Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு சிங்கள சிப்பய்களா காரணம். இந்திலை வருவதற்கு தமிழர்களும் காரணம்தானே? எத்தினையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. எத்தனையோ சிங்களவர்கள் போர்குற்ற அவண‌ங்களை தந்துவினார்களே அவர்களும் சாக வேண்டுமா? 

நான் சிங்கள விசுவாசி அல்ல. குற்றமிழத்தவர்கள் தண்டிக்கபட வேண்டும்

  • Replies 82
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

1) ஆம் தாயே , நான் கோழைதான். கடைசிவரை அவர்களுடன் நின்று இறந்திருக்கலாம் என அடிக்கடி நினைப்பதுண்டு. ஆகக் குறைந்தது இந்த குற்றவுணர்ச்சியிலிருந்தாவது தப்பித்திருக்கலாம். 😢

2) நான் கோழையாகவே இருந்துவிட்டுப் போகிறேன் அம்மணி. ஆனால் அந்தப் படைகளும்,  காட்டி கொடுத்தோர், கூட்டிக் கொடுத்தோர் மற்றும் இந்தியா அழிய வேண்டும் என என் மனம் நெடுனாளாய் யாசிக்கிறது. கோழையின் சாபம் பலிக்காது என்று ஒன்றும் இல்லையே. ☠️

3) நான் உண்மையான தமிழன் என்று கூறுகிறீர்களா அல்லது உண்மையான தமிழன் இல்லை என்கிறீர்களா ? உண்மையான தமிழன் அழகுபெற என்ன செய்ய வேண்டும் ? 🤔

(கவனம் வேண்டும். உங்கள் கருத்துக்களே உங்களுக்கெட்திராய் திரும்பக் கூடும்)

4) இதனால்தான் எல்லோரும் கூறுகிறோம். இந்தப் பேரவலத்திற்குக் காரணமானவர்கள் அழியவேண்டும் என. 😡

 

என் முதலாவது கருத்து நெடுக்கருக்குத் தான் எழுதினேன் ...உள்ளே வந்து தலையை போட்டுக் கொண்டது நீங்கள்...அவர் மருத்துவ துறை சார்ந்து இருக்கிறார்...அவரை போன்றவர்கள் எதிரியாயிருந்தாலும் எல்லோரையும் காப்பாற்ற வேண்டியவர்கள்.
தமிழர்கள் ,வீரர்கள் எதிரி நோய் வாய்ப்பட்டு தான் சாக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
உத்தரவு போட்டு ,தலைமை தங்கியவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்கும் போது, சம்பளத்திற்காய் வேலை பார்த்தவர்கள் இறக்க வேண்டியது என்று நீங்கள் நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உங்கள் இயலாமையை நீங்கள் வெளிப்படுத்துவதில் தப்பில்லை ஆனால் கோழைத்தனம் என்பது என் கருத்து 


(கவனம் வேண்டும். உங்கள் கருத்துக்களே உங்களுக்கெட்திராய் திரும்பக் கூடும்) 
என்ன அர்த்தம் ? என்னை துரோகி என்று சொல்லப் போறீர்களா ? அந்தப் பட்டம் ஏற்கனவே எனக்கு கிடைத்து விட்டது...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு முன்தான் கோத்தா கொர்னோவை  கட்டுக்குள் கொண்டுவந்து விட்டார் என்று  இதே ரதி அக்குவும்  சவுண்டு விட்டவ இப்ப வேறை என்னத்துக்கோ மண்ணை விறாண்டிக்கொண்டு நிக்கிறா .

அப்பவும் சொல்றம் இன்னிக்கும் சொல்றம் சொறிலங்கா கொரனோ  விடயத்தில் பாரிய பிழைகளை உருவாக்கி கொண்டு உள்ளது . சைனாவின் புதுவருடம் முடிந்தபின் இலங்கையில் வேலையில் இருக்கும்  சைனீஸ் மூலம்  ஏற்கனவே கொரனோ பரவியிட்டுது முதலாவது  ஆனால் இத்தாலி யில் இருந்து வந்த சிங்களவர்கள் மூலமே பரவியது என்ற தோற்றப்பாட்டை ஊடகங்களில் கொண்டு வந்தது இரண்டாவது அதனால் நோய்  காவிகள் ஆன  சைனீஸ் கள்  தென்னிலங்கையில் இயல்பாய் நாடமாடினார்கள் .   ஆரம்பத்திலே மக்களுக்கு விளங்கமில்லாமல் தடையை போட்டு பின் திறந்து மக்களை கலக்க விட்டது மூன்றாவது தேர்தலை இலக்கு வைத்து உண்மையான தரவுகளை மறைத்தது நான்காவது பாரிய பிழைகள்   இதைவிட மிகவும் ஆபத்தான முட்டாள் தனமான  நடவடிக்கை கொரனோ  நோயாளிகள் வெப்ப வலயத்தில் இலகுவாக குணமடைகிறார்கள் என்று பலாலியில் கோரனோ வலயத்தை உருவாக்கியுள்ளார்கள் .கொழும்பில் கண்டுபிடிக்குப்படும் நோயாளியை அரை நாள் பயணம் செய்து பலாலிக்கு  கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள் இன்னும் பரவ  வழிவகுக்கும் எப்படி சொல்வது என்றால் வுகானில் உள்ள நோயாளியை கொண்டு போய்  பீஸிங் ல் வைத்து கவனிப்பது போல் நோயை உருவாக்கிய சைனீஸ் கூட அப்படி சிந்திக்கவில்லை இங்கு மதனமுத்தாவின்  வாரிசுகள் தானே .

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1) ஆம் தாயே , நான் கோழைதான். கடைசிவரை அவர்களுடன் நின்று இறந்திருக்கலாம் என அடிக்கடி நினைப்பதுண்டு. ஆகக் குறைந்தது இந்த குற்றவுணர்ச்சியிலிருந்தாவது தப்பித்திருக்கலாம். 😢

2) நான் கோழையாகவே இருந்துவிட்டுப் போகிறேன் அம்மணி. ஆனால் அந்தப் படைகளும்,  காட்டி கொடுத்தோர், கூட்டிக் கொடுத்தோர் மற்றும் இந்தியா அழிய வேண்டும் என என் மனம் நெடுனாளாய் யாசிக்கிறது. கோழையின் சாபம் பலிக்காது என்று ஒன்றும் இல்லையே. ☠️

3) நான் உண்மையான தமிழன் என்று கூறுகிறீர்களா அல்லது உண்மையான தமிழன் இல்லை என்கிறீர்களா ? உண்மையான தமிழன் அழகுபெற என்ன செய்ய வேண்டும் ? 🤔

(கவனம் வேண்டும். உங்கள் கருத்துக்களே உங்களுக்கெட்திராய் திரும்பக் கூடும்)

4) இதனால்தான் எல்லோரும் கூறுகிறோம். இந்தப் பேரவலத்திற்குக் காரணமானவர்கள் அழியவேண்டும் என. 😡

 

ஓவ்வொரு இலங்கை முப்படைகளும் எந்த ஒரு வியாதினால் செத்தாலும் சந்தோஷமே, இது வக்கிர புத்தியாக இருந்தாலும் என் நிலை அதுதான். மனம் அவன்கள் செய்த அட்டூழியத்தால் மாறிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

1) என் முதலாவது கருத்து நெடுக்கருக்குத் தான் எழுதினேன் ...உள்ளே வந்து தலையை போட்டுக் கொண்டது நீங்கள்..

.2)அவர் மருத்துவ துறை சார்ந்து இருக்கிறார்...அவரை போன்றவர்கள் எதிரியாயிருந்தாலும் எல்லோரையும் காப்பாற்ற வேண்டியவர்கள்.


3) தமிழர்கள் ,வீரர்கள் எதிரி நோய் வாய்ப்பட்டு தான் சாக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
உத்தரவு போட்டு ,தலைமை தங்கியவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்கும் போது, சம்பளத்திற்காய் வேலை பார்த்தவர்கள் இறக்க வேண்டியது என்று நீங்கள் நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உங்கள் இயலாமையை நீங்கள் வெளிப்படுத்துவதில் தப்பில்லை

3)ஆனால் கோழைத்தனம் என்பது என் கருத்து 


(கவனம் வேண்டும். உங்கள் கருத்துக்களே உங்களுக்கெட்திராய் திரும்பக் கூடும்
4)என்ன அர்த்தம் ? என்னை துரோகி என்று சொல்லப் போறீர்களா ? அந்தப் பட்டம் ஏற்கனவே எனக்கு கிடைத்து விட்டது...நன்றி

1) நெடுக்ஸ்க்கு மட்டும் எழுதினாலும் நானும் வாசிக்கக் கூடியதாக உள்ளது 😜. எனது கருத்தையும் இங்கே எழுதக் கூடியதாக உள்ளது. (இது யாழ்க் களம் என்பதை அம்மணி அடிக்கடி மறந்து போகின்றீர்கள்😂😂)

2) இப்பொழுது என் கண் முன்னே சிறீ லங்கா இராணுவச் சிப்பாய் விபத்தில் காயப்பட்டுக் கிடந்தால் பார்த்துக்கொண்டா நிற்பேன் என நினைக்கிறீர்கள் ? ☹️. மனிதாபிமானம் என்பது மனிதருக்குப் பொதுவானது. ஆனால் சிறிலங்கா படைகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அந்தத் தண்டனை எந்த உருவில் வந்தாலும் மகிழ்வடைவேன். 😡

3) நான் கோழைதான் அம்மணி. அதற்காக என்னை தமிழன் இல்லை என்று நீங்கள் என்னைக் கூறினால் அதை நான் பொருட்படுத்தப் போவத்திலை 😀

4) அவசரப்பட வேண்டாம். ஒருவரை துரோகி என்று கூறும் தகுதி நிச்சயம் எனக்கில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

எத்தனையோ சிங்களவர்கள் போர்குற்ற அவண‌ங்களை தந்துவினார்களே அவர்களும் சாக வேண்டுமா? 

நீங்கள்  பிழையாக விளங்கி உள்ளீர்கள் அவை இலவசமாக வாங்கப்பட்டது அல்ல  .

எந்த சிங்களவனும் ஓரிருவரை தவிர போர்க்குற்ற ஆவணத்தை நேரடியாக ஐநாவில் சமர்பிக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

covid-19-2.jpg

இதுவரை 95 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 477 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

http://athavannews.com/95-கடற்படையினருக்கு-கொரோன/

💯 ஐ  தொட்டவுடன்... வெடி கொளுத்தி.... கொண்டாட  வேணும்.  🎇 💥 🎆  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் எல்லாரும் சமம் சொறிலங்காவில் என்று சொல்லி விட்டு  மற்றைய நாடுகளிடம் கடன் பிச்சை எடுத்து யுத்தம் செய்த முதுகெலும்பு இல்லாத கூட்டம் கோல்பேசில் ஒரு இனத்தை வெற்றி கொண்டதை பெரும் எடுப்புடன்  கொண்டாடி வந்தவர்கள் எண்ணி ஒன்பது வருடமே கொண்டாடினார்கள் இம்முறை கோல்பேசில் பத்தை  மண்டி கிடப்பதை பார்க்க நல்லாத்தான் இருக்கு .அடுத்த வருடம் சிலவேளை நடந்தால் சைனாவின் தேசிய கீதம் பாடித்தான் கொண்டாடவேண்டி வரும் ஏனெனில் டெப்டிராப்டால் இலங்கை சைனாவின் ஒருமாகாணமாகி விடும் .

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் அனைத்து விடுமுறைகளையும் பாதுகாப்பு அமைச்சினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு அமைச்சினால் ரத்து செய்யப்படுவதாகவும் எனவே, அனைத்து படைவீரர்களையும் தத்தமது முகாம்களுக்கு திரும்பி சமுகமளிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின் தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141959

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறையில் சென்றுள்ள கடற்படையினருக்கு கடற்படைத் தலைமை அவசர உத்தரவு

977-19-300x139.jpgவிடுமுறையில் சென்றுள்ள கடற்படையினர் அனைவரும் உடனடியாக தமக்கு அருகேயுள்ள கடற்படை முகாமில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் 71 சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்கு சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவ வீரர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார்.

ஏப்ரல் 21ம் திகதியன்று, விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் திரும்பும்போது, இவர்களுடன் கூட பயணித்த வெலிசரை கடற்படை முகாமில் பணியாற்றும் ஸ்ரீபுரவை சேர்ந்த கடற்படை வீரர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்தே, குறித்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார். 

புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 71 படையினரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/வன்னி/மலலததவல-71-சபபயகள-தனமபபடதத-நடவடகக/72-249305

 

1 hour ago, உடையார் said:

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்கு சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவ வீரர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார்.

நாட்டுக்குள் வைரசை விட்டது சிங்கள ஆட்சியாளர்கள்.

பின்னர், எல்லோரையும் வீட்டில் இருக்க சொன்னார்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.

தற்பொழுது, முகாம்களில் இருந்தவர்கள் ஊடாக மக்களுக்கு பரவும் அபாயம். 

இதற்கும் இந்த பரவலை தடுக்க ஒரு போர்க்குற்றவாளி, அவர் தலைவருக்கு உலக விருதாம்  😡

  • கருத்துக்கள உறவுகள்

 

பஸ்ஸில் வந்த கடற்படைச் சிப்பாயக்கு கொரோனா! 44 படையினர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

முல்லைத்தீவில் கடமையாற்றும் படையினரில் 44 பேர் விடுப்பில் நின்று கடந்த 21ஆம் திகதி பஸ் ஒன்றில் கடமைக்கு மீளத் திரும்பிய நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் பணித்த பஸ்ஸில் பயணித்த -வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படைச் சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவப் பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தில் 44 படையினரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

http://thinakkural.lk/article/39473

 

கொம்பனி தெரு இரணுவ முகாமும் மூடிவிட்டார்களா??  JVP news

  • கருத்துக்கள உறவுகள்

விமானப்படைச் சிப்பாய்க்கு கொரோனா: நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தல்

இலங்கை விமானப்படை பாண்ட் பிரிவின் சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சிப்பாயுடன் நெருக்கமாக பழகியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

 

http://thinakkural.lk/article/39508

மேலும் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று

ditorial   / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 03:03 - 0

 

சற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 424 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 126பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-34-கடறபட-வரரகக-கரன-தறற/150-249349

  • கருத்துக்கள உறவுகள்

படை முகாம்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த ரொஷான் தலைமையில் ஜனாதிபதி செயலணி

roshan-gunathilake-300x200.jpgஇராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயா போர்ஸ் ரொஷான் குணதிலக தலைமையில் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முப்படை முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் வழிகாட்டலுடன் இராணுவ முகாம்களில் முழுமையான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு புதிய ஜனாதிபதி செயலணியொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘மக்களையும் முப்படை அதிகாரிகளையும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது முக்கியமானதாகும். தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டியுள்ள குழுக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை நோய்த்தடுப்பு நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும். முன்னுரிமையளிக்கப்பட வேண்டியது வைரஸ் சமூகத்தில் பரவுவதை தடுப்பதாகும்’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முப்படைக்கு சொந்தமான அனைத்து முகாம்களையும் கண்காணித்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிபுணர்கள் குழுவொன்றிடம் தெரிவித்தார். நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். முகாம்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக தேவையின் அடிப்படையில் விசேட வைத்திய நிவுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நோயை கட்டுப்படுத்துவதில் இதுவரை அடைந்துள்ள வெற்றியை போன்றே எங்கேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அதனை கண்டறியவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் விமானப்படைத் தளபதி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயா போர்ஸ், ரொஷான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயந்த பெரேரா, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் (ஓய்வுபெற்ற) அனந்த பீரிஸ், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, விசேட வைத்திய நிபுணர்களான பந்துல விஜேசிறிவர்த்தன, வஜிர சேனாரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

http://thinakkural.lk/article/39539

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 61 கடற்படை வீரர்களுக்கு கொரோனா!

sri-lanka-navy.jpg?189db0&189db0

 

 

இலங்கையில் நேற்று (27) மொத்தமாக 65 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 61 பேர் கடற்படை வீரர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று (28) தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரை மொத்தமாக 197 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்று இராணுவ வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று இராணுவ தளபதியை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 455 ஆக காணப்படுகிறது.

https://newuthayan.com/நேற்று-மட்டும்-61-கடற்படை/

இரண்டு வாரங்களின் முன்னர் - இந்தியாவில் இருந்து வரக்கூடியவர்களை கண்காணிக்க உள்ளது சிங்கள கடற்படை 

இன்று -  இலங்கையில் இருந்து வரக்கூடியவர்களை கண்காணிக்க உள்ளது இந்திய கடற்படை 🙄

6 minutes ago, ampanai said:

இரண்டு வாரங்களின் முன்னர் - இந்தியாவில் இருந்து வரக்கூடியவர்களை கண்காணிக்க உள்ளது சிங்கள கடற்படை 

கண்காணிப்பு என்ட போர்வையில கேரளா கஞ்சா நிறைய கடத்தியிருக்க வேணும்.

அதான் கேரளா கொரோனா பிடிச்சிருக்கு.

ஸ்ரீலங்கா கடற்படை தலைமையகத்திற்கு சென்று கொண்டிருந்த சிப்பாய்களுக்கு ஏற்பட்ட ஆபத்து!

காலி-கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேருந்து அம்பலாங்கொடை-ரன்தொபே பகுதியில் வீதியிலிருந்து விலகி அருகில் இருந்த சுவரொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடற்படை சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அதில் பயணித்த 5 கடற்படை சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை தலைமையகத்திற்கு சென்று கொண்டிருந்த கடற்படை சிப்பாய்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/142059

ஹெரோய்ன் விநியோகத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது

பனாகொடை இராணுவ முகாமில் விசேட அவசரகால பணிகளில் ஈடுபடுவருதாகக்கூறி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி  ஹெரோய்ன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட   இராணுவ வீரர் ஒருவரை, களுத்துறை வலய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், இன்று(28)  கைதுசெய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஒன்றின் அடிப்படையில், களுத்துறை- ரஜவத்தை சந்தியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். 

சந்தேகநபர் முகக்கவசத்தில் மறைத்துக் கொண்டுச் சென்ற 10 கிராம் நிறையுடைய  ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹெரோய்ன்-விநியோகத்தில்-ஈடுபட்ட-இராணுவ-வீரர்-கைது/175-249401

11 minutes ago, ampanai said:

பனாகொடை இராணுவ முகாமில் விசேட அவசரகால பணிகளில் ஈடுபடுவருதாகக்கூறி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி  ஹெரோய்ன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட   இராணுவ வீரர் ஒருவரை, களுத்துறை வலய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், இன்று(28)  கைதுசெய்துள்ளனர். 

இவ்வாறான ஒருவருக்கு கோவிட் 19 இருந்து அவரால் பலருக்கு பரவும் சாத்தியங்கள் உள்ளன. 

இவர் எல்லாம் இராணுவ வீரர் ????????

  • கருத்துக்கள உறவுகள்

corona-virus-getty.jpg

கொரோனா தொற்று உறுதியாகிய 588 பேரில் 208 பேர் கடற்படையினர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 588 பேரில் 208 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாகவும் இதேவேளை தற்போது கொரோனா நோயாளிகளாக 588 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 317 பேர் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனா-தொற்று-உறுதியாகிய/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On ‎26‎-‎04‎-‎2020 at 14:23, Kapithan said:

1) நெடுக்ஸ்க்கு மட்டும் எழுதினாலும் நானும் வாசிக்கக் கூடியதாக உள்ளது 😜. எனது கருத்தையும் இங்கே எழுதக் கூடியதாக உள்ளது. (இது யாழ்க் களம் என்பதை அம்மணி அடிக்கடி மறந்து போகின்றீர்கள்😂😂)

2) இப்பொழுது என் கண் முன்னே சிறீ லங்கா இராணுவச் சிப்பாய் விபத்தில் காயப்பட்டுக் கிடந்தால் பார்த்துக்கொண்டா நிற்பேன் என நினைக்கிறீர்கள் ? ☹️. மனிதாபிமானம் என்பது மனிதருக்குப் பொதுவானது. ஆனால் சிறிலங்கா படைகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அந்தத் தண்டனை எந்த உருவில் வந்தாலும் மகிழ்வடைவேன். 😡

3) நான் கோழைதான் அம்மணி. அதற்காக என்னை தமிழன் இல்லை என்று நீங்கள் என்னைக் கூறினால் அதை நான் பொருட்படுத்தப் போவத்திலை 😀

4) அவசரப்பட வேண்டாம். ஒருவரை துரோகி என்று கூறும் தகுதி நிச்சயம் எனக்கில்லை. 🙂

எல்லாரும் எல்லாத் திரியிலும் கருத்து எழுதும் உரிமை இருக்குது...ஆனால் சிலது சில வேளை , பேரை குறிப்பிட்டு எழுதும் போது அதற்கு காரணம் இருக்கு ....அவர் ஏன் இதற்கு பதில் எழுதவில்லை ...அவருக்குத் தெரியும்.
அநேகமானவர்கள் உங்கள் மனநிலையில் தான் இருக்கிறார்கள்...எங்களை அழித்த சிங்களவர்கள் இப்படியாவது சாகட்டும் என்று தான் நினைக்கிறார்கள் ...ஊரில் பிரபல்யமான ஒரு டொக்டர் கூட  ஆமிக்கு கொரோனா வந்தது மகிழ்ச்சி  என்று பதிந்திருந்தார்...வாசித்ததும் அப்படியே சொக்காயிட்டேன்:shocked:
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:


அநேகமானவர்கள் உங்கள் மனநிலையில் தான் இருக்கிறார்கள்...எங்களை அழித்த சிங்களவர்கள் இப்படியாவது சாகட்டும் என்று தான் நினைக்கிறார்கள் 

ரதி, இது ஒவ்வொரு தமிழனின் மனத்திலுமுள்ள ஆற்றாமையின் வெளிப்பாடு. அது காலத்துக்கும் அழிக்கமுடியாதது. ஏனெனில் நாம் அவர்களால் அவ்வளவு  கொடுமைகளை சந்தித்துள்ளோம் . இப்போதைக்கு மனதில் இப்படியாவது சாகட்டும் என்று எண்ணி சந்தோசப்படுவதை விட வேறொன்றும் செய்ய முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.