Jump to content

நாவூறும் சுவையில் ஒரு மாங்காய் கறி

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 .மாங்காய் சொதி வைப்பதுஎன்று தான் நினைத்தேன் இந்த கறியை பார்க்க மிகவும் உண்ண ஆவலாய் இருக்கிறது  மாங்காய் கிடைத்தால் செய்துபார்ப்பேன் . பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, நிலாமதி said:

 .மாங்காய் சொதி வைப்பதுஎன்று தான் நினைத்தேன் இந்த கறியை பார்க்க மிகவும் உண்ண ஆவலாய் இருக்கிறது  மாங்காய் கிடைத்தால் செய்துபார்ப்பேன் . பகிர்வுக்கு நன்றி

மாங்காய் ஊறுகாய் புகழ் ஆந்திராவில், புளி மாங்காய் தான் அதிகமாக வளர்கிறார்கள்.

Posted
21 minutes ago, நிலாமதி said:

 .மாங்காய் சொதி வைப்பதுஎன்று தான் நினைத்தேன் இந்த கறியை பார்க்க மிகவும் உண்ண ஆவலாய் இருக்கிறது  மாங்காய் கிடைத்தால் செய்துபார்ப்பேன் . பகிர்வுக்கு நன்றி

அக்கா நீங்கள் போனமுறை எந்த கருத்தும் இடவில்லை. உங்களிற்கு ஏதும் உடம்பு சரியில்லையோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். உங்களை மீண்டும் பார்த்ததில் சந்தோசம். செய்து பாருங்கள் அக்கா. எங்கள் வீட்டில் இந்த கறி மட்டும்தான் சட்டி வழித்து சாப்பிடுவோம். எல்லோருக்கும் பிடித்த கறி..

Posted
8 hours ago, Nathamuni said:

மாங்காய் ஊறுகாய் புகழ் ஆந்திராவில், புளி மாங்காய் தான் அதிகமாக வளர்கிறார்கள்.

மாங்காய் ஊறுகாயே தனிச்சுவை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பகிர்வுக்கு. செய்முறை இலகுவாக இருக்கு. செய்து பார்க்கனும்

சின்னவயதில் புளி மாங்காயை நல்லெண்ணயில் வதக்கிப்போட்டு சாப்பிடுவது வழக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றி..👍

Posted
4 hours ago, சுவைப்பிரியன் said:

பகிர்விற்கு நன்றி

நன்றி ஈழப்பிரியன்

14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றி..👍

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

21 hours ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு. செய்முறை இலகுவாக இருக்கு. செய்து பார்க்கனும்

சின்னவயதில் புளி மாங்காயை நல்லெண்ணயில் வதக்கிப்போட்டு சாப்பிடுவது வழக்கம்

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, nige said:

நன்றி ஈழப்பிரியன்

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றி 

இது ரொம்ப அனியாயம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, சுவைப்பிரியன் said:

இது ரொம்ப அனியாயம்.😂

ஓம் இது ரொம்ப அநியாயம்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

ஓம் இது ரொம்ப அநியாயம்......!  😂

ம்ம் இது நியாயம்.வயசும் போகுதல்லோ.பச்சை போட ஏலாதாம்.

Posted
On 26/9/2020 at 12:47, suvy said:

ஓம் இது ரொம்ப அநியாயம்......!  😂

புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் தமிழில் அதிகம் எழுதும் சந்தர்ப்பம் கடைக்காததால் ன, ந மற்றும் ள, ழ விற்கான மாறுபாட்டை மறந்து விட்டனர். இது தவிர்க்க முடியாததும் கூட. நான் ஒரு தமிழ் ஆசிரியர். ஆனால் எனக்கும்கூட இப்போது இந்த பிரச்சனை அடிக்கடி வருவதுண்டு. அப்பாவிடம் சிலநேரம் சந்தேகத்தில் கேட்டால் “உன்னை எல்லாம் யார்தான் தமிழ் ரீச்சராய் போட்டதோ தெரியாது ‘’ என்று சொல்லுவார். இதற்காகத்தான் நான் மீண்டும் யாழில் இணைந்திருக்கிறேன். ஏதாவது எழுதலாமென்று... இந்த பிழைகள் தவிர்க்க முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கையால் எழுதும்போது பிழைகள் வருவது குறைவு. கணனியில் தட்டச்சு செய்யும் போது பிழை வருவதை தவிர்க்க முடிவதில்லை. பிழை கவனிக்க முன் கை தானாக அனுப்பி விடுகிறது.....இது சுவைப்பிரியனுடன் ஒரு தனகல் அவ்வளவுதான்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/9/2020 at 20:32, நிலாமதி said:

 .மாங்காய் சொதி வைப்பதுஎன்று தான் நினைத்தேன் இந்த கறியை பார்க்க மிகவும் உண்ண ஆவலாய் இருக்கிறது  மாங்காய் கிடைத்தால் செய்துபார்ப்பேன் . பகிர்வுக்கு நன்றி

நான் ஊரில் இருக்கும் போது அடிக்கடி சாப்பிட்ட கறி இது.
அதிகம் புளியும் குந்தும் இல்லாத மாங்காய் என்றால் நல்லது.
உதாரணத்திற்கு பாண்டி மாங்காய்.

Posted
15 hours ago, suvy said:

கையால் எழுதும்போது பிழைகள் வருவது குறைவு. கணனியில் தட்டச்சு செய்யும் போது பிழை வருவதை தவிர்க்க முடிவதில்லை. பிழை கவனிக்க முன் கை தானாக அனுப்பி விடுகிறது.....இது சுவைப்பிரியனுடன் ஒரு தனகல் அவ்வளவுதான்.....!   😁

புரிகிறது..தனகல் கூட நட்பில் அழகுதான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.