Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அழிப்புப் போரின் இறுதிநாட்களில் இந்தியாவின் நிலைப்பாடும் ராஜதந்திர நகர்வுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையிலிருந்து வெளிவரும் பார்பணீய நாளிதழும், தமிழர் விரோத சக்தியுமான "தி ஹிந்து" பத்திரிக்கையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நிருபமா சுப்ரமணியன் எழுதிய கட்டுரையில் இந்தியா போர் தொடர்ந்து நடைபெற்று புலிகள் முற்றாக அழிக்கப்படுவதை விரும்பியதாகவும், இதன்பொருட்டு, சர்வதேசத்திலிருந்து வரும் போரினை நிறுத்தும் அழுத்தங்களை இந்தியா சாதுரியமாகத் தடுத்து நிறுத்தி, போர் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார்.

அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இதோ.......

"யுத்தத்தின் இறுதிநாட்களில், இந்தியா பல்வேறு தளங்களில் இலங்கைக்குச் சார்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்தது. அதில் முக்கியமானது இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் கொண்டுவர எத்தனித்த நடவடிக்கைகளை தடுப்பது மற்றும், போரினை நிறுத்தும்படி சர்வதேசம் இலங்கைமீது செலுத்திய அழுத்தத்தினை இல்லாமலாக்கியது என்பவையாகும். போரை நிறுத்தி, புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு மேற்குநாடுகள் விடுத்த வேண்டுகோள்களை இந்தியா முன்னின்று தடுத்ததுடன், புலிகள் மீண்டும் உயிர்பெறுவதை அனுமதிக்கப்போவதில்லை என்பதில் இந்தியா திடமாக இருந்ததென்பது கொழும்பிலிருந்த அமெரிக்க உயர்ஸ்த்தானிகராலயத்தின் தகவல்ப் பரிமாற்றத்தினை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த தகவல்கள் ஹிந்துவுக்குப் பிரத்தியோகமாகக் கிடைத்திருந்தது".

"யுத்தத்தில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் மக்களுக்கேற்பட்டுக்கொண்டிருந்த அவலங்கள் தொடர்பாக இலங்கையுடன் தொடர்ச்சியாகத் தொடர்பிலிருந்த இந்தியா, புலிகளுக்கெதிராக இலங்கை நடத்திக்கொண்டிருந்த யுத்தத்தில் இலங்கைக்கு மிகவும் சாதகமான போக்கினையே கடைப்பிடித்தது".

"மகிந்த ராஜபக்ஷவின் போரின்பின்னரான திட்டங்கள் பற்றி இந்தியா சந்தேகத்துடனேயே இருந்தாலும்கூட, போர் முடியும்வரை தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகப் பேசுவதில்லை என்கிற நிலைப்பாட்டிலேயே இருந்தது".

"சர்வதேச மத்தியஸ்த்துடனான போர்நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டும் இந்தியாவினால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அம்முயற்சிகளிலிருந்து பின்வாங்கிய சர்வதேசம் போரின் பின்னரான உதவிகள் மூலம் மீண்டும் தன்னை இலங்கைதொடர்பான விடயங்களில் உட்படுத்திக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டில் இருந்ததுடன், தனது நிவாரண முயற்சிகளுள் இந்தியாவையும் இணைத்துச் செயற்பட விரும்பியிருந்தன".

"ஜனவரி மாதம் 2009 இல் இந்தியாவின் பிரணாப் முகர்ஜீ அவசர விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இலங்கைக்கான இந்தியாவின் உதவித் தூதர் விக்ரம் மிஸ்ரி இந்த விஜயம் தொடர்பாக அமெரிக்க தூதர அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுத்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது".

"சுமார் இரண்டு மணித்தியாலங்களாக இலங்கை ஜனாதிபதியின் வீட்டில் இலங்கையின் ராணுவத்தளபதி, பாதுகாப்புச் செயலாளர், மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய முகர்ஜீ சிவிலியன்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று இலங்கையின் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாக விக்ரம் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்குக் கூறியிருந்தார்".

"அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளித்த விக்ரம், இலங்கையின் நடக்கும்போர்பற்றி இந்தியாவுக்கு ஒரு உறுதியான நிலைப்பாடு இருந்தாலும்கூட, இப்போரில் சிவிலியன் அழிவுகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட்ட இந்தியா முழுதும் அதிர்வலைகள் கிளம்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்".

ஆனால், விக்ரம் மிஸ்ரியின் பிரச்சாரங்களுக்கு அப்பால், முகர்ஜீயின் திடீர் விஜயம் தொடர்பான உண்மையினை இந்திய அரசே பின்னர் வெளியிட்டிருந்தது. அதன்படி, " புலிகள் மீதான முற்றான ராணுவ வெற்றியொன்றின் மூலமே நிரந்தரமான சமாதானத்தையும், தமிழர்களுக்கான தீர்வையும் வழங்கமுடியும் என்று இந்தியா நம்புகிறது. இதனை அடைவதற்கான இலங்கை ஜனாதிபதியின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும்" என்று முகர்ஜியின் விஜயம் தொடர்பாக பத்திரிக்கையாளர் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக உறுதிப்படுத்தியிருந்தது.

"இலங்கையின் போருக்கான முற்றான ஆதரவு, சர்வதேச அழுத்தத்தினை தடுத்து நிறுத்தல் ஆகியவையே இந்தியாவின் இலங்கை தொடர்பான அன்றைய நிலைப்பாடாக இருந்தபோதிலும், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருந்த தி மு க, போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருந்ததைச் சமாளிக்கமுடியாமல் திண்டாடியது. இதனாலேயே, தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு போக முடியுமா என்று காங்கிரஸ் தலைமைப் பீடத்திடம் வேறு வழியின்றிக் கேட்கவேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது".

" ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு போர்தொடர்பாக விளக்கமளித்த சிவ்ஷங்கர் மேனன், இலங்கையைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் போர்தொடர்பாக சமரசத்தில் ஈடுபடுவதை முற்றாக மறுதலிப்பதாகவும், புலிகளுடன் இனிமேல் எந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் இலங்கை தயாரில்லை என்றும், ஆகவே யுத்த நிறுத்தம் தொடர்பான எந்தக் கோரிக்கையும் இலங்கையாலும் இந்தியாவினாலும் முற்றாக புறக்கணிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்". இந்தக் கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் விக்கிலீக்ஸின் வெளியீடுகள் மூலம் ( 202476) ஹிந்துவுக்குக் கிடைத்தது". இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான விடயம் யாதெனில், இலங்கையில் நடக்கும்போர் தொடர்பாக, கொழும்பிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விளக்கமளிக்கிறார் என்பது. இதுவே, இலங்கையில் போரினை முன்னின்று நடத்தியது இந்தியாதான் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறது.

"அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேசிய மேனன், சர்வதேசத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்கவேண்டாம் என்று இந்தியா இலங்கையிடம் கேட்டுக்கொள்வதாகவும், அதேவேளை, புலிகளின் முக்கிய தலைவர்களைத் தவிர்த்த ஏனைய போராளிகளைக் கொல்லவேண்டாம் என்று இந்தியா இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்".

"அதேவேளை, புலிகளியக்கத்தின் முக்கிய தலைவர்கள் யார், சாதாரண போராளிகள் யாரென்று பிரித்தறிவது கடிணமான பணியாக இருக்கலாம் என்பதால், சிலவேளை தனது ஆலோசனைகளை இலங்கை பின்பற்றுவது சாத்தியமில்லாது போகலாம் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்".

" மேலும், இலங்கை ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி, புலிகளை முற்றாக அழிப்பதே ஒரே இலட்சியமாக இருக்கும்பொழுது, அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போவதென்பதோ அல்லது யுத்த நிறுத்தம் ஒன்றிற்குப் போவதென்பது அரசியல் தற்கொலையாக மாறும் என்பதால், புலிகளின் தலைவர்களைத் தப்பவிடுதல் அல்லது யுத்தத்தினை தேக்க நிலைக்குக் கொண்டுவருதல் என்பது அவரைப்பொறுத்தவரையில் இயலாத காரியம் என்றும் நியாயப்படுத்தியிருந்தார். இலங்கைக்கெதிரான சர்வதேசக் குரல்கள் அமுக்கப்பட்ட நிலையில், இலங்கையினை சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ, யுத்த நிறுத்தம் ஒன்றிற்கோ கொண்டுவருவதென்பது மிகக்கடிணமான முயற்சியாக இருக்கும் என்றும் மேனன் குறிப்பிட்டிருந்தார்".

"அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேசிய மேனன், பிரபாகரனுக்குச் சார்பாகப் பேசுபவர்கள் யார்? போரின் முடிவு எப்படியானதாக இருக்கப்போகிறதென்பது பற்றிப் பிரபாகரனினது புரிதல் எப்படியானது? என்கிற கேள்விகளை முன்வைத்ததோடு, இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுதேர்தல்கள் இலங்கைக்கும், புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் ஒன்றினையோ, சமாதானப் பேச்சுவார்த்தையொன்றினையோ இந்தியா முன்னின்று நடத்துவதை முற்றாகத் தடுத்துவிட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்".

"இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தை ஒன்றிற்கோ, யுத்த நிறுத்தம் ஒன்றிற்கோ குறுக்கே நிற்கப்போவதில்லை என்று மேனன் மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறினாலும்கூட, இந்தியாவே யுத்தத்தினை முன்னின்று நடத்துவதை அமெரிக்கர்கள் உணர்ந்தே இருந்தனர்".

"யுத்தத்தில் தனது பங்கினை மறைக்க விரும்பிய மேனன், "உங்களுக்கு இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றினையோ அல்லது பேச்சுவார்த்தை ஒன்றினையோ நடத்தும் நோக்கம் இருக்கிறதா? அப்படியானால் சொல்லுங்கள், இந்தியாவும் அதில் கலந்துகொள்வது பற்றிச் சிந்திக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய நாடுகளுடன் சேர்ந்தே செய்யலாம்" என்றும் அவர் அமெரிக்கத் தூதரிடம் கூறியிருக்கிறார்".

"மூன்று வாரங்களுக்குப் பின்னர், மே மாதம் 6 முதல் 7 வரையான நாட்களில், இலங்கைக்கான அமெரிக்கச் சிறப்புத்தூதர் டெஸ் பிறவுன் அவர்கள் தில்லிக்கு விஜயம் மேற்கொண்டு வெளியுறவுச் செயலர் மேனனையும், பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனையும் சந்தித்து மீண்டும் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான தனது கோரிக்கையினை முன்வைத்தார். ஆனால், இந்திய பொதுத்தேர்தல்களினாலும், இனிமேல் போரினை நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளை ஆரம்பிப்பது தொடர்பாக எதுவுமே செய்வதற்கில்லை என்கிற நிலைமையில் இந்தியா அவரது கோரிக்கையினை உதாசீனம் செய்திருந்தது".

"இலங்கையின் பிரித்தானிய தூதரகத்தின் அதிகாரியொருவர் அமெரிக்கத் தூதரகத்துடன் பரிமாறிக்கொண்ட செய்திக்கமைய, "போர்க்களத்தில் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் அப்பாவிகள் பற்றி இந்தியா கவலை கொண்டிருந்தாலும்கூட, புலிகள் மீதான முற்றான வெற்றிக்கான அறிகுறிகளும், போர் முடிந்தவுடன் தமிழர்களுக்கான உரிமைகள் தொடர்பாக இலங்கை உறுதிகூறியவாறே நடந்துகொள்ளும் என்கிற நம்பிக்கையும், இந்தியாவைத் தொடர்ந்தும் இலங்கையின் போரினை ஆதரிக்கத் தூண்டுகிறது என்று கூறியிருக்கிறார்".

"இந்தியாவின் சிவ்ஷங்கர் மேனனும் நாராயணனும் யுத்த வெற்றியுனூடான சமாதானம் பற்றி அதிக அக்கறையும், உற்சாகமும் கொண்டிருந்தனர் என்றும், தனியீழத்திற்கான போராட்டம் முற்றாக அழிக்கப்படுமிடத்து, நாட்டில் நிரந்தர அமைதி நிலவும் என்றும், தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் இலங்கையினை விட இந்தியாவே அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக அந்த பிரித்தானிய அதிகாரி கூறியிருக்கிறார். அத்துடன், இந்த இரு இந்திய அதிகாரிகளும் கூறுவதன்படி, யுத்த வெற்றியின்பின்னரான சமாதான முன்னெடுப்புக்களை யுத்தத்தில் வெற்றியீட்டி மிகப்பெரும் அகம்பாவத்துடன் வலம்வரும் ராணுவம் தடுக்குமாயின், இன்னும் சில காலத்திலேயே இன்னொரு தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கும் என்று இவ்விரு இந்திய அதிகாரிகளும் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்".

"பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய மேனனும், நாராயணனும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கூட்டங்களில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வது நண்மை பயக்கக் கூடும், ஆனால், இலங்கை மீது கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் பிரயோகிக்க முயன்றால், அது எதிர்வினையாக மாறுவதுடன், சர்வதேசத்தினைத் தூக்கியெறிந்து, தனது ஊள்நாட்டு இனவாதிகளின் சொற்படி மகிந்த நடப்பதை எம்மால் தடுக்கமுடியாதிருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது ஒருவகையில், இலங்கைதொடர்பாக பாதுகாப்புக் கவுன்சிலில் விவாதிக்கவேண்டாம் எனும் எச்சரிக்கையினை இந்தியா விடுப்பதற்கு ஒப்பானது என்றும் அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்".

"மே மாதம் 15 ஆம் திகதி, மேனனை மீண்டும் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க சிறப்புத் தூதர், அரங்கேறிக்கொண்டிருக்கும் பாரிய மனிதாபிமான அவலத்தை உடனேயே தடுத்து நிறுத்த என்ன செய்யலாம் என்று வினவியபோது பதிலளித்த மேனன், உங்களின் கரிசணையை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலின் ஊடாகவோ, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலூடாகவோ எடுக்கும் எந்த முடிவும் இந்த நிலையினை இன்னும் பாதிக்கவே செய்யும், ஆகவே இந்தியா அதனை ஆதரிக்காது, வேண்டுமென்றால், நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர கலந்துரையாடல்கள் மூலம் இந்நிலையினை மேம்படுத்த முயன்று பாருங்கள் என்று கைவிரித்திருக்கிறார்".

"தமிழ்நாட்டின் தி மு க வின் தொந்தரவினால் சலிப்படைந்த காங்கிரஸ் அரசு, இலங்கையிடம் போரில் மென்போக்கினைக் கடைப்பிடிக்கும்படி வேண்டா வெறுப்பாகக் கேட்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதற்கமைய, மேனன் அமெரிக்க தூதருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி, பிறணாப் முகர்ஜீ அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ஹிலாரி கிளின்டனுடன் விரைவில் பேசுவார் என்று கூறியிருந்தார்".

"அவர் மேலும் கூறுகையில், இலங்கையிடம் யுத்தத்தினைத் தற்காலிகமாக நிறுத்தும்படி மீண்டும் கோரவுள்ளோம், அத்துடன் உள்ளே அகப்பட்டிருக்கும் சிவிலியன்களுக்கான நிவாரண உதவிகள்பற்றியும் பேசவுள்ளோம் என்றுக் கூறினார்".

"ஏப்ரல் 24 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்ட மேனன் மற்றும் நாராயணன் ஆகியோர், தமது கலந்துரையாடல்களின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ சிலவேளை யுத்த நிறுத்தத்திற்கு ஒத்துவரலாம் என்கிற தொனியில் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், மகிந்த யுத்தநிறுத்தம்பற்றி ஏப்ரல் 27 ஆம் திகதி பகிரங்கமாக அறிவிப்பினை மேற்கொள்ளுவார் என்றும், அதுவரையில் இந்த ரகசியத்தினை வெளியில் விடவேண்டாம் என்று நாராயணன் தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் அந்த அமெரிக்க தூதுவர் கூற்னார்".

"அந்த பகிரங்க அறிவிப்பும் வந்தது. யுத்தத்தினை நிறுத்துவதாக அல்ல, மாறாக யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று. கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை மட்டுமே நிறுத்தியிருக்கிறோம், ஆனால் இது யுத்த நிறுத்தம் அல்ல என்று இலங்கையரசு மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தது. அத்துடன், இன்னும் பத்து சதுரக் கிலோமீட்டர்கள் நிலப்பரப்பினுள் பதுங்கியிருக்கும் புலிகளின் தலைவரையும், அவரது நெருங்கிய தோழர்களையும் கொல்வதற்கான ராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்றுவருகிறதென்றும் அது தீர்க்கமாக அறிவித்திருந்தது".

"தனது மே மாதத்து 6 ஆம் 7 ஆம் நாட்களின் தில்லி விஜயத்தின்பொழுது இந்திய அதிகாரிகளுக்கு விளக்கமளித்த அமெரிக்கத் தூதர், பொருளாதார அழுத்தங்களை செலுத்துவதன் மூலம் போரின்பின்னரான சர்வதேச நாடுகள் இலங்கையில் நிவாரண வேலைகளை தொடர்வதற்கு இலங்கையைப் பணியவைக்கமுடியும் என்று கூறியிருந்தார்".

"அவர்களுக்குக் கட்டாயமாகப் பணம் தேவைப்படும், ஏனென்றால் இந்த யுத்தத்தில் பெருமளவு பணத்தினை இலங்கையரசு செலவழித்திருந்தது. அத்துடன், இந்தியாவின் பங்குபற்றிக் குறிப்பிடுகையில், இந்தியா பெருமளவு வளங்களை இப்போரில் ஈடுபடுத்தியிருந்தது, போரின் பின்னரான காலத்தில் இந்தியா ஆற்றப்போகும் பங்கு முக்கியமானது" என்றும் கூறியிருந்தார்.

“ ஆனால், போரின்போது இந்தியா கட்டிய அதீத ஈடுபாடும், போரின் போக்கினைத் தீர்மானிப்பதில் இந்தியா காட்டிய ஆர்வமும், போருக்குப் பின்னரான மீள்கட்டுமானம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இந்தியா காட்டுமென்று தான் நம்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அத்துடன், எதிர்காலத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இந்தியாவினை உட்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்".

முற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தொடர்பில் மகிந்தவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை.

June 9, 2020

Subramania-swamy-mahinda.jpg

தமிழ் மக்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என தனக்கு நன்கு தெரியும் என இந்திய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் அந்;நாட்டின் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிபிபிட்டுள்ளார்.

எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் மகிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2020/144603/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்தியாவுக்கு துதிபாடுவோர் மற்றும் சம்சும் வகையாறாக்கள் டக்ளஸ் போன்ற கழுத்தறுப்பாளர்களின் கைப்பொம்மைகளாகவும் கருத்துரைப்போராகவும்  இருப்பவர்கள்மற்றும்  சனநாயக முதுநிலைமானிகளாகக் காட்டிக்கொண்டு மக்களை கொன்றொழித்தவாறு காட்டாட்சி நடாத்துவதை சனநாயகம் என்றவாறு தமிழ்த் தேசிய எதிர்ப்பினை உமிழ்வோர் போன்ற கிந்திய நேசவுரிமைச் சக்திகள் இந்த கட்டுரையை சரியாக ஆய்வுசெய்து பார்பதனூடாக எதிர்காலத்திலாவது தெளிவான உரையாடல்களையும் தமிழினத்தின் கையறுநிலையிருந்து மீள்தலையும்  வலுப்படுத்த வேண்டிய தேடுதலுக்கு வழிபிறக்கலாம்.இந்த இடத்திலே இரண்டு பக்கமே உள்ளது . ஒன்று தமிழ்த் தேசியத்தைக் காப்பது. இரண்டாவது தமிழ் தேசியத்தை அழிப்போரோடு இருப்பது.

 கிந்தியக் கொலைகார நாசகார அரசு தனது முன்னைய தோல்விக்குப் பழிவாங்க  35-40இலட்சம் மக்கள் தொயைக்கொண்ட தமிழீழ தேசத்தவரோடு பின்கதவால் நின்று உருமறைப்புச் செய்து மோதியதை பார்க்கும்போது எவளவு கோளைத்தனமான அரசு என்பதைக் காட்டுகிறது. கேட்டால் இதனை  இராசதந்திரம் என்று வேறு சொல்லுவார்கள்.  தமிழினம் தன் அழிவிலிருந்து மீள வேண்டின் தனக்கான சரியான பாதையை கடந்துவந்த பட்டறிவின் வழி கண்டடைதலும் அரசியல் கட்சிகளைக் கடந்து ஒரு மக்கள் திரளாக எழுதலும் அவசியம் என்பதை மேலுள்ள கட்டுரை கற்பிக்கின்றது. 

ரஞ்சித் அவர்களே இணைப்புக்கு நன்றி! இந்தக் கட்டுரையின் மூலத்தை இணைத்தால் முழுமையாக வாசிக்கலாம்.

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் மக்கள் தொடர்பில் மகிந்தவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை.

June 9, 2020

Subramania-swamy-mahinda.jpg

தமிழ் மக்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என தனக்கு நன்கு தெரியும் என இந்திய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் அந்;நாட்டின் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிபிபிட்டுள்ளார்.

எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் மகிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2020/144603/

இந்தக் கட்டுரைக்கு இதனை இணைத்ததன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

1. மகிந்த நல்லவர். அவருக்கு வாக்குப்போடச் சொல்கிறீர்களா?

2. கொலைகார கிந்தியக் கூட்டுத்தின் எடுபிடியான் சு.சுவாமியின் குசும்புதனத்தை சொல்கிறீர்களா?

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி,

இதோ நீங்கள் கேட்ட இணைப்பு.

https://www.thehindu.com/opinion/lead/How-India-kept-pressure-off-Sri-Lanka/article14950828.ece

இந்தியர்கள் தாமே திட்டமிட்டு இந்த யுத்தத்தினை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். எம்மில் பலர் சீனாவின் பக்கமும், அமெரிக்காவின் பக்கமும் கையைக் காட்டிக்கொண்டு நிற்கிறோம்.

ஆரம்பம் முதல், இறுதிவரை அது இந்தியா ...இந்தியா...இந்தியாதான்.

மேற்குலகும், அமெரிக்காவும் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு முயன்றதும், பேச்சுவார்த்தை ஒன்றிற்கு முயன்றதும் உண்மையே. அமெரிக்க தூதரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதையே ஹிந்துவும் வெளியிட்டது. புலிகளை அழித்தோம் என்று சந்தோசப்பட்டு எழுதும்போது, தம்மையறியாமலேயே இந்தியாவின் கோரமுகத்தினையும் காட்டிவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

யுத்தத்தோடு நிற்கவில்லையே ரஞ்சித்.
கடைசி நேரத்திலும் ராஜதந்திரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சகல போர் மரபுகளையும் மீறி இந்தியா தனது தனிப்பட்ட செல்வாக்கை வைத்து அத்தனை பேரையுமே சுட்டுக் கொன்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மைதான். இந்தியா எம்மை திட்டமிட்டே கருவறுத்தது. 

இந்தியாவின் துரோகம் வெளியே தெரியத் தெரிய, இவர்கள்மேல் வெறுப்பும், கோபமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இந்தியா இல்லாமல், இலங்கையால் இப்போரில் நிச்சயமாக வென்றிருக்க முடியாது. எமது மக்களும், போராளிகளும், எமது தாயக விடுதலைப் போராட்டமும் முற்றாக அழிக்கப்பட ஒற்றைக்காரணம் இந்தியா.

தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எம்மை அழித்தது காங்கிரஸ், துணைபோனது தி மு க. 

மேனன் எழுதிய "தெரிவுகள்" எனும் புத்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பையும், தமிழக அரசியல்த் தலைவர்களின் யுத்தத்திற்கான ஆதரவையும் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். தேடிப்பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஆரம்பம் முதல், இறுதிவரை அது இந்தியா ...இந்தியா...இந்தியாதான்.

சகல தளபதிகள் உட்பட 300 பேர் ஒன்று சேர்ந்து நடத்த முயன்ற தாக்குதலையும் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை பாவித்து அந்த சமரை நடாத்தியதும் இந்தியா தான்.

அந்த சமர் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால் இன்று கதையே வேறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல தளபதிகள் உட்பட 300 பேர் ஒன்று சேர்ந்து நடத்த முயன்ற தாக்குதலையும் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை பாவித்து அந்த சமரை நடாத்தியதும் இந்தியா தான்.

அந்த சமர் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால் இன்று கதையே வேறு.

ஆனந்தபுரம் சமரைச் சொல்கிறீர்களா? அச்சமர் தொடர்பான விபரங்களை உள்ளிருந்தவர்களே ராணுவத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கொல்லப்பட்ட தளபதிகள் தீபன் மற்றும் விதுஷா ஆகியோரது உடல்கள் கடுமையான எரிகாயங்களுடன் காணப்பட்டன. வெள்ளைப் பொஸ்பரஸ் எனும் கொத்தணிக் குண்டுகளோ அல்லது விஷவாயுவோ பாவித்துத் தாக்கியிருக்கிறார்கள். 

ராணுவத்தின் அணியொன்றினைச் சுற்றிவளைக்க முற்பட்ட சுமார் 1000 புலிகளை, ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியிருக்கிறது. 

எமது போராட்டம் தோற்றதற்குக் கருணா எனும் இனத்துரோகியின் பங்கும் கணிசமானது. 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல தளபதிகள் உட்பட 300 பேர் ஒன்று சேர்ந்து நடத்த முயன்ற தாக்குதலையும் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை பாவித்து அந்த சமரை நடாத்தியதும் இந்தியா தான்.

அந்த சமர் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால் இன்று கதையே வேறு.

3 minutes ago, ரஞ்சித் said:

ஆனந்தபுரம் சமரைச் சொல்கிறீர்களா? அச்சமர் தொடர்பான விபரங்களை உள்ளிருந்தவர்களே ராணுவத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கொல்லப்பட்ட தளபதிகள் தீபன் மற்றும் விதுஷா ஆகியோரது உடல்கள் கடுமையான எரிகாயங்களுடன் காணப்பட்டன. வெள்ளைப் பொஸ்பரஸ் எனும் கொத்தணிக் குண்டுகளோ அல்லது விஷவாயுவோ பாவித்துத் தாக்கியிருக்கிறார்கள். 

ராணுவத்தின் அணியொன்றினைச் சுற்றிவளைக்க முற்பட்ட சுமார் 1000 புலிகளை, ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியிருக்கிறது. 

எமது போராட்டம் தோற்றதற்குக் கருணா எனும் இனத்துரோகியின் பங்கும் கணிசமானது. 

தாக்குதலுக்கு புலிகள் தயாராகியதில் இருந்து அவர்கள் எந்தெந்த இடங்களில் இருந்து தாக்குகின்றார்கள், அணிகளின் பலம், எண்ணிக்கை வரைக்கும் செய்மதிகளின் துணைகொண்டு இலங்கை அரசுக்கு தகவல் அனைத்தும் வழங்கியது இந்தியா தான் என்று பொன்சேகா (அல்லது இன்றைய இராணுவத் தளபதியின் ஆங்கில நூலில்) ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அதற்காகத் தானே இந்தியாவின் சவுத் புளக் தென்பகுதியில் பாரிய முகாமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

27 minutes ago, ரஞ்சித் said:

உண்மைதான். இந்தியா எம்மை திட்டமிட்டே கருவறுத்தது. 

இந்தியாவின் துரோகம் வெளியே தெரியத் தெரிய, இவர்கள்மேல் வெறுப்பும், கோபமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இந்தியா இல்லாமல், இலங்கையால் இப்போரில் நிச்சயமாக வென்றிருக்க முடியாது. எமது மக்களும், போராளிகளும், எமது தாயக விடுதலைப் போராட்டமும் முற்றாக அழிக்கப்பட ஒற்றைக்காரணம் இந்தியா.

தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எம்மை அழித்தது காங்கிரஸ், துணைபோனது தி மு க. 

மேனன் எழுதிய "தெரிவுகள்" எனும் புத்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பையும், தமிழக அரசியல்த் தலைவர்களின் யுத்தத்திற்கான ஆதரவையும் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். தேடிப்பாருங்கள். 

தென்னாசியாவில் இருக்கும் சின்னஞ்சிறு இனக்குழுமமான இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியிலான போராட்டத்தினை அமைதி வழியில் எடுத்துச் சென்று கொண்டு இருக்கையில், அதை சுய நலத்துக்காக ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்து தன் சொல்லுக்கும் சுயநல அரசியலுக்கும் செவி சாய்க்கவில்லை என்பதற்காக எதிரியை வைத்தே பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்து சின்னாபின்னமாக்கி, எதிரியின் காலடியிலேயே கிடக்க வைத்த இந்தியாவின் மீதான கோபமும், ஆத்திரமும் அதை வெளிக்காட்ட முடியாத எம் இயலாமையும் வாழ் நாளில் என்றுமே தணியப் போவதில்லை. 

எந்த சூழ்ச்சியையும் புத்திக் கூர்மையும், திட்டமிடலும், செயலூக்கமும் கொண்ட தலைமையால் முறியடிக்க முடியும். ஆனால் இன்றிருக்கும் எம் தமிழ் தலைமைகளோ அந்த சூழ்ச்சிக்கு தம்மை தாமே மட்டுமல்லாமல் முழு இனத்தையும் தாரை வார்க்கும் தலைமையாகவே கிடப்பது மேலும் மேலும் சினத்தைத் தான் தருகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டைம்ஸ் ஒf இந்தியா எனும் பத்திரிக்கையின் இந்திய பாதுகாப்புத்துறை கட்டுரையாளர் நிதின் கோக்லே எழுதிய கட்டுரையில் இந்தியா இலங்கை விமானப்படைக்கு வழங்கிய 5 எம் ஐ 17 ரக உலங்கு வானூர்திகள் இலங்கை ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணிக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்ததாகவும், இந்த உலங்குவானூர்திகளின் செயற்பாட்டினாலேயே பல தளபதிகளைத் தாம் கொன்றதாகவும் இலங்கை கூறியிருக்கிறது.

அத்துடன், புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் குறைந்தது 10 கப்பல்களை இந்திய கடற்படையும் விமானப்படையும் நேரடியாகவே தாக்கியழித்ததாக நிதின் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், புலிகளின் அனைத்து வழங்கற்பாதைகளையும் முடக்கியது இந்தியக் கடற்படையே என்றும் உரிமை கோரியிருக்கிறார்.

இவற்றினைப் படிக்கும்போது இந்த யுத்ததம் உண்மையாகவே இந்தியா நடத்திய யுத்தம்தான் என்பது புலப்படுகிறது. இலங்கை ராணுவம் வெறும் கருவியாகவே செயற்பட்டிருக்கிறது.

அக்கட்டுரையின் ஆங்கில வடிவத்தின் இணைப்பு கீழே.

https://timesofindia.indiatimes.com/india/India-behind-Lankas-victory-over-LTTE-Book/articleshow/4924585.cms

இறுதிப்போரில் காங்கிரஸ் கட்சியின் போர்முனைப்புகளுக்கு தமிழகத் தலைவர்களின் பங்களிப்புப் பற்றி சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.....

"...............................பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் மீது இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திக்கொண்டேயிருந்தது. அதேவேளையில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் உடனடியான யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தன. அத்துடன், புலிகளின் தலைவர் பிரபாகரனை பத்திரமாக யுத்த களத்திலிருந்து வெளியேற்றி, புலிகள் முற்றாக அழிவதைத் தடுத்து, அவர்களின் சுதந்திரப் போராட்டம் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ச்சியாக நடைபெறுவதே அந்த நாடுகளின் நோக்கமாக இருந்தது. ஆனால் தில்லியிலும், தமிழ்நாட்டிலுமிருந்த அரசியல்த் தலைவர்களைப் பொறுத்தவரையில், புலிகள் தப்பிக்க விடப்படுவதோ அல்லது பிரபாகரனை உயிருடன் விடுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு முடிவாக அன்று இருந்ததோடு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பாதகமாக அமையும் என்பதையும் நாம் உறுதியாக நம்பினோம்.

தமிழகத்தில் இரு பிரதான கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பொறுத்தவரையில் ஈழத்தை அடைவதற்கான பிரபாகரனின் போராட்டத்திற்கு தமிழகத் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்குப் பிரபாகரன் அச்சுருத்தலாக இருப்பார் என்று நம்பினார்கள்.

மக்கள் முன்னால், தில்லியின் தமிழர் மீதான போருக்கு எதிரானவர்கள் என்று தமிழகத்தலைவர்கள் காட்டிக்கொண்டாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தில்லியின் மத்திய அரசாங்கத்துக்குமிடையே மிகச் சுமூகமான உறவு நிலவி வந்ததுடன், புலிகளை முற்றாக அழிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தே அன்று நிலவியது. பிரணாப் முகர்ஜீ மற்றும் நாராயணன் ஆகியோரது அயராத முயற்சியினால், தமிழக அரசியல்த்தலைவர்கள், கட்சி பேதமின்றி இப்போருக்குத் தமது ஆதரவினை தனிப்பட்ட ரீதியில் வழங்கியதோடு, என்னுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் எவ்விலை கொடுத்தாவது புலிகள் அழிக்கப்படவேண்டியதையும் வலியுறுத்தியிருந்தனர்.

ராஜீவ் காந்தியைக் கொன்றதுமுதல், தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பட்டு வந்ததுடன், இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த பொது எதிரியான புலிகளை அழிக்கவும் இந்த நிலைப்பாடு பெரிதும் உதவியது"

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

வணக்கம் நொச்சி,

இதோ நீங்கள் கேட்ட இணைப்பு.

https://www.thehindu.com/opinion/lead/How-India-kept-pressure-off-Sri-Lanka/article14950828.ece

இந்தியர்கள் தாமே திட்டமிட்டு இந்த யுத்தத்தினை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். எம்மில் பலர் சீனாவின் பக்கமும், அமெரிக்காவின் பக்கமும் கையைக் காட்டிக்கொண்டு நிற்கிறோம்.

ஆரம்பம் முதல், இறுதிவரை அது இந்தியா ...இந்தியா...இந்தியாதான்.

மேற்குலகும், அமெரிக்காவும் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு முயன்றதும், பேச்சுவார்த்தை ஒன்றிற்கு முயன்றதும் உண்மையே. அமெரிக்க தூதரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதையே ஹிந்துவும் வெளியிட்டது. புலிகளை அழித்தோம் என்று சந்தோசப்பட்டு எழுதும்போது, தம்மையறியாமலேயே இந்தியாவின் கோரமுகத்தினையும் காட்டிவிட்டார்கள். 

வ‌ண‌க்க‌ம் ர‌குநாத‌ன் அண்ணா ,
போரை முன் நின்று ந‌ட‌த்தின‌து இந்தியா தான் என்று த‌மிழ‌க‌த்தில் ப‌ல‌ருக்கு தெரியும் ,

போர் க‌ப்ப‌ல்க‌ள் அமெரிக்கா இல‌ங்கைக்கு குடுத்த‌தை  நாம் பார்த்து இருக்கிறோம் , 

பாக்கிஸ்தான் இல‌ங்கைக்கு ஆயுத‌த்தை அள்ளி குடுத்த‌து , ப‌ல் குழ‌ல் ஆயுத‌ம் பாக்கிஸ்தான்ட‌ ,

இறுதிக‌ட்ட‌ போரில் இந்தியாவின் ஆயுத‌ங்க‌ளும் இல‌ங்கை வ‌ந்த‌து , உல‌கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ கொத்து குண்டுக‌ள் இல‌ங்கைக்கு யார் குடுத்த‌து தெரியா ?

இறுதிக‌ட்ட‌ போரில் சீனாவின் ஆதிக்க‌ம் பெரிசா இல்லை , 

எல்லாம் க‌ள்ள‌ இந்திய‌ர்க‌ள்  தான் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை அழித்தார்க‌ள் , 

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரிந்த‌து எம்ம‌வ‌ருக்கு தெரியாத‌து வேத‌னை தான் 

  • கருத்துக்கள உறவுகள்

Water Under the Bridge என்று பதிவிட்டிருந்தேன். அதன் அர்த்தம் என்னவென்று புரிந்து தான் தூக்குனீர்களா, நிழலி?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

தில்லியிலும், தமிழ்நாட்டிலுமிருந்த அரசியல்த் தலைவர்களைப் பொறுத்தவரையில், புலிகள் தப்பிக்க விடப்படுவதோ அல்லது பிரபாகரனை உயிருடன் விடுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு முடிவாக அன்று இருந்ததோடு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பாதகமாக அமையும் என்பதையும் நாம் உறுதியாக நம்பினோம்.

தமிழகத்தில் இரு பிரதான கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பொறுத்தவரையில் ஈழத்தை அடைவதற்கான பிரபாகரனின் போராட்டத்திற்கு தமிழகத் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்குப் பிரபாகரன் அச்சுருத்தலாக இருப்பார் என்று நம்பினார்கள்.

மக்கள் முன்னால், தில்லியின் தமிழர் மீதான போருக்கு எதிரானவர்கள் என்று தமிழகத்தலைவர்கள் காட்டிக்கொண்டாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தில்லியின் மத்திய அரசாங்கத்துக்குமிடையே மிகச் சுமூகமான உறவு நிலவி வந்ததுடன், புலிகளை முற்றாக அழிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தே அன்று நிலவியது. பிரணாப் முகர்ஜீ மற்றும் நாராயணன் ஆகியோரது அயராத முயற்சியினால், தமிழக அரசியல்த்தலைவர்கள், கட்சி பேதமின்றி இப்போருக்குத் தமது ஆதரவினை தனிப்பட்ட ரீதியில் வழங்கியதோடு, என்னுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் எவ்விலை கொடுத்தாவது புலிகள் அழிக்கப்படவேண்டியதையும் வலியுறுத்தியிருந்தனர்.

ரஞ்சித் அவர்களே இணைப்புக்கு நன்றி!

மிகவும் ஆழமாக உற்று நோக்க வேண்டிய பகுதி. குறிப்பாகத் தமிழகத் திராவிடக் கட்சித் தலைமைகளின் துரோகத்தனத்தை  தமிழர்கள் கூறவில்லை. இந்திய நடுவனரசின் உளவாளிகள்(இவர்களை நான் ராசதந்திரிகளாகப் பார்க்கவில்லை) கூறுகின்றார்கள். ஏதோ ஒரு திரியில் திராவிடக் கட்சிகளின் கபடநாடகங்களைத் தியாகமாக சுட்டியோரால் மேனனிடமோ முகர்யீயிடமோ  விளக்கம் கேட்க முடியுமா?

தமிழினம் இதிலிருந்து  பாடங்களைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். வெறுமனே கிந்தியாவை நம்பி எமது உரிமைப் போராட்டத்தைத்  தற்போதைய தமிழ் தலைமைகளாகட்டும் எதிர்காலத் தமிழ் தலைமைகளாகட்டும்  அடகுவைக்காது உலகில் ஒடுக்கப்படும் இனங்கள் போராட்டங்களோடு தொடர்பாடலை ஏற்படுத்தி, சரியாகத் திட்டமிடுவதும் திடம் கொள்ளவதும் அவசியமானது. தொடர்ந்து ஏமாந்துகொண்டு தமிழினம் இருக்காது ஏமாற்றும் தலைமைகளை இனங்காண்பதோடு மதங்களை பிரதேசங்களைக் கடந்து மொழியால் ஒன்றுபட்ட சக்தியாக நிமிர்வோமாயின் எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெறறியை நோக்கி நகர்வதை சிங்கள அரசுகளால் தடுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

தென்னாசியாவில் இருக்கும் சின்னஞ்சிறு இனக்குழுமமான இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியிலான போராட்டத்தினை அமைதி வழியில் எடுத்துச் சென்று கொண்டு இருக்கையில், அதை சுய நலத்துக்காக ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்து தன் சொல்லுக்கும் சுயநல அரசியலுக்கும் செவி சாய்க்கவில்லை என்பதற்காக எதிரியை வைத்தே பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்து சின்னாபின்னமாக்கி, எதிரியின் காலடியிலேயே கிடக்க வைத்த இந்தியாவின் ...

இது உண்மையா? அல்லது

4 hours ago, ரஞ்சித் said:

தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எம்மை அழித்தது காங்கிரஸ், துணைபோனது தி மு க. 

இது உண்மையா?

இரெண்டுமே உண்மையானால், எது பெருமளவில் காரணமானது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

எந்த சூழ்ச்சியையும் புத்திக் கூர்மையும், திட்டமிடலும், செயலூக்கமும் கொண்ட தலைமையால் முறியடிக்க முடியும். ஆனால் இன்றிருக்கும் எம் தமிழ் தலைமைகளோ அந்த சூழ்ச்சிக்கு தம்மை தாமே மட்டுமல்லாமல் முழு இனத்தையும் தாரை வார்க்கும் தலைமையாகவே கிடப்பது மேலும் மேலும் சினத்தைத் தான் தருகின்றது.

எந்த சூழ்ச்சியையும் முறியடிக்கத்தக்க புத்திக் கூர்மையும், திட்டமிடலும், செயலூக்கமும் கொண்ட தலைமை இன்று இல்லை என்று சினப்படுவது பயனற்றது. மாறாக, உங்களை போல சிந்திக்கும் சிலருடன் சேர்ந்து இந்த பிரச்சினையை விஞ்ஞான ரீதியாக திறந்த மனதுடன் ஆய்வு செய்து மக்களுக்கும் தலைவர்களுக்கும் தெளிவு படுத்துவது பயனுள்ளது. பேராசிரியர் திருநாவுக்கரசு  பெயர் போடாமல் சுகந்தம் வெளியீடு என்று பதிப்பிட்டு “இந்தியாவும் தமிழீழ விடுதலையும்” என்ற புத்தகத்தை 1985/86 ல் வெளியிட்டார். இந்திய இராணுவம் வந்து இறங்கும் என்று எழுதி இருந்தார். எம்மை அழிப்பார்கள் என்றும் எழுதினார். அது நடந்தது. அந்த நாட்களில் அவர் மட்டுமே எமது பிரச்சினை பற்றி PhD அளவுக்கு ஆய்வு செய்தவர். புலிகளுக்கும் ஆலோசகராக இருந்தார். இப்படி பலர் தேவை. இந்த களமே இதற்கு வழி செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே ஊடாக நடந்த பேச்சுவார்த்தைகள் இணைத்தலைமை நாடுகள் என்று நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா இருந்தும், அவை எல்லாம் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலின்படிதான் நடந்தன. வன்னியில் புலிகளைச் சந்தித்தால் சமாதானத் தூதுவர்கள் டெல்லிபோய் இந்தியர்களுடன் பேசித்தான் பின் தம்நாட்டிற்குப் போவார்கள். 

இந்தியாவின் அருகில் இருப்பதால் இந்தியாவை வெட்டியாடி எதுவும் செய்யமுடிந்திருக்கவில்லை. முடிவில் இந்தியா புலிகளை அழிக்க எடுத்த முடிவுக்கு மேற்கு நாடுகள் ஒருமித்த ஆதரவைக்கொடுத்தன. இலங்கையில் சமாதானம் வர புலிகளைப் பலியாக்கினார்கள். கூடவே பல்லாயிரம் பொதுமக்களையும் பலிகொடுத்தார்கள். இந்த விலையெல்லாம் போரில் வென்ற சிங்கள அரசு ஒரு அரசியல் தீர்வுக்கு ஒத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் சிங்களவர்கள் மோடையர் இல்லை. சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கும், இணைத்தலைமை நாடுகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை மீறினார்கள்.

இன்றும் சர்வதேச நாடுகளால் சிங்கள அரசையோ, போரை முன்னின்று நடத்திய இராணுவத் தளபதிகளையோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இனியும் ஒன்றும் செய்யமுடியாத அளவிற்கு சிங்களவர்களின் இராஜதந்திரம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

சிங்களத்தின் இராசதந்திரம் வரலாற்றுக்காலம் முதல் தெளிவானது. நன்றாக வெட்டியாடி நகர்வதில் வல்லோர்.  அரசென்ற வகையில் சிங்களவர்களை வெளிநாடுகளில் உள்ளஅரசறிவியற் கல்லூரிகளுக்கு அனுப்பிக் கற்பிக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இன்னும் எமது சட்டாம்பிமாரோடுதானே நிற்கின்றோம். புலத்திலே எமது பிள்ளைகளைக்கூட நாம் ஊக்குவிக்கவில்லைத்தானே.  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

 இந்திய இராணுவம் வந்து இறங்கும் என்று எழுதி இருந்தார். எம்மை அழிப்பார்கள் என்றும் எழுதினார். அது நடந்தது.

1984ஆம் ஆண்டு காலப்பகுதியில்  கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் இருந்து  உதயநகர் நோக்கிச் செல்லும் சிற்றொழுங்கையால்  சென்று தொடருந்துத் தடத்தைக் கடந்து போகிறேன். ஒரு குடிசைக்குள் இருந்து பாடலொன்று கேட்கிறது.  பாடல் இப்படிப் போகிறது. 

                                                                                                   - ஈழத்திலே ரத்தவெள்ளம் 
                                                                                                     இந்தியாவும் சேர்ந்து கொள்ளும்
                                                                                                     அதிலே யேஆர் படகு செல்லும்.... -
பாடலைப் பாடிக்கொணடிருந்தவர் திரு சாந்தன். அந்தக் குடிசை   NLFT   என்ற அமைப்பின் முகாம் என்று பின்னாளில் அறிந்தேன். பலர் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்கள் ஆனால் ஏன் வீழ்த்தப்பட்டோம் .!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

பேராசிரியர் திருநாவுக்கரசு  பெயர் போடாமல் சுகந்தம் வெளியீடு என்று பதிப்பிட்டு “இந்தியாவும் தமிழீழ விடுதலையும்” என்ற புத்தகத்தை 1985/86 ல் வெளியிட்டார். இந்திய இராணுவம் வந்து இறங்கும் என்று எழுதி இருந்தார். எம்மை அழிப்பார்கள் என்றும் எழுதினார். அது நடந்தது. அந்த நாட்களில் அவர் மட்டுமே எமது பிரச்சினை பற்றி PhD அளவுக்கு ஆய்வு செய்தவர். புலிகளுக்கும் ஆலோசகராக இருந்தார். இப்படி பலர் தேவை. இந்த களமே இதற்கு வழி செய்யலாம்.

9 hours ago, nochchi said:

1984ஆம் ஆண்டு காலப்பகுதியில்  கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் இருந்து  உதயநகர் நோக்கிச் செல்லும் சிற்றொழுங்கையால்  சென்று தொடருந்துத் தடத்தைக் கடந்து போகிறேன். ஒரு குடிசைக்குள் இருந்து பாடலொன்று கேட்கிறது.  பாடல் இப்படிப் போகிறது. 

                                                                                                   - ஈழத்திலே ரத்தவெள்ளம் 
                                                                                                     இந்தியாவும் சேர்ந்து கொள்ளும்
                                                                                                     அதிலே யேஆர் படகு செல்லும்.... -
பாடலைப் பாடிக்கொணடிருந்தவர் திரு சாந்தன். அந்தக் குடிசை   NLFT   என்ற அமைப்பின் முகாம் என்று பின்னாளில் அறிந்தேன். பலர் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்கள் ஆனால் ஏன் வீழ்த்தப்பட்டோம் .!

தெளிவான சிந்தனை என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வதுடன் மட்டுப்படுத்தப் பட்டு விட்டது. நடக்கப் போவதை எப்படி சாதகமானதாக்கலாம், அல்லது அதன் பாதகமான  விளைவுகளை எப்படி குறைக்கலாம் என்பது பற்றிய அறிவு,  தெளிவு குறைந்ததாகவே இருந்தது. பல முயற்சிகள் இடம்பெற்றன, ஆனால், அவை அனைத்தும்  பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக தவிர்க்க முடியாத நிலையில்   செய்யப்பட்ட முயற்சிகள். நடக்கப் போவதை எப்படி சாதகமானதாக்கலாம் என்பதற்கான வெற்றி பெறத்தக்க திட்டம் ஒன்று இருக்கவில்லை. இறுதியாக ஒரு திட்டம் உருவானது: அதுவே பிரேமதாசாவின் ஆதரவுடன் இந்திய இராணுவத்தை வெளியேற்றும் திட்டம். அது அரைவாசிக்கும் மேலாக வெற்றி பெற்ற திட்டம். அதன் தொடர்ச்சியாக உருவான இடைக்கால நிருவாகம், நிரந்தர நிருவாகமாக மாறாதது இந்த திட்டத்தின் தோல்வி கண்ட பாகமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.