Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்!

Featured Replies

9 minutes ago, குமாரசாமி said:

பூமியில் இருக்கும் தண்ணியை மாசுபடுத்தியும்,குடிதண்ணிரை மற்றவர்களோடு பகிர்ந்தளிக்காமலும்,காற்றை மாசு  படுத்துவதும் தான் மனிதனின் ஆராய்ச்சி.
பக்கத்து வீட்டுக்கு தண்ணி குடுக்காதவன் நிலாவிலும் செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் தேடினானாம்.
ஆராய்ச்சிகள் செய்யாமல் முதல்லை பூமிய காப்பாத்துற வேலையை பாருங்கையா?

இதை தான் சொல்வது  எட்டாப்பழம் புளிக்கும் என்று.

அதற்கேற திறமைசாலிகள்

அதை செய்தார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். இனியும் செய்வாறர்கள்.

நானும் நீங்களும் வெறும் பயனர்கள் தான். அவர்களின் ஆராய்ச்சிகளை நாம் இருவரும் இருவரும்

பயன்படுத்தினோம், பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். இனியும் பயன்படுத்துபவோம். 

என்ன நான் அவர்களுக்கு நன்றி சொல்லி பயன்படுத்துகிறேன். 

நீங்கள் அவர்களை திட்டி திட்டி பயன்படுத்துகிறீர்கள். 

அது தான் வித்தியாசம்.  

  • Replies 65
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

இதை தான் சொல்வது  எட்டாப்பழம் புளிக்கும் என்று.

அதற்கேற திறமைசாலிகள்

அதை செய்தார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். இனியும் செய்வாறர்கள்.

நானும் நீங்களும் வெறும் பயனர்கள் தான். அவர்களின் ஆராய்ச்சிகளை நாம் இருவரும் இருவரும்

பயன்படுத்தினோம், பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். இனியும் பயன்படுத்துபவோம். 

என்ன நான் அவர்களுக்கு நன்றி சொல்லி பயன்படுத்துகிறேன். 

நீங்கள் அவர்களை திட்டி திட்டி பயன்படுத்துகிறீர்கள். 

அது தான் வித்தியாசம்.  

என்ன நீங்கள் சுத்த ஞானசூன்யமாக இருக்கின்றீர்கள். நான் ஏதோ சொல்ல நீங்கள் ஏதோ பினாத்துகின்றீர்கள் துல்பன்! உங்கள் பக்கத்தில் இது வழமையானதுதான் இருந்தாலும் சிறு பிள்ளைக்கே தெரிந்த விடயத்த பேசும் போது கொஞ்சமாவது விளங்கிக்கொள்ளும் தன்மை இல்லையா துல்பன்? என்ன இது????????

 அன்புள்ள துல்பன்! இப்போது நாங்கள் என்ன சொல்கின்றோம். இருப்பதை காப்பாற்றுங்கள்,பகிர்ந்தளியுங்கள்,இயற்கையை பேணுங்கள்,பராமரியுங்கள் என்றுதானே? விண்வெளியில் தண்ணீர் தேட வேண்டிய அவசியம் என்ன துல்பன்?  ஏனைய கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான தேடல் எல்லாம் எதற்கு துல்பன்? நீங்களே யோசித்து பாருங்கள் துல்பன்! எமது தமிழர் பூமியை தமிழர் ஆள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம் அல்லவா? இந்த பூமியில் ஒரு பிடி நிலத்தை பகிர முடியாத மனிதம் அண்ட வெளியில் என்னத்தை எதற்காக தேடுகின்றது? துல்பன் சொல்லுங்கள் துல்பன்?
 
துல்பன்! இப்ப நாங்கள் என்ன சொல்லுறம்.மழை நீரை சேமியுங்கோ. காடு மலைகளை அழிக்காதீங்கோ வன விலங்குகளை பராமரியுங்கோ எண்டு தானே சொல்லுறம். இவ்வளவுத்தையும் செய்தாலே நாங்கள் விண்வெளிக்கு போய் தண்ணியும் காத்தும் தேட வேண்டிய அவசியமில்லையே? பூமி எங்களுக்கு என்ன குறை வைச்சது துல்பன்? அதை பாதுகாக்க வேண்டியது நம்ம கடமையில்லையா துல்பன்?

என்ன துல்பன் பெரிய படிப்பு படிச்ச நீங்களே இப்பிடியெண்டால்........????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்தப் பந்தியிலை... 11 முறை துல்பன் வாறார். 😁🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பந்தியிலை... 11 முறை துல்பன் வாறார். 😁🤣

மத்தாளம் கொட்டுதாம் மாமரத்து மயிலு மச்சானத் தேடுதாம் பூமரத்துக் குயிலு....  😁

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2020 at 17:46, குமாரசாமி said:

எதை வைத்து எதை மனிதன் கண்டு பிடித்தான்?
எல்லாம் இயற்கை தந்ததை வைத்துத்தான். அதை கண்டு  பிடிக்க ஆறறிவை கொடுத்ததும் அந்த கடவுள்/இயற்கை தான். எதற்கெடுத்தாலும் கண்டு பிடித்தோம் கண்டு பிடித்தோம் பினாத்தல். எதை வைத்து என்னத்தை கண்டு பிடித்தீர்கள் மிஸ்டர் துல்பன்?

ஐந்தறிவுள்ள ஏனைய உயிரினங்கள் விஞ்ஞானம் எதுவுமில்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோரோனா பயம் கூட இல்லை.

7 hours ago, குமாரசாமி said:

மத்தாளம் கொட்டுதாம் மாமரத்து மயிலு மச்சானத் தேடுதாம் பூமரத்துக் குயிலு....  😁

9 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பந்தியிலை... 11 முறை துல்பன் வாறார். 😁🤣

17 hours ago, குமாரசாமி said:

பக்கத்து வீட்டுக்கு தண்ணி குடுக்காதவன்

தீபாவளிக்கு பக்கத்துவீட்டு தண்ணி இப்பிடியெல்லாம் வேலை செய்யுமா?😄

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

என்ன நீங்கள் சுத்த ஞானசூன்யமாக இருக்கின்றீர்கள். நான் ஏதோ சொல்ல நீங்கள் ஏதோ பினாத்துகின்றீர்கள் துல்பன்! உங்கள் பக்கத்தில் இது வழமையானதுதான் இருந்தாலும் சிறு பிள்ளைக்கே தெரிந்த விடயத்த பேசும் போது கொஞ்சமாவது விளங்கிக்கொள்ளும் தன்மை இல்லையா துல்பன்? என்ன இது????????

 அன்புள்ள துல்பன்! இப்போது நாங்கள் என்ன சொல்கின்றோம். இருப்பதை காப்பாற்றுங்கள்,பகிர்ந்தளியுங்கள்,இயற்கையை பேணுங்கள்,பராமரியுங்கள் என்றுதானே? விண்வெளியில் தண்ணீர் தேட வேண்டிய அவசியம் என்ன துல்பன்?  ஏனைய கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான தேடல் எல்லாம் எதற்கு துல்பன்? நீங்களே யோசித்து பாருங்கள் துல்பன்! எமது தமிழர் பூமியை தமிழர் ஆள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம் அல்லவா? இந்த பூமியில் ஒரு பிடி நிலத்தை பகிர முடியாத மனிதம் அண்ட வெளியில் என்னத்தை எதற்காக தேடுகின்றது? துல்பன் சொல்லுங்கள் துல்பன்?
 
துல்பன்! இப்ப நாங்கள் என்ன சொல்லுறம்.மழை நீரை சேமியுங்கோ. காடு மலைகளை அழிக்காதீங்கோ வன விலங்குகளை பராமரியுங்கோ எண்டு தானே சொல்லுறம். இவ்வளவுத்தையும் செய்தாலே நாங்கள் விண்வெளிக்கு போய் தண்ணியும் காத்தும் தேட வேண்டிய அவசியமில்லையே? பூமி எங்களுக்கு என்ன குறை வைச்சது துல்பன்? அதை பாதுகாக்க வேண்டியது நம்ம கடமையில்லையா துல்பன்?

என்ன துல்பன் பெரிய படிப்பு படிச்ச நீங்களே இப்பிடியெண்டால்........????

நீங்கள் எத்தனை தரம் சொன்னாலும் விழலுக்கு இறைத்த நீர்தான், கட்டையில் போகும் போதுதான் கண்ணதாசனுக்கு  ஞானப்பிறந்திச்சு, அப்படி ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பதில் தெரியும் தங்களைவிட உயர்ந்த சக்தி இருக்கு என்று, அதுவரை வீண் விதாண்டவதாங்களை காவி தெரிவதால் இவர்களின் மன நிம்மதிதான் இல்லாமால் போகும்😂, நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். அதுவரை அதி புத்திசாலிகளாக மிளிரட்டும் விடுங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

தீபாவளிக்கு பக்கத்துவீட்டு தண்ணி இப்பிடியெல்லாம் வேலை செய்யுமா?😄

நீங்கள் நினைக்கிற அந்த தண்ணி மட்டும் தான் இன,மத,நாடு,நிற வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் ஒரே மாதிரி வேலை செய்யும்.:cool:

17 hours ago, குமாரசாமி said:

என்ன நீங்கள் சுத்த ஞானசூன்யமாக இருக்கின்றீர்கள். நான் ஏதோ சொல்ல நீங்கள் ஏதோ பினாத்துகின்றீர்கள் துல்பன்! உங்கள் பக்கத்தில் இது வழமையானதுதான் இருந்தாலும் சிறு பிள்ளைக்கே தெரிந்த விடயத்த பேசும் போது கொஞ்சமாவது விளங்கிக்கொள்ளும் தன்மை இல்லையா துல்பன்? என்ன இது????????

 அன்புள்ள துல்பன்! இப்போது நாங்கள் என்ன சொல்கின்றோம். இருப்பதை காப்பாற்றுங்கள்,பகிர்ந்தளியுங்கள்,இயற்கையை பேணுங்கள்,பராமரியுங்கள் என்றுதானே? விண்வெளியில் தண்ணீர் தேட வேண்டிய அவசியம் என்ன துல்பன்?  ஏனைய கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான தேடல் எல்லாம் எதற்கு துல்பன்? நீங்களே யோசித்து பாருங்கள் துல்பன்! எமது தமிழர் பூமியை தமிழர் ஆள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம் அல்லவா? இந்த பூமியில் ஒரு பிடி நிலத்தை பகிர முடியாத மனிதம் அண்ட வெளியில் என்னத்தை எதற்காக தேடுகின்றது? துல்பன் சொல்லுங்கள் துல்பன்?
 
துல்பன்! இப்ப நாங்கள் என்ன சொல்லுறம்.மழை நீரை சேமியுங்கோ. காடு மலைகளை அழிக்காதீங்கோ வன விலங்குகளை பராமரியுங்கோ எண்டு தானே சொல்லுறம். இவ்வளவுத்தையும் செய்தாலே நாங்கள் விண்வெளிக்கு போய் தண்ணியும் காத்தும் தேட வேண்டிய அவசியமில்லையே? பூமி எங்களுக்கு என்ன குறை வைச்சது துல்பன்? அதை பாதுகாக்க வேண்டியது நம்ம கடமையில்லையா துல்பன்?

என்ன துல்பன் பெரிய படிப்பு படிச்ச நீங்களே இப்பிடியெண்டால்........????

குமாரசாமி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பது உங்களுக்கே விளங்குகிறதா?  அல்லது கற்பனையில் ஏதோ உங்கள் பாட்டிற்கு  கூறியுள்ளீர்களா?  இயற்கையைப் பாதுகாப்பில் உங்களுக்கு மட்டும் தான் அக்கறை உள்ளது போலவும் உலக மக்கள் ஒருவரும் உங்கள் சொல்லை கேட்காமல் இயற்கையை அழித்து வருகிறார்கள்  என்பது போலவும் உங்களுக்குள்  நீங்களே வகுத்த ஒரு கற்பனைக்கு நீங்களே பதில் கூறியுள்ளீர்கள்.    கூறுதல் (தமிழ் மொழியில்)  = பினாத்துதல்(உங்கள் தாய்மொழியில்)

சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு என்பது 1950 களிலேயே உலகில் ஆரம்பித்துவிட்டது.   சூழல் பாதுகாப்புக்காக பல பொது  அமைப்புகள் 1960களிலேயே ஆரம்பித்து அதற்காக பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டதன் விளைவாக தான் தற்போது பல நாடுகளில்  அது தொடர்பான சட்டங்கள் கூட இயற்றப்பட்டுள்ளன. 1960 ம் ஆண்டுக்கு பின்னர் சூழல் பாதுகாப்பு தொடர்பான பல பொது அமைப்புகளின் வரிசையில் 1971 ல் ஆரம்பிக்கப்பட்ட Green Peace அமைப்பின் உலக சூழல் இயற்கை பாதுகாப்பு தொடர்பான பாரிய செயற்பாடுகளால், விழிப்புணர்வு பரப்புரைகளால் உலக மக்கள் பலர் விழிப்புணர்வு பெற்று இவ்விடயத்தில் பாரிய மாற்றங்கள் நடைபெற்று வருவதை நாம் வாழும் நாடுகளில் உள்ள ஒவ்வொரு சிறிய கிராமங்களில் கூட வெளிப்படையாக‍க் காண முடியும். 

அப்படி இருக்க நீங்கள் ஏதோ உலகில் ஒருவரும் இவ்விடத்தில் அக்கறையற்று இருப்பது போலவும், நீங்களும் ஒரு சிறு கும்பலும் மட்டும் தான் அது தொடர்பாக பேசிவருவாதான கனவுடன் முதலைக்கண்ணீர் வடிக்கின்றீர்கள்.   

உண்மையில், தனது இனமும் நாடும் முன்னேறினால் போதும் என்று குறுகிய மனப்பான்மையுடனான இனப்பற்று. நாட்டுப்பற்று என்று சிந்தித்த இனவெறி நாடுகள் தான் இவ்விடயதைப் பற்றி  அக்கறையற்று சூழலை மாசுபடுத்தும் மோசமான செயலைச் செய்தன. பின்னர்  தேசம் இன, மதம்  கடந்து  இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற பொது நோக்கில்  சிந்தித்து அது தொடர்பான தொடர்ச்சியான அறிவியல்  ஆய்வுகளை செய்த, பல உலக  அமைப்புகளின்   அறிக்கைகளின் விளைவாக தான் தற்போதைய காலத்தில் இந்த விடயத்தில் ஒரு பாரிய பாய்ச்சல் நடந்துள்ளது.  எதிர்காலத்தில் மனித இனம் இதில் மேலும் முன்னேற்றம் காணும்.

சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றி  வலியுறுத்த தரவுகளுடன்  ஆராய்ச்சிகள் செய்த வல்லுனர்களின் அறிக்கையை நுனிப்புல் மேய்ந்த ஒரு சில கும்பல் ஏதோ தாம் மட்டும்  தான் இயற்கை பாதுகாப்பு பற்றி சிந்திப்பதாக  உலகம் விடயங்கள் தெரியாத ஒரு சில தனது ரசிகர்களுக்கு கூறி பெருமையடித்துக் கொண்டாலும்,    உலக சுற்றுபுற சூழல் பாதுகாப்பு என்ற கருதுகோள்  அரை நூற்றாண்டுக்கு முன் ஆரம்பித்து பல படிமுறைகளை கண்டு,  இன்று உலக  மக்களால் நடைமுறையில் Implement  செய்யப்பட்டு வருவதோடு,  மேலும் அதை வளர்த்தெடுப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் கூட உலகில் மேற்கொள்ளபடுவது சாதாரணமாக மக்கள் அறிந்த உண்மை. ஆரம்பத்தில்   மேல்நிலை பாடசாலைகளில் கற்றுக்கொடுக்கபட்ட  Umweltschutz (Environment)   ஆரம்ப பாடசாலையிலேயே பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கப்பட்டும் விடயமாக 1995 ஆண்டே  ஆகிவிட்டது. உங்களுக்கு வேண்டுமானால் அது புதிய விடயமாக இருக்கலாம். 

அண்டவெளி பற்றிய ஆய்வும், அங்கு  உயிரினங்கள் வாழ்கிறதா என்பது போன்ற  ஆராய்ச்சி  போன்ற விடயங்கள் எல்லாம்  மனித குல வளர்ச்ச்சியின் அடுத்த பாய்ச்சலுகான, வளர்ச்சிக்கான   ஒரு விடயம் என்றே  பொது அறிவு உள்ள உலக மக்கள் அனைவரும் விளங்கி கொண்டுள்ளார்கள். கல்லூரிகளிலும் அவ்வாறே கற்பித்தார்கள்.  உங்களுக்கு அது புரியாவிட்டால் நாசா போன்ற நிறுவனங்களில் உள்ள வல்லுனர்களுக்கு கடிதம் எழுதி ஏன் இதை செய்கின்றீர்கள் என்று கேட்டுப்பார்க்கலாம். (குறிப்பு அப்படிக்  கடிதம் எழுதும் போது தமிழில் எழுதினால் அவர்கள் மொழிபெயர்ப்பு செய்து வாசிக்க  வசதியாக இருக்கும். நீங்கள் பொதுவாக உபயோகிக்கும்  உங்கள்  தாய் மொழியில் எழுதினால் மொழிபெயர்ப்பு செய்வது முடியாத காரியமாக இருக்கும்.)

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில் போகும் போதுதான் கண்ணதாசன் என்பவருக்கு ஞானப்பிறந்ததாம் அவருக்கு வந்தது ஞானம் இல்லை மரணபயம் 😂 

ஞானம் பிறந்து கோயிலிலா அவர் போய் படுத்தார் அப்பலோ மருத்துவமனையில்  அல்லது அது போன்ற மருத்துவனையில் மருத்துவ சிகிச்சை பெற்றிருப்பார்.மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஏழை மக்களில் ஏழ்மையானவர்களுக்கு உதவிய அன்னை தெரசாவே பதில் இல்லாத கேள்விகள் பல எனக்குள் எழுகின்றன கடவுள் குற்றமாகிவிடும் என்றபடியால் அதை வெளியிட அஞ்சுகிறேன் என்று துன்பபட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, tulpen said:

குமாரசாமி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்

உலகத்திற்கு உபதேசம் சொல்ல நான்  உங்களப் போன்ற அறிவாளி அல்ல.

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டையில் போகும் போதுதான் கண்ணதாசன் என்பவருக்கு ஞானப்பிறந்ததாம் அவருக்கு வந்தது ஞானம் இல்லை மரணபயம் 😂 

ஞானம் பிறந்து கோயிலிலா அவர் போய் படுத்தார் அப்பலோ மருத்துவமனையில்  அல்லது அது போன்ற மருத்துவனையில் மருத்துவ சிகிச்சை பெற்றிருப்பார்.மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஏழை மக்களில் ஏழ்மையானவர்களுக்கு உதவிய அன்னை தெரசாவே பதில் இல்லாத கேள்விகள் பல எனக்குள் எழுகின்றன கடவுள் குற்றமாகிவிடும் என்றபடியால் அதை வெளியிட அஞ்சுகிறேன் என்று துன்பபட்டுள்ளார்.

கண்ணதாசன் அப்பலோ மருத்துவமனையில் அல்ல, அமெரிக்காவில் போய் படுத்து தனது உயிரை அந்த நாட்டின்  மருத்துவ விஞ்ஞானத்தால் காப்பாற்ற முடியுமா என்று இறுதி முயற்சியை எடுத்தார். உயிரை காப்பாற்ற அவர  கடவுளை நம்பவில்லை. அமெரிக்க மருத்துவமனையையே இறுதிக்காலத்திலும்  நம்பினார். 

அவர் மிகச்சிறந்த கவிஞர். அந்த அவரது ஆற்றலுக்கும் கவித்திறமைக்கும்  என்றும் நான் மரியாதை செலுத்துகிறேன். 

9 hours ago, குமாரசாமி said:

உலகத்திற்கு உபதேசம் சொல்ல நான்  உங்களப் போன்ற அறிவாளி அல்ல.

குமாரசாமி, எவரும் எவருக்கும் இங்கு உபதேசம் செய்வதில்லை. அறிவு எல்லோருக்கும் பொதுவானது. நாம் எல்லோரும் சாதாரண மக்கள். இங்கு வெளிப்படையாக எம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்கிறோம். அவ்வளவுதான். தெரிவிக்கப்படும் கருத்துக்கள்,  எம்மிடையே குறுகிய கால முரண்பாட்டை ஏற்படுத்தினாலும்,  நீண்ட கால நோக்கில்  சிந்திக்க  வைக்கிறது. 

ஒருவர் கருத்தை மற்றவர் அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவேண்டய அவசியம் யாருக்கும் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ கண்டு பிடிப்புக்களை கண்டு  பிடித்தவர்களும்

சாதனை  செய்தவர்களும்

தாம்  செய்ததாக  சொன்னதில்லை

செய்ய வைக்கப்பட்டதாகவோ  சொல்கிறார்கள்

சாதனை படைக்கவென்று மைதானத்தில்  இறங்கும்  எந்த  வீரனும்

சாதனை  செய்யப்போகும் போதும்

சாதனையை  செய்த பின்பும்

வணங்குவதும்  நன்றி  சொல்வதும் ஆகாயத்தை நோக்கித்தான்...

சாதாரணமானவர்கள்  நாம்

கும்பிட்டால் என்ன  வந்து  விடப்போகிறது

சமூதாயத்தில்  குற்றங்களாவது  குறையட்டுமே????

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இப்படி ஊருக்கு ஊர் இருக்கின்றார்கள், ஏதிர்ப்புகள் வேறுப்பட்ட சிந்தனைகள் இல்லாவிட்டால் வாழ்வில் ரசனையேது, விடுங்கள் பொழுது போக திரிக்கு திரி இப்படியே பொழுதை சந்தோஷமாக கழிக்கட்டும்,

கொஞ்ச கால சந்தோஷத்தை நாம் ஏன் கெடுப்பான், பெரிய மனது பண்ணி அவர்களின் அற்ப சந்தோஷத்திற்கு வழிவிடுங்களேன்😂

நான் சாய் பாபவை தொழுவதில்லை, ஆனால் சாய்பாபவை கும்பிடும் பலர் நல்ல நிலையில் குடும்பத்தை நடத்துகின்றனர், அவர்களில் இருக்கும் மன சந்தோஷத்தைப்பார்க்க ஏதோ ஒருவித சக்தி இருக்கு, மனதை சந்தோஷமாக வைத்திருக்கின்றார்கள், இப்ப விஞ்ஞானம் & மேற்கு உலகு கண்டுபிடித்திக்கு கூட்டமாக சிரிக்க, அதைதான் நம் முன்னோர்கள், பிரார்த்தனையால் சந்தோஷமாக வாழ்நாளை கூட்டு குடும்பமாக கழித்தார்கள், இப்ப தனி குடித்தனம், மன அழுத்தம், இப்படி எத்தனை பிரச்சனைகள்,

இவர்களுக்கும் மன அழுத்தமே. விட்டு தள்ளுங்கள், திருந்தினால் திருந்தட்டும் அல்லது இப்படியே .......புலம்பட்டும்

14 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டையில் போகும் போதுதான் கண்ணதாசன் என்பவருக்கு ஞானப்பிறந்ததாம் அவருக்கு வந்தது ஞானம் இல்லை மரணபயம் 😂 

அட பக்கத்திலிருந்து நாடி பிடித்து பார்த்தீர்களா மரண பயமென்று, 😂

2 hours ago, tulpen said:

  நீண்ட கால நோக்கில்  சிந்திக்க  வைக்கிறது. 

விரைவாக சிந்தியுங்கள், உடல் நலத்திற்கு நல்லது அமைதி

3 hours ago, விசுகு said:

எத்தனையோ கண்டு பிடிப்புக்களை கண்டு  பிடித்தவர்களும்

சாதனை  செய்தவர்களும்

தாம்  செய்ததாக  சொன்னதில்லை

செய்ய வைக்கப்பட்டதாகவோ  சொல்கிறார்கள்

சாதனை படைக்கவென்று மைதானத்தில்  இறங்கும்  எந்த  வீரனும்

சாதனை  செய்யப்போகும் போதும்

சாதனையை  செய்த பின்பும்

வணங்குவதும்  நன்றி  சொல்வதும் ஆகாயத்தை நோக்கித்தான்...

சாதாரணமானவர்கள்  நாம்

கும்பிட்டால் என்ன  வந்து  விடப்போகிறது

சமூதாயத்தில்  குற்றங்களாவது  குறையட்டுமே????

விசுகு,  குற்றங்கள் குறைய வேண்டுமானால் மனிதரை மனிதர் இன, மத, வேறுபாடு இன்றி மரியாதை செய்வதுடன் பேராசை கொள்ளாமல் வாழ்ந்தால் போதும். அதன் மூலம் பெருமளவு குற்றங்கள் குறைக்கப்படும்.  இறைவன் எனக்கு செல்வங்களை தரவேண்டும் என் பேராசை தான் பலரை வணங்க வைக்கிறது. 

குற்றங்கள் குறைவதற்கும் வணங்குவதற்கும் ஒரு தொடர்பும் இல்லைலை அண்மைக்காலத்தில் மனிதர்களை கொலைசெய்தவர்கள் கூட ஆகாயத்ததை பார்தது வணங்கிவிட்டே செய்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆகவே வணங்குதல் குற்றங்களை குறைக்காது. 

3 hours ago, உடையார் said:

விரைவாக சிந்தியுங்கள், உடல் நலத்திற்கு நல்லது அமைதி

1. விரைவாக சிந்தித்தால் எப்படி அது உடல் நலத்திற்கு நல்லது?  

2. விரைவாக சிந்திப்பவர்களுக்கு எப்படி அமைதி கிடைக்கும்? 

சுற்றி வளைக்காமல் நேரடியாக மருத்துவ ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்ககிறேன். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

விசுகு,  குற்றங்கள் குறைய வேண்டுமானால் மனிதரை மனிதர் இன, மத, வேறுபாடு இன்றி மரியாதை செய்வதுடன் பேராசை கொள்ளாமல் வாழ்ந்தால் போதும். அதன் மூலம் பெருமளவு குற்றங்கள் குறைக்கப்படும்.  இறைவன் எனக்கு செல்வங்களை தரவேண்டும் என் பேராசை தான் பலரை வணங்க வைக்கிறது. 

குற்றங்கள் குறைவதற்கும் வணங்குவதற்கும் ஒரு தொடர்பும் இல்லைலை அண்மைக்காலத்தில் மனிதர்களை கொலைசெய்தவர்கள் கூட ஆகாயத்ததை பார்தது வணங்கிவிட்டே செய்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆகவே வணங்குதல் குற்றங்களை குறைக்காது. 

1. விரைவாக சிந்தித்தால் எப்படி அது உடல் நலத்திற்கு நல்லது?  

2. விரைவாக சிந்திப்பவர்களுக்கு எப்படி அமைதி கிடைக்கும்? 

சுற்றி வளைக்காமல் நேரடியாக மருத்துவ ஆதாரங்களுடன் பதிலை எதிர் பார்ககிறேன். 

மனிதரை மனிதர் இன, மத, வேறுபாடு இன்றி மரியாதை செய்வதுடன் பேராசை கொள்ளாமல் வாழ்ந்தால் போதும்

நீங்கள்  சொல்வது  போல்  எதுவுமில்லை

எவருமில்லை

எந்த  உலகும்  இல்லை

எந்த  மதமும் எந்த  கடவுளும்  பேராசை கொள்ளுமாறு  சொன்னதாக எங்காவது  எழுதப்பட்டிருக்கிறதா??

உங்களைப்போல மாத்தி  யோசிப்போரே

கடவுளை உருமாற்றி உங்களது பேராசைகளுக்கு  பலியாக்குகிறீர்கள்

இதுவே  குற்றங்களுக்கும்  பொருந்தும்

மதம்  கடவுள் பற்றி இவ்வளவு  எழுதும் உங்களிடம்  தனிப்பட சில கேள்விகள்  எனக்குண்டு

கேட்கலாமா???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

இது பெரிய தத்துவ விசாரமாகப் போய் கொண்டிருக்கும் போல! 

மத நம்பிக்கை இல்லாமல் சகமனிதர் மேலுள்ள அன்பினால் மட்டுமே ஏனையோரைத் துன்புறுத்தாமல் நடந்து கொண்ட எவருமே இல்லையா? நீங்கள் அப்படி யாரையும் சந்திக்கவோ கேள்விப் படவோ இல்லையா விசுகர்? 

இந்த இடத்தில் தான் பரந்த வாசிப்பு என்பதன் முக்கியத்துவத்தை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்! இதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். புத்தரைப் பற்றி வாசித்தாலே மத நம்பிக்கை மகிழ்ச்சிக்கு அவசியமில்லை என்பது விளங்கி விடும்!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

ஒப்பிட்டுப்பார்க்கும்போது

ரொம்ப ரொம்ப  குறைவு சகோ.

அப்புறம் புத்தகப்படிப்பு???

எனக்கு  தேவையானதை

எனது கொள்கலனுக்கேற்றதை மட்டுமே எடுத்துக்கொள்வது எனது  நிலைப்பாடு

அது கூட  அனுபவத்தினூடாக  வந்தது தான்

புத்தரைப்படித்தவர்  என்ன  ஆனார்கள்????

அதிகம்  வாசித்தவர்கள்  படித்தவர்கள் அடித்தட்டு  மக்களிடமிருந்து?????

யாழிலேயே சில  உதாரணங்களுண்டே???

இதுவும் தனிப்பட்ட தாக்குதலல்ல...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

ஒப்பிட்டுப்பார்க்கும்போது

ரொம்ப ரொம்ப  குறைவு சகோ.

அப்புறம் புத்தகப்படிப்பு???

எனக்கு  தேவையானதை

எனது கொள்கலனுக்கேற்றதை மட்டுமே எடுத்துக்கொள்வது எனது  நிலைப்பாடு

அது கூட  அனுபவத்தினூடாக  வந்தது தான்

புத்தரைப்படித்தவர்  என்ன  ஆனார்கள்????

அதிகம்  வாசித்தவர்கள்  படித்தவர்கள் அடித்தட்டு  மக்களிடமிருந்து?????

யாழிலேயே சில  உதாரணங்களுண்டே???

இதுவும் தனிப்பட்ட தாக்குதலல்ல...

சில நாடுகள்/சமூகங்களில் இருக்கும் குற்றச் செயல்களையும் மத நம்பிக்கையின் தீவிரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசமான காட்சி தெரிகிறது. 

உதாரணமாக இந்தியாவில் கடவுள் பக்தியுள்ளோர் எவ்வளவு பேர், கோயில்கள் யாத்திரைத் தலங்கங்கள் எத்தனை ஆயிரம்? அங்கே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் குறைவா?

ஸ்கண்டினேவியாவில், கனடாவில் கடவுள் நம்பிக்கையுள்ளோர்  இந்தியாவை விட குறைவு. அங்கே குற்றச் செயல்கள் அதிகமா? 

எதை ஒப்பிட்டீர்கள் என்று தெரியவில்லை! 

தனி மனிதர்களுடனான அனுபவம் உங்களுக்கு கடவுள் கண்ணைக் குத்தும் என்ற பயமே மக்களை நல்லவர்களாக்குகிறது என்று காட்டுகிறது போல! 

இதனால் தான் வாசிப்பைக் கொண்டு வந்தேன். பழகுபவர்கள் தெரிந்தவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மட்டுப் படுத்தப் பட்ட அனுபவம் தான் பெற முடியும். அந்த மட்டுப் பட்ட அனுபவம் கொண்டு சரியான கணிப்பீட்டை எந்த துறையிலும் செய்ய இயலாது. வாசிப்பு என்பது  பலரின் அனுபவங்களை எல்லாத் திசைகளில் இருந்தும் உள்வாங்கி கணிப்பை ஓரளவு சரியாக்க உதவும்! 

யாழில், தமது நேரடி அனுபவத்தை மட்டும் சாராமல் வாசிப்பையும் இணைத்து கருத்துகளை வெளியிடுவோர் என் பார்வையில் தீவிரம் தவிர்த்து சமநிலையாகத் தான் தெரிகின்றனர். வரும் கருத்துகள் கேட்போருக்கு உவப்பாக இல்லை என்பதால் வாசிப்பது தீமை என்ற கருத்து நிலவுகிறதென நினைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்

கும்பிட்டால் என்ன  வந்து  விடப்போகிறது

சமூதாயத்தில்  குற்றங்களாவது  குறையட்டுமே???? *

சாமி கும்பிடுதலே முக்கிய கடமையாக செய்யும் மக்களை கொண்ட இந்தியா இலங்கை பாக்கிஸ்தானில் குற்றங்கள் குறைவு என்று இவர் எங்கிருந்து  மிகவும் தவறான தகவல்களை பெற்று கொண்டார்? வெளிநாடுகளில் வாழும் ஈழ தமிழர்களிடையே பண மோசடிகள் குற்றங்கள் செய்பவர்கள் ஆன்மீகவாதிகளே என்பது பகிரங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

கண்ணதாசன் அப்பலோ மருத்துவமனையில் அல்ல, அமெரிக்காவில் போய் படுத்து தனது உயிரை அந்த நாட்டின்  மருத்துவ விஞ்ஞானத்தால் காப்பாற்ற முடியுமா என்று இறுதி முயற்சியை எடுத்தார்.

தெரியாத தகவல்களுக்கு நன்றி.

தெரிந்த தகவல் சுப்பர்  ஸ்டார் ரஜனிகாந் இமய மலையை ஆகாயத்தை நோக்கி சாமி கும்பிடுகிறவர்  நோய்வந்த போது தனது புத்தியை பாவித்து சிங்கபூர் சென்று சிறந்த மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பினார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

சில நாடுகள்/சமூகங்களில் இருக்கும் குற்றச் செயல்களையும் மத நம்பிக்கையின் தீவிரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசமான காட்சி தெரிகிறது. 

உதாரணமாக இந்தியாவில் கடவுள் பக்தியுள்ளோர் எவ்வளவு பேர், கோயில்கள் யாத்திரைத் தலங்கங்கள் எத்தனை ஆயிரம்? அங்கே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் குறைவா?

ஸ்கண்டினேவியாவில், கனடாவில் கடவுள் நம்பிக்கையுள்ளோர்  இந்தியாவை விட குறைவு. அங்கே குற்றச் செயல்கள் அதிகமா? 

எதை ஒப்பிட்டீர்கள் என்று தெரியவில்லை! 

தனி மனிதர்களுடனான அனுபவம் உங்களுக்கு கடவுள் கண்ணைக் குத்தும் என்ற பயமே மக்களை நல்லவர்களாக்குகிறது என்று காட்டுகிறது போல! 

இதனால் தான் வாசிப்பைக் கொண்டு வந்தேன். பழகுபவர்கள் தெரிந்தவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மட்டுப் படுத்தப் பட்ட அனுபவம் தான் பெற முடியும். அந்த மட்டுப் பட்ட அனுபவம் கொண்டு சரியான கணிப்பீட்டை எந்த துறையிலும் செய்ய இயலாது. வாசிப்பு என்பது  பலரின் அனுபவங்களை எல்லாத் திசைகளில் இருந்தும் உள்வாங்கி கணிப்பை ஓரளவு சரியாக்க உதவும்! 

யாழில், தமது நேரடி அனுபவத்தை மட்டும் சாராமல் வாசிப்பையும் இணைத்து கருத்துகளை வெளியிடுவோர் என் பார்வையில் தீவிரம் தவிர்த்து சமநிலையாகத் தான் தெரிகின்றனர். வரும் கருத்துகள் கேட்போருக்கு உவப்பாக இல்லை என்பதால் வாசிப்பது தீமை என்ற கருத்து நிலவுகிறதென நினைக்கிறேன்! 

சகோ

இங்கே நல்ல சமூதாயத்துக்கு தேவையான  கருத்துக்கள்  வரும்போது எப்பொழுதும் வரவேற்க

உற்சாகப்படுத்த  தவறாதவன் யான்

அதேநேரம் சாதாரண மக்களின்  நம்பிக்கைகள்  மற்றும்  பற்றுக்களை  கேலி  செய்யும்போதும்  அதை கண்டும்  காணாமல்  செல்வதில்லை

இதுக்கும்  மதச்சாயம்  பூசமாட்டீர்கள்  என்ற  நம்பிக்கையில்??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதிகம்  வாசித்தவர்கள்  படித்தவர்கள் அடித்தட்டு  மக்களிடமிருந்து?????

யாழிலேயே சில  உதாரணங்களுண்டே???

அடித்தட்டு மக்கள் படித்தால் முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்று படிப்பைப் தடுத்த வரலாறையும் படித்துத்தான் இருக்கின்றோம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அடித்தட்டு மக்கள் படித்தால் முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்று படிப்பைப் தடுத்த வரலாறையும் படித்துத்தான் இருக்கின்றோம்.😎

நடுவில் புகுந்தால் இப்படி தான். படித்தால் முன்னுக்கு வரலாம் என்று பொருளாதாரத்தை முன்னிறுத்தி நடக்கும் நாடகங்கள் தானே இப்ப உலகம் உருக்குலைந்து கிடக்க காரணம். படித்தால் கொம்பும் முளைத்து விடுகிறது என்பதே எனது ஆதங்கமும் அலர்ச்சியும். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சமூதாயம் உருவாக நிறைய வாசிப்பு, படிப்பு, கேள்விக்கு உட்படுத்தும் நிலை தேவை.
கடவுள் கண்ணை குத்திவிடுவார் ஆகாயத்தை பார்த்து உன்னை படைத்தவனை கும்பிடு அல்லது சாமி குற்றம் என்று பயமுறுத்துவதெல்லாம் நல்ல சமுதாயம் உருவாக உதவாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.