Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபர் மகேசன் யார் தெரியுமா?? - Jvpnews

ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்!

தீபாவளி தினமாகிய நாளைய தினம்  பொது மக்கள் ஆலயங்களில்  ஒன்று கூட வேண்டாம்  என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும்  இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5  பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார் .

குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் ஏற்கனவே ஆலயங்களுக்குரிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் ஆலயங்களுக்கு  சென்று ஒன்றுகூடுவதை தவிர்த்து வீடுகளிலிருந்து அமைதியான முறையில் இவ்வருட  தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/ஆலயங்களில்-ஐந்து-பேருக்க/

டிஸ்கி:  பூசை செய்ய... மெயின் ஐயர் (1),  
அஸிஸ்ரன்ற்... குட்டி ஐயர் (2), 
கோயில் மணி... அடிப்பவர் (1), 
வடை, மோதகம்... சுடுபவர் (1) 

இப்பவே, கோயிலுக்குள்  ஐந்து பேர்...  நிற்கிறார்கள்.  
மிச்ச ஆட்கள் எல்லாரும், வீட்டிற்குப்  போய்... கும்பிடுங்கோ.... 🙏  :grin:

Edited by தமிழ் சிறி

  • Replies 65
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்!

இதைத்தானே சம்பந்தரும் சொன்னவர்.....! 😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஐயாவின் இந்தமுறை  வாழ்த்துச் செய்தியா.......?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

இதுதான் ஐயாவின் இந்தமுறை  வாழ்த்துச் செய்தியா.......?

அய்யா... கோமா, நிலையில் இருந்தாலும்... 
இந்தியா... என்று, காதுக்குள்,  சத்தமாக சொன்னால்.... 
அலறி,  அடித்துக் கொண்டு.... அதிரடியாக.. கிளம்பி வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல இறைவனுக்கே இந்தக் கொமையா😄

2 hours ago, தமிழ் சிறி said:

அய்யா... கோமா, நிலையில் இருந்தாலும்... 
இந்தியா... என்று, காதுக்குள்,  சத்தமாக சொன்னால்.... 
அலறி,  அடித்துக் கொண்டு.... அதிரடியாக.. கிளம்பி வருவார்.

என்ன சிறீ. கமலா அக்காவையும் அவரோவின்றை தமிழ் செயலாளரின்றை பெயரையும் சேர்த்து காதுக்குள் சொன்னால் இன்னும் கூட .எபெக்ட்  (effect)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் வல்ல இறைவனுக்கே இந்தக் கொமையா😄

கடவுள் இல்லை என்பவனால் இந்த உலகில் சாதித்தது என்ன?

மின்சாரம் கண்டு பிடித்தவன் தேவாலயம் செல்லவில்லை என்பதை உங்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

56 minutes ago, குமாரசாமி said:

கடவுள் இல்லை என்பவனால் இந்த உலகில் சாதித்தது என்ன?

மின்சாரம் கண்டு பிடித்தவன் தேவாலயம் செல்லவில்லை என்பதை உங்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

இந்த உலகில் 80000 வருடங்களாக மனிதன் வாழ்கிறான். மிக அண்மையில் 19 ம் நூற்றாண்டில் அவன் தனது சுய முயற்சியால் மின்சாரத்தை கண்டு பிடிக்கும்வரை, அதற்கு முதல் கடவுள் என்ற கற்பனையை கண்டு பிடித்த எந்த மதபோதகனுக்கோ, பஜனை பாடி மூட நம்பிக்கைகளை பரப்பிய மூடக்  கூட்டதுக்கோ மின்சாரத்தை பற்றி தெரியாது. மதம் என்ற மூடத்தனத்தை கண்டு பிடித்து அதை பரப்பாமல் விட்டிருந்தால்  இதற்கு  பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மின்சாரத்தை கண்டு பிடித்திருப்பான்.  அறிவியல் வளர்சியை தாமதப்படுத்தியது தான் மதத்தை பரம்பபிய  கும்பல் செய்த சாதனை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, tulpen said:

800000 ஆண்டு காலம் மின்சாரம் இல்லாமல் மனிதன் வாழ்ந்திருக்கின்றான். 👍🏽👍🏽👍🏽
அண்மையில் கேடு கெட்ட கண்டு பிடிப்புகளால் மனிதம் அழிவுப்பாதையை நோக்கியே செல்கின்றது.

அதிலும் வேற்று கிரகத்தில் நீர் காற்று இருக்கின்றதா என தேடும் அளவிற்கு.......

5 hours ago, குமாரசாமி said:

800000 ஆண்டு காலம் மின்சாரம் இல்லாமல் மனிதன் வாழ்ந்திருக்கின்றான். 👍🏽👍🏽👍🏽
அண்மையில் கேடு கெட்ட கண்டு பிடிப்புகளால் மனிதம் அழிவுப்பாதையை நோக்கியே செல்கின்றது.

அதிலும் வேற்று கிரகத்தில் நீர் காற்று இருக்கின்றதா என தேடும் அளவிற்கு.......

கேடு கெட்ட கண்டு பிடிப்பா? 😂😂முதல் அதை பெருமையா அடிச்சு விட்டதை அதுக்குள்ள மறந்திட்டீங்க.அடுத்தவன் கண்டு பிடிப்பை வைச்சு பெருமை அடிப்பது தான் மதக்கும்பலின் ஸ்ரைல்

யாழ் களத்தில் நீங்க பொழுது போக்க மின்சாரம் இல்லாமல் முடியாதே. அந்த கேடு கெட்ட கண்டு பிடிப்பை இனி  வாழ்கையில் உபயோகிகாதீங்க

***

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

கேடு கெட்ட கண்டு பிடிப்பா? 😂😂முதல் அதை பெருமையா அடிச்சு விட்டதை அதுக்குள்ள மறந்திட்டீங்க.அடுத்தவன் கண்டு பிடிப்பை வைச்சு பெருமை அடிப்பது தான் மதக்கும்பலின் ஸ்ரைல்

யாழ் களத்தில் நீங்க பொழுது போக்க மின்சாரம் இல்லாமல் முடியாதே. அந்த கேடு கெட்ட கண்டு பிடிப்பை இனி  வாழ்கையில் உபயோகிகாதீங்க

எதை வைத்து எதை மனிதன் கண்டு பிடித்தான்?
எல்லாம் இயற்கை தந்ததை வைத்துத்தான். அதை கண்டு  பிடிக்க ஆறறிவை கொடுத்ததும் அந்த கடவுள்/இயற்கை தான். எதற்கெடுத்தாலும் கண்டு பிடித்தோம் கண்டு பிடித்தோம் பினாத்தல். எதை வைத்து என்னத்தை கண்டு பிடித்தீர்கள் மிஸ்டர் துல்பன்?

ஐந்தறிவுள்ள ஏனைய உயிரினங்கள் விஞ்ஞானம் எதுவுமில்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோரோனா பயம் கூட இல்லை.

மின்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் மனிதன் கண்டு பிடித்தான். அதை  ஏன் விற்கின்றான் அந்த மனிதன். நான் மின்சாரம் பாவிக்கின்றேன். அதற்கு கட்டணம் செலுத்துகின்றேன். நான் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றேன். அதற்கு கட்டணம் செலுத்துகின்றேன். அதை கேட்க அல்லது உரிமை கொண்டாட யாருக்கும் அருகதை இல்லை.

நல்லகாலம்......காற்றையும் தண்ணீரையும் சூரிய ஒளியையும் இந்த இயற்கையையும் நாங்கள் தான் கண்டு பிடித்தோம் என்று சொல்லாத வரைக்கும் சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் விசேட வழிபாடு

IMG_1769-696x392.jpg
 25 Views

தீபத்திருநாள் தீபாவளியை இன்று இந்துக்கள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறையுடனும் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறையின் கீழும் நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

IMG_1825.jpg

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் குறைந்தளவு பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பூஜை வழிபாடுகளின்போது நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் அழியவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடையவும் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி வழிபட்டனர்.

IMG_1839.jpg

கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீப ஒழியில் நலம் பெற்று வீடுதிரும்ப வேண்டும் என அங்கு ஆசியுரை வழங்கிய ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தெரிவித்தார்.

https://www.ilakku.org/தீபாவளியை-முன்னிட்டு-மட்/

3 hours ago, குமாரசாமி said:

எதை வைத்து எதை மனிதன் கண்டு பிடித்தான்?
எல்லாம் இயற்கை தந்ததை வைத்துத்தான். அதை கண்டு  பிடிக்க ஆறறிவை கொடுத்ததும் அந்த கடவுள்/இயற்கை தான். எதற்கெடுத்தாலும் கண்டு பிடித்தோம் கண்டு பிடித்தோம் பினாத்தல். எதை வைத்து என்னத்தை கண்டு பிடித்தீர்கள் மிஸ்டர் துல்பன்?

ஐந்தறிவுள்ள ஏனைய உயிரினங்கள் விஞ்ஞானம் எதுவுமில்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோரோனா பயம் கூட இல்லை.

இயற்கை என்றால் அது  கடவுள் அல்ல. இயற்கை வேறு,  கடவுள் என்ற மூடத்தனமான மனிதக் கண்டுபிடிப்பு வேறு. இயற்கையைப் பற்றி எதுவும் தெரியாமல்  இயற்கைக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் நிலைதான்  கடவுள் என்று மூடத்தனமான  கண்டுபிடிப்பிற்கு  உள்ள பரிதாப நிலை. 

மனித அறிவியல்  வளர்சசி இயற்கையை  ஆரய்ந்து புதிய கண்டு பிடிப்புக்களை கண்டு பிடித்தது. அதற்கு முன் அறிவியல் வளர்சசி பெற முன் மனிதர்கள் இயற்கையை கண்டு அஞ்சி நடுங்கி கடவுள் என்ற concept ஐ கண்டு பிடித்து அதை பூஜை  பண்ணி நேரத்தை வீண்டித்தார்கள். 

இயற்கையை ஆராய்து  மனிதன் கண்டு பிடித்த கண்டு பிடிப்புக்களை கேடு கெட்ட கண்டு பிடிப்புக்கள் என்று கூறும் நீங்கள் இயற்கையை ஆராயாது பயத்தின் மிகுதியால் கண்டு பிடித்த மூடத்தனமான கண்டு பிடிப்பை போற்றுகின்றீர்கள். 

இயற்கையை அதன் இயங்கு விதிகளை ஆராய்ந்து கண்டு பிடிப்புக்களை மேற்கொள்ள அறிவு தேவை. இயற்கையை கண்டு அஞ்சி கடவுளை கண்டு பிடிக்க அறிவு தேவையுல்லை. ஆகவே அறிவுற்ற  முன்னோர் கண்டு பிடிப்புகளையும் அறிவற்ற முன்னோர் கண்டு பிடிப்புக்களையும் ஒப்பிடாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

திரு.துல்பன், நவீன 'பெரியார்' ஆகிவிட்டார். :)

தனக்கு மீறிய சக்தியை, ஒரு சாரார் "கடவுள்" என நம்புகிறார்கள், நீங்கள் "இல்லை, அது இயற்கை" என்று சொல்கிறீர்கள்.

"தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்.."
- அருமையான கண்ணதாசனின் வரிகள்..

ஒரு முடிவுக்கு வாங்கப்பு..! 😜

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பெரியாரின் சிந்தனைகள் பிடிக்கும், அதே நேரம் முருகனின் பாடலும் பிடிக்கும்..
இவைகள் அப்போதைய வயது, அனுபவம், மனநிலையையும், சூழ்நிலையையும் பொறுத்தது..

ஈழத்தில் மக்கள் கொன்றொழிக்கப்படும்போது "என்னடா கடவுள்..?" என்ற வெறுப்பே மிதமிஞ்சி இருந்தது.

அதே சமயம் வாழ்க்கையில் எதிர்பாரத விதமாக சில நல்லவைகளும், உயிர்பிழைப்புகளும் நடப்பதை பார்க்கும்போது "கடவுளும் இருக்கிறாரோ..?" என்ற ஐயப்பாடும் எழுகிறது.

இதனால் மனம் ஒரு தளும்பு நிலையிலேயே இருக்கும்..! :innocent:

2 hours ago, ராசவன்னியன் said:

உங்களைப் போல் தெளிவான சிந்தனையுடன்  உள்ளதை உள்ளபடியே பேசும் ஜதார்ததவாதிகளிடம்   நான் வாதாடவில்லை வன்னியர். நானும் இந்த விடயத்தில்  உங்கள் type தான்.   “ சரவணப் பொய்கையில் நீராடி” என்ற பி. சுசீலாவின் பாடலை தொலைபேசியில் பதிவு செய்து அடிக்கடி கேட்கும் அளவுக்கு எனக்கு அந்த பாடல் பிடிக்கும். ஆனால் இங்கு விவாதம் புரிவது அது பற்றி அல்ல. ஆன்மீகம்  என்ற தனி மனித உணர்வையும தியானம் என்ற  உளநலன் சார்ந்த எமது தனிப்பட்ட wellness செயற்பாட்டையும் மதிக்கிறேன்.

ஆன்மீக நிலை என்பது இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஜீவராசுகளையும் சமமாக மதிக்கும் நிலை. 

மத நம்பிக்கையும் அது விதைத்துவிட்ட மூட நம்பிக்கைகளையும் ஆன்மீகம் என்று கூறும் பித்தலாட்டத்தை மட்டுமே நான்  விமர்சிக்கிறேன். மனிதனின் அறிவியல் வளர்சியையும் அவனது விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை அனுபவித்து சுகம் கண்டு கொண்டு அதே வேளை அதற்கு எதிராக  எதிராக எப்போதும்  பேசிக்கொண்டு, கடவுள் படைத்ததாக தாமே கூறிய மற்றைய இன மனிதர்கள் மீது வெறுப்பை உமிழ்வோர், (பொதுத்தளங்களில் தளங்களில் கூட) மற்றைய இன மக்களை கொச்சையாக திட்டுவோர் ஆன்மீகவாதிகளாக இருக்க முடியாது.

தம்மால் முடியாத கண்டுபிடிப்பை ஒருவன்  கண்டு பிடிக்கும் போது அதுவும் வேறு இனத்தை சேர்ந்தவன் அதனைக் கண்டு பிடிக்கும் போது  அவனது கண்டு பிடிப்பை திட்டுவது இயலாமையின், பொறாமையின் வெளிப்பாடு.

கடவுள் என்று ஆன்மீகம் பேசுவது உடனடியாகவே கடவுளால் படைக்கப்பட்டதாக தாம் கூறிய வேற்று இன மனிதர்கள் மீது வெறுப்பை உமிழும் பதிவுகளை இடுவது. இது முரண்பாடு இல்லையா? இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே நான் பதிவிடுகின்றேன்.

எனது நிலைப்பாட்டை தெளிவாக புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 

Edited by tulpen

8 hours ago, குமாரசாமி said:

மின்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் மனிதன் கண்டு பிடித்தான். அதை  ஏன் விற்கின்றான் அந்த மனிதன். நான் மின்சாரம் பாவிக்கின்றேன். அதற்கு கட்டணம் செலுத்துகின்றேன். நான் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றேன். அதற்கு கட்டணம் செலுத்துகின்றேன். அதை கேட்க அல்லது உரிமை கொண்டாட யாருக்கும் அருகதை இல்லை.

நல்லகாலம்......காற்றையும் தண்ணீரையும் சூரிய ஒளியையும் இந்த இயற்கையையும் நாங்கள் தான் கண்டு பிடித்தோம் என்று சொல்லாத வரைக்கும் சந்தோசம்

மின்சாரத்தையும், தொழில்நுட்பத்தையும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாததால் அதை உற்பத்தி செய்து ஒருவன் விற்க நாம் பணம் செலுத்தி வாங்க வேண்டியுள்ளது. மின்சாரம் உங்களது அத்தியாவசிய தேவை என்பதால் அதை பணம் செலுத்தி பெற்று பயன்படுத்துகின்றீர்கள். கேடு கெட்ட தேவையற்ற கண்டு பிடிப்பு என்றால் அதை பணம் செலுத்தி வாங்கி பயன்படுத்த மாட்டீர்கள் உங்களுக்கு  தேவையான மின்சாரம்,  மனிதவாழ்வில் அண்மைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட  மிக பயன்னுள்ள அறிவியல் மனிதக் கண்டுபிடிப்பு. 

கேடுகெட்ட கண்டு பிடிப்புகள் என்று கூறிய நீங்கள்,   மின்சாரத்தை தமிழன் 2000 வருடத்துக்கு முன் கண்டு பிடித்து உபயோகித்ததாக யூருப்பில் யாராவது  அடித்து விட்டால்,  அதை நம்பி,   நீங்கள் தான் அதை பெருமையாக கூறுவீர்கள். 

Edited by tulpen
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை கண்டு அஞ்சினால் சாமி கும்பிட வேண்டும் அல்லது யாகம் நடத்த வேண்டும்.
சிறுவயதில் இருந்தே ஆண்டவர் அன்பின் உருவம் எங்களை எல்லாம் காப்பாற்றி வருபவர் என்று மண்டையில் ஆணி அடிப்பது போன்று அடி அடி என்று அடித்து பதியவைக்கபட்டுள்ளது. நல்லவைகள் எது நடந்தாலும் உயிர்பிழைப்புகள் நடந்தாலும் அது ஆண்டவரினால் தான் நடந்தது என்று எண்ண தோன்றும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, tulpen said:

மின்சாரத்தையும், தொழில்நுட்பத்தையும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாததால் அதை உற்பத்தி செய்து ஒருவன் விற்க நாம் பணம் செலுத்தி வாங்க வேண்டியுள்ளது. மின்சாரம் உங்களது அத்தியாவசிய தேவை என்பதால் அதை பணம் செலுத்தி பெற்று பயன்படுத்துகின்றீர்கள். கேடு கெட்ட தேவையற்ற கண்டு பிடிப்பு என்றால் அதை பணம் செலுத்தி வாங்கி பயன்படுத்த மாட்டீர்கள் உங்களுக்கு  தேவையான மின்சாரம்,  மனிதவாழ்வில் அண்மைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட  மிக பயன்னுள்ள அறிவியல் மனிதக் கண்டுபிடிப்பு. 

கேடுகெட்ட கண்டு பிடிப்புகள் என்று கூறிய நீங்கள்,   மின்சாரத்தை தமிழன் 2000 வருடத்துக்கு முன் கண்டு பிடித்து உபயோகித்ததாக யூருப்பில் யாராவது  அடித்து விட்டால்,  அதை நம்பி,   நீங்கள் தான் அதை பெருமையாக கூறுவீர்கள். 

அதிகம் அளக்க விரும்பவில்லை.

நாங்கள் சைவர்கள். குல தெய்வ வழிபாடுதான் எமக்கு முக்கியமானது. இயற்கையும் எமது வழிபாடுகளில் ஒன்று. இயற்கைக்கும் விழா எடுத்து நன்றி கூறுகின்றோம். விஞ்ஞான அற்புதங்கள் இல்லாமலே வாழ்ந்ததுதான் நமது இனம்.

ஒரு உயிர் பிறக்கும் போதே அது என்ன எப்படி  செய்ய வேண்டும் என்பதை அந்த இயற்கை கடவுளே தீர்மானித்து அனுப்புகின்றது.

ஒரு குருவி கூடு கட்டுவதற்கு எந்த விஞ்ஞானி வந்து கற்பித்தான்?

அது போலவே மனித இனமும். அதற்குத்தான் அந்த ஆறறிவை கடவுள் மனிதனுக்கு தந்தான். ஏதாவது உன்னால் முடிந்ததை செய் என......நல்லகாலம் எருமை மாட்டிற்கு எழுதும் சக்தியில்லை. இல்லையேல் அதுவே வந்து உங்களுக்கு பதில் கருத்து எழுதியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குருவி கூடு கட்டுவதற்கு எந்த விஞ்ஞானி வந்து கற்பித்தான்?

ஒவ்வொரு குருவியும் அமைத்திருக்கும் கூட்டின் அழகைப் பார்த்தால்; எந்தவொரு கட்டட நிபுணர்களாலும் வடிவமைக்கப்படமுடியாதது  என எண்ணத்தோன்றும். இதெல்லாம் எந்தப் பொறியியல் கல்லூரியில் போய்க்கற்றதோ? பொறுமையாக வடிவமைத்து, அழகாக கூடி வாழ்கின்றன. அவைக்குள்  போட்டியுமில்லை, பொறாமையுமில்லை. அவை வருந்தி உழைப்பதுமில்லை களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதுமில்லை.  ஆனால் அவற்றையும் மறக்காமல் நாளாந்தம்   உணவளிக்கிறார் அவற்றைப் படைத்தவர். அந்தச் சிறு குருவிகளின் வாழ்க்கையே என்ன அதிசயம். அவையும் காலையில் படைத்தவனை போற்றிப்புகழ்ந்துகொண்டே நாளை ஆரம்பிக்கின்றன. கிடக்கைக்கு செல்லும்போதும் நன்றி சொல்லிக்கொண்டே குடும்பத்துடன் கூடிக் குலாவிக்கொண்டே அடைகின்றன.  

9 hours ago, குமாரசாமி said:

அதிகம் அளக்க விரும்பவில்லை.

நாங்கள் சைவர்கள். குல தெய்வ வழிபாடுதான் எமக்கு முக்கியமானது. இயற்கையும் எமது வழிபாடுகளில் ஒன்று. இயற்கைக்கும் விழா எடுத்து நன்றி கூறுகின்றோம். விஞ்ஞான அற்புதங்கள் இல்லாமலே வாழ்ந்ததுதான் நமது இனம்.

ஒரு உயிர் பிறக்கும் போதே அது என்ன எப்படி  செய்ய வேண்டும் என்பதை அந்த இயற்கை கடவுளே தீர்மானித்து அனுப்புகின்றது.

ஒரு குருவி கூடு கட்டுவதற்கு எந்த விஞ்ஞானி வந்து கற்பித்தான்?

அது போலவே மனித இனமும். அதற்குத்தான் அந்த ஆறறிவை கடவுள் மனிதனுக்கு தந்தான். ஏதாவது உன்னால் முடிந்ததை செய் என......நல்லகாலம் எருமை மாட்டிற்கு எழுதும் சக்தியில்லை. இல்லையேல் அதுவே வந்து உங்களுக்கு பதில் கருத்து எழுதியிருக்கும்.

இயற்கை என்பது  கடவுள் அல்ல. முன்பு கடவுள்  என்று ஏமாற்றிய கும்பல் கடவுள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால் இயற்கை தான் கடவுள் என்று ஏமாற்றப்பார்கிறார்கள். 

இயற்கை, என்ற இயங்கு நிலை சக்தியால் உருவான உயிர்கள் எல்லாம் சுயநலத்துடன் தமது வாழ்ககைக்காலம் வரை வாழ்ந்து மடிகின்றன. அதில் ஒரு பரிணாமமான மனிதன் மிக அதிக சுய நலத்துடன் இயங்குகிறான். இயற்கையை கண்டு பயந்து மனிதனால் “கடவுள்”என்ற பொருள் படைக்கப்பட்டது. காலப்போக்கில், அந்த கடவுள் என்ற பொருளை மதமாக மாற்றி  சந்தைப்படுத்தி காசு பார்தது வருகிறது அதை வலியுறுத்தும் கூட்டம்.

மனித அறிவு வளர்சசியின் காரணமாக அதன் சாத்தியம் சிறிது சிறிதாக குறைந்து வர சில முன்னேறாத சமூகங்களில் கடவுள் வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

குறிப்பு ஆன்மீகம் என்ற  உயர்ந்த அனைவரையும் சமமாக பார்ககும் நிலை என்பது, இங்கு   மூடநம்பிக்கைகளை  வளர்ப்பவர்களிடம் இல்லாததால் அது குறித்து நான் எதுவும் பேசவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, tulpen said:

நாம்   நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் என்பவற்றை வணங்குபவர்கள்

நிற்க... 

ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஒருவன் செய்யும் தவறுக்காக அந்த குடும்பத்தையே வெறுக்கும் மரமண்டை மூடனக நான்  இருக்க மாட்டேன். 

 ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஒருவன் செய்யும் தவறுக்காக அந்த குடும்பத்தையே வெறுக்கும் மரமண்டை மூடனாக நான்  இருக்க மாட்டேன். 

Edited by குமாரசாமி

18 hours ago, குமாரசாமி said:

நாம்   நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் என்பவற்றை வணங்குபவர்கள்

நிற்க... 

ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஒருவன் செய்யும் தவறுக்காக அந்த குடும்பத்தையே வெறுக்கும் மரமண்டை மூடனக நான்  இருக்க மாட்டேன். 

 ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஒருவன் செய்யும் தவறுக்காக அந்த குடும்பத்தையே வெறுக்கும் மரமண்டை மூடனாக நான்  இருக்க மாட்டேன். 

நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகியவை வணங்குவதற்கல்ல. அவற்றை ஆய்வு செய்து உபயோகிப்பதற்கே. இவற்றை ஆய்வு செய்து எமது  எதிர்கால சந்த‍தியும் முன்னேற வேண்டும்.  இவற்று ஆய்வு செய்து அதன் உச்ச பயன்பாட்டை கொண்டு வினைதிறனுடன்  மற்றய வளர்ச்சியடையந்த நாடுகள் போல் எமது நாடும் முன்னேறவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, tulpen said:

நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகியவை வணங்குவதற்கல்ல. அவற்றை ஆய்வு செய்து உபயோகிப்பதற்கே. இவற்றை ஆய்வு செய்து எமது  எதிர்கால சந்த‍தியும் முன்னேற வேண்டும்.  இவற்று ஆய்வு செய்து அதன் உச்ச பயன்பாட்டை கொண்டு வினைதிறனுடன்  மற்றய வளர்ச்சியடையந்த நாடுகள் போல் எமது நாடும் முன்னேறவேண்டும். 

பூமியில் இருக்கும் தண்ணியை மாசுபடுத்தியும்,குடிதண்ணிரை மற்றவர்களோடு பகிர்ந்தளிக்காமலும்,காற்றை மாசு  படுத்துவதும் தான் மனிதனின் ஆராய்ச்சி.
பக்கத்து வீட்டுக்கு தண்ணி குடுக்காதவன் நிலாவிலும் செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் தேடினானாம்.
ஆராய்ச்சிகள் செய்யாமல் முதல்லை பூமிய காப்பாத்துற வேலையை பாருங்கையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.