Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவை திட்டமிடப்பட்டே தோற்கடிக்கப்பட்டார்! சுமந்திரனை தூக்கி எறியுங்கள்! மிதுலைச்செல்வி எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு 99 வீதமான காரணம் எம்.ஏ.சுமந்திரன். இதை தமிழர்கள் அனைவரும் அறிவர். அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் வெளியேறிய அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புண்டு. ” எனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உபதலைவி மிதுலைச்செல்வி, மாவை சேனாதிராஜா திட்டமிடப்பட்டு தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளார் எனவும் சாடினார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் அடக்குமுறை அதிகரிக்கும் அச்சம்; எதிர் நடவடிக்கைக்கு தயாராகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் தோல்வி அடையக்கூடிய விடயங்களே நடந்தன. அதில் கூட்டமைப்பின் பங்கே அதிகமாக உள்ளது.

அதில் 99 வீதமான பங்கு தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவர்.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன், இந்த வருடத்துக்கான தேர்தலை ஒப்பிடும்போது சிறிதரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் விருப்பு வாக்குகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

மாவை சேனாதிராஜாவின் வாக்கு 58 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. இது திட்டமிடப்பட்டு குறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

எமது தலைவர் மாவை சேனாதிராஜாவை தோற்கடிப்பதற்காகவே திட்டமிட்டு செயப்பட்டிருப்பது போன்றே தெரிகின்றது.

அதேவேளை, கட்சியின் வாக்குகளின் வீழ்ச்சிக்கும் வேட்பாளர்களின் தோல்விக்கும் முக்கியமான காரணம் எம்.ஏ. சுமந்திரன் என்பது அப்பட்டமான உண்மை.

இவர் தான்றோன்றித்தனமாக கருத்துகளை வெளியிடுவதும், ஊடகப் பேச்சாளர் பதவியைப் பயன்படுத்தி, அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி கட்சியை உடைப்பதற்கான எல்லா வேலைகளும் இவராலே செய்யப்பட்டன.

இதேபோல, உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் இதே விளையாட்டு நடந்திருக்கின்றது.

அந்தத் தேர்தலின் பின்னடைவு குறித்து, தேர்தல் முடிந்த பின்னர் குழுவொன்று அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதில், சுமந்திரன்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. எனினும் அந்த அறிக்கை வெளியே வெளியிடாமல் மறைக்கப்பட்டுள்ளது.

அவர் எந்தவொரு விடயத்தையும் தனிப்பட்ட முறையில் தெரிவித்து விட்டு, தனது சொந்தக் கருத்தைக் கட்சியின் கருத்து எனத் தெரிவித்து வருகின்றார்.

தற்போது கட்சியை மறுசீரமைக்கவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

தமிழசுக் கட்சி மாத்திரமின்றி தமிழ் மக்களே சிதறி உள்ளமைக்கு சுமந்திரனே காரணம்.

விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், அனந்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரிந்து சென்றமைக்கும் சுமந்திரனின் தனியாக முடிவெடுக்கும் நிலையே காரணமாக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சியை விட எமது கட்சி பாரியளவில் வீழ்ச்சியடையக் கூடிய நிலை ஏற்பட்டு விடும். இதுகுறித்து தமிழ் மக்களும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கதைக்க முடியாமல் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

கட்சியின் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் சுமந்திரன் தான் எடுத்துக்கொள்கிறார் என்பதை அறிந்தேன். அதேவேளை, கட்சி சின்னாபின்னமானமைக்கான பொறுப்பையும், தமிழ் மக்களின் ஏக்கங்கள் எல்லாமே சிதைக்கப்பட்டதற்கான பொறுப்பையும் அவர்தான் ஏற்கவேண்டும்.

அத்துடன், மக்கள் அனைத்தையும் இழந்து எதிர்பார்ப்புடன் இருந்தபோது, நல்லாட்சி அரசாங்கம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து, அதிலும் ஒன்றும் நடக்காமல் போனது. தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ் மக்களுக்கோ சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்?

மக்களின் நோக்கம் நிறைவேறாமல் 10 வருடங்களைக் கடந்துகொண்டு செல்கிறது. இது இன்னும் நீண்ட காலமாகப் பிழையாகப் போகப்போகிறதோ என்ற பயத்தில்தான் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டியுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். கேள்வி கேட்டாலே வெளியேற்றப்படக்கூடிய கட்டமும் உள்ளது.

கட்சிக்குள் என்ன நக்கிறது என்று மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பதிலை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஊடகப் பேச்சாளருக்குரிய லிமிட் என்ன வென்று அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதைவிடுத்து கட்சியின் எல்லா நடவடிக்கைகளையும் தானே செய்துவிட்டு,தோல்வியடைந்த பின்னர் தலைவர், செயலாளர் மீது தூக்கிப் போடக்கூடாது.

அத்துடன், தலைவரைச் செயற்பட விடாமல் தடுத்து, தானே முடிவெடுத்து செயற்படுத்தியதே சுமந்திரன்தான்.

எல்லா விடயத்திலும் அவர் தலையிட்டுத்தான் இப்படியாகியிருக்கின்றது.

சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றினால் கட்சியைப் புனரமைக்க முடியும். இவரால் வெளியேறியவர்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது.

தேசியப் பட்டியலை பதவியை ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்ற அம்பாறை வேட்பாளர் கலையரசனுக்குக் கொடுத்திருப்பது பொருத்தமானதல்ல.

தற்போதைய தமிழரசுக் கட்சியின் நிலையைக் கருத்திற்கொண்டு மாவை சேனாதிராஜாவுக்குக் கொடுத்திருக்கவேண்டும். அவருக்குக் கொடுக்காத பட்சத்தில் பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருப்பதாலும் சசிகலா ரவிராஜூக்குக் கொடுக்கவேண்டும். நான் இதை பிரதேச வாதமாகக் கூறவில்லை. அம்பாறைக்குக் கொடுக்கத்தான் வேண்டும். அதற்கு வேறொரு வழியைத் தேடலாம்.

தமிழசுக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியைச் சேர்ந்த சித்தார்த்தனும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். எனவே, கூட்டமைப்பின் உறுப்பினர்களை அழைத்துப் பேசி முடிவெடுத்திருக்கவேண்டும். அவசர அவசரமாக தேசியப் பட்டியல் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை.

சசிகலா ரவிராஜ், விருப்பு வாக்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பாரானால், அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட அவருக்கு பெண் என்ற ரீதியில் எனது ஆதரவு இருக்கும். மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற ரீதியில்தான் பெண்கள் கட்சியில் இணைகிறார்கள். ஆனால், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றார்கள். ” என்றார்.

அத்துடன், “கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் கூறிய விடயம் ஒன்று குறித்து தேர்தல் முடிந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். இது நடக்குமா என ஊடகரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“நிச்சயமாக அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் ஒரே சட்டம் ஒரே நீதி என்ற ரீதியில் அவர் நடந்து கொள்வார் என நம்புகிறேன். அப்படி நடந்தால் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சி மீது நம்பிக்கை கொண்டு எமக்கு வாக்களிப்பார்கள். “என்றார்.

https://www.tamilwin.com/srilanka/01/253111?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரன் மட்டுமே காரணம் – மிதுலைச்செல்வி விளாசல்

IMG-20200809-WA0018-960x540.jpg?189db0&189db0

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றினால் தமிழரசு கட்சி மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“2015ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளுக்கு சரி அரைவாசி குறைந்த அளவு வாக்குகளையே எமது கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இந்த வாக்கு வீழ்ச்சிக்கு சுமந்திரனே பொறுப்பாளியாக வேண்டும்.

ஊடகப் பேச்சாளர் என்ற பதவினை வைத்துக் கொண்டு தான்தோண்றித்தனமான கருத்துக்களை வெளியிடுவதும் கருத்துக்களும், அவருடைய செயற்பாடுகளுமேன தேல்விக்கு காரணமாக உள்ளது. இதனை அனைத்து மக்களும் அறிவார்கள். குறிப்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தோற்கடிக்க வேண்டும் என்று கட்சி வேட்பாளர்களே திட்டமிட்டு செயற்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி சுமந்திரனின் நடவடிக்கைகள் மற்றும் அவர் வெளியிடும் கருத்துக்கள்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையினை வெளியிடாமல் மூடி மறைத்துள்ளார்கள்.

சுமந்திரனாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க.வி.விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் போன்றவர்கள் வெளியேறியிருந்தார்கள்.
தமிழர் தேசங்களில் புதிய கட்சிகள் உருவாகியுள்ளமைக்கும், மக்களின் பிரிவுகளுக்கும் சுமந்திரன்தான் காரணம். ஒருவர் மட்டும் முடிவுகளை எடுப்பதே கட்சிக்குள் பிளவுபாடுகளை எற்படுவதற்கு காரணமாக உள்ளது.

சுமந்திரன் மீது எனக்கு தனிப்பட்ட கோபங்கள் எவையும் இல்லை. கட்சியின் எதிர்கால நலனுக்காகவே இவற்றை தெரியப்படுத்துகின்றேன். கட்சியின் சகல விடயங்களிலும் தலையிட்டுவிட்டு, இப்போது தோல்வியை மட்டும், தலைவர், செயலாளர் மீது போடுவது என்பது பொறுத்தமற்ற ஒன்று.

சுமந்திரனை கட்சியில் இருந்து விலக்கினால் தமிழ் தேசிய கட்சி மட்டுமல்லாமல் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு ஏற்படும். தமிழரசு கட்சியை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இப்போது உள்ளோம். இதனால் கட்சியின் தலைவரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் கலையரசன் தேசிய பட்டியலில் ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. பிரதேச வாதமாக நான் பேசவில்லை. தேசிய பட்டியல் ஆசனத்துக்கு மாவை சேனாதிராஜா அல்லது சசிகலா ரவிராஜ் தெரிவு செய்யப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் கூடியே முடிவுகளை எடுக்க வேண்டும்.

மேலும் சசிகலாவிற்கு தேர்தலில் நடந்ததாக சொல்லப்படும் அநீதிகளுக்கு எதிரான வழங்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நாங்களும் சசிகலாவிற்கான குரல் கொடுத்து, அவர் பின் நிற்போம்” – என்றார்.

 

https://newuthayan.com/கூட்டமைப்பின்-வீழ்ச்சிக/

 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

“நிச்சயமாக அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் ஒரே சட்டம் ஒரே நீதி என்ற ரீதியில் அவர் நடந்து கொள்வார் என நம்புகிறேன்.

அப்படியா???  விக்கினேஸ்வரனுக்கு, அனந்திக்கு நடக்கும் போது கனவில் இருந்தார். ஐயா தூக்கம் என்று நினைத்து ஐயாவிலேயே கையை வைதுவிட்டார். தனக்கு என்றவுடன் துடித்து எழுந்து விட்டார். ஆனால் காலம் கடந்திருக்கும். அவர் எப்போதும் நிதானமாய் காய் நகர்த்துவார். மஹிந்தா இன்னொரு கருப்பாட்டை நுழைக்கப் பார்த்தார், உஷாரடைந்த சுமந்து அதை தடுத்து விட்டது. சளைக்காத மஹிந்தா அவரை தன்னோடேயே அணைத்து வைத்திருக்கிறார். கதை மாறலாம் எதிர்காலத்தில்.

8 hours ago, பெருமாள் said:

விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், அனந்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரிந்து சென்றமைக்கும் சுமந்திரனின் தனியாக முடிவெடுக்கும் நிலையே காரணமாக உள்ளது.

சுமந்திரனின் விசுவாசிகளுக்கும், அவர் போன்ற நிஞாயத்தை குழிதோண்டி மறைத்துவிட்டு கூப்பாடு போடுபவர்களுக்கும், அறிக்கை விடுபவர்களுக்கும்  சமர்ப்பணம். அங்கை தொட்டு, இங்கை தொட்டு கடைசியாய் தலையிலேயேவா?

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனத்துடன் ஒப்பிடும்போது சிங்களம் எவ்வளவோ மேல். 😏

31 minutes ago, Kapithan said:

எமது இனத்துடன் ஒப்பிடும்போது சிங்களம் எவ்வளவோ மேல். 😏

இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கிறது. நல்லது. மற்றவர்களுக்கும் புரிந்தால் நல்லது. இனி சிங்களவனுக்கு சொம்பு தூக்குகிறேன் எண்டு ஒருவர் எழுதுவார். இன்னொருவர் அதட்கு ஆமா போடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

எமது இனத்துடன் ஒப்பிடும்போது சிங்களம் எவ்வளவோ மேல். 😏

சிங்கள மக்கள் ,தங்களுக்கு பல வருடங்களாக சேவை செய்த ரணில்,சந்திரிக்கா ஆகியோரை தூக்கி எறியவில்லை அவர்களது கட்சியையும் அவர்களையும்.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

சிங்கள மக்கள் ,தங்களுக்கு பல வருடங்களாக சேவை செய்த ரணில்,சந்திரிக்கா ஆகியோரை தூக்கி எறியவில்லை அவர்களது கட்சியையும் அவர்களையும்.....

நாங்கள் நடந்துகொள்ளும் விதம் நாம் இன்னும் கற்காலத்திலிருப்பதைக் காட்டுகிறது.  ☹️

Edited by Kapithan

 பாவம் அம்மணி. ஏதோ ஆதங்கத்தில் பேசுகிறார். தலையே சும்மா இருக்கும்போது வால் ஆடுவது என்பது இதைத்தான்.

சிலர் கட்சியை விட்டுபோனதட்கு சிலரை குற்றம் சாட்டுகிறார்கள். நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாட்டு.

மத்தபடி எழுதவேண்டும் என்பதட்காக உண்மையை மறைத்து எழுதுவதால் எதுவுமே நடக்கப்போவதில்லை. எல்லோரும் இங்கு சுயநல அரசியல் செய்கிறார்களே ஒழிய , யாரிடமும் பொது நலம் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

எமது இனத்துடன் ஒப்பிடும்போது சிங்களம் எவ்வளவோ மேல். 😏

மாவையின் பார்வை தன் பதவி திட்டத்தின்மேல் விழாமல் பராக்குக் காட்டி தனது  கட்டுக்குள்  வைத்திருந்த சுமந்திரனின், சிங்கள பேட்டி மாவையை உலுக்கி விட்டிருந்தது. தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் கொஞ்சம் கண்டிப்பாய் கடிந்து கடிவாளத்தை இறுக்கப் பாத்திருக்கிறார் மாவை. இதனால் கடுப்பான சுமந்து இப்படியே  விட்டால் காத்திருந்தது வீணாய்ப் போய்விடும் என தனது இயல்பான தந்திரத்தால்  வைக்கபட்ட வேட்டு. மாவைக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும். இவ்வளவு காலம் அரசியலில் இருந்து,  கூட இருந்த நரியை இனங்காணத் தெரியவில்லை. 

13 hours ago, Robinson cruso said:

 பாவம் அம்மணி. ஏதோ ஆதங்கத்தில் பேசுகிறார். தலையே சும்மா இருக்கும்போது வால் ஆடுவது என்பது இதைத்தான்.

சிலர் கட்சியை விட்டுபோனதட்கு சிலரை குற்றம் சாட்டுகிறார்கள். நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாட்டு.

மத்தபடி எழுதவேண்டும் என்பதட்காக உண்மையை மறைத்து எழுதுவதால் எதுவுமே நடக்கப்போவதில்லை. எல்லோரும் இங்கு சுயநல அரசியல் செய்கிறார்களே ஒழிய , யாரிடமும் பொது நலம் கிடையாது.

மக்கள் சொன்னதுமல்லாமல் செய்தும் காட்டியிருக்கிறார்கள். கூடியிருந்தவர்கள் சொல்கிறார்கள். கடந்தகால  ஆதாரங்கள் சமர்பிக்கிறார்கள், பேட்டிகள் கூறுகின்றன. அத்தனையும் பொய். நீங்கள் கூறுவது மட்டுந்தான் உண்மை. தலைமைக்கு பேச முடியவில்லை. அடுத்தது யார் இலக்கு என்கிற பயம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

மாவையின் பார்வை தன் பதவி திட்டத்தின்மேல் விழாமல் பராக்குக் காட்டி தனது  கட்டுக்குள்  வைத்திருந்த சுமந்திரனின், சிங்கள பேட்டி மாவையை உலுக்கி விட்டிருந்தது. தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் கொஞ்சம் கண்டிப்பாய் கடிந்து கடிவாளத்தை இறுக்கப் பாத்திருக்கிறார் மாவை. இதனால் கடுப்பான சுமந்து இப்படியே  விட்டால் காத்திருந்தது வீணாய்ப் போய்விடும் என தனது இயல்பான தந்திரத்தால்  வைக்கபட்ட வேட்டு. மாவைக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும். இவ்வளவு காலம் அரசியலில் இருந்து,  கூட இருந்த நரியை இனங்காணத் தெரியவில்லை. 

யாழ் மதிய கல்லூரியில் நடந்த கூத்துக்கள் அனைத்தும் மிகவும் திட்டமிட்டு மாவையின் மகனால் தலைமையேற்று நடந்து முடிந்துள்ளது. அந்த நாடகத்தின் உச்சக்கட்டமாக மாவையின் மகன் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.இந்த வைத்தியசாலை அனுமதியும் அனுதாபத்தைத் தேடும் நாடகமாம்.

இதன் அடுத்தகட்டம் என்ன என்பதுதான் இப்போதைய TNAக்குள் உள்ளவர்களின் latest topic for discussion  என்று பட்சி சொல்கிறது. 😜

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

இதன் அடுத்தகட்டம் என்ன என்பதுதான் இப்போதைய TNAக்குள் உள்ளவர்களின் latest topic for discussion  என்று பட்சி சொல்கிறது. 😜

மாகாணசபை தேர்தல் வருகுதில்ல.

அப்பனும் மகனுமாக இறங்கி கலக்க மாட்டாங்களா என்ன?

15 hours ago, Robinson cruso said:

பாவம் அம்மணி. ஏதோ ஆதங்கத்தில் பேசுகிறார். தலையே சும்மா இருக்கும்போது வால் ஆடுவது என்பது இதைத்தான்.

தலை எழும்பி நடக்கேலாமல் இருக்கு.
நீங்க இதுக்கை வேற.

1 hour ago, ஈழப்பிரியன் said:

மாகாணசபை தேர்தல் வருகுதில்ல.

அப்பனும் மகனுமாக இறங்கி கலக்க மாட்டாங்களா என்ன?

தலை எழும்பி நடக்கேலாமல் இருக்கு.
நீங்க இதுக்கை வேற.

தலை நடக்க முடியவிடடாலும் , தலைக்குள் இருப்பது நல்லறிவிடன் வேலை செய்கிறது.

3 hours ago, satan said:

மாவையின் பார்வை தன் பதவி திட்டத்தின்மேல் விழாமல் பராக்குக் காட்டி தனது  கட்டுக்குள்  வைத்திருந்த சுமந்திரனின், சிங்கள பேட்டி மாவையை உலுக்கி விட்டிருந்தது. தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் கொஞ்சம் கண்டிப்பாய் கடிந்து கடிவாளத்தை இறுக்கப் பாத்திருக்கிறார் மாவை. இதனால் கடுப்பான சுமந்து இப்படியே  விட்டால் காத்திருந்தது வீணாய்ப் போய்விடும் என தனது இயல்பான தந்திரத்தால்  வைக்கபட்ட வேட்டு. மாவைக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும். இவ்வளவு காலம் அரசியலில் இருந்து,  கூட இருந்த நரியை இனங்காணத் தெரியவில்லை. 

மக்கள் சொன்னதுமல்லாமல் செய்தும் காட்டியிருக்கிறார்கள். கூடியிருந்தவர்கள் சொல்கிறார்கள். கடந்தகால  ஆதாரங்கள் சமர்பிக்கிறார்கள், பேட்டிகள் கூறுகின்றன. அத்தனையும் பொய். நீங்கள் கூறுவது மட்டுந்தான் உண்மை. தலைமைக்கு பேச முடியவில்லை. அடுத்தது யார் இலக்கு என்கிற பயம். 

உங்களுக்கு ஆறறிவு, எழறிவு, எடடாரிவு எல்லாம் இருப்பதால் சரி பிழை எதுவென்று தெரியும்தானே. நீங்கள் சொலவதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.