Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவ போரில் தமிழகம்.. கொரோனாவை துடைத்தெறிய மாவட்ட எல்லைகள் சீல்வைப்பு

Featured Replies

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சி வாகனங்கள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி அறிவித்த " மக்கள் ஊரடங்கு " மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட எல்லைகளை சீல் வைத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கங்களை, ஆங்காங்கே முடக்கினர். ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என எந்த வொரு வாகனமும் ஓடவில்லை.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசிய இயக்கத்தை தவிர, மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை , இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன.

வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கேஸ் நிரப்பும் மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஹோட்டல்களில், பார்சல் சாப்பாடு மட்டும் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வீடுகளை விட்டு வெளியே தேவை இல்லாமல் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெளியே தலை காட்டாமல், வீடுகளுக்குள் முடங்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

view-source:https://www.polimernews.com/dnews/104825/மருத்துவ-போரில்-தமிழகம்..கொரோனாவை-துடைத்தெறியமாவட்ட-எல்லைகள்-சீல்வைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ampanai said:

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை , இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன.

வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கேஸ் நிரப்பும் மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஹோட்டல்களில், பார்சல் சாப்பாடு மட்டும் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வீடுகளை விட்டு வெளியே தேவை இல்லாமல் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

பெட்ரோல், மருந்து, பால் மூன்றை தவிர அனைத்தும் முடக்கி போட்டார்கள்..😢

  • தொடங்கியவர்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெட்ரோல், மருந்து, பால் மூன்றை தவிர அனைத்தும் முடக்கி போட்டார்கள்..😢

இந்த தொற்று முற்று முழுதாக இல்லாமால் போகும் தருவாயில், இந்தியாவில் தமிழகம் முன்னேறக்கூடிய நிலையில் முதலாவது இடத்தில் இருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ampanai said:

இந்த தொற்று முற்று முழுதாக இல்லாமால் போகும் தருவாயில், இந்தியாவில் தமிழகம் முன்னேறக்கூடிய நிலையில் முதலாவது இடத்தில் இருக்கவேண்டும். 

கோரோனோ பற்றி ரீ.வி , ஒலி பெருக்கியை விட துண்டு பிரசுரம் கொடுத்து இருக்கலாம் தோழர் .. பழைய சனம் "கால்ரா" , "கால்ரா" என்டு பதற்றபடுகிின்ம் .. இளவட்டங்கள்  பைக் ரேஸ்  விடுகினம்..👌

maxresdefault.jpg 

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

  • தொடங்கியவர்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோரோனோ பற்றி ரீ.வி , ஒலி பெருக்கியை விட துண்டு பிரசுரம் கொடுத்து இருக்கலாம் தோழர் .. பழைய சனம் "கால்ரா" , "கால்ரா" என்டு பதற்றபடுகிின்ம் .. இளவட்டங்கள்  பைக் ரேஸ்  விடுகினம்..👌

இல்லை நண்பர். அவ்வாறு துண்டு பிரசுரம் கொடுக்கும் ஒருவருக்கே கோவிட்19 இருந்தால்... எண்ணிப்பாருங்கள். அத்துடன், பலர் கையிலும் நவீன கைத்தொலைபேசியும் உள்ளது தானே. தகவல்களை பெறலாம். இதில் இருந்து வெற்றிகரமாக விடுபடலாம். 

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் உரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

மாட்டம்.....நாங்க எஞ்ஜினியர்,டாக்டர்,எக்கவுண்டன்,சாப்வெயர் எஞ்சினியாராக மட்டும் தான் இருப்பம்.
சிலோன் ரமில்ஸ் நாங்களும் அப்படித்தான்...😎

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

  • தொடங்கியவர்

vikatan%2F2020-03%2F5a28a98a-a140-429a-8a3e-6c7614d5857a%2FIMG_20200324_WA0187.jpg

`பதுங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் சேலம் இளைஞர்

https://www.vikatan.com/news/tamilnadu/salem-youth-creates-awareness-about-coronavirus-among-people?artfrm=v3

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ampanai said:

பதுங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் சேலம் இளைஞர்

சங்கீ  கூட்டம் முதலில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை நிப்பாட்டுங்குடா .

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கோரோனோ பரிதாபங்கள் 👍

கோபி - சுதாகர் ..👌 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓணாண்டி அண்ண‌ன் சீமான் எது சொன்னாலும் எங்க‌டைய‌ல் சிரிப்பின‌ம் , இப்போது அண்ண‌ன் சீமான் சொன்ன‌து ந‌ட‌க்க‌ போகுது /

யாழிலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் சீமானை க‌ழுவி ஊத்த‌ , 

பிற‌க்கி விவாத‌ம் என்று வ‌ந்தா ந‌ம‌க்கு அவைக்கும் தேவை இல்லா ச‌ண்டைக‌ள் வ‌ரும் , இதை இத்துட‌ன் முடிப்ப‌து ந‌ல்ல‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

  • தொடங்கியவர்

22 hours ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

அறிவிப்பு விடுக்கப்பட்டுச் சில மணிநேரத்துக்குள் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மணித்தியாலத்துக்கு 10 ஈரோப்படி சம்பளமும் வழங்கப்படும். எதிர்வரும் 3 மாதத்துக்கு இரண்டு இலட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இவர்களை விவசாய இராணுவம் என்று அழைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்புக் கருதி ஒவ்வொருவரும் குறைந்தது 10 மீற்றர் இடைவெளியில் வேலை செய்வ்வவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 4:26 PM, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது.

asparagus அறுவடைக் காலம்.  இந்த நேரம் வழமையாக ரூமேனியா, போலந்து நாடுகளில் இருந்துதான் வேலைக்கு ஆட்களை யேர்மனிய  விவசாயப்  பண்ணைக்கு வேலைக்கு எடுப்பார்கள். கொரோனா அவலத்தில், பாதுகாப்புக் கருதி இந்த வருட அறுவடைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தருவிப்பதை யேர்மனிய உள்துறை அமைச்சு முழுமையாக தடை செய்திருக்கிறது. 

விவசாயப் பண்ணையார்கள் இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யேர்மனியில் உள்ள அகதிகளை,வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை பயன்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kavi arunasalam said:

விவசாயப் பண்ணையார்கள் இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யேர்மனியில் உள்ள அகதிகளை,வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை பயன்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

இப்ப அகதிகளாக வாற சனம் என்ன வேலை செய்யவே வந்தது? வரேக்கையே இஞ்சை இருக்கிற சட்டங்களின்ரை ஓட்டைகளை படிச்சுக்கொண்டுதான் வந்தவையள்.

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வயித்துக்கு சாப்பாடுபோடும் தொழிலை நக்கலடிக்கப்படாது சாமியோவ்😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

13 minutes ago, Kapithan said:

வயித்துக்கு சாப்பாடுபோடும் தொழிலை நக்கலடிக்கப்படாது சாமியோவ்😀

நான் அவையளின்ரை இடத்திலையிருந்து வாய்ஸ் குடுத்தனான்..😁
உண்மையிலையே நான் ஒரிஜினல் தோட்டக்காரன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் அவையளின்ரை இடத்திலையிருந்து வாய்ஸ் குடுத்தனான்..😁
உண்மையிலையே நான் ஒரிஜினல் தோட்டக்காரன் :cool:

எனக்கு விளங்கினது சாமியர். சும்மா தனகினன். அம்புட்டுதே😀

  • கருத்துக்கள உறவுகள்

நான் இண்டைக்கு காடினுக்க ஊரில இருந்து எடுப்பிச்ச முருக்கம் நாத்து நட்டனான். தக்காளி பீற்றூட் கோவா கரட் கீரை எண்டு கொஞ்ச மரக்கறியும் செய்யுறன். கோழி மூண்டு வளக்கிறன். பாப்பம் வாறமாதம் பஞ்சம் எண்டா இத வச்சு வாறமாதத்தை ஓட்டிடுவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.