Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளக்கு

Featured Replies

யாழ் கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்...

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இளைஞன் - சிறு படைப்புருவாக்கம் ஒன்றைச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு. அதாவது, முப்பரிமாணக் குறும்படம் ஒன்றினை உருவாக்குவது. குறும்படம் என்பதைவிட, ஒரு சிறிய 3D Videoclip. முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், வேறு ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது உருவான யோசனை. அதனடிப்படையில், சில 3D உருவங்களை உருவாக்கி வைத்துள்ளேன்.

விளக்கு- இதுதான் அதன் தலைப்பு.

இரண்டு மேசை மின்விளக்குகள் - தமக்குள் உரையாடுவதாக இது அமையும். (Pixar என்கிற நிறுவனம் இதே முறையில் ஒரு 3D படம் ஒன்றை செய்திருக்கிறார்கள்)

சாதாரண விடயம் தொடங்கி - உலக அரசியல், சமூக நிகழ்வுகள் என்று எதைப்பற்றியும் அவை கதைக்கும்.

3D Models (உருவங்கள்) ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன. இனி Animation (அசைவுகள்) மட்டும்தான் செய்யப்படவேண்டும். நான் இப்பொழுது யாழ் உறவுகளிடம் கேட்பது என்னவெனின்:

இக் குறும்படத்திற்கான கதை.

கதை ஒரு நிமிடக் கதையாக இருந்தால் நல்லது. (தனியே நான் மட்டுமே Animation செய்யவேண்டி இருப்பதாலும், Rendering செய்வதற்கான நேரம் அதிகம் தேவைப்படும் என்பதாலும் - முதலில் சிறிதாக முயற்சிக்கலாம் என எண்ணுகிறேன்)

கதை நகைச்சுவையாக அமைந்தால் நல்லது. (இரண்டு மின் விளக்குகள் மனிதர்கள் பற்றி, மனிதர்களின் வாழ்க்கை பற்றி, அரசியல் பற்றி கதைக்கும்போது எப்படி இருக்கும் என்கிற கற்பனை நகைச்சுவையாக அமையின் மிகவும் வரவேற்கத்தக்கது)

இரண்டு மின் விளக்குகள் தமக்குள் உரையாடுவதாகவே கதை அமையவேண்டும்.

பெரிய பெரிய வசனங்களாக இல்லாமல், சிறிய வசனங்களாக இருந்தால் நல்லது.

கதைவசனம் எழுதிய பின்னர், அவற்றை இருவர் கதைத்து ஒலிப்பதிவு செய்யும் வேலையும் செய்யவேண்டும். அதனையும் யாழ் கருத்துக்குள உறவுகளே மேற்கொண்டால் நல்லது.

இது வெற்றியளிப்பதைத் வைத்து ஒரு நிமிடக் கதைகளாகத் தொடந்து செய்யலாம் என எண்ணுகிறோம்.

அந்தவகையில் எமக்குத் தேவை:

1. கதை

2. வசனம்

3. ஒலிப்பதிவு

கூட்டுச்செயற்பாடு வரவேற்கப்படுகிறது. எனவே, யாழ் இணையத்தின் இந்த முயற்சிக்கு யாழ் கருத்துக்கள உறவுகள் உங்கள் பங்களிப்பினைத் தருவீர்கள் என நம்புகிறோம். மேலதிக விபரங்கள் தேவையெனின் எழுதுங்கள்...

இதோ சில காட்சிகள்:

post-89-1179955485.jpg

post-89-1179955496.jpg

post-89-1179955506.jpg

நன்றி

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி இளைஞன் அண்ணா!

இதைச் செய்வதற்கு கூட்டு முயற்சி தான் தேவைப்படுகின்றது. எனவே அனைத்துக்கள உறவுகளிடம் இருந்து உதவிகளைப் பெறல் வேண்டும்

தெளிவான ஒலிப்பதிவுக்கு சயந்தன் செய்யக் கூடியவர். வலைப்பூக்களிலும் அவருக்கு நிறையவே அனுபவம் உண்டு. :rolleyes:

நகைச்சுவையான கதை வசனத்துக்கு நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள். சாத்திரி, டன், ....... என்று நிறையவே..

ஆக, ஜமாச்சிடலாம்.

உங்கள் ஆக்கத்துக்கு பாராட்டுக்கள், எல்லோரும் உதவுவார்கள், என்னால் முடிந்ததை செய்கிறேன்

உங்களிற்கு எப்போது இவை செய்து முடிக்கப்படவேண்டும் (deadline)?

பெண்குரலிற்கு சினேகிதியை கேட்டுப்பார்க்கலாம், ஆண் குரலிற்கு சாத்திரியைப் போடலாம்.

மற்றது, நாங்கள் எல்லாருமே கோமாளிகள், தூயவன் கூறியுள்ளது போல் கதை எழுதக்கூடிய நிறையப்பேர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்..

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்! நன்றி! :rolleyes:

  • தொடங்கியவர்

நன்றி உங்களின் கருத்துக்களுக்கு.

தூயவன் சொன்னது போல் கூட்டுமுயற்சி வேலைப்பழுவைக் குறைக்கும்.

ஆண், பெண் மின்விளக்குகள் என்று நான் இதுவரை யோசிக்கவில்லை. அந்தவகையிலும் யோசித்து கதையை அமைக்கலாம். அல்லது, வயதுபோன மின்விளக்கும், இளம் மின்விளக்கும் உரையாடுவதாகவும் அமையலாம். இது எப்ப முடிக்கவேண்டும் என்றில்லை. யாழ் இணையத்தின் ஒரு முயற்சியாகவே இது மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் முடிந்தளவு வேகமாக செய்ய முயற்சிக்கலாம்.

நகைச்சுவையாக நீங்களும் எழுதுவீர்கள் தானே கலைஞன். மற்றும் சாத்திரி போன்றவர்களும் எழுதுவார்கள். வெறுமனே நகைச்சுவையாக மட்டும் இல்லாமல், ஏதாவது ஒரு கருப்பொருளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

விரைவில் உங்களிடம் இருந்து கதையை எதிர்பார்க்கிறேன். :o

நன்றி

மேசையில் மட்டுமா கதை வரும் இல்லை, தெருவில் வருவது போலவும் கதை எழுத முடியுமா?

  • தொடங்கியவர்

தற்போதைக்கு மேசையில் மட்டும்தான் வானவில்.

  • 1 month later...

இளைஞனின் "விளக்கு" அனிமேசனுக்கான முன்னோட்டக்காட்சி.

யாழ் இணையத்தின் ஒளித்தடம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

பொருத்தம் கருதி இங்கும் மறுபடி இணைக்கப்படுகிறது:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைச்சதுக்கு நன்றி வலைஞன் அண்ணர்.

இளைசன் அண்ணா நல்லா செய்திருக்குறீக. இதுலே கதைக்கிறது யாரு? யாழ்ல உள்ளவையிண்ட குரலே. யாற்ற குரல் ? சொன்னால் நாமளும் தெரிஞ்சுக்குவம். உங்களின் அனிமெசன் தொடர் எப்ப வரும் ?

Edited by இவள்

இன்று உலகம் முழுவதும் திரைப்படம், பொறியியல், மருத்துவம், இராணுவம் போன்ற எல்லாத்துறைகளிலும் முப்பரிமாணக் கலை முக்கியத்துவம் அடைந்துகொண்டிருக்கிறது. தமிழர்களும் இக்கலையில் அல்லது தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

இளைஞனின் இம் முயற்சியை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

இணைச்சதுக்கு நன்றி வலைஞன் அண்ணர்.

இளைசன் அண்ணா நல்லா செய்திருக்குறீக. இதுலே கதைக்கிறது யாரு? யாழ்ல உள்ளவையிண்ட குரலே. யாற்ற குரல் ? சொன்னால் நாமளும் தெரிஞ்சுக்குவம். உங்களின் அனிமெசன் தொடர் எப்ப வரும் ?

ஒன்று சுண்டலின் குரல் போல உள்ளது மற்றயது இளைஞனுடையதா?

  • தொடங்கியவர்

நன்றி கருத்துக்களுக்கு

இந்த முன்னோட்டத்தில் வரும்

கதை வசனம்: இளைஞன்

கதை வசனம் - உதவி: அனிதா

குரல்வளம்: சுண்டல் & இளைஞன்

அடுத்து வர இருப்பது, கலைஞனின் கதை வசனத்தில் கறுப்பு ஜுலை பற்றிய அனிமேசன் படம்.

தொடர்ந்து வர இருக்கும் தொடர்களுக்கு கதை வசனம் எழுத ஆவலுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

அதேபோல், இதன் தயாரிப்பில் இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு போன்றவற்றில் உதவ விரும்புவர்களும் தொடர்பு கொள்ளலாம். இதனை தனியே தமிழில் அல்லாமல், ஆங்கிலத்திலும் செய்ய ஆவல். முக்கியமாக எமது போராட்டம், மக்களின் அவலம் பற்றிய தொடர்களை ஆங்கிலத்திலும் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஆங்கிலத்தில் கதை வசனம் எழுதுவதிலும் உதவிகள் தேவை. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பலவிடயங்களை விளக்குவதற்கு "விளக்கு" நன்றாக உதவும்.. பாராட்டுக்கள்..

  • தொடங்கியவர்

கறுப்பு ஜுலை இன அழிப்புக் கோரப் படுகொலைகளை நினைவு கூர்ந்து

முதலாவது "விளக்கு" முப்பரிமாணக் குறும்படம்:

Edited by இளைஞன்

அனைவருக்கும் வணக்கம்!

விளக்கு என்ற குறும்படத் தொடரை யாழ் இணையத்தில் ஆரம்பித்து இருக்கும் இளைஞனுக்கு முதலில் நன்றிகள்.

இளைஞன் என்னை சிறிது காலத்திற்கு முன் இதற்கு கதை எழுதி தரமுடியுமா என்று கேட்டார். நான் ஓம் என்று சொன்னேன். ஆனால், இங்கு வந்த பிரச்சனை என்னவென்றால்

1. கதையை சுமார் ஒரு நிமிடத்தினுள் எழுதவேண்டி இருந்தது.

2. கதை நகைச்சுவையாக இருப்பதோடு,

3. அதன் மூலம் காத்திரமான ஒரு செய்தியும் தெரிவிக்கப்படவேண்டும்

எனவும் இளைஞன் கேட்டிருந்தார். எனவே, இந்த மூன்று நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கதை ஒன்றை எழுதுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. முதலில் ஒரு கதையை இளைஞனுக்கு எழுதி அனுப்பினேன். ஆனால், அதில் மேற்கூறப்பட்டதில் இரண்டு நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டு இருந்தது. எனவே, மீண்டும் எழுத முயற்சித்தேன். முடியவில்லை. கடைசியில் கதை எழுதி தருவதாய் இளைஞனுக்கு சொல்லி காலத்தை கடத்தி வந்தேன்.

இறுதியில், இளைஞனிடம் நாம் இருவரும் எம்.எஸ்.என் இல் இரு விளக்குகளாக எம்மை உருவகப்படுத்தி அரட்டை அடித்து கதையை எழுதிப்பார்க்கலாம் என ஆலோசனை சொன்னேன். இதன்படி நான் பெரிய விளக்காகவும், இளைஞன் சிறிய விளக்காகவும் எமது எம்.எஸ்.என் பெயர்களையும், படங்களையும் - Display pictures - மாற்றிவிட்டு அரட்டை அடித்து எழுதப்பட்டதே இந்தக் கதை. இங்கு கதை வசனம் நான் என எனது பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கதை வசனத்தின் அரைப்பங்கு இளைஞனுடையது என்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு எனது நன்றிகள்.

நான் கள உறவுகளிடம் அன்புடன் வேண்டிக்கொள்வது என்னவென்றால், உங்களால் மேற்குறிப்பிட்ட மூன்று நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் கதை ஒன்றை எழுதக்கூடியதாக இருந்தால், அதை எழுதியபின் இளைஞனுக்கு அனுப்பி வைத்தால் இந்தக் குறுந்தொடர் தொடர்ந்தும் கிழமைதோறும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு பேருதவியாக இருக்கும்.

வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு கள உறவுகளிற்கு வித்தியாசமான, மிகவும் நகைச்சுவையான, அத்துடன் ஆழமான கருத்துக்களை எடுத்துக்கூறும் சிந்தனைகள் தோன்றக்கூடும். எனவே, இவர்கள் அதை கதையாக எழுதி இளைஞனிடம் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

சகி, சாத்திரி, சினேகிதி, டன், சின்னக்குட்டி, கானாபிரபா, மணி, ரசிகை.. என கதை எழுதக்கூடியவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் தொடர்ந்து சிறந்த கதைகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.

விளக்கு தொடரின் முதலாவது அங்கத்திற்கு நான் கதை எழுதுவதற்கு வாய்ப்புத் தந்த இளைஞனுக்கு மிக்க நன்றி!

என்னால், மேற்குறிப்பிடப்பட்ட மூன்று நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கதை எழுதக்கூடியதாய் இருக்கும் சந்தர்ப்பங்களில் நான் தொடர்ந்தும் விளக்கு தொடருக்கு எனது பங்களிப்பை எதிர்காலத்தில் வழங்குவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நன்றி! :D

விளக்க்கு ஒளிபரப்ப ஆரம்பிச்சிட்டுது. நல்ல பயனுள்ள முயற்சி. ஆரம்பித்து வைத்த இளைஞன், மற்றும் முதல் ஆக்கத்தை தருவதில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றாக இருக்கிறது இளைஞன், கலைஞன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள்.

அன்புடன்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு ஜுலை பற்றிய விவரண உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.பங்குபற்றிய அனைவருக்கும் அடியேனின் பாராட்டுக்கள். :o

நல்லா இருக்கு. சிலவற்ரை வாசிச்சு அறிவதை விட இப்படி குரலில் கேட்பது இலகுவாக புரியக்கூடியதாக இருக்கு. நன்றிகள் எல்லோருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள். எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி. :o:(

நேற்றே இணைச்சிட்டியள் நான் இப்பதான் பாத்தனான்.... சிறப்பாக அமைந்து இருக்கிறது.... பாராட்டுகள்...

இளைஞனின் கதையின் படி இந்த முறை வெளி வந்த விளக்கில் முழுமையாக திருப்தி அடைந்திடவில்லை எண்டு தெரியுது..... அப்ப இதவிட இன்னும் சிறப்பாக வரும் எண்டு நம்பலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

குறும் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

மிகவும் நன்றாக இருந்தது விளக்கு அதை அறிமுகபடுத்திய இளைஞன் அண்ணாவிற்கு வாழ்த்துகள்,இந்த ஆக்கத்தில் பங்கு கொண்ட கலைஞன்,சின்னகுட்டி மற்றும் இளைஞன் அண்ணாவிற்கு பாராட்டுகள்..........சம்பாசணையின் போது இளைஞன் அண்ணாவின் யதார்த்தமான பேச்சு முறை மிகவும் நன்றாக இருந்தது............வாழ்த்துகள்........ :o

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு விளக்க முனையுது.. ஆரம்ப இசை இடியாக செவிகளில் விழ.. எதிர்பார்ப்பு மிகுதியில்... கவனம் எழுகிறது.. கதையோட்டம் கால தேவை கருதி நேரடியா விசயத்தை அணுகுவது... சற்றுச் சலிப்பேற்ற.. விளக்குகளின் அசைவுகளில் அர்த்தம்.. இருக்கும்... ஆனால் சிலவற்றைத் தவிர ( உ+ம்: வாலை எட்டிப் பார்க்கிறது) மற்றவை சாதாரணமான நமக்குப் புரியல்ல..! இருந்தாலும்.. முதற்படைப்பு முதல் முயற்சி.. சுமூகம்..!

விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்காமல்.. வசனங்களின் தன்மைக்கு ஏற்ப தங்களின் பிரகாசத்தை மாற்றி அமைக்கும் என்றால்..கேட்கும் கதையின் தன்மைக்கேற்ப மாறும் மனித முகபாவங்களின் மாற்றம் போல காட்சியிலும் காட்டி கேட்போனின் பார்போனின் உணர்வுகளை நேர்படுத்தி இருக்கலாம் அல்லவா..??!

தொட்டுக்கொண்ட விடயம்.. தொலைந்து போகாமல் காத்தது பற்ற வைத்த விளக்கு..! :lol:

Edited by nedukkalapoovan

//விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்காமல்.. வசனங்களின் தன்மைக்கு ஏற்ப தங்களின் பிரகாசத்தை மாற்றி அமைக்கும் என்றால்..கேட்கும் கதையின் தன்மைக்கேற்ப மாறும் மனித முகபாவங்களின் மாற்றம் போல காட்சியிலும் காட்டி கேட்போனின் பார்போனின் உணர்வுகளை நேர்படுத்தி இருக்கலாம் அல்லவா//

நெடுக்காலைபோவான்... இது என்ன பெயர் அய்யா இது :lol: .. அது இருக்கட்டும்.

நீங்கள் சொன்ன மாதிரி செய்திருந்தால் நன்றாயிருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.

இந்த தொழில் நுட்பம் இலகுவாக செய்யலாமோ இல்லையோ என தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.