Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு - சச்சிதானந்தன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு; - சச்சிதானந்தன்.!

1599633050_br%20copy.jpg

பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமரை பாராட்டுவதாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் .

சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

இலங்கைச் சைவர்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் எமது நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து போராட்டங்கள் நடத்தி பல்வேறு பிரதேச சபைகள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் தடுத்து முயன்று போராடி வந்தது சிவசேனை அமைப்பு மேலும் இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் நிறைவேற்ற கோரியிருந்தது.

இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் தற்போது முன் மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் கடந்த வெறும் ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்கு சென்றார்.

மலையகச் சைவத் தமிழ் மக்கள் , மேற்கு மாகாண , வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்  , கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் , வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த ராஜபட்சே அவர்களின் பசு வதைத் தடை முயற்சியை பாராட்டுகிறார்கள்.. போற்றுகிறார்கள்.

பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும் , மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்காலத்தில் முயற்சிப்பார் . அதற்கு இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பர் என்றுள்ளது.

http://aruvi.com/article/tam/2020/09/09/16530/

  • கருத்துக்கள உறவுகள்

🐂 மாடு🐄  களவு போவதையும், தடுக்க கடினமான சட்டம் கொண்டு வரவேணும். 😎

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு மனிதவதைக்கும் ஒரு பாராட்டுத் தெரிவித்து விடுங்கள் ஐயா. எதுக்கு யாரை பாராட்டுவது என்று தெரியாமல் தொங்குதுகள். சைவ ஆலயங்களையும், தேங்காய் உடைக்கிற கல்லைக்கூட சொந்தம் கொண்டாடி விகாரை கட்டப்போறான். இவர் வேறு ஒன்றைப்பற்றி பாராட்டி, அவன் செய்வதை மறைத்து ஊக்குவிக்கிறார் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால, 

கொடுக்கிற காசுக்கு மேலாலயே கூவுறார். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

ரொட்டிக்கு பாணுக்கும் மதம் மாறுகிறார்கள் 
என்று வெட்கமில்லாமல் போஸ்டர் பிடிக்கும் இவர்கள் 

அந்த ரொட்டி கூட உங்கள் மதம் கொடுக்கவில்லை 
என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ரொட்டிக்கு பாணுக்கும் மதம் மாறுகிறார்கள் 
என்று வெட்கமில்லாமல் போஸ்டர் பிடிக்கும் இவர்கள் 

அந்த ரொட்டி கூட உங்கள் மதம் கொடுக்கவில்லை 
என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் 

உண்மை அதுவல்ல மருது. பாணையும் , ரொட்டியையுமே உழைத்து வாங்கி சாப்பிட முடியாத சோம்பேறிகள்! இலவசங்கள் எப்போதுமே கிடைக்காது. அதுவும் ஒரு குறுக்கியகாலம் மட்டும்தான் என்று உணராதவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மனித வதையை.. தமிழர் வதையை தொடரலாம்.. என்கிறாரோ.. காவிச் சச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

உண்மை அதுவல்ல மருது. பாணையும் , ரொட்டியையுமே உழைத்து வாங்கி சாப்பிட முடியாத சோம்பேறிகள்! இலவசங்கள் எப்போதுமே கிடைக்காது. அதுவும் ஒரு குறுக்கியகாலம் மட்டும்தான் என்று உணராதவர்கள் 

இவ்வளவு காலமும் இந்த மதத்தில் தொங்கியதால் கூட 
அவர்கள் சோம்பேறிகள் ஆக்கப்பட்டு இருக்கலாம்.
அவர்களுக்கான சமூக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு இருக்கின்றன 
இவ்வளவு காலமும் சோம்பேறிகளாக அவர்களை வைத்திருக்கும் 
ஒரு மத சமூக கட்ட்டமைப்பில் ஏன் தொடர்ந்தும் தொங்க வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இவ்வளவு காலமும் இந்த மதத்தில் தொங்கியதால் கூட 
அவர்கள் சோம்பேறிகள் ஆக்கப்பட்டு இருக்கலாம்.
அவர்களுக்கான சமூக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு இருக்கின்றன 
இவ்வளவு காலமும் சோம்பேறிகளாக அவர்களை வைத்திருக்கும் 
ஒரு மத சமூக கட்ட்டமைப்பில் ஏன் தொடர்ந்தும் தொங்க வேண்டும்? 

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் எண்டு டாவின் சொல்லியிருக்கிறார். அதனால்தான் ம(ர)தத்திற்கு ம(ர)தம் தாவுகிறான் போல. ஒரு ம(த)ரத்தில் பழங்கள் முடிந்தவுடன் இன்னொரு ம(த)ரத்திற்கு தாவுகிறான். திரும்பவும் தாவுவான். ஆனால் மர(த)த்தைவிட்டு கீழே மட்டும் இறங்கமாட்டான், பயத்தில். 😂

இங்கு இந்த சடடம் நடைமுறைப்படுத்தப்படும்போது மக்களின் வாழவாதாரம்தான் பாதிக்கப்படப்போகின்றது. இன்று தமிழர்களாக இருக்கட்டும், சிங்களவர்களாக இருக்கட்டும் அவர்களதான் மட்டுப்பண்ணை தொழிலை செய்கிறார்கள். இது இஸ்லாமியரை இலக்காக வைத்து செய்தாலும், பாதிக்கப்படப்போவது எல்லா மக்களுமே. குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மாடுகள் பால் கொடுக்காது. காளை மாடுகளின் தொகையும் அதிகரிக்கும். இதனை விற்று பிழைப்பவர்கள் தொழிலும் கேள்விக்குறியாகும். எனவே இங்கு சமநிலை பாதிக்கப்பட சந்தர்ப்பம் இருக்கிறது. வெளி  நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது விலைகள் அதிகரிக்கும். நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றப்படி சச்சி  நினைப்பதுபோல இவர்கள் ஒன்றயும் தடை செய்யவில்லை. வேணுமென்றால் வடக்கில் இன்னும் புத்த கோவில்களை அமைப்பார்கள். அதட்கும் இவர் வரவேட்பளிப்பாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

இவ்வளவு காலமும் இந்த மதத்தில் தொங்கியதால் கூட 
அவர்கள் சோம்பேறிகள் ஆக்கப்பட்டு இருக்கலாம்.
அவர்களுக்கான சமூக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு இருக்கின்றன 
இவ்வளவு காலமும் சோம்பேறிகளாக அவர்களை வைத்திருக்கும் 
ஒரு மத சமூக கட்ட்டமைப்பில் ஏன் தொடர்ந்தும் தொங்க வேண்டும்? 

மதத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேற்றும் ஊரில் அம்மாவுடன் கதைக்கும்போது வீட்டுவேலை செய்வதற்கு, மரம் வெட்டுவதற்கு, ஏன் மோட்டார் திருத்துதல், எலெக்ட்ரிக்கல் வேலைகள், plumbing வேலைகள் செய்ய வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக. யாருக்கும் இந்த வேலைகளை செய்ய விருப்பமிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யும் வேலை!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

நல்ல காலம் உங்கள் பெற்றோரிடம் வாளிக் கக்கூஸ் இல்லை, இல்லாவிடில் வாரக்கணக்கில்  காத்து இருக்க வேண்டும் கக்கூஸ் அள்ளுகின்ற ***( சுய தணிக்கை).

மனிதருக்குள் ஏற்ற தாள்வை 
தொழில் அடிப்படையில் எமது மதம் உருவாக்கியது 
அன்று விதைத்தது இன்று விளைகிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடைசெய்யும் தீர்மானம் 1 மாதம் ஒத்திவைப்பு..!

பூரணமான பிரேரணையை சமர்பிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ..
1359993980_Rajapakse.jpg 

இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யும் ஆளுங்கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை அமைச்சரவை 1 மாத காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரான ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார். 

அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றிருந்தது. இதன்போதே ஹெகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

குறித்த தடை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காகவே இந்த ஒத்திவைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யும் வகையில் ஆளுங்கட்சி சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒரு பிரேரணையை முன் வைத்துள்ளார். 

அதனை ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு அங்கீகரித்திருக்கின்றது. மேலும் கட்சி கூட்டத்திலும் பிரதமர் இந்த பிரேரணையை முன்மொழிந்து பலருடைய பாராட்டை பெற்றுள்ளார். எனினும் பிரதமர் உத்தியோகபூர்வமான திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. 

ஆனாலும் விரைவில் அதனை சமர்பிக்கவுள்ளார். அது எப்போது.? எப்படி.? என்பது பிரதமருக்கு மட்டுமே தொியும் என ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார். 

https://jaffnazone.com/news/20338 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நல்ல காலம் உங்கள் பெற்றோரிடம் வாளிக் கக்கூஸ் இல்லை, இல்லாவிடில் வாரக்கணக்கில்  காத்து இருக்க வேண்டும் கக்கூஸ் அள்ளுகின்ற ***( சுய தணிக்கை).

நக்கல்!! நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்? ஏன்  நான் மேலே கூறிய வேலைகள் அவ்வளவு அருவருப்பானவையா ? இவற்றைத்தானே பலர் வெளிநாடுகளில் செய்துகொண்டு இருக்கிறார்கள்!!

1 hour ago, Maruthankerny said:

மனிதருக்குள் ஏற்ற தாள்வை 
தொழில் அடிப்படையில் எமது மதம் உருவாக்கியது 
அன்று விதைத்தது இன்று விளைகிறது 

இதை மதம் உருவாக்கவில்லை. எமது சமூகம் உருவாக்கியது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நக்கல்!! நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்? ஏன்  நான் மேலே கூறிய வேலைகள் அவ்வளவு அருவருப்பானவையா ? இவற்றைத்தானே பலர் வெளிநாடுகளில் செய்துகொண்டு இருக்கிறார்கள்!!

உண்மையில் அவருக்கு நாட்டு நிலமை மட்டுமல்ல புலத்திலுள்ளோரின் நிலமையும் தெரியவில்லை ☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 05:19, Eppothum Thamizhan said:

உண்மை அதுவல்ல மருது. பாணையும் , ரொட்டியையுமே உழைத்து வாங்கி சாப்பிட முடியாத சோம்பேறிகள்!

10 hours ago, Eppothum Thamizhan said:

மதத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேற்றும் ஊரில் அம்மாவுடன் கதைக்கும்போது வீட்டுவேலை செய்வதற்கு, மரம் வெட்டுவதற்கு, ஏன் மோட்டார் திருத்துதல், எலெக்ட்ரிக்கல் வேலைகள், plumbing வேலைகள் செய்ய வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக. யாருக்கும் இந்த வேலைகளை செய்ய விருப்பமிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யும் வேலை!!

எல்லோருமே வெளிநாட்டுக்கு காசில் வாழ்கிறார்கள் என்றும், வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் உதவுகிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தின் நினைப்பும் அப்படியே வடகிழக்கில் உள்ளவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்காரர், அவர்களுக்கு வேலை தேவையில்லை நாடு தேவையில்லை. என்னவோ உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள் எல்லாம் உண்மையல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, satan said:

என்னுடைய தம்பி ஒரு Quantity Surveyor. இன்று கதைக்கும்போது கூறினார். யாழில் ஒரு மேசனுக்கு 2500 ரூபாயும் தொழிலாளிக்கு 1800 ரூபாயும் நாள்க் கூலியாம். சீமெந்து வேலைக்கு ஆள் கிடைத்தாலும் மர வேலைக்கும் நிலக்கல் பதிக்கும் வேலைக்கும் தொழிலாளர்களைப் பிடிப்பது மகா கடினமாம். அதிலும் பொறுப்பான திறமையான ஆட்கள் கிடைப்பது முயற் கொம்புதானாம். இந்த நிலைதான் தொழில்நுட்ப வேலைகளுக்கும் என்றார்.. கொழும்பில் தற்போதைய கொறோனா சூழலால் மலையகத்திலிருந்து தொழிலாளர் வரவு மிக்வும் குறைவு என்றும் சொன்னார்.

உண்மையில் வடபகுதியில் நிலமை மகா மோசம். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மர வேலைக்கும் நிலக்கல் பதிக்கும் வேலைக்கும் தொழிலாளர்களைப் பிடிப்பது மகா கடினமாம். அதிலும் பொறுப்பான திறமையான ஆட்கள் கிடைப்பது முயற் கொம்புதானாம். இந்த நிலைதான் தொழில்நுட்ப வேலைகளுக்கும் என்றார்..

வெளிநாட்டுக்காரர் இதற்கான பயிற்சி கூடங்களை அமைத்து பயிற்சிகளை அளிக்கலாம் தாயக உறவுகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

வெளிநாட்டுக்காரர் இதற்கான பயிற்சி கூடங்களை அமைத்து பயிற்சிகளை அளிக்கலாம் தாயக உறவுகளுக்கு.

இவை சாதியுடன் தொடர்புடைய  தொழில்களாக காலம் காலமாக இருந்து வந்ததால் பலர் அதனைச் செய்யத் தயங்குகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே சிறிய மாற்றங்கள் தென்படுகின்றன. அந்த மாற்றங்கள் கூட அதிக கட்டணம் / வருமானம் என்பதால் ஏற்பட்டன. 

நிறுவனமயப்படுத்தப்பட்ட பெரும் முதலீடுகளுடன் கூடிய உற்பத்தித் தொழிற்சாலைகள் உ+ம் மரத் தளபாட உற்பத்தி நிலையங்கள், கல் அறுக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றை நிறுவுலாம். மற்றும் மேற்கில் உள்ளது போன்று தொழில்களுக்கு உரிய மரியாதையையும் அதனுடன் கூடவே தொழிலாளர்களுக்கு தரக் கட்டுப்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தல் போன்ற இன்னோரன்ன விடயங்கள் இத் தொழில்களின்பால் மரியாதையை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். 

இல்லாவிட்டால் தென்பகுதியிலிருந்துதான் தொழிலாளர்களை கொண்டுவரவேண்டி இருக்கும் ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.