Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்பிபி தற்போது எப்படி இருக்கிறார்?

spacer.png

 

கடந்த மூன்று நாட்களாக மயக்க நிலையிலிருந்த பாடகர் எஸ்பிபியின் கண்களில் அசைவு வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல் இழக்கும் நிலைக்குச் சென்றதால் எக்மோ கருவி அவருக்குப் பொருத்தப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 48 மணி நேரமாக உயிர்காக்கும் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக, எஸ்பிபி அவர்களின் கண்களில் அசைவு வந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செயற்கை சுவாசம், மயக்க மருந்து கொடுக்கும் அளவு குறைக்கப்பட்ட நிலையில், அவரின் கண்களில் அவ்வப்போது அசைவு தெரிவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும் அவரது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நுரையீரலை மீட்டுக் கொண்டு வர நீண்ட நாள் எடுக்கும் என்பதால், மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து ஆறாவது மாடியில் மாற்றியமைக்கப்பட்ட தனிச்சிறப்பு தீவிர சிகிச்சை வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தந்தையின் உடல் சீராக இருக்கிறது. செயற்கை சுவாசம் பொருத்தியது பலன் அளித்துள்ளது. அப்பா நிச்சயம் மீண்டு வருவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு நேரம் எடுக்கும். அனைவரின் பிரார்த்தனையும் அவருக்கு உதவியாக உள்ளது என்று எஸ்பிபியின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எஸ்பிபியின் மனைவி சாவித்திரிக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/public/2020/08/16/47/spb-health-condition

 

  • Replies 84
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் கடைசி பாடலையும் நீ பாட வேண்டும் ! - வைரமுத்து உருக்கம்

 

Appa kandipa Varuvaru ! | Health update of S. P. Balasubrahmanyam | S.P Charan | 17-Aug-2020 4.13pm

 

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி நெருக்கடியான நிலையில் தொடர்கிறார்: மருத்துவமனை அறிக்கை

எஸ்.பி.பி நெருக்கடியான நிலையில் தொடர்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்று பாதிப்பால் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். நெருக்கடியான நிலையில் தொடர்கிறார். அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது"

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/570382-spb-health-condition.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 12:47, ஈழப்பிரியன் said:

அந்தாள் பாடிக் கொண்டு திரிந்த போது பங்கு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இப்போ முக்கி முனகிறார்.

 

அவர் பங்கு கேட்டது என்பது எதோ உண்மை தான்... ஆனால் அந்த பங்கு நலிந்த இசை கலைஞர்களுக்கு என்பதுவும் உண்மை. ஆயிரம் நல்லது செய்தாலும் பிற மனிதர்கள் தவறுகளை மட்டுமே உற்று நோக்குகிறார்கள் என்பது சற்றே கவலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை

சென்னை: 

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல நலம் பெற்றுவர பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதுபோல் இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். எனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார். 

"அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அக்கறை, அன்பு செலுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன். கண்டிப்பாக அப்பா மீண்டு வருவார். நன்றி" என கூறி உள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/17181723/Singer-SP-Balasubramaniams-health-continues-to-be.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை - மருத்துவ அறிக்கையில் தகவல்

உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை - மருத்துவ அறிக்கையில் தகவல்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும், தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 18,  2020 04:45 AM
சென்னை,

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.


அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியாகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடையை பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும் அவருக்கு டாக்டர்களை அடையாளம் தெரிகிறது என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார். முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே அப்பா மூச்சு விடுகிறார். முழுமையான மயக்க நிலையில் இல்லை என்றும் கூறினார்.

இந்தநிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.பி சரண் இன்னொரு வீடியோ வெளியிட்டார். அதில், “எனது தந்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்த நிலையில் இருந்தாரோ அப்படியேதான் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. எந்த சிக்கலும் இல்லை. மீண்டும் உங்கள் எல்லோருடைய பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அன்பு, அக்கறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பா நிச்சயம் மீண்டு வருவார்.” என்று கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/18035943/Treatment-for-SP-Balasubramaniam-with-the-help-of.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் 🙏

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவனே நம்ம பக்கம் எழுந்து வாங்க

 

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்: எக்மோ கருவி மூலம் தொடரும் சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ECMO கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் காணொளி காட்சி மூலம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை புதன்கிழமையன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அவருக்கு 'ECMO' கருவியும் பொருத்தப்பட்டிருப்பாதவும் அவருடைய உடல்நலக் குறியீடுகள் தற்போது திருப்திதரும் வகையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நலத்தை கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவரது உடல்நலம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECMO கருவி என்றால் என்ன?

Extracorporeal membrane oxygenation என்பதன் சுருக்கமே ECMO. ஒருவரது இதயமும் நுரையீரலும் போதுமான அளவு இயங்காதபோது ரத்தஓட்டம் தடைபடுகிறது. நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதும் குறைகிறது. இந்த எந்திரத்தைப் பொருத்துவதன் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு மீண்டும் உடலுக்குள் அனுப்பப்படுகிறது. ரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் உடலின் பிற உறுப்புகள் பாதிக்கப்படுவது இதனால் தடுக்கப்படும்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

பட மூலாதாரம், SPB / FB

 

பொதுவாக, இதய - நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு இந்த எந்திரத்தைப் பொருத்தி, உடல்நிலையை மேம்படுத்த மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். கோவிட் - 19 நோயின் தாக்கத்தால் போதுமான ஆக்ஸிஜன் ரத்தத்திற்குக் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. ஆனால், செயற்கை சுவாசமும் பலனளிக்காத நிலையில், இந்த ECMO கருவி பொருத்தப்படுகிறது.

இதற்கு முன்பாக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ECMO கருவி பொருத்தப்பட்டபோது இந்தக் கருவியின் பயன்பாடு குறித்து பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நலம் பெற வேண்டுமென ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரவர் இடத்திலிருந்தபடி எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களை ஒலிக்கச்செய்வதன் மூலம் இந்தப் பிரார்த்தனையை செய்ய வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.https://www.bbc.com/tamil/india-53838330

  • கருத்துக்கள உறவுகள்

SP Balasubrahmanyam-காக ஒன்று கூடும் திரையுலகம்- Vijay, Simbu, Karthi, Rajini, Kamal, Ilaiyaraja

 

  • கருத்துக்கள உறவுகள்

அகிலமும் நீயே

 

  • கருத்துக்கள உறவுகள்

20.08.20 s.p.b update

 

  • கருத்துக்கள உறவுகள்

'SPB' நலம் பெற வேண்டி ஒன்று கூடிய திரையுலகம்!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/21134015/1801741/Singer-SP-Balasubrahmanyam-remains-critical-says-Minister.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

``எஸ்.பி.பி-யும் வாலி சாரும் ஒண்ணா உட்கார்ந்தா அவ்ளோ கலாட்டாவா இருக்கும்!''- தாணு

எஸ்.பி.பி

எஸ்.பி.பி-யை இசையமைக்க வைக்கும் எண்ணம் எப்படி வந்தது எனத் தெரிந்துகொள்ள தாணுவிடம் பேசினேன்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதோடு சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். தமிழில் 5 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படங்களில் ஒன்று பார்த்திபன் நடித்த 'தையல்காரன்'. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்தப் படம் இது. எஸ்.பி.பி-யை இசையமைக்க வைக்கும் எண்ணம் எப்படி வந்தது எனத்தெரிந்துகொள்ள தாணுவிடம் பேசினேன்.
தாணு
 
தாணு

''1988-ல விஜயகாந்த்தை வெச்சு 'நல்லவன்' படத்தை தயாரிச்சேன். இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் சார்தான் இயக்கினார். இந்தப் படம் முடிஞ்சதும் திரும்ப விஜயகாந்த்தை வெச்சு நானே தயாரிச்சு, இயக்கி, இசையமைச்ச படம்தான் 'புதுப்பாடகன்'. ஒரு இசையமைப்பாளரா இந்தப் படத்துக்கான எல்லா பாட்டையும் எஸ்.பி.பி-தான் பாடணும்னு எனக்கு ஆசை. மொத்தம் 8 பாடல்கள். 7 பாடல்கள் எஸ்.பி.பி பாடிட்டார். ஒரே ஒரு பாடல் மட்டும் பாட முடியாமப் போயிடுச்சு.

 

தயாரிப்பாளரான இவர் எப்படி இசையமைப்பாளர் ஆனார், என்னோட இசையறிவு என்னன்னுலாம் அவர் பார்த்ததேயில்லை. நான் பாடிக்காட்டுவேன். அவ்ளோ ரசிச்சுப் பார்ப்பார். அதை கேட்டுட்டு அவர் இன்னும் கொஞ்சம் சில விஷயங்கள் சேர்த்து அவ்ளோ சூப்பரா பாடிக்கொடுப்பார். இசை நல்லாயிருக்குன்னு பாராட்டுவார். 'முறையா இசையைக் கத்துக்காதவன் இசை நல்லாயிருக்குன்னு சொல்றீங்களே?' எனக் கேட்பேன். 'எல்லா இசையமைப்பாளர்கள் கூடவும் ஸ்வரம் பிரிக்க ஒரு ஆள் இருப்பாங்கய்யா. உன் ரத்தத்துலயே இசையிருக்கு'ன்னு என்னை நிறையவே சந்தோஷப்படுத்தினார்.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

இந்தப் படத்துக்கு அடுத்து பார்த்திபன் ஹீரோவா நடிச்சு நான் தயாரிச்ச படம்தான் 'தையல்காரன்'. இந்தப் படத்துக்கும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார்தான். 'அப்ப முந்தைய படம் சந்திரபோஸ் வெச்சிப்பண்ணோம், இந்தப் படம் வேற மியூசிக் டைரக்டர் வெச்சிப்பண்ணுவோம்'னு பேசும்போதுதான் எஸ்.பி.பி ஞாபகம் வந்தது. அப்ப அவர் 'சிகரம்'னு ஒரு படத்துக்கும் இசையமைச்சிட்டிருந்தார். முத்துராமன் சார்கூடவும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. நானும் பழக்கம்ன்றதால நாங்க கேட்டதும், இசையமைக்க ஒத்துக்கிட்டார்.

 

அவர் வீட்டிலேயேதான் பாடல் கம்போஸிங் நடந்தது. அவர்கூடவே ஶ்ரீனிவாசமூர்த்தின்னு ஒருத்தர் இருப்பார். இப்ப அவர் ஏ.ஆர்.ரஹ்மான்கூட இருக்கார். இந்தப் படத்துக்கான எல்லா பாடல்களையும் வாலி சார்தான் எழுதினார். கம்போஸிங் அப்ப வாலி சார்கூட உட்காரும்போது அவ்ளோ கலாட்டாவா இருக்கும். வாலி சாரை பயங்கரமா கிண்டல் பண்ணுவார் எஸ்.பி.பி. இதுல 'அப்பாடி பப்பாளிதான்... என் பூவுடம்பு விக்காத தக்காளிதான்... என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்...'னு வாலி சார் ஒரு பாட்டு எழுதியிருப்பார். இந்தப் பாட்டு கம்போஸிங் அப்ப 'அனுபவம் பேசுது போலிருக்கே'ன்னு வாலி சாரை அவ்ளோ ஜாலியா கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருப்பார். அப்பலாம் சம்பளம் ரொம்ப கம்மிதான். இந்தப் படத்துக்கு எவ்ளோ சம்பளம் கொடுத்தேன்னுகூட சரியா ஞாபகம் இல்ல. அப்ப ஒரு பாட்டு பாட 5000 ரூபாய் சம்பளம் வாங்கிட்டிருந்தார் பாலு.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

ஒரே நேரத்துல 10 பாட்டு, 15 பாட்டுலாம் பாடிக்கொடுத்துடுவார். எளிமைதான் அவரோட அடையாளம்'' என்றவரிடம் சமீபத்தில் அவரிடம் பேசினீர்களா எனக்கேட்டேன்.

''ஒரு மாசத்துக்கு முன்னாடி பாலு சாருக்கு போன் பண்ணிப்பேசினேன். பழைய விஷயங்கள் நிறையப் பேசிக்கிட்டோம். அப்ப அவர், 'தயாரிப்பாளர் சங்கத்தலைவரா இருக்கும்போது நீங்க கொடுத்த செக் அப்படியே இருக்கு. யாரையாவது அனுப்புங்க. திருப்பிக்கொடுத்துவிடுறேன்'னு சொன்னார். அதெல்லாம் வேண்டாம் சார். திரும்ப நாம நிகழ்ச்சிப் பண்ணவேண்டியிருக்கும். அது அப்படியே பத்திரமா இருக்கட்டும்னு சொன்னேன். இப்ப உங்ககிட்டயும் அதையேதான் சொல்றேன். அவர் உடல்நலம் தேறி திரும்ப நல்லபடியா வருவார். தயாரிப்பாளர் சங்க நிகழ்ச்சியில நிச்சயம் பாடுவார்'' என்றார் தாணு.

https://cinema.vikatan.com/tamil-cinema/producer-thanu-shares-his-experiences-with-s-p-balasubrahmanyam

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்றியமைக்கான காரணம் நானா ? - பாடகி மாளவிகா விளக்கம்

என்னால்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் செய்தி போலியானது என பாடகி மாளவிகா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14 ஆம் திகதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி மாளவிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி சுனிதாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே மாளவிகா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மாளவிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘அந்த இசை நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு முன்னதாகவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக ஒரு போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பல்வேறு பிரபல பாடகர்களுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 30 மற்றும் 31 அன்று நடைபெற்றது.

இரண்டாம் நாளில் 4 பாடகர்களில் ஒருவராக நானும் கலந்து கொண்டேன். ஒருவேளை எனக்கு அப்போது தொற்று ஏற்பட்டிருந்தால் என் மூலம் என்னோடு கலந்து கொண்ட பாடகர்களுக்கும், என்னோட மேக்கப் ரூமில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் பரவியிருக்க வேண்டும். என் சகோதரியும் என்னோடு பாடியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

என் சகோதரி அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் எப்படி என்னோடு பாடியிருக்க முடியும். மேலும் என் கணவரும் கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்த்து வருகிறார். என் குழந்தை மற்றும் பெற்றோரின் பாதுகாப்பு கருதி நானும் எங்கும் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே முதன் முதலாக வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாலுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னும் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நானும் 8 ஆம் திகதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

துரதிரஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு தொற்று இல்லை. என் சாரதிக்கும் கொரோனா தொற்று இல்லை.

எனவே தயவு செய்து போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். இது போன்ற வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் க்ரைம் பொலிஸில் புகார் செய்துள்ளேன் என மாளவிகா கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/88498

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிவிப்பு

   by : Litharsan

S.P.Balasubrahmanyam.jpg

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பிரபல சினிமா பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாம் திகதி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/எஸ்-பி-பாலசுப்ரமணியத்தின/

  • கருத்துக்கள உறவுகள்

21.08.2020 update

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது. இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஆனால், கடந்த 13-ம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து தினமும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து  மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் கொரோனா பாதித்து எக்மோ உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/22185258/1812009/Hospital-report-says-SPB-condition-still-stable.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.