Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...

தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...

இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம் பெரிதும் உதவுகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம்  சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

* தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால்  தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

* ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.

* தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.

* தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.

* தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.

மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.

https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/12/23134303/2191025/Boost-Your-Relationship-with-Healthy-Eating.vpf

பிகு: பாதம் பருப்பும் & பேரீச்சம் /  ஈச்சம் பழமும் சாப்பிட்டால் வேற எந்த பழமும் தேவையில்லை 👍

1 hour ago, உடையார் said:

பிகு: பாதம் பருப்பும் & பேரீச்சம் /  ஈச்சம் பழமும் சாப்பிட்டால் வேற எந்த பழமும் தேவையில்லை 👍

அனுபவஸ்தர்கள் சொன்னால் நாங்கள் கேட்கத்தான் வேண்டும் 😄

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கின் மான் கொம்பு ஜோக் மாரி ஆகாமல் இருந்தால் சரி 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, உடையார் said:

தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...

தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...

பிகு: பாதம் பருப்பும் & பேரீச்சம் /  ஈச்சம் பழமும் சாப்பிட்டால் வேற எந்த பழமும் தேவையில்லை 👍

என்ரை காலத்து ஆக்களுக்கும் எனக்கு முந்தின காலத்து ஆக்களுக்கும் உந்த ஹோர்மோன் பிரச்சனையளே இல்லை கண்டியளோ...... 👩‍❤️‍💋‍👨
சாகும் வரைக்கும் சதிராட்டம் தான்...💪🏽
கண்டகண்ட களிசறைகளை விழுங்கித்தான்..... 😜

ஆனால் இப்பத்தையான் 20வயது மன்மத குஞ்சுகளுக்கு இப்பவே ஊக்க /ஊக்குவிப்பு மருந்து மாத்திரையள் தேவைப்படுகுதாம்...🤣

எல்லாம் நவநாகரீக விஞ்ஞான உணவு விசித்திரங்களின் அவலம்.🍔🌭🍕🍟🥪

Pourquoi l'espérance de vie des femmes est supérieure à celle des hommes ?  - Ça m'intéresse

  • கருத்துக்கள உறவுகள்

சீரியசாக: இந்தப் பட்டியலில் ஐஸ்கிரீம், சொக்கலேற் தவிர்ந்த ஏனையவை பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்லவை, எனவே இரவிலோ பகலிலோ சாப்பிடலாம். ஆனால், உடனே வேலை செய்யும் எந்த aphrodisiac உம் இந்தப் பழங்களில் இல்லை! (யார் அந்த மருத்துவர்கள்? சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களாமா?🤣)

பகிடி: ஸ்ராபெரிப் பழத்திற்கு தனியாக செக்ஸ் வாழ்க்கையே இருக்கிறது! வாசித்துப் பாருங்கள்! 😎

https://www.sciencemag.org/news/2018/09/secret-sex-life-strawberries 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரிதான், இதை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தின் பிழை என சொல்ல முடியாவிட்டாலும், இந்த பதனிட்ட துரித உணவுகளின் தாக்கம் விஞ்ஞான வளர்சியின் கேடான பக்கங்களில் ஒன்றுதான்.

இதுவும் கொக்கோகோலா போன்ற பானங்களும்.

இவை மட்டுமல்லாது சுப்பர் மாக்கெட்டில் வாங்கும் பதனிட்ட இறைச்சியும் கூட நல்லதில்லை.

ஒரு கறிதானும் சமைதாலும் உடன் இறைச்சியில் சமைப்பது ஆரோக்கியமானது. குறிப்பாக பிள்ளைகளுக்கு இல்லாவிட்டால் எமக்கு முதல் அவர்கள் ஆசுபத்திரியில் போய் படுக்கும் அவலமும் வரலாம்.

1 hour ago, Justin said:

சீரியசாக: இந்தப் பட்டியலில் ஐஸ்கிரீம், சொக்கலேற் தவிர்ந்த ஏனையவை பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்லவை, எனவே இரவிலோ பகலிலோ சாப்பிடலாம். ஆனால், உடனே வேலை செய்யும் எந்த aphrodisiac உம் இந்தப் பழங்களில் இல்லை! (யார் அந்த மருத்துவர்கள்? சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களாமா?🤣)

பகிடி: ஸ்ராபெரிப் பழத்திற்கு தனியாக செக்ஸ் வாழ்க்கையே இருக்கிறது! வாசித்துப் பாருங்கள்! 😎

https://www.sciencemag.org/news/2018/09/secret-sex-life-strawberries 

இணைபிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விடயத்தை ஒரே வாக்கியத்தில் சொல்வதானால்: இரத்த ஓட்டம்!

இரத்த ஓட்டத்தை உடலில் தடை செய்யும் எல்லாக் காரணிகளும் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பாதிப்பவை. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடற்பருமன் ஆகியவை தான் எதிரிகள். 

இன்னொரு எதிரி மனப்பதற்றம் (stress/anxiety), மன அழுத்தம் (depression).

இரத்த ஓட்டப் பிரச்சினை, மனப்பதற்றம் இரண்டிற்கும் ஒரே தீர்வு: சுவாசத்தைக் கூட்டும் (aerobic) உடற்பயிற்சி. இதை விட வேறெதுவும் செக்ஸ் வாழ்க்கையை அதிகரிக்க அவசியமில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

 4 பச்ச வெங்காயம் செய்யாததயா இது செய்ய போகுது என்று சொல்லி நடந்தார் சின்னராசா கையில் பச்சை முருங்கைகாயுடன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 4 பச்ச வெங்காயம் செய்யாததயா இது செய்ய போகுது என்று சொல்லி நடந்தார் சின்னராசா கையில் பச்சை முருங்கைகாயுடன் 

இரண்டு,  சின்ன வெங்காயத்தை... பச்சையாக, சப்பிச்  சாப்பிட்டாலே...
பாதி,  "வயாகரா"  குளிசை,  விழுங்கின....  இன்பம் வந்து விடும். :grin:

எக்ஸ்ராவாக... வேணுமெண்டால்,  முருங்கைக்காய், பால் கறி  செய்து சாப்பிடலாம். 🤣

எமது... முன்னோர், முட்டாள்கள் அல்ல. 💖
வெள்ளைக்காரன்... கண்டு பிடிக்கிற, ஊசி  மருந்துகளை விட...
இயற்கை வைத்தியத்தில், பலவற்றை கற்றுத்  தந்திருக்கின்றார்கள்.  😍

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதை விட வேறெதுவும் செக்ஸ் வாழ்க்கையை அதிகரிக்க அவசியமில்லை! 

மிகத் தவறான தகவல்.

குறைந்த பட்சம் இன்னும் ஒரு ஆளாவது தேவை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மிகத் தவறான தகவல்.

குறைந்த பட்சம் இன்னும் ஒரு ஆளாவது தேவை 🤣

ஆமா... அவசரத்திலை, அதை.... மறந்து போனோமே...  😍 :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஆமா... அவசரத்திலை, அதை.... மறந்து போனோமே...  😍 :grin:

😀🤣🤣

இதையெல்லாம் வாசிச்சி போட்டு, வெங்காயம், பிஸ்தா, பேரீச்சை, ஈச்சை எல்லாத்தையும் வெளு வெளு எண்டு வெளுத்துப்போட்டு, தனியாக அறையில் இருந்து “ஏன் என் செக்ஸ் வாழ்க்கை அதிகரிக்கவில்லை?”, யாழில் பொய் எழுதுகிறார்கள் என்று எத்தனை அப்பாவிகள் நினக்கப் போகுதோ🤣😀😀

  • கருத்துக்கள உறவுகள்

இந்த Topic கிற்கு நான் வரவில்லையப்பா...

சரியான களைப்பா இருக்குது... 😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இந்த Topic கிற்கு நான் வரவில்லையப்பா...

சரியான களைப்பா இருக்குது... 😎

ஒரு சினிமாவை...  
ஒரு நாளில், 
மூன்று தரம் பார்த்த, 
ரசிகர்கள் உள்ள... உலகில், 
களைப்பு... என்று, சொல்லக் கூடாது. கபிதன்.  😜

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு சினிமாவை...  
ஒரு நாளில், 
மூன்று தரம் பார்த்த, 
ரசிகர்கள் உள்ள... உலகில், 
களைப்பு... என்று, சொல்லக் கூடாது. கபிதன்.  😜

நான் சொன்னேனா திரும்பவும் தியேற்றறுக்குப் போகமாட்டேன் என்று.. 😂

களைப்பாக இருக்கிறது என்றுதானே கூறினேன்.. 😡

யாழ் களத்தில் நேர விரயம் செய்ய என்னால் முடியாது.. அம்புட்டுதே.. 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது சரிதான், இதை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தின் பிழை என சொல்ல முடியாவிட்டாலும், இந்த பதனிட்ட துரித உணவுகளின் தாக்கம் விஞ்ஞான வளர்சியின் கேடான பக்கங்களில் ஒன்றுதான்.

இதுவும் கொக்கோகோலா போன்ற பானங்களும்.

இவை மட்டுமல்லாது சுப்பர் மாக்கெட்டில் வாங்கும் பதனிட்ட இறைச்சியும் கூட நல்லதில்லை.

ஒரு கறிதானும் சமைதாலும் உடன் இறைச்சியில் சமைப்பது ஆரோக்கியமானது. குறிப்பாக பிள்ளைகளுக்கு இல்லாவிட்டால் எமக்கு முதல் அவர்கள் ஆசுபத்திரியில் போய் படுக்கும் அவலமும் வரலாம்.

இப்ப உடன் இறைச்சியும் ஆபத்து தான். இறைச்சிக்காக இல்லாத பொல்லாத ஊசியளை ஏத்தி பொரும வைச்சிருக்கிறாங்கள். உப்பிடியான இறைச்சியளை வரட்டி உருட்டி பிரட்டி சாப்பிட்டால் புற்றுநோயும் மாரடைப்பும் தான் வரும்.

Weißblaue Belgier: Das steckt hinter den Muskeln | Galileo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

இந்த Topic கிற்கு நான் வரவில்லையப்பா...

சரியான களைப்பா இருக்குது... 😎

முட்டைக்கோப்பி குடிக்கிற பழக்கம் இல்லைப்போல...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

இப்ப உடன் இறைச்சியும் ஆபத்து தான். இறைச்சிக்காக இல்லாத பொல்லாத ஊசியளை ஏத்தி பொரும வைச்சிருக்கிறாங்கள். உப்பிடியான இறைச்சியளை வரட்டி உருட்டி பிரட்டி சாப்பிட்டால் புற்றுநோயும் மாரடைப்பும் தான் வரும்.

Weißblaue Belgier: Das steckt hinter den Muskeln | Galileo

ஓமோம் ஈயூவில் இருப்பதால் சில தரக்கட்டுபாடுகள் இன்னமும் இருக்கிறது.

பிரெக்சிற்றுக்கு பின் அமெரிக்காவுடன் வர்த்தக ஓப்பந்தம் செய்தால் குளோரினில் கழுவிய கோழிதானாம் இங்கே😟.

அதிக விலை கொடுத்து ஓகானிக் எனும் சேதன உணவை தின்று வளரும் பிராணிகளின் இறச்சியை வாங்கலாம் - அதுவும் என்ன சுத்து மாத்த்தோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, goshan_che said:

ஓமோம் ஈயூவில் இருப்பதால் சில தரக்கட்டுபாடுகள் இன்னமும் இருக்கிறது.

பிரெக்சிற்றுக்கு பின் அமெரிக்காவுடன் வர்த்தக ஓப்பந்தம் செய்தால் குளோரினில் கழுவிய கோழிதானாம் இங்கே😟.

அதிக விலை கொடுத்து ஓகானிக் எனும் சேதன உணவை தின்று வளரும் பிராணிகளின் இறச்சியை வாங்கலாம் - அதுவும் என்ன சுத்து மாத்த்தோ.

 உணவு பொருட்களை  ஜேர்மனிய நுகர்வோர் அமைப்புகளும், பச்சை கட்சியும் கண்ணை புடுங்கி வைச்சு அவதானிச்சு கட்டுப்படுத்துகின்றார்கள்.

ஒகானிக்கிலும் பல பிரிவுகளை பிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 4 பச்ச வெங்காயம் செய்யாததயா இது செய்ய போகுது என்று சொல்லி நடந்தார் சின்னராசா கையில் பச்சை முருங்கைகாயுடன் 

பச்ச வெங்காயம் முருக்கங்காய் கடிச்சு உதுப்பேத்துற வயசா இது....?

16 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு,  சின்ன வெங்காயத்தை... பச்சையாக, சப்பிச்  சாப்பிட்டாலே...
பாதி,  "வயாகரா"  குளிசை,  விழுங்கின....  இன்பம் வந்து விடும். :grin:

எக்ஸ்ராவாக... வேணுமெண்டால்,  முருங்கைக்காய், பால் கறி  செய்து சாப்பிடலாம். 🤣

எமது... முன்னோர், முட்டாள்கள் அல்ல. 💖
வெள்ளைக்காரன்... கண்டு பிடிக்கிற, ஊசி  மருந்துகளை விட...
இயற்கை வைத்தியத்தில், பலவற்றை கற்றுத்  தந்திருக்கின்றார்கள்.  😍

தமிழ் சிறீ, ஊசி மருந்துகளை வெள்ளைக்காரன் மட்டுமல்ல. நம்மவரும் கண்டுபிடிக்கலாம். ந‍வீன மருத்துவ வல்லுனர்கள் தமிழர்களிலும் அதிகம் உண்டு.

அதே வேளை இயற்கை வைத்தியம் உலகம் முழுவதும் இருந்த‍து. நவீன மருத்துவம் கண்டு பிடிக்க முதல் இயற்கை வைத்தியத்தை தான் உலக மக்கள் அனைவரும் உபயோகித்து வந்தார்கள்.அதன் போதாமை தான் நவீன மருத்துவத்தை மனிதனை கண்டு பிடிக்க வைத்த‍து. 

இருப்பினும் உலகம் முழுவதும் மக்கள் பாவித்த இயற்கை வைத்தியம் அற்புதமானது என்பது உண்மை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

பச்ச வெங்காயம் முருக்கங்காய் கடிச்சு உதுப்பேத்துற வயசா இது....?

மரம் சும்மா நின்றாலும் காற்று விடுவதில்ல இலைகளை ஆட வைக்கிறது சாமியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மரம் சும்மா நின்றாலும் காற்று விடுவதில்ல இலைகளை ஆட வைக்கிறது சாமியார்

மரத்தின்ரை ஆணிவேர் முக்கியம் ராசன்...மரத்தை ஆட்டாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.