Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி இஞ்சை பாருங்கோ.....! நகை நட்டுகளை காட்ட வேண்டிய இடங்களிலைதான் போட்டு காட்டலாம்.😁
அடுத்த வீடியோ அக்கா ஐஞ்சு விரலுக்கும் மோதிரம் போட்டு புட்டுக்கு மா குழைக்க......கொத்தார் வீடியோ படமெடுக்க ......"ஜப்னா கூப்பன்மா புட்டு" எண்டு பெயர் வேறை வைச்சு.......இந்த புட்டை திண்டு போட்டுத்தான் சிவபெருமான் மண் சுமந்தவர் கதை விடாட்டில் பாருங்கோ😎

பிட்டுக்குள்ள வாழைப்பழத்தையும் வெட்டிப் போட்டு அவிச்சா, நல்ல ருசியா இருக்கும் எண்டு மெல்லே சொல்லுவா

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, Nathamuni said:

பிட்டுக்குள்ள வாழைப்பழத்தையும் வெட்டிப் போட்டு அவிச்சா, நல்ல ருசியா இருக்கும் எண்டு மெல்லே சொல்லுவா

கொத்தார் அவர்கள்! ஆரம்பத்திலையே நல்லது கெட்டதை அன்பாய் பண்பாய் மெதுவாய் எடுத்து சொல்லியிருந்தால் நிலமை இப்ப இவ்வளவுத்துக்கு மோசமாகியிருக்காது.😁

 கொத்தாரும் நம்மளப்போல.......🤣

Thanjavur doll | Thalaiyatti bommai GIF

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களபக்கத்தில  ஒரு ரொட்டி சுடுவினம் கண்டியளே.... மாவுக்க, உப்பு, மிளகாய், வெங்காயம், தேங்காய் பூ போட்டு தட்டி.... நல்லா இருக்கும்.

அதுக்குள்ள தேங்காய் பூ போடாமல், அவிச்சமாப் போட்டு, ஒரு ஓட்டையப் போட்டு, டபக்கெண்டு பொரித்தால்... அக்காவின் தீடீர் வடை.

அத்தார், அடிப்பார் பாருங்க... பியரோட...🥴

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி இஞ்சை பாருங்கோ.....! நகை நட்டுகளை காட்ட வேண்டிய இடங்களிலைதான் போட்டு காட்டலாம்.😁
அடுத்த வீடியோ அக்கா ஐஞ்சு விரலுக்கும் மோதிரம் போட்டு புட்டுக்கு மா குழைக்க......கொத்தார் வீடியோ படமெடுக்க ......"ஜப்னா கூப்பன்மா புட்டு" எண்டு பெயர் வேறை வைச்சு.......இந்த புட்டை திண்டு போட்டுத்தான் சிவபெருமான் மண் சுமந்தவர் கதை விடாட்டில் பாருங்கோ😎

அவக்கு நகை போடுவதில் அலாதியான விருப்பம் என்று நினைக்கிறேன் ...நாங்கள் அவட சாப்பாட்டை சாப்பிடப் போறதில்லை தானே 😉

On ‎03‎-‎05‎-‎2020 at 19:28, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ்ப்பாணச் சம்பல் 1

95668329_644475786130585_7068481614673608704_n.jpg?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_ohc=uJx9VfcZet8AX8kaeT7&_nc_ht=scontent-lht6-1.xx&oh=a2e9a80769b52029ef2a6a2b34488d2a&oe=5ED48959

தேவையானவை :

செத்தல் மிளகாய் 10-15
தேங்காய் - 1 சிறியது அல்லது பாதி
பெரிய வெங்காயம் - 1
உப்பு -1 சீனிக் கரண்டி
பழப்புளி - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
தாளிக்க - கடுகு , சீரகம், எண்ணெய்

செய்முறை வீடியோவில்

சம்பலுக்கு ஒருத்தரும் கடுகு போட்டு தாளிப்பதில்லை ...தனிய பெருஞ்சிரகம் மட்டும் போடுவார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

சம்பலில் பலவகை உண்டு.

கைசம்பல் - இது தேங்காய் பூவுக்குள்ள சின்னவெங்காயம், பச்சை மிளகாய் சிறிய துண்டுகளாக அரிந்து, போட்டு உப்பு சேர்த்து, தேசிக்காய் புளி அல்லது பழப்புளி சாறு சேர்த்து, கறி மிளகாய்த் தூள் இரண்டு கரண்டி அல்லது உறைப்புக்கு அமைய சேர்த்து கையால் மசித்து குலைப்பது. இதுவே சிங்களவர்கள் செய்யும் முறை.

இடித்த சம்பல் - இதில் இரண்டு வகை - மிளகாய் பொரியாமல் இடிப்பது. மிளகாய் பொரித்து இடிப்பது. இதுக்கு பொதுவாக எந்த புளியும் சேர்ப்பதில்லை. சின்ன வெங்காயம், உப்பு, கொஞ்சம் கருவேல்பிள்ளை, தேங்காய் பூ, சிலர் மாசிகருவாடு சேர்ப்பர்.

அரைத்த சம்பல் - இதில் மிளகாயை தண்ணீரில் சிறிது ஊற வைத்து, அம்மியில் அரைத்து, பின்னர் ஒவொரு பொருளாக சேர்ப்பது. வெங்காயம், கருவேல்பிள்ளை, உப்பு, உள்ளி, தேங்காய் பூ, பழப்புளி தண்ணீர், அல்லது தேசிகாய்ப்புளி எல்லாமே அம்மியில் அரைபடும் போதே சேர்ந்து விடும். இந்த அரைத்த சம்பலும், தயிரும் சோறும் சொர்க்கமாயிருக்கும்...

சட்னி - இந்த அரைத்த சம்பல் தாளிதத்தினுள் கொட்டப்பட்டு அடுப்பில் ஒரு கொதி, கொதித்து இறங்கினால் சட்னி.

இஞ்சி சம்பல் தனியான செயல்முறை. மேலுள்ள சம்பல் எதிலும் இஞ்சி சேர்ப்பதில்லை.

அதே போல சீனி சம்பல்,  (சுட்ட) கத்தரிக்காய் சம்பல், (சுட்ட) வாழைக்காய் சம்பல், இறால் சம்பல், மாங்காய் சம்பல், கருவாட்டு சம்பல், மாசி கருவாட்டு சம்பல் என பல வகை உள்ளன.

சிறு உரல், உலக்கை கொண்டு சம்பலை இடித்து செய்யலாம். நேரத்தினை மிச்சப்படுத்த, மிளகாயினை, பொரித்தோ, பொரிக்காமலோ தூளாக்கி வைத்து இருந்தால் நல்லது.

கிரைண்டர் பாவிப்பதனால், dry, wet blades தேவைக்கேட்ப பாவிக்க வேண்டும்.

அல்லது ஊரில் பாவித்த அம்மி கூட தமிழ் கடையில் கிடைக்கிறது... அரைத்த சம்பலுக்கு பாவிக்கலாம்.

இல்லாவிடில் புது வகை எலக்ட்ரிக் அம்மி கல்லு, குளவிகளுடன் கிடைக்கிறது. அருமையான வேலை செய்கிறது.
 
நான் ஒவ்வொன்றாய் போடமுதல் ஏன் அவசரப்படுவான். 🤣

6 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி இஞ்சை பாருங்கோ.....! நகை நட்டுகளை காட்ட வேண்டிய இடங்களிலைதான் போட்டு காட்டலாம்.😁
அடுத்த வீடியோ அக்கா ஐஞ்சு விரலுக்கும் மோதிரம் போட்டு புட்டுக்கு மா குழைக்க......கொத்தார் வீடியோ படமெடுக்க ......"ஜப்னா கூப்பன்மா புட்டு" எண்டு பெயர் வேறை வைச்சு.......இந்த புட்டை திண்டு போட்டுத்தான் சிவபெருமான் மண் சுமந்தவர் கதை விடாட்டில் பாருங்கோ😎

சிரிச்சு முடியல்ல குமாரசாமி.  😀🤣 உங்களை நான் நகை நாட்டுப் போட வேண்டாம் எண்டு சொன்னனானே 🤓

6 hours ago, Nathamuni said:

பிட்டுக்குள்ள வாழைப்பழத்தையும் வெட்டிப் போட்டு அவிச்சா, நல்ல ருசியா இருக்கும் எண்டு மெல்லே சொல்லுவா

பிட்டோட வாழைப்பழம் சாப்பிடறதே எனக்குப் பிடிக்காது.☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கொத்தார் அவர்கள்! ஆரம்பத்திலையே நல்லது கெட்டதை அன்பாய் பண்பாய் மெதுவாய் எடுத்து சொல்லியிருந்தால் நிலமை இப்ப இவ்வளவுத்துக்கு மோசமாகியிருக்காது.😁

 கொத்தாரும் நம்மளப்போல.......🤣

Thanjavur doll | Thalaiyatti bommai GIF

Presenting Smiley | Emoticon, Smiley face images, Smiley

4 hours ago, Nathamuni said:

சிங்களபக்கத்தில  ஒரு ரொட்டி சுடுவினம் கண்டியளே.... மாவுக்க, உப்பு, மிளகாய், வெங்காயம், தேங்காய் பூ போட்டு தட்டி.... நல்லா இருக்கும்.

அதுக்குள்ள தேங்காய் பூ போடாமல், அவிச்சமாப் போட்டு, ஒரு ஓட்டையப் போட்டு, டபக்கெண்டு பொரித்தால்... அக்காவின் தீடீர் வடை.

அத்தார், அடிப்பார் பாருங்க... பியரோட...🥴

Cartoon emoticon presenting Royalty Free Vector Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவக்கு நகை போடுவதில் அலாதியான விருப்பம் என்று நினைக்கிறேன் ...நாங்கள் அவட சாப்பாட்டை சாப்பிடப் போறதில்லை தானே 😉

சம்பலுக்கு ஒருத்தரும் கடுகு போட்டு தாளிப்பதில்லை ...தனிய பெருஞ்சிரகம் மட்டும் போடுவார்கள் 

ஆர் வேணுமெண்டாலும் என் வீட்டுக்கு வந்து சாப்பிடலாம். சமைத்துக் கொடுப்பது என்றால் எனக்கு அலாதி விருப்பம் றதி.

அம்மா அத்தனை ஆண்டுகள் போட்டவ. நான் முப்பது ஆண்டுகளாகப் போடுறன். எங்கள் ஊரவர்களும்  போடுறவை ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Pizza Recipe - பிட்சா செய்முறை

Image may contain: food

Image may contain: food

மா குழைப்பதற்குத் தேவையான பொருட்கள்:

கோதுமை மா - 500 கிராம்  
முட்டை - 1
உப்பு - 1 மே . கரண்டி
யீஸ்ற் - 50 கிராம்  
பால் - அரை கப்
தண்ணீர் - தேவையான அளவு

மேலே அடுக்கும் பொருட்கள்:

சலாமி - 200 g
டின் மீன் - 250 g
தக்காளி டின் - 1 ( 400 g )
oregano -  1 கரண்டி
Basil( துளசித் தழை) - 50 g
கறுப்பு ஒலிவ் -  200 g
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3காளான் - 500 g
சீஸ் - 500 g

செய்முறை வீடியோவில்

வீடியோவைப் பாருங்கோ.😃 லைக் செய்யுங்கோ.🤗 subscribe செய்யுங்கோ😀

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அருமை.அடுப்பு சூடு 250 F or C எது என்று சொல்லவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வீடியோவைப் பாருங்கோ.😃 லைக் செய்யுங்கோ.🤗 subscribe செய்யுங்கோ😀

🤣😂  பார்த்தாச்சு, லைக்கும் செய்தாச்சு; நல்லாயிக்கு செய்முறை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

🤣😂  பார்த்தாச்சு, லைக்கும் செய்தாச்சு; நல்லாயிக்கு செய்முறை

லைக் செய்தா மட்டும் போதுமா உடையார்?
Subscribe பண்ண வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஒவ்வொன்றாய் போடமுதல் ஏன் அவசரப்படுவான். 🤣

ஒரு பயம் தானே...

எதையாவது போட்டு... இது தான் அது... பெரும் சீரகம் போட்டு செய்யிறதால நல்ல ருசியா இருக்கும் எண்டு சொல்லிப்போடுவியள்... எண்ட பயம் தானே... 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

லைக் செய்தா மட்டும் போதுமா உடையார்?
Subscribe பண்ண வேண்டும்.

நான் இவவின்ட யூரியூப் பக்கம் போய் கிடக்கிற எல்லா பட்டனிலையும் ஒரே அமுக்கு 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் இவவின்ட யூரியூப் பக்கம் போய் கிடக்கிற எல்லா பட்டனிலையும் ஒரே அமுக்கு 😎

உங்கண்ட லைக்குகளுக்கு காக மினக்கெட ஏலாது எண்டு சொன்னதால, நான் போகேல்ல... மானஸ்தன்...

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

உங்கண்ட லைக்குகளுக்கு காக மினக்கெட ஏலாது எண்டு சொன்னதால, நான் போகேல்ல... மானஸ்தன்...

என்னப்பா பகிடி வெற்றி தெரியாத ஆளா இருக்கிறீங்க.

1 hour ago, குமாரசாமி said:

நான் இவவின்ட யூரியூப் பக்கம் போய் கிடக்கிற எல்லா பட்டனிலையும் ஒரே அமுக்கு 😎

மாறி ஏதாவது அமுக்கி விட கணனியே போயிடும்.😁

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது சகோதரி.....நானும் பட்டனை அமுக்கி போட்டன்.....செய்முறையும் நன்றாக இருக்கின்றது......!  👍 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா பகிடி வெற்றி தெரியாத ஆளா இருக்கிறீங்க.

மாறி ஏதாவது அமுக்கி விட கணனியே போயிடும்.😁

மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பு இழக்க பாயாது கண்டியளோ HURRA

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா பகிடி வெற்றி தெரியாத ஆளா இருக்கிறீங்க.

என்ன, விசயம் புரியாத ஆளா இருக்கிறியள்?

லைக் பண்ணுறதெண்டா, குமாரசாமியார், ராசவன்னியர் மாதிரி, நாதமுனி எண்ட பெயரில்லை எல்லோ, youtube கணக்கு திறக்கோணும். 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

என்ன, விசயம் புரியாத ஆளா இருக்கிறியள்?

லைக் பண்ணுறதெண்டா, குமாரசாமியார், ராசவன்னியர் மாதிரி, நாதமுனி எண்ட பெயரில்லை எல்லோ, கணக்கு திறக்கோணும்.

ஓ விசயம் அப்பிடி போகுதோ?

நாங்களும் டம்மி பெயரில் ஒன்று திறந்து விடணும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ விசயம் அப்பிடி போகுதோ?

பின்ன... நான் பாட்டுக்கு டபேக்கெண்டு அமத்தினா, அக்கா.... பிஸ்தாவுக்கு, பிஸ்தா, உடன வந்து நிப்பா.... நீங்கதனோ அவர் எண்டு?

உங்க ஒருத்தர் பையன்26... சங்கர் ஆன கதை தெரியும் தானே... 😄

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ விசயம் அப்பிடி போகுதோ?

நாங்களும் டம்மி பெயரில் ஒன்று திறந்து விடணும்.

நான் யூரியூப்பிலை பழையகாய்......அது மட்டுமில்லை ஒரிஜினல் பெயரிலை இருக்கிறன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

hallo kumarasamy,   You can not chat because you're in block list.

இன்னும் படலை பூட்டியோ இருக்குது? 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Nathamuni said:

இன்னும் படலை பூட்டியோ இருக்குது? 🤔

படலையை தூக்கி சுப்பர்ரை பனங்காணிக்கை எறிஞ்சாச்சு....எண்டாலும் திறந்து விட்ட செம்மறி ஆடு மாதிரி உடனை போய் நிக்கக்கூடாது எண்ட ஃபீலிங்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே அன்ரி சீனிக்கரன்டி என்டு எழுதுறா அதுதான் மேசைக்கரனடியோ

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

படலையை தூக்கி சுப்பர்ரை பனங்காணிக்கை எறிஞ்சாச்சு....எண்டாலும் திறந்து விட்ட செம்மறி ஆடு மாதிரி உடனை போய் நிக்கக்கூடாது எண்ட ஃபீலிங்...:cool:

வாங்கோ, வாங்கோ, ஆறுதலா, பட், நிதானமா வாங்கோ... 😉

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.