Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை! - விக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை ! - விக்கி

ving.jpg

ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“1982 – 1986 வரையில் நான் ஐந்து வருடங்கள் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மல்லாகம் நீதிமன்றம் அருகில் உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

அந்தக் காலகட்டத்தில் எனக்கு வலதுகரமாக இருந்து கடமையாற்றியவர் உங்களில் ஒருவர் தான். அன்றைய பலமுகங்கள் இன்று இங்கில்லை. சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள்.

சிலர் இந்த உலகவாழ்வையே நீத்துவிட்டார்கள். ஆனால் அந்தக் காலம் பசுமரத்து ஆணிபோல் நெஞ்சில் ஆழ்ந்து பதிந்துள்ளது. அன்று நீதிபதி. மக்களிடம் இருந்துசற்று ஒதுங்கி வாழ்ந்தகாலம். இன்று ஒருஅரசியல்வாதி.

உங்களுடன் ஒருவரோடு ஒருவராக உங்கள் சுகதுக்கங்களில் பங்குகொள்ள வந்துள்ளேன். என்னை இங்கு அழைத்த சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது முதல் நன்றி உரித்தாகுக.

அவரை அண்மையில்த்தான் நான் சந்திக்க நேர்ந்தது. இவ்வளவு விரைவில் அவர் தம் கை வண்ணத்தைக் காட்டுவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. ஞாயிறு மாலை 6 மணிக்கு குழமங்கால் கூட்டம் என்றவுடன் உண்மையில் மகிழ்வடைந்தேன்.

ஏன் என்றால் ஒன்று ஸ்டாரலின் அவர்களின் ஈடுபாட்டைக் கண்டு அடுத்தது குழமங்கால் செல்லப் போகின்றோமே என்று. எனவே உங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அடுத்து இன்றைய தேர்தல் கூட்டம் பற்றிய ஒரு விளக்கம்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சிலவிடயங்களை தெளிவாக புரிந்துகொண்டு வாக்களிக்கவேண்டும் என்று உங்கள் ஊடாக எனது தமிழ் உறவுகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மக்கள் ஆணையான வட்டுக்கோட்டை தீர்மானத்தை கைவிடுவதாக நாம் அறிவிக்கவில்லை. நாம் அதனால்த் தான் நேற்றைய தினம் எமது அங்குரார்ப்பண தேர்தல் கூட்டத்தை அந்தத் தீர்மானத்தை இயற்றிய இடத்தில் வழக்கம்பரை அம்மன் கோயில் முன்றலில் வைத்தோம்.

அன்று எடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் உள்அர்த்தம் 44 வருடங்களுக்குப் பிறகும் உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளதாக நாங்கள் காண்கின்றோம்.

அதனால்த்தான் நாங்கள் வடகிழக்கு இணைப்புசாத்தியம் என்று கூறி எமது தாயகக் கோட்பாட்டை கைவிடாது பற்றி நிற்கின்றோம். சர்வதேச சட்டப்படி நாங்கள் ஒரு தனித்துவமான மக்கள் கூட்டம். நாமே இந் நாட்டின் ஆதிக்குடிகள் என்பதைநாம் உரத்துக் கூறிவருகின்றோம்.

அதனால் எம்மை நாமே ஆள எமக்குரித்துண்டு என்பதை தென்னவர்களுக்குக் கூறிவருகின்றோம். அடுத்து நாங்கள் சிலர் போல் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடைபெறவில்லையென்று கூறத்தயாரில்லை.

மாறாக வடமாகாண சபையில் நாம் இயற்றிய இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம்.

மேலும் நல்லாட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறி நாம் ஐ.நா சபையில் இனப்படுகொலையாளிகளை பிணை எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டோம்.

மாறாக அன்றைய அமெரிக்கப் பிரதிநிதி நிஷாபிஸ்வால் இலங்கைக்குக் காலநீட்சியைக் கொடுக்கவேண்டும் என்று எம்மிடம் கூறியபோது அதைவெகுவாகக் கண்டித்தேன்.

அதற்கு மேலும் கூறுவதானால் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான சர்வதேச யுத்தகுற்ற விசாரணையை அரசியல் தீர்வு வரப்போகின்றது என்ற கானல் நீரைக்காட்டிமழுங்கடித்தவர்கள் நாம் அல்லர்.

இவை எல்லாம் இது வரையில் நடைபெற்ற திருகுதாளங்கள். மேலும் உரிமை அரசியல் என்று முழக்கமிட்டு கம்பெரேலிய என்ற சலுகை அரசியலுக்குள் மக்களை நாம் முடக்கவில்லை.

நெல்சன் மண்டேலா என்று சிங்கள இனப்படுகொலையாளிகளை நாம் புகழவில்லை. எம்மை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்று ஏமாளிகளாய் உங்கள் முன் வரவில்லை. இவற்றை உங்களுக்குசொல்ல வேண்டியகாலம் கனிந்துள்ளது.

அதனால்தான் இவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். வடமாகாணசபையின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்துக்கு அடிபணிந்து நாம் எமது அரசியல் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கிவைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்தபோதும் நான் எனது மக்களுக்கு துரோகம் செய்யவில்லை.

அதனால் தான் என்னை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார்கள். நான் பதவியில் இருந்தபோது, பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால், நான் எதுவும் செய்யவில்லை என்று அப்பட்டமான பொய்களை கூறிவருகின்றார்கள்.

குறிப்பாக, மத்திய அரசாங்கத்தின் நிதியை மீள திரும்ப அனுப்பியதாக கூறி மக்களை நம்பவைக்கப்பார்க்கின்றார்கள். எனது காலத்தில் ஒருசதம் நிதியையும் நான் திரும்ப அனுப்பவில்லை என்பதே உண்மையானது. பலமுறை இதைக் கூறிவிட்டேன்.

ஆனால் தொடர்ந்து எம்மைப் பற்றிபொய்கள் கூறப்பட்டுவருகின்றன. ஒருபொய்யை ஆயிரந் தடவைகள் கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற கணிப்பில் அவர்கள் அவ்வாறு கூறுகின்றார்களோ தெரியாது.

பொதுவாக நாம் விமர்சன அரசியல் செய்ய விரும்புவதில்லை. ஆனால் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. அதனையே நான் செய்தேன்.

எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன. நாம் என்ன செய்யப்போகின்றோம் என்ற தெளிவான சிந்தனை எம்மிடம் இருக்கின்றது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் தயாரித்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் மேற்கொள்ளவிருக்கும் சில நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளோம்.

தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி முடிவுகளை எந்த விதமான ஆராய்வுகளும் இன்றி எடுத்து அவற்றைநடை முறைப்படுத்தி வந்ததுதான். உலகின் ஆதிக்குடிகளில் ஒன்றான எமது இனத்தின் பிரச்சினை தொடர்பில் எவ்வாறு ஓரிரு நபர்கள் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுக்க முடியும்? இது எத்தனை ஆபத்தானது?

ஆகவே, கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள்.

அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் கூட்டாகச் செயற்படுவோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உலகளாவிய சிந்தனை கூடம் ஒன்றையும், மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் சமூகமேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்களை உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கைஎடுப்போம்.

நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே நாம் செயற்பட வேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே எமக்கு இனி விடிவைக் கொண்டுவரும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்கு காரணம்.

உலகம் முழுவதும் பணத்துடன் அறிவையும் அவர்கள் மூலதனம் இட்டதுதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. நாமும் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும் என்பதை நாம் உணரவேண்டும். எம்மேல் எமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.

அதேவேளை, எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெறுவதற்காக நாடாளுமன்ற அரசியலை காத்திரமான முறையில் நாம் மேற்கொள்வோம்.

ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் எமது மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் அவற்றுக்கு நாம் ஒருபோதும் முண்டுகொடுக்கமாட்டோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எமது மக்களின் நலன்களை முன்வைத்து நாம் பேரப்பேச்சுக்களில் ஈடுபடுவோம்.

உதாரணத்திற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுகோரி வந்தார்கள். சில நிபந்தனைகளை முன்வைத்தேன். தயங்கினார்கள். அப்படியானால் என்னால் உங்களுக்கு ஆதரவுதர முடியாது என்று கூறிவிட்டேன். சென்று விட்டார்கள்.

எமது சிந்தனையில் முதலில் வருவது எமது மக்களின் நலம். எமது எந்தப் பேரம் பேசலும், கருத்துப் பரிமாற்றமும் எம் மக்களின் நலன்களையே முன்வைத்து நிகழும்.

எமது நாடாளுமன்ற பிரவேசம் மூலம் எடுக்கக்கூடிய அத்தனை வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி எமது மக்களை வலுவூட்டச் செய்யும் பொருளாதார நடவடிக்கைகளை நாம் சுயநலம் இன்றி மேற்கொள்வோம்.

அதேவேளை, எவ்வாறு எமது மக்களின் தற்சார்புபொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்பது பற்றி சிந்தித்து வருகின்றோம்.

இதற்கு எவ்வாறு வெளிநாடுகளையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற உத்திகளை ஆராய்ந்து வருகின்றோம்.

யுத்தம் நடைபெற்றகாலத்தில் வடக்கு கிழக்கில் பொருளாதார தன்னிறைவை ஏற்படுத்த பெரிதும் பாடுபட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பாளர் ரூபன் எம்முடன் இணைந்துள்ளார். அவர் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவர் முக்கியபங்குவகிப்பார். அவரிடம் மிகுந்த திறமையும் அனுபவமும் இருக்கின்றது. அதேபோல் எமது யாழ்ப்பாண, வன்னி மாவட்ட மற்றும் மட்டக்களப்பு வேட்பாளர்கள் பலதகைமைகளைக் கொண்டவர்கள்.

ஆசிரியர்கள் வங்கியாளர்கள், பொறியியலாளர்கள் என்று பலர் இருக்கின்றார்கள். இம்முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைவெற்றியடைச் செய்வதால் எமது மக்கள் பலத்த பயன் அடைவார்கள் என்பதைக் கூறிவைக்கின்றேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியத்துவம் இன்றுகளை இழந்துள்ளதற்குக் காரணம் அவர்களின் சுயநல அரசியல். ஆகவே இம்முறை வீட்டை விட்டுவிட்டு சைக்கிளை விட்டுவிட்டு, வீணையை விட்டுவிட்டுநீ ங்கள் மீனுக்கே வாக்களிக்கவேண்டும்.

மீன் ஆட்சிவர ஆதரவுதர வேண்டும். எமது மக்களின் உரிமைகளை அடைவதற்கான எமது அணுகுமுறை ஏனைய எல்லா கட்சிகளையும் விடவும் மாறுபட்டு காணப்படுகின்றது என்பதைநீங்கள் உணரவேண்டும்.

மீனுக்கு இம்முறை வாக்களியுங்கள் என்றுகேட்டு என் தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/18939

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே உங்கடை ஆட்களுக்கு வலை விரிச்சு, விலை பேச ஆரம்பித்திருப்பார்கள். சோரம் போகாமல் பாத்துக்கொள்ளுங்கள். சிலபேர் தேர்தலில் வென்றபின் மாறவும் கூடும். 

வாக்களிக்க மக்கள் கருத்தில் எடுக்கக்கூடிய நல்ல கொள்கைகள்!

1 hour ago, satan said:

இப்பவே உங்கடை ஆட்களுக்கு வலை விரிச்சு, விலை பேச ஆரம்பித்திருப்பார்கள். சோரம் போகாமல் பாத்துக்கொள்ளுங்கள். சிலபேர் தேர்தலில் வென்றபின் மாறவும் கூடும். 

உண்மை விலை போகக்கூடியவர்கள் பற்றி எச்சரிக்கையா இருக்கணும்.
குறிப்பா ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அதனால்தான் இவ்வளவு நாளும் ஏதும் பேசாமல் இருந்தவர். இனி பாருங்கோ, சிங்கன் விடமாட்டான்.😀😀

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2020 at 23:30, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை ! - விக்கி

ving.jpgஉலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள்

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உலகளாவிய சிந்தனை கூடம் ஒன்றையும், மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் சமூகமேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்களை உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கைஎடுப்போம்.

நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே நாம் செயற்பட வேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே எமக்கு இனி விடிவைக் கொண்டுவரும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்கு காரணம்.

உலகம் முழுவதும் பணத்துடன் அறிவையும் அவர்கள் மூலதனம் இட்டதுதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. நாமும் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும் என்பதை நாம் உணரவேண்டும். எம்மேல் எமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.

அதேவேளை, எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெறுவதற்காக நாடாளுமன்ற அரசியலை காத்திரமான முறையில் நாம் மேற்கொள்வோம்.

ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் எமது மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் அவற்றுக்கு நாம் ஒருபோதும் முண்டுகொடுக்கமாட்டோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எமது மக்களின் நலன்களை முன்வைத்து நாம் பேரப்பேச்சுக்களில் ஈடுபடுவோம்.

உதாரணத்திற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுகோரி வந்தார்கள். சில நிபந்தனைகளை முன்வைத்தேன். தயங்கினார்கள். அப்படியானால் என்னால் உங்களுக்கு ஆதரவுதர முடியாது என்று கூறிவிட்டேன். சென்று விட்டார்கள்.

எமது சிந்தனையில் முதலில் வருவது எமது மக்களின் நலம். எமது எந்தப் பேரம் பேசலும், கருத்துப் பரிமாற்றமும் எம் மக்களின் நலன்களையே முன்வைத்து நிகழும்.

எமது நாடாளுமன்ற பிரவேசம் மூலம் எடுக்கக்கூடிய அத்தனை வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி எமது மக்களை வலுவூட்டச் செய்யும் பொருளாதார நடவடிக்கைகளை நாம் சுயநலம் இன்றி மேற்கொள்வோம்.

அதேவேளை, எவ்வாறு எமது மக்களின் தற்சார்புபொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்பது பற்றி சிந்தித்து வருகின்றோம்.

இதற்கு எவ்வாறு வெளிநாடுகளையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற உத்திகளை ஆராய்ந்து வருகின்றோம்.

யுத்தம் நடைபெற்றகாலத்தில் வடக்கு கிழக்கில் பொருளாதார தன்னிறைவை ஏற்படுத்த பெரிதும் பாடுபட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பாளர் ரூபன் எம்முடன் இணைந்துள்ளார். அவர் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவர் முக்கியபங்குவகிப்பார். அவரிடம் மிகுந்த திறமையும் அனுபவமும் இருக்கின்றது. அதேபோல் எமது யாழ்ப்பாண, வன்னி மாவட்ட மற்றும் மட்டக்களப்பு வேட்பாளர்கள் பலதகைமைகளைக் கொண்டவர்கள்.

ஆசிரியர்கள் வங்கியாளர்கள், பொறியியலாளர்கள் என்று பலர் இருக்கின்றார்கள். இம்முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைவெற்றியடைச் செய்வதால் எமது மக்கள் பலத்த பயன் அடைவார்கள் என்பதைக் கூறிவைக்கின்றேன்.

வெற்றிபெற வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளர்கள் விரும்பினால் உங்களைத் தெரிவு செய்வர்! வாழ்த்துக்கள்!

ஆனால், முதன் முதலில் தமிழர் கையில் வந்த வடமாகாணசபையை நீங்கள் நிர்வகித்த முறை உங்கள் வாக்குறுதிகளின் நம்பகத் தன்மையை மக்கள் தீர்மானிக்க உதவும்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Justin said:

வாக்காளர்கள் விரும்பினால் உங்களைத் தெரிவு செய்வர்! வாழ்த்துக்கள்!

ஆனால், முதன் முதலில் தமிழர் கையில் வந்த வடமாகாணசபையை நீங்கள் நிர்வகித்த முறை உங்கள் வாக்குறுதிகளின் நம்பகத் தன்மையை மக்கள் தீர்மானிக்க உதவும்! 

 கடந்த பத்து வருசமாய் சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து வெட்டிப்புடுங்கினதிலை வடக்கிலையும் கிழக்கிலையும் பாலாறும் தேனாறும்  பாய்ஞ்சு பாய்ஞ்சு ஓடுதாம். :cool:

22 minutes ago, குமாரசாமி said:

 கடந்த பத்து வருசமாய் சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து வெட்டிப்புடுங்கினதிலை வடக்கிலையும் கிழக்கிலையும் பாலாறும் தேனாறும்  பாய்ஞ்சு பாய்ஞ்சு ஓடுதாம். :cool:

அதுக்கு முதல் 30 வருசமும் அப்படி ஒன்றும் ஓடேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

அதுக்கு முதல் 30 வருசமும் அப்படி ஒன்றும் ஓடேல்ல.

http://www.eelamview.com/2019/08/21/structures-of-tamil-eelam-book/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, tulpen said:

அதுக்கு முதல் 30 வருசமும் அப்படி ஒன்றும் ஓடேல்ல.

தேனீக்கள் கூடு கட்டி தேன் எடுக்கும் காலம் நெருங்க.....அந்த தேன் கூட்டையே அறுத்தெறிந்ததெல்லாம் எட்டப்பர்கள் மறந்து விட்டார்கள் போலும்.

பேசிப்பேசியே மக்களை மந்தைகளாக்கிய கூட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

104489659_2743523285901653_1430564060017

On 1/7/2020 at 12:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை ! - விக்கி

அது தானே கூட்டமைப்பு ஜனநாயகம்!

5 hours ago, குமாரசாமி said:

தேனீக்கள் கூடு கட்டி தேன் எடுக்கும் காலம் நெருங்க.....அந்த தேன் கூட்டையே அறுத்தெறிந்ததெல்லாம் எட்டப்பர்கள் மறந்து விட்டார்கள் போலும்.

பேசிப்பேசியே மக்களை மந்தைகளாக்கிய கூட்டங்கள்.

சுதந்திரத்துக்கு பின்னர் தமிழ் அரசியலுக்கு தலைமை வகித்த அனைவருமே வெவ்வேறு விதத்தில் பாரிய தவறு இழைத்தவர்களே. இதில்  கட்சி பேதம்்இயக்க பேதம் எதுவும் இல்லை. தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் துரோகி என்று திட்டு என்று தமிழ் மித அரசியல்வாதிகள் அரசியர் பாடம்  சொல்லிக் கொடுத்தார்கள் 

அவர்களிடம் அரசியல்  படித்த ஆயுதப் போராளிகள் (அனைத்து இயக்கத்தவர்களும்)  தனக்கு பிடிக்காதவர்களை துரோகி என்று போட்டு தள்ளினார்கள். 

என்ன வித்தியாசம் என்றால் ,  இப்போது போட்டு தள்ள முடியாது. மற்றப்படி  எல்லாமே கடந்த 70 ஆண்டுகளில் அப்படியே தொடர்கிறது. எந்த மாற்றமும் இல்லை.  

Edited by tulpen

10 hours ago, nunavilan said:

நுணாவிலான் நீங்கள் இணைத்த கட்டுரையில் உள்ள விடுதலை புலிகளின் நேர்மறையான விடயங்கள் குறித்து எனக்கு எந்ந கருத்து வேறுபாடும் இல்லை. தமிழீழம் உருவாக்க உலக நாடுகள் விரும்பவில்லை அவர்களின் விருப்பமில்லாமல் அது சாத்தியமில்லை என்பது கறுப்பு வெள்ளையாக தெரிந்த நிலையில் அதற்கு அடுத்த alternative  எதுவும் செய்யாமல்  இறுதிவரை போராடி தாம் அழிந்து போனது மிக மோசமான அரசியல் முடிவாகவே நான் பார்க்கிறேன். 

சிறப்பாக செயற்பட்டிருந்தால் அந்த நிர்வாகத்தை அமைத்த விடுதலை புலிகளின் ஆளுமைகள் இன்று தமிழரின் தலைமை அரசியலை கொண்டு நடத்தி இருக்கலாம். அதை விடுத்து  தாம்  அழிக்கபட்ட பிறகு,  தமது வீரமான போராட்டதின் மூலம்  கொம்பு சீவப்பட்டு ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஒரு  எதிரி எவ்வளவு மோசமாக தமிழ் மக்களை நடத்துவான் என்பதை சிந்திக்காது  செயற்பட்டு  அழிந்து போனது தமிழரின் போராட்டத்தில் மிக பெரிய தவறு என்பதே எனது கருத்து. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

சரி, நீங்கள் தான் சொல்லுங்கோவேன். இனி நாம் என்ன செய்யலாம்? எப்படி தவறுகளை விலக்கி அரசியலை கொண்டு சென்று நம் இருப்பை தக்க வைக்கலாம்? போன பஸ்சுக்கு கைகாட்டாமல் வாறதை எப்படி பிடிக்கலாம்? என்று  உங்களுக்கு புண்ணியமாய்ப்போம். 

5 hours ago, satan said:

சரி, நீங்கள் தான் சொல்லுங்கோவேன். இனி நாம் என்ன செய்யலாம்? எப்படி தவறுகளை விலக்கி அரசியலை கொண்டு சென்று நம் இருப்பை தக்க வைக்கலாம்? போன பஸ்சுக்கு கைகாட்டாமல் வாறதை எப்படி பிடிக்கலாம்? என்று  உங்களுக்கு புண்ணியமாய்ப்போம். 

விடுதலைப் போராட்ட முடிவில் புலிகளே “கசப்பான முடிவு” - bitter end  என்றே தமது தோல்வியை குறிப்பிட்டார்கள். 

அந்த கசப்பான முடிவின் பின்னர் இப்போதுள்ள தலைமுறையால் இதை குறுகிய காலத்தில் நிவர்ததி செய்ய  நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு மைனஸ்க்கு கீழே பல இலக்கங்களில்  எமது நிலைமை மோசமாக உள்ளது.  

செய்யக் கூடியதெல்லாம் தமிழர்கள் தமது  கல்வியையும் பொருளாதாரத்தையும் வளர்தது கொள்வதோடு புலம்  பெயர் புதிய தலைமுறைக்கும் தாயகத்தில் வாழும் தலைமுறைக்கும் நெருங்கிய உறவை வளர்கக கூடிய திட்டங்களை வளர்தது முடியுமான அளவுக்கு தாயகத்தில் முதலீடுகளை செய்து  தொழில் நுட்ப அறிவை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தவேண்டும். அதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழரது நிலையை நீண்ட காலத்தில் reinforce பண்ண முடியும்.    

அத்துடன்  எமது போராட்ட வரலாற்றை நேர்மையுடன் உண்மையுடனும்  உள்ளதை உள்ளபடியே  புதிய தலைமுறைக்கு கடத்தவேண்டும். எமது பக்கத்தில் போராளிகளின் அர்பணிப்பால்  எவ்வாறு தேசம் கட்டியெழுப்பப் பட்டதென்பதையும்,  அதே வேளை எமது பக்க  அரசியல்   தவறுகளால்  அது எப்படி அழிக்கப்பட்டதென்பதையும் உண்மையுடன் கூறவேண்டும். அதை விடுத்து உண்மையை மறைப்பதற்காக  தனக்கு  பிடிக்காதவனெயெல்லாம் தினசரி துரோகி என்று  பொய்க்கதைகளை உருவாக்கி திட்டி தீர்த்து  அவன்தான் அழித்தான்,  இவன்தான் அழித்தான் என்று வெறுப்பு அரசியலை புதிய தலைமுறைக்கும் சொல்லி கொடுப்பதால் பயனும் ஏற்படாது. இன்னும்  பாதகமான விளைவைதான் ஏற்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு காலம் இனவழிப்பு, அநீதி, தமிழருக்கு எதிரான அடக்குமுறைகள் நடந்த போது, நம் இனம் அழிந்து கொண்டிருந்தபோது எதோ ஒப்புக்கு சப்பாக கூக்குரல் போட்டுவிட்டு அடங்கியிருந்ததாலே அன்றைய இளைஞர் தம் இஉயிரை துச்சமென மதித்து , தங்களுக்கு தெரிந்த  முறையில் போராட வெளிகிட்டார்கள். அரசியல்  தலைவர்களும் விமர்சிப்பதை விடுத்து ராஜாதந்திர முறையில் கைகோத்து உதவி இருந்திருக்கலாம்; மக்களும் காட்டிக்கொடுப்பதை விட்டு சேர்ந்து உழைத்திருக்கலாம். இனிமேல் அந்தப்பிழை நடவாமல் எப்படி நடந்திருந்தால், வெற்றி அடைந்திருக்கலாம் என்கிற படிப்பினையை நமக்கு கற்றுத் தந்து விட்டு போயிருக்கிறார்கள். முடிந்தால் எல்லோரும் உங்களது ஆலோசனையை பின்பற்றி, "நீங்கள் முன்னேறுங்கள், நாங்கள் விடாமல் தட்டிப்பறிப்போம்". எனும் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து தப்ப முடிந்தால், உங்கள் திட்டம் வெற்றி பெறும். முடிந்தால் எல்லோரையும் ஒரு திட்டத்தில் கூட்டிச் சேர்க்க முயலுங்கள். சிங்களவன் பிரித்தாள்வதில் வல்லவன், நாம் சோரம் போவதைத் தவிர வேறு வழியில் செல்லாதவர்கள். வீரம் பேசி, வாக்கு சேர்த்தவர்கள் சோரம் போனதும் அதற்கு  காரணம் சொன்னதும்ந்தான் வரலாறு.

பூனைக்கு யார் மணி கட்டுவது?ஆலோசனை மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தப் போகும்போது வரும் தடங்கல்களைக் கையாண்டு, இறுதி வரை கொண்ட கொள்கையில் தடம் புரளாமல்,  கொண்டு செல்லக்கூடியவர். அந்தத் தலைவரைத் தவிர வேறொருவரை தேடிப்பிடிக்க முடியுமா? அவர் கொண்ட கொள்கை வெற்றியடையாமல் தோற்றுபோனதற்கும், அவரது போர் வியூகங்கள் காட்டிக்கொடுப்பினால், துரோகங்களினால் பிழைத்துபோய், இழப்புகளில் முடிந்ததே. இழப்புகளை தவிர்ப்பதற்காக, பல பிழையான திட்டமிடல் இல்லாத,  உடனடி முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளியது.  விக்கினேஸ்வரன் இன்று கோமாளியாக சித்திரக்கப்படுகிறார், விமர்சிக்கப்படுகிறார். எதையும் செய்ய மாட்டார்கள் விடவும் மாட்டார்கள். இவரல்ல எவர் வந்தாலும்  இதுதான் வரலாறு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.