Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70ப‌து பெண்க‌ளை காத‌ல் என்று சொல்லி ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இவனை மட்டும்  குறை செல்ல முடியாது ஏமாறும் பொண்களை தான் சொல்லனும், அத்துடன் பெற்றோரின் கவனிப்பும் இல்லாமையும். முன்பின் தெரியாமல்  facebook , whatsapp இல் இணைந்தாவனுடன் காதல் செய்தால்  இப்படிதான்.

இவனும் காவிகளும் ஓன்றே, தேடிப்போபவர்கள் தான் கவனமாக இருக்கனும் 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்து விட்டு... 
"70 வயது பெண்களை.. காத‌ல் என்று சொல்லி, ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்."
என்று வாசித்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது... 
நம்ம பையன்... அப்பிடித்தான், எழுதுவான் என்று,
மனதை... சமாதானமாக்கி  கொண்டேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசப்பட விவகாரம் - காசி விரித்த வலையில் பள்ளி தோழி முதல் பெண் டாக்டர் வரை சிக்கியது எப்படி?

பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக
பொள்ளாச்சி சம்பவத்தை போல் பல பெண்களை சீரழித்த குமரி இளைஞர் காசி

தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று நாகர்கோவில் காசி விவகாரம். பள்ளி மாணவிகள் தொடங்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அன்பாக பழகி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஏமாற்றி வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த காசி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை.

யார் இந்த காசி என்ற சுஜி?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). இவர் இன்ஜினீயரிங் படித்துள்ளார். காசியின் தந்தை, அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்தார்.இறைச்சி வியாபாரம் முடிந்த பின்பு சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார்.

பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்கில் இருப்பது போன்ற போட்டோக்கள், வீடியோக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் பலர் காசியை காதலித்துள்ளனர். அந்த பெண்களை மயக்கும் விதமாக காசி அவ்வப்போது போட்டோக்கள், டிக் டாக் வீடியோக்கள் என பதிவிட்டு வந்துள்ளார். இவர் இளம்பெண்களுடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை ஆபாச வீடியோவாக பதிவு செய்து பணம் சம்பாதித்துள்ளார். 

இதே போல் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் பணிபுரிந்த பெண் மருத்துவரிடம் பழகி அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது மருத்துவர் அளித்த புகாரில் கைதாகி நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பள்ளி தோழியிடம் இருந்து தொடக்கம்

காசியின் பள்ளி தோழி ஒருவர் விமான பணிப்பெண்ணாக உள்ளார். இருவரும் நாகர்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்துள்ளனர். சென்னையில் விமான பணிப்பெண்ணுக்கான படிப்பில் இருந்தபோது மீண்டும் காசியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை தனக்கு சாதகமாக்கிய காசி, அப்பெண் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பதை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளார் காசி.

காசி

ஒரு நாள் திடீரென தனது அம்மாவுக்கு புற்றுநோய் உள்ளதாகவும்; அதற்கு மருந்து வாங்க வேண்டும் என்று 1.50 லட்சம் பணமும், 16 கிராம் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். அதே போன்று பல காரணங்களைச் சொல்லி அடிக்கடி அந்த பெண்ணிடம் பணம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் காசி அந்த பெண்ணுக்கு போன் செய்வதை நிறுத்தி கொண்டதுடன் அவருடைய தொடர்பையும் தவிர்த்து வந்துள்ளார். 

காசியால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், காசியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.பணத்தை திருப்பிக்கேட்டால்,நாம் இருவரும் இருந்த அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து செய்வதறியாது தவித்த அந்த பெண், தற்போது காசி காவல்துறையினரிடம் சிக்கியது தெரிந்ததும் காசி மீது புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். டாக்டரின் கருத்துக்கு எதிராக கருத்து விடியோ பதிவு செய்து வந்துள்ளார் 

காசி.இவ்வாறு தனக்கு எதிராக கருத்து சொன்ன பெண் மருத்துவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அந்த மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதை காசி படம் எடுத்துள்ளார்.தனது குடும்ப உறுப்பினருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக பெண் மருத்துவரிடமிருந்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் என ஆறரை லட்சம் ரூபாய் வரை காசி பெற்றுள்ளார்.

காசி சிக்கியது எப்படி?

காசி

ஒரு முறை இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது காசியின் செல்போனை பெண் மருத்துவர் எடுத்து பார்த்துள்ளார். அப்போது காசி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் செல்போனில் இருந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் டாக்டர், காசியிடம் இருந்து விலகத் தொடங்கினார். 

ஆத்திரமடைந்த காசி, தினசரி பெண் மருத்துவரை பணம் கேட்டு அதிகமாக தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

பெண் மருத்துவர் பணம் தர மறுத்ததையடுத்து பணம் தராவிட்டால் இருவரும் தனிமையில் இருந்த அந்தரங்கப் படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் பெண் டாக்டர் எந்த மிரட்டலுக்கும் பயப்படவில்லை எனவே, கடந்த புதன்கிழமை காசி தனது போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் பெண் மருத்துவர், கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்த போது ரகசிய கேமராவில் எடுத்த அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

கோப்புப்படம்NURPHOTO

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர், உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்யிடம் ஆன்லைனில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காசியிடம் நடத்திய விசாரணையில் பெண் டாக்டரை மிரட்டியதை போன்று பணத்திற்காக பல பெண்களை மிரட்டி ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து காசி மீது நாகர்கோவிலில் உள்ள இரு காவல்நிலையங்களில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காசியை சிறையில் அடைத்தனர்.

கிடுக்குபிடி விசாரணை

போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களை காசி,ஏமாற்றியது தெரிய வந்தது. இந்த குற்றங்களை காசி ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பு இல்லை என போலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காசியுடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் சிலரிடம் போலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை காசி ஏமாற்றியது எப்படி?

போட்டோக்கள் மற்றும் வீடியோவில் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் மட்டுமின்றி, அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களையும் விசாரித்து வாக்குமூலம் பெற தனி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டது போல், காசி தலைமையில் நாகர்கோவிலிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக விசாரணை நடத்தி வரும் தனி பிரிவு போலிசார் தெரிவித்தனர்.

குமரியில் நடந்த இச்சம்பவம் குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் லீமா ரோஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில் "இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் குமரி மாதர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் ஆன்லைனில் மனு அளித்தோம்".

"சென்னையில் உள்ள மாதர் சங்கம் சார்பில் சென்னை காவல் உயர் அதிகாரிகளிடமும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாதர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.". என்றார் லீமா ரோஸ்.

காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கதக்கது

"இந்த வழக்கில் இதுவரை ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார் ஆனால் அவர் மட்டும் இதை தனியாக செய்திருக்கவாய்ப்பு இல்லை.

இவனுக்கு பின்னால் அரசியல்வாதிகள், பணம்படைத்தவர்கள் இருக்க அதிக வாய்ப்பு உண்டு.எனவே அவனுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

'இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை, பெங்களூர்,குமரி என தமிழகம் உட்பட வெளி மாநிலங்களிலும் உள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார்.

பொள்ளாச்சியை விட இது மிக மோசமானது

'குமரியில் நடந்துள்ள இந்த சம்பவம் பொள்ளாச்சியை விட மிக மோசமானது இதில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பெயர் வெளியே வராத அளவு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்'.

'தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எவரும் இம்மாதிரியான குற்றங்களை செய்யாமலிருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்கிறார் லீமா ரோஸ்.

லீமா ரோஸ். லீமா ரோஸ்

இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'பல பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் காசி கைது செய்யபட்டுள்ளார். காசி குறித்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது'.

காசி மீது குண்டர் சட்டம்

அவர் மேலும் கூறியதாவது, 'காசியிடம் இருந்து கைபற்றப்பட்ட லேப்டாப்,ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ்,மொபைல் போன,சிடி ஆகியவற்றை மாவட்ட காவல் சைபர் கிரைம் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 50க்கும் அதிகமான வீடியோக்கள் கண்டுபிக்கப்ட்டுள்ளது.

'காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணுடைய மொபைல் எண்ணான 94981 11103 க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.

மேலும் அவர் பேசுகையில் 'சமூக வலைதளங்களில் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் தெரியாத நபர்களிடம் ONLINE CHAT செய்ய வேண்டாம்'. 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் பதிவு செய்யும் புகைபடங்கள்,வீடியோக்களுக்கு லைக் போடும் போது கவனமாக இருக்க வேண்டும்.'

'காசி போன்ற நபர்கள் பெண்களை குறிவைத்து ஏமாற்றி வருகின்றனர் இப்படியான நபர்கள் பெண்களை தொடர்பு கொண்டு மிரட்டினால் தைரியமாக காவல்துறையிடம் புகார் கொடுங்கள் அல்லது நம்பிக்கையானவர்களிடம் தெரிய படுத்துங்கள்'.

'பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்;கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்'குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.

ஸ்ரீநாத் ஸ்ரீநாத்

இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழ் காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தது ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அவர்கள் தரப்பு இது குறித்து விளக்கம் அளித்தவுடன், அந்த விளக்கம் பிரசுரிக்கப்படும.

https://www.bbc.com/tamil/india-52482238

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார்.

சமூக வலையில்.. பெண்ணியம்.. பெரியாரிசும்.. பேசுறதுகள் பலது இதே தான். இவர் மட்டுமல்ல.. இவருக்கு முன்னரும் பலர் இதே திருவிளையாடல்களை செய்துள்ளனர். சிலர் இப்போ பெரிய பிரபல்யங்களாகியும் விட்டனர். இவர் பிடிபட்டுப் போனார் அவ்வளவே.

இது ஒன்றும் புதிதல்ல. ஏலவே பல பாடங்கள் படித்தும் திருந்துவதாக இல்லை பெண்கள் சமூகம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தலைப்பை பார்த்து விட்டு... 
"70 வயது பெண்களை.. காத‌ல் என்று சொல்லி, ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்."
என்று வாசித்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது... 
நம்ம பையன்... அப்பிடித்தான், எழுதுவான் என்று,
மனதை... சமாதானமாக்கி  கொண்டேன். :grin:

மாண்புமிகு த‌மிழ் சிறி அண்ணா , இது யாழ் க‌ள‌ம்  அது தான் நாக‌ரிக‌மான‌ முறையில் த‌லைப்பை போட்டேன் ,  இளைஞ‌ன் காத‌ல் என்ற‌ பெய‌ரில் பெண்க‌ளுட‌ன் எடுத்த‌ ஆபாசா காணொளிக‌ளை காட்டி  ப‌ண‌ம் ப‌றித்தார் என்று போட‌ ம‌ன‌ம் வ‌ர‌ல‌ /

அது ச‌ரி த‌மிழ் சிறி அண்ணா , இவ‌னுக்கு என்ன‌ த‌ண்டனை குடுக்க‌னும் என்று எழுத‌ல‌ 😉

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இவனை மட்டும்  குறை செல்ல முடியாது ஏமாறும் பொண்களை தான் சொல்லனும், அத்துடன் பெற்றோரின் கவனிப்பும் இல்லாமையும். முன்பின் தெரியாமல்  facebook , whatsapp இல் இணைந்தாவனுடன் காதல் செய்தால்  இப்படிதான்.

இவனும் காவிகளும் ஓன்றே, தேடிப்போபவர்கள் தான் கவனமாக இருக்கனும் 

உடையார் ஜ‌யா , இவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் போல் ப‌ல‌ பெண் பிள்ளைக‌ளுக்கு ந‌டித்து காட்டி இருக்கிறான் , ப‌ள்ளி பிள்ளைக‌ளுக்கு பெரிசா சிந்திக்கும் திற‌மை இல்லை ,

ஏன் இங்கை டென்மார்க்கில் பேஸ்வுக்கை மாதிரி ARTO என்ற‌ பொது வெளி த‌ள‌ம் இருந்த‌து , என்னை விட‌ கொஞ்ச‌ம்  வ‌ய‌து குறைந்த‌ பிள்ளை என்னோடு  chat ப‌ண்ணிட்டு கேட்டா , கோயில் திருவிழாவுக்கு வா இர‌ண்டு பேரும் சோடா குடிச்சு கொண்டு க‌தைப்போம் என்று 😁😁 , ஆளை விட‌ம்மா என்று நான் எஸ்கேப் ஆகிட்ட‌ன் 😁😁 , என்  கூட‌ எழுதின‌ அந்த‌ பொண்ணு இந்த‌ காணொளியில் இருப்ப‌வ‌ர்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளிட‌ம் எம்பிட‌னும் , அப்ப‌டியான‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் கேள்வி குறியா போய் விடும்  உடையார் ஜ‌யா 😓   /

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

சமூக வலையில்.. பெண்ணியம்.. பெரியாரிசும்.. பேசுறதுகள் பலது இதே தான். இவர் மட்டுமல்ல.. இவருக்கு முன்னரும் பலர் இதே திருவிளையாடல்களை செய்துள்ளனர். சிலர் இப்போ பெரிய பிரபல்யங்களாகியும் விட்டனர். இவர் பிடிபட்டுப் போனார் அவ்வளவே.

இது ஒன்றும் புதிதல்ல. ஏலவே பல பாடங்கள் படித்தும் திருந்துவதாக இல்லை பெண்கள் சமூகம். 

ச‌கோத‌ரா , நாங்க‌ள் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து த‌மிழீழ‌த்தில் , உற‌வின‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , பாட‌சாலை போனா ஆசிரிய‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , எங்க‌ளுக்கு சிறு வ‌ய‌து முத‌லே உற‌வின‌ர்க‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌தை சொல்லி த‌ந்து ந‌ல்ல‌ நிலையில் எங்க‌ளை வ‌ள‌த்து விட்ட‌வை , எங்க‌ட‌ நாட்டு இளைஞ‌ர்க‌ள் காத‌ல் க‌த்த‌ரிக்காயை விட‌ எம் போராட்ட‌த்தையும் எம் த‌லைவ‌ரையும் அதிக‌ம் நேசிச்ச‌வை , இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லில் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ஒரு போதும் ஈடு ப‌ட‌ மாட்டார்க‌ள் 👏🙏 ,

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

மாண்புமிகு த‌மிழ் சிறி அண்ணா , இது யாழ் க‌ள‌ம்  அது தான் நாக‌ரிக‌மான‌ முறையில் த‌லைப்பை போட்டேன் ,  இளைஞ‌ன் காத‌ல் என்ற‌ பெய‌ரில் பெண்க‌ளுட‌ன் எடுத்த‌ ஆபாசா காணொளிக‌ளை காட்டி  ப‌ண‌ம் ப‌றித்தார் என்று போட‌ ம‌ன‌ம் வ‌ர‌ல‌ /

அது ச‌ரி த‌மிழ் சிறி அண்ணா , இவ‌னுக்கு என்ன‌ த‌ண்டனை குடுக்க‌னும் என்று எழுத‌ல‌ 😉

கரந்தை ஜெயக்குமார்: சிரிப்போம் ...

பையா.... இவங்களுக்கு, இருட்டடி  கொடுத்து, 
பாக்கு வெட்டியால்..  அதை  "கட்"  பண்ணி விட வேணும் என்று, ஆசை இருந்தாலும்..
நடக்கிற காரியமா

தமிழகத்தில்.... இதற்கு முன் எத்தனையோ... பாலியல் வன் கொடுமைகள் நடந்தும்,
அவர்கள்... அரசியல் செல்வாக்காலும், செல்வ செழிப்பாலும்...
சட்டத்தில்,  இருந்து தப்பி... வந்து விடுகிறார்கள்.

இப்படியான செயல்களை... அரசும், நீதித்துறையும்... 
கடுமையான நடவடிக்கைள்,எடுக்கத் தவறாத பட்சத்தில்... 
இந்தச் சம்பவமும், இரண்டு மூன்று கிழமைகளில்...மக்களால் மறக்கப் பட்டு,  
புதிய ஒரு.... காமக் கொடூரன் உருவாகி வருவான். 

அதனைத்தான்... அரசியல் வாதிகளும், நீதித்துறையும்... விரும்புகின்றதோ தெரியவில்லை. 😥

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

ச‌கோத‌ரா , நாங்க‌ள் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து த‌மிழீழ‌த்தில் , உற‌வின‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , பாட‌சாலை போனா ஆசிரிய‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , எங்க‌ளுக்கு சிறு வ‌ய‌து முத‌லே உற‌வின‌ர்க‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌தை சொல்லி த‌ந்து ந‌ல்ல‌ நிலையில் எங்க‌ளை வ‌ள‌த்து விட்ட‌வை , எங்க‌ட‌ நாட்டு இளைஞ‌ர்க‌ள் காத‌ல் க‌த்த‌ரிக்காயை விட‌ எம் போராட்ட‌த்தையும் எம் த‌லைவ‌ரையும் அதிக‌ம் நேசிச்ச‌வை , இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லில் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ஒரு போதும் ஈடு ப‌ட‌ மாட்டார்க‌ள் 👏🙏 ,

நான் அறிய பிரான்ஸில் இருந்து ஒருவர் பெண்ணியம்.. பெரியாரிசம்.. பேசிப் பேசி பெண்களை மடக்கி.. இப்ப பெரிய பகுத்தறிவு வாதியாக மட்டுமல்ல.. விடுதலைப்புலிகளையும் தலைமையையும் படுமோசமாக சித்தரிக்கும் அளவுக்கு வளர்த்திட்டார். இப்படிப் பலர். இவர்களும் ஈழத்தவர்கள் தான். 

விடுதலைப்புலிகளின் சமூகக் கட்டுப்பாட்டை  நன்னடத்தைகளை விரும்பாத பல தறுதலைகள் தப்பி வெளிநாட்டுக்கு ஓடியாந்து போடுற கூத்து அதிகம். அவர்கள் ஒளிய கிடைத்திருக்கும்.. விடயங்கள்.. பெண்ணியம்.. பெரியாரிசம்... புலியெதிர்ப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

உடையார் ஜ‌யா , இவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் போல் ப‌ல‌ பெண் பிள்ளைக‌ளுக்கு ந‌டித்து காட்டி இருக்கிறான் , ப‌ள்ளி பிள்ளைக‌ளுக்கு பெரிசா சிந்திக்கும் திற‌மை இல்லை ,

ஏன் இங்கை டென்மார்க்கில் பேஸ்வுக்கை மாதிரி ARTO என்ற‌ பொது வெளி த‌ள‌ம் இருந்த‌து , என்னை விட‌ கொஞ்ச‌ம்  வ‌ய‌து குறைந்த‌ பிள்ளை என்னோடு  chat ப‌ண்ணிட்டு கேட்டா , கோயில் திருவிழாவுக்கு வா இர‌ண்டு பேரும் சோடா குடிச்சு கொண்டு க‌தைப்போம் என்று 😁😁 , ஆளை விட‌ம்மா என்று நான் எஸ்கேப் ஆகிட்ட‌ன் 😁😁 , என்  கூட‌ எழுதின‌ அந்த‌ பொண்ணு இந்த‌ காணொளியில் இருப்ப‌வ‌ர்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளிட‌ம் எம்பிட‌னும் , அப்ப‌டியான‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் கேள்வி குறியா போய் விடும்  உடையார் ஜ‌யா 😓   /

இவனைபோல் இன்னும் எத்தனை பேரோ வெளியில், இவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கனும், ஆனா நீதி துறையில்ல விளையாடி வெளியே வந்துடுவான் கொஞ்ச காலத்தில்😡

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

நான் அறிய பிரான்ஸில் இருந்து ஒருவர் பெண்ணியம்.. பெரியாரிசம்.. பேசிப் பேசி பெண்களை மடக்கி.. இப்ப பெரிய பகுத்தறிவு வாதியாக மட்டுமல்ல.. விடுதலைப்புலிகளையும் தலைமையையும் படுமோசமாக சித்தரிக்கும் அளவுக்கு வளர்த்திட்டார். இப்படிப் பலர். இவர்களும் ஈழத்தவர்கள் தான். 

விடுதலைப்புலிகளின் சமூகக் கட்டுப்பாட்டை  நன்னடத்தைகளை விரும்பாத பல தறுதலைகள் தப்பி வெளிநாட்டுக்கு ஓடியாந்து போடுற கூத்து அதிகம். அவர்கள் ஒளிய கிடைத்திருக்கும்.. விடயங்கள்.. பெண்ணியம்.. பெரியாரிசம்... புலியெதிர்ப்பு. 

கனடாவிலையும் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

கரந்தை ஜெயக்குமார்: சிரிப்போம் ...

பையா.... இவங்களுக்கு, இருட்டடி  கொடுத்து, 
பாக்கு வெட்டியால்..  அதை  "கட்"  பண்ணி விட வேணும் என்று, ஆசை இருந்தாலும்..
நடக்கிற காரியமா

தமிழகத்தில்.... இதற்கு முன் எத்தனையோ... பாலியல் வன் கொடுமைகள் நடந்தும்,
அவர்கள்... அரசியல் செல்வாக்காலும், செல்வ செழிப்பாலும்...
சட்டத்தில்,  இருந்து தப்பி... வந்து விடுகிறார்கள்.

இப்படியான செயல்களை... அரசும், நீதித்துறையும்... 
கடுமையான நடவடிக்கைள்,எடுக்கத் தவறாத பட்சத்தில்... 
இந்தச் சம்பவமும், இரண்டு மூன்று கிழமைகளில்...மக்களால் மறக்கப் பட்டு,  
புதிய ஒரு.... காமக் கொடூரன் உருவாகி வருவான். 

அதனைத்தான்... அரசியல் வாதிகளும், நீதித்துறையும்... விரும்புகின்றதோ தெரியவில்லை. 😥

தமிழ் சிறீ,

அந்த ஒரு படமே போதும்.  ஆயிரம் அர்த்தங்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

யாரை இருக்கும் அந்த‌ வ‌ள‌ந்து வ‌ரும் த‌றுத‌ல‌ இசை அமைப்பாள‌ர் 😡

இவ‌ர்க‌ள் த‌ங்க‌ளின் ஊட‌க‌த்தில் அவ‌ரின் பெய‌ரை சொல்லா விட்டாலும் , வேறு ஒரு யூடுப் ச‌ண‌ல் திற‌ந்து ம‌க்க‌ளுக்கு ஆதார‌த்தோடு அந்த‌ பிராடு இசை அமைப்பாள‌ர் யார் என்று தெரிவிச்சா அவ‌ர் கூடிய‌ சீக்கிர‌மே த‌னிமை ப‌டுத்த‌ ப‌டுவார் / 

20 hours ago, nedukkalapoovan said:

நான் அறிய பிரான்ஸில் இருந்து ஒருவர் பெண்ணியம்.. பெரியாரிசம்.. பேசிப் பேசி பெண்களை மடக்கி.. இப்ப பெரிய பகுத்தறிவு வாதியாக மட்டுமல்ல.. விடுதலைப்புலிகளையும் தலைமையையும் படுமோசமாக சித்தரிக்கும் அளவுக்கு வளர்த்திட்டார். இப்படிப் பலர். இவர்களும் ஈழத்தவர்கள் தான். 

விடுதலைப்புலிகளின் சமூகக் கட்டுப்பாட்டை  நன்னடத்தைகளை விரும்பாத பல தறுதலைகள் தப்பி வெளிநாட்டுக்கு ஓடியாந்து போடுற கூத்து அதிகம். அவர்கள் ஒளிய கிடைத்திருக்கும்.. விடயங்கள்.. பெண்ணியம்.. பெரியாரிசம்... புலியெதிர்ப்பு. 

என்ன சார் இவ்வாறான குற்றங்களுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? புலிகளின் ஆதரவாளர்களாக  உறுப்பினர்களாக இருந்து இப்படிப்பட்ட குற்றங்களை செய்தவர்களையும் எனக்கு தெரியும். அதற்காக போராளிகள் அதற்கு பொறுப்பேற்க முடியுமா?  குற்றம்  செய்பவர்கள் எல்லாத்தரப்பிலும் உள்ளார்கள். அதற்அகு புலி ஆதரவு, புலி எதிர்பபு என்று எந்த வித்தியாசமும் இல்லை  அது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. 

பொதுவாக இப்படியான குற்றங்களை செய்பவர்கள் நல்லவர்கள் போல் நடித்து தான் பின்னர் தமது உண்மை முகத்தை வெளிப்படுத்துவர். ஆகவே தனிமனித குற்றங்களுக்கு அரசியல் சாயம் பூசுவது தவறு.

2009 யுத்த இறுதிக்காலத்தில் தாயகத்தை நேசித்த மக்களை திட்டமிட்டு ஏமாற்றி சுவிஸ் வங்கிகளிடம்  பல ஆயிரம் பிராங்குகளை கடனான பெறவைத்து திரட்டிய மில்லியன் கணக்கான  பணத்தை கொள்ளையடித்த அனைவரும் பிரபாகரனையும் புலிகளையும் சாட்டி தான்அந்த ஈனச்செயலைப் புரிந்தனர்.  அதற்காக பிரபாகரனையும் புலிப் போராளிகளையும் அதற்கு பொறுப்பாளியாக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அவ்வாறு  கூறிய பலருடன் நான் விவாதித்துள்ளேன்.  அந்த கடனை கட்டி முடியும் வரை கிட்டத்தட்ட 2015 வரை தமது பிள்ளைகளுக்கு நல்ல உடை கூட வாங்க முடியாமல் கஷ்ரத்தின் மத்தியில்  மாத கட்டுத் தொகையை கட்டி முடித்த எத்தனையோ குடும்பங்களை  எனக்கு தெரியும். 

ஆகவே தனி மனித குற்றங்களை அரசியலுடன் இணைத்து உங்களுக்கு பிடிக்காத அரசியல் சித்தாந்தம் உடையவர்கள் எல்லோரும்  குற்றவாளிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முயலாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஆகவே தனி மனித குற்றங்களை அரசியலுடன் இணைத்து உங்களுக்கு பிடிக்காத அரசியல் சித்தாந்தம் உடையவர்கள் எல்லோரும்  குற்றவாளிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முயலாதீர்கள். 

நாங்கள் நிராகரிப்பதை இன்னொருவன் பொறுக்கிறான் என்பதற்காக அவன் மீது குற்றம் சுமத்தும் நிலை எமக்கில்லை.

இங்கு சொல்ல வந்த விடயம் அரசியல் சார்ந்ததும் அல்ல. நாங்களும் தனிநபர்களை பற்றித்தான் சொல்கிறோம். 

தறுதலைகளாக வகுத்துக் கொண்டதுகள் தம்மை பெண்களின் முன் உத்தமர்களாக.. இன்னும் கொஞ்சம்.. கெட்ட உத்தமர்களாக போக்குக் காட்டி பெண்களை வசப்படுத்தும்.. கருவியாக பெண்ணியம்.. பெரியாரிசம்.. புலியெதிர்ப்பை கையாண்டதை தான் சொல்கிறோம். நிதர்சனத்தில் தரிசித்ததை அடிப்படையாகக் கொண்டு.

நீங்கள் ஏன் இதற்குள் அரசியல் சித்தாந்தங்களை புகுத்துகிறீர்கள்.

அரசியல் அறிவற்றதுகள் பேசுவதை எல்லாம் நாங்கள் அரசியல் சித்தாந்தமாகவே கருதுவதில்லை. அதுவேற விடயம். 

குறிப்பாக உங்களின் அனுபவத்தை பாருங்கள்..

சுவிஸில் கடன் எடுத்து மண்மீட்பு நிதிக்கு கொடுத்ததை.. பிரபாகரனுக்கு புலிகளுக்கு கொடுத்ததாகச் சித்தரிக்கிறீர்கள்.

இதே ஊரில் இருந்த மக்கள் பலர் தாமாக முன் வந்து தங்கம் தங்கமாக கொட்டிக் கொடுத்தார்கள் மண்மீட்பு நிதிக்கு. இன்னும் சிலர் கேட்ட போது கொடுக்காமல்.. கொழும்புக்கு போக பாஸ் எடுக்க தங்கத்தை கொடுக்க வேண்டிய சூழலில் கொடுத்தார்கள்.

மேலும்.. தாமாக முன் வந்து பங்களித்த பலருக்கு அது மீளக் கையளிக்கப்பட்டிருந்தது. எங்களுக்கும் கூட.. வழங்கப்பட்ட தங்கத்தை மீளப் பெறுமாறு கடிதம் அனுப்பி.. அதனை மீளக் கையளித்தார்கள். எங்கள் அனுபவமும் உங்கள் அனுபவமும் ஒன்றல்ல. அவரவர் எப்படி ஒரு விடயத்தை கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பெறுதிகள் அமைகின்றன. 

மண்மீட்பு நிதிக்கு என்று கொடுத்துவிட்டு.. அது எங்கபோகுது என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்.. அது விளங்கின மாதிரித்தான். அதேபோல்.. உங்களால்.. கொடுக்க முடியாத சூழலில் மண்மீட்பு நிதியை கொடுக்க யாரும் கட்டாயப்படுத்தியதாக எங்கள் அனுபவத்தில் காணவில்லை. 

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

நெடுக்ஸ் நான் முன்னரே சொன்னது போல்  தறுதலைகளாக வகுத்து கொண்டவர்கள் நல்லவர்கள் போல் நடிப்பது இயல்பு தான். ஆனால்  இதில் புலி ஆதரவு எதிர்ப்பு என்ற கருத்தை நீங்கள் கூறியது தான் முரணானது. தறுதலைகளுக்கு புலி ஆதரவு எதிர்ப்பு என்ற பாகுபாடு இல்லை. நீங்கள் நிதர்சனத்தில் கண்டது போல் நானும் புலி ஆதரவு எதிர்ப்பு என்ற பாகுபாடு இன்றி இப்படியான குற்றங்களை செய்தவர்களை கண்டிருக்கிறேன். 

அது போக நான் குறிப்பிட்டது மக்கள் தொடர்ந்து பங்களித்து வந்த மண்மீட்பு நிதி பற்றியது அல்ல. அதை தொடர்ச்சசியாக பல வருடங்களாக நாம் செய்துதான் வந்துள்ளோம். அது வல்ல நான் கூறியது. போராட்டத்தின் இறுதி பகுதியில் இனி புலிகளால் தாக்கு பிடிக்க முடியாது என்று தெரிந்த பின்னரும் அவசர அவசரமாக  புலிகளையும் பிரபாகரனையும் சாட்டி மக்களை கடனாளியாக்கி  பெருமளவு பணத்தை கொள்ளையடித்தவர்கள் புலி உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான். மே 12 / 13 திகதிகளில் கூட பெருமளவு (ஒருவரிடம் சராசரியாக 20000 இருந்து 50000  பிராங்வரை) கடன்களை எடுத்தவர்கள் நேர்மையாளர்களாக இருந்திருந்தால் மே 19 ம் திகதி க்கு பிறகு அதை திருப்பி கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல்  மக்களை 5 வருடங்களுக்கு மேலாக கடன்கார‍ர்கள் ஆக்கினார்கள். சுவிற்சர்லாந்தின் வாழ்க்கைச்செலவில்  மாதம் 1000 பிராங்குகளை கடன் மீள்ளிப்புக்கு செலுத்துவது எவ்வளவு சுமை என்பது தாங்கள் அறியாத‍தல்ல. இறுதி வாரங்களில் கடன் எடுத்து கொடுத்தவர்கள் 5 -6 வருடங்ள் பாரிய சுமையுடம் வாழ்ந்தார்கள். 

அதனால் தான் கூறினேன் இவ்வாறான தறுதலைகள் புலி எதிர்பாளர்களில் மட்டுமல்ல புலி ஆதரவாளர்கள் உறுப்பினர்களிலும் இருந்திருக்கிறார்கள்.  சமயம் வரும்போது தமது புத்தியை காட்டி இருக்கிறார்கள். 

இனி என்ன செய்யிறது எல்லாருமே எங்களைபோல் நல்லவய இருக்கேலாது தானே.

நீந்த தெரிஞ்சவன் சுழியோடுறன் , மற்றவை கரையில் நிண்டு புதினம் பார்க்க வேண்டியதுதான் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, உடையார் said:

இணைப்புக்கு ந‌ன்றி உடையார் ஜ‌யா , ந‌க்கீர‌ன் கோபாலு ஆதார‌த்தோடு ப‌ல‌ உண்மைக‌ளை சொல்லி இருக்கிறார் ,  

இந்த ஊர் மேயும் பிசாசுக்கு அர‌சிய‌ல் பின் புல‌ம் இருப்ப‌த‌ ந‌க்கீர‌ன் கோலு வெளிப்ப‌டையாய் சொல்லி இருக்கிறார் /

போர‌ போக்கை பார்த்தா இந்த‌ எச்சை சீக்கிர‌மே வெளிய‌ வ‌ந்து விடுவான் போல‌ இருக்கு 😡

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2020 at 02:12, பையன்26 said:

அது ச‌ரி த‌மிழ் சிறி அண்ணா , இவ‌னுக்கு என்ன‌ த‌ண்டனை குடுக்க‌னும் என்று எழுத‌ல‌ 😉

யாருக்கு
தலைப்பைப் போட்டவனுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 10:16, பையன்26 said:

இணைப்புக்கு ந‌ன்றி உடையார் ஜ‌யா , ந‌க்கீர‌ன் கோபாலு ஆதார‌த்தோடு ப‌ல‌ உண்மைக‌ளை சொல்லி இருக்கிறார் ,  

இந்த ஊர் மேயும் பிசாசுக்கு அர‌சிய‌ல் பின் புல‌ம் இருப்ப‌த‌ ந‌க்கீர‌ன் கோலு வெளிப்ப‌டையாய் சொல்லி இருக்கிறார் /

போர‌ போக்கை பார்த்தா இந்த‌ எச்சை சீக்கிர‌மே வெளிய‌ வ‌ந்து விடுவான் போல‌ இருக்கு 😡

26 minutes ago, ஈழப்பிரியன் said:

யாருக்கு
தலைப்பைப் போட்டவனுக்கா?

நக்கீரன் கோபால் நித்திரை கொண்டு இருப்பார்....

இப்படி, பொள்ளாச்சி, நாகர்கோவில் டைப்பான கேசுகள் எண்டால், எழும்பி ஓடி வந்து நீட்டி முழக்கி வீடியோ போடுவார்.

பத்திரிகைக்காரர்கள் எப்போதும் நடுநிலைமை கொண்டே செயல் படவேண்டும். 

நாகர்கோவில் கேசிலும், இன்னும் போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை முடியவில்லை. அவனை அப்பாவி என்று சொல்ல வரவில்லை. ஆனால்.... விசாரித்து தீர்ப்பு சொல்ல நீதிமன்றம் இருக்கிறது.

இவர் தனது விசாரணைகளை முடித்து, சுட்டிருக்க வேண்டும் என்று தனது தீர்ப்பினையும் சொல்லி விட்டார்.

இது, தனது பத்திரிகைக்கு இவர் தேடும் மலிவான விளம்பரம் இல்லாமல் வேறு என்ன?

தமிழகத்தில் தனது மனைவியை கொலை செய்து விட்டார் என்று ஒருவரை போலீசார் பிடித்து நீதிமன்றில் நிறுத்தி தண்டனையும் வாங்கி கொடுத்து விட்டனர்.

பத்திரிகைகள் எல்லாம் அவரை வறுத்து எடுத்தன.

ஆனால், கணவனுடன் கோபித்துக் கொண்டு எங்கோயோ கோவிலில் தங்கி பிச்சை எடுத்து உண்டு கொண்டிருந்த மனைவி, நடந்தது தெரியாமல், வீடு வருகிறார்.

உறவினர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்கின்றனர். அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் ஐயா.... அவரை மறைந்து வாழ சொல்லியும், இல்லாவிடில் அவரை வேறு கேசில் உள்ள போட்டு விடுவேன் என்றும் பயமுறுத்துகின்றார். உறவினர்களையும் பயமுறுத்துகின்றார்.

பெண்ணை முடித்து விட்டால் தான் தனது தலை தப்பும் என்று முடிவு செய்கிறார். சரியான விசாரணை செய்யாமல், அடித்தே ஒப்புக்கொள்ள வைத்திருந்தார் அவர்.

அங்கே இருந்த நல்ல போலீஸ் காரர் ஒருவர், விகடன் இதழுக்கு இரசியமாக கடிதம் ஒன்றினைப் எழுதுகிறார்.

அவ்வளவுதான்....

விகடன் களமிறங்கி.... பெண்னை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தி, நீதிமன்றில் நிறுத்தி, கணவன் விடுதலையானார். 

பெரும் பரபரப்பான வழக்காக, விகடனில் புகழை அதிகரித்தது அது.

இன்ஸ்பெக்டர் பதவி இழந்தார்.

இது பழைய விகடன் இதழில் வாசித்தது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

யாருக்கு
தலைப்பைப் போட்டவனுக்கா?

என்ன‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , குசா தாத்தாவின் க‌ள்ளுக்கொட்டிலுக்கு போயிட்டு வ‌ந்த‌ மாதிரி தெரியுது லொல் 😁😍 /

த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ப‌தில் எழுதின‌து நான் , நீங்க‌ள் த‌டு மாற்ற‌த்தில் த‌வ‌றாக‌ புரிந்து விட்ட‌தா தெரியுது 😉

அந்த‌ பொம்பிளை பொருக்கிக்கு என்ன‌ த‌ண்ட‌ன‌ குடுக்க‌லாம் என்று த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் கேட்ட‌து நான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நக்கீரன் கோபால் நித்திரை கொண்டு இருப்பார்....

இப்படி, பொள்ளாச்சி, நாகர்கோவில் டைப்பான கேசுகள் எண்டால், எழும்பி ஓடி வந்து நீட்டி முழக்கி வீடியோ போடுவார்.

பத்திரிகைக்காரர்கள் எப்போதும் நடுநிலைமை கொண்டே செயல் படவேண்டும். 

நாகர்கோவில் கேசிலும், இன்னும் போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை முடியவில்லை. அவனை அப்பாவி என்று சொல்ல வரவில்லை. ஆனால்.... விசாரித்து தீர்ப்பு சொல்ல நீதிமன்றம் இருக்கிறது.

இவர் தனது விசாரணைகளை முடித்து, சுட்டிருக்க வேண்டும் என்று தனது தீர்ப்பினையும் சொல்லி விட்டார்.

இது, தனது பத்திரிகைக்கு இவர் தேடும் மலிவான விளம்பரம் இல்லாமல் வேறு என்ன?

ந‌க்கீர‌ன் கோபாலு இத‌ சொல்லி தான் விள‌ம்ப‌ர‌ம் தேட‌ வேண்டும் என்று இல்லை 😉

ந‌க்கீர‌ன் கோபாலு த‌ன‌து உயிரை கூட‌ யோசிக்காம‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல‌ உண்மைக‌ளை எடுத்து சொன்ன‌வ‌ர் போன‌ நூற்றாண்டில் கூட‌ , வீர‌ப்ப‌னை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌வ‌ர் போல் எடுத்து சொன்ன‌தே இந்த‌ ந‌க்கீர‌ன் கோபாலு  தான் / ந‌க்கீர‌ன் கோபாலுவை அதிக‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌த்திலே தெரியும் /

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.