Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்
 
அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்
 
கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டகாரரகள் மீது கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
பதிவு: மே 31,  2020 07:32 AM
வாஷிங்டன்
 
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்று வரும்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.
 
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும்,
அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் வெத்து கூச்சலுடனும் முழக்கங்களும் மட்டும் எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மின்னபொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம்  தற்போது நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் உள்பட பல பகுதிகளுக்கு பரவி உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

Thenaruvi.jpg

கீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

George-Floyd-death.jpg

கருப்பின இளைஞர் படுகொலை – அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

கருப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றதாகவும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் தோட்டக்கலை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைக்கு “கொள்ளையர்கள் மற்றும் அராஜகவாதிகள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 46 வயதான ஆப்பிரிக்க அமெரிக்கர், பொலிஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரியை நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்னசொட்டாவில் கலவரம் வெடித்ததுடன் அங்கிருந்த பொலிஸ் நிலையங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி வடக்கு கரோலினா, நியூயோர்க், லொஸ் ஏஞ்சலிஸ் மான்ஹாட்டன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கருப்பின-இளைஞர்-படுகொலை/

1. இலங்கையில் எவ்வாறு அதிகாரத்தில் உள்ளவர்களும் பணக்காரர்களும் தமிழர்களை வெறுக்கின்றார்களோ, அதே போன்று அமெரிக்காவிலும் கறுப்பின மக்களை வெறுக்கிறார்கள். 

2. தமிழ் சினிமாவில் போன்று, ஆர்ப்பாட்டகாரர்கள் மத்தியில் புகுந்து நேர்மையான ஆர்ப்பாட்டமக்களை 'பயங்கரவாதிகள்' ஆக்கி விடுவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says 'கருப்பின இளைஞன் கொல்லப்பட்டதுக்கு எதிராக அமெரிக்க முழுவதும் எழுந்த போராட்டம்.. பொய் செய்தியை வெளியிட்டு தொடர்ந்து அதிகாரத்திற்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படும் CNN செய்தி அலுவலகத்தை சூறையாடி எச்சரிக்கை கொடுத்த மக்கள் GNNI CN அதிகாரத்தை விட மோசாமான அயோக்கியர்கள் இந்த மீடியா.. இனிமேல் இவனுங்க அராசகம் மக்களிடம் எடுபடாது'

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, text that says 'கருப்பின இளைஞன் கொல்லப்பட்டதுக்கு எதிராக அமெரிக்க முழுவதும் எழுந்த போராட்டம்.. பொய் செய்தியை வெளியிட்டு தொடர்ந்து அதிகாரத்திற்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படும் CNN செய்தி அலுவலகத்தை சூறையாடி எச்சரிக்கை கொடுத்த மக்கள் GNNI CN அதிகாரத்தை விட மோசாமான அயோக்கியர்கள் இந்த மீடியா.. இனிமேல் இவனுங்க அராசகம் மக்களிடம் எடுபடாது'

அமெரிக்க அரசினது ஊதுகுழலே  இந்த CNN.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட கறுப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் குதித்தது டுவிட்டர்

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் பொலிஸாரால்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டுவிட்டர் நிறுவனம் அதன் அதிகாரபூர்வ twitter support என்ற பக்கத்தில், கருறுப்பு வண்ண ப்ரோபைல் படத்தை வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தங்களது பயோவில் BlackLivesMatter என குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

அப்போது அவரை வீதியில் கிடத்திய பொலிஸ் அதிகாரி , கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தி தாக்குதல் நடத்தினார். இதனால், அந்த கறுப்பின இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இதைக் கண்டித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் கறுப்பின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல்துறை வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு தீவைத்து வன்முறையும் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே டுவிட்டரில் #USAonFire என்ற ஹேஸ்டேக்கில் அமெரிக்காவில் நடக்கும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

https://www.ibctamil.com/usa/80/144469

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் நகரில்... தீவிரமடையும் போராட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் தொடரும் போராட்டம் : வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் - டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் தொடரும் போராட்டம் : வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் - டிரம்ப் எச்சரிக்கை

 

வாஷிங்டன்

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.


போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 15 மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் 5 ஆயிரம் தேசிய போலீஸ் படையினரும், உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பாக மீண்டும் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் கலவர தடுப்பு போலீசார் மீது கற்களை எறிந்ததால் பரப்பபு நிலவியது.

ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் ஃபிளாஷ் பேங்க்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீசாரால் போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர்

முக்கிய நகரங்கள் பல கலவரத்தால் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.1960 காலகட்டத்திற்கு பின்னர் இதுபோன்ற ஒரு நிலையை அமெரிக்காவில் கண்டதில்லை என சமூக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தபோவதாக எச்சரித்து உள்ளார். இராணுவத்தை பயன்படுத்தி பரவலான வன்முறைகளைத் கட்டுப்படுத்தப்போவதாக டிரம்ப் கூறினார்.

இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும். ஜனாதிபதியாக எனது முதல் மற்றும் மிக உயர்ந்த கடமை நமது பெரிய நாட்டையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதாகும். நமது தேசத்தின் சட்டங்களை நிலைநிறுத்துவதாக நான் சத்தியம் செய்து உள்ளேன்.அதைத்தான் நான் செய்வேன்.

ஒரு நகரம் அல்லது மாநில நிர்வாகம் தங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மறுத்தால், நான் அமெரிக்க இராணுவத்தை கொண்டு வருவேன். பிரச்சினையை விரைவாக தீர்ப்பேன் என கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியதால் பென்டகன் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/02080901/Trump-threatens-military-force-if-violence-in-states.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என உறுதி

George-Floyd.jpg

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கறுப்பின இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, குறித்த அமெரிக்க பிரஜை இருதய நோயினால் உயிரிழந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி வடக்கு கரோலினா, நியூயோர்க், லொஸ் ஏஞ்சலிஸ் மான்ஹாட்டன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக 40இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஊரடங்கு உத்தரவை மீறி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இதன் காரணமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/கறுப்பின-இளைஞர்-ஜோர்ஜ்-ஃ/

  • கருத்துக்கள உறவுகள்

2000601-george-floyd-protest-mc-754_6fd418f267152052d808dbc08b84e490.fit-760w-720x450.jpg

செயின்ட் லூயிஸில் ஆர்ப்பாட்டத்தின் போது நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி செயின்ட் லூயிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

செயின்ட் லூயிஸ் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே, 16 மற்றும் ஆலிவ் வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த தாக்குதலின்போது, காயமடைந்த அதிகாரிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செயின்ட் லூயிஸ் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செயின்ட் லூயிஸ் பொலிஸ்துறைத் தலைவர் ஜோன் ஹேடன் கூறுகையில், ‘இது கோழைத்தனமான நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். அதிகாரிகள் தற்போது உயிருடன் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்’ என கூறினார்.

http://athavannews.com/செயின்ட்-லூயிஸில்-ஆர்ப்ப/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்

அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்

 

அமெரிக்காவில் தீவிரமாகும் போராட்டம் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் போலீசார் மண்டியிட்டு வருகின்றனர்.
பதிவு: ஜூன் 03,  2020 07:25 AM
வாஷிங்டன்

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த மாதம் 25 ந்தேதி கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 

அமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தில் ஆங்காங்கே போராட்டம் வெடித்து வரும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டது மட்டுமின்றி, அவர்களை அரவணைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கிடையே பல இடங்களில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் இதற்கிடையில் போலீஸ் அதிகாரிகள் சிலர் போராட்டக்காரர்களை கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலமும், அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலமும், துக்கத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில், கடந்த திங்கட் கிழமை நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்கா அருகே நடந்த போராட்டத்தின் போது கேடயங்களை வைத்திருந்த போலீஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன் மண்டியிட்டனர்.அதே போன்று டென்வர் காவல்துறைத் தலைவர் பவுல் பாசன் அதே நாளில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து காணப்பட்டார்.

மற்றொரு புகைப்படத்தில், கேஸ் மாஸ்க், ஹெல்மெட் மற்றும் உடுப்பு அணிந்த ஒரு பொலிஸ் அதிகாரி தெற்கு நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் நான்காவது நாளின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரை அரவணைத்துக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

நியூயார்க்கில், நியூயார்க் நகர காவல்துறைத் துறைத் தலைவர் டெரன்ஸ் மோனஹான் திங்களன்று தனது நகரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரைத் கட்டி தழுவினார். அவர்களுடன் மண்டியிட்டார்.

மேற்கு கடற்கரையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வான் நியூஸ் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது எதிர்ப்பாளர் கெவின் வெல்பெக் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரியுடன் கைகுலுக்கினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03072542/New-York-police-officer-who-took-a-knee-What-happened.vpf

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்

போராட்ட ஆரம்பத்தில்.... ட்ரம்ப்  " போராட்டக்காரர்கள் மீது,  நாயை  ஏவி விடுவேன்"
போன்ற வசனங்களை பாவிக்காமல், இருந்திருந்தாலே... பிரச்சினை  ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ik-720x450.jpg

ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது 2பேர் உயிரிழப்பு: 60பேர் கைது!

அமெரிக்காவின் சிகாகோ புறநகர்ப் பகுதியான சிசரோவில் ஏற்பட்ட அமைதியின்மையால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக நகர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணம் தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (திங்கட்கிழமை) சிகாகோவுக்கு மேற்கே அமைந்துள்ள சிசரோவில் மோதல்கள் வெடித்தன.

இதன்போது, மக்கள் ஒரு மதுபானக் கடை மற்றும் பிற வணிகங்களுக்குள் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்றதாக புறநகர் சிசரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 60பேர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் அல்லது அவர்கள் உயிரிழந்த சூழ்நிலைகள் குறித்து செய்தித் தொடர்பாளர் ஹனனியா கூடுதல் தகவல்களை வழங்கவில்லை.

சிசரோ அதிகாரிகளின் கூற்றுப்படி, 100இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் வீதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் நிலைமையை சமாளிக்க படையினர் போதாமைக் காரணமாக மேலும் குக் கவுண்டி ஷெரிப் அலுவலகம் மற்றும் இல்லினாய்ஸ் மாநில பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார்120 அதிகாரிகளை உதவி வழங்க அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிசரோவில் வன்முறை இருந்தபோதிலும், சிசரோ அதிகாரிகள் அங்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை,

http://athavannews.com/ஜோர்ஜ்-ஃபிலாய்ட்டின்-மரண/

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 08:16, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Thenaruvi.jpg

கீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..👍

அடடா! டிரம்ப் இந்தியா வந்தபோது அருமையான ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டாரே!!😲

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.