Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வருகிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இலங்கை வரும் அஜித் டோவல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139387/hhhh.jpg

இதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் விஜயம்செய்து, இலங்கையின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமையைத் தொடர்ந்து அஜித் டோவலின் விஜயம் அமைந்துள்ளமை அரசியல் அவதானிகளால் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு முழுமையாக வழங்கப்பட மாட்டாது எனவும் தேசிய வளங்களை பிறநாட்டவர்களுக்கு விற்கும் கொள்கை அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை வருகிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201126-205006.jpg ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்கு நினைவஞ்சலி செலுத்தவல்லோ  இந்த நேரத்தில் வாறார் எண்டு நான் நினைத்தேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பிழம்பு said:

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

காஷ்மீரில் தாங்கள் எப்படியெல்லாம் அட்டூழியங்கள் செய்து போராட்டங்களை அடக்குகின்றோம் என விபரித்து ஆலோசனை வழங்க வருகின்றார் போலும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது!

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இந்திய அரசின் தூதுக் குழு இலங்கை வந்தடைந்துள்ளது.

அதன்படி இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் புதுடில்லியிருந்து இந்திய அரசுக்கு சொந்தமான விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தூதுக்குழுவை வரவேற்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர்.

இதேவேளை குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமட் தீதியுடன் மாலத்தீவு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதிநிதிகளும் நாட்டை வந்தடைந்தனர்.

மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. 

இதற்கு முன்பு புதுடில்லியில் இந்த மாநாடு 2014 இல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்  பிரதமர் மஹிந்தவுடன் பேசியது என்ன ?

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவாலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  இடையிலான சந்திப்பொன்று இன்று 2020.11.27 விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித்  டோவால், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வழங்கினார்.

கொவிட்-19 தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலைக்கு பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது எனத் தெரிவித்ததுடன், தொற்று நிலைமைக்கு மத்தியிலும் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்ல நேரிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பாலும் இராஜதந்திர கலந்துரையாடல்களை இணையத்தின் ஊடாக காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் அஜித் டோவால் தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்ததுடன், தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்தமையினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளமையால் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அஜித் டோவால் சுட்டிக்காட்டினார்.

spacer.png

எனினும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு, பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு இடையே கருத்தாடலொன்றை கட்டியெழுப்புவதுடன்இ பொருளாதார மந்தநிலைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலை வகிக்குமாறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் முன்மொழிந்தார்.

அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக தெரிவித்த அஜித் டோவால், கொவிட-19 நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீ அஜித் டோவால் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்  பிரதமர் மஹிந்தவுடன் பேசியது என்ன ? | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

memees.php?w=240&img=dml2ZWsvdml2ZWstd2F 

இது எப்ப.? காத்துதான் வருகுது அடிச்சுவிட ஒரு அளவு வேண்டாமா.?

1 hour ago, பிழம்பு said:

அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீ அஜித் டோவால் தெரிவித்தார்

அவர்களுக்கு வீடு கட்டுவது  இருக்கட்டும் .. நம்மட ஊர்ல எத்தனை சந்து பொந்து இருக்கு என்டு தெரியுமா.?😊

Screenshot-2020-11-27-23-15-16-513-org-m

 முதல்ல மத்தியான சாப்பாட்டுக்கு வழி இருக்கா .?தீட்றா கத்திய..☺️

3 hours ago, பிழம்பு said:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட 

சரிதான் .. அடுத்த வாரம் 

 இதையேதான் சீனாகார் வந்து கதைப்பினம்.. அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காகார் வந்து கதைப்பினம் ..

அதற்கு அடுத்த வாரம் மறுபடி கிந்தியன் வந்து கதைப்பினம் ..
...
..

போதும்டா ..
roflphotos-dot-com-photo-comments-201902

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சரிதான் .. அடுத்த வாரம் 

 இதையேதான் சீனாகார் வந்து கதைப்பினம்.. அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காகார் வந்து கதைப்பினம் ..

அதற்கு அடுத்த வாரம் மறுபடி கிந்தியன் வந்து கதைப்பினம் ..

புரட்சி இதையெல்லாம் தமிழரை அழித்தொழிக்க முதல் யோசித்திருக்கணும்.

இப்போ வெரி வெரி லேட்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

எல்லோரும்.... "முகமூடி"  போட்டு,  
நல்ல... சமூக இடைவெளி காப்பாற்றுகிறார்கள்.

அந்த... உயரிய குணம்..?  இருவரும் சேர்த்து... 
தமிழர்களை, குண்டு போட்டு... கொல்லும்  போது...
காந்தி தேசத்துக்கும், புத்த தேசத்துக்கும் வரவில்லையே..... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

எல்லோரும்.... "முகமூடி"  போட்டு,  
நல்ல... சமூக இடைவெளி காப்பாற்றுகிறார்கள்.

அந்த... உயரிய குணம்..?  இருவரும் சேர்த்து... 
தமிழர்களை, குண்டு போட்டு... கொல்லும்  போது...
காந்தி தேசத்துக்கும், புத்த தேசத்துக்கும் வரவில்லையே..... 

சிறித்தம்பி! உலகம் முழுவதும் போற்றப்படும் காந்தியையும் புத்தனையும் முழுமுதலாய் கொண்ட இரண்டு நாடும் தான் கேடுகெட்ட நாடுகள். மனித தன்மை இல்லாத நாடுகள். ஜனநாயகம் என்ற பெயரில் ஜனநாயகம் என்ன என்றே தெரியாத நாடுகள். மனித நேயத்தை போதித்த புத்தனை வணங்கி விட்டு  மறுகணம்  மானிட பலியெடுக்கும் நாடும் நாடுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உண்மை...குமாரசாமி அண்ணா....
இரண்டு... கள்ளரும் சேர்ந்தால், 
உலகத்தையே.. சுருட்டி... 
அடி மடியில்,  கொண்டு போகின்ற ஆக்கள்.

இவங்கள்,  வாயை.. திறந்தால், பொய்யும்...புரட்டும் தான் வரும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

உண்மை...குமாரசாமி அண்ணா....
இரண்டு... கள்ளரும் சேர்ந்தால், 
உலகத்தையே.. சுருட்டி... 
அடி மடியில்,  கொண்டு போகின்ற ஆக்கள்.

இவங்கள்,  வாயை.. திறந்தால், பொய்யும்...புரட்டும் தான் வரும். 

இஞ்சை பாருங்கோ நோட்டுக்கு நோட்டு காந்தியின்ரை படம். ஆனால்  அரசியல்வாதிகளும்/அரசும் செய்யிறது முழுக்க சுத்துமாத்து.....

வேட்டை ஆரம்பம்... பல லட்சம் கோடிகளை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள்-  பணமுதலைகளுக்கு பட்டை நாமம்..! | Income tax hunt against thousands of  Indians who have black money and ...

இவர்கள் எதற்காக வணங்குகின்றார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

Gotabaya Rajapaksa on Twitter: "Receiving blessings at the Sacred Bo Tree  in Anuradhapura this morning with HE Mahinda Rajapaksa, Members of  Parliament and other well-wishers in attendance #LKA…  https://t.co/dz46DJqGln"

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

memees.php?w=240&img=dml2ZWsvdml2ZWstd2F 

இது எப்ப.? காத்துதான் வருகுது அடிச்சுவிட ஒரு அளவு வேண்டாமா.?

அவர்களுக்கு வீடு கட்டுவது  இருக்கட்டும் .. நம்மட ஊர்ல எத்தனை சந்து பொந்து இருக்கு என்டு தெரியுமா.?😊

Screenshot-2020-11-27-23-15-16-513-org-m

 முதல்ல மத்தியான சாப்பாட்டுக்கு வழி இருக்கா .?தீட்றா கத்திய..☺️

சரிதான் .. அடுத்த வாரம் 

 இதையேதான் சீனாகார் வந்து கதைப்பினம்.. அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காகார் வந்து கதைப்பினம் ..

அதற்கு அடுத்த வாரம் மறுபடி கிந்தியன் வந்து கதைப்பினம் ..
...
..

போதும்டா ..
roflphotos-dot-com-photo-comments-201902

நல்ல கருத்துப்படங்களுடன் பதிவிட்டிருந்தீர்கள். என்னதான் இருந்தாலும் இலங்கை அரசு சொல்வதைத்தான் இந்திய அரசு கேட்க்கும். தமிழர்கள் உரிமை பற்றி காலத்துக்கு காலம் எதாவது பேசினாலும் இந்திய நலன்தான் அவர்களது முக்கிய நோக்கம். சீனாவை இலங்கையில் இருந்து தூரப்படுத்துவதட்காக அவர்கள் எதுவும் செய்வார்கள். எனவே தமிழர்போராட்டம் முடிவின்றி ஒரு  பக்கம் தொடரவே போகின்றது. சிங்கள அரசு என்ன செய்யபோகின்றார்கள் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிடடார்கள். அதையே இந்த அரசு தொடரப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ நோட்டுக்கு நோட்டு காந்தியின்ரை படம். ஆனால்  அரசியல்வாதிகளும்/அரசும் செய்யிறது முழுக்க சுத்துமாத்து.....

வேட்டை ஆரம்பம்... பல லட்சம் கோடிகளை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள்-  பணமுதலைகளுக்கு பட்டை நாமம்..! | Income tax hunt against thousands of  Indians who have black money and ...

இவர்கள் எதற்காக வணங்குகின்றார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

Gotabaya Rajapaksa on Twitter: "Receiving blessings at the Sacred Bo Tree  in Anuradhapura this morning with HE Mahinda Rajapaksa, Members of  Parliament and other well-wishers in attendance #LKA…  https://t.co/dz46DJqGln"

இது தலதா மாளிகையின் உள் அரண்மனையின் வளாகத்தில் உள்ள அரசமரம். இதுவே, முதன் முதலாக (புத்தரால் /?? அசோகனால்  ??) பௌத்த மதம் தூதனுப்ப பட்ட போது கொண்டுவரப்பட்ட மரம் என்று நம்பபடுகிறது.

இந்த இடத்திற்கு பொது சனத்தால்  செல்ல முடியாது. 

சொறி சிங்கள அரச உயர் மட்டங்களின் பெண்கள் கூட அருகில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தலதா மாளிகையில் பாதுகாக்கப்படும் புத்தரின் தந்த தாதுவே (அது இப்பொது விஜயனின் பல் என்ற நம்பிக்கையும் உண்டு, ஆனாலும் மனித பல்லின் பரிமாணத்தில் பெரிது என்றே நம்பப்படுகிறது), சிங்கள மக்களையும், அரசையும் தமிழர்களை யுத்தத்தில் அழித்து  வெற்றி பெற்றத்துக்கான முழுமுதல் இறைவரம் என்று கோத்த நம்புகிறார்,  தனது உள்வட்டாரத்திலும் வெளிப்படையாக சொல்லி வருகிறார்.

இந்த மரம், சிங்கள பௌத்த மதத்தின் உயிரையும், உணர்வையும் பிரதிபலிக்கும் ஓர் உயிராக போற்றப்படுகிறது. 
       
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

ஆனாலும் மனித பல்லின் பரிமாணத்தில் பெரிது என்றே நம்பப்படுகிறது)

யானையின் தந்தமாக இருக்குமோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.