Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய விமானப்படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cxxccxcxc.jpg

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய விமானப்படையினர்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது.

குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது.

கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பமானது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.

இதன்காரணமாக ஆலயத்தை சூழ இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.

ccxcccx.jpg

IMG_0122.jpg

IMG_0123.jpg

IMG_0124.jpg

IMG_0125.jpg

IMG_0126.jpg

IMG_0128.jpg

IMG_0130.jpg

IMG_0131.jpg

http://athavannews.com/வற்றாப்பளை-கண்ணகை-அம்மன்/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா செய்தி புனைகிறார்கள்.

இன்று அங்கு.. இனப்படுகொலையாளி.. சிங்கள பயங்கரவாத இராணுவத் தளபதி.. திடீர் விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். 

அதனால்.. தான் இத்தனை கெடுபிடிகளும்.. மலர் தூவி படங்காட்டல்களும்.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தை அழித்து  போட்டு அந்த பாவத்தை கழுவ  கோவில்களிலும் புத்த மடாலயங்களிலும்  பயத்தில்  தஞ்சம் புகுந்துகொள்ளினம்  போல் இருக்கு . என்னதான் செய்து குத்துகாரணம் அடிச்சாலும் சொறிலங்காவில் இனத்துவேசம் இருக்கும்வரை அந்த நாடு நாசமாய்த்தான் போகும் இன்று வெள்ளைகள்  கறுப்பர்களின் கால்களை கழுவி தங்களை மன்னிக்கும்படி கேட்க்கிறார்கள்  கறுப்பர்களும் வெள்ளைகளும்  ஒன்றாக முடியாது என்பவர்கள் திகைத்து போய்  உள்ளார்கள் சிங்களவன் இந்த சேதியை எப்படி பார்ப்பான் என்பதை அறிய ஆசை 

29337866-8397065-As_a_part_of_Saturdays_

https://www.dailymail.co.uk/news/article-8397065/White-police-officers-community-members-wash-feet-black-faith-leaders-protest.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dwwww-720x450.jpg

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் பங்கேற்றார் இராணுவ தளபதி

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பங்கேற்றிருந்தார்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.

மக்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டிருந்த போதும் ஆலயத்தில் மக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்தை சூழ இராணுவத்த்தினர் குவிக்கப்பட்டிருந்ததோடு, நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்று மாலை 5 மணியளவில் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்து வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு ஆலய முன்றலில் வைத்து உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.

குறிப்பாக இவர் வருகைதந்து ஆலய வளாகத்தில் நின்றபோது விமானப்படையினர் ஆலயத்துக்கு உலங்குவானூர்தி மூலம் மலர் தூவியிருந்தனர்.

குறிப்பாக இந்த மலர் தூவும் செயற்பாடும் சில ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வற்றாப்பளை-கண்ணகை-அம்மன-2/

8 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்று மாலை 5 மணியளவில் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்து வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு ஆலய முன்றலில் வைத்து உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.

சிலம்பை வீசி பாதகர்கள் தேசத்தை தீயிட்டு அழித்த கண்ணகியிடம் இந்த கொலைகாரர்கள் தப்ப முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வாவுக்கா? அம்மனுக்கா மலர் தூவினார்கள்? இதை  ஞான சார தேரர் அறிந்தால் பிரளயம் வெடிக்குமே!

22 hours ago, தமிழ் சிறி said:

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பங்கேற்றிருந்தார்.

சமூக இடைவெளி, மத நிறுவனங்களில் விழாக்கள் இல்லை, வெசாக் பொசோன் எல்லாம் நிறுத்தின போர்க்குற்றவாளிகள் எல்லாவற்றையும் மீறி எதற்கு கண்ணகை அம்மனிடம் செல்ல வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

சமூக இடைவெளி, மத நிறுவனங்களில் விழாக்கள் இல்லை, வெசாக் பொசோன் எல்லாம் நிறுத்தின போர்க்குற்றவாளிகள் எல்லாவற்றையும் மீறி எதற்கு கண்ணகை அம்மனிடம் செல்ல வேண்டும்?

ஒரு அழிவு முடிந்தது..அடுத்த அழிவை அவர்களே  தேடிக்கொள்ளட்டும் என்றுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

இடம் தேர்வு செய்து புத்தர் சிலைக்கு ஓடர் கொடுப்பினமா .? 😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.