Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல; அரசாங்கத்தின் உதவிகளுக்கு தயாராய் உள்ளேன் : சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல அறிஞர்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களினை படித்து ஆய்வு செய்தே நாடாளுமன்றத்தில் நிலவுரிமை குறித்துப் பேசினேன்.

இலங்கையின் ஆதிக்குடிமக்கள் பேசியது தமிழ் மொழிதான் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கள்ளத்தோணிகள் நாமல்ல. நீங்கள் எம்மைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தான் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே நான் எனது முதலாவது நாடாளுமன்ற அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்றிருந்தேன்.

வன்னியில் இருந்தவர்கள் ஒருபோதும் பயங்கரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்களே. வயாதனவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பப்படுகிறது.

இளைஞர்கள் இவ்வளவு காலமும் நாடாளுமன்றம் சென்று என்ன செய்தார்கள்?

அங்ஜனுக்கு என்னைவிட விருப்பு வாக்குகள் அதிகம் கிடைக்கக் காரணம், அவரைப் போன்று நான் மதுபானம், பணம், வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்து வாக்குக் கேட்க்கவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் என்னிடன் பேசியிருந்தார்.

நான் அவருக்கு பதிலளிக்கையில் தீர்வு என்று ஒன்றிக்குள் கட்சி இறங்கும் போது அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறினேன்.

நான் எனது சம்பந்தியுடன் இணைந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகளையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/255711?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

நான் எனது சம்பந்தியுடன் இணைந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகளையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

அவர் எதற்காக சம்பந்தியை இழுத்தார்? பேட்டி எடுத்தவர் அப்படி என்ன கேள்வி கேட்டார்? என்பதை கூறாமல், இப்படி மொட்டையாய் போட்டால் விளங்காத மரமண்டையள் எங்களுக்கு இது ஒன்று போதும்; வெறு வாய்க்கு அவல் கிடைத்து விட்டது. இனி முக நூல் எல்லாம் மென்று துப்ப  வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

அவர் எதற்காக சம்பந்தியை இழுத்தார்? பேட்டி எடுத்தவர் அப்படி என்ன கேள்வி கேட்டார்? என்பதை கூறாமல், இப்படி மொட்டையாய் போட்டால் விளங்காத மரமண்டையள் எங்களுக்கு இது ஒன்று போதும்; வெறு வாய்க்கு அவல் கிடைத்து விட்டது. இனி முக நூல் எல்லாம் மென்று துப்ப  வேண்டியதுதான்.

அது அவரின் பிரச்சனை  மீண்டு வருவது அவரின் நிலை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, பெருமாள் said:

கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

👍உண்மை நிலையை தெரிவிக்கும் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

இதைத் தான் நானும் சொல்கிறேன் ...இவர் தெரிந்து செய்கிறாரா அல்லது தெரியாமல் பின்னால் இருந்து யாரும் ஊக்குவிக்கிறார்களோ தெரியாது ... ஆனால் ,இவரது பேச்சு தமிழரை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் 

இதைத் சொன்னால் சிங்களவனுக்கு அடங்கி அடிமையாய் இருக்க வேண்டுமா என்று கொஞ்ச பேர் துள்ள தொடங்குவினம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

என்ன கட்சி மாறிவிட்டியள் போல.....😄
டயனாவை நிறுத்த சொல்லுங்கள்,
விமல்வீரவம்சாவை நிறுத்த சொல்லுங்கோ
வீர சேகராவை ,கம்பினா,மற்றும் தேரர்களை நிறுத்த சொல்லுங்கள் ....நான் விக்கியிடம் சொல்லுகிறேன் நிறுத்த சொல்லி😂

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, putthan said:

என்ன கட்சி மாறிவிட்டியள் போல.....😄
டயனாவை நிறுத்த சொல்லுங்கள்,
விமல்வீரவம்சாவை நிறுத்த சொல்லுங்கோ
வீர சேகராவை ,கம்பினா,மற்றும் தேரர்களை நிறுத்த சொல்லுங்கள் ....நான் விக்கியிடம் சொல்லுகிறேன் நிறுத்த சொல்லி😂

அண்ணை இண்டைக்கு டெக்கில நாயகன் கசெட்டே ஓடுது? எங்க ஆனந்தா ஸ்டூடியோவிலயே எடுத்தது?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அண்ணை இண்டைக்கு டெக்கில நாயகன் கசெட்டே ஓடுது? எங்க ஆனந்தா ஸ்டூடியோவிலயே எடுத்தது?

நாயகன் படம் கடவுள் தந்தை (கோட் பாதர்) படத்தின் மறுபிரதியென்று இணையத்தில் அறிந்தேன், இந்த வாரம்தான் அந்த ஆங்கிலப்படம் பார்த்தேன் இன்னமும் தமிழ் நாயகன் படம் பார்க்கவில்லை,நேரம் செலவு செய்து நாயகன் படம் பார்க்கலாமா? உங்கள் அபிப்ப்ராயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

நாயகன் படம் கடவுள் தந்தை (கோட் பாதர்) படத்தின் மறுபிரதியென்று இணையத்தில் அறிந்தேன், இந்த வாரம்தான் அந்த ஆங்கிலப்படம் பார்த்தேன் இன்னமும் தமிழ் நாயகன் படம் பார்க்கவில்லை,நேரம் செலவு செய்து நாயகன் படம் பார்க்கலாமா? உங்கள் அபிப்ப்ராயம் என்ன?

உண்மையான கேள்வியா இல்லை ஜோக்கா? 

சரி சீரியசாகவே சொல்கிறேன். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என கருதப்படும் படம் அல்லவா?

நான் Godfather பார்கவில்லை. ஆகவே கொப்பியா எனத் தெரியாது.

ஆனால் நாயகன் பார்த்தேன். நிச்சயமாக பார்க்கலாம்.

அன்பே சிவம் பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உண்மையான கேள்வியா இல்லை ஜோக்கா? 

சரி சீரியசாகவே சொல்கிறேன். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என கருதப்படும் படம் அல்லவா?

நான் Godfather பார்கவில்லை. ஆகவே கொப்பியா எனத் தெரியாது.

ஆனால் நாயகன் பார்த்தேன். நிச்சயமாக பார்க்கலாம்.

அன்பே சிவம் பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கும்.

நன்றி, நாயகன் படம் பார்க்கும் திட்டம் ஏற்கனவே போட்ட திட்டம்தான் ஆனால் நீங்கள் நாயகனைப்பற்றி இத்திரியில் குறிப்பிட்டமையால் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

என்ன கட்சி மாறிவிட்டியள் போல.....😄
டயனாவை நிறுத்த சொல்லுங்கள்,
விமல்வீரவம்சாவை நிறுத்த சொல்லுங்கோ
வீர சேகராவை ,கம்பினா,மற்றும் தேரர்களை நிறுத்த சொல்லுங்கள் ....நான் விக்கியிடம் சொல்லுகிறேன் நிறுத்த சொல்லி😂

நீங்கள் சொன்ன உந்த கோஷ்டியளுட்டை நாங்கள் கல் தோன்றா மண் தோன்றா காலத்து மூத்த குடி எண்டு சொன்னால் விளங்கவே போகுது? 😄

 அவங்களும் இதுதான் தாயமெண்டு சிங்களச்சனத்துக்கு விக்கியர் இப்பிடி சொல்லுறார் எண்டு உசுப்பேத்தப்போறாங்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

நன்றி, நாயகன் படம் பார்க்கும் திட்டம் ஏற்கனவே போட்ட திட்டம்தான் ஆனால் நீங்கள் நாயகனைப்பற்றி இத்திரியில் குறிப்பிட்டமையால் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

கட்டாயம் பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நாயகன் படம் கடவுள் தந்தை (கோட் பாதர்) படத்தின் மறுபிரதியென்று இணையத்தில் அறிந்தேன், இந்த வாரம்தான் அந்த ஆங்கிலப்படம் பார்த்தேன் இன்னமும் தமிழ் நாயகன் படம் பார்க்கவில்லை,நேரம் செலவு செய்து நாயகன் படம் பார்க்கலாமா? உங்கள் அபிப்ப்ராயம் என்ன?

உங்களுக்கு இதைச் சொன்னவர் இரண்டையுமே (உண்மையில் நான்கை, கோட்பாதர் 3 படங்கள், trilogy)  பார்க்கவில்லையென்பது உறுதி! இரண்டுமே தாதாக்களின் கதையென்பதைத் தவிர ஒற்றுமைகள் வேறில்லை! சிலர்  சொல்வது இறுதியில் மகள் இறந்த வேளை அல்பசினோ அழுததும், மகன் இறந்த போது கமல் அழுததும் ஒரே மாதிரி இருப்பதாக.  எனக்கு கமலின் அழுகை தனித்துவமாகத் தான் தெரிந்தது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vasee said:

நன்றி, நாயகன் படம் பார்க்கும் திட்டம் ஏற்கனவே போட்ட திட்டம்தான் ஆனால் நீங்கள் நாயகனைப்பற்றி இத்திரியில் குறிப்பிட்டமையால் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

நான் நாயகன் படத்தை எத்தனை தடவைகள் பார்த்தேன் என்று தெரியாது.அந்த படத்தின் பாதிப்பு இன்றும் எனக்கு இருக்கின்றது. மனதை விட்டு லயித்து பார்க்கக்கூடிய படம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன உந்த கோஷ்டியளுட்டை நாங்கள் கல் தோன்றா மண் தோன்றா காலத்து மூத்த குடி எண்டு சொன்னால் விளங்கவே போகுது? 😄

 அவங்களும் இதுதான் தாயமெண்டு சிங்களச்சனத்துக்கு விக்கியர் இப்பிடி சொல்லுறார் எண்டு உசுப்பேத்தப்போறாங்கள். :cool:

உண்மை  தான், சிறிலங்காவின் முதலாவது பணக்காரன் தங்கள் ஆட்சியாளன் என தெரிந்தும் ஏழைகளின் நண்பன் என சொல்லி வாக்கு போடும் மக்களை என்ன செய்வது.... அவரின் இன்னுமொரு அர்சியல்வாதி முன்னாள் போராளி அடுத்த பணக்காரன் அவரையும் ஊக்கப்படுத்தினம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, putthan said:

உண்மை  தான், சிறிலங்காவின் முதலாவது பணக்காரன் தங்கள் ஆட்சியாளன் என தெரிந்தும் ஏழைகளின் நண்பன் என சொல்லி வாக்கு போடும் மக்களை என்ன செய்வது.... அவரின் இன்னுமொரு அர்சியல்வாதி முன்னாள் போராளி அடுத்த பணக்காரன் அவரையும் ஊக்கப்படுத்தினம்.....

எமக்கு ரவிராஜ் போன்ற யதார்த்த அரசியல்வாதிகள் வேண்டும். அதற்கும் இனிவரும் காலங்களில் சந்தர்ப்பமில்லை. காரணம் யதார்த்தவாதியாக இருந்தால் அழித்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எமக்கு ரவிராஜ் போன்ற யதார்த்த அரசியல்வாதிகள் வேண்டும். அதற்கும் இனிவரும் காலங்களில் சந்தர்ப்பமில்லை. காரணம் யதார்த்தவாதியாக இருந்தால் அழித்துவிடுவார்கள்.

தமிழ்தேசிய பற்றுடன் யதார்த்த அரசியல்வாதி தேவை.....தமிழ்தேசியபற்று பிரிவினைவாதம் அல்ல என்பதை சில தமிழர்களும் சிங்களவரும் உணரவேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.