Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்டன் பாலசிங்கம் உறவும் முரணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குணா. 

ஜப்பான் மாநாடு பகிஷ்கரிப்பு என் பார்வையில் ஏமாற்றகரமான முடிவு. பாலசிங்கத்தார் இதை எப்படி ஆதரித்தார் என்ற வியப்பு இருந்தது. விடை கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கும் பாலசிங்கத்துக்கும் கடைசி நேரத்தில் சில முரண்கள் இருந்தது என்ற உண்மையையும் அதற்கு கால்கோலிட்டது சிவராம் என்ற நரி என்பதையும் இப்பவாவது வெளிப்படையாகக் கூறிய குணா நல்லவரா கெட்டவரா?🙄

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

புலிகளுக்கும் பாலசிங்கத்துக்கும் கடைசி நேரத்தில் சில முரண்கள் இருந்தது என்ற உண்மையையும் அதற்கு கால்கோலிட்டது சிவராம் என்ற நரி என்பதையும் இப்பவாவது வெளிப்படையாகக் கூறிய குணா நல்லவரா கெட்டவரா?🙄

அமரர் சிவராமின் சொல்லுக்கு எவ்வளவு செல்வாக்கு புலிகளிடம் இருந்தது என எனக்குத் தெரியாது. ஆனால், பாலசிங்கத்தாரின் வரலாற்றையும் சிவராமின் கருத்தையும் சீர் தூக்கிப் பார்த்து, யார் சொல்வதைக் கேட்பது என்பதை தலைமை முடிவு செய்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். 

அமைப்பினுள்  எதிர்காலம் குறித்து கருத்து வேறு பாடு இருந்தது என்பதை ஆரோக்கியமான விடயமாகப் பார்க்க வேண்டும். இதை வெளியே காட்டிக் கொள்ளாமல் செயற்பட்டிருக்கிறார்கள், அதுவும் ஒரு இராணுவ அமைப்பின் இயல்பு தானே? 

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் டோக்கியோவுக்கு போகவேண்டும் என்று சொல்லியும் போகாமல் விட்டு பேரழிவைச் சந்தித்ததுதான் வரலாறு.

புலிகள் யாழ்ப்பாணத்தையும் திருகோணமலை துறைமுகத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த இராணுவ முயற்சி தோல்வியில் முடிந்ததற்கும், வலுச்சமநிலை இல்லாமல் போனதற்குமான  காரணங்கள் தெரிந்திருந்தும் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடரவில்லை?

உண்மைகள் கசப்பானவை என்றாலும் வெளிப்படையாக அது  போராட்டத்தில்  பாரிய இழப்புகளுடன் வாழும் மக்களுக்கு  தெரிவிக்கப்படுவதே,  தமிழ் மக்களுக்கான  அரசியலை எதிர்காலத்தில் கொண்டு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். எப்படியோ ஈழத்தமிழரின்  வாழ்வுரிமை போராட்டம் புதியதலைமுறையிடம் கையளிக்கப்பட்டு விட்டது. வரலாற்றில் எமது வெற்றிகளை மட்டும் ஊதி பெருப்பபித்து, அதை வைத்து  எம்மிடையே மட்டும் பெருமை பேசிப் பேசி சுகம் காண்பதை விடுத்து, எமது வெற்றிகளுடன் தோல்விகளையும் எமது பலவீனங்களையும் சரி சமனாக வெளிப்படையாக பேசுவதன் மூலமே எதிர் கால தலைமுறை வரலாற்றில்  எமது  தவறுகளை ஆயவு செய்து அவர்களது பாதையிலாவது. வெற்றி நடை போட உதவியாக இருக்கும். 

எதிர்கால சந்ததிக்கு உண்மைகளை மறைப்பது அவர்களுக்கு செய்யும்  ஒரு மிகப் பெரிய துரோகமாக இருக்கும். அந்த வகையில் திரு குணா கவியழகனின் வெளிப்படையான இந்த அரசியல் ஆய்வு வரவேற்கப்படவேண்டியது. 

  • கருத்துக்கள உறவுகள்

பக்கச் சார்பின்றி, நடந்தவை நடந்தபடியே சொல்லி இருக்கிறீகள் குணா.

1. டோக்கியோ மகாநாடு ஒரு பொறி என்பதை பாலா, புலிகளின் தலைமை இரெண்டுமே கண்டுள்ளன. ஆனால் அதை எப்படி கையாளுவது என்பதில்தான் கருத்து வேறுபாடு. 

2. யாரின் நிலைப்பாடு சரி என்பதை “காலம் சொல்லும்” என்பது அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.  புலிகள் எடுத்த போர் முயற்சிகள் பலன் தந்திருந்தால், இன்றைக்கும் நாங்கள் எல்லாரும் பார்த்தாயா எங்கள் தலைவரின் மதி நுட்பத்தை என்று எழுதியபடி இருப்போம். 

3. மேலே சொன்னது உண்மையாகினும், பாலாவின் அணுமுகுறையை தலைமை ஏற்க முடியாது போக காரணம் தலைமை, ஆயுதப்போரின் மூலம் நாட்டின் அத்தனை பிரதேசங்களையும் விடுவித்து தனிநாடு காண்பதே ஒரே தீர்வு என்பதில், என்பதில் மட்டுமே, நம்பிக்கை கொண்டிருந்ததே. படிப், படியாக இலக்கு நோக்கி நகர விடமாட்டார்கள், ஆயுதம் மட்டுமே ஒரே பலம் என தலைமை நம்பியது.

ஆனால் கள நிலமை தெரிந்த பலருக்கு இலங்கையின் வடகிழக்கை இப்படி விடுவித்து, கட்டுபாட்டில் வைத்திருப்பது சாத்தியமில்லை என்பது தெரிந்திருந்தது. ஆயுத போராட்டத்துக்கு ஒரு இயற்கை எல்லை உண்டு அதை அடைந்தாகி விட்டது என்பதும் தெரிந்திருந்தது. பாலா இவ்வகையில் வருகிறார்.

யுத்த விடயங்கள், இலங்கை, இந்திய அரசியலில் தலைமைக்கு இருந்த பார்வை துல்லியம், சர்வதேச அணுகுமுறை பற்றி இருக்கவில்லை. 

கூடவே ஆயுதததால் மட்டுமே இந்தளவு முன்னேறியுள்ளோம், இதுதான் எமது விளையாட்டு, இதை விடுத்து அவர்கள் விளையாட்டான அரசியலில் இறங்கி நம்மால் வெல்ல முடியாது என்ற (குறை) தன்மதிப்பீடும் ஒரு காரணம்.

ஆகவே இருவரும் தமக்கு, அந்த காலத்தில் சரி எனபட்ட முடிவை முன் வைத்தார்கள்.

4. ஆனால் பாலசிங்கம் தனியே ஒரு அரசியல் போராளி மட்டும் அல்ல. பல நாட்டு தொடர்புடையவர். எந்த தடை செய்யபட்ட பயங்கரவாத அமைப்பின் மதியுரைஞரை, கப்பல் மூலம் சிங்கபூர் அனுப்பி, அங்கே வைத்து கடவுச்சீட்டு கொடுத்து இங்கே வரவைத்து, வருடா வருடம் மாவீரர் உரையும் ஆற்ற விட்டார்கள்? யாரையும் இல்லை. ஆனால் அவரை விட்டார்கள். பலர் அவரை மேற்கின் ஏஜெண்ட் என்பார்கள். நான் அதை ஏற்கவில்லை. கடைசிவரை தன் அமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருந்த ஒருவர் அவர். ஆனால் ஒரு ஏஜெண்டை போல அவர் மேற்கு நாடுகளுக்கு தேவையானவராக இருந்தார். ஆகவே “டோக்கியோவுக்கு போகாட்டில் எல்லாரும் சேர்ந்து அடிப்பாங்கள்” என்று அவர் சொன்னதை தலைமை மிகவும் கவனிப்புடன் கேட்க தவறியது பாரிய சறுக்கலே.

5. சிவராம் மீது பல விடயங்களில் ஒரு நம்பிக்கையீனம் இருந்தது எனவே அவர் எழுதியதை வைத்து புலிகளின் தலைமை முடிவெடுத்திருக்கும் என்றோ, அதுவே முரணின் ஆரம்பம் என்றோ நான்கருதவில்லை. ஆனால் தலைமைக்கு நெருக்கமான, டோக்கியோவுக்கு போக கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தோர் இதையும் தமது நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க பயன்படுத்தி இருக்கலாம்.

6. நான் அறிந்தவரையில் டோக்கியோவில் வைத்து புலிகளை ஆயுத ஒப்படைப்பில் கையெழுத்து இடும் படி கோரபட இருக்கவில்லை. Weapons decommissioning  எனும் ஆயுதங்கள் அவர்களாகவே பாவனையில் இருந்து அகற்றும் முயற்சிக்கு ஓம்படுவோம் என சொல்லவே வலியுறுத்தபட இருந்தது. IRA இதைத்தான் செய்தது. அவர்கள் பகுதியிலேயே ஆயுதங்களை கிட்டங்கிகளில் மூடி சீல் வைத்தல். இதை வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்காணிப்பர். இதற்கு பதிலாக பல அரை நிரந்தர நிர்வாக, நிதி கட்டமைபுக்களை வடகிழக்குக்கு வழங்கி...முடிவில் சர்வேதேச உத்தரவாதத்தை அடிப்படியாக கொண்டு இலங்கையின் அரசியலமைப்பை சமஸ்டி அரசியலமைப்பாக மாற்றுவதே மேற்கின் திட்டமாக இருந்தது. அப்படி ஒரு நிலை வரும் போது ஆயுதங்கள் முற்றாக ஒழிக்கபடும். தமிழர்க்கு ஏற்புடைய ஒரு உள்ளூர் வடகிழக்கு சமஸ்டி அரசின் படைகளும், இலங்கை படைகளும் வெளிநாட்டு அனுசரணையுடன் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். 

7.நான் அறிந்தவரையில்  மேலே உள்ளதுதான் திரு பாலசிங்கத்துக்கு அளிக்கப்பட்ட தீர்வுப்பொதி. இதில் கூட குறைய வருவது, பேச்சுவார்தையில் தங்கி இருந்தது. இது முற்று முழுதாக, இந்தியா, நோர்வே, ஜப்பான், ஈயு, யூகே, யுஎஸ் ஆகிய நாடுகள் இலங்கையை தமது நிரந்தர கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

டோக்கியோ மாநாட்டில் பங்குபற்றினாலும் பொறி, பங்குபற்றாவிட்டாலும் பொறி என்று சொல்லப்பட்டபோது, புலிகள் பங்குபற்றாமல் விடுவதென்று முடிவெடுத்தார்கள். இது கொதிக்கும் உளையிலிருந்து நேரே அடுப்பின் நெருப்பிற்குள் விழுவதுபோன்று ஆகிவிட்டது.

மாநாட்டில் பங்குபற்றாமல் விடுவதன் மூலம் ஏற்படும் ஸ்தம்பித நிலையினை சந்தர்ப்பவாத நாடுகளான இந்தியாவும் சீனாவும் தமக்குச் சார்பாகப் பாவிக்கலாம் என்பதை புலிகள் உணர்ந்துகொள்ளவில்லை. 

இன்று புலிகளின் முடிவினை விமர்சிப்பவர்கள், மாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் ஏதாவதொரு தீர்வினையடைந்து, பின்னர் எமது உரிமைகள் நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று கூறினாலும், ஒப்பந்தத்தில் மற்றைய தரப்பான சிங்களம் தான் ஒத்துக்கொண்டவற்றை செயல்படுத்தியிருக்குமா என்று அவர்களால் உறுதிபடக் கூறமுடியாது. 2015 ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் நல்லாட்சி அரசாங்கம் ஒப்புக்கொண்ட விடயங்கள் தம்மால் ஏற்கமுடியாதென்று ராஜபக்ஷேக்கள் வெளிப்படையாகவே அத்தீர்மானத்தினை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறிய நிலையினையும், சுதந்திரம் தொட்டு சிங்களப் பேரினவாதிகள் தாம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்களை தாமே கிழித்தெறிந்து அடக்குமுறை நோக்கி நகர்ந்ததையும் பார்க்கும்போது, டோக்கியோ மாநாட்டின் மூலம் வந்திருக்கலாம் என்று நாம் இன்று கூறுகிற ஒப்பந்தம்கூட செயலற்றுப் போயிருக்கும் என்பதே நடந்திருக்கும். 

இன்று புலிகள் மாநாட்டினைப் பகிஷ்கரித்ததால் அழிவு ஏற்பட்டதென்று கூறுகிற அதே விமர்சகர்கள், மாநாட்டில் புலிகள் பங்குபற்றி ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானதன் பின், சிங்களம் குத்துக்கரணம் அடித்து, மீண்டும் யுத்தத்தினைத் தொடங்கியிருந்தால், "பேசாமல் இந்த மாநாட்டினைப் புறக்கணித்திருக்கலாம், அது ஒரு பொறியென்று தெரிந்துகொண்டும் ஏன் போனார்கள்?" என்றும் கேள்வி கேட்கலாம். 

தாம் ஒத்துக்கொண்ட தீர்மானங்களுக்கு விசுவாசமாக இருந்து, அவற்றைக் கடைப்பிடித்த சரித்திரம் சிங்களப் பேரினவாதத்திடம் இல்லை. அவர்கள் சர்வதேச சக்திகளுக்கு அஞ்சி, அவற்றை பின்பற்றுவார்கள் என்கிற பேச்செல்லாம் இக்காலத்தில் எடுபடும் போலத் தெரியவுமில்லை, உபயம் இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் சீனப்பூச்சாண்டியை இன்று இலங்கை காட்டிக்கொண்டிருப்பது. 

அன்று, ராணுவப் பலத்தின் மூலம் யாழ்ப்பாணத்தையோ அல்லது திருகோணமலையினையோ கைப்பற்றிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்தால் இலங்கையரசு வேறுவழியின்றி அடங்கிவிடும் என்று புலிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை. இந்திய - சீன தலையீடு பற்றி புலிகள் சரியானபார்வையினைக் கொண்டிருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு புலிகளால் அனுப்பப்பட்ட பல சமாதானத் தூதுகள் முற்றாகப் புறந்தள்ளப்பட்டு காங்கிரஸ் அரசு தக்க தருணம் பார்த்திருந்து அவர்களின் கப்பற்போக்குவரத்தினை முற்றாக அழித்து, அவர்களின் ராணுவ வல்லமையினை உடைத்தது. சீனா போரில் ஆயுதங்களை வாரி வழங்கியது. விளைவு நாசகார அழிப்பு யுத்தம். 

டோக்கியோ மாநாடு புலிகளுக்கும் அன்டன் பாலசிங்கத்திற்கும் இடையே சிறு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், சர்வதேசம் இதனைக் காரணமாக வைத்து புலிகளை முற்றாக அழித்தது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆனால், மாநாடு புலிகளால் புறக்கணிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சந்தர்ப்பத்தை இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் சீனாவும் நன்கே பாவித்தன என்பதுதான் எனது எண்ணம். 

விமர்சிக்கும் எவரும் சிங்களம் தான் கொடுத்த வாக்குறுதிகளை எப்பொழுது உண்மையாக நிறைவேற்றியதென்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின்னர் மாநாட்டிற்குப் புலிகள் போய், சிங்களத்துடன் ஒப்பந்தம் செய்து, நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கலாமா இல்லையா என்பதுபற்றிப் பேசலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ரஞ்சித் said:

ஒரு கதைக்கு.....
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் புலிகள் சிங்களம் தரும் தீர்வுத் திட்டங்களுக்கு ஆமாம் போட்டு கையெழுத்திட்டிருந்தால்...

இதற்குத்தானா இவ்வளவுகாலமும் போரிட்டார்கள்? இதற்குத்தானா இவ்வளவு உயிர்களை கொடுத்தோம்? இதற்குத்தானா இவ்வளவு அழிவுகளை சந்தித்தோம்? இறந்த மாவீரர்களின் கனவுகள் என்னாவது? இதை ஆரம்பத்திலேயே பேசி முடித்திருக்கலாமே?

என்றெல்லாம் கலர் கலராக மாற்றுக் கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

டோக்கியோ மாநாட்டில் பங்குபற்றினாலும் பொறி, பங்குபற்றாவிட்டாலும் பொறி என்று சொல்லப்பட்டபோது, புலிகள் பங்குபற்றாமல் விடுவதென்று முடிவெடுத்தார்கள். இது கொதிக்கும் உளையிலிருந்து நேரே அடுப்பின் நெருப்பிற்குள் விழுவதுபோன்று ஆகிவிட்டது.

மாநாட்டில் பங்குபற்றாமல் விடுவதன் மூலம் ஏற்படும் ஸ்தம்பித நிலையினை சந்தர்ப்பவாத நாடுகளான இந்தியாவும் சீனாவும் தமக்குச் சார்பாகப் பாவிக்கலாம் என்பதை புலிகள் உணர்ந்துகொள்ளவில்லை. 

இன்று புலிகளின் முடிவினை விமர்சிப்பவர்கள், மாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் ஏதாவதொரு தீர்வினையடைந்து, பின்னர் எமது உரிமைகள் நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று கூறினாலும், ஒப்பந்தத்தில் மற்றைய தரப்பான சிங்களம் தான் ஒத்துக்கொண்டவற்றை செயல்படுத்தியிருக்குமா என்று அவர்களால் உறுதிபடக் கூறமுடியாது. 2015 ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் நல்லாட்சி அரசாங்கம் ஒப்புக்கொண்ட விடயங்கள் தம்மால் ஏற்கமுடியாதென்று ராஜபக்ஷேக்கள் வெளிப்படையாகவே அத்தீர்மானத்தினை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறிய நிலையினையும், சுதந்திரம் தொட்டு சிங்களப் பேரினவாதிகள் தாம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்களை தாமே கிழித்தெறிந்து அடக்குமுறை நோக்கி நகர்ந்ததையும் பார்க்கும்போது, டோக்கியோ மாநாட்டின் மூலம் வந்திருக்கலாம் என்று நாம் இன்று கூறுகிற ஒப்பந்தம்கூட செயலற்றுப் போயிருக்கும் என்பதே நடந்திருக்கும். 

இன்று புலிகள் மாநாட்டினைப் பகிஷ்கரித்ததால் அழிவு ஏற்பட்டதென்று கூறுகிற அதே விமர்சகர்கள், மாநாட்டில் புலிகள் பங்குபற்றி ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானதன் பின், சிங்களம் குத்துக்கரணம் அடித்து, மீண்டும் யுத்தத்தினைத் தொடங்கியிருந்தால், "பேசாமல் இந்த மாநாட்டினைப் புறக்கணித்திருக்கலாம், அது ஒரு பொறியென்று தெரிந்துகொண்டும் ஏன் போனார்கள்?" என்றும் கேள்வி கேட்கலாம். 

தாம் ஒத்துக்கொண்ட தீர்மானங்களுக்கு விசுவாசமாக இருந்து, அவற்றைக் கடைப்பிடித்த சரித்திரம் சிங்களப் பேரினவாதத்திடம் இல்லை. அவர்கள் சர்வதேச சக்திகளுக்கு அஞ்சி, அவற்றை பின்பற்றுவார்கள் என்கிற பேச்செல்லாம் இக்காலத்தில் எடுபடும் போலத் தெரியவுமில்லை, உபயம் இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் சீனப்பூச்சாண்டியை இன்று இலங்கை காட்டிக்கொண்டிருப்பது. 

அன்று, ராணுவப் பலத்தின் மூலம் யாழ்ப்பாணத்தையோ அல்லது திருகோணமலையினையோ கைப்பற்றிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்தால் இலங்கையரசு வேறுவழியின்றி அடங்கிவிடும் என்று புலிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை. இந்திய - சீன தலையீடு பற்றி புலிகள் சரியானபார்வையினைக் கொண்டிருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு புலிகளால் அனுப்பப்பட்ட பல சமாதானத் தூதுகள் முற்றாகப் புறந்தள்ளப்பட்டு காங்கிரஸ் அரசு தக்க தருணம் பார்த்திருந்து அவர்களின் கப்பற்போக்குவரத்தினை முற்றாக அழித்து, அவர்களின் ராணுவ வல்லமையினை உடைத்தது. சீனா போரில் ஆயுதங்களை வாரி வழங்கியது. விளைவு நாசகார அழிப்பு யுத்தம். 

டோக்கியோ மாநாடு புலிகளுக்கும் அன்டன் பாலசிங்கத்திற்கும் இடையே சிறு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், சர்வதேசம் இதனைக் காரணமாக வைத்து புலிகளை முற்றாக அழித்தது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆனால், மாநாடு புலிகளால் புறக்கணிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சந்தர்ப்பத்தை இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் சீனாவும் நன்கே பாவித்தன என்பதுதான் எனது எண்ணம். 

விமர்சிக்கும் எவரும் சிங்களம் தான் கொடுத்த வாக்குறுதிகளை எப்பொழுது உண்மையாக நிறைவேற்றியதென்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின்னர் மாநாட்டிற்குப் புலிகள் போய், சிங்களத்துடன் ஒப்பந்தம் செய்து, நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கலாமா இல்லையா என்பதுபற்றிப் பேசலாம். 

 கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருப்பது போல சிங்கள அரசு ஒப்பந்தங்களை மதிக்கவில்லை என்பது உண்மை. இதற்குத் தீர்வாகத் தானே கூட்டுத் தலைமை என்ற பெயரில் பலம் வாய்ந்த வெளிநாடுகள் கொண்டு வரப்பட்டன? 
 
ஜப்பானுக்கு வரமாட்டோம் என்று அடம் பிடித்ததால் தடை செய்யப் பட்ட அமைப்பாக இருந்த தமிழர் தரப்பிற்கு பாதகம் வரும், என்ன தான் அராஜக அரசாக இருந்தாலும் சிங்கள நாட்டுக்கு பெரிதாக ஒரு தீமையும் வராது என்பதை எதிர்வுகூர்வது கடினமாக இருந்திருக்காது.

புலிகளின் தலைமை stuck between a rock and a hard place என்ற நிலைமையில் வைக்கப் பட்ட போது எடுத்த முடிவு. வன்னி மக்களைப் பற்றிய அக்கறையை ஒரு காரணியாக கணக்கிலெடுத்திருந்தால் முடிவு வித்தியாசமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

9 minutes ago, Justin said:

கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருப்பது போல சிங்கள அரசு ஒப்பந்தங்களை மதிக்கவில்லை என்பது உண்மை. இதற்குத் தீர்வாகத் தானே கூட்டுத் தலைமை என்ற பெயரில் பலம் வாய்ந்த வெளிநாடுகள் கொண்டு வரப்பட்டன? 

உண்மை. ஆனால், இந்தக் கூட்டுத் தலைமைகளின் சொல்லுக்கு சிங்களப் பேரினவாதம் அடிபணிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இப்போது அமெரிக்க - இந்திய கூட்டுக்குச் சவாலாக சிங்களம் இருப்பது அன்று எவ்வாறான நிலைப்பாட்டினை அது எடுத்திருக்கும் என்பதையே சொல்கிறது.
 
12 minutes ago, Justin said:

ஜப்பானுக்கு வரமாட்டோம் என்று அடம் பிடித்ததால் தடை செய்யப் பட்ட அமைப்பாக இருந்த தமிழர் தரப்பிற்கு பாதகம் வரும், என்ன தான் அராஜக அரசாக இருந்தாலும் சிங்கள நாட்டுக்கு பெரிதாக ஒரு தீமையும் வராது என்பதை எதிர்வுகூர்வது கடினமாக இருந்திருக்காது.

சர்வதேச வலைப்பின்னலுக்குள் அகப்பட்டுவிடுவோம் என்று புலிகள் அஞ்சியிருக்கலாம். ஆனால், எந்த சர்வதேச வலைப்பின்னலுக்கு அவர்கள் அஞ்சினார்களோ, இறுதியில் அந்த வலைப்பின்னலை வைத்தே அவர்களை அழித்து முடித்தன இச்சக்திகள். நீங்கள் சொல்வதுபோல இரு இக்கட்டான சூழ்நிலைக்குள் மாட்டுப்பட்ட நிலையில் புலிகள் இருந்திருக்கிறார்கள். தெரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பேயே மேல் என்று எண்ணி சிங்களத்துடன் மோதுவதை புலிகள் முடிவாக எடுத்திருக்கலாம். ஆனால், ஈற்றில் பேயும் தேவதையும் சேர்ந்தே ஆடி முடித்தன. 

16 minutes ago, Justin said:

புலிகளின் தலைமை stuck between a rock and a hard place என்ற நிலைமையில் வைக்கப் பட்ட போது எடுத்த முடிவு. வன்னி மக்களைப் பற்றிய அக்கறையை ஒரு காரணியாக கணக்கிலெடுத்திருந்தால் முடிவு வித்தியாசமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.  

தமது ராணுவ வல்லமை பற்றிய நம்பிக்கையும், யுத்தத்தினைத் தொடர்ந்தும் நடத்த முடியும் என்கிற நம்பிக்கையும் புலிகளை வன்னி மக்களைத் தக்கவைத்துக்கொண்டு போரினை எதிர்கொள்ளலாம் என்கிற முடிவிற்குக் கொண்டுவந்திருக்கும். இதற்கு முன்னரும் கூட, இவ்வகையான ராணுவ அழுத்தங்களைப் புலிகள் வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்தப் போரையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும் என்பதை புலிகள் மட்டுமல்லாமல் வன்னி மக்களும் நம்பியிருந்தார்கள். ஏனென்றால், அதுவரை காலமும் புலிகளின் ஆயுத வளங்கற்பாதை பெருமளவிற்கு தாக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், 2005 இன் பின்னர் நிலமை வேறு. இக்காலப்பகுதியில் போரில் இந்தியா காட்டிய அதீத அக்கறை முன்னர் இருந்ததில்லை. விளைவு, புலிகள் சுதாரிக்கும் முன்னர் நிலமை மாறிவிட்டது. அவர்கள் நினைத்திருந்தாலும்கூட சிங்களம் யுத்தத்தினை நிறுத்தியிருக்காது.  Smell of blood இனை ருசிக்கத் தொடங்கிவிட்ட சிங்களம் முற்றாக அழிக்கும்வரை யுத்தம் நிறுத்தப்படாதென்று சொல்லிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

ஆம், இக்கட்டான நிலைமையின் முடிவுகள். ஆனால் இரண்டு விடயங்களில் உறுத்தல் இருக்கிறது: 

1. இராணுவ ரீதியில் யாழ்ப்பாணத்தில் படையினரை அச்சுறுத்திய போது இந்தியா தெளிவாக தன் நிலையை புலிகளுக்கு தெரியப் படுத்தி விட்டது. இதன் பிறகும் இந்தியா பற்றிய கேள்விகள் நம்பிக்கைகள் புலிகளிடம் இருந்தன என்பது வியப்பூட்டுகிறது. 

2. இரு தரப்புகளும் நிரந்தர தீர்வை நம்பி பேச்சு வார்த்தையில் இறங்கவில்லை என்பது என் அனுமானிப்பு. இரு தரப்புகளும் 2002 இல் இருந்து மாவிலாறு வரை ஆயிரக்கணக்கான போர் நிறுத்த மீறல்களைச் செய்தன. துரதிஷ்ட வசமாக புலிகளின் ஒரு போர் நிறுத்த மீறல் 2005 இல் அது வரை சும்மா இருந்த ஐரோப்பிய யூனியன் தடையையும் கொண்டு வந்து நிதி சேகரிப்பையும் முடக்க காரணமானது. இது சொந்த செலவில் தமிழர் தரப்பு வைத்துக் கொண்ட சூனியம் அல்லவா?    

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இராணுவ ரீதியில் யாழ்ப்பாணத்தில் படையினரை அச்சுறுத்திய போது இந்தியா தெளிவாக தன் நிலையை புலிகளுக்கு தெரியப் படுத்தி விட்டது. இதன் பிறகும் இந்தியா பற்றிய கேள்விகள் நம்பிக்கைகள் புலிகளிடம் இருந்தன என்பது வியப்பூட்டுகிறது. 

இந்தியா எப்போதுமே தமக்குப் பிரச்சினையாக இருக்கும் என்பதைப் புலிகள் உணர்ந்தே இருந்தார்கள். ஆகவேதான் தொடர்ந்தும் இந்தியாவ்டனான சமாதானப் போக்கினைக் கடைப்பிடித்ததுடன் அவர்களுடன் உறவினையும் புதுப்பித்துக்கொள்ள முயன்றுவந்தார்கள். 2005 காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரும் கூட இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கவே அவர்கள் விரும்பினார்கள். ஆனால், காங்கிரஸ் அரசின் பழிவாங்கற்கொள்கை இவை எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி தான் நினைத்ததை இறுதியில் சாதித்துவிட்டது. இந்தியாவை எமது பிரச்சினையிலிருந்து தொலைவில் வைத்திருக்க புலிகள் விரும்பியிருந்தாலும்கூட, அது அவர்களால் ஒருபோதுமே சாத்தியமாக இருக்கவில்லை. இந்தியா, புலிகளின் சக்திக்கு அப்பாற்ப்பட்ட விரும்பத்தகாத, வலிந்து வந்திறங்கிய ஒரு வல்லரசு. இதில் புலிகள் செய்திருக்கக் கூடியது எதுவுமில்லை. ஆகவே, நடக்கப்போவது எதுவென்று ஓரளவிற்கு புலிகளுக்கு விளங்கியிருப்பினும், அதனைத் தடுக்கக் கூடிய வலு அவர்களிடம் இருக்கவில்லை. 

19 minutes ago, Justin said:

இரு தரப்புகளும் நிரந்தர தீர்வை நம்பி பேச்சு வார்த்தையில் இறங்கவில்லை என்பது என் அனுமானிப்பு. இரு தரப்புகளும் 2002 இல் இருந்து மாவிலாறு வரை ஆயிரக்கணக்கான போர் நிறுத்த மீறல்களைச் செய்தன. துரதிஷ்ட வசமாக புலிகளின் ஒரு போர் நிறுத்த மீறல் 2005 இல் அது வரை சும்மா இருந்த ஐரோப்பிய யூனியன் தடையையும் கொண்டு வந்து நிதி சேகரிப்பையும் முடக்க காரணமானது. இது சொந்த செலவில் தமிழர் தரப்பு வைத்துக் கொண்ட சூனியம் அல்லவா?    

ஓரளவிற்கு உண்மை. மாவிலாறுப் பிரச்சினையினை சிங்கள விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாக சிங்களம் மிகவும் சூட்சுமமாக மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், சர்வதேசத்தில் கடுமையான பிரச்சாரத்தினையும் மேற்கொண்டது. இதில் வேதனை என்னவென்றால், மாவிலாற்றின் அருகில் இருக்கும் கந்தளாய்ப் பகுதி நண்பர் ஒருவர் இதுபற்றிக் கூறும்போது, அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை, ஆனால் அப்படி அதனை மாற்றிவிட்டார்கள் என்று கூறினார். 

மாவிலாறு என்பது சிங்களமும் இந்தியாவும் எதிர்பார்த்த யுத்தத்திற்கான திறவுகோல்தான் என்பதை நீங்கள்கூட மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மாவிலாறு நீர்த்தடுப்பு நிகழ்திருக்காதுவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் யுத்தம் ஆரம்பித்துத்தான் இருக்கும், அழிவும் நடந்துதான் இருக்கும். 

ஆனால், மாவிலாறில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிங்கள விவசாயிகளுடன் ஒப்பிடும் பொழுது, பல லட்சம் தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பினால் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றுவரை அவர்களுக்காக குரல்கொடுக்க எந்தச் சர்வதேசமும் வரவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

இந்தியா எப்போதுமே தமக்குப் பிரச்சினையாக இருக்கும் என்பதைப் புலிகள் உணர்ந்தே இருந்தார்கள். ஆகவேதான் தொடர்ந்தும் இந்தியாவ்டனான சமாதானப் போக்கினைக் கடைப்பிடித்ததுடன் அவர்களுடன் உறவினையும் புதுப்பித்துக்கொள்ள முயன்றுவந்தார்கள். 2005 காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரும் கூட இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கவே அவர்கள் விரும்பினார்கள். ஆனால், காங்கிரஸ் அரசின் பழிவாங்கற்கொள்கை இவை எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி தான் நினைத்ததை இறுதியில் சாதித்துவிட்டது. இந்தியாவை எமது பிரச்சினையிலிருந்து தொலைவில் வைத்திருக்க புலிகள் விரும்பியிருந்தாலும்கூட, அது அவர்களால் ஒருபோதுமே சாத்தியமாக இருக்கவில்லை. இந்தியா, புலிகளின் சக்திக்கு அப்பாற்ப்பட்ட விரும்பத்தகாத, வலிந்து வந்திறங்கிய ஒரு வல்லரசு. இதில் புலிகள் செய்திருக்கக் கூடியது எதுவுமில்லை. ஆகவே, நடக்கப்போவது எதுவென்று ஓரளவிற்கு புலிகளுக்கு விளங்கியிருப்பினும், அதனைத் தடுக்கக் கூடிய வலு அவர்களிடம் இருக்கவில்லை. 

ஓரளவிற்கு உண்மை. மாவிலாறுப் பிரச்சினையினை சிங்கள விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாக சிங்களம் மிகவும் சூட்சுமமாக மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், சர்வதேசத்தில் கடுமையான பிரச்சாரத்தினையும் மேற்கொண்டது. இதில் வேதனை என்னவென்றால், மாவிலாற்றின் அருகில் இருக்கும் கந்தளாய்ப் பகுதி நண்பர் ஒருவர் இதுபற்றிக் கூறும்போது, அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை, ஆனால் அப்படி அதனை மாற்றிவிட்டார்கள் என்று கூறினார். 

மாவிலாறு என்பது சிங்களமும் இந்தியாவும் எதிர்பார்த்த யுத்தத்திற்கான திறவுகோல்தான் என்பதை நீங்கள்கூட மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மாவிலாறு நீர்த்தடுப்பு நிகழ்திருக்காதுவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் யுத்தம் ஆரம்பித்துத்தான் இருக்கும், அழிவும் நடந்துதான் இருக்கும். 

ஆனால், மாவிலாறில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிங்கள விவசாயிகளுடன் ஒப்பிடும் பொழுது, பல லட்சம் தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பினால் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றுவரை அவர்களுக்காக குரல்கொடுக்க எந்தச் சர்வதேசமும் வரவில்லை. 

இந்தியாவை புலிகள் மட்டுமல்ல, சிறிலங்காவும் அமெரிக்காவும் கூட எம் பிரச்சினையிலிருந்து தொலைவில் வைத்திருக்க முடியாது என்பது  சுவரில் எழுதப் பட்ட உண்மையாக இருக்கும் போது, புலிகளின் இந்த எதிர்ப்பார்ப்பின் அடிப்படை என்ன? எனக்குப் புரியவில்லை! தனி மனித வாழ்வில் கூட வெற்று நம்பிக்கை செயலாகாது எனும் போது, ஒரு இடியப்பச் சிக்கலான பிரச்சினையில் எப்படி வெறும் நம்பிக்கை இலட்சக் கணக்கான மக்களின் எதிர்காலம் பற்றிய முடிவை எடுக்க அடிப்படையாகும்? 

மாவிலாறு ஒர் சாட்டு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சமாதானத்தின் வழி வரும் தீர்வில் நம்பிக்கை புலிகளுக்கும் இருக்கவில்லை என்பதையே சுட்டிக் காட்டினேன். இருந்திருந்தால் ஏன் புலிகளை தீவிரமாக எதிர்த்த பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுக்கு  தலைமை வகித்த வேளையில் கதிர்காமரைக் கொலை செய்தனர்? 

எந்த வழி போயிருந்தாலும் யுத்தம் வந்திருக்கும் என்பதை முழுமையாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது நாம் பேசும் சாத்தியப் பாடுகள் எல்லாம் hypothetical ஆக தெரியலாம். ஆனால், தமிழ் மக்களின் உயிர்களை அவர்கள் நம்பிய ஒரு அமைப்பே வரிசையான, தர்க்கரீதியற்ற முடிவுகளால் பணயம் வைத்தது என்பதே என் கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தனி மனித வாழ்வில் கூட வெற்று நம்பிக்கை செயலாகாது எனும் போது, ஒரு இடியப்பச் சிக்கலான பிரச்சினையில் எப்படி வெறும் நம்பிக்கை இலட்சக் கணக்கான மக்களின் எதிர்காலம் பற்றிய முடிவை எடுக்க அடிப்படையாகும்? 

இந்தியா மாறும் என்றோ, தமக்கெதிரான நிலைப்பாட்டினைக் கைவிடும் என்றோ புலிகள் நம்பியதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தியா தலையிடுவதை புலிகளால் தடுக்க முடியவில்லை. தம்மால் முடியுமானவரை இந்தியாவுடன் உறவைப் புதுப்பிக்கவே விரும்பினார்கள், நண்பனை அருகிலும், எதிரியை மிக அருகிலும் வைத்திருப்பதுபோல, இந்தியாவை அருகில் வைத்திருக்க எத்தனித்தார்கள், ஆனால் நம்பியிருக்கவில்லையென்பதே எனது எண்ணம்.

8 minutes ago, Justin said:

இருந்திருந்தால் ஏன் புலிகளை தீவிரமாக எதிர்த்த பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுக்கு  தலைமை வகித்த வேளையில் கதிர்காமரைக் கொலை செய்தனர்? 

சமாதானப் பேச்சுவார்த்தை நீண்டகாலம் இழுபட்டு, புலிகளின் போர்க்குணம் சிறிது சிறிதாக மழுங்கடிக்கப்பட்டு, ஈற்றில் சர்வதேச வலைப்பின்னலுக்குள் அகப்பட்டு அழிக்கப்பட்டுவிடுவோம் என்கிற அச்சம் புலிகளுக்கிருந்தது. நோர்வே தலைமையில் இஸ்ரேலுடன் யாசீர் அரபாத் செய்துகொண்ட ஒப்பந்தம் ஈற்றில் அவரையும் கொன்று, பாலஸ்த்தீனர்களையும் பலவீனமாக்கியதை புலிகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆகவே, அவ்வாறான நிலைமை ஏற்படுமுன்னர், அதிலிருந்து விலகிவிடலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். 

கதிர்காமர் கொல்லப்பட்டது மிகவும் தவறான தருணம் என்றுதான் நினைக்கிறேன். புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் எதிராகத் தொடர்ந்தும் கடுமையாக அவர் செயற்பட்டு வந்தார். குறிப்பாக கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூட சந்திரிக்காவுடன் சேர்ந்து கூட்டுத்தலைமை நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது கூட, கதிர்காமர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது புலிகள் கூறுவதுபோல துணைராணுவக்குழுக்கள் என்று எதுவுமேயில்லை, வடக்குக் கிழக்கில் அப்போது நடந்துவந்த வன்முறைகள் புலிகளாலேயே நடத்தப்பட்டன, ஆகவே அவர்கள் மீதான தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கடுமையான தொனியில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். புலிகளின் தடைகளுக்கு மிகப்பெரும் காரணமாக அவர் மாறியிருந்தார். ஆகவேதான் இலக்குவைக்கப்பட்டார் என்று நினைக்கிறேன்

16 minutes ago, Justin said:

எந்த வழி போயிருந்தாலும் யுத்தம் வந்திருக்கும் என்பதை முழுமையாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது நாம் பேசும் சாத்தியப் பாடுகள் எல்லாம் hypothetical ஆக தெரியலாம். ஆனால், தமிழ் மக்களின் உயிர்களை அவர்கள் நம்பிய ஒரு அமைப்பே வரிசையான, தர்க்கரீதியற்ற முடிவுகளால் பணயம் வைத்தது என்பதே என் கருத்து. 

பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கை ராணுவத்திற்கான உதவிகளையும் பயிற்சிகளையும் அதிகரித்து வந்திருந்தன. விசேட படைகள், கப்பற்படைக்கான புதிய ரோந்துப்படகுகள், நவீன கனரத் துப்பாக்கிகள், விமானப்படைக்கான புதிய உலங்குவானூர்திகள், தாக்குதல் உலங்குவானூர்திகள், மிகையொலி விமானங்கள் என்று பெருமளவில் ராணுவம் புதுப்பிக்கப்பட்டதொட்டு, ராணுவத்தின் ஆட்பலமும் சுமார் ஒன்றரை லட்சமாக அதிகரிக்கப்பட்டது. கருணாவை பிரித்து புலிகளைப் பலவீனமாக்கி, வடக்குக் கிழக்கில் ஆங்காங்கே புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியதென்று, அனைத்துமே கூறும் ஒரு விடயம் என்னவென்றால் இலங்கை ராணுவம் தன்னைப் போருக்குத் தயார்படுத்தி வருகிறதென்பதைத்தான். 
அத்துடன், சமாதான காலத்தில் ராணுவம் தனது பலத்தினைப்பெருக்க அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், புலிகள் தமது பங்கிற்கு ஆயுதங்களைத் தருவிப்பதை இணைத்தலைமை நாடுகளோ அல்லது கண்காணிப்புக்குழுவோ ஏற்றுக்கொள்ளவில்லை. 
என்னைப்பொறுத்தவரையில் புலிகள் மக்களை பணயம் வைத்ததாக நினைக்கவில்லை. ஆனால், போராட்டம் தொடர்வதற்கு மக்கள் தம்மோடு இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம்.  இறுதிநாட்களில் நடந்த சில தனிப்பட்ட சம்பவங்களைத் தவிர பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவு என்பது புலிகளால் திட்டமிடப்பட்டதன்று. மாறாக புலிகளை அழிக்கிறோம் என்கிற போர்வையில் ராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

 கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருப்பது போல சிங்கள அரசு ஒப்பந்தங்களை மதிக்கவில்லை என்பது உண்மை. இதற்குத் தீர்வாகத் தானே கூட்டுத் தலைமை என்ற பெயரில் பலம் வாய்ந்த வெளிநாடுகள் கொண்டு வரப்பட்டன? 
 
ஜப்பானுக்கு வரமாட்டோம் என்று அடம் பிடித்ததால் தடை செய்யப் பட்ட அமைப்பாக இருந்த தமிழர் தரப்பிற்கு பாதகம் வரும், என்ன தான் அராஜக அரசாக இருந்தாலும் சிங்கள நாட்டுக்கு பெரிதாக ஒரு தீமையும் வராது என்பதை எதிர்வுகூர்வது கடினமாக இருந்திருக்காது.

புலிகளின் தலைமை stuck between a rock and a hard place என்ற நிலைமையில் வைக்கப் பட்ட போது எடுத்த முடிவு. வன்னி மக்களைப் பற்றிய அக்கறையை ஒரு காரணியாக கணக்கிலெடுத்திருந்தால் முடிவு வித்தியாசமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.  

2001 இல் ஆயுதம் தாங்கிய விடுதலைபோராட்டம் வந்து சேர்ந்த இடத்துக்கு stuck between a rock and a hard place என்பது மிக பொருத்தமான உவமேயம்.

இன்னொரு வகையில் சொல்வதானால் ஆயுத வழி விடுதலை போராட்டம் என்பது சக்கர வியூகம் போல. உள்ளே போவது மிக பெரும் சாகசம் ஆனால் அதை விட பலநூறு மடங்கு பெரிய சாகாசம் வியூகத்தை உடைத்து வெற்றிகரமாக வெளியே வருவது.

வாலி தன் எதிரியின் பாதிப் பலத்தை தன் வசமாக்குவார் என்பார்கள். அதே போல் ஒருவருடைய பலத்தை எமது பலமாக மாற்றுவது மிக தந்திரமான நகர்வு. அதைதான் இலங்கை செய்தது. பிரபாவின் தனிநாடு, ஆயுதத்தை கைவிட்டால் ஏமாற்றுவார்கள் என்ற கொள்கை உறுதிதான் அவரின் மிக பெரிய பலம் இல்லையா? அதை வைத்தே அவரை வென்றார்கள்.

சமாதானப் பேச்சுவார்த்தை ஒரு பொறி என்பதை விட அது ஒரு checkmate. எந்த நகர்வு எடுத்தாலும் புலிகள் ஆயுதத்தை கைவிடல் என்ற இடத்தில்தான் அது வந்து நின்றிருக்கும்.

ஒரு வழியை எடுத்தால் அழித்தொழித்து ஆயுதம் கைவிடபடவேண்டி இருந்திருக்கும் (இதுதான் நடந்தது).

மறுவழியை எடுத்திருந்தால் முதலமைச்சர் பிரபாகரன் ஆயுதத்தை கைவிடும் படி ஆகி இருக்கும். நேபாளம், வட அயர்லாந்து எங்கினும் இதுதான் நடந்தது.

ரணில் ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கியது பிரபா 2ம் வழியை தேர்ந்து விடக்கூடாது என்று நேர்த்திகடன் வைத்துத்தான்.

சரி இனி ஒரு கற்பனை

1. டோக்கியோ மாநாட்டுக்கு புலிகள் போய் decommissioning க்கு கொள்கையளவில் இணங்குகிறார்கள். ஆனால் சர்வதேச மேற்பார்வையில் மாற்ற பட முடியாத படி சில உத்தரவாதங்கள் வேண்டும் என்கிறார்கள். பாலா வாதாடி பெறுகிறார்.

2. 2005 இல் புறக்கணிப்பு இன்றி ரணில் வெல்கிறார்.

3. உதவி வழங்கும் நாடுகள் (கவனிக்க இதில் சீனா இல்லை) மேற்பார்வையில் இலங்கையில் சமஸ்டி அரசை ஸ்தாபிப்பது தொடர்பாக ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.

4. இலங்கையில் வடக்கு கிழக்கு இணந்த ஒரு சமஸ்டி அரசு பிறக்கிறது. புலிகள் ஆயுதங்களை முற்றாக மெளனிக்கிறனர்.

இப்போ இலங்கை தமிழரை ஏமாற்ற ஒரே வழி சீனாவை நாடுவது மட்டுமே, ஆனால் அப்படி நாடினால் அது இலங்கையை மேற்கோடு நேர் பகையில் கொண்டு வந்து இருக்கும். அப்போ ஒரு பலமான அரசியல் இயக்கமாக புலிகள் பலதை சாதித்து இருக்கலாம். 

5. ஆனால் 4 இல் சொன்ன நிலைமை வர சாத்தியம் மிக குறைவு. ஏனென்றால் அப்படி ஒரு நிலையைதாம் எடுத்தால் மேற்கு புலிகள் பக்கம் சாயும் என்பது இலங்கைக்கு தெரியும். அரசியல் வழி வந்த புலிகளுடன் சேர மேற்குக்கு ஒரு தடையும் இருந்திராது. இலங்கை அதிகம் சீனா பக்கம் போனால் ஒரு தனியரசை ஸ்தாபிக்க வேண்டிய தேவை மேற்குக்கு ஏற்பட்டிருக்கவும் கூடும். அதேபோல் இப்படி ஒரு நிலை வராமல் தடுக்க, சீனாவை உள்ளே வராமல் தடுக்க மேற்கு எடுத்த கடைசி முயற்சியே சமாதானம். 

—-யாவும் கற்பனை—-

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இதற்குள் எனக்குப் பிடித்ததே

---யாவும் கற்பனை---

என்பதே. 😂😂

ஆனால் யதார்த்தத்தை நாண் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் இல்லையா.. 😭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இந்தியா மாறும் என்றோ, தமக்கெதிரான நிலைப்பாட்டினைக் கைவிடும் என்றோ புலிகள் நம்பியதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தியா தலையிடுவதை புலிகளால் தடுக்க முடியவில்லை. தம்மால் முடியுமானவரை இந்தியாவுடன் உறவைப் புதுப்பிக்கவே விரும்பினார்கள், நண்பனை அருகிலும், எதிரியை மிக அருகிலும் வைத்திருப்பதுபோல, இந்தியாவை அருகில் வைத்திருக்க எத்தனித்தார்கள், ஆனால் நம்பியிருக்கவில்லையென்பதே எனது எண்ணம்.

சமாதானப் பேச்சுவார்த்தை நீண்டகாலம் இழுபட்டு, புலிகளின் போர்க்குணம் சிறிது சிறிதாக மழுங்கடிக்கப்பட்டு, ஈற்றில் சர்வதேச வலைப்பின்னலுக்குள் அகப்பட்டு அழிக்கப்பட்டுவிடுவோம் என்கிற அச்சம் புலிகளுக்கிருந்தது. நோர்வே தலைமையில் இஸ்ரேலுடன் யாசீர் அரபாத் செய்துகொண்ட ஒப்பந்தம் ஈற்றில் அவரையும் கொன்று, பாலஸ்த்தீனர்களையும் பலவீனமாக்கியதை புலிகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆகவே, அவ்வாறான நிலைமை ஏற்படுமுன்னர், அதிலிருந்து விலகிவிடலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். 

கதிர்காமர் கொல்லப்பட்டது மிகவும் தவறான தருணம் என்றுதான் நினைக்கிறேன். புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் எதிராகத் தொடர்ந்தும் கடுமையாக அவர் செயற்பட்டு வந்தார். குறிப்பாக கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூட சந்திரிக்காவுடன் சேர்ந்து கூட்டுத்தலைமை நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது கூட, கதிர்காமர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது புலிகள் கூறுவதுபோல துணைராணுவக்குழுக்கள் என்று எதுவுமேயில்லை, வடக்குக் கிழக்கில் அப்போது நடந்துவந்த வன்முறைகள் புலிகளாலேயே நடத்தப்பட்டன, ஆகவே அவர்கள் மீதான தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கடுமையான தொனியில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். புலிகளின் தடைகளுக்கு மிகப்பெரும் காரணமாக அவர் மாறியிருந்தார். ஆகவேதான் இலக்குவைக்கப்பட்டார் என்று நினைக்கிறேன்

பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கை ராணுவத்திற்கான உதவிகளையும் பயிற்சிகளையும் அதிகரித்து வந்திருந்தன. விசேட படைகள், கப்பற்படைக்கான புதிய ரோந்துப்படகுகள், நவீன கனரத் துப்பாக்கிகள், விமானப்படைக்கான புதிய உலங்குவானூர்திகள், தாக்குதல் உலங்குவானூர்திகள், மிகையொலி விமானங்கள் என்று பெருமளவில் ராணுவம் புதுப்பிக்கப்பட்டதொட்டு, ராணுவத்தின் ஆட்பலமும் சுமார் ஒன்றரை லட்சமாக அதிகரிக்கப்பட்டது. கருணாவை பிரித்து புலிகளைப் பலவீனமாக்கி, வடக்குக் கிழக்கில் ஆங்காங்கே புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியதென்று, அனைத்துமே கூறும் ஒரு விடயம் என்னவென்றால் இலங்கை ராணுவம் தன்னைப் போருக்குத் தயார்படுத்தி வருகிறதென்பதைத்தான். 
அத்துடன், சமாதான காலத்தில் ராணுவம் தனது பலத்தினைப்பெருக்க அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், புலிகள் தமது பங்கிற்கு ஆயுதங்களைத் தருவிப்பதை இணைத்தலைமை நாடுகளோ அல்லது கண்காணிப்புக்குழுவோ ஏற்றுக்கொள்ளவில்லை. 
என்னைப்பொறுத்தவரையில் புலிகள் மக்களை பணயம் வைத்ததாக நினைக்கவில்லை. ஆனால், போராட்டம் தொடர்வதற்கு மக்கள் தம்மோடு இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம்.  இறுதிநாட்களில் நடந்த சில தனிப்பட்ட சம்பவங்களைத் தவிர பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவு என்பது புலிகளால் திட்டமிடப்பட்டதன்று. மாறாக புலிகளை அழிக்கிறோம் என்கிற போர்வையில் ராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலை. 

1. யுத்த நிறுத்த மீறல் என்பது இரு தரப்பிலும் 2002 பெப்ரவரியிலேயே ஆரம்பித்து விட்டது. எனவே காலப்போக்கில் அது நிகழ்ந்தது என்று கொள்ள முடியாது. உதாரணமாக 2002 முதல் 2003 வரையில் SLMM இற்குக் கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை ~1300. இவற்றுள் சரி அரைவாசி முறைப்பாடுகள் வரை புலிகள் சிறார்களைச் சேர்க்கிறார்கள் என்ற முறைப்பாடு. இதை விடப் பல உதாரணங்கள், நான் இரு தரப்பும் இதய சுத்தியாக போர் ஓய்வையும் தீர்வையும் நாடவில்லை என்று முடிவு செய்யக் காரணங்கள்.

2. கதிர்காமர் என்ன தான் கரி வேலை செய்திருந்தாலும் highly visible ஆன அவரைப் பேசாமல் விட்டிருக்க வேண்டும். கதிர்காமர் கொலையால் அடைந்த நன்மை ஒன்று கூட இல்லை. தீமை? 28 ஐரோப்பிய நாடுகளில் தடை! இத்தகைய ஒரு நடவடிக்கையின் பின்விளைவை எதிர்வு கூறுவது  சர்வதேச ஆலோசகர்கள் கொண்ட ஒரு அமைப்பிற்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? 

3. இறுதி யுத்த காலத்தில் நடந்தவை "தனித்த சம்பவங்கள்" என்று நான் கருதவில்லை. புலிகளின் கட்டளைச் சங்கிலிக் கட்டமைப்பு உடையாமல் இருக்கும் போதே தலைமையின் முடிவாக அமல்படுத்தப் பட்ட நடவடிக்கைகள் பல: காயப்பட்ட மக்களைக் கூட வகை பிரித்து இராணுவத்திடம் செல்ல அனுமதித்தல், கட்டாயமாக ஆட்களைச் சேர்த்தல், தப்பிச் செல்ல முயன்ற சிலரைச் சுட்டமை..என்பன அவற்றுள் சில. 

மக்கள் வெளியேறியிருந்தால் உயிரிழப்பு குறைந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. புலிகள் அமைப்பு எப்படியும் அழிந்திருக்கும், ஆனால் மக்கள் இழப்பு குறைந்திருக்கும். எனவே முள்ளிவாய்க்கால் பேரழிவில் புலிகளுக்கும்  சமமான பொறுப்பிருக்கிறது.     

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

இதற்குள் எனக்குப் பிடித்ததே

---யாவும் கற்பனை---

என்பதே. 😂😂

ஆனால் யதார்த்தத்தை நாண் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் இல்லையா.. 😭

மறுபடியும் பிஸ்மார்க்கை மேற்கோளிடுகிறேன் “சாத்தியமானதை வென்றெடுக்கும் கலையே அரசியல்”.

சகல நல்ல முடிவுகளும் (happy endings), தீர்வை, தீர்வுக்கான பாதையை கற்பனை செய்து அதை நிறைவேற்றுவதிலேதான் ஆரம்பிக்கிறது.

இப்போ காலம் கடந்த நிலையில் இது hindsight (கால கடந்த ஞானம்) அல்லது கற்பனை. ஆனால் 2003/4 இல் இதை கண்டுணரும் இயலுமை கைவரப் பெற்றிருந்தால் அதுதான் தூரதிருஸ்டி (foresight). 
 
தேசத்தின் குரலுக்கு இந்த தூரதிருஸ்டி இருந்தது. அதுவே கோசானுக்கு சுடலை ஞானமாக கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

பேச்சுவார்த்தை ஆரம்பமான காலப்பகுதியில் எனது நண்பர்களுடன் உரையாடும்போது மிகக் குறிப்பாக ஒன்றை  தற்செயலாகக் கூறினேன். ""இனியொரு சண்டை ஆரம்பமானால் நாங்கள் சுவடு கூட இல்லாது அழிக்கப்படுவோம்"" இதைக் கூறும்போது என்ன மனநிலையில் இருந்தேன் என்பதோ அல்லது ஏன் அப்படிக் கூறினேன் என்பதோ இன்றுவரை எனக்குப் விளங்கவில்லை. ஆனால் மனதில் பட்டதை அப்படியே கூறிவிட்டேன். 

அதனால் நண்பர்கள் என்னை ஒரு புழுவாகப் பார்த்தார்கள்.. 

எனது தனிப்பட்ட எண்ணம்.. நாங்கள் எங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாங்களாகவே தூக்கியெறிந்தோம். அதன் பலனை அனுபவிக்கின்றோம்.

இப்போது சிங்களவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தூக்கியெறிகிறார்கள்.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

☹️பாண்டவர்களுக்கு கெளரவர்கள் 5 வீடும் கொடுக்க முடியாது என்று கூறிய கதையை அந்த நாட்களில் ரணில் சிங்கள மக்களுக்கு கூறியதாக செய்தி படித்தேன். இன்றை வரைக்கும் அவர்களுக்கு அந்த கதை விளங்கவில்லை. 

இனி விளங்கதேவையும் இல்லையோ என்றும் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

பேச்சுவார்த்தை ஆரம்பமான காலப்பகுதியில் எனது நண்பர்களுடன் உரையாடும்போது மிகக் குறிப்பாக ஒன்றை  தற்செயலாகக் கூறினேன். ""இனியொரு சண்டை ஆரம்பமானால் நாங்கள் சுவடு கூட இல்லாது அழிக்கப்படுவோம்"" இதைக் கூறும்போது என்ன மனநிலையில் இருந்தேன் என்பதோ அல்லது ஏன் அப்படிக் கூறினேன் என்பதோ இன்றுவரை எனக்குப் விளங்கவில்லை. ஆனால் மனதில் பட்டதை அப்படியே கூறிவிட்டேன். 

அதனால் நண்பர்கள் என்னை ஒரு புழுவாகப் பார்த்தார்கள்.. 

எனது தனிப்பட்ட எண்ணம்.. நாங்கள் எங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாங்களாகவே தூக்கியெறிந்தோம். அதன் பலனை அனுபவிக்கின்றோம்.

இப்போது சிங்களவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தூக்கியெறிகிறார்கள்.

☹️

இல்லை சிங்களம் அன்றும் இன்றும் என்றும் தனக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இல்லை சிங்களம் அன்றும் இன்றும் என்றும் தனக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறது

சிங்களம் தூக்கி எறிந்தது என்பது உண்மைதான். சிங்களம் ஒப்பந்தங்களை மதிக்காது என்பதைத் தெரிந்துதான் சர்வதேச மத்தியஸ்த்தம் நாடப்பட்டது. இணைத்தலைமை நாடுகளின் ஆதரவோடு ஒரு ஒப்பந்தம் வந்திருந்தால் அதனை இரு தரப்பும் மதித்திருக்கவேண்டிய நிலைமை வந்திருக்கும். அதனைத் தவிர்த்ததனால், இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்டத்தை இல்லாமல் செய்ய இணைத்தலைமை நாடுகளே புலிகளை அழிக்க உதவினார்கள். இதுவும் வரலாறுதான்.

இப்போது ஆயுத பலமும் இல்லை, அரசியல் பலமும் இல்லை என்பதால் தமிழர்கள் மேற்குநாடுகளுக்கும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பனிப்போரில் ஒரு பகடைக்காயாகக் கூட இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உண்மை தான். எழுதுவதும் பேசுவதும் இலகுவாக இருக்கும் என்பது தூரநோக்கற்ற புலிகள் பின்பற்ற இல்லை தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

உண்மை தான். எழுதுவதும் பேசுவதும் இலகுவாக இருக்கும் என்பது தூரநோக்கற்ற புலிகள் பின்பற்ற இல்லை தான். 

அது....சரியாக சொன்னீர்கள். 👍🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.