Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

  • Replies 67
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள உட்டா  பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.அந்த தூணை அங்கே நிறுவியது யார், வேற்றுகிரகவாசிகளா என்பது போன்ற கேள்விகள் எழும்பி அவற்றிற்கு பதில் கிடைக்கும் முன்னரே, அதை அகற்றியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொருபக்கம், அந்த தூண் 2015, 2016 வாக்கிலேயே அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.இந்நிலையில், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள், ருமேனியா நாட்டில் அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியுள்ளது. அதன் உயரம் 13 அடி.இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகள் தான் இவற்றை பூமியில் வீசினார்களா...?  அல்லது யாராவது வேண்டுமென்றே மக்களை பரபரப்பாக்குவதற்காக இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது.யாராவது அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை அமைக்கவேண்டுமானால், அவர்கள் அரசின் கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், அந்த தூண் குறித்த விஷயம் மர்மமாகவே உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/01142735/Mysterious-metal-monolith-similar-to-one-found-in.vpf

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் விலைகூடின உலோகம் என்று ருமேனியக்காரனுக்கு சொல்லியிருப்பாங்கள் இராவோடை இரவாய் தங்கடை  நாட்டுக்கு கடத்தி கொண்டு போயிருப்பாங்கள் .  

  • கருத்துக்கள உறவுகள்

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர்

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர்

'மர்ம உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்!'

'மர்ம உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்!'

அப்போதுதான் நான்கு பேர் கொண்ட ஒரு குழு இந்த உலோகத் தூணை அந்த இடத்திலிருந்து மொத்தமாக எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் ராஸ் பெர்னார்ட்ஸ்.

அமெரிக்கா யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்திற்கு நடுவே 12 அடி உயரத்துக்கு திடீரென ஓர் உலோகத் தூண் தோன்றியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. எப்படி திடீரென தோன்றியதோ அதே போன்று திடீரென மறைந்தும் போனது இந்த உலோகத் தூண். இது எப்படிக் கண்டறியப்பட்டது, உலகளவில் எந்த அளவு கவனம் பெற்றது போன்றவற்றை விரிவாக தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.
திடீரென வந்தது, திடீரென மறைந்தது... நீங்காத 12 அடி உலோகத் தூண் மர்மம்!

உலோகத் தூணை நீக்கும் நாலு பேர்
 
உலோகத் தூணை நீக்கும் நாலு பேர் Ross Bernards

இது எப்படித் தோன்றி மறைந்திருக்கும் என மக்கள் பல்வேறு தியரிகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டுக் கொண்டிருக்க 'அந்த உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்' எனச் சாட்சி சொல்கிறார் அமெரிக்கா புகைப்பட கலைஞர் ராஸ் பெர்னார்டு. மற்றவர்களைப் போல இவரும் ஆர்வ மிகுதியால் உலோகத் தூணைப் படமெடுக்க விரும்பி கடந்த வெள்ளியன்று இரவு பாலைவனத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் நான்கு பேர் கொண்ட ஒரு குழு இந்த உலோகத் தூணை அந்த இடத்திலிருந்து மொத்தமாக எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் ராஸ் பெர்னார்டு.

அவர் பதிவில் "நானும் என் நண்பர்கள் மூன்று பெரும் வெள்ளியன்று இரவு ஆறு மணிநேர பயணத்துக்குப் பிறகு சுமார் 7 மணி அளவில் உலோகத் தூண் இருக்கும் இடத்தை சென்றடைந்தோம். செல்லும் போது ஒரு குழு திரும்பி வருவதைப் பார்த்தோம். நாங்கள் செல்லும்போது ஏற்கெனவே ஒரு குழு அங்கு இருந்தது. அந்த குழுவும் சீக்கிரம் கிளம்பிவிட்டது. அதன் பின் அந்த இடத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். அடுத்த நூறு நிமிடங்களுக்கு நிலவொளியில் உலோகத் தூணைப் புகைப்படங்கள் எடுத்தோம். நாங்கள் கிளம்ப ஆரம்பிக்கும்போதுதான் 4 பேர் கொண்ட ஒரு குழு அந்த இடத்திற்கு வந்தது. வந்தவர்கள் உடனடியாக உலோகத் தூணைக் கீழே சாய்க்கத்தொடங்கினர். சில நிமிடங்களில் மொத்தமாக அது கீழே சரிந்தது. பின்பு அதை உடைத்து அவர்களுடன் எடுத்து வந்திருந்த தள்ளுவண்டியில் போட்டு எடுத்துச்சென்றனர். 'எந்த ஒரு தடயமும் விட்டுவிட வேண்டாம்' என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டதைக் கவனித்தேன்.

அவர்கள் செய்வதுதான் சரி என்று தோன்றியதால் அவர்களை நாங்கள் தடுக்கவில்லை. அந்த பாலைவனத்தில் எப்படியும் 70 வாகனங்களைப் பார்த்திருப்போம். அனைத்து பக்கங்களிலிருந்தும் உலோகத் தூணைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் படையெடுத்து வந்துகொண்டிருந்தனர். மனித கால்தடம் படாமல் இருந்த அந்த இடம் நிரந்தரமாகப் பாழாக்கப்பட்டு வந்ததை நாங்கள் பார்த்தோம். இயற்கையை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் நல்லது." எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

இதனால் உலோகத் தூணைச் சுற்றியிருந்த மர்மம் ஓரளவு தெளிந்திருக்கிறது. ஆனால், அதை அங்கே இதே கும்பல்தான் வைத்ததா, அவர்கள் யார், வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. அமெரிக்க அரசு இது குறித்த விசாரணையை விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ருமேனியாவில் இதே போன்று திடீரென தோன்றிய உலோகத் தூண் அடுத்த நாளே மறைந்தும் போயிருக்கிறது.

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர் | Photographer Says He Saw 4 Men Take Down the mysterious Monolith in Utah (vikatan.com)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/12/2020 at 11:44, பெருமாள் said:

ஆரும் விலைகூடின உலோகம் என்று ருமேனியக்காரனுக்கு சொல்லியிருப்பாங்கள் இராவோடை இரவாய் தங்கடை  நாட்டுக்கு கடத்தி கொண்டு போயிருப்பாங்கள் .  

ருமேனியன் மாதிரி ஒரு கள்ளரை நான் இதுவரைக்கும் பாக்கேல்லை.அவங்களுக்கு எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் களவெடுக்காட்டில் பத்தியப்படாது.😁

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

இப்ப தமிழரை விட சிங்களவர்கள்தான் வங்கி  அட்டையை வங்கியை சுத்துவதில் முன்னுக்கு நிக்கிறார்கள் இங்கிலாந்தில் . என்ன ஆங்கிலம் சரளமாக தெரிவதால் பல இடங்களில் இலகுவாக தப்புகிறார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆல மரத்தடியில் பிள்ளையார் சிலை திடீரென்று தோன்றுவதில்லையா? அது போலதான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

இப்ப இங்கிலாந்தில் சிங்களவர்கள்தான் ரொமேனியர்களை விட மோசமான வேலைகளை செய்பவர்கள் சாம் சிக்கின் முதலாளி இடம் விசா இல்லாமல் வேலை செய்யும் சிங்களவர்கள் மாத்திரமே 80 பேருக்கு மேல் அனைவருக்கும் மணித்தியாலத்துக்கு இரண்டு பவுன் தான் சம்பளம் .

நெல்லையன் வந்தால் கதையா சொல்லுவார் .

சட்பரே பப்பில் மகிந்தவின் மகன் சின்ன மாமியே பாட்டுக்கு  ஆடும்போது நானும் அங்கிருந்தேன் அவரை கூட்டி வந்தது கள்ளமட்டை போடும் சிங்கள தாதா . 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, பெருமாள் said:

இப்ப இங்கிலாந்தில் சிங்களவர்கள்தான் ரொமேனியர்களை விட மோசமான வேலைகளை செய்பவர்கள் சாம் சிக்கின் முதலாளி இடம் விசா இல்லாமல் வேலை செய்யும் சிங்களவர்கள் மாத்திரமே 80 பேருக்கு மேல் அனைவருக்கும் மணித்தியாலத்துக்கு இரண்டு பவுன் தான் சம்பளம் .

நெல்லையன் வந்தால் கதையா சொல்லுவார் .

சட்பரே பப்பில் மகிந்தவின் மகன் சின்ன மாமியே பாட்டுக்கு  ஆடும்போது நானும் அங்கிருந்தேன் அவரை கூட்டி வந்தது கள்ளமட்டை போடும் சிங்கள தாதா . 

இல்லவே இல்லை.....
எல்லாத்துக்கும் பின்னணியிலை தமிழன் தான் இருக்கிறானாம்....😁

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இல்லவே இல்லை.....
எல்லாத்துக்கும் பின்னணியிலை தமிழன் தான் இருக்கிறானாம்....😁

எனக்கு தெரியும் அதற்கு ஆதாரம் இல்லை சிங்கனை விட்டு பிடிப்பம் சும்மா தான் நினைத்த்துக்கு கதை வருகிறது .

அவர் அடிக்கடி போகும் இடம் மேல் உள்ளது வாலாட்டமாட்டா .

ர்ர் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு தெரியும் அதற்கு ஆதாரம் இல்லை சிங்கனை விட்டு பிடிப்பம் சும்மா தான் நினைத்த்துக்கு கதை வருகிறது .

அவர் அடிக்கடி போகும் இடம் மேல் உள்ளது வாலாட்டமலா  போவினம்  .

ர்ர் 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

உங்களுக்கு இப்ப விளங்காது காலையில் வாங்க இனிய அதிகாலை வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு இப்ப விளங்காது காலையில் வாங்க இனிய அதிகாலை வணக்கம் .

🤣 இனிய அதிகாலை வணக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

CR நம்பரை தந்தால்  நல்லது பாஸ் இனிய காலை வணக்கம் உங்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

CR நம்பரை தந்தால்  நல்லது பாஸ் இனிய காலை வணக்கம் உங்களுக்கு .

பாதிக்கபட்டவர்களின் அனுமதி கேட்டுள்ளேன், கிடைத்தால் தனிமடலிடுகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

A large 10-foot tall monolith has appeared on the street outside Grandpa Joe's candy shop in Pittsburgh

அப்படி இப்படி சொல்லி கடைசியில் தாத்தா மிட்டாய் கடைக்காரன் உலோகத்தூனை செய்து தங்கள் கடைக்கு முன்னாள்  விளம்பரமாக்கி போட்டார்கள் இதைப்பார்த்து எத்தனை பேர் கிளம்ப போறாங்களோ .https://www.dailymail.co.uk/news/article-9020913/Another-monolith-appears-outside-sweet-shop-Pittsburgh.html?ito=social-facebook&fbclid=IwAR1kwq0PqCD57sMuowoNfUF_K1qCA-me0uo4j8D7rZPU2n0ScIzSs0-vKek

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

இப்படி ஒரு விடயம் பிரான்சிலும்  நடந்தது

ஆனால்  வந்தது ஆபிரிக்கர்

தலை நம்மவரே  தான்?

ஆனால் தமிழர்களின்  வீடுகளில் தான் நம்மவரின்  கைவரிசை

ஆனால் ரோமெனியர்கள் சர்வதேச லெவல் என்பதும்  உண்மையே?

இங்கே கடைக்கு  அவர்கள் வந்தாலே எல்லோரும் அலட்இ

நானே நினைப்பதுண்டு

எவ்வாறு இந்த  நிலைக்கு  எம்மை கொண்டு  வந்தார்கள்  என்று???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இப்படி ஒரு விடயம் பிரான்சிலும்  நடந்தது

ஆனால்  வந்தது ஆபிரிக்கர்

தலை நம்மவரே  தான்?

ஆனால் தமிழர்களின்  வீடுகளில் தான் நம்மவரின்  கைவரிசை

ஆனால் ரோமெனியர்கள் சர்வதேச லெவல் என்பதும்  உண்மையே?

இங்கே கடைக்கு  அவர்கள் வந்தாலே எல்லோரும் அலட்இ

நானே நினைப்பதுண்டு

எவ்வாறு இந்த  நிலைக்கு  எம்மை கொண்டு  வந்தார்கள்  என்று???

உண்மைதான் அண்ணை. ரொமேனியர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு இனத்தையே இப்படி பட்டியல் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

என்னை கேட்டால் அவர்கள் ஆரம்பத்தில் பியரை தூக்கி கொண்டு ஓடுவது, பாங் வாசலில் நின்று காசை பறிப்பது, போனை பிடுங்குவது, சிவப்பு விளக்கில் நின்று பிச்சை எடுப்பது, வாகன கண்ணாடியை கழுவி வம்படியாக காசு கேட்பது என்ற நிலையில்தான் 2003-2013 வரை இருந்தார்கள்.

அவர்களை மட்டை, வீடு புகுந்து நகையை மட்டும் கொள்ளை அடிப்பது ( லேப் டொப், ஐ போனை இப்போ எல்லாம் சீண்டுவதே இல்லை) என்று அடுத்த நிலைக்கு கொண்டு போய் அவர்களை பெரிய லெவலில் இறக்கி விட்டவர்கள் தெற்காசியர்களே. தனியே தமிழர்கள் மட்டும் இல்லை.

ஒரு கட்டத்தில் அவர்கள் தாமாகவே தொழிலை விருத்தி செய்ய தலைப்படுகிறார்கள் 🤣.

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களை கூட கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ் முதலாளிகள் பலர் உள்ள நாட்டில் வசிக்கும் எனக்கு, இன்னொரு இனத்தை பார்த்து கதைக்கும் தகுதி இல்லை என்பதே என் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

ஒரு செக்லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன். குளியல், எழுத்து, நனோ தொழில் நுட்பம், கறிக்குழம்பு,..நீண்டு கொண்டே போகுது தமிழர் உலகுக்களித்த கொடைகள்!

23 hours ago, குமாரசாமி said:

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

இந்த உள்நோக்கிய பார்வை இருந்திருந்தால் நாம் ஒருவேளை யூதர்கள் போல வந்திருப்போம்! இவ்வளவு ஆன பின்னும் இதை எங்கள் சமூகத்தில் அறிமுகம் செய்வது கல்லில் நார் உரிப்பது போன்ற வேலை! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.