Jump to content

Recommended Posts

On 17/1/2021 at 11:34, உடையார் said:

இராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்? என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

 முதலில்  இவ்வாறான காணொளியை இணைத்தற்கு மிக்க  நன்றி உடையார்.

நிலாந்தனின் இவ்வாறான அரசியல் தெளிவை நோக்கிய சிந்தனை வரவேற்கப்படவேண்டியது. சகிப்பு தன்மை அற்ற ஒற்றை கருத்துக்களை திணிக்கும் நடைமுறை தோல்வியையே தரும் என்றும், பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டு சி்ந்தனை முறை தான் எமக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறார். 

எமது  மிதவாத தலைமைகளின் மட்டுமல்ல ஆயுத போராட்ட தலைமைகளிலும் அதே தவறுகள் இருந்த‍ததை சுட்டிக்காட்டுகிறார்.  எமது போராட்டத்தில், துரோகிக்கும் தியாகிக்கும் இடையே நூலிழை வித்தியாசமே இருந்த வரலாற்றை ஆதாரத்துடன்  சுட்டிக்காட்டுகிறார்.   தமிழீழத்தின் எல்லைகள் என்று நாம் கூறும் இடங்களுகு அப்பால் நடத்தப்பட ஆயுத நடவடிக்கைகள் எமக்கு பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய உண்மையை ஏற்றுக்கொள்கிறார். 

போராடும் சிறிய இனமான நாம் உலகில் நண்பர்களை உருவாக்காமல் எதிரிகளை உருவாக்கிய தவறான வெளியுறவு பார்வையை எமது தரப்பு கொண்டிருக்காமல் விட்டிருந்தால் தனிமை படுத்தபட்டு தோற்கடிக்கபட்டிருக்க மாட்டாது என்பதை தர்க்க ரீதியாக  அலசுகிறார். 

அறிவுபூர்வமாக முடிவுகளை உள்நாட்டு ஜதார்த்தம், சர்வதேச ஜதாரத்தம் ஆகவற்றை கணக்கெடுக்மாமல்  உணர்ச்சி வசப்பட்டு பாதிப்பகளின் அடிப்படை முடிவுகளை எடுத்தன் விளைவுகள் கசப்பானதாக  எமக்கு இருந்த  பட்டறிவை சீர்தூக்கி பார்க்க வலியுறுத்துகிறார். 

கருத்து சொல்பவர்களை பார்த்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் பாமரத்த‍னத்துக்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார். தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் நிறுவனமயப்பட்டு இருப்பவர்களும் தான் ஒன்றை நடைமுறைப்படுத்தலாமே தவிர கருத்துக்கூறும் தனி நபர்களை இப்படி கேட்பது அறிவீனம்.

தாயகத்தில் விடுதலை போராட்ட காலங்களில் போராட்டத்தோடு பயணித்தால் உண்மைக்கும், மாயைக்கும்  இடையிலான வித்தியாசத்தை இவரால் இன்று தெளிவாக புரிய முடிந்திருக்கிறது. இவரது இந்த அனுபவ பகிர்வு நிச்சயம் எமது போராட்டத்தை தலைமேற்று கொண்டிருக்கிற தலையேற்க போகின்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும்.

இந்த காணொளியை இணைத்த உடையாருக்கு மீண்டும் எனது நன்றிகள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதல்வன்

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான்.  அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒ

சண்டமாருதன்

சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம்

goshan_che

தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், ப

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2021 at 21:35, tulpen said:

பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டு சி்ந்தனை முறை தான் எமக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறார்.

நன்றி உடையர் அண்ணா & துல்பேன் அண்ணா.. 

நிலாந்தனின் இந்த தெளிவான பார்வையை எல்லோருக்கும் இருக்குமா தெரியவில்லை.. அவர் கூறுவது போல தற்போதைய அரசியல்தலைமைகளுக்கு(விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை தவிர) மக்களின் நலனில் அக்கறை என்பது துளியும் இல்லை.. 

ஆனால் அவருடைய இந்த காணெளியில் வந்த Think Tank ஏன் எங்களால் இப்பொழுதும் கூட உருவாகவில்லை?

சரி அப்படி ஒன்று உருவாகினால் கூட அது இனவாத அரசினால் அரும்பிலேயே கிள்ளியெறிப்படும் சாத்தியங்கள் அதிகமாகதானே இருக்கும்?

ஏன் அரசியல்வாதிகளை அதிகளவு உள்ளடக்கித்தான் இந்த Think Tank உருவாக்கப்படவேண்டுமா? 

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியை/பலத்தை பற்றி பிறகு பார்த்துக்கொள்வோம் ஆனால் இந்த Think Tank கட்டியெழுப்ப ஏன் எங்களால் இப்பொழுது முடியாதுள்ளது.. 

  • Like 3
Link to comment
Share on other sites

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிரபா, Think Tank என்பது, அரசியல்வாதிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டியதில்லை. அப்படி இருந்தாலும், அது தமது அரசியல் நன்மைகளை நோக்கியதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. பலவேறு தரப்பிரைக் கொண்டதாக, அல்லது பலவேறு தரப்புக்களின் கருத்துக்களை விமர்சனங்களை காது கொடுத்து கேட்டு உள்வாங்கி ஒரு கருத்துருவாக்கத்தை அமைக்கும் குழுவாக, இருக்கலாம் என்பதுடன் உத்தியோகபூர்வ அமைப்பாக தம்மை வெளிப்படுத்துபவர்களாக இருக்கவேண்டிதில்லை என்று நினைக்கிறேன். 

ஈழத்தமிழரில் இவ்வாறான அமைப்பு இல்லை என்றாலும் எமது போராட்டம் திசை மாறிப் போக தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதன் போக்கு குறித்து காத்திரமான  எச்சரிக்கை செய்த சிறிய அளவிலான கலவியாளர்களும் தவறான கண்ணோட்டத்தில், அவர கள் மீதே  குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டதும் எமது போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உங்களது பதிலுக்கு நன்றிகள் Tulpen அண்ணா..

நீங்கள் கூறுவது உண்மைதான், அரசியல்வாதிகளை கட்டாயம் இணைக்க வேண்டியதில்லை, ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களையும் உள்வாங்கவேண்டிய தேவை ஏற்படும் என்றுதான் நினைக்கிறேன்.. 

மேலும், இப்பொழுது கூட புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் வாழ்பவர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்கள் குழுக்கள், பழைய பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள், பாடசாலை மட்டத்தில் உள்ள குழுக்கள் என தனித்தனியாக சிலவற்றை செய்கிறார்கள், ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே.. ஆனாலும் தனித்தனியாக இயங்குவதை ஒன்றினைத்து செயற்பட ஏன் முடியாதுள்ளது? 

என்னைப்பொறுத்தவரையில் எங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்ற, உதவாத செயற்பாடுகளும், பரந்த நோக்கற்ற மனபாங்கும் தானே காரணங்கள் என கூறலாம்.. இவற்றை இல்லாதெழிக்க இன்னமும் எத்தனை காலங்கள் போகுமோ தெரியாது.. 

எங்களது வரலாற்றைப்பற்றிய எல்லா விடயங்களும் பதியப்படுகிறது/பதியப்படவேண்டும், ஆனாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றக்கொள்ளாமல் இன்னமும் இருப்பதுதான் வேதனைக்குரியது.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் செயற்பாடுகள் ஈழத்தமிழருக்குக் கற்றுத்தரும் பாடங்கள்

சிவா செல்லையா

கடந்த 50 வருடகாலத்தில் உலகின் மனிதகுல வரலாற்றில் பாரிய இனப்படுகொலைகள் வெவ்வேறு நாடுகளில் நடந்தேறி உள்ளன. அவ்வினப் படுகொலைகள் ஆட்சியாளர்கள் தமது நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை. ரூவண்டா, தென்ஆபிரிக்கா, கென்யா, உகண்டா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும், நீதி வழங்கலில் ஏற்பட்ட தாமதங்களும் ஈழத்தமிழர்களுக்குப் பாதிய நம்பிக்கையீனத்தை இந்த உலகில் ஏற்படுத்தி உள்ளது.

வளம்மிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காகவும், நவீன காலணித்துவ மேலாண்மையை விருத்தி செய்வதற்காகவும், உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் அகப்பட்டே சிறுபான்மை இனங்கள் ஆட்சியாளர்களால் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டமையை ஆபிரிக்கக் கண்டத்தில் கண்கூடாகக் காணலாம்.

இனப்படுகொலைக்குப் பின்பான சமூகத்தில் உலக வல்லரசுகள் நிலைமாறு நீதி, நல்லிணக்கம் என்ற பெயரில் காலூன்றுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இனப்படுகொலைக்குப் பின்பான இத்தகைய நிலைமாறு நீதி, நல்லிணக்கச் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைவன :

(1) நாடு சார்ந்த காரணிகள்.
(2) நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்புக் காரணிகள்.
(3) சனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள்.
(4) சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள்.
(5) பிரதேசவாதம்.
(6) அரசியல் கூட்டுக்கள் .

ஆபிரிக்க நாடுகளில் இனப்படுகொலைச் சம்பவங்களுக்கு பின்னணியில் ஆட்சியாளர்களுக்கு உலக வல்லரசுகள் ஆதரவு வழங்கியமை புலனாகின்றது. குறிப்பாக ஆபிரிக்காக் கண்டத்தில் சீனாவின் தடம்பதிப்பு இனப்படுகொலைகளின் நிழலிலேயே நிகழ்ந்து உள்ளது. சீனா உலகின் முதல்நிலை வல்லரசாகும் முதலீடு. ஆபிரிக்காக் கண்டத்தின் பல இனப்படுகொலைகளுக்கு காரணமாக அமைந்து உள்ளது. இவ் இனப்படுகொலைகளுக்கான நீதி வழங்கலில் நாடுசார்ந்த காரணிகள், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக் காரணிகளான ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, சீனப் பொருளாதார ஒத்துழைப்பு என்பன செல்வாக்குச் செலுத்தி உள்ளன. இதனால் இடைக்கால நீதி வழங்கும் பொறிமுறை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெறுதலில் இருந்து தப்பி உள்ளனர்.

குற்றவியல் நீதிமன்றத் தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்படைந்த மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள், சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிரமங்கள், பிரதேச வாதம், அரசியல் கூட்டுக்கள் என்பன தடையாக ஆபிரிக்க நாடுகளில் அமைந்தமை கண்டறியப்பட்டு உள்ளது.

ஆசியாக்கண்டத்திலும், சீனாவின் பட்டுப்பாதை நிகழ்ச்சித் திட்டத்தின் முதலீடாகவே இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளில் பாரிய இனப்படுகொலைகள் நிகழ்ந்து உள்ளன. இதில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனம் மீண்டெழ முடியாதவாறு ஆபிரிக்காக் கண்டத்தில் நிகழ்வது போல் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

கடந்தகாலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கு அப்பால் தற்போது தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளே சிறுபான்மை இனத்தை அடையாளம் தெரியாது அழிக்கும். இலங்கை அரசு சீன அரசின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தில் தனது இன மேலாண்மையைக் காட்டுகின்றது. எனவே ஈழத்தமிழர் தமிழக மக்களுடனான போக்குவரத்து, பொருளாதாரம், கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதனாலேயே இலங்கையில் தமது இருப்பினைக் காத்துக்கொள்ள முடியும்.

சர்வதேச நீதி விசாரணை நியமங்கள் யாவும் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே அமையும். ஒரு வல்லரசு நிலைமாறு நீதி என்ற போர்வையிலும், மறு வல்லரசு நல்லிணக்கம் என்ற போர்வையிலும் தமது நலன்களைக் கவனிக்க இங்கு கடட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனே தமது அரசியல் இருப்பிற்கான நிகழ்ச்சிநிரலில் செயற்படாது தமிழின இருப்பினை இலங்கையில் நிலைபெறச் செய்வதற்கான செயற்பாட்டில் தலைப்படல் வேண்டும்.

http://samakalam.com/ஆபிரிக்க-நாடுகளில்-நடைபெ/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் கடந்த 03.02.2021 தொடக்கம் 07.02.2021 வரை தொடர்ச்சியான மக்கள் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது. 

மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் இணைந்து வெளியிட்ட பிரகடன அறிக்கையை சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் வாசித்திருந்தார். 

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும். இதன்பால் தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வதாக பிரகடனத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்குகின்ற 10 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தும் கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

காணாமல் போனோருக்கு நீதி
தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வௌியேற வேண்டும்
தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்
நில ஆக்கிரமிப்பு , சிங்கள மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும்
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்
காணிகள் மீள கையளிக்கப்படல் வேண்டும்
அரசியல் தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்
தமிழர் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்
மலையக மக்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்
ஜனாஸா விவகாரத்தில் மத உரிமை மதிக்கப்பட வேண்டும்

பல தடைகளையும் தாண்டி இடம்பெற்ற இப்பேரணியில் சமயத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
 
Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தமிழர்களின் விடிவுக்காக் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம், அரசியல் நடவடிக்கைகள் மீது பல்வேறு தரப்பினர் விமர்சங்களை வைப்பது வழமை. அவற்றை வெறுமனே விமர்சனங்களாக, எதிரியின் துரோகிகளின் கூவல்களாக கடந்து சென்று விடிவை அடைய முடியாது. புலிகளே தற்போது இருந்தாலும் தாங்கள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிகழ்வை, தமிழ்மக்களின் அரசியல் தொடர்பாக கடந்து வந்த பாதையை நிச்சயமாக ஆராய்வார்கள். 

இந்த திரியில் அதை ஆராய விரும்புகிறேன். உண்மையான தமிழ் மக்கள் மீதான அவர்களின் விடுதலை மீதான பற்றுக்கும் வெறுமனே புலி எதிர்ப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நான் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட விருப்பபடுகிறேன். 

எல்லாருக்கும் ஒரு நியாயயம் இருக்கும் தங்களின் நியாயம் தான் உலகில் மிகப்பெரியது என்று நினைப்பதால் தான் முரண்பாடுகள் வருகின்றன. ஆனால் ஒவ்வொருவரின் நியாயத்தையும் ஆராய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். 

இந்த விமர்சனங்களும் அதற்கான கலந்துரையாடல்களும் எதிர்காலத்தில் எம் விடுதலைக்கு எந்த விதத்தில் ஆவது உதவ வேண்டும் என்பதை மனதில் வைத்து பதிவுகளை எழுதுங்கள். 

ஒருவரை ஒருவர் வென்றுவிடுவதால் விடிவு கிடைத்துவிடும் என்றால் நான் ஒரு தோல்வியாளனாக முதலில் பதிவு செய்துவிடுகிறேன். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாறு கணனி விசைப்பலகைகளில் தட்டுவதன் மூலமோ மை கொண்டு காகிதத்தில் எழுதுவதன் மூலமோ உருவாக்கப்படுவதில்லை.அது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிராலும் இரத்தத்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களின் உழைப்பாலும் வியர்வையாலுமே எழுதப்படுகிறது. அந்த வரலாற்றை அதன் மகத்துவத்தை ஒருபோதும் எதிரிகளாலோ அவர்களது ஒத்தோடிகளாலோ புரிந்துகொள்ள முடியாது.
0000
ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது ஒரு சங்கத்திற்கு அல்லது ஒரு பொது அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன.
ஓரு அரசியல் கட்சியில் ஒரு சங்கத்தில் அல்லது ஒரு பொது அமைப்பில் பொதுவாக ஒருவர் அங்கத்துவ படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுத்து அதற்குரிய அங்கத்துவ பணத்தை செலுத்துவதன் மூலம் அவற்றின் உறுப்பினராகலாம்.
ஆனால் ஒரு விடுதலை இயக்கத்துக்கு இதே முன்மாதிரியில் அங்கத்துவ படிவம் நிரப்பி அங்கத்துவ பணம் பெற்றுக்கொண்டு ஒருவரை அவ்வளவு சுலபமாக சேர்த்துவிட முடியாது.
ஒரு விடுதலைப்போராட்டமென்பது மூடிய அறைக்குள் நடத்தும் விவாதமோ ஒரு திறந்த வெளியில் நடத்தும் பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மைதானத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியையோ போன்றதல்ல.
அது இரத்தம் சிந்தி உயிரைக்கொடுத்து போராடும் களமுனைகளைக் கொண்டது.கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக்கூடிய கரடுமுரடான ஆபத்தான பயணப்பாதை அது.
பணமும் பட்டங்களும் சமூக அந்தஸ்த்தும் பிரமுகர்களின் பரிந்துரைகளும் இந்தப்பயணத்துக்கு உதவாது.
‘போர்க்குணம்’ என்பது தான் இந்தப்பாதையில் பயணிப்பவனுக்கான முதல் அடிப்படை தகுதியாகும். எவனொருவன் தன்னைச்சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டு கோபம்கொள்கிறானோ,அதற்கெதிராக போராடத் துணிகிறானோ அவன் தான் போராளியாக இணைத்துக்கொள்ள அல்லது போராட்ட செயற்பாட்டாளனாக இணைத்துக்கொள்ளத் தகுதியானவன்.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழி வாரியான தரப்படுத்தல்  அறிமுகப்படுத்தனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்...அதற்கு எதிராய் ஆயுதம் தூக்கினார்கள் . சரி ....பிறகு பிரதேச அதாவது மாவட்ட ரீதியான தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது ...இதனால் பின் தங்கிய பிரதேசத்தை [வன்னி , மட்டு ] போன்ற இடங்களில் இருந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு வசதியாய் இருந்தது ...அப்படி இருக்கும் போது தரப்படுத்தல் போராட்டத்திற்கு ஒரு காரணமாய் சொல்லப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

8 hours ago, முதல்வன் said:

இந்த திரியில் அதை ஆராய விரும்புகிறேன். உண்மையான தமிழ் மக்கள் மீதான அவர்களின் விடுதலை மீதான பற்றுக்கும் வெறுமனே புலி எதிர்ப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நான் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட விருப்பபடுகிறேன். 

தொடர்சசியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகளால் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த இலாபம் என்ன?

தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதல்களால் தமிழர் போராட்டம் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை கண்டது. தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக பிரச்சாரம் செய்ய ஶ்ரீலங்கா அரசுக்கு சிறந்த வாய்ப்பைக் கொடுத்தது. விடுதலைப்புலிகளால் கொல்லப்படாதவர்களையும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் சேர்தது ஶ்ரீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்த போது அவற்றறை மறுக்க முடியாத கையறு நிலையில் புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இருந்தார்கள். பெயர் குறிப்பிட்டு இவர்களை எல்லாம் நாம் கொலை செய்யவில்லை என்று கூறும் போது அப்படியானால் மற்றவைகளை நீங்கள்  தானே செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் மௌனமாக அரசின் பரப்புரையை எதிர் கொள்ள முடியாத நிலை இருந்ததை ஜெனிவாவில் தமிழர் தரப்புக்காக செயற்பட்ட பலர் அறிவார்கள். 

உலக ராஜதந்திரிகளால் நன்கு அறியப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட போது ஜெனிவாவில் தமிழர் தரப்பில் பரப்புரை வேலைகளை மேற்கொண்ட நண்பர்கள் சில காலம் ஜெனிவா பக்கமே போக முடியாமல் இருந்தது. அதை தொடர்தது அதே ஆண்டில் சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல். என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் தனியே வெறும்  உணர்சசி வசப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களே.

யாழ்பபாண எம். பியாக இருந்த யோகேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலேயே 1981 ல் அவரது வீட்டை எரித்து அவர் மயிரிழையில் தப்பி இருந்தார். அப்படிப்பட்டவர்களை கொலை செய்து விட்டு இன்று எமக்காக அரசியல்வாதிகள் இல்லையே என்று அழுகிறோம். 

இது போல் பல விடயங்களை குறிப்பிடலாம். இவற்றை கூறும் போது பழைய விடயங்களை கிளறுவதாக கூறுவார்கள். ஆனால் தாம் சிலாகிக்கும் பழைய விடயங்களை மட்டும் அசைபோட்டு  மணிக்கணக்கில் பேசுவார்கள். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மொழி வாரியான தரப்படுத்தல்  அறிமுகப்படுத்தனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்...அதற்கு எதிராய் ஆயுதம் தூக்கினார்கள் . சரி ....பிறகு பிரதேச அதாவது மாவட்ட ரீதியான தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது ...இதனால் பின் தங்கிய பிரதேசத்தை [வன்னி , மட்டு ] போன்ற இடங்களில் இருந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு வசதியாய் இருந்தது ...அப்படி இருக்கும் போது தரப்படுத்தல் போராட்டத்திற்கு ஒரு காரணமாய் சொல்லப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

தரப்படுத்தல் அறிமுகபடுத்தப்பட்டதன் ஆரம்ப நோக்கம் தமிழர்கள் படித்து பட்டம் பெறுவதை தடுப்பதே. அது இன ஒடுக்குமுறையும் ஒரு படி அது பலரை போரடத்தூண்டியது. அது இப்போது இருக்கும் நிலைக்கு மாற பல்வேறு ஆண்டுகள் எடுத்தன. 

இப்போது இருக்கும் Merit பின்னர் மாவட்டரீதியான தரப்படுத்தல் இருந்திருந்தால் கூட மாற்றம் வேறுவிதமாக இருந்திருக்க கூடும். 

ஒவ்வொரு தாக்கமும் அப்போதிருந்த சூழ்நிலையால் ஏற்பட்டு இருக்கும். தாம் வஞ்சிக்கப்படுவதாக அடக்குமுறைக்கு உள்ளாக்கபடுவதாக அந்த காலத்து இளைஞர்கள் உணர்ந்தார்கள். 

இப்போ அந்த முறைதான் பல்வேறு மாணவர்கள் மேற்படிப்பை தொடர உதவுகிறது என்றாலும் இந்த முறையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். (பொருளாதார இட ஒதுக்கீடு, நகரத்திலிருந்தான தூரம் என்பனவும் கணிப்பிடப்படவேண்டும்.)

அனலைதீவும் யாழ் பருத்தித்துறை நகரமும் ஒன்றல்ல. முழங்காவில்  நாச்சிக்குடாவும்  கிளிநோச்சி வட்டக்கச்சி மல்லாவியும் ஒன்றல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

தொடர்சசியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகளால் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த இலாபம் என்ன?

தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதல்களால் தமிழர் போராட்டம் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை கண்டது. தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக பிரச்சாரம் செய்ய ஶ்ரீலங்கா அரசுக்கு சிறந்த வாய்ப்பைக் கொடுத்தது. விடுதலைப்புலிகளால் கொல்லப்படாதவர்களையும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் சேர்தது ஶ்ரீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்த போது அவற்றறை மறுக்க முடியாத கையறு நிலையில் புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இருந்தார்கள். பெயர் குறிப்பிட்டு இவர்களை எல்லாம் நாம் கொலை செய்யவில்லை என்று கூறும் போது அப்படியானால் மற்றவைகளை நீங்கள்  தானே செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் மௌனமாக அரசின் பரப்புரையை எதிர் கொள்ள முடியாத நிலை இருந்ததை ஜெனிவாவில் தமிழர் தரப்புக்காக செயற்பட்ட பலர் அறிவார்கள். 

உலக ராஜதந்திரிகளால் நன்கு அறியப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட போது ஜெனிவாவில் தமிழர் தரப்பில் பரப்புரை வேலைகளை மேற்கொண்ட நண்பர்கள் சில காலம் ஜெனிவா பக்கமே போக முடியாமல் இருந்தது. அதை தொடர்தது அதே ஆண்டில் சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல். என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் தனியே வெறும்  உணர்சசி வசப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களே.

யாழ்பபாண எம். பியாக இருந்த யோகேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலேயே 1981 ல் அவரது வீட்டை எரித்து அவர் மயிரிழையில் தப்பி இருந்தார். அப்படிப்பட்டவர்களை கொலை செய்து விட்டு இன்று எமக்காக அரசியல்வாதிகள் இல்லையே என்று அழுகிறோம். 

இது போல் பல விடயங்களை குறிப்பிடலாம். இவற்றை கூறும் போது பழைய விடயங்களை கிளறுவதாக கூறுவார்கள். ஆனால் தாம் சிலாகிக்கும் பழைய விடயங்களை மட்டும் அசைபோட்டு  மணிக்கணக்கில் பேசுவார்கள். 

அழகான ஆணித்தரமான கேள்வி. 

அரசியல்வாதிகளால் தமிழ் இளைஞர்கள் உணர்வூட்டப்பட்டார்கள். அரசியல்வாதிகள் அதை வாக்குகளாக மாற்றி தம்மை வெற்றியடையச்செய்வதோடு அந்த தமிழ் இளைஞர்களை தம்மால் அடக்கி ஆளலாம் என்று நினைத்தார்கள். 

அது அப்படியே எதிர்மறையாகி புலிகள் ஆயுதத்தால் அரசியல்வாதிகளை அடக்கலாம் என்று நினைத்தார்கள். தம்மைத்தூண்டி போராட அழைத்துவிட்டு அற்ப சலுகைகளுக்காக விலைபோவதாக எண்ணினார்கள். அரசியல் நேர்மையற்றவர்களுக்கு புகட்டும் பாடம் பின்னர் வரும் அரசியல்வாதிகளை புடம்போடுவதோடு தங்கள் சொற்படி நடப்பார்கள் என நினைத்தார்கள். 

ஒரு சில இராணுவ வெற்றிகளும் தமிழ் அரசியவாதிகளின் கையகலாத்தன்மையினால் ஏற்பட்ட அரசியல் தோல்விகளும் புலிகளை தாம் நடாத்தும் போராட்டம் தான் தமிழருக்கான ஒரே தீர்வு என்று நினைத்தார்கள். எண்பதுகளில் புரட்சி / நாடுகளின் விடுதலை அவர்கள் அப்படி எண்ணி இருக்க இலகுவாக வழிவகுத்து இருக்கலாம். 

அதேவேளை இந்தியாவை அதன் பூகோள நலனுக்காக இலங்கையில் நடாத்தும் விளையாட்டுகளை புலிகள் புரிந்துகொண்ட அளவுக்கு வேறு யாரும் புரிந்தார்களா தெரியவில்லை. திலீபனின் பன்னிருவேங்கைகளின் உயிரைக்கொடுத்து மக்களுக்கு புரியவைத்தார்கள் அதை இன்றுவரை மக்களின் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சென்றார்கள். 

அவ்வாறே இந்திய இராணுவம் நடாத்திய கொலைவெறி ஆட்டத்துக்கு ராணுவ ரீதியாக உதவியவர்களுக்கு நிகரனாவர்கள் அரசியல் ரீதியாக உதவியவர்களும் தான். 

தங்களால் தூண்டப்பட்டு தங்களை மீறி செயற்படும் தங்களின் இடைவெளியை நிரப்பும் எவரையும் அவர்களுக்கு பிடிக்காது.  கருணாநிதி அமிர்தலிங்கம் போன்றவர்கள் அந்த வகையறாவுக்குள் தான் வருவார்கள். 

அவர்கள் கொல்லப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஆனால் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். அப்போது புலிகளுக்கு இருந்த இலகுவான தெரிவாக கொலை இருந்திருக்கலாம்.

நான் இந்த பதிவுகளை என் கண்ணோட்டத்தில் இருந்தே பதிகிறேன். வேறு சிலருக்கு வேறு கண்ணோட்டம் இருக்கலாம். நான் எந்த அமைப்பினதோ புலிகளினதோ பிரதிநிதி அல்லர். உங்களைபோன்ற தமிழர் விடுதலை மீது பற்றுக்கொண்ட தமிழன்.

நீலன் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.  நான் எழுதுவதில் பிழை இருக்கலாம் எல்லாரும் எழுதுங்கள் வரும் சந்ததி சரியெனபடுவதை எடுக்கும் தெளிவுகொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஆனால் எம்மனதில் சுழலும் கேள்விகளை பாரங்களையும் இறக்கும் இடமாக இந்த களத்தை பாவியுங்கள் அது நீங்கள் உட்பட அனைவருக்கும் அவசியமானதும் நன்மைபயக்கவைப்பதும் ஆகும்.

Link to comment
Share on other sites

28 minutes ago, முதல்வன் said:

முதல்வன், உங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் நான் கூறியது அந்த அரசியல்வாதிகளின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சம்களை பற்றியதல்ல. அவர்கள் சரியானவர்கள் என்று கூட நான் கூறவில்லை. ஆனால் அவர்களை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த நன்மை எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசின் பரப்புரைக்கு உதவி செய்ததாகவே அமைந்தது என்பதையையே குறிப்பிட்டேன். ஒரு நாட்டை ஸதாபிப்பதானால் உலக நாடுகளின் அங்கீகாரத்துடனேயே அதை செய்ய முடியும்.  எவரைப்பற்றியும்  எமக்கு கவலை இல்லை எமக்கு  சிறிதறவு ஒத்துவராவிட்டால் அல்லது முரண்பட்டால் அவரை கொலை செய்வேன் என்ற நிலைப்பாடு ஒரு நாட்டை ஸதாபிக்க உதவாது. அப்படி என்றால் ஏதாவதொரு பலமான நாட்டில் ஆதரவாவது இருந்திருக்க வேண்டும். அல்லது உலக நாடுகளை எதிர்த்து வெல்லக்கூடிய super power  எமக்கு இருந்திருக்க வேண்டும். 

நீங்கள் கூறியது போல் புலிகள் எப்போதும் பிரச்சனைகளை தீர்க்க பின்இ விளைவுகளை சிந்திக்காது  இலகுவான தெரிவுகளாக கொலைகளையே நாடினார்கள்.  எவ்வளவு வீரத்துடன் போராடிய போதும் அவர்களின் பெரிய மைனஸ் பொயின்ற் அது தான். யாழ் முஸ்லீம் மக்கள் வேளியேற்றமும் அந்த வகையானதே. 

Edited by tulpen
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, முதல்வன் said:

தரப்படுத்தல் அறிமுகபடுத்தப்பட்டதன் ஆரம்ப நோக்கம் தமிழர்கள் படித்து பட்டம் பெறுவதை தடுப்பதே. அது இன ஒடுக்குமுறையும் ஒரு படி அது பலரை போரடத்தூண்டியது. அது இப்போது இருக்கும் நிலைக்கு மாற பல்வேறு ஆண்டுகள் எடுத்தன. 

இப்போது இருக்கும் Merit பின்னர் மாவட்டரீதியான தரப்படுத்தல் இருந்திருந்தால் கூட மாற்றம் வேறுவிதமாக இருந்திருக்க கூடும். 

ஒவ்வொரு தாக்கமும் அப்போதிருந்த சூழ்நிலையால் ஏற்பட்டு இருக்கும். தாம் வஞ்சிக்கப்படுவதாக அடக்குமுறைக்கு உள்ளாக்கபடுவதாக அந்த காலத்து இளைஞர்கள் உணர்ந்தார்கள். 

இப்போ அந்த முறைதான் பல்வேறு மாணவர்கள் மேற்படிப்பை தொடர உதவுகிறது என்றாலும் இந்த முறையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். (பொருளாதார இட ஒதுக்கீடு, நகரத்திலிருந்தான தூரம் என்பனவும் கணிப்பிடப்படவேண்டும்.)

அனலைதீவும் யாழ் பருத்தித்துறை நகரமும் ஒன்றல்ல. முழங்காவில்  நாச்சிக்குடாவும்  கிளிநோச்சி வட்டக்கச்சி மல்லாவியும் ஒன்றல்ல.

தரப்படுத்தல் - என் பார்வை

தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும்.

தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், பொலிசில் இப்படி பல இடங்களில் தமிழர்கள் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால உள்நோக்கம் சிங்கள பொது கூட்டுக்கு இருந்தது. அநகாரிக தர்மபால போன்றோர் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே இதை பற்றி பேச தொடங்கி விட்டார்கள். 

ஒரு காலத்தில் இருந்த தரப்படுத்தலுக்கும் இப்போ இருக்கும் தரப்படுத்தலுக்கும் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படை ஒன்றுதான்.

இந்தியாவில் தரப்படுத்தல் சாதிவாரி இட ஒதுக்கீடு என்று உள்ளது. அது பிராமணர்கள் காலாகாலமாக பெற்ற அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களை சுதந்திரத்தின் பின் ஏனைய சாதிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. 

இலங்கையில் அதுவே மாவட்ட ரீதியாக இருக்கிறது.

இதில் இந்தியாவில் ஏழை பிராமணன் பாதிக்கபடுகிறான். அதே போல் யாழ் மாவட்டத்தில் வருவதால், யாழ்-வன்னியின் எல்லையில் செம்பியன்பற்றில் வாழும் ஒரு ஏழை மாணவனும் பாதிக்க படுகிறான்.

ஆனால் தரப்படுத்தலை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்தால் - அது மேலும் குளறுபடி, களவுகளுக்கே வழி கோலும் (வாழ் நாள் முழுவதும் யாழில் படித்து விட்டு, ஓ எல், ஏ எல் சோதனையை மட்டும் மன்னாரில் எடுப்பது போல்). 

நாம் யாரும் இந்திய பிராமணர்கள் இல்லை. எனவே 1947 இல் இருந்த பிராமண ஆதிக்கத்தை சமன் செய்ய ஏற்படுத்தபட்ட இட ஒதுக்கீட்டை நாம் பக்க சார்பின்றி அணுகுவதால் - அதன் நியாயம் எமக்கு இலகுவில் புரிகிறது.

ஆனால் இதே போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக அதிகமான வளமான பதவிகளில், இடங்களில்தான் 1948இல் நாம் இருந்தோம். இங்கே தமிழர் என்று பொதுவாக கூறினாலும் அது யாழ் தமிழரையே சேரும்.

சிறுபான்மை ஒன்று, தனது எண்ணிக்கைக்கு பலமடக்கு விகிதாசரத்தில் கூடிய பெரும்பான்மை இடங்களை, பதவிகளை, வளங்களை அனுபவிப்பது என்பது ஒரு நியாயமான நிலை அல்ல.

இதை சமன் செய்ய இந்தியாவில், தென்னாபிரிக்காவில் எங்கும் இந்த கோட்டா முறை நடைமுறையில் உள்ளது.

1948 இல் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தத்துவத்தை எமது அரசியல் தலைமைகள் ஏற்று கொண்ட பின் (அதன் காரணங்களை பின்பு ஆராயலாம்) ஒன்று பட்ட இலங்கைக்குள் யாழ் தமிழர் தொடர்ந்தும் தம் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் கல்வியில், ஏனையவற்றில் தொடர்ந்தும் கோலோச்ச முடியும் என எதிர்பார்த்தது நடைமுறை சாத்தியம் இல்லாதது.

இதை நிச்சயமாக சிங்கள பொதுக்கூட்டு இனவாத கண்ணோட்டத்தில்தான் முன்னெடுத்தது.

ஆனால் இதன் பின்னால் உள்ள நியாயத்தையும், இதை தடுக்க முடியாது என்பதையும் எமது தலைமைகள் கண்டு கொள்ள தவறி விட்டன.

தமிழ் தலைமகள் எப்போதும் proactive ஆக எதையும் செய்வது அரிது. ஒரு விடயத்தில் நாம் proactive ஆக செயல்படும் போது, அந்த விடயத்தின் agenda setting ஐ நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

ஆனால் நாம் எப்போதும் சிங்கள பொதுகூட்டு ஒரு விடயத்தை செய்த பின் react பண்ணுவதே வழமை. அப்போ அவர்கள் போட்ட அஜெண்டாவில்தான் விடயம் நகரும். 

தரப்படுத்தலில் பல நல்ல விடயங்கள் யாழ் அல்லாத தமிழருக்கு நடந்தது. இப்போ ஒவ்வொரு வருடமும் மட்டகளப்பில் ஓ எல் சோதனை செய்த 10 மாணவர்கள் டொக்டர் ஆகிறார்கள். இதை தரப்படுத்தலுக்கு முன்னான நிலையுடன் ஒப்பிடுங்கள். அது மட்டும் அல்ல மருத்துவராக தேவைப்படும்  புள்ளிகள் அடிப்படையில் ஒரு காலத்தில் மிக இலகு என்ற நிலையில் இருந்த மட்டகளப்பு இப்போ, யாழ், கொழும்பு, காலிக்கு நிகராக வந்து விட்டது. உலகெங்கும் கோட்டா சிஸ்டம் அடைய விழைவது இந்த பெறுபேறைத்தான். கொழும்பின் நிலைக்கு மட்டகளப்பை உயர்த்துவது அல்லது உயர்த்த முனைவது.

இந்த யதார்தத்தை புரிந்து கொண்டு, முடிந்தளவு எமது பங்கை உறுதி செய்யும் திரை மறைவு நகர்வுகள் எதையும் எம் தலைவர்கள் செய்யவில்லை.

இந்த தவிர்க முடியாத யதார்த்தை எமது மக்களுக்கு புரியவைக்கவில்லை.  

அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று பேசவே இல்லை.

சரி இந்த வாய்புகளை இழந்தால், வேறு வகையில் இவற்றை ஈடு செய்ய முடியுமா என சிந்திக்கவில்லை.

சரி இதை எப்படி அணுகி இருக்கலாம்?

 இப்போ இருப்பதை போல், 30 ஆண்டுகால போரின் பிந்திய நிலை அல்ல அன்று. போர்கால சமநிலையும் அன்று இல்லை.

அன்றைய தமிழ் தலைவர்கள் அரசோடு டீல் போட பெரிய தடைகள் ஏதும் இருக்கவில்லை. தேவைபடும் போது போட்டார்கள்.

ஆனால் பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று பெரும் எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை இனவாதிகள் கிழிக்க வைப்பார்கள் என்பதை ஊகித்து, திரைமறைவில் சில டீல்களை போட்டிருக்கலாம். 

பின்னாளில் தொண்டைமானும், அஷ்ரப்பும் இதைதான் செய்து காட்டினார்கள். 

ஆனால் நாம் செய்தது முழுக்க முழுக்க வோட்டரசியல். உணர்சிப் பேச்சு. இரத்தப்பொட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம்.

இதை கூட உண்மையாக செய்யவில்லை என்பதுதான் ஆக பெரிய கொடுமை.

தனி நாடு சாத்தியமோ இல்லையோ தலைவர் அதற்கு முழு மனதோடு தன்னை அர்பணித்து போராடினார்.

ஆனால் இவர்களுக்கு தனிநாட்டை எப்படி அடைவது என்ற ஐடியாவே இல்லை. வெறும் வாயால் வடை மட்டுமே சுட்டார்கள். தனிநாட்டுக்கு ஒரு துரும்பைதானும் தூக்கி போடவும் இல்லை. முழுக்க முழுக்க வோட்டு அரசியல் மட்டுமே குறி.

கற்ற பாடங்கள் என நான் காண்பன

1. சிங்களவர்கள், முஸ்லீம்கள் போல் எமக்கும் ஒரு பொதுகூட்டு தேவை (இப்போ இது இல்லை).

2. நாம் proactive அரசியல் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும்.

3. வரலாற்றின் போக்குக்கு குறுக்கே நின்று ஒரு சிறுபான்மை அணை கட்ட முடியாது. 

4. எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து, எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறல் வேண்டும். உணர்சி வசப்படுத்தல் அறவே ஆகாது.

5. சிங்கள தலைவர்களோடு டீல் பேசும் போது இரெண்டு விடயங்களை கருத வேண்டும்.

அ. நாம் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் - வாக்குகள், மாலை மரியாதை -எதுவாகிலும்.

ஆ. பெரிய எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை சிங்களவர்கள் குழப்பி அடிப்பது நிச்சயம். ஆகவே தொண்டா பிரஜா உரிமை விடயத்தில் சாதித்தது போல, அஷ்ரப் ஒலுவில் துறைமுகம் இதர திட்டங்களில் சாதித்தது போல ஒரு அணுகுமுறை தேவை.

6. இந்த அணுகுமுறையை தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் சேராமலே செய்ய வேண்டும். பொறுப்பான எதிர்கட்சியாக எல்லாம் அவர்கள் செயல்பட தேவை இல்லை. தமிழ் தேசிய அரசியலை நீர்த்து விடாமல் பேணுவது அதே சமயம் மக்கள் நலனின் பால்பட்டு சில டீல் களை செய்வது. இவர்கள் இந்த அணுகுமுறையை எடுக்க தவறினால் அந்த வெற்றிடத்தை இன்னும் பல அங்கஜன்கள் நிரப்புவார்கள்.

பிகு: இந்த பாடங்கள் போருக்கு பிந்தியவர்களுக்கே, போர்காலத்தில் இருந்த சமநிலை வேறு.

  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நன்றி சகோ

தரைப்படுத்தல் சார்ந்து உங்கள் நீண்ட நேரத்திற்கு

இன்றைய தலைமுறையினரின் இது சார்ந்த கேள்விக்கு பதில் சொல்வது கடினமாக இருக்கிறது. இன்று அவர்களுக்கு அரசின் செயல் சரியாகவே படுகிறது.

போருக்கு பின்னான காலத்தில் எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் எனது எதிர்பார்ப்பு அபிவிருத்தி மட்டுமே.

சம்பந்தரில் இருந்து விக்கி வரை கோட்டை விட்ட கோபம் தான் அவர்களுக்கு எதிராக எனது கருத்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள்.

Edited by விசுகு
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரை போராட்டம் என்பது தமிழ் அரசியற் கட்சிகளின் உசுப்பேத்தலினால் தான் ஆரம்பிக்கப்பட்டது ...அவர்கள் தம்மை ,தங்கள் கட்சியை வளர்த்து கொள்ள இவர்களை பலி கடாவாக்கினார்கள் .... இது இந்தளவிற்கு வரும் என்று  அவர்களே எதிர் பார்த்து இருக்க  மாட்டார்கள்...ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் பேச்சை கேட்டதால் வந்த வினை.
இதற்காக  அந்த காலத்தில் அநியாயமே செய்யவில்லை என்று சொல்லவில்லை ...அவர்கள் பெரும்பான்மை. அதைக் காட்டுவதற்கு ,தமிழர்கள் எந்த விதத்திலும் தம்மை விட முன்னேறி விட கூடாது என்பதற்காய் அநியாயம் செய்தார்கள் ...சிங்கள அரசியற் கட்சிகளும்,பிக்குகளும் தூபம் போட்டனர்.
தமிழ் அரசியற் கட்சிகள்  நினைத்திருந்தால் இதை சமூகமாய் கையாண்டு இருக்கலாம் .
முஸ்லீம் கட்சிகளால் முடியும் போது ஏன் தமிழ் கட்சிக்கலால் முடியாமற் போனது 
 
19 hours ago, goshan_che said:

தரப்படுத்தல் - என் பார்வை

தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும்.

தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், பொலிசில் இப்படி பல இடங்களில் தமிழர்கள் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால உள்நோக்கம் சிங்கள பொது கூட்டுக்கு இருந்தது. அநகாரிக தர்மபால போன்றோர் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே இதை பற்றி பேச தொடங்கி விட்டார்கள். 

ஒரு காலத்தில் இருந்த தரப்படுத்தலுக்கும் இப்போ இருக்கும் தரப்படுத்தலுக்கும் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படை ஒன்றுதான்.

இந்தியாவில் தரப்படுத்தல் சாதிவாரி இட ஒதுக்கீடு என்று உள்ளது. அது பிராமணர்கள் காலாகாலமாக பெற்ற அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களை சுதந்திரத்தின் பின் ஏனைய சாதிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. 

இலங்கையில் அதுவே மாவட்ட ரீதியாக இருக்கிறது.

இதில் இந்தியாவில் ஏழை பிராமணன் பாதிக்கபடுகிறான். அதே போல் யாழ் மாவட்டத்தில் வருவதால், யாழ்-வன்னியின் எல்லையில் செம்பியன்பற்றில் வாழும் ஒரு ஏழை மாணவனும் பாதிக்க படுகிறான்.

ஆனால் தரப்படுத்தலை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்தால் - அது மேலும் குளறுபடி, களவுகளுக்கே வழி கோலும் (வாழ் நாள் முழுவதும் யாழில் படித்து விட்டு, ஓ எல், ஏ எல் சோதனையை மட்டும் மன்னாரில் எடுப்பது போல்). 

நாம் யாரும் இந்திய பிராமணர்கள் இல்லை. எனவே 1947 இல் இருந்த பிராமண ஆதிக்கத்தை சமன் செய்ய ஏற்படுத்தபட்ட இட ஒதுக்கீட்டை நாம் பக்க சார்பின்றி அணுகுவதால் - அதன் நியாயம் எமக்கு இலகுவில் புரிகிறது.

ஆனால் இதே போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக அதிகமான வளமான பதவிகளில், இடங்களில்தான் 1948இல் நாம் இருந்தோம். இங்கே தமிழர் என்று பொதுவாக கூறினாலும் அது யாழ் தமிழரையே சேரும்.

சிறுபான்மை ஒன்று, தனது எண்ணிக்கைக்கு பலமடக்கு விகிதாசரத்தில் கூடிய பெரும்பான்மை இடங்களை, பதவிகளை, வளங்களை அனுபவிப்பது என்பது ஒரு நியாயமான நிலை அல்ல.

இதை சமன் செய்ய இந்தியாவில், தென்னாபிரிக்காவில் எங்கும் இந்த கோட்டா முறை நடைமுறையில் உள்ளது.

1948 இல் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தத்துவத்தை எமது அரசியல் தலைமைகள் ஏற்று கொண்ட பின் (அதன் காரணங்களை பின்பு ஆராயலாம்) ஒன்று பட்ட இலங்கைக்குள் யாழ் தமிழர் தொடர்ந்தும் தம் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் கல்வியில், ஏனையவற்றில் தொடர்ந்தும் கோலோச்ச முடியும் என எதிர்பார்த்தது நடைமுறை சாத்தியம் இல்லாதது.

இதை நிச்சயமாக சிங்கள பொதுக்கூட்டு இனவாத கண்ணோட்டத்தில்தான் முன்னெடுத்தது.

ஆனால் இதன் பின்னால் உள்ள நியாயத்தையும், இதை தடுக்க முடியாது என்பதையும் எமது தலைமைகள் கண்டு கொள்ள தவறி விட்டன.

தமிழ் தலைமகள் எப்போதும் proactive ஆக எதையும் செய்வது அரிது. ஒரு விடயத்தில் நாம் proactive ஆக செயல்படும் போது, அந்த விடயத்தின் agenda setting ஐ நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

ஆனால் நாம் எப்போதும் சிங்கள பொதுகூட்டு ஒரு விடயத்தை செய்த பின் react பண்ணுவதே வழமை. அப்போ அவர்கள் போட்ட அஜெண்டாவில்தான் விடயம் நகரும். 

தரப்படுத்தலில் பல நல்ல விடயங்கள் யாழ் அல்லாத தமிழருக்கு நடந்தது. இப்போ ஒவ்வொரு வருடமும் மட்டகளப்பில் ஓ எல் சோதனை செய்த 10 மாணவர்கள் டொக்டர் ஆகிறார்கள். இதை தரப்படுத்தலுக்கு முன்னான நிலையுடன் ஒப்பிடுங்கள். அது மட்டும் அல்ல மருத்துவராக தேவைப்படும்  புள்ளிகள் அடிப்படையில் ஒரு காலத்தில் மிக இலகு என்ற நிலையில் இருந்த மட்டகளப்பு இப்போ, யாழ், கொழும்பு, காலிக்கு நிகராக வந்து விட்டது. உலகெங்கும் கோட்டா சிஸ்டம் அடைய விழைவது இந்த பெறுபேறைத்தான். கொழும்பின் நிலைக்கு மட்டகளப்பை உயர்த்துவது அல்லது உயர்த்த முனைவது.

இந்த யதார்தத்தை புரிந்து கொண்டு, முடிந்தளவு எமது பங்கை உறுதி செய்யும் திரை மறைவு நகர்வுகள் எதையும் எம் தலைவர்கள் செய்யவில்லை.

இந்த தவிர்க முடியாத யதார்த்தை எமது மக்களுக்கு புரியவைக்கவில்லை.  

அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று பேசவே இல்லை.

சரி இந்த வாய்புகளை இழந்தால், வேறு வகையில் இவற்றை ஈடு செய்ய முடியுமா என சிந்திக்கவில்லை.

சரி இதை எப்படி அணுகி இருக்கலாம்?

 இப்போ இருப்பதை போல், 30 ஆண்டுகால போரின் பிந்திய நிலை அல்ல அன்று. போர்கால சமநிலையும் அன்று இல்லை.

அன்றைய தமிழ் தலைவர்கள் அரசோடு டீல் போட பெரிய தடைகள் ஏதும் இருக்கவில்லை. தேவைபடும் போது போட்டார்கள்.

ஆனால் பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று பெரும் எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை இனவாதிகள் கிழிக்க வைப்பார்கள் என்பதை ஊகித்து, திரைமறைவில் சில டீல்களை போட்டிருக்கலாம். 

பின்னாளில் தொண்டைமானும், அஷ்ரப்பும் இதைதான் செய்து காட்டினார்கள். 

ஆனால் நாம் செய்தது முழுக்க முழுக்க வோட்டரசியல். உணர்சிப் பேச்சு. இரத்தப்பொட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம்.

இதை கூட உண்மையாக செய்யவில்லை என்பதுதான் ஆக பெரிய கொடுமை.

தனி நாடு சாத்தியமோ இல்லையோ தலைவர் அதற்கு முழு மனதோடு தன்னை அர்பணித்து போராடினார்.

ஆனால் இவர்களுக்கு தனிநாட்டை எப்படி அடைவது என்ற ஐடியாவே இல்லை. வெறும் வாயால் வடை மட்டுமே சுட்டார்கள். தனிநாட்டுக்கு ஒரு துரும்பைதானும் தூக்கி போடவும் இல்லை. முழுக்க முழுக்க வோட்டு அரசியல் மட்டுமே குறி.

கற்ற பாடங்கள் என நான் காண்பன

1. சிங்களவர்கள், முஸ்லீம்கள் போல் எமக்கும் ஒரு பொதுகூட்டு தேவை (இப்போ இது இல்லை).

2. நாம் proactive அரசியல் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும்.

3. வரலாற்றின் போக்குக்கு குறுக்கே நின்று ஒரு சிறுபான்மை அணை கட்ட முடியாது. 

4. எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து, எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறல் வேண்டும். உணர்சி வசப்படுத்தல் அறவே ஆகாது.

5. சிங்கள தலைவர்களோடு டீல் பேசும் போது இரெண்டு விடயங்களை கருத வேண்டும்.

அ. நாம் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் - வாக்குகள், மாலை மரியாதை -எதுவாகிலும்.

ஆ. பெரிய எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை சிங்களவர்கள் குழப்பி அடிப்பது நிச்சயம். ஆகவே தொண்டா பிரஜா உரிமை விடயத்தில் சாதித்தது போல, அஷ்ரப் ஒலுவில் துறைமுகம் இதர திட்டங்களில் சாதித்தது போல ஒரு அணுகுமுறை தேவை.

6. இந்த அணுகுமுறையை தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் சேராமலே செய்ய வேண்டும். பொறுப்பான எதிர்கட்சியாக எல்லாம் அவர்கள் செயல்பட தேவை இல்லை. தமிழ் தேசிய அரசியலை நீர்த்து விடாமல் பேணுவது அதே சமயம் மக்கள் நலனின் பால்பட்டு சில டீல் களை செய்வது. இவர்கள் இந்த அணுகுமுறையை எடுக்க தவறினால் அந்த வெற்றிடத்தை இன்னும் பல அங்கஜன்கள் நிரப்புவார்கள்.

பிகு: இந்த பாடங்கள் போருக்கு பிந்தியவர்களுக்கே, போர்காலத்தில் இருந்த சமநிலை வேறு.

தமிழர்களுக்கு பொதுக் கூட்டு தேவை தற்போது அது இல்லை என்று எழுதியுள்ளீர்கள்...முந்தி இருந்ததா?
புலிகளால் முழு தமிழரையும் ஒன்றிணைக்க முடிந்ததா?
முஸ்லிம்களை தவிர்த்து பார்த்தால் கூட புலிகளால் தமிழரை ஒன்றிணைக்க முடியவில்லை .
அப்படி ஒன்றிணைந்தால் மு.வாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரால் தமிழரை ஓரணியில் சேர்த்துவைத்திருக்க முடியவில்லையென்பது உண்மைதான். ஏனென்றால், அவர் தான் பிள்ளைபோல வளர்த்தவர்களே பணத்திற்காகவும் தமது குற்றங்களை மறைக்கவும் பிரதேசவாதம் எனும் போர்வைக்குள் மறைத்து எதிரியுடன் சேர்ந்து முள்ளிவாய்க்கால்வரை தமிழரை வந்து அழித்தபோது தலைவரால் தமிழர்களை சேர்க்கமுடியாமல்ப் போய்விட்டது என்பது தெளிவாகவே தெரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2021 at 17:10, ரதி said:

தமிழர்களுக்கு பொதுக் கூட்டு தேவை தற்போது அது இல்லை என்று எழுதியுள்ளீர்கள்...முந்தி இருந்ததா?
புலிகளால் முழு தமிழரையும் ஒன்றிணைக்க முடிந்ததா?
முஸ்லிம்களை தவிர்த்து பார்த்தால் கூட புலிகளால் தமிழரை ஒன்றிணைக்க முடியவில்லை .
அப்படி ஒன்றிணைந்தால் மு.வாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது.

ஆரம்பகாலத்தில் இயக்கங்களை தடை செய்ததில், கையாண்ட முறையில் புலிகள் தவறு செய்தார்கள் என்பது உண்மையே. 

ஆனால் அந்த பிழைகளில் இருந்து அவர்கள் பாடம் படித்தார்கள் என்றும் படுகிறது.

அவர்கள் கூட்டமைப்பு என்ற ஒற்றை புள்ளியில் பல முன்னாள் எதிரிகளை உள்வாங்கியது - அவர்கள் பாடம் படித்தார்கள் என்பதை காட்டுவதாகவே நான் கருதுகிறேன்.

தமிழர்கள் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு பிரக்ஞையுடன் செயல்பட்ட காலம் என்றால் கூட்டமைப்பு புலிகளின் வழிகாட்டலுக்கு போனதில் இருந்து 2009 வரைதான்.

ஆனால் ஒரு கை மட்டும் தட்டி ஓசை எழாது.

கடைசி வரை அவர்களால் புளொட்டையோ,  ஈபிடிபியையோ, தமவிபுவையோ ஓரணியில் முடியாவிட்டாலும், ஒத்த அரசியல் கோரிக்கையின் கீழாவது கொண்டு வர இயலவில்லை.

இது இயலாமல் போனதுக்கு புலிகள் ஒரு காரணம்தான்.

ஆனால் அதே அளவு காரணம் இந்த இயக்கங்களின் தலைமைகள் மீதும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இனத்துக்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்பதை விட, புலிகள் அழிந்தொழிய வேண்டும் என்பதே முக்கியமாக இருந்தது.

இதில் கற்க கூடிய பாடங்கள் என்ன?

புலிகள் காலத்தில் தமிழர் பொதுக் கூட்டு 75% தான் சாத்தியமானது.

மிகுதி 25% சாத்தியம் ஆகாமல் ஏன் போனது?

முஸ்லீம் அரசியல்வாதிகள், சிங்கள அரசியல்வாதிகள் எந்த கட்சியாயினும் இனம் சம்பந்த பட்டு ஓரணியில் திரள்வது போல் நம்மால் ஏன் திரள முடியவில்லை?

தனியே சுயநலம் மட்டும் இதன் காரணம் இல்லை. எல்லா இனத்திலும் அரசியல்வாதிகள் சுய நலமிகள்தான்.

இந்த கேள்விகளுக்கு விடை காணும் போது 100% க்கு அண்மித்த ஒரு தமிழ் பொது கூட்டை கொள்கை அளவில் ஸ்தாபிக்க கூடியதாக வரக்கூடும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

புலிகள் , கூட்டமைப்பில் எல்லா இயக்கங்களையும் இணைத்திருந்தார்கள் தான் ...அது எல்லாரையும் ஒரு குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்கான அரசியல் மாற்றம் தான் .ஒத்துக் கொள்கிறேன்...ஆனால் தாங்களே நீதிபதியாக இருக்க வேண்டும் . மற்றவர்கள் தங்கள் கட்டளையின் கீழ் இயங்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள் ...எல்லாரும் இணைந்த தமிழ் மக்களுக்கான பொதுக் கூட்டு என்றால் எல்லோரும் தான் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் புலிகள் உட்பட .
அதை விட நான் சொல்ல வருவது சாதாரண பொது மக்களை பற்றியது ..போராட்டங்கள் தொடங்கிய போது எத்தனை பேர் தங்கட பிள்ளைகளை இயக்கங்களுக்கு போக சொல்லி அனுப்பினார்கள்?
படித்த ,நடுத்தர , வசதியானவர்கள் செய்தது முதலில் போராட்டத்தினை சாட்டி வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது தான் ....என்னுடைய கேள்வி இது தான் உண்மையிலேயே இவர்கள் சிங்களத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தால் இவர்கள் அல்லவா போராட போயிருக்க வேண்டும்... அல்லது இப்படியும் சொல்லலாம் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் அல்லது புலிகளது போராட்டம் சரி என்று நினைத்திருந்தால் கடைசி வரை நாட்டை விட்டு போயிருக்க மாட்டார்கள்.
அடுத்தது அங்கேயிருக்கின்ற பொது மக்கள் , அவர்கள்  புலிகளுக்கு  பயந்து தான் ஆதரவு கொடுத்தார்கள்...மு.வாய்க்கால் சண்டையின் போது ஆட் பற்றாக்குறையால் தவிர்த்த போதும் கூட தங்கட பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் ...அவர்களை பிழை சொல்லவில்லை .
உண்மையிலேயே உணர்ந்து இயக்கத்திற்கு  போனவர்கள் 5% கூட இருக்க மாட்டார்கள் ..அதுவும் போராட்டத்தின் தோல்விக்கு ஒரு காரணம் .
அடுத்தது இது கொஞ்ச ஹாஸ்ஆ  இருக்கும் அதுக்காக எழுதாமல் இருக்க முடியாது அல்ல்லவா...தலைவரால் தனது இயக்கத்து உறுப்பினர்களையே ஒரு குடைக்குள் ஒன்றிணைக்க முடியவில்லை..
உண்மையான போராட்டமாயிருந்தால் தோத்து இருக்க மாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

தலைவரால் தமிழரை ஓரணியில் சேர்த்துவைத்திருக்க முடியவில்லையென்பது உண்மைதான். ஏனென்றால், அவர் தான் பிள்ளைபோல வளர்த்தவர்களே பணத்திற்காகவும் தமது குற்றங்களை மறைக்கவும் பிரதேசவாதம் எனும் போர்வைக்குள் மறைத்து எதிரியுடன் சேர்ந்து முள்ளிவாய்க்கால்வரை தமிழரை வந்து அழித்தபோது தலைவரால் தமிழர்களை சேர்க்கமுடியாமல்ப் போய்விட்டது என்பது தெளிவாகவே தெரிந்தது.

ஓமோம் தலைவரோடு கூட இருந்தவர் சொல்றார் கேளுங்கோ...அடுத்தவனை நோக்கி  கையை நீட்டும் முன் உங்கட முதுகில் என்ன இருக்குது என்று பாருங்கோ .

உங்களை போன்றவர்களுக்கு இதை விட என்னால் எழுதேழும் ஆனால் இந்த திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரதி said:

ஆனால் தாங்களே நீதிபதியாக இருக்க வேண்டும் . மற்றவர்கள் தங்கள் கட்டளையின் கீழ் இயங்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள்

இதை ஏற்று கொள்கிறேன்.

43 minutes ago, ரதி said:

எல்லாரும் இணைந்த தமிழ் மக்களுக்கான பொதுக் கூட்டு என்றால் எல்லோரும் தான் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் புலிகள் உட்பட .

இதை மேலே சொல்லி உள்ளேன்.

ஆகவேதான் எல்லாரையும் ஒரு அணியில், ஒரு தலைமையின் கீழ் திரட்டுவது சாத்தியமில்லை என உணர்ந்து ஒரு பொது கூட்டை அமைத்தல் நாம் கற்கும் பாடமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இப்போ பாருங்கள் - எந்த கட்சியில் இருந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தம் இனத்தின் நலன், வளப்பகிர்வு சார்ந்து ஒத்த நிலைப்பாட்டுக்கு வருவார்கள். கல்முனை விசயம் நல்ல உதாரணம். அங்கே முஸ்லிம்கள் ஒரு தரப்புத்தான். அத்தனை பேரும் ஒருவரை ஒருவர் தாக்காமல் தமது கூட்டு நிலைப்பாட்டை முந்தள்ளுவர்.

 ஆனால் தமிழரில் சந்திரகாந்தன், வியாழேந்திரன், முரளிதரன், விக்னேஸ்வரன், கூட்டமைப்பு, சைக்கிள்…ஆளை ஆள் பழி போடுவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அணுகுமுறை.

ஆகவே எந்த அணியில் இருந்தாலும் சில அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை என்ற ஒரு பொது கூட்டு நிலையை நாம் அடைவது அவசியம்.

யுத்தகாலத்தில் இருந்தது போல் இப்போ இல்லை. உதாரணமாக அப்போ புலிகள் தனிநாட்டு கோரிக்கையிலும், ஈபிடிபி அதற்கு நேரெதிர் கோரிக்கையிலும் இருந்தார்கள். ஆகவே பொதுவில் உடன்படுவது விட்டு கொடுப்புகள் இல்லாமல் கடினம்.

ஆனால் இப்போ எல்லாரும் இலங்கைக்குள்தான் தீர்வு கேட்கிறார்கள். எனவே இது இப்போ இலகுவாக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

அதை விட நான் சொல்ல வருவது சாதாரண பொது மக்களை பற்றியது ..போராட்டங்கள் தொடங்கிய போது எத்தனை பேர் தங்கட பிள்ளைகளை இயக்கங்களுக்கு போக சொல்லி அனுப்பினார்கள்?
படித்த ,நடுத்தர , வசதியானவர்கள் செய்தது முதலில் போராட்டத்தினை சாட்டி வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது தான் ....என்னுடைய கேள்வி இது தான் உண்மையிலேயே இவர்கள் சிங்களத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தால் இவர்கள் அல்லவா போராட போயிருக்க வேண்டும்... அல்லது இப்படியும் சொல்லலாம் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் அல்லது புலிகளது போராட்டம் சரி என்று நினைத்திருந்தால் கடைசி வரை நாட்டை விட்டு போயிருக்க மாட்டார்கள்.
அடுத்தது அங்கேயிருக்கின்ற பொது மக்கள் , அவர்கள்  புலிகளுக்கு  பயந்து தான் ஆதரவு கொடுத்தார்கள்...மு.வாய்க்கால் சண்டையின் போது ஆட் பற்றாக்குறையால் தவிர்த்த போதும் கூட தங்கட பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் ...அவர்களை பிழை சொல்லவில்லை .
உண்மையிலேயே உணர்ந்து இயக்கத்திற்கு  போனவர்கள் 5% கூட இருக்க மாட்டார்கள் ..அதுவும் போராட்டத்தின் தோல்விக்கு ஒரு காரணம் .

2005க்கு பின்னான வன்னி நிலமைகள் (கல்யாணம் செய்து வைத்தல்) நீங்கள் சொல்வதை போல இருந்தாலும் அதை மட்டும் வைத்து 30 வருட கால போராட்டத்தை எடை போட முடியாது.

ஆனால் போராட்டம் மக்கள் மயப்படவில்லை என்பதை நான் ஏற்கிறேன்.  83-86 இல் போராட தயராக ஆயிரகணக்கில் ஆட்கள் இருந்தார்கள். புலிகள் கடும் கேள்விகளுக்கு பின்பே ஆட்களை தேர்ந்து இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் பின்னாட்களில் அது அவர்களே பாஸ் நடைமுறை கொண்டு வரும் அளவுக்கு, அதன் பின் இன்னும் கட்டாய ஆட் சேர்புக்கு போகும் அளவுக்கு மாறி விட்டிருந்தது.

இங்கே என்ன பிரச்சனை என்றால் ஒரு இலட்சிய வேட்கை கொண்ட தலைமை, அதே அளவு வேட்கை இல்லாத மக்களை வழி நடத்தியதுதான். 

அதற்காக மக்களை முழுதாக பிழை சொல்ல முடியாது. 30 வருடமாக பல இன்னல்களை தாண்டி போராட்டம் மக்கள் ஆதரவு இன்றி நிலைக்கவில்லை. போருக்கு பின்னும் கூட தேர்தல்களில் மக்கள் மாற்றி யோசிக்க 10 வருடம் எடுத்தது.

ஆனால் மக்களால் ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. எமது மக்கள் ஆப்கானிகள் அல்ல. முடிவில்லாமல் நீளும் யுத்தம், நிச்சயம் இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்றே யோசிக்க வைத்தது. 

நிச்சயமாக இதை கணிக்க தவறியது பிழைதான். 

இனி நாம் யாரும் படை திரட்ட போவது இல்லை. போராடவும் போவது இல்லை. 

ஆனால் இதில் ஒரு பெரிய பாடம் இருக்கிறது. முன்பு யாழில் சிலர் எழுதினார்கள்,  பலஸ்தீனம் போல் ஊரில் ஒரு இண்டிபாடா கிளர்சியை செய்யலாம் என. நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு தரப்போவதில்லை.

போராடுவதற்குரிய சுந்தந்திர சூழல் ஒரு போதும் தமிழருக்கு இலங்கையில் இருந்ததில்லை. ஆனால் அதற்கும் மேலாக இப்போ மக்கள் ஆக கூடியது P2P, தூபி இடிப்பை எதிர்த்தல், காணாமல் போனோர் போராட்டம் இந்தளவு போராடத்தான் தயார்.

ஆகவே எமது மக்களிடம் அதிகம் தியாகங்களை இனியும் எதிர்பார்க்காமல், உரிமைக்கான அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பதையே சிந்திக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அடுத்தது இது கொஞ்ச ஹாஸ்ஆ  இருக்கும் அதுக்காக எழுதாமல் இருக்க முடியாது அல்ல்லவா...தலைவரால் தனது இயக்கத்து உறுப்பினர்களையே ஒரு குடைக்குள் ஒன்றிணைக்க முடியவில்லை..
உண்மையான போராட்டமாயிருந்தால் தோத்து இருக்க மாட்டோம்.

ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை என்று நான் நினைப்பதை மேலே சொல்லியுள்ளேன். ஆனால் போராட்டம் தோற்று போனது என்பதற்காக அது உண்மையான போராட்டம் இல்லை என்றாகாது.

போராட்டம் உண்மையானதுதான், அதனை மேற்கொண்ட விதத்தில் (தனியே புலிகள் மட்டும் அல்ல), மாறி வரும் புறச்சூழலை கணித்து நகர தவறியதில், அதி கூடிய கொள்கை இறுக்க நிலையில் இருந்ததில் விமர்சனங்கள் வைக்கலாம் - ஆனால் போராட்டத்தின் நியாப்பாடு நிதர்சனமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் உங்கள் இந்த கருத்தோடு  முரண்படுகிறேன் ...முடிந்தால் தெளிவு படுத்துங்கள் ...சிங்களவருக்கெதிரான எமது போராடடம் முற்று ,முழுதாய் உணர்ச்சி  வேகத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இயங்கியது ..ஆரம்ப காலங்களில் சிங்களவர்கள் அநியாயம் செய்து இருந்தாலும் அதை தமிழர் தரப்பு சுமுகமாய் கையாண்டு இருக்கலாம் .
எமது போராட்டம் நியாயமாய் இருந்திருந்தால், ஏன் சர்வதேசத்தை ஈர்க்கவில்லை[சர்வதேசம் தமது நலன் சார்ந்து தான் செயற்படும் என்றாலும் , திரும்பியே பார்க்காத அளவிற்கு இருந்ததற்கு என்ன காரணம் ?] 
அல்லது நாங்கள் தான் சர்வதேசம் கொடுத்த சான்சை தவற விட்டுட்டோமா?
எனக்கு நினைவு இருக்குது நான் யாழில் இணைந்த புதிசில் "நாம் ஏன் தமிழீழம்  கேக்கிறோம்£ என்று ஒரு திரி ஆரம்பித்தேன் ...எல்லோரும் திட்டித் தீத்தார்கள்...அதையே நான் உங்களிடம் கேட்க்கிறேன்.
நான் புலிகளை மட்டும் குறை சொல்லவில்லை ..போராட்டம் என்ற ஒன்று ஆரம்பித்ததே பிழை என்பது தான் என் கருத்து ...அதற்காய் சிங்களவர்களுக்கு  அடங்கி இருக்க சொல்லவில்லை ...முஸ்லீம் தரப்பு கையாளுகின்ற மாதிரி தமிழரும் கையாண்டு இருக்கலாம் என்பது தான் எனது ஆதங்கம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

போராட்டம் உணர்சி வசப்பட்டதால், படுத்தியதால் ஏற்பட்டது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன்.

1. உணர்சிவசப்படுதல் வேறு, உணர்வு உந்தல் வேறு.  உணர்வில்லாதவன் ஏன் போராடப்போகிறான்? ஆகவே எல்லா போராட்டமும் உணர்வின் அடிப்படையிலேயே எழுகிறது.

2. தொடர்சியான திட்டமிட்ட கலவரங்கள். இவற்றை கலவரங்கள் என்பதே பிழை. இரு குழுக்கள் அடிபட்டால்தான் கலவரம். ஒரு குழு இன்னொரு குழுவை அரச ஆதரவோடு தாக்குவது - வேட்டை. தொடர்ந்து ஆண்டுவிழா போல தமிழர்கள் வேட்டையாடப்படார்கள்.

3. திட்டமிட்ட குடியேற்றங்கள். தமிழர் நிலங்கள் கல்லோயா, மகாவலி என்று அபகரிக்கப்பட்டது.

4. மொழி வாரி அடக்குமுறை. சிங்களம் மட்டுமே தமிழர் பகுதிகளிலும் ஆட்சி மொழி என்பதன் மூலம், தமிழ் மட்டும் அல்லது தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்த பல்வேறு சமூக நிலைகளில் இருந்த தமிழரை ஒரிரவில் “எழுத்தறிவில்லாதவர்கள்” ஆக்கியது.

5. தமிழர் தாயகம் தவிர ஏனைய பகுதிகளில் தொழில் கூட செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியது.

6. ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற சோல்பெரி யாப்பு தந்த சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு சரத்தை 1ம் குடியரசு யாப்பு அகற்றியது.

7. சத்தியாகிரகங்கள் வன்முறை மூலம் கேலிக்கூத்தாக்கப்பட்டது. ஒப்பந்தங்கள் மீள, மீள கிழிக்கப்பட்டது.

இப்படி தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக, கெளரவம் குறைவதாக, அழித்தொழிக்க படப்போகிறோம் என்று அச்ச உணர்வு வருவதாகவே வட்டு கோட்டை தீர்மானத்துக்கு முந்திய காலம் இருந்தது.

தரப்படுத்தல் ஒன்றை தவிர போராட்டம் ஆரம்பிக்க கால்கோலிய அத்தனை காரணங்களிலும் தமிழர் பக்கம் 100% நியாயம் இருந்தது.

Survival instinct என்பார்கள். திருப்பி அடி, அல்லது அழிக்கப்படுவாய் என்ற உணர்வே அப்போ இருந்தது. 

அழியப்போகிறோம் என்ற நிலையில், அகிம்சை வழியில் ஏதும் செய்யமுடியாது என்ற நிலை வந்த பின்பே போது போராட்டம் எழுந்தது. 

மேலே சொன்னது போல கூட்டணி உணர்சிவசப்படுத்தியது உண்மை.

ஆனால் இயக்க தலைவர்கள் எவரும் இந்த உணர்சி வசத்தால் போராட வரவில்லை. 

நான் அறிந்தவரை தலைவரோ, ஏனைய இயக்க தலைவர்களோ உணர்சி வசப்படும் பேர்வழிகள் அல்ல. தவிரவும் வெகு விரைவிலேயே எல்லா இயக்க தலைமகளும் கூட்டணி உசுப்பேத்துவதை தவிர எதையும் செய்யாது என்பதை கண்டு, கூட்டணியின் உண்ணாவிரதத்தை கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியும் விட்டார்கள்.

மாணவர் பேரவை, தலைவர், தியாகி சிவகுமாரன் போன்றோர் தனியாக அல்லது சிறு குழுவுடன், புரட்சிகர சிந்தனையாளர்கள் இன்னொரு புறம் - தீர்க்கமான பார்வையோடுதான் போராட்டத்தை தொடங்கினார்கள்.

உசுப்பேத்தல், உணர்சி வசப்படுத்தல் நிச்சயம் இருந்தது.

ஆனால் போராட்டம் உருவாக பெரிதும் காரணமானது, அநியாயம் நடக்கிறது, போராடாவிட்டால் அழிந்து போவோம் என்ற பய/எச்சரிக்கை உணர்வுதான்

10 hours ago, ரதி said:

எமது போராட்டம் நியாயமாய் இருந்திருந்தால், ஏன் சர்வதேசத்தை ஈர்க்கவில்லை

இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது nothing less than genocide என்று பேசியுள்ளார்.

இந்தியா படைகளை அனுப்பியது.

இணை அனுசரனை நாடுகள் என ஜி7 இல் உள்ள பெரும்பாலான நாடுகள் கவனம் செலுத்தின. கொழும்பு வருபவர்கள் வன்னிக்கு போய் கை நனைக்காமல் திரும்பாத காலம் ஒன்று இருந்தது.

நோர்வே மத்தியஸ்தம் செய்தது.

தேவையான அளவு சர்வதேச கவனத்தை போராட்டம் ஈர்த்தது அதற்கு ஒரு காரணம் அதன் பின்னால் இருந்த நியாயம். 

10 hours ago, ரதி said:

அல்லது நாங்கள் தான் சர்வதேசம் கொடுத்த சான்சை தவற விட்டுட்டோமா?

ஓம்

எல்லாருக்கும் எந்த நேரமும் அடங்க மறுக்க கூடாது என்பதை நான் ஒரு பாடமாக கருதுகிறேன்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
    • வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுகின்றனர். அதேபோன்று தெற்கில் கூறுவதை கிழக்க்கிற்குச் சென்று கூறுவதில்லை. கிழக்கில் கூறுவதை கொழும்பில் கூறுவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும். ஆனால் அரசியல்வாதிகள் தற்போது வடக்கிற்கு சென்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தபொவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும். இது வாக்கு வேட்டையை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் செயலாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1388189
    • அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.