Jump to content

மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!


Recommended Posts

In இலங்கை     April 9, 2020 10:50 am GMT     0 Comments     1989     by : Litharsan

Mannar-Parappankandal-Accident.jpg

மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர்.

சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வரும் சந்தியோகு டெரன்சி (வயது-25)  ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கெப் வண்டியின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிலங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mannar-Parappankandal-Accident-2.jpg

Mannar-Parappankandal-Accident-3.jpg

Mannar-Parappankandal-Accident-5.jpg

Mannar-Parappankandal-Accident-6.jpg

Mannar-Parappankandal-Accident-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் உடல்கள் நல்லடக்கம்

April 10, 2020

92631336_2866557053393507_29253905470130

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (9)   மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும்,முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும்; உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (வயது-40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளார். மற்றையவர் சந்தியோகு டெரன்சி (வயது-25) மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றியுள்ளார்.

குறித்த இருவரும்   மன்னாரில் இருந்து கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

-இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த இரு உடல்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த பிரதேச மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதோடு,இறுதி நல்லடக்கத்தின் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் #மன்னார்  #சகோதரிகள்   #நல்லடக்கம்

92352280_685171162228433_736248042396162
 
Link to comment
Share on other sites

பெரிய வெள்ளி அன்று கடமைகளை முடித்து  வீடு திரும்பிய போது நடந்த அநியாய உயிர்ப்பலிகள்.

கண்ணை மூடிக்கொண்டு பெரிய வாகனங்களை அசுர வேகத்தில் செலுத்தி முந்துவதற்கு முயலுவதால் ஏற்படும் விபத்துக்கள்.

Link to comment
Share on other sites

மன்னார் விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகள்! பிரதேச மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (9) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களுடைய சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கட்டையடம்பன் பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் மன்னார் பதில் நீதவானினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து அக்கிராம மக்களும் குடும்ப உறவுகளும் ஆதங்கம் தெரிவித்துள்ளர்.

நேற்று முன் தினம் வியாழக்கிழமை மாலை மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டல் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு சகோதரிகளும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் குறித்த இரு பெண்களின் இறுதி கிரிகைகள் நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை 5 மணியளவில் கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் இடம் பெற்று பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எனினும் குறித்த இரு சகோதரிகளின் இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்வதற்கு முன் விபத்தை ஏற்படுத்திய குறித்த நபரை மன்னார் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது..

மன்னார் நீதி மன்ற பதில் நீதவான் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மத குரு ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் இணைந்து குறித்த நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும் குறித்த பிணை வழங்குவது தொடர்பாக மன்னார் பிரந்திய பொலிஸ் மற்றும் பொறுப்பதிகாரி கடும் எதிர்பு தெரிவித்திருந்தனர்.

எனினும் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது குறித்த நபருக்கு பதில் நீதவான் பிணை வழங்கி உள்ளார்.

குறித்த இரு சகோதரிகளின் இறுதிக் கிரிகைகள் இடம் பெறுவதற்கு முன்னதாகவே விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பொலிஸாரின் கடும் எதிர்ப்பை மீறியும் மதகுரு ஒருவரின் ஆதரவுடன் பிணை வழங்கப்பட்டமையால் இறந்த பெண்களின் குடும்பத்தினர் பல்வேறு விதமான எதிர்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் உயிரிழந்த குறித்த இரு பெண்களும் அரச ஊழியர்களாக உள்ள போதும் அவர்களின் மரணத்திற்கு ஆரம்பத்திலேயே நீதி கிடைக்கவில்லை என குடும்ப உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/141026

Link to comment
Share on other sites

  • 1 month later...

மன்னார் விபத்தில் உயிரிழந்த சகோதரிகளுக்கு நீதி கோரி போராட்டம்

விபத்தில் உயிரிழந்த சகோதரிகளுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் கடந்த ஏப்பிரல் மாதம் 9 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட முன்னதாகவே பதில் நீதவான் முன்னிலையில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இரு சகோதரிகளின் மரணத்திற்கும் நீதி கோரி குடும்ப உறவுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாட்டின் தற்போதைய சூழ் நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒன்று கூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. எனவே இவ்விடத்தை விட்டு உடனடியாக செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

அவர்கள் அவ்விடத்தில் இருந்து செல்லாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் அஞ்சல் அதிபராக கடமையாற்றிய சந்தியோகு ரெறன்சியா(வயது-25), வைத்தியசாலை பெண் பரிசோதகராக கடமையாற்றும் லின்ரா கோபிநாதன்(வயது-42) ஆகிய இரு சகோதரிகளும் கடந்த ஏப்பிரல் மாதம் 9 ஆம் திகதி மதியம் மன்னார் பரப்பான் கண்டல் வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இரண்டு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிர் இழந்த சகோதரிகளின் சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனவே உறவுகளாகிய எமக்கு எதுவித உதவிகளும் தேவை இல்லை. உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். இப்படியான ஒரு சம்பவம் இனி இடம் பெறக்கூடாது.

பணம் இருந்தால் எதனையும் செய்ய முடியும் என்பதற்காக ஏழைகளுக்கு அநீதி இடம் பெறக்கூடாது. எனவே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குறித்த சகோதரிகளின் குடும்ப உறவுகாளாகிய நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143282
Link to comment
Share on other sites

இது ஒரு விபத்து என்றுதான் கூறப்பட்டுள்ளது। இவர்களை கொலை செய்ய வேண்டுமென்று அங்கு வந்து மோதவில்லை। எனவே சடடப்படி பிரச்சினைகளை தீர்க்கலாம்। சிலவேளைகளில் இதுக்காக நஷட ஈடு கொடுத்து வழக்கை முடிக்கலாம்। இருந்தாலும் இவர்கள் நஷட ஈடு பெறுவதைவிட தண்டனை பெற்றுக்கொடுப்பதில்தான் ஆவலாக இருப்பதாக தெரிகின்றது। இதனால் இருவருக்குமே நஷடம்மாதான்। இங்கு ஒரு win - win நிலைமையை உருவாக்கினால் நல்லது। அருட் தந்தையரும் அதே முயட்சியைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்। இவர்கள் தண்டனை பெற்றுக்கொடுப்பதினூடாக இறந்த உயிர்களை மீட்டுக்கொள்ளலாம் என்றால் பிரச்சினை இல்லை। 

Link to comment
Share on other sites

அபாயகரமான காலகட்டத்தில் கடமைகளை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சிங்கள மதவெறியர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவர் அசுர வேகத்தில் பின்னால் இடித்துத் தள்ளி இரண்டு சகோதரிகளையும் கொலை செய்த கொலையாளிக்கு சார்பாக, பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்து பாதிரிகள் சிலர் செயற்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பெரிய வெள்ளியன்று இருவரை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தை ஏற்படுத்தி விட்டு , கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் அந்த பெண்களது பூதவுடல்  தகனம் செய்வதற்கு முன்னால் அவர் வெளியே பிணையில் வந்து விட்டார் என்பது தான் உறவுகளது கோபம் ...பணமிருந்தால் குற்றம் செய்தவரை பிணை எடுக்க பாதிரிமார் கூட வருவார் 😟
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

விபத்தை ஏற்படுத்தி விட்டு , கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் அந்த பெண்களது பூதவுடல்  தகனம் செய்வதற்கு முன்னால் அவர் வெளியே பிணையில் வந்து விட்டார் என்பது தான் உறவுகளது கோபம் ...பணமிருந்தால் குற்றம் செய்தவரை பிணை எடுக்க பாதிரிமார் கூட வருவார் 😟
 

வடகிழக்கில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கு  மேல் திட்டமிடப்பட்ட கொலைகளே  நேற்றும் கிழக்கில் ஒரு ஊடகவியலளார்  கொல்லப்பட்டு  உள்ளார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

இது ஒரு விபத்து என்றுதான் கூறப்பட்டுள்ளது। இவர்களை கொலை செய்ய வேண்டுமென்று அங்கு வந்து மோதவில்லை। எனவே சடடப்படி பிரச்சினைகளை தீர்க்கலாம்। சிலவேளைகளில் இதுக்காக நஷட ஈடு கொடுத்து வழக்கை முடிக்கலாம்। இருந்தாலும் இவர்கள் நஷட ஈடு பெறுவதைவிட தண்டனை பெற்றுக்கொடுப்பதில்தான் ஆவலாக இருப்பதாக தெரிகின்றது। இதனால் இருவருக்குமே நஷடம்மாதான்। இங்கு ஒரு win - win நிலைமையை உருவாக்கினால் நல்லது। அருட் தந்தையரும் அதே முயட்சியைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்। இவர்கள் தண்டனை பெற்றுக்கொடுப்பதினூடாக இறந்த உயிர்களை மீட்டுக்கொள்ளலாம் என்றால் பிரச்சினை இல்லை। 

இதே நிலைப்பாட்டை முள்ளிவாய்க்கால் அழிவிலும் எடுப்பீர்களா ? ☹️

அல்லது அதற்கு வேறு நிலைப்பாடா (Stand)

😜

Link to comment
Share on other sites

14 hours ago, Kapithan said:

இதே நிலைப்பாட்டை முள்ளிவாய்க்கால் அழிவிலும் எடுப்பீர்களா ? ☹️

அல்லது அதற்கு வேறு நிலைப்பாடா (Stand)

😜

யுத்தத்துக்கும், சாலை விபத்துக்கும் வித்தியாசம் புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழாது. எனவே இதட்கும் அதட்கும் சம்பந்தம் இல்லை. இங்கு ஒரு யுத்தமல்ல ஒரு விபத்துதான் நடைபெற்றுள்ளது.

எனவே இதை இருவருக்கும் இடையில் தீர்த்துக்கொள்ளுவதும் , அதனால் வரும் தீமைகளைவிட நன்மைகளை பெற்றுக்கொள்ளுவதும் அறிவுடையோருக்கு நல்லது.

மற்றப்படி குற்றமா சாட்டுவோர் குற்றம் பிடித்துக்கொன்டே இருப்பார்கள். அவர்களுக்கு என்ன பாதிக்கப்படப்போவது அவர்கள் இல்லைதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Vankalayan said:

யுத்தத்துக்கும், சாலை விபத்துக்கும் வித்தியாசம் புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழாது. எனவே இதட்கும் அதட்கும் சம்பந்தம் இல்லை. இங்கு ஒரு யுத்தமல்ல ஒரு விபத்துதான் நடைபெற்றுள்ளது.

எனவே இதை இருவருக்கும் இடையில் தீர்த்துக்கொள்ளுவதும் , அதனால் வரும் தீமைகளைவிட நன்மைகளை பெற்றுக்கொள்ளுவதும் அறிவுடையோருக்கு நல்லது.

மற்றப்படி குற்றமா சாட்டுவோர் குற்றம் பிடித்துக்கொன்டே இருப்பார்கள். அவர்களுக்கு என்ன பாதிக்கப்படப்போவது அவர்கள் இல்லைதானே. 

நீங்கள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். 👍

கொலைக்கும் விபத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு எல்லோருக்குமே தெரியும். இங்கே நான் தொட்டுச் செல்ல விரும்பியது பொறுப்புக் கூறலும் தண்டனையும் என்கின்ற விடயத்தை. 🙂

இங்கே உறவினர்கள் கேட்பது நீதி. இது நீதிமன்றத்தினூடாகத்தான் பெற முடியும்.  👍

நீங்கள் கூறியது நட்ட ஈடு தொடர்பானது. அதற்கு நீதி மன்று தேவையில்லை. மத்தியஸ்தர் (Mediator / Negotiator ) மட்டுமே தேவை 🤥

இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதனூடாக தண்டனையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் கேட்பது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலும் அதனூடாக நட்ட ஈடு இரண்டுமே. அதனால்தான் அரசு பொறுப்புக் கூறலிலிருந்து தப்பிக்க விரும்புகிறது. 👍

ஆனால்நீதிமன்றின் ஊடாக இவை இரண்டையுமே பெற முடியும். 👍

உங்களின் வாதத்தை சரி எனக் கொண்டால் பண வசதியுடையோர் எல்லோருமே நட்ட ஈட்டைச் செலுத்துவதன் ஊடாக சட்ட நடவடிக்கையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். பொறுப்புக் கூறலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது சரியான அணுகுமுறை அல்ல.🤥

நட்ட ஈட்டினைக் கொடுத்தலுடன் தப்பித்துக்கொள்ள முடியுமென்றால், உலக செல்வந்தர்களுக்கு எந்த ஒரு சட்டமும் பொருந்தாமல் போய்விடும் சாத்தியம் ஏராளமுண்டு. 😡

ஆகவே பொறுப்புக் கூறாமல் இழப்பீட்டை மட்டும் கொடுத்தல் ஏற்கத்தக்க வாதம் அல்ல. 🙂

இதனைத்தான் நான் கூற விரும்பியது. 👍

Link to comment
Share on other sites

22 hours ago, Kapithan said:

நீங்கள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். 👍

கொலைக்கும் விபத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு எல்லோருக்குமே தெரியும். இங்கே நான் தொட்டுச் செல்ல விரும்பியது பொறுப்புக் கூறலும் தண்டனையும் என்கின்ற விடயத்தை. 🙂

இங்கே உறவினர்கள் கேட்பது நீதி. இது நீதிமன்றத்தினூடாகத்தான் பெற முடியும்.  👍

நீங்கள் கூறியது நட்ட ஈடு தொடர்பானது. அதற்கு நீதி மன்று தேவையில்லை. மத்தியஸ்தர் (Mediator / Negotiator ) மட்டுமே தேவை 🤥

இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதனூடாக தண்டனையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் கேட்பது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலும் அதனூடாக நட்ட ஈடு இரண்டுமே. அதனால்தான் அரசு பொறுப்புக் கூறலிலிருந்து தப்பிக்க விரும்புகிறது. 👍

ஆனால்நீதிமன்றின் ஊடாக இவை இரண்டையுமே பெற முடியும். 👍

உங்களின் வாதத்தை சரி எனக் கொண்டால் பண வசதியுடையோர் எல்லோருமே நட்ட ஈட்டைச் செலுத்துவதன் ஊடாக சட்ட நடவடிக்கையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். பொறுப்புக் கூறலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது சரியான அணுகுமுறை அல்ல.🤥

நட்ட ஈட்டினைக் கொடுத்தலுடன் தப்பித்துக்கொள்ள முடியுமென்றால், உலக செல்வந்தர்களுக்கு எந்த ஒரு சட்டமும் பொருந்தாமல் போய்விடும் சாத்தியம் ஏராளமுண்டு. 😡

ஆகவே பொறுப்புக் கூறாமல் இழப்பீட்டை மட்டும் கொடுத்தல் ஏற்கத்தக்க வாதம் அல்ல. 🙂

இதனைத்தான் நான் கூற விரும்பியது. 👍

யுத்தம் என்பது யுத்த தர்மத்தை கடைபிடித்து நடக்க வேண்டிய ஒன்று. இங்கு அப்படி நடந்தா என்பது வேறு விடயம். அதட்குரிய வழக்குகள் நாஷ்டா ஈடு, தண்டனைகள் சடடப்படி எடுக்கப்படும்.

இந்த விபத்து தாட்செயலாக நடந்தது. இவரும்கூட அடைபட்டு இருக்கும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும்போதுதான் இந்த விபத்து நடந்தது. எனவே இவருக்கு நீதிக்கு புறம்பாக காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை . இப்போதும்கூட நீதிமன்றம்தான் பிணை வழங்கி உள்ளது.

எனது கருத்து என்னவென்றால் இவரை சிறைக்கு அனுப்புவதால் இரண்டு உயிரும் வந்துவிடுமா? அல்லது இரண்டு குடும்பமும் இதனால் மேலும் பாதிக்கப்பட வேண்டுமா? ஒரு நல்ல தீர்வு  இருக்கும்போது அதை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது. இங்கு கருத்து எழுதுபவர்களுக்கு சில வேளைகளில் அது விளங்குவது கடினமாக இருக்கிறது.


மேலும் சில நாடுகளில் இப்படியான விபத்து நடக்கும்போது அதட்குரிய நஷட ஈடடை கொடுப்பதன்மூலம் விடுதலையாகலாம். முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இந்த சடடம் நடைமுறையில் இருக்கிறது. எனவே இது ஒன்றும் புதிய விடயம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Vankalayan said:

யுத்தம் என்பது யுத்த தர்மத்தை கடைபிடித்து நடக்க வேண்டிய ஒன்று. இங்கு அப்படி நடந்தா என்பது வேறு விடயம். அதட்குரிய வழக்குகள் நாஷ்டா ஈடு, தண்டனைகள் சடடப்படி எடுக்கப்படும்.

இந்த விபத்து தாட்செயலாக நடந்தது. இவரும்கூட அடைபட்டு இருக்கும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும்போதுதான் இந்த விபத்து நடந்தது. எனவே இவருக்கு நீதிக்கு புறம்பாக காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை . இப்போதும்கூட நீதிமன்றம்தான் பிணை வழங்கி உள்ளது.

எனது கருத்து என்னவென்றால் இவரை சிறைக்கு அனுப்புவதால் இரண்டு உயிரும் வந்துவிடுமா? அல்லது இரண்டு குடும்பமும் இதனால் மேலும் பாதிக்கப்பட வேண்டுமா? ஒரு நல்ல தீர்வு  இருக்கும்போது அதை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது. இங்கு கருத்து எழுதுபவர்களுக்கு சில வேளைகளில் அது விளங்குவது கடினமாக இருக்கிறது.


மேலும் சில நாடுகளில் இப்படியான விபத்து நடக்கும்போது அதட்குரிய நஷட ஈடடை கொடுப்பதன்மூலம் விடுதலையாகலாம். முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இந்த சடடம் நடைமுறையில் இருக்கிறது. எனவே இது ஒன்றும் புதிய விடயம் இல்லை. 

நீங்கள் நட்ட ஈட்டை மட்டும் கதைக்கிறீர்கள்.   👎

நீதிமன்று நட்ட ஈட்டை வழங்குவதுடன் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கும். 👍

மத்திய கிழக்கு நாடுகளை இங்கே உதாரணம் காட்டுகிறீர்கள். உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் சட்ட அமைப்பு முறைகள் தனியே நட்ட ஈட்டுடன் நின்றுவிடுவதில்லை. பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கின்றன. 👍

விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார ரீதியில் பலமில்லாதவராக இருந்தால் உங்கள்   பார்வை எப்படி இருக்கும் ? 🤔

உங்களுக்கான சிறு கேள்வி;

1) உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால் உங்களது தெரிவு நட்ட ஈட்டை மட்டுமே வரவேற்குமா அல்லது நீதிமன்றை நாடுவீர்களா 🤥

இரு மரணத்துடன் தொடர்புடைய விடயத்தை மிக இலகுவாக நட்ட ஈட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவு தருகிறீர்கள். விபத்தை ஏற்படுத்தியவர் உங்களுக்கு பரீட்டயமானவர் இல்லையென்று நம்புகிறேன். ☹️

Link to comment
Share on other sites

23 hours ago, Kapithan said:

நீங்கள் நட்ட ஈட்டை மட்டும் கதைக்கிறீர்கள்.   👎

நீதிமன்று நட்ட ஈட்டை வழங்குவதுடன் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கும். 👍

மத்திய கிழக்கு நாடுகளை இங்கே உதாரணம் காட்டுகிறீர்கள். உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் சட்ட அமைப்பு முறைகள் தனியே நட்ட ஈட்டுடன் நின்றுவிடுவதில்லை. பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கின்றன. 👍

விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார ரீதியில் பலமில்லாதவராக இருந்தால் உங்கள்   பார்வை எப்படி இருக்கும் ? 🤔

உங்களுக்கான சிறு கேள்வி;

1) உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால் உங்களது தெரிவு நட்ட ஈட்டை மட்டுமே வரவேற்குமா அல்லது நீதிமன்றை நாடுவீர்களா 🤥

இரு மரணத்துடன் தொடர்புடைய விடயத்தை மிக இலகுவாக நட்ட ஈட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவு தருகிறீர்கள். விபத்தை ஏற்படுத்தியவர் உங்களுக்கு பரீட்டயமானவர் இல்லையென்று நம்புகிறேன். ☹️

இதட்கு ராக்கெட் விஞ்சானம் தேவை இல்லை. என்னைப்பொறுத்த வரையும் இது ஒரு விபத்து. தவறுதலாக நடந்த ஒன்று. இறந்தவர்கள்மீண்டும் வரப்போவதில்லை. நிச்சயமாக அவர்களுக்கு கோபம், தண்டனை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் இருக்கும். இதட்கு எண்ணெய் ஊற்றுபவர்களும் இருப்பார்கள்.

இவரை சிறையில் அடைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை அத்துடன் மரித்த இருவரும் மீண்டும் வரப்போவதில்லை. எனவே இரு பக்கமும் பாதிப்பே ஒழிய , நன்மை இல்லை. எனவே இருவரும் இணங்கி போவதில் இருவருக்குமே நன்மைக்கு உண்டாகும் என்பது எனது தனிப்படட கருத்து.

இதனால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எனவே சமாதானம் பண்ணுகிறவங்கள் பாக்கியவான்கள் என்பதிறக்கினாங்க எனது கருத்தை வைத்தேன்.

உங்களுக்கு அப்படி ஒன்று நடந்தால் உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள், அப்போது எனது கருத்தை தெரிவிக்கிறேன். 

Link to comment
Share on other sites

On 16/5/2020 at 08:51, போல் said:

அபாயகரமான காலகட்டத்தில் கடமைகளை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சிங்கள மதவெறியர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவர் அசுர வேகத்தில் பின்னால் இடித்துத் தள்ளி இரண்டு சகோதரிகளையும் கொலை செய்த கொலையாளிக்கு சார்பாக, பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்து பாதிரிகள் சிலர் செயற்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பெரிய வெள்ளியன்று இருவரை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இந்தப் பாதிரிமார் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதிமன்றில் உறுதியான சட்ட உதவி குடுத்து கிடைக்க வேண்டிய முழுநிவாரணத்தையும் பெற்று குடுக்க முயலாமல் பாதிக்கப்பட்ட குடும்பம் அரைகுறை நிவாரணங்களை பெற நிர்பந்திப்பது கேவலமானது.

விபத்தில் ஒருவர் மரணமாய்ந்தால் அந்த குடும்பத்துக்கு தவறிழைத்த வாகன உரிமையாளர் பெருமளவு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்கிற தீர்ப்புகள் பல இருக்கு. அந்த நிவாரணம் அந்த வாகனத்தின் பெறுமதியை விட அதிகமாகவும் இருந்த சந்தர்ப்பங்கள் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இதட்கு ராக்கெட் விஞ்சானம் தேவை இல்லை. என்னைப்பொறுத்த வரையும் இது ஒரு விபத்து. தவறுதலாக நடந்த ஒன்று. இறந்தவர்கள்மீண்டும் வரப்போவதில்லை. நிச்சயமாக அவர்களுக்கு கோபம், தண்டனை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் இருக்கும். இதட்கு எண்ணெய் ஊற்றுபவர்களும் இருப்பார்கள்.

இவரை சிறையில் அடைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை அத்துடன் மரித்த இருவரும் மீண்டும் வரப்போவதில்லை. எனவே இரு பக்கமும் பாதிப்பே ஒழிய , நன்மை இல்லை. எனவே இருவரும் இணங்கி போவதில் இருவருக்குமே நன்மைக்கு உண்டாகும் என்பது எனது தனிப்படட கருத்து.

இதனால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எனவே சமாதானம் பண்ணுகிறவங்கள் பாக்கியவான்கள் என்பதிறக்கினாங்க எனது கருத்தை வைத்தேன்.

உங்களுக்கு அப்படி ஒன்று நடந்தால் உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள், அப்போது எனது கருத்தை தெரிவிக்கிறேன். 

1) உறவினர்கள் நீதி வேண்டும் என்கின்றபோது ஏன் நட்ட ஈடு மட்டுமே போதும் என்கிறீர்கள் ? 🤔

2) விபத்துக்களுக்கு நீதிமன்று போகத் தேவை இல்லை  நட்ட ஈடு போதுமானது. என்பது உங்கள் பொதுவான கருத்தா அல்லது இந்த விஅத்திற்கு மட்டும் இந்த நிலைப்பாடா ? 🤔

3) விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார வசதியற்றவர் என்றால் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் பொருத்தமானதாகக் கருதும் முன்மொழிவுதான்  suggestion என்ன ? 🤔

 

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

1) உறவினர்கள் நீதி வேண்டும் என்கின்றபோது ஏன் நட்ட ஈடு மட்டுமே போதும் என்கிறீர்கள் ? 🤔

2) விபத்துக்களுக்கு நீதிமன்று போகத் தேவை இல்லை  நட்ட ஈடு போதுமானது. என்பது உங்கள் பொதுவான கருத்தா அல்லது இந்த விஅத்திற்கு மட்டும் இந்த நிலைப்பாடா ? 🤔

3) விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார வசதியற்றவர் என்றால் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் பொருத்தமானதாகக் கருதும் முன்மொழிவுதான்  suggestion என்ன ? 🤔

 

எப்படியான நீதியை எதிர்பார்க்கிறீர்கள். இவரை உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் வெளியேறுவதா? என்னைப்பொறுத்தவரை ஒரு வின் வின் நிலைமையை உருவாக்கினால் நல்லது.

 இந்த விபத்து மட்டுமல்ல , எந்த விபத்துக்கு இரு பக்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இருந்தால் அதட்கு செல்வதே நல்லது. 

பொதுவாக ஏழையாக இருந்தால் ஒன்று நடந்து போயிருப்பான் அல்லது புஷ் பைக்கில் போயிருப்பான். அவனுக்குத்தான் விபத்து நடந்திருக்கும். எனவே அந்த கேள்வி வருவதட்கு அவசியப்படாது. உத்தேசமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

எப்படியான நீதியை எதிர்பார்க்கிறீர்கள்.

1) இவரை உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் வெளியேறுவதா?

2) என்னைப்பொறுத்தவரை ஒரு வின் வின் நிலைமையை உருவாக்கினால் நல்லது.

 இந்த விபத்து மட்டுமல்ல , எந்த விபத்துக்கு இரு பக்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இருந்தால் அதட்கு செல்வதே நல்லது. 

3) பொதுவாக ஏழையாக இருந்தால் ஒன்று நடந்து போயிருப்பான் அல்லது புஷ் பைக்கில் போயிருப்பான். அவனுக்குத்தான் விபத்து நடந்திருக்கும். எனவே அந்த கேள்வி வருவதட்கு அவசியப்படாது.

4) உத்தேசமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. 

1) நீதிமன்று இருக்கும்போது நானோ நீங்களோ தீர்ப்புக் கூறத் தகுதியற்றவர்கள் என்பது எனது கருத்து

2) அதனை நீதிமன்று தீர்மானம் செய்யட்டும். ஏன் பொலிசாரும் சமயக் குருக்களும் கட்டப் பஞ்சாயத்து செய்ய முனைகின்றனர் ? 

3) வாகனம் செலுத்தும் எல்லோரும் சொந்த வாகனமா செலுத்துகின்றனர் ☹️

4) அப்படியா 😂 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறில்லை என (உத்தேசமாகக்) கருதுவது நான் இல்லையே 😜

 

நான் கூறுவது very very simple 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் எந்தவித இடையூறும் தகாது . அம்புட்டுதே 😀

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

1) நீதிமன்று இருக்கும்போது நானோ நீங்களோ தீர்ப்புக் கூறத் தகுதியற்றவர்கள் என்பது எனது கருத்து

2) அதனை நீதிமன்று தீர்மானம் செய்யட்டும். ஏன் பொலிசாரும் சமயக் குருக்களும் கட்டப் பஞ்சாயத்து செய்ய முனைகின்றனர் ? 

3) வாகனம் செலுத்தும் எல்லோரும் சொந்த வாகனமா செலுத்துகின்றனர் ☹️

4) அப்படியா 😂 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறில்லை என (உத்தேசமாகக்) கருதுவது நான் இல்லையே 😜

 

நான் கூறுவது very very simple 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் எந்தவித இடையூறும் தகாது . அம்புட்டுதே 😀

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது.


எல்லோரும் சொந்த வாகனம் செலுத்தவிடடாலும் அவை எல்லாம் முழு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். 

இருந்தாலும் இலங்கை நீதி துறையில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிட்டு மீண்டும் ஒரு நன்றி. அநேகமாக இந்த விபத்து சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுவிடும். யாரும் அதிகமாக கவலைப்பட தேவை இல்லை. 

Link to comment
Share on other sites

5 hours ago, Vankalayan said:

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது

எல்லாம் பெயரளவில் தான். 

பணம், அரசியல் செல்வாக்கு உள்ளவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு இன்னொரு சட்டம் 

சிங்களம் பேசும் புத்தனுக்கு ஒரு சட்டம்., மற்றைய சிறுபான்மையினருக்கு இன்னொரு சட்டம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது.


எல்லோரும் சொந்த வாகனம் செலுத்தவிடடாலும் அவை எல்லாம் முழு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். 

இருந்தாலும் இலங்கை நீதி துறையில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிட்டு மீண்டும் ஒரு நன்றி. அநேகமாக இந்த விபத்து சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுவிடும். யாரும் அதிகமாக கவலைப்பட தேவை இல்லை. 

ஓம் பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Vankalayan said:

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது.


எல்லோரும் சொந்த வாகனம் செலுத்தவிடடாலும் அவை எல்லாம் முழு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். 

இருந்தாலும் இலங்கை நீதி துறையில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிட்டு மீண்டும் ஒரு நன்றி. அநேகமாக இந்த விபத்து சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுவிடும். யாரும் அதிகமாக கவலைப்பட தேவை இல்லை. 

இலங்கையில் நீதி இருக்கின்றதோ இல்ல்லையோ நீதி மன்றம் இருக்கிறது. அதற்கென ஒழுங்கு இருக்கிறது.  🙂

காலத்திற்கேற்ப எழுதப்பட்ட சட்டமும் ஒழுங்கும் ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு மிக முக்கியமானவை. அதனை நடைமுறைப்படுத்துவது காவற்றுறை (Enforcement agencies). அவற்றிற்கு அதிகாரம் வழங்கப்படுவது அதனால்தான். காவல்துறை நீதிமன்றங்களின் ஓர் அங்கம். 

சற்று சிந்தித்துப் பாருங்கள். விடுதலைப் புலிகளின் சட்டத்துறையையும்  காவல்துறையையும் உருவாக்க வேண்டிய தேவை என்ன ? அதற்கு முன்னிருந்த சூழல் என்ன ?

சட்டம் என்பது ஒரு ஒழுங்கு, ஒழுக்கம் Order, discipline.   தன்னிச்சையாக எவரும் அதனை மீறுவது இலங்கையில் ஏற்கனவே உருக்குலைந்துள்ள சட்டமும், அதனை நடைமுறைப்படுத்துதலையும் மேலும் சிக்கலாக்குமே தவிர, அதனை ஒழுங்குபடுத்தாது 🙂

 

குறிப்பு: இலங்கை நீதித்துறையையிட்டு அதிகம் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். ஏமாற்றம் அடைய நேரிடும். 😂

 

Link to comment
Share on other sites

 

3524182467599210

சாதாரண சிங்களவனுக்கு ஒரு சட்டம் ... கொத்தாவிற்கு 

எல்லோரையும் ' மாஸ்க்' போடா கேட்க்கும் சிங்கள காவல்துறை 
காவல் துறை அதிகாரி கோத்தா மாஸ்க் போடாமல் எடுத்துக்காட்டாக இருந்ததை ...

Link to comment
Share on other sites

இல்லை, இங்கு இலங்கை நீதி துறையில் நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொண்டபடியாயில்தான் நான் அப்படி எழுதினேன்.

இந்த வழக்கும்கூட நீதிமன்றத்துக்கு அப்பால் இரு தரப்பினரது சம்மதத்துடன் சமாதானமாக முடிக்கப்பட ஏது உருவாகி இருக்கிறது. எனவே, ஆடு நனையுதென்று ஓநாய் அழுதது போல யாருமே கவலைப்பட வேண்டாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் adminApril 26, 2024 யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.     https://globaltamilnews.net/2024/202016/
    • வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில் adminApril 26, 2024   வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை  நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன் , மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/202012/  
    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.