Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் 130 பில்லியன் ரூபாய்களை புதிதாக அச்சடித்துள்ளமை இலங்கையை சிம்பாப்வே போன்று மாற்றப்போகின்றது - சம்பிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் புதிதாக 130 பில்லியன் ரூபாய்களை அச்சடித்துள்ளதாகவும், இந்த திட்டமானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 

வெகுவிரைவில் இலங்கை சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கும் அபாயம் : சம்பிக்க  ரணவக்க | Virakesari.lk

2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகின்றதாகவும், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன், கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார், 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சகல தொழில் துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது, கடந்த எட்டு மாதங்களில் 3 வீதமே வாகன இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, 

அதேபோல் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இறக்குமதியை தடை செய்வதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில் உலக நாடுகள் இதற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். இறக்குமதியை நிறுத்தினால் ஏற்றுமதியும் தடைசெய்யப்படும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கடன் நெருக்கடி நிலைமையில் இந்த வரவு செலவு திட்டத்தில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகள் கிடைக்கவில்லை, வெறுமனே ஏமாற்று வேலைத்திட்டமொன்றையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

வீதி அபிவிருத்திக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது, நாட்டின் சகல அதிவேக நெடுஞ்சாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என அரசாங்கம் கூறுகின்றது, இப்போதே சில இடங்களில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் உள்ளது, இன்று நாட்டிற்கு வீதி அபிவிருத்தியா அவசியம், நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு முழுமையான வருமானம் இல்லாத நிலையில் வீதிகளை அபிவிருத்தி செய்து மக்கள் பயன் பெறுவார்களா? 

அரசாங்கம் வீதி அபிவிருத்தியை வைத்து அடுத்த மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. 2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகின்றது, பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போகின்றது, கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது. எனவே அரசாங்கம் புதிய பணத்தை அச்சடித்து நிலைமைகளை கையாள நினைக்கின்றது, நவம்பர் மாதம் தொடக்கம் அடுத்த ஆண்டு டிசம்பர் வரையில் 130 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது நவீன பொருளாதார நகர்வு என கூறினாலும் சிம்பாப்வே நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படப்போகின்றது. புதிதாக பணம் அச்சடித்ததன் விளைவையும் அடுத்த ஆண்டில் பார்க்கத்தான் போகின்றோம்.

அரச நிறுவனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வீழ்ச்சி கண்டு வருகின்றது, நல்லாட்சியில் இலாபமடைந்த 11 நிறுவனங்களும் நட்டமடைந்துள்ளது. இவற்றை மீட்டெடுக்க தெரியாது அரச சொத்துக்கள் விற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பில் பல நிலங்களை சர்வதேசத்திற்கு விற்கப்படவுள்ளது, நாட்டில் முக்கியமான இடங்களையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றது. 

இதனால் சமூகத்தில் பாரிய வெடிப்பொன்று உருவாக்கப்போகின்றது, இதற்கு ஒரு சில ஊடகங்களும் துணை போகின்றனர். இந்நிலையில் கொரோனாவையும் ஊழலாக மாற்றியுள்ளனர். நாட்டில் பொய்யான பூதமொன்ரை உருவாக்கி அதன் மூலமாக மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது என்றார். 

அரசாங்கம் 130 பில்லியன் ரூபாய்களை புதிதாக அச்சடித்துள்ளமை இலங்கையை சிம்பாப்வே போன்று மாற்றப்போகின்றது - சம்பிக்க | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, பிழம்பு said:

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் புதிதாக 130 பில்லியன் ரூபாய்களை அச்சடித்துள்ளதாகவும், இந்த திட்டமானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 

அப்ப ஒரு அமெரிக்கன் டொலர் மாத்துறதெண்டால் ரங்குப்பெட்டிதான் கொண்டு போக வேணும்.:cool:

image.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பிழம்பு said:

2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகின்றதாகவும், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன், கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதே கதையை முன்பு சொன்னபோது வந்து கம்பு சுற்றியவர்களை தேடுகிறேன் .

49 minutes ago, பிழம்பு said:

நவம்பர் மாதம் தொடக்கம் அடுத்த ஆண்டு டிசம்பர் வரையில் 130 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது நவீன பொருளாதார நகர்வு என கூறினாலும் சிம்பாப்வே நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படப்போகின்றது. புதிதாக பணம் அச்சடித்ததன் விளைவையும் அடுத்த ஆண்டில் பார்க்கத்தான் போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சொன்னம் தானே மகிந்த மாமா இந்த வரவோடு 10,000 தாள் விடுவாருன்னு.  நிலைமை ஒரு இலட்சம் ரூபா தாள் வரும் போல இருக்கு. சிங்கள தேசத்தை கூறுபோட்டு விற்கிறாய்ங்க... தமிழனோடு பகிர்ந்து கொண்டு ஒரு பேரழிவு யுத்தத்தை தவிர்த்திருந்தால்.. இந்த நிலைமை வந்திருக்குமா...??!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

நாங்க சொன்னம் தானே மகிந்த மாமா இந்த வரவோடு 10,000 தாள் விடுவாருன்னு.  நிலைமை ஒரு இலட்சம் ரூபா தாள் வரும் போல இருக்கு. சிங்கள தேசத்தை கூறுபோட்டு விற்கிறாய்ங்க... தமிழனோடு பகிர்ந்து கொண்டு ஒரு பேரழிவு யுத்தத்தை தவிர்த்திருந்தால்.. இந்த நிலைமை வந்திருக்குமா...??!

கொஞ்சம் பொறுங்க வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வந்த கணக்காய்  சைனா லங்காவுக்கு ஆதரவாய் கருத்துக்கள் பாய்ந்து வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்காத நாடு சீரழிய வேண்டுமென்று விரும்புவது இயல்பானது. ஆனால் கொஞ்சம் மெட்ரிகசையும் பார்க்க வேணும்: சிறி லங்காவின் தற்போதைய பணவீக்கம் 4.6%, சிம்பாப்வே >300%. கீழே தகவல் ஆதாரம் பார்க்க விரும்பியோருக்கு. 

பணத்தை அச்சடித்தாலே பணவீக்கம் வந்து விடாது. 

https://www.statista.com/statistics/455290/inflation-rate-in-zimbabwe/

https://www.statista.com/statistics/728516/inflation-rate-in-sri-lanka/

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

என்னது சம்பிக்க ரணவிக்கவுக்கு சிறீலங்காவை பிடிக்கலையா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பிழம்பு said:

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் புதிதாக 130 பில்லியன் ரூபாய்களை அச்சடித்துள்ளதாகவும், இந்த திட்டமானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 

கலோ சம்பிக்க! அப்பிடியொண்டும் வராது.இதுக்கு நான் காரெண்டி.
இப்படிக்கு..
மா.க.மா :cool:

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

என்னது சம்பிக்க ரணவிக்கவுக்கு சிறீலங்காவை பிடிக்கலையா??

இப்படித்தான் சைனா லங்காவின்  கொரனோ  பரவலுக்கு வீரம் பேசியவர்கள் இப்ப அந்த திரிப்பக்கமே  வருவதில்லை .😀 இதெல்லாம் ..............

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

இப்படித்தான் சைனா லங்காவின்  கொரனோ  பரவலுக்கு வீரம் பேசியவர்கள் இப்ப அந்த திரிப்பக்கமே  வருவதில்லை .😀 இதெல்லாம் ..............

அங்கே வந்து தான் சொல்ல வேண்டுமோ?

இங்கேயே சொல்லலாம். நூற்றுக் கணக்கில் மரணம் வரும், ஆயிரக்கணக்கில் கேஸ்கள் வரும் சொல்லியிருக்கிறேன். இன்னும் கொரனா தடுப்பில் அரசு கடுமையாக நேர்மையாக நடந்து கொள்கிறது. 

அப்படியில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் உங்களிடம் இல்லை! இருக்கோ?🤔

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

உங்களுக்கு  கருத்து எழுதுவதில்லை நன்றி வணக்கம் போட்டபின்னும் ................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்களுக்கு  கருத்து எழுதுவதில்லை நன்றி வணக்கம் போட்டபின்னும் ................

பெருமாள், எனக்கு நேரே எழுதாமல், நான் அங்கே சொன்னதை மறைமுகமாக கேள்விக்குள்ளாக்கும் போது நான் பதிலைச் சொல்வதில் சட்டப் பிரச்சினை இல்லையென நினைக்கிறேன்.  

என்னை பகிஷ்கரிப்பதென்றால் என்னைப் பற்றி ஏனையோருடன் பேசுவதும் நடக்கக் கூடாதென்று நினைக்கிறேன். இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க நினைக்கிறது போல நடக்காது ,மூன்று வேளையும்  கிரி பத்தும் கட்ட சம்பலும் அடித்த சிங்களவன் 
தமிழனையும் முஸ்லீம்களையும் போட்டு தாக்குவேன் என்று சொன்னால் ஒரு நேரம் மஞ்சொக்கா கொளயை  மட்டும் தின்னும் நிலை வந்தாலும் சுண்டித்தின்று விட்டு  மஹிந்த மாபியாவுக்கு ஆதரவு கொடுப்பினம் 
நாடி நரம்பெல்லாம் ஓடுவது இனவெறி இரத்தம் (சின்ஹ லே) , அவ்வளவு சீக்கிரம் வழிக்கு வராது 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்ப அவிவிருத்தி மூலம் நாட்டை முன்னேற்றி எல்லாரும் ஒண்ணுக்கு இருப்பம் எண்டு சொன்னதெல்லாம் பொய்யா மனே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அப்ப அவிவிருத்தி மூலம் நாட்டை முன்னேற்றி எல்லாரும் ஒண்ணுக்கு இருப்பம் எண்டு சொன்னதெல்லாம் பொய்யா மனே? 

யாரு மனே அபிவிருத்தி மூலம் நாட்டை முன்னேற்ற வெளிக்கிட்டது ...
யட்டியே இல்லாமல் அம்மணமாக நிற்கும்  தமிழனுக்கு ஒருதுண்டு கோவணத்துணி கிடைத்தாலே போதும் என்று தானே அனுப்பினம், மழைக்கு ஒதுங்கவே ஓட்டை குடில் இல்லை ஒதுங்க கிடுகோலை போட்ட கூரையாவது பெற்றுகொள்ளப்பாருங்க என்று அனுப்பினதுக்கு எதோ  Burj Kalifa இல் executive suite எதிர்பார்த்த  மாதிரி பிளேட்டை மாத்தி போடுறீங்களே மனே      

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிடுகும் கிடையாது மனே...குனிய குனிய குட்டுறதுதான் மனே அவங்க ஸ்டைல். 48 இல இருந்து நிமிந்தாலும் குட்டுறாங்க, குனிஞ்சாலும் குட்டுறாங்க.

இதில நிமிந்து வெல்லுவோம்னு தேசிக்காய் அரசியல்வாதிகள் சொன்னது எவ்வளவு பொய்யோ அதே அளவு பொய்தான் குனிஞ்சு வெல்லுவோம் என கொச்சிகாய் அரசியல்வாதிகள் சொல்லுவதும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நிறைய கடனோடு இருக்கிற நாடு.காசு அடிக்கிறதெண்டு கிளம்பியாச்சுது, எதற்காக வெறும் 130 பில்லியன் அடித்து பிறகும் கடனோடு இருந்து மாரடிக்கனும். ஒரு 5000 / 10000 பில்லியன் அடிச்சு கடன் எல்லாம் குடுத்துட்டு கோல்பேசில கிடந்து ஹாயாய் காத்து வாங்கலாமே .....( நமக்கு இந்த சிஸ்டம் புரியல்ல அதுதான் ....).....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கிடுகும் கிடையாது மனே...குனிய குனிய குட்டுறதுதான் மனே அவங்க ஸ்டைல். 48 இல இருந்து நிமிந்தாலும் குட்டுறாங்க, குனிஞ்சாலும் குட்டுறாங்க.

இதில நிமிந்து வெல்லுவோம்னு தேசிக்காய் அரசியல்வாதிகள் சொன்னது எவ்வளவு பொய்யோ அதே அளவு பொய்தான் குனிஞ்சு வெல்லுவோம் என கொச்சிகாய் அரசியல்வாதிகள் சொல்லுவதும்.

இப்பதானே மனே குனியத்தொடங்கி இருக்கினம் கொச்சிக்காய் அரசியல்வாதிகள் .
தேசிக்காய்கள் நிமிந்து நின்று வருடாவருடம் தீபாவளி ,பொங்கல்  டபுள் டமாக்கா ஆபர் என்று 
 அடிச்சு விடும்போதெல்லாம்  விசிலடித்து வருசக்கணக்கில்ல லட்டு லட்டாக தூக்கி கொடுத்துவிட்டு 
இப்போதான் கிரௌண்டில் இறங்கியிருக்கும்  கொச்சிக்காய் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுவது சரியா மனே 
குறைந்தது இன்னொரு பத்துவருசம் இவிங்களுக்கும்  கொடுத்துப்போட்டு தானே மனே ஒப்பிடவேணும்,

48 இல இருந்து நிமிந்தாலும் குட்டுறாங்க, குனிஞ்சாலும் குட்டுறாங்க,
மனே இதுதெரிஞ்சுமா வருசா வருஷம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புது புது படமாக ரிலீஸ் பண்ணினீங்க,
போங்க மனே  ,குருட்டு பூனைக்கு பின்னாடி முரட்டு தனமாக ஓடி கவுந்தடிச்சு காலை உடைச்சிக்கிட்டதற்கப்புறம் காமெடி பண்ணாம

3 minutes ago, suvy said:

ஏற்கனவே நிறைய கடனோடு இருக்கிற நாடு.காசு அடிக்கிறதெண்டு கிளம்பியாச்சுது, எதற்காக வெறும் 130 பில்லியன் அடித்து பிறகும் கடனோடு இருந்து மாரடிக்கனும். ஒரு 5000 / 10000 பில்லியன் அடிச்சு கடன் எல்லாம் குடுத்துட்டு கோல்பேசில கிடந்து ஹாயாய் காத்து வாங்கலாமே .....( நமக்கு இந்த சிஸ்டம் புரியல்ல அதுதான் ....).....!  🤔

இப்படி அடிச்சால் அமெரிக்காவுக்கே கடன் கொடுக்கலாம் ,சைனாவோட கடனை டூ மினிட்ஸில் அடைக்கலாம் 
நாம சொன்னா யாரன்னே கேட்கப்போறாங்க  

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இப்படி அடிச்சால் அமெரிக்காவுக்கே கடன் கொடுக்கலாம் ,சைனாவோட கடனை டூ மினிட்ஸில் அடைக்கலாம் 
நாம சொன்னா யாரன்னே கேட்கப்போறாங்க  

அதானே  உங்களை சைனா லங்காவின்  பொருளாதார அமைச்சராய் நியமிக்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இப்பதானே மனே குனியத்தொடங்கி இருக்கினம் கொச்சிக்காய் அரசியல்வாதிகள் .
தேசிக்காய்கள் நிமிந்து நின்று வருடாவருடம் தீபாவளி ,பொங்கல்  டபுள் டமாக்கா ஆபர் என்று 
 அடிச்சு விடும்போதெல்லாம்  விசிலடித்து வருசக்கணக்கில்ல லட்டு லட்டாக தூக்கி கொடுத்துவிட்டு 
இப்போதான் கிரௌண்டில் இறங்கியிருக்கும்  கொச்சிக்காய் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுவது சரியா மனே 
குறைந்தது இன்னொரு பத்துவருசம் இவிங்களுக்கும்  கொடுத்துப்போட்டு தானே மனே ஒப்பிடவேணும்,

48 இல இருந்து நிமிந்தாலும் குட்டுறாங்க, குனிஞ்சாலும் குட்டுறாங்க,
மனே இதுதெரிஞ்சுமா வருசா வருஷம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புது புது படமாக ரிலீஸ் பண்ணினீங்க,
போங்க மனே  ,குருட்டு பூனைக்கு பின்னாடி முரட்டு தனமாக ஓடி கவுந்தடிச்சு காலை உடைச்சிக்கிட்டதற்கப்புறம் காமெடி பண்ணாம

இப்படி அடிச்சால் அமெரிக்காவுக்கே கடன் கொடுக்கலாம் ,சைனாவோட கடனை டூ மினிட்ஸில் அடைக்கலாம் 
நாம சொன்னா யாரன்னே கேட்கப்போறாங்க  

மனே,

நாங்க காலை ஒடச்சி மாரி நீங்களும் ஒடக்கணுமா மனே🤣 

சரி மனே என்ன நடக்குதுன்னு பாப்பம் மனே. 

எனக்கு நம்பிக்கை இல்ல மனே ஆனா நடந்தா சந்தோசம். 

ஆன அடுத்த ஐந்து வருசத்துல வந்து தேசிக்காய் செய்யலத்தானே அவங்கள கேட்டீங்களா? என்னு கேக்கப்படாது மனே.

தேசிக்கா செய்யலன்னுதான் கொச்சிகாய அனுப்பி இருக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

ஆன அடுத்த ஐந்து வருசத்துல வந்து தேசிக்காய் செய்யலத்தானே அவங்கள கேட்டீங்களா? என்னு கேக்கப்படாது மனே.

தேசிக்கா செய்யலன்னுதான் கொச்சிகாய அனுப்பி இருக்கு

என்ன அண்ணே

சுமந்திரனால் முடியாட்டி அடுத்து நரேந்திரனை தேடுவோம் என்று உங்கள் கழக உறுப்பினர் ஒருவர் சொன்னது ஞாபகம் இருக்கா...?

அது போலத்தான் நாளை கொச்சிக்காவால் முடியாட்டில் புடலங்காயுடன் வருவோம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன அண்ணே

சுமந்திரனால் முடியாட்டி அடுத்து நரேந்திரனை தேடுவோம் என்று உங்கள் கழக உறுப்பினர் ஒருவர் சொன்னது ஞாபகம் இருக்கா...?

அது போலத்தான் நாளை கொச்சிக்காவால் முடியாட்டில் புடலங்காயுடன் வருவோம்

அக்னி,

ஏதேது என்னை ஒரேயடியா கூத்தமைப்பு தேசிக்காய் என்றே முடிவு கட்டி விட்டீர்களா🤣

நான் ஒரு அல்லாடும் வாக்களன் ஐயா (அட அதுதான் floating voter). எதை தின்றால் இந்த பித்தம் தீரும் என்று தெரியாமல் ஒவ்வொரு நேரத்திலும் உள்ளதில் நல்லதாய் பார்த்து தின்னுகிறேன்🤣.

2013-14 கூட்டமைப்பு நல்லம் என்று எழுதியது உண்மை, ஆனால் 2014 இலே இவர்கள் வேலைக்கு ஆகமாட்டார்கள் என்று தெரிந்து யாழில் அதை எழுதியும் விட்டேன். 

அவர்களிடம் பட்ட அனுபவம், இலங்கை பற்றிய பட்டறிவு, நீங்கள் கைகாட்டும் ஆக்களும் இப்படியே என்பதை உணர்துகிறது.

நீங்கள் வேற ரொம்ப ஓப்பனாக புடலங்காயோடு வரும்வோம் என்கிறீர்கள் 🤣( பட் ஐ லைக் தட் ஹானஸ்டி, வடிவேலு சொன்னமாரி பிக்காலிதனம் பண்ணினாலும் பெர்பெக்ட்டா பண்ணனும்🤣).

தேசிக்காயோ, கொச்சிகாயோ, புடலங்காயோ... நாம் காயடிபடுவது மட்டும் மாறப்போவதில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் வேற ரொம்ப ஓப்பனாக புடலங்காயோடு வரும்வோம் என்கிறீர்கள் 🤣( பட் ஐ லைக் தட் ஹானஸ்டி, வடிவேலு சொன்னமாரி பிக்காலிதனம் பண்ணினாலும் பெர்பெக்ட்டா பண்ணனும்

So do I , 

இந்த பிக்காலித்தன ஹானஸ்ட்டியில் எனக்கு குருநாதார்களே தேசிக்காய்கள் தான் அண்ண , அதாவது அது வேற வாய் இது நாற வாய் என்று இருக்காத தம்பி நாறிப்போயிருவ என்று செயன்முறை பாடம் எடுத்த குருநாதர்கள், இதைக்கூட அவிங்க கிட்ட இருந்து கத்துக்காட்டி எப்படி

ஆனால் இப்பவே ஒன்றை சொல்லிப் போடுறேன் நாளைக்கு தீர்வு அது இது என்று நம்மளிட்ட குத்தி முறியக்கூடாது,நம்முடைய டார்கெட்டே கிழக்கு தமிழர்களுக்கு ஒரு 100 அரச வேலைவாய்ப்பு மட்டுமே அதற்கு மேலே வருவதெல்லாம் போனஸ்.உந்த உரிமை,தீர்விற்காக ஏற்கனவே இத்துப்போய் காத்து போன கூட்டம் உள்ள போயிருக்கு அவிங்க கிட்ட கேக்கனும் ஏன்னா நமக்கும் அவிங்களுக்கும் பங்கில்லை ...

One more thing உங்க பித்தம் நம்ம பக்கத்தால் தெளிய வாய்ப்பேயில்லை ராஜா, திரும்பவும் உங்கள் பழைய இத்துப் போன கூட்டத்திடம் முயற்சிப்பது தான் எனக்கு தெரிந்த சிறந்த வழி, ஏன்னா நாம எதுக்கு உள்ளாற அனுப்பினோமோ அதற்கு அதிகமாக எதிர்பார்த்து பல்பு வாங்கினால் பிழை அவிங்கலோடது கிடையாது பாருங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்ப சரி. ஒரு 100 வேலைவாய்ப்பை எடுத்து கொடுத்தால் அதுவே பிள்ளையான், வியாழன் தமது கடமையை செவ்வனே செய்ததாக அர்த்தம். அதுக்கு மேல் அவர்களை கேள்வி கேட்கபடாது.

ஏன் பாஸ் அந்த கொசுறு 100 வேலைவாய்ப்பு. அதையும் விட்டுங்க🤣.

அவர்களை நாம் பாராளுமன்றம் அனுப்பியதே அந்த கண்டீனில் போய் டீ குடிக்கத்தான் - அதை அவர்கள் செய்தா போதும்னு சொல்லி முடிச்சிடுங்க 🤣

அரசியல் பொறுப்பு கூறலை பார்த்து எனக்கு தலை சுத்திடிச்சி🤣

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு எங்கடை பிரச்சனை.அங்குள்ளவனுக்கு அவன் பிரச்சனை.எப்ப இரன்டு பேரின் பிரச்சனைகளும் ஒரே கோட்டில் வருகுதோ அப்போ எல்லா யாழ்கள பிரச்சனைகளும் ஓகே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.