் சமூகவியலாக எதை அறிவுறுத்தினார்களோ அதையே இன்று  அறிவியலாளர்களும் மருத்துவர்களும் அறிவுறித்திக்கொண்டிருக்கின்றார்கள்.

2 minutes ago, Rajesh said:

இத முதல்ல சொல்லி இருக்கணும்.

அளித்த விடை கடுமையா சுட்டபடியா, இப்ப புதுசா அவிழ்த்துவிடுறது நல்ல போக்கு இல்லை.

இப்பிடியான பிற்போக்கால தான் தமிழன் அடிமையா இருக்க வேண்டி வந்திச்சு.

இப்பிடி தொடர்ந்து குதர்க்கம் பண்றதால தான் தமிழன் முன்னேற்றம் மெதுவா இருக்கு.

அதை தான் முன்னமே சொன்னேன். அவ்வாறு  அடிமையான இருந்த‍தே எமது முன்னோர்கள் பலவீனமாக இருந்த‍து தான். 

9 minutes ago, Dash said:

அதற்கு காரணம் எமது பொருளாதார மற்றும் அரசியலில் தவறான தீர்க்கதரிசனமற்ற முடிவுகளே

நீங்க இத சும்மா பகிடிக்கு சொல்லாம உண்மையா சொல்றதா இருந்தா, எது எமது சரியான தீர்க்கதரிசனமான  பொருளாதார மற்றும் அரசியலில் முடிவுகளா இருக்கோணும் என்டு சொல்லுங்கோ பாப்பம். 

38 minutes ago, manimaran said:

வல்லமை இருந்தபோது மேலைத்தேயன் எங்களை ஆண்டான். எம்மிடம் வல்லமை இருந்தபோது நாம் மலேசியா, இந்தோனேசியா வரை வென்று சக்கரவர்த்தியாக இருந்தோம்.

நாம் வென்ற மலேசியா, இந்தோனேசியா இன்று எம்மைவிட வளர்ச்சியடைந்ததாக இருக்கும்போது நாம் எப்படி பின்தங்கினோம்?

ஆண்ட இனம் அடிமையாக இருக்கும் நிலைமையை அடைய நாம் எப்படி காரணமாக இருந்தோம் என்று சிந்தித்து செயற்பட்டால் எமது சந்ததி எம்மைவிட தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படும். 

மலேசியாவும் இந்தோனேசியாவும் எம்மை விட அபிவிருத்தி அடைந்த நாடுகள் என்பதே மிகவும் தவறான வாதம். அவர்கள் அடைந்திருப்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமே, அபிவிருத்தி இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலேசியாவின் வளர்ச்சு 1983ம் ஆண்டு மஹத்தீர் மொகமடின் வளர்ச்சிக்குப் பின்னரும் இந்தொனேசியாவின் வளர்ச்சி சுகார்ட்டொவின் வருகைக்குப் பின்னரும் தான் ஆரம்பித்தன.1997ம் ஆண்டு தென்கிழக்காசிய பொருளாதர வீழ்ச்சிக்கு பின்னர் இந்தோனேசியாவின் பொருளாதாரம் மந்த நிலைலெயே உள்ளது. அதே போல் மஹத்தீர் 2003ம் ஆண்டு பதவி விலகிய பின்னர் மலேசியா ஊழல் வாதிகளிண்ட /   மத   வாதிகளிண்ட   கைகளில் விழ மலேசியா மீண்டும் பின் நோக்கி செல்ல 2017இல் மீண்டும் 90 வயதில் மஹத்தீர் பதவிக்கு வந்து தற்காலிகமாக பிரதமராக இருந்து மீண்டும் சீர்படுத்தினார்.

எனவே இந்த இரு நாடுகளினதும் வளர்ச்சி என்பது மஹத்தீர் மற்றும் சுகார்ட்டோ என்ற தனி மனிதர்களால் ஏற்பட்டது மட்டுமே.

2 minutes ago, tulpen said:

அதை தான் முன்னமே சொன்னேன். அவ்வாறு  அடிமையான இருந்த‍தே எமது முன்னோர்கள் பலவீனமாக இருந்த‍து தான். 

எதையோ கேட்டுடு இப்ப எந்தப்பக்கமோ திருப்பி கொண்டு போற பலவீனமான கருத்தாளர்களோட விவாதிக்கிற டைம் வேஸ்ட்.

45 minutes ago, குமாரசாமி said:

மற்றவர் எதை சுட்டிக்காட்ட முனைகின்றார் என்பதை அவரது ஆரம்பகால கருத்துக்களிலிருந்து வந்தீர்களானால் எல்லாம் புரியும்.

அந்த மற்றவர் ஆரம்பத்தில் இருந்து சொல்ல வந்தது எடுத்த‍ற்கெல்லாம் எமது  முன்னோர் என்று புராணம் பாட வேண்டாம். உலகம் முழுக்க மனிதர்கள் இருத்தார்கள் அவர்களுக்கும் முன்னோர்கள் இருந்தார்கள்.உலகம் முழுவதும் வாழ்ந்த முன்னோர்களில் ஒரு சிறு பகுதி தான் எம்து முன்னோர்கள். அவர்களில் நல்ல பழக்ககங்களும் இருந்த‍ன. அடி முட்டாள் தனமான பல பழக்கங்ககளும் இருந்தன. ஆகவே புதிய தலைமுறை தனது அறிவை உபயோகிக்க வேண்டுமே தவிர முன்னோர் சொன்னார் என்று சிந்திக்காமல் மூடத்தனங்களை ஏற்று கொள்ள கூடாது என்றே. தமிழ்கள் உண்மையான பெருமையுடன் வாழவேண்டும் என்பதில் அந்த மற்றவருக்கு அதீத அக்கறை உண்டு. அதனால் தான் வீண் வெட்டி பெருமைகளை வெறுக்கிறார் அந்த "மற்றவர்."

Edited by tulpen

16 minutes ago, tulpen said:

இவ்வாறு சிலரால் பெருமை பேசப்படும் அந்த நீங்கள் கூறும் சக்கரவர்தித் தமிழர்கள் தமக்குள் முட்டாள்தனமாக  மோதியது தான் அதிகம்.  அதன் மூலம் தமது இறைமையை இந்திய தேசியத்திடம் இழந்து கொடுத்து அதன் கீழ் வாழ்கிறான். 

யாருடன் மோதினார்கள் என்றும் எப்பொழுது இந்திய தேசியத்திடம் பறி கொடுத்தார்கள் என்றும் விவரித்தால் நன்றாக இருக்கும்.

இந்தியா உருவாக்கப்பட்டதே பிரித்தானியர் வந்த பிறகு. தமிழர் இராச்சியத்தின் அழிவு ஆரம்பித்தது தெலுங்கர்களின் விஜய நகர பேரரசு வளர தொடங்கிய்ச் பின்னர்.    

உங்கள் வாதத்தில் வரலாற்று பிழைகள் உள்ளன.

Edited by Dash

Just now, Dash said:

யாருடன் மோதினார்கள் என்றும் எப்பொழுது இந்திய தேசியத்திடம் பறி கொடுத்தார்கள்.

இந்தியா உருவாக்கப்பட்டதே பிரித்தானியர் வந்த பிறகு. தமிழர் இராச்சியத்தின் அழிவு ஆரம்பித்தது தெலுங்கர்களின் விஜய நகர பேரரசு வளர தொடங்கிய்ச் பின்னர்.    

உங்கள் வாதத்தில் வரலாற்று பிழைகள் உள்ளன.

நான் கூறியது சோழ, சேர பாண்டிய அரசர்கள் தமக்குள் மோதி பலவீனராகிய காரணத்தினீல் பின்னர் வந்த நாயக்க மன்னருக்கு அடிமையாகி தமிழர் என்ற தேசத்தின் இறையாண்மையை இழந்ததால் தான் பின்னர் வந்த பிரித்தானியர் நாட்டை இந்தியா என்ற ஒரே தேசமாக கையளித்தனர். சேர சோழ பாண்டியர்கள் தமிழர்கள் என்று ஒரளுவக்கு இணைந்து பணியாற்றி இருந்திருந்தால் பலமான  வெவ்வேறு தேசங்களாலனதும் ஒரு ஒருங்கிணைப்பான தமிழர் தேசமாக இருந்திருக்கும்.  தமக்கும் மோதி நாயக்கமன்னர்களை அழைத்து வந்த‍தே தமிழ் மன்னர்கள்தான்.

24 minutes ago, tulpen said:

ஆம் அப்படித்தான்.

300- 400 வருடங்களாக அடுத்தவன் ஆக்கிரமிப்பில் இருந்ததே எமது முன்னோர்களின் பலவீனம் தானே. எமது முன்னோர்கள் பலமான இருந்திருந்தால் அடுத்தவன் எமது நாட்டை நெருங்கி இருக்க முடியுமா? ஆகவே வீண் பெருமை பேசாது எமது அடுத்த சந்ததியையாவது ஜதார்த‍த்தை சிந்திக்க செய்வோம். 

மீண்டும் நாம் மேலை நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு செல்ல காரணம் எமது இயலாமை அல்ல, அவர்களிடம் இருந்த நவீன ஆயுதங்கள். நான் அம்பு வில்லு ஈட்டி என வைத்திருக்க அவர்கள் துப்பாக்கி பீரங்கி என வைத்திருக்க எம்மால் அதை வெல்ல முடியவில்லை.  

நான் மேலே குறிப்பிட்ட வாதத்துக்கு பதில் என்னவாக இருக்குமென எனக்குத் தெரியும், உங்களது பதிலை முன் வையுங்கள்

அதே போல் 2009இல் புலிகள் ஏன் தோற்றகள் அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருக்கவும் இல்லை அதை அவர்கள் கொண்டு வர எடுத்த முயற்சிகள் எல்லம் தோல்வியில் முடிந்தன. ஆனால் இலங்கை அரசு நவீனமயப்படுத்தப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த புலிகளோ 2000ம் ஆண்டு கால ஆயுதங்களை வைத்து போராடினார்கள், அதான் அவர்களது தோல்விக்கு முக்கிய காரணம்

1 minute ago, Dash said:

இங்கு மட்டுமல்ல சமூகவலைத்தளங்களில் தமிழர்கள் பரப்பும் செய்திகளில் பெரும்பாலானவை  எல்லாம் எமது முன்னோர்கள் மிக மிக  திறமையானவரகள். எல்லா விடயங்களிலும் எமது முன்னோர்கள் தான் பெஸ்ட் என்பதே.  நான் கூறுவது அது உண்மை என்றால் மேற்கத்தய நாட்டாவருக்கு முன்மே எமது முன்னோர்கள்  நவீன பீரங்கிகளை கண்டு பிடித்திருப்பார்ளே. அவர்கள் பலவீனமாக இருந்த‍தால் தான் அம்பு , வில்லு, ஈட்டியுடன் மட்டும் இருந்தார்கள். அது தவறானது என்று நான் கூறவில்லை. அவர்களும் எம்மை போல சாதாரண மனிதர்கள் தானே. ஆகவே  நான் திரும்ப திரும்ப சொல்லுவது அந்த முன்னோர்கள் சொன்னனதை 100   கணக்கில் எடுக்காது எமது புதிய தலைமுறை தமது அறிவை பயன் படுத்தி தமது வாழ்க்கையை அடுத்த கட்ட‍த்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.