Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்

Featured Replies

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

mulaitivu-death.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்த நிலையில் அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே, அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபர் கடந்த (05-04-2020) இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று முன்தினம் (06-04-2020) காலை அவர் எழுந்து வராத நிலையில் அங்கு இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று குறித்த நபரின் உடலை பார்வையிட்டதோடு உயிரிழந்தவருடைய உறவினர்கள் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் உடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது .

குறித்த மருத்துவ பரிசோதனைகள் இன்றையதினம் (08-04-2020) இடம்பெறவுள்ளன. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 2016 ஆம் ஆண்டு முதல் குறித்த விகாரையில் இறந்த விகாராதிபதியுடன் கடமையாற்றி வந்த ஜனகபுர பகுதியை சேர்ந்த கமகே நிமால் கருணாரத்ன என்கின்ற 47 வயதுடைய நபர் ஆவார் .

இவருடைய தங்கையார் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவுப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/79549

முதலே வந்த செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரோட, கண தெய்யோட விளையாடின சும்மா விடுவாரே? 🤗

1 hour ago, Nathamuni said:

அப்படியா நாதமுனி! அப்ப பத்து வருசத்துக்கு முன்னர் லடசக்கணக்கான எமது  மக்கள் இதே ஏரியாவிலை தானே கொல்லப்பட்டாங்க. அப்ப ஏங்க போனார் இந்த பிள்ளையார்?   ஓ அந்த ரைம. அவர் வேற ஏரியாவுக்கு பொறுப்போ!  அல்லது தன்னோட சேட்ட விட்டவர்களை கொல்லுற பேட்டை பிஸ்தாவா அவர். 

சிங்களவரிடம் பத்ரகாளி, முனீஸ்வரன் தொடர்பாக மிகவும் பயம் உள்ளது என்பது உண்மை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அப்படியா நாதமுனி! அப்ப பத்து வருசத்துக்கு முன்னர் லடசக்கணக்கான எமது  மக்கள் இதே ஏரியாவிலை தானே கொல்லப்பட்டாங்க. அப்ப ஏங்க போனார் இந்த பிள்ளையார்?   ஓ அந்த ரைம. அவர் வேற ஏரியாவுக்கு பொறுப்போ!  அல்லது தன்னோட சேட்ட விட்டவர்களை கொல்லுற பேட்டை பிஸ்தாவா அவர். 

அதில்லை பாருங்கோ... அங்க தேவாலயங்களில் ஒதுங்கின ஆக்கள் தான் தப்பிடினம்...

இதுதான் நீங்கள் எதிர்பார்க்கிற பதில் எண்டால் எனக்கு பிரச்னை இல்லை பாருங்கோ... உங்கண்ட மத (ம் ) பிடிச்ச விவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை.

பிள்ளையார் கோவிலைப் பிடித்து அதுக்குள்ள பங்க்சலையை கட்டி, அதுக்குள்ளயே பிக்கரையும் போட்டு எரித்தால்..... சாபம் தான் விழும்....

6 minutes ago, Nathamuni said:

நான் கேட்ட சிந்திக்க கூடிய கேள்வி தேவாலயத்திற்கும் பொருந்தும் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். அப்படி இருந்தும் ஏதோ எதிர் கட்சிகாரனுக்கு பதில் சொல்லுமா போல தேவாலயத்தை அதுக்குள்ள இழுகிறீங்க. 

பிள்ளையார் கோவிலை பிடித்து அதுக்குள்ள பஞ்சாலையை கட்டின உடனே பிடிக்கிற சாபம் பிடிக்கும் என்டு சொல்லுறீங்க.  1960 களிலை இருந்தே அந்த பிள்ளையார வணங்கிற பக்தர்களின்ற காணிகளை பறித்து குடியேற்றங்களை மேற்கொண்டு அவங்கட நிலத்திலேயே அவங்களை சிறுபான்மை மக்கள் ஆக்கேக்க  ஏன் சாபம் பிடிக்கேல்லை என்று கேட்கிறது நியாயம் தானே. 

  • தொடங்கியவர்
4 hours ago, ampanai said:

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் ?  உண்மை வெளிவராமல் போகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

நான் கேட்ட சிந்திக்க கூடிய கேள்வி தேவாலயத்திற்கும் பொருந்தும் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். அப்படி இருந்தும் ஏதோ எதிர் கட்சிகாரனுக்கு பதில் சொல்லுமா போல தேவாலயத்தை அதுக்குள்ள இழுகிறீங்க. 

பிள்ளையார் கோவிலை பிடித்து அதுக்குள்ள பஞ்சாலையை கட்டின உடனே பிடிக்கிற சாபம் பிடிக்கும் என்டு சொல்லுறீங்க.  1960 களிலை இருந்தே அந்த பிள்ளையார வணங்கிற பக்தர்களின்ற காணிகளை பறித்து குடியேற்றங்களை மேற்கொண்டு அவங்கட நிலத்திலேயே அவங்களை சிறுபான்மை மக்கள் ஆக்கேக்க  ஏன் சாபம் பிடிக்கேல்லை என்று கேட்கிறது நியாயம் தானே. 

உங்கட குதர்க்க கேள்விக்கு பதில் சொல்ல வெளிக்கிட்டால்....

கடைசீல, கடவுள் ஏன் என்னை ஆம்பிளயாக/பெம்பிளையாக படைத்தான்.... ஏழையாக படைத்தான்... 

சிங்களவனாக இல்லாமல்.... ..... தமிழனாக பிறக்க வைத்தான்... என்று போய்....

கிறிஸ்தவ ஐரோப்பியன் நாட்டினை பிடித்து ஆள விட்டுடானே தீவில் சிங்களவனும், தமிழனும், இஸ்லாமியனும் வணங்கிய கடவுள் என்று வந்து நிப்பியள். 

சில இயற்கை நியதி படி நடக்கும். போர்த்துகேயன் கிளம்பியதுபோல ஒல்லாந்தனும் கிளம்ப வேண்டி வந்தது. அதுபோல பிரிட்டிஷ்காரனும் கிளம்பினான். அதேபோல சிங்களவனுக்கு கிளம்பும் காலமும் வரும்.

ஜின்னாவின் பாக்கிஸ்தான் உதாரணம் இருந்தும், எங்களது படித்த மரமண்டைகள், சிங்களவனை நம்பியதும் இயற்கை நியதி. 

புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவு, அவர்களால் தவிர்த்திருக்க படக் கூடியது என்பது எனது தனிப்படட அபிப்பிராயம்.
 
அதனை  புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் பேசி பயன் இல்லை.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

"அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.:

 உண்மை வெளிவராமல் போகலாம் 😞 

2 minutes ago, Nathamuni said:

சில இயற்கை நியதி படி நடக்கும். போர்த்துகேயன் கிளம்பியதுபோல ஒல்லாந்தனும் கிளம்ப வேண்டி வந்தது. அதுபோல பிரிட்டிஷ்காரனும் கிளம்பினான். அதேபோல சிங்களவனுக்கு கிளம்பும் காலமும் வரும்.

ஜின்னாவின் பாக்கிஸ்தான் உதாரணம் இருந்தும், எங்களது படித்த மரமண்டைகள், சிங்களவனை நம்பியதும் இயற்கை நியதி. 

அருமையான கருத்து !

20 minutes ago, Nathamuni said:

உங்கட குதர்க்க கேள்விக்கு பதில் சொல்ல வெளிக்கிட்டால்....

கடைசீல, கடவுள் ஏன் என்னை ஆம்பிளயாக/பெம்பிளையாக படைத்தான்.... ஏழையாக படைத்தான்... 

சிங்களவனாக இல்லாமல்.... ..... தமிழனாக பிறக்க வைத்தான்... என்று போய்....

கிறிஸ்தவ ஐரோப்பியன் நாட்டினை பிடித்து ஆள விட்டுடானே தீவில் சிங்களவனும், தமிழனும், இஸ்லாமியனும் வணங்கிய கடவுள் என்று வந்து நிப்பியள். 

சில இயற்கை நியதி படி நடக்கும். போர்த்துகேயன் கிளம்பியதுபோல ஒல்லாந்தனும் கிளம்ப வேண்டி வந்தது. அதுபோல பிரிட்டிஷ்காரனும் கிளம்பினான். அதேபோல சிங்களவனுக்கு கிளம்பும் காலமும் வரும்.

ஜின்னாவின் பாக்கிஸ்தான் உதாரணம் இருந்தும், எங்களது படித்த மரமண்டைகள், சிங்களவனை நம்பியதும் இயற்கை நியதி. 

புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவு, அவர்களால் தவிர்த்திருக்க படக் கூடியது என்பது எனது தனிப்படட அபிப்பிராயம்.
 
அதனை  புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் பேசி பயன் இல்லை.

ஜதார்தமான சிந்தனை பூர்வமான தங்கள் இந்த  பதிலுக்கு நன்றி. இவ்வாறான  சிந்தனைகள் தான் எமது எதிர்காலத்திற்கு நல்லது. ஆனால் படித்த மரமண்டைகள் சிங்களவனை நம்பியது இயற்கை நீதியல்ல. அது அவர்களின் சுயநலம்.  உங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நான் கேட்டது குதர்க்கம் அல்ல.  சிந்திக்க தூண்டும் கேள்வி என்பது இவ்வளவு விடயம் தெரிந்த தாங்கள் அறியாத‍த‍ல்ல. வெளிப்படையாக அதை ஒத்து கொள்ளாவிட்டாலும் தங்களின் பதிலில் இருந்து அதை புரிந்து கொண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

படித்த மரமண்டைகள் சிங்களவனை நம்பியது இயற்கை நீதியல்ல. அது அவர்களின் சுயநலம்.  

சுஜநலமா? 

அப்படி சொல்லமுடியாது நண்பரே...தெளிவாக சிந்தியுங்கள்

ஜின்னாவை போல நாட்டினை பிரித்து கேட்டிருந்தால், அவர்கள் தானே பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள்.... அது அதிகூடிய சுஜநலமாக இருந்திருக்கும் அல்லவா?
 
11 minutes ago, Nathamuni said:

சுஜநலமா? 

அப்படி சொல்லமுடியாது நண்பரே...தெளிவாக சிந்தியுங்கள்

ஜின்னாவை போல நாட்டினை பிரித்து கேட்டிருந்தால், அவர்கள் தானே பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள்.... அது அதிகூடிய சுஜநலமாக இருந்திருக்கும் அல்லவா?
 
இல்லை நண்பரே தமிழர்களின் முக்கியமாக யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம். பெரிதாக றிஸ்க் எடுக்க விரும்பமாட்டா்கள். ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். வர்த்த‍கத்துறையில் வளர்ச்சியடையாமல் படித்தவுன் அரசு உத்தியோகம் எடுப்பதில் திருப்தி கொள்ளுவர். போட்டி போடுவதென்றால் தனது அயல்வீட்டுகாரனுடம் மட்டும் தான் போட்டி போடுவரே தவிர அடுத்த நாட்டு கார‍ரை ஒரு ரோல் மொடலாக கூட எடுக்க மாட்டார்கள்.  அந்த ரீதியில் சிங்களவனிடம் அரச உத்தியோகத்தில் கொழுத்த சம்பளத்தில் இருக்கலாம் என்று பேதைத்தனமாக கற்பனை செய்திருப்பார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

சிறு திருத்தம்;

"யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம், தன் ஊரவன், தன் சாதிக்காறன் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம்."

ஒருவன் படித்து அரச உத்தியோகம் எடுக்கப் போறாணெண்டால் ஏற்கனவே படித்தவர்கள் உடனே செய்வது பெட்டிசன் போடுவது. ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, Kapithan said:

சிறு திருத்தம்;

"யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம், தன் ஊரவன், தன் சாதிக்காறன் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம்."

ஒருவன் படித்து அரச உத்தியோகம் எடுக்கப் போறாணெண்டால் ஏற்கனவே படித்தவர்கள் உடனே செய்வது பெட்டிசன் போடுவது. ☹️

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

31 minutes ago, குமாரசாமி said:

🤗

பச்சை முடிச்சு போட்டுதாம்...

ஆனால்.... பச்சை உள்ள பதிலை quote பண்ணி, பச்சையை மட்டும் விட்டுப்போட்டு.... மிச்சத்தை டெலீட் பண்ணினால்.... பச்சை 'அங்க' நிண்டு மிலாந்துது... மேலே இருக்கிறது போல தான்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

உண்மைதான். ஆனால் சுயநலத்திலும் பொதுநலன் வேண்டும்.

உலகத்திலுள்ள இனங்கள் அனைத்துமே தங்கள் இனம், தேசம் என வரும்போது தங்கள் குறுகிய சிந்தனையிலிருந்து தற்காலிகமாகவேனும் விலகி பொது நலனுக்காக ஒன்று சேர்ந்து கொள்கின்றன. ஆனால் மிகச் சிறிய எண்ணிக்கையான மக்களே தனக்கு மூக்குப் போனாலும் பபறவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக அமைய  வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். 

எங்கள் இனம் நிச்சயமாக பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தினுள் அடங்கா ☹️

(இங்கே எதிரி என்பவன்  சிங்களமாக இருக்க வேண்டியது  கட்டாயம்  அல்ல) !🤥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, Kapithan said:

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால் சரியான இலக்கை அடையலாம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

இல்லை நண்பரே தமிழர்களின் முக்கியமாக யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம். பெரிதாக றிஸ்க் எடுக்க விரும்பமாட்டா்கள். ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். வர்த்த‍கத்துறையில் வளர்ச்சியடையாமல் படித்தவுன் அரசு உத்தியோகம் எடுப்பதில் திருப்தி கொள்ளுவர். போட்டி போடுவதென்றால் தனது அயல்வீட்டுகாரனுடம் மட்டும் தான் போட்டி போடுவரே தவிர அடுத்த நாட்டு கார‍ரை ஒரு ரோல் மொடலாக கூட எடுக்க மாட்டார்கள்.  அந்த ரீதியில் சிங்களவனிடம் அரச உத்தியோகத்தில் கொழுத்த சம்பளத்தில் இருக்கலாம் என்று பேதைத்தனமாக கற்பனை செய்திருப்பார்கள். 

இது குறித்து பெரிதாக எழுதலாம்.... நேரமில்லை...

நான் இப்போது 16ம் நூறாண்டில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கேயரால் உண்டான கலாசார மாறுதல்கள் என்ற ஆங்கில புத்தகம் ஒன்றினை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

சிங்கள அரச சரித்திரத்தில் முடியுரிமைக்காக இளவரசரான மகன் அல்லது மகன்கள் தந்தையை கொன்ற நிகவுகள் உள்ளன. 

போர்த்துக்கேயர் வரும்போது ஆண்டு கொண்டிருந்த அப்பாவினைக் கொலை செய்து மூன்று அண்ணன் தம்பிகளிடையே ராஜ்யத்தினை பேசியபடியே இரண்டாக பிரித்து ஆண்டு கொண்டிருந்தனர். ஆனாலும் அவர்களுக்கிடையே நடந்த பதவிசண்டையில் கோட்டையினை ஆண்ட ஒருவருக்கு ஆதரவு கொடுத்து, அவரை தமது பொம்மையாகி பின்னர் ஆடசியை பிடித்துக் கொண்டனர். 

அதேபோல  யாழ்பாணத்தினை பிடித்த போர்த்துக்கேயர் அங்கேயும் ஒரு பொம்மையினை வைத்து பின்னர் சங்கிலியனை போரிட்டு வென்று யாழ்ப்பாணத்தினை பிடித்துக் கொண்டனர்.

ஆனாலும் எமக்கு தெரியாத செய்தி என்னவென்றால், சிங்களவர்கள் கை ஓங்கிய போதெல்லாம், தமிழர்களுக்கு ஆதரவாக ஓடி வந்தவர்கள் தென்னிந்திய அரசர்கள்.

இவர்களால் வரக்கூடிய ஆபத்தினை தடுக்க போர்த்துக்கேயர் குடியேறிய முதலில் பகுதி, யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த தீவு பகுதிகள். முக்கியமாக நெடும்தீவு. 

இந்த தென்னிந்திய ஆபத்தினை பிரிட்டிஷ்காரர்கள் இரண்டு பக்கமும் பிடித்துக் கொள்ளும் வரை, போர்த்துகேயர்களும், ஒல்லாந்தர்களும் மிக கவனமாக கையாண்டார்கள்.

மிக மிக அண்மையில் கூட, இந்த ஆதரவு கிடைக்காமல் தடுத்தது கருணாநிதி.

இன்றும் கூட பல ஆய்வாளர்கள் சொல்வது தமிழகத்தின் பேராதரவு கிடைத்தால் மட்டுமே ஈழ தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும். 

அதனால் தான் சொல்கிறேன்... சிங்களவன் வெளியேறும் நாளும் வரும். 

ஏனெனில் எதுவுமே நிரந்தரமில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

ஏதோ மற்ற மிருகங்களுக்கு சுயநலம் இல்லை என்றதாகவல்லோ உங்கள் கதை போகிறது? இப்படி மனிதரை நீங்கள் தாழ்வாக எழுத, தாங்களும் மனிதர் என்று சொல்லும் ஒரு கூட்டம் அதை படித்து ஆரவாரிக்குது, யாரிடம் சொல்லி அழ, ஆனை முகத்தானே😥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கற்பகதரு said:

ஏதோ மற்ற மிருகங்களுக்கு சுயநலம் இல்லை என்றதாகவல்லோ உங்கள் கதை போகிறது? இப்படி மனிதரை நீங்கள் தாழ்வாக எழுத, தாங்களும் மனிதர் என்று சொல்லும் ஒரு கூட்டம் அதை படித்து ஆரவாரிக்குது, யாரிடம் சொல்லி அழ, ஆனை முகத்தானே😥

சரி உங்கடை ஆசையை ஏன் கெடுப்பான்......
எல்லா உயிரினங்களுக்கும் சுயநலம் இருக்கின்றது.  சுயநலம் இல்லாத உயிரினங்களே இந்த உலகில் இல்லை.

இப்ப என்ன மாதிரி தலை குளிருதோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால் சரியான இலக்கை அடையலாம்.:cool:

தாயக்கட்டையும் பிழை (Loaded dice ) அதை உருட்டும் இடத்தில் இருப்பவர்களும் திருடர்கள் என்றால் அதில் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kapithan said:

தாயக்கட்டையும் பிழை (Loaded dice ) அதை உருட்டும் இடத்தில் இருப்பவர்களும் திருடர்கள் என்றால் அதில் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை. 😜

நான் எழுதியதை நன்றாக கூர்ந்து வாசித்து கிரகித்து கொள்ளுங்கள்.இருப்பவர்கள் உருட்டினால் என நான் எழுதவில்லை.
மீண்டுமொரு முறை எழுதுகின்றேன்.

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால்!!!!!!!!! :cool:
 
  • கருத்துக்கள உறவுகள்

ha, haa :cool:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

நான் எழுதியதை நன்றாக கூர்ந்து வாசித்து கிரகித்து கொள்ளுங்கள்.இருப்பவர்கள் உருட்டினால் என நான் எழுதவில்லை.
மீண்டுமொரு முறை எழுதுகின்றேன்.

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால்!!!!!!!!! :cool:
 
ஹாஹா..

நானும் தெளிவாகக்  கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.