Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம் – லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம் – லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம்

  • கார்த்திகேசு குமாரதாஸன்

ண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென் – கிழக்குப் பகுதிகளை உடனடியாக மூடி முடக்குகின்ற உத்தரவை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) விடுத்திருக்கிறார்.

01-10-2.jpgநத்தாருக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கொண்டாட்டங்களைத் தவிர்த்து மக்களை வீடுகளுக்குள் முடக்கும் விதமான நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் (Tier 4 lock down) அங்கு அறிவிக்கப்பட்டி ருக்கின்றன.

நாட்டின் சனத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினரை உள்ளடக்கிய பின்வரும் பிரதேசங்கள் நான்கு அடுக்கு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

London, Kent, Buckinghamshire, Berkshire, Surrey excluding Waverley, Gosport, Havant, Portsmouth, Rother and Hastings, and East of England areas including Bedford, central Bedford, Milton Keynes, Luton, Peterborough, Hertfordshire, Essex excluding Colchester, Uttlesford and Tendring.

ஏற்கனவே மூன்று அடுக்குக் கட்டுப்பாடுகளில் இருந்த பிரதேசங்கள் நான்காவது நிலைக்கு மாற்றப்படுவதால் ஒருவீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டுக்கு சென்று நத்தார் ஒன்று கூடல்களில் பங்கு கொள்வது முற்றாகத் தடுக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இந்த இறுக்கமான நான்கு அடுக்குக் கட்டுப்பாடுகளை அவசரமாக அமுல்ப்படுத்தவேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்பதாக பிரதமர் இன்று நாட்டுக்குத் தெரிவித்திருக்கிறார்.

புதிய மரபு மாற்றம் பெற்ற வைரஸ் (new coronavirus variant) மீள் எழுச்சி கொண்டு வேகமாகப் பரவி வருவதால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமுலுக்கு கொண்டுவரத் தீட்டி இருந்த தளர்வுத் திட்டங்களை மாற்றி மேலும் இறுக்கமான பல புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக அமுல்ப்படுத்தவேண்டிய அவசரம் அங்கு உருவாகி இருக்கிறது.

ஆபத்தானதா, தடுப்பூசிக்கு கட்டுப்படாத வீரியம் கொண்டதா என்பதை தெளிவாக இப்போதைக்கு கூறமுடியாது விட்டாலும் புதிய மரபு மாறிய வைரஸ் வேகமாகப் பரவுகின்றது என்பதை பிரதமர் நாட்டுக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.

வைரஸின் இந்தப் புதிய திரிபு இலகுவாகவும் மிக வேகமாகவும் பரவிவருகின்றது என்பதை புதிய, சுவாச வைரஸுகளது அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கும் அறிவியலாளர் குழுவும் (The Advisory Group on New and Emerging Respiratory Virus Threats) உறுதிப்படுத்தி உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

வைரஸின் இந்த திரிபு குறித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு அரசு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளது.

https://thinakkural.lk/article/99508

  • Replies 77
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப் படுத்தப்படுகிறது பிரிட்டன்! லண்டனுக்கு போக்குவரத்தை நிறுத்த ஜரோப்பிய நாடுகள் அவசர தீர்மானம்

  • கார்த்திகேசு குமாரதாஸன்

திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து பிரிட்டனுக்கான விமான மற்றும் “ஈரோ ஸ்ரார்” ரயில் உட்பட சகல போக்குவரத்துகளையும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு நிறுத்திவைக்க பிரான்ஸ் முடிவு செய்திருக்கிறது.

airways.jpgஞாயிறு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்ற இந்தத் தடை உத்தரவு ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தைப் பொறுத்து பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும்.

நேற்று மாலை நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்குப் பிறகு பிரான்ஸின் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

ஜேர்மனியும் பிரிட்டனுடனான விமானத் தொடர்புகளை நள்ளிரவுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதிபர் அங்கெலா மெர்கல் முன்னதாக இன்று மாலை பிரெஞ்சு அதிபர் மக்ரோனுடன் இது குறித்துப் பேச்சு நடத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று பிரிட்டிஷ் விமான சேவைகளை நெதர்லாந்து அரசு இன்று ஞாயிறு காலை முதல் இடைநிறுத்தி உள்ளது. ஜனவரி முதல் திகதிவரை இத்தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் ‘ஈரோ ஸ்ரார்’ ரயில் மற்றும் பிரிட்டிஷ் விமானங்களது வருகையை 24 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தி உள்ளது. நிலைமையை மதிப்பிட்ட பின்னர் அடுத்த நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

ஜனவரி 31 ஆம் திகதிவரை பிரிட்டனுடனான வான்வழிப் போக்குவரத்தை இடைநிறுத்துவதாக பல்கேரியாவும் அறிவித்துள்ளது.

950-1024x682.jpgபிரிட்டனில் வேகமாகப் பரவிவருவதாகக் கூறப்படும் மாற்றமடைந்த புதிய வைரஸ் தொற்றினை அடுத்து நாட்டின் பெரும் பகுதி மூடி முடக்கப்பட்டிருக்கிறது. அங்கு நேற்று ஞாயிறு 36 ஆயிரம் புதிய தொற்றுக்கள் பதிவாகி உள்ளன. 326 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

திரிபடைந்த வைரஸ் முன்னையதைவிட வேகமாகப் பரவுவதாக பிரிட்டன் முறையிட்டிருப்பதை அடுத்து தத்தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளுமாறு ஜரோப்பிய நாடுகளை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸின் மாற்றமடைந்த புதிய வைரஸ் (new coronavirus variant) தென்னாபிரிக்காவிலும் வேகமாகப் பரவிவருகின்றது என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

https://thinakkural.lk/article/99535

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுவகை கொரோனா வைரஸ்: மொத்த ஐரோப்பாவில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரிட்டன்: பிரதமர் அவசர ஆலோசனை

புதுவகை கொரோனா வைரஸ்: மொத்த ஐரோப்பாவில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரிட்டன்: பிரதமர்  அவசர ஆலோசனை

பிரிட்டனில்  கிட்டத்தட்ட மொத்த ஐரோப்பாவிலிருந்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனிலிருந்து அயர்லாந்துக்கு திரும்ப முயலும் மக்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிந்ததால் கடும் குழப்பம் ஏற்பட்டது.

70 சதவிகிதம் அதிகம் தொற்றும் திறன் கொண்ட புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட விஷயம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை காலத்தில் பிரிட்டன்  கிட்டத்தட்ட மொத்த ஐரோப்பாவிலிருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, பல்கேரியா, ஜேர்மனி, பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள், குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு பிரிட்டன் விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை விதித்துள்ளன, சில நாடுகள் புத்தாண்டு வரை தடை விதித்துள்ளன.

இந்த வரிசையில், இஸ்ரேல், துருக்கி, மொராக்கோ, குவைத், சவுதி அரேபியா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளும் இணைந்துகொண்டுள்ளன. பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர  நாளை (செவ்வாய்க்கிழமை)  நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பிரிட்டனிலிருந்து அயர்லாந்து செல்லவேண்டிய மக்கள் அனைவரும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிந்ததால், அங்கு கடும் குழப்பம் ஏற்பட்டது. அயர்லாந்தும், 48 மணி நேரத்திற்கு பிரிட்டனிலிருந்து அத்தியாவசியமற்ற விமானங்கள் வர நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது. விமானங்கள் மட்டுமல்ல படகுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், அயர்லாந்து திரும்ப மக்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிந்த செய்தியை அறிந்த அயர்லாந்து மக்கள், கடும் தொற்று நிலவும் ஒரு இடத்திலிருந்து மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு பிரிட்டனில் உள்ள முக்கிய துறைமுகமான டோவர் சரக்கு-பயணியர் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
    
இந்த நிலையில் லண்டனில் தேசிய நெருக்கடிக்கான கேபினட் குழுவின் கூட்டத்தை  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட்டினார்.  சர்வதேச பயணத்திற்கு பல நாடுகள் விதித்துள்ள தடை குறித்தும், அதே நேரம் பிரிட்டனுக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து சரக்கு போக்குவரத்து நடப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விவாதித்தார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/21163019/Countries-around-the-world-stop-travel-from-UK.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரிட்டன் விமானங்களுக்கு டிச.31 ஆம் தேதி வரை தடை விதித்தது இந்தியா

பிரிட்டன் விமானங்களுக்கு டிச.31 ஆம் தேதி வரை தடை விதித்தது இந்தியா
 
புதுடெல்லி,

இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். 

அதேபோல், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதையடுத்து, இந்தியாவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர  நாளை (செவ்வாய்க்கிழமை)  நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது. 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/21153348/Government-halts-flights-from-and-to-UK-from-tomorrow.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா வைரஸ்... உலகம் அச்சம் கொள்ள காரணம் என்ன?

Regent Street, London ( AP Photo/Alberto Pezzali )

பிரிட்டனில் தற்போது பரவுவது அதிக கொடிய வகை கொரோனா வைரஸ் என்பதற்கான ஆதாரங்களோ ஆய்வு முடிவுகளோ இல்லை. இருந்தாலும் அதனைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்றால், மிகவும் குறைவான நோய் அரும்பல் காலத்தில் (Incubation Period) அதிகமானோருக்குப் பரவும் தன்மை கொண்டது.

`மறுபடியும் முதல்ல இருந்தா...' என்ற வடிவேலுவின் டயலாக் போன்றுதான் கொரோனாவின் செயல்பாடுகள் இருக்கின்றனவோ என்ற அச்சம் எழத் தொடங்கியிருக்கிறது. 2020 என்ற வருஷத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு விஷயம் கோவிட்-19-தான். கிட்டத்தட்ட ஓராண்டாக அது குறித்த அச்சத்திலும் பாதிப்பிலும் உழன்றுகொண்டிருந்த நமக்கு தடுப்பூசிகள் வரப்போகின்றன என்ற நம்பிக்கை பிறந்தது.

2021-ல் எப்படியும் உலகம் இயல்புக்குத் திரும்பிவிடும் என்ற நமது நம்பிக்கையின் கயிற்றை மெள்ள அவிழ்க்கிறது பிரிட்டன். தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் (New Strain) பரவி வருகிறது. இந்த வைரஸ் 70 சதவிகிதம் வேகமாகப் பரவுகிறது என்ற தகவலும் கவலையளிக்கிறது.

பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்த புதிய வைரஸ் தென்படுகிறது. நவம்பர் மாத இடையிலிருந்து நடத்தப்பட்ட ஆய்வில் தென் ஆப்பிரிக்காவில் சேரிக்கப்பட்ட மாதிரிகளில் 90 சதவிகிதம் இந்த புதிய வைரஸ்தான்.

Corona virus
 
Corona virus Unsplash

இதன் காரணமாக, பிரிட்டன், ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள், பொது முடக்கம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன. இன்னும் சில நாடுகள் இவற்றை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. இது பற்றிப் பேசியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ``தாக்குவதற்கான முறையை வைரஸ் மாற்றும்போது, நம்முடைய பாதுகாப்பு வழிமுறைகளை நாமும் மாற்றியாக வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஆலோசனையில் இந்தியா!

இந்நிலையில், பிரிட்டனில் தாக்கம் செலுத்திவரும் இந்த புதிய வகை கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சர்வதேச சுகாதார அமைப்புகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. அந்த ஆலோசனைக்குப் பிறகு பிரிட்டனிலிருந்து சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Covent Garden, London
 
Covent Garden, London AP Photo/Alberto Pezzali

புதிய வகை வைரஸ் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும், இதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.

``பிரிட்டனில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் செப்டம்பர் மாதத்திலேயே லண்டன், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் அதனைத் தொடர்ந்து கவனித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

வைரஸ் ஏன் மாற்றமடைகிறது?

முட்கள் கொண்ட பந்துபோன்ற தோற்றத்தில் கொரோனா வைரஸ் காணப்படும். முட்கள் போன்று காணப்படுவது ஒரு வகை புரதம். வைரஸ் பல்கிப் பெருகுவதற்கு அந்தப் புரதம்தான் பயன்படுகிறது. அந்தப் புரதத்தில் ஏற்படும் மாற்றத்தினால்தான் வைரஸின் தன்மையும் மாறுகிறது.

தமிழகத்தைவிட ஆந்திரத்தில் உயிரிழப்புகள் அதிகமாகக் காணப்படவும் வைரஸின் தன்மைதான் காரணம். இரண்டு மாநிலத்திலும் வெவ்வேறு தன்மை கொண்ட வைரஸ்கள் பரவியிருக்கின்றன.

A view of part of Regent Street after Britain's Prime Minister Boris Johnson introduced Tier 4 restrictions for London
 
A view of part of Regent Street after Britain's Prime Minister Boris Johnson introduced Tier 4 restrictions for London AP Photo/Stefan Rousseau

பொதுவாகவே வைரஸ்கள் அந்தந்த இடத்துக்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும். நம் உடலுக்குச் செல்லும்போது நோய் எதிர்ப்புத் திறன் (Immunity pattern) அதனைத் தடுத்தால், தன் தன்மையை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டு பரவும். கிட்டத்தட்ட பச்சோந்தியைப் போன்று இடத்துக்குத் தகுந்தாற்போல் தன்மையை மாற்றிக்கொண்டு தொற்றும். அதனால்தான் ஒவ்வொருவரின் உடலுக்குள் வைரஸ் செல்லும்போதும் அதற்கேற்றாற்போல் மாற்றமடைந்து, புதிய புதிய தன்மை (Strain) உருவாகிக்கொண்டே இருக்கிறது.

அச்சம் எதனால்?

பிரிட்டனில் தற்போது பரவுவது அதிக கொடிய வகை கொரோனா வைரஸ் என்பதற்கான ஆதாரங்களோ ஆய்வு முடிவுகளோ இல்லை. இருந்தாலும் அதனைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்றால், மிகவும் குறைவான நோய் அரும்பல் காலத்தில் (Incubation Period) அதிகமானோருக்குப் பரவும் தன்மை கொண்டது.

பொதுவாக வைரஸ் அடுத்தவருக்குப் பரவுவதற்கு குறிப்பிட்ட அளவு வைரஸ்களின் எண்ணிக்கை (Viral Load) தேவைப்படும். ஆனால் புதிய மாற்றமடைந்த தன்மையைக் கொண்ட இந்த வைரஸ் பத்துப் பதினைந்து இருந்தால்கூட அடுத்தவருக்கு எளிதில் பரவிவிடும்.

தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்
 
ஒரு நோயாளியிடமிருந்து எத்தனை பேருக்கு நோய் பரவுகிறது என்பதை ஆர்நாட் (R0) என்று குறிப்பிடுகின்றனர். புதிய வைரஸின் தன்மையினால் ஆர்நாட் விகிதம் அதிகரிக்கிறது. ஒரு நபரிடமிருந்து அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு இது பரவும்.

ஏற்கெனவே, கோவிட்-19 பெருந்தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். மாற்றமடைந்த இந்த வைரஸினால் இன்னும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பெருந்தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்தில் 50 பேருக்கு வென்டிலேட்டர் தேவைப்பட்ட இடத்தில் 10 வென்டிலேட்டர்கள் என்ற நிலைதான் இருந்தது.

அதனால் யாருக்குச் சிகிச்சையளிப்பது என்று முன்னிலை கொடுத்து, ரேஷன் அடிப்படையில் சிகிச்சையளிக்க நேர்ந்தது. அதே போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் மருத்துவமனைகள் நிரம்பி, ஓவர் லோடு ஆகிவிடும். அதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படும் என்ற பயத்தினால்தான் பயணக்கட்டுப்பாடுகள், விமான சேவை ரத்து போன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து எடுத்துள்ளது.

An example of the Pfizer COVID-19 vaccine vial
 
An example of the Pfizer COVID-19 vaccine vial AP Photo/Andrew Harnik, Pool

தடுப்பூசி பயனளிக்காதா?

தடுப்பூசி தயாரிக்கும்போதே வைரஸின் ஐந்தாறு தன்மைகளுக்கு ஏற்றாற்போல்தான் தயாரித்து விநியோகிப்பார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் தடுப்பூசி உற்பத்தி செய்யும்போது அதனை அப்டேட் செய்து அப்போது எந்தத் தன்மையான வைரஸ் பாதிப்பு இருக்கிறதோ அதற்கேற்றாற் போல் தயாரிப்பார்கள். இன்ஃப்ளூயென்சா வைரஸ் பாதிப்புக்கு இதே போன்றுதான் ஆண்டு தோறும் அப்டேட்டடு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்து தடுப்பு மருந்து கண்டறிவது நிச்சயம் குறுகிய கால பயன்பாட்டுக்காக கிடையாது. வருடந்தோறும் வைரஸின் தன்மை மாறும், வருடந்தோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

Corona Vaccine
 
Corona Vaccine Claudio Furlan/LaPresse via AP

அதே நேரம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோயே வராது என்பதும் இல்லை. அடுத்த முறை வைரஸின் தன்மை மாறும்போது அது நிச்சயம் மீண்டும் தாக்கலாம். ஒருமுறை கோவிட்-19-க்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதற்கான நோய் எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) உருவாகிவிட்டது என்றால், அடுத்த முறை வைரஸ் தாக்கும்போது அதன் தாக்கம் தீவிரமாக இருக்காது. லேசான பாதிப்பாகவே இருக்கும் என்பதால் தீவிர பாதிப்பு, உயிரிழப்பு போன்றவை குறையும். அதனால்தான் தடுப்பூசி முக்கியத்துவம் பெறுகிறது.

Cardiff city center, Wales
 
Cardiff city center, Wales Ben Birchall/PA via AP

இந்தியாவுக்கும் பரவுமா?

பிரிட்டனில் பரவி வரும் மாற்றமடைந்த வைரஸ் இந்தியாவுக்குள்ளும் நுழையலாம். அப்படிப் பரவினால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இரண்டாம் அலை மேலும் தீவிரமடையும். அதனால் மத்திய அரசு பிரிட்டனுக்குப் பயணம் செய்வோரையும் அங்கிருந்து இந்தியாவுக்கு வருவோரையும் தடை செய்வது நல்லது" என்றார்.

https://www.vikatan.com/health/healthy/mutant-coronavirus-strain-in-uk-how-it-will-impact-this-pandemic

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, உடையார் said:

இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

எங்கள் ஊர்களில் அம்மாள் வருத்தம் வந்தால்... அம்மனை வழிபட்டு அம்மனுக்குப் பிடிக்காத எதையுமே செய்யமாட்டார்கள். மீறிச் செய்தால் அம்மனுக்கு உக்கிரம் அதிகரித்து நோய் உச்சமடைந்துவிடும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துமாப்போல் பலர் மீறி நடந்து அவதியுற்றதைக் கண்டுள்ளோம். இது இன்றைய அறிவுலகத்திற்குப் பழைய பஞ்சாங்கமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடம்பில் ஏற்பட்ட தளும்புகள், மாற்றங்களும் சாட்சிகளாக உள்ளன. கொரோனா பீடித்த நாடுகளிள் அதற்குரிய இயற்கையோடிணைந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்த நாடுகளில் கொரோனா வீரியம் கொண்டதாகத் தெரியவில்லை. கொரோனாவை எதிர்த்து செயற்கை மருந்துகளை உருவாக்கி பரீசீலிக்க முயன்ற முதாவது நாடு லண்டனாக உள்ளதும்..... அங்குதான் கொரோனா மீளெழுச்சி பெற்றுள்ளதற்கும் காரணம் என்ன.? பழைய பஞ்சாக்கத்தை மீறியதாக இருக்குமா....??   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இவை எந்த நாடுகள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இதை உறுதி படுத்தும் முகமாக ஐயா அவர்கள் இன்றுமுதல் சகல மேற்கத்தைய மருந்துகளையும் புறந்தள்ளி வாழ தயாரா?

கொரோனா அம்மனுக்கு கோவம் வந்து இங்கிலாதை பழி வாங்குவது போல், டயபடீஸ் அம்மன், கொலஸ்டிரோல் அம்மன், ஹார்ட் அட்டாக் அம்மன் போன்றவற்றுக்கும் கோவம் வந்தால் என்ன செய்வது?

அதே போல் ஐயா அவர்கள் உங்களுக்கு வழங்கபடபோகும் கொரோனா தடுப்பூசியையும் தெய்வகுற்றம் கருதி மறுப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மாள் வருத்தம் வந்த அனுபவத்தையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருந்தும்.

அம்மாள் வருத்தம் வந்த போது கண்டியில் இருந்தேன். பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை அப்போது தான் பிறந்திருந்ததால் சில மைல்கள் தொலைவில் இருந்த வீட்டிற்குச் செல்லாமல் வேலை செய்த பண்ணை விடுதியிலேயே தனியே தங்கி விட்டேன்.

பல்கலை வளாகம் என்பதால் தொற்று நோயை மருத்துவ நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும், அப்படியே அறிவித்தேன். சில மணி நேரங்களில் ஒரு தாதி அம்புலன்சில் (ஆம், அம்புலன்சில்!) வந்து அசைக்ளோவிர் (acyclovir) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தைத் தந்தார். அன்றிரவோடு காய்ச்சல் விட்டது. அடுத்த நாளும் ஒரு மருந்து. மூன்றே மூன்று பொக்குளங்களோடு அம்மாள் மலையேறி விட்டார்!

நான்காம் நாள் பேராதனை வீதியில் அமைந்த கொத்துக்கு மக்காவெனப் பெயர் பெற்ற பரடைஸ் முஸ்லிம் ஹோட்டலில் இருந்து ஒரு மாட்டிறைச்சிக் கொத்து மாலையில் ஒரு நண்பர் மூலம் வந்தது. காய்ந்த வாய்க்கு இதமாக இருந்தது. ஐந்தாம் நாள் உடலைக் கழுவி விட்டு, ஆறாம் நாள் முழுக்குளியல். 

வேப்பிலை, மாமிசத் தவிர்ப்பு இவையெல்லாம் அர்த்தமற்ற நம்பிக்கைகள்! நம்பினால் placebo effect எனப்படும் மனப் பிராந்தி காரணமாக வேலை செய்யக் கூடும். நம்பா விட்டாலும் ஒரு தீங்குமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

எனக்கு அம்மாள் வருத்தம் வந்த அனுபவத்தையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருந்தும்.

அம்மாள் வருத்தம் வந்த போது கண்டியில் இருந்தேன். பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை அப்போது தான் பிறந்திருந்ததால் சில மைல்கள் தொலைவில் இருந்த வீட்டிற்குச் செல்லாமல் வேலை செய்த பண்ணை விடுதியிலேயே தனியே தங்கி விட்டேன்.

கிறித்தவரான உங்களுக்கு வந்த வருத்தத்தை எப்படி அம்மாள் வருத்தம் என்று நம்பினீர்கள்.....?. அம்மனிடம் அத்தனை பயமா...? பக்தியா...??

1 hour ago, goshan_che said:

அதே போல் ஐயா அவர்கள் உங்களுக்கு வழங்கபடபோகும் கொரோனா தடுப்பூசியையும் தெய்வகுற்றம் கருதி மறுப்பீர்களா?

அம்மாள் வருத்தம் வந்து எந்த வடுவும் இன்றி மீண்டவர்களையும், வடுக்களோடு மீண்டவர்களையும் கண்ட என் அனுபவத்தை எழுதி அதன் உண்மை பொய்யை உணரமுடியாமல் அதனைக் கேள்வியாகவும் கேட்டிருந்தேன். இனி உங்கள் அறிவுரை கேட்டுக் கொரோனா தடுப்பூசியை ஏற்பதா? இல்லையா? என்று முடிவு செய்கிறேன் தம்பி. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

கிறித்தவரான உங்களுக்கு வந்த வருத்தத்தை எப்படி அம்மாள் வருத்தம் என்று நம்பினீர்கள்.....?. அம்மனிடம் அத்தனை பயமா...? பக்தியா...??

அம்மாள் வருத்தம் வந்து எந்த வடுவும் இன்றி மீண்டவர்களையும், வடுக்களோடு மீண்டவர்களையும் கண்ட என் அனுபவத்தை எழுதி அதன் உண்மை பொய்யை உணரமுடியாமல் அதனைக் கேள்வியாகவும் கேட்டிருந்தேன். இனி உங்கள் அறிவுரை கேட்டுக் கொரோனா தடுப்பூசியை ஏற்பதா? இல்லையா? என்று முடிவு செய்கிறேன் தம்பி. 

அப்ப "அம்மாள் வருத்தம்" என்று நீங்கள் சொல்கிற வைரஸ் நோய் கிறிஸ்தவர்களுக்கு வராதோ?

இப்படியொரு "தலைகீழான அறிவியல்" (inverted science) இருப்பது எனக்கு இன்று தான் தெரியும்! 🤣வேறென்னவெல்லாம் கிறிஸ்தவர்களில் பயன் தராது? வேப்பிலை, மஞ்சள், சாம்பிராணிப் புகை இதெல்லாம் கிறிஸ்தவர்களில் வேலை செய்யாது போல.

உங்கள் "தலைகீழ் அறிவியல்" படி, முதலில் இந்துவாக இருந்து ஒருவர் கிறிஸ்தவராக மாறினால் அவருக்கு அம்மாள் வருத்தம் வருமா வராதா?

அப்ப கிறிஸ்தவர்களாக மதம் மாறுவது அம்மாள் வருத்த வராமலிருக்க ஒரு தடுப்பு முயற்சியாக அமையுமா பாஞ்?🤦‍♂️ 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இப்படியொரு "தலைகீழான அறிவியல்" (inverted science) இருப்பது எனக்கு இன்று தான் தெரியும்! 🤣வேறென்னவெல்லாம் கிறிஸ்தவர்களில் பயன் தராது? வேப்பிலை, மஞ்சள், சாம்பிராணிப் புகை இதெல்லாம் கிறிஸ்தவர்களில் வேலை செய்யாது போல.

இதனை நான் கூறவில்லை நீங்கள்தானே கூறினீர்கள்......

1 hour ago, Justin said:

வேப்பிலை, மாமிசத் தவிர்ப்பு இவையெல்லாம் அர்த்தமற்ற நம்பிக்கைகள்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

இதனை நான் கூறவில்லை நீங்கள்தானே கூறினீர்கள்......

இது கவுண்டர் செந்தில் வாழைப்பழக்கதை போலத் தான் போகும் போல!😎

ஊரில் அம்மாள் வருத்தம் என்று நீங்கள் சொல்வது எதை? அதன் குணங்குறிகள் எவை?

(இது தெரியாமல் கேட்கவில்லை, வாசிக்கிறவர்களுக்கு இந்த "வாழைப்பழ ரெக்னிக்கை" ஒருக்கா விளக்கி விடலாம்!)

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Paanch said:

கிறித்தவரான உங்களுக்கு வந்த வருத்தத்தை எப்படி அம்மாள் வருத்தம் என்று நம்பினீர்கள்.....?. அம்மனிடம் அத்தனை பயமா...? பக்தியா...??

அம்மாள் வருத்தம் வந்து எந்த வடுவும் இன்றி மீண்டவர்களையும், வடுக்களோடு மீண்டவர்களையும் கண்ட என் அனுபவத்தை எழுதி அதன் உண்மை பொய்யை உணரமுடியாமல் அதனைக் கேள்வியாகவும் கேட்டிருந்தேன். இனி உங்கள் அறிவுரை கேட்டுக் கொரோனா தடுப்பூசியை ஏற்பதா? இல்லையா? என்று முடிவு செய்கிறேன் தம்பி. 

ஐயா,

அம்மாள் வருத்தம், சின்னம்மை என்பது ஸ்மால் பாக்ஸ் எனப்படும் ஒரு வைரஸ் தொற்று. அதை கூட இப்படித்தான் தடுப்பூசி பாவித்து அடக்கி விட்டார்கள்.

மற்றையது சிக்கின் பொக்ஸ் எனப்படும் பெரியம்மை. இதற்கும் வக்சீன் உண்டு. ஆனால் எடுக்காமல் விட்டாலும் ஒரு தரம் வந்து மாறிவிடும். பிறகு வராது. வயது முதிர நோயெதிர்பு சக்தி குறைய தொடங்க மீண்டும் வந்தால் அதன் பெயர் ஷிங்கில்ஸ்.

இரெண்டுக்கும் மருந்து உண்டு. 

வடு வருவதும், வராது போவதும் நோயின், வீரியம், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் சம்பந்தபட்டது.

இதில் அம்மனை, தெய்வ நிந்தனையை கலந்தடிக்காமல் டாக்டர்களின் அறிவுரையை பின் பற்றுங்கள் ஐயா.

பிரிட்டனில் வந்துள்ளது கொரோனாவின் விகாரி.

வைரஸ் விகாரம் அடைவது சாதாரண விடயம்.

இந்த விகாரி அதிக தொற்றும் இயல்புடையது. 

ஆனால் அதிக கொல்லும் இயல்புடையதா என்பது இன்னும் தெரியவில்லை. 

பெரும்பாலும் இதற்கும் எதிராக வக்சீன்கள் வேலை செய்யும் என்கிறார்கள்.

தவிரவும் வைரஸ்கள் விகாரம் அடையும் போது, பரவும் வலு கூடி, கொல்லும் திறன் குறையவும் கூடும்.

ஆகவே இந்த விகாரம் ஒரு வரபிரசாதமாக கூட அமையலாம். 

இது எல்லாவற்றையும் டாவினின் கூர்ப்பு கொள்கையை வைத்து விளங்கபடுத்திவிடலாம்.

எனவே பதட்டமான காலத்தில் நாமும் குழம்பி மற்றயவர்களையும் குழப்பாமல், அரசு சொல்லும் வழிமுறைகளை கடைபிடிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

அங்குதான் கொரோனா மீளெழுச்சி பெற்றுள்ளதற்கும் காரணம் என்ன.? பழைய பஞ்சாக்கத்தை மீறியதாக இருக்குமா....??   

இலண்டனில் மேற்கே கனகதுர்க்கை அம்மன், வட கிழக்கே நாகபூஷணி அம்மன், தெற்கே வல்வை முத்துமாரியம்மன் (இப்ப குறைடனில்), தென்மேற்கே ராஜராஜேஸ்வரி அம்மன் என்று நாற்புறமும் அம்மன்கள் அபயக் கரங்களுடன் அருள்பாலித்தும் கொரோனா மீளெழுச்சி கொண்டிருப்பது கிழக்குப் பகுதியில் ஒரு இடைவெளி இருப்பதால் என்று நினைக்கின்றேன். அங்கு ஒரு கொரோனா அம்மாளாச்சியை பிரதிட்டை பண்ணி வேப்பிலையும், மஞ்சளும் தெளித்து, வாய்கட்டிப்  பூசை செய்யும் முறையையும் கொண்டுவந்தால் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐயா,

அம்மாள் வருத்தம், சின்னம்மை என்பது ஸ்மால் பாக்ஸ் எனப்படும் ஒரு வைரஸ் தொற்று. அதை கூட இப்படித்தான் தடுப்பூசி பாவித்து அடக்கி விட்டார்கள்.

மற்றையது சிக்கின் பொக்ஸ் எனப்படும் பெரியம்மை. இதற்கும் வக்சீன் உண்டு. ஆனால் எடுக்காமல் விட்டாலும் ஒரு தரம் வந்து மாறிவிடும். பிறகு வராது. வயது முதிர நோயெதிர்பு சக்தி குறைய தொடங்க மீண்டும் வந்தால் அதன் பெயர் ஷிங்கில்ஸ்.

இரெண்டுக்கும் மருந்து உண்டு. 

வடு வருவதும், வராது போவதும் நோயின், வீரியம், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் சம்பந்தபட்டது.

இதில் அம்மனை, தெய்வ நிந்தனையை கலந்தடிக்காமல் டாக்டர்களின் அறிவுரையை பின் பற்றுங்கள் ஐயா.

பிரிட்டனில் வந்துள்ளது கொரோனாவின் விகாரி.

வைரஸ் விகாரம் அடைவது சாதாரண விடயம்.

இந்த விகாரி அதிக தொற்றும் இயல்புடையது. 

ஆனால் அதிக கொல்லும் இயல்புடையதா என்பது இன்னும் தெரியவில்லை. 

பெரும்பாலும் இதற்கும் எதிராக வக்சீன்கள் வேலை செய்யும் என்கிறார்கள்.

தவிரவும் வைரஸ்கள் விகாரம் அடையும் போது, பரவும் வலு கூடி, கொல்லும் திறன் குறையவும் கூடும்.

ஆகவே இந்த விகாரம் ஒரு வரபிரசாதமாக கூட அமையலாம். 

இது எல்லாவற்றையும் டாவினின் கூர்ப்பு கொள்கையை வைத்து விளங்கபடுத்திவிடலாம்.

எனவே பதட்டமான காலத்தில் நாமும் குழம்பி மற்றயவர்களையும் குழப்பாமல், அரசு சொல்லும் வழிமுறைகளை கடைபிடிப்போம்.

நல்ல விளக்கம்!

முறைப்படி செய்யப் படும்  evidence-based விஞ்ஞானம் எவ்வளவு தீவிரமான நோய்களை ஒழித்திருக்கிறது, உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது என்பதற்கு  1980 இல் உலகிலிருந்தே ஒழிக்கப் பட்ட சின்னம்மை (variola) வைரசே நல்ல உதாரணம்!

 அன்ட்ரூ வேக்fபீல்ட், முகநூல், யு ரியூப் பரியாரிகள், வியாபாரிகள் அன்று இருந்திருந்தால் இன்றும் சின்னம்மை ஆட்களைக் கொன்று கொண்டிருக்கும்! 

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி காலத்தில் தம்மால் தீர்க்க முடியாத மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களுக்கு சாமி வருத்தம் அம்மன் நோய் என்று பெயர் வைத்ததாக படித்த ஞாபகம்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மை நோய்க்கு விஞ்ஞான ரீதியாக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத ஆதிகாலத்தில்  அநோய்களை எதிர்க்க அம்மனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்ததன் காரணமாகவே அம்மாள் வருத்தம் என்று பெயர் வந்ததாக கூற கேள்விபட்டிருக்கிறேன், அந்த பிரார்த்தனையின் ஒரு வடிவம்தான் காத்தவராயன் கூத்து என்பதும்.

இந்நாளைய கிறிஸ்தவர்கள் காலனித்துவ அரசுகளின் ஆட்சிக்கு முன்னர் முன்னாள் இந்துக்களே, அதனால் அவர்களும் அந்த நோயின் பெயரை அவ்வாறே அழைத்து வந்திருக்கலாம்.

காலப்போக்கில் வயதானவர்களை தவிர இளம் சந்ததியினர் யாரும் அம்மாள் வருத்தம் என்று அழைப்பது கிடையாது,  அம்மாள் வருத்தம் என்று அழைத்த காலங்களிலேயே பொக்குளிப்பான் அல்லது கொப்புளிப்பான் சின்னமுத்து,என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

பழையகாலத்தவரின் நம்பிக்கைகள் அவர்களின் வாழ்க்கைமுறை அதை கிண்டல் கேலி செய்யவேண்டிய அவசியமே இல்லை, அவர்களோடு முடிந்தது ,இப்போதுள்ளவர்கள் நமக்கு சரியானதை தேர்வு செய்வதே அவர்களின் பிரச்சனை.

எனக்கும் கொப்புளிப்பான் வந்தது வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து பூசும்போது தொற்றுக்கள் குறைய வாய்ப்பிருக்கு, விஞ்ஞானத்தின் வளர்ச்சி கூரையை பிய்த்துக்கொண்டு மேலெழுந்துவிட்ட இந்நாட்களிலும்  மேற்குலகத்தினர்கூட மஞ்சள், வேப்பிலையில் செய்யப்பட்ட மருத்துவ பொருட்களை நோயெதிர்ப்பு சக்தியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமின்றி அதில் உள்ள மருத்துவகுணம் கொப்புளிப்பான் ஆறியபின் வரும் அடையாளங்களை மறைய செய்கிறது, புண்கள் காய்ந்து அதன் அயர்கள் என்று சொல்லப்படும் மருக்கள் உதிர்ந்து விழ பெரிதும் துணை செய்கிறது. இதனால்தான் முகத்திற்கும் மஞ்சள் பூசி குளிக்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வளவன் அவர்களே! உங்கள் பின்னூட்டம் என்கருத்துக்குச் சாதகமாக இருப்பதினால் பச்சை போடவில்லை. அங்கு உண்மை விளம்புவதால் போட்டேன். :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட வேலை செய்கிற 60+ ஒருவர் கேட்டார். தம்பி கொரணாவ நம்பிறியா எண்டு, கீழே குனிந்து பார்த்தேன் புது சூவாக இருநதது. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, valavan said:

அம்மை நோய்க்கு விஞ்ஞான ரீதியாக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத ஆதிகாலத்தில்  அநோய்களை எதிர்க்க அம்மனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்ததன் காரணமாகவே அம்மாள் வருத்தம் என்று பெயர் வந்ததாக கூற கேள்விபட்டிருக்கிறேன், அந்த பிரார்த்தனையின் ஒரு வடிவம்தான் காத்தவராயன் கூத்து என்பதும்.

இந்நாளைய கிறிஸ்தவர்கள் காலனித்துவ அரசுகளின் ஆட்சிக்கு முன்னர் முன்னாள் இந்துக்களே, அதனால் அவர்களும் அந்த நோயின் பெயரை அவ்வாறே அழைத்து வந்திருக்கலாம்.

காலப்போக்கில் வயதானவர்களை தவிர இளம் சந்ததியினர் யாரும் அம்மாள் வருத்தம் என்று அழைப்பது கிடையாது,  அம்மாள் வருத்தம் என்று அழைத்த காலங்களிலேயே பொக்குளிப்பான் அல்லது கொப்புளிப்பான் சின்னமுத்து,என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

பழையகாலத்தவரின் நம்பிக்கைகள் அவர்களின் வாழ்க்கைமுறை அதை கிண்டல் கேலி செய்யவேண்டிய அவசியமே இல்லை, அவர்களோடு முடிந்தது ,இப்போதுள்ளவர்கள் நமக்கு சரியானதை தேர்வு செய்வதே அவர்களின் பிரச்சனை.

எனக்கும் கொப்புளிப்பான் வந்தது வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து பூசும்போது தொற்றுக்கள் குறைய வாய்ப்பிருக்கு, விஞ்ஞானத்தின் வளர்ச்சி கூரையை பிய்த்துக்கொண்டு மேலெழுந்துவிட்ட இந்நாட்களிலும்  மேற்குலகத்தினர்கூட மஞ்சள், வேப்பிலையில் செய்யப்பட்ட மருத்துவ பொருட்களை நோயெதிர்ப்பு சக்தியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமின்றி அதில் உள்ள மருத்துவகுணம் கொப்புளிப்பான் ஆறியபின் வரும் அடையாளங்களை மறைய செய்கிறது, புண்கள் காய்ந்து அதன் அயர்கள் என்று சொல்லப்படும் மருக்கள் உதிர்ந்து விழ பெரிதும் துணை செய்கிறது. இதனால்தான் முகத்திற்கும் மஞ்சள் பூசி குளிக்கிறார்களோ தெரியவில்லை.

வளவன், 

முன்னோரைக் கேலி செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்பது உண்மை! ஆனால், விஞ்ஞான மறுப்பிற்கு ஆதாரமாக முன்னோர் பயன்படுத்திய முறைகளை மீளக் கொண்டு வந்து ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் பரப்புவோரைக் கேலி செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை! எனவே தான் பாஞ் மேலே சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கு அப்படியான  கேலிப் பதில்கள் வந்திருக்கின்றன. 

அம்மாள் வருத்தம் என்று முன்னோரால் அழைக்கப் பட்ட நோய் வைரஸ் என்று கண்டு கொண்டு அதற்கு முறையான ஆய்வுகள் மூலம் தீர்வுகளும் கண்டறிந்து நூறாண்டுகள் ஆன பின்னரும் இந்த மூட நம்பிக்கைகளை இப்போது பரப்புவதில் நன்மைகள் எதுவும் இல்லை, தீமைகள் பல உண்டு! கொரனாவுக்கு தடுப்பூசியை எவ்வளவு பாதுகாப்பு என்று நிரூபித்தாலும் கணிசமான மக்கள் எடுத்துக் கொள்ளத் தயங்கும் காலத்தில் இப்படியான பழைய பஞ்சாங்க முறைகளால் என்ன நன்மைகள் ஏற்படக் கூடும் என்று நினைக்கிறீர்கள்? 

மேலும் நீங்கள் குறிப்பிட்ட மஞ்சள், வேப்பிலை விவகாரம்: அது ஏன் மேற்கு நாட்டவர் பாவித்தால் அது நம்பக் கூடியதாக இருக்கிறது? இங்கே வேறு திரிகளில் அலசியாகி விட்டது:மஞ்சளில் இருக்கும் குகுமின் எல்லாவற்றையும் கொல்லும் ஒரு biocide . வேம்பில் இருக்கும் azadirachtin எல்லாவற்றையும் கொல்லும் ஒரு biocide.

ஆனால் (இது ஒரு பெரிய ஆனால்):  வேப்பிலையைத் தடவும் போது அசாடிராக்ரின் வெளியே வந்து உங்களைக் காக்காது. அதே போல மஞ்சளில் இருக்கும் குகுமின் மிகக் கொஞ்சமாகத் தான் உடலுக்குக் கிடைக்கும் - அது கிடைக்கும் அளவு எந்த விளைவையும் தரப் போதுமானதல்ல. எனவே உங்கள் பொக்குளிப்பான் காயங்கள் ஆறியது உங்கள் சுகாதாரமான பழக்கங்களாலோ அல்லது தன்னிச்சையாகவோ இருக்கலாம்! 

இதையெல்லாம்  ஒருவர் நம்பலாம், தன்னளவில் பயன்படுத்தலாம், அது அவர் உரிமை. ஆனால், ஒரு பெருந்தொற்றை சீரியசாக அணுகாமல் இப்படி வெற்று நம்பிக்கைகளைப் பரப்புவது பொறுப்பற்ற செயல் என்றே நான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எங்கள் ஊர்களில் அம்மாள் வருத்தம் வந்தால்... அம்மனை வழிபட்டு அம்மனுக்குப் பிடிக்காத எதையுமே செய்யமாட்டார்கள்.

Paanch உங்களுக்காக “கொரோனா அம்மனை” வடிவமைத்திருக்கிறேன்.spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, உடையார் said:

பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா வைரஸ்... உலகம் அச்சம் கொள்ள காரணம் என்ன?

இந்தா நாங்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என  திமிர் பிடித்து ஆடியவர்களுக்கு இயற்கையின் அடுத்த  ஆப்பு.

விஞ்ஞானமும் மருத்துவமும் விண்ணை முட்டீட்டுது எண்டுச்சினம்..... ஆனால் வருத்தங்களுக்கு மருந்தை கண்டு பிடிக்கமாட்டினமாம்....

அப்பன்மாரே! கோரோனா தானாய் போனால் உண்டு.அதை விட்டு  உங்களாலை ஒண்டும் புடுங்கமுடியாது.

எங்கடை முன்னோர்கள் மருத்தவம் அப்ப தொடக்கமே இருக்குது. அந்த மருத்துவங்கள் பிழை எண்டால் நாங்கள் முன்னோர்கள் எண்டு சொல்லுற அளவுக்கு அவர்கள் நூறுவருசம் வாழ்ந்திருக்கவே முடியாது எல்லோ...?

இந்த விஞ்ஞான கண்டுபிடிப்பு மருத்துவங்கள் வரமுதலே இந்த உலகம் சுகமாக வாழ்ந்து கொண்டுதான் இருந்தது.😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தன் said:

என்னோட வேலை செய்கிற 60+ ஒருவர் கேட்டார். தம்பி கொரணாவ நம்பிறியா எண்டு, கீழே குனிந்து பார்த்தேன் புது சூவாக இருநதது. 

நான் ரியூப் லைற், இதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

ஆதி காலத்தில் தம்மால் தீர்க்க முடியாத மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களுக்கு சாமி வருத்தம் அம்மன் நோய் என்று பெயர் வைத்ததாக படித்த ஞாபகம்

இப்பவே மருந்துகளை கண்டு பிடிக்க இந்த முக்கு முக்கீனம். இதை பாக்கேக்கை  எங்கடை முன்னோர்கள் வலு கெட்டிக்காரர். அதிலும் இயற்கை வைத்தியம். பக்க விளைவுகள் அறவே இல்லை....

1 hour ago, கிருபன் said:

இலண்டனில் மேற்கே கனகதுர்க்கை அம்மன், வட கிழக்கே நாகபூஷணி அம்மன், தெற்கே வல்வை முத்துமாரியம்மன் (இப்ப குறைடனில்), தென்மேற்கே ராஜராஜேஸ்வரி அம்மன் என்று நாற்புறமும் அம்மன்கள் அபயக் கரங்களுடன் அருள்பாலித்தும் கொரோனா மீளெழுச்சி கொண்டிருப்பது கிழக்குப் பகுதியில் ஒரு இடைவெளி இருப்பதால் என்று நினைக்கின்றேன். அங்கு ஒரு கொரோனா அம்மாளாச்சியை பிரதிட்டை பண்ணி வேப்பிலையும், மஞ்சளும் தெளித்து, வாய்கட்டிப்  பூசை செய்யும் முறையையும் கொண்டுவந்தால் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்! 

இப்போது இருக்கும் கோவில்களும் வழிபாட்டு தலங்களும் வியாபார நிலையங்கள்  போன்றது. இது உலகறிந்தவிடயம். அதை வைத்து நீங்கள் கருத்து எழுதுவதால் உங்களின் இயலாமை  தெட்டத்தெளிவாக தெரிகின்றது.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.