Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இந்தியாவிலிருந்து மருந்துப் பொருள்கள் வருகின்றன”

Featured Replies

தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருள்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை (07) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்புப் பற்றி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன:

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை பேணிய வகையில் மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு முடியுமாகியதென்றார். சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் செயற்பட்டதாகவும், வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள், அவர்களுடன் பழகியவர்களை இனம்கண்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டனவென்றார். அதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்களை ஏலவே அறிந்துகொள்வதற்கு முடியுமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

40 மத்திய நிலையங்களில் நோய்த்தடுப்புக்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நோயாளிகள் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, நோயாளிகளைக் கண்காணித்தல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

நாளாந்த சம்பள அடிப்படையில் நிர்மாணத்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்வதற்காக வருகை தந்து கிராமங்களுக்கு செல்ல முடியாதிருக்கின்றவர்களுக்கு குறித்த தொழில் வழங்குநர்களுக்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருள்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை (07) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன. முழு உலகமும் முகம்கொடுத்துள்ள பொருளாதார, சமூக நிலைமைகளை கருத்திற் கொண்டு எமது நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமையொன்று தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக விளக்கிய ஜனாதிபதி, வீழ்ச்சியடைந்துள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவது சம்பந்தமாக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் செற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட 7 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவு எவ்வித பேதமுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கேனும் அது கிடைக்காவிடின் கிராம சேவகரின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ இச்சந்திப்பில் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் கவனம் செலுத்தினர்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

image_9255361b5a.jpgimage_7d4dd37aa1.jpgimage_addf936a52.jpgimage_4c82da3e39.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/இந்தியாவிலிருந்து-மருந்துப்-பொருள்கள்-வருகின்றன/46-248058

  • கருத்துக்கள உறவுகள்

மலேரியா மருந்துகள் வருகின்றன.
அமெரிக்க அதிபரே நல்லது என்று சொல்லி போட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் சங்கிங்க தான் உதவுறாங்க.

31 minutes ago, MEERA said:

கடைசியில் சங்கிங்க தான் உதவுறாங்க.

ஶ்ரீலங்கா அரசிற்கு சங்கிகள்  உதவுவது இது முதற் தடவை அல்ல. சங்கி சுப்பிரமணிய சாமி , சங்கி சோ போன்ற ஏராளமான  சங்கிகள் சிங்கள அரசின் நீண்ட கால நண்பர்கள். ஈழத்தமிழரின் போராட்ட நியாயங்களை கொச்சைப்படுத்தி புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்த இன்று நேற்றல்ல 1980 களில் இருந்தே முழு மூச்சாக சங்கிப்பத்திரிகைகள்  செயற்பட்டன. சந்தேகம்  இருந்தால் கடந்த 40 வருடங்களாக ஈழத்தபிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ஐரோப்பிய பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளைப் பாருங்கள். அதன்  மூலம் சங்கிப் பத்திரிகையாளராகவே இருக்கும். ஆட்சியில்  யார்  இருந்தாலும் இந்திய அரசின் முடிவுகளை எடுக்கும் சவுத் புளொக் சங்கிகளின் கூடாரமே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தரப்பில் யாராவது பங்குபற்றினார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஶ்ரீலங்கா அரசிற்கு சங்கிகள்  உதவுவது இது முதற் தடவை அல்ல. சங்கி சுப்பிரமணிய சாமி , சங்கி சோ போன்ற ஏராளமான  சங்கிகள் சிங்கள அரசின் நீண்ட கால நண்பர்கள். ஈழத்தமிழரின் போராட்ட நியாயங்களை கொச்சைப்படுத்தி புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்த இன்று நேற்றல்ல 1980 களில் இருந்தே முழு மூச்சாக சங்கிப்பத்திரிகைகள்  செயற்பட்டன. சந்தேகம்  இருந்தால் கடந்த 40 வருடங்களாக ஈழத்தபிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ஐரோப்பிய பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளைப் பாருங்கள். அதன்  மூலம் சங்கிப் பத்திரிகையாளராகவே இருக்கும். ஆட்சியில்  யார்  இருந்தாலும் இந்திய அரசின் முடிவுகளை எடுக்கும் சவுத் புளொக் சங்கிகளின் கூடாரமே. 

இந்து ராமை விட்டுடியல்....

விகடன் ஒரு சங்கி குழுமம் தான்.... ஆனால் தமிழ் பத்திரிகை.... வியாபாரம் தமிழர்களிடேயே என்பதால், ஆரம்பத்தில் இருந்தே அடக்கி வாசிக்குது...

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

தமிழர் தரப்பில் யாராவது பங்குபற்றினார்களா?

நடுவில இளையண்ணர். வலது பெரியண்ணர். இடது சின்னனர்... அருமை... தேர்தல் ஒத்திவைக்கவேண்டியதா போட்டுது.... இல்லையெண்டா சமல், நாமல் எண்டு குடும்பமே கும்மி அடிக்கும்..

ரணிலை காணவில்லையே..

Edited by Nathamuni

12 minutes ago, Nathamuni said:

இந்து ராமை விட்டுடியல்....

விகடன் ஒரு சங்கி குழுமம் தான்.... ஆனால் தமிழ் பத்திரிகை.... வியாபாரம் தமிழர்களிடேயே என்பதால், ஆரம்பத்தில் இருந்தே அடக்கி வாசிக்குது...

உண்மை.  இந்து ராம் சங்கி 1978 ல் மொராஜி தேசாய் பிரதமராக இருக்கும் போதே ஈழதமிழருக்கு எதிராக விஷம் க‍க்க தொடங்கி விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

நடுவில இளையண்ணர். வலது பெரியண்ணர். இடது சின்னனர்... அருமை... தேர்தல் ஒத்திவைக்கவேண்டியதா போட்டுது.... இல்லையெண்டா சமல், நாமல் எண்டு குடும்பமே கும்மி அடிக்கும்..

ரணிலை காணவில்லையே..

ரணில் வந்தால் சுஜித்த் வரமாட்டார் எல்லோ? 😁

1 hour ago, குமாரசாமி said:

தமிழர் தரப்பில் யாராவது பங்குபற்றினார்களா?

தமிழர் தரப்பு (சம்மந்தன்-சுமந்திரன் கும்பல்) இப்போது அத்தியாவசிய பொருட்கள் இன்றி பட்டினி இருக்கும் தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

அவர்கள் கடந்த தேர்தலில் சஜித்தை ஆதரிக்க பெற்றுக்கொண்ட பணத்தை இன்னமும் எண்ணி முடியவில்லை எனத் தெரிகிறது.

  • தொடங்கியவர்

இலங்கைக்கான இந்தியாவின் அன்பளிப்பு
Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 05:28 - 0      - 42


கொவிட் – 19 நெருக்கடி நிலையில், 10 தொன் உயிர்க்காக்கும் அத்தியாவசியமான மருந்துத் தொகுதியை இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

image_408f0c4d1d.jpg

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்தத் தொகுதி மருந்துப்பொருள்கள் ஏயார் இந்தியா விசேட விமானம் ஒன்றின் மூலமாக இன்று  இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

இது தொடர்பாக, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“ எவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில்  இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைகிறது. உள்நாட்டில் காணப்படும் சவால்கள், கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் தமது வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கைக்கான-இந்தியாவின்-அன்பளிப்பு/175-248131

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.