Jump to content

எனக்கு ASIA வேணும்


Recommended Posts

பதியப்பட்டது

எனக்கு ASIA வேணும்

தலைப்பை மட்டும் படிச்சிட்டு நீங்களும் ஆளாளுக்கு எனக்கு அமெரிக்கா வேணும் ஜரோப்பா வேணும் ஆபிரிக்கா வேணும் எண்டு அடம் பிடிக்க கூடாது கதையை ஒழுங்கா படியுங்கோ. சைக்கிள் என்றால் கொஞ்சம் வயசான ஆக்களுக்கு உடைனை நினைவுக்கு வாறது றலி.றாம். கம்மர். பிறகு ஏசியா.லுமாலா.றொபின்சன். சிங்கர் . இப்பிடி பல ரகம் இருக்கு. என்னட்டையும் ஊரிலை 80 களிலை படிக்கிற காலத்திலை சைக்கிள் என்கிற பெயரிலை ஒரு சிங்கர் சைக்கிள் இருந்தது இது ஒரு இந்தியா தயாரிப்பு.

80களில் தான் யப்பான் தயாரிப்பான ஏசியா சைக்கிள் சில தொழில் நுட்ப மாற்றங்களுடன் பாரமற்ற இலகுவான ஒரு கலப்பு உலோகத்தால் செய்யபட்டு பின்பக்க வீல் சின்னதாகவும் அத்துடன் மற்றைய சைக்கிள் ரயர்களை விட காற்றின் உராய்வைகுறைக்கும் வகையில் ரயர் அகலம் குறைந்ததாக செய்ப்பட்டு இலங்கையில் அறிமுகமாகியது.இந்த சில மாற்றங்களால் இந்த சைக்கிள் மற்றைய சைக்கிள்களை விட கொஞ்சம் வேகமாக ஒடும்.இது இளையவர் மத்தியில் வெகு வேகமாக ஒரு இடத்தை பிடித்துகொண்டிருந்தது. எனது நண்பர்கள் சிலரும் ஏசியா சைக்கிளை வாங்கி அதில் ஒரு றோலிங் பெல்லையும் பூட்டி மானிப்பாய் மகளிர் பாடசாலை விட்டதும் சைக்கிள் களில் போய்கொண்டிருக்கு மாணவிகளை கலைத்து கொண்டு போய் அவர்களிற்கு முன்னால் றோலிங் பெல்லை அடித்தபடி சர்ர்ர்ர்.....எண்டு பிறேக் அடிக்கவும் பெட்டையளும் திடுக்கிட்டு ஆஆஆ...எண்டு கத்திபோட்டு "சரியான குரங்குகள்" எண்டு திட்டவும் அந்த திட்டை ஒரு மகானின் வாயிலிருந்து வந்த வாழ்த்தைபோல நினைத்து பிறவி பெரும்பயனை அடைந்தது போல இளைஞர்களிற்கு ஒரு மகிழ்ச்சி.இவர்களை பேலவே நானும் றோலிங்பெல்பூட்டி சர்ர்ர்...எண்டு பிறேக்கடிச்சு குரங்கு எண்டு திட்டு வாங்க மனம் தவியாய் தவிச்சது.

ஆனால் என்ரை சிங்கர்சைக்கிள் அதுக்கு தடையாய் இருந்தது காரணம் சைக்கிளின் பாரத்தை குறைத்தால் வேகமாக ஓடும் எண்டு என்னுயிர் நண்பன் இருள்அழகன்(பட்டப்பெயர்தான்) சொன்னதை நம்பி நானும் மக்காட் செயின்கவர்.பெல்.டைனமோ.கெட்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம் நல்ல கதை சாத்திரி.

நீங்கள் புதுச்சைக்கிள் வாங்குவதற்குப் பழைய சைக்கிளுக்கு ஆப்பு வைக்க முயன்றது போலத் தான் சிறுவயதில் புதுக்கொப்பி வாங்கவும், புதுப்பேனை, பென்சில் வாங்குவதற்காக அதை உடைத்தும் , கிழித்தும், நொருக்கியும் செய்த ஞாபமுண்டு.

ஆனால் நம்முடைய உழைப்பு என்று வரும்போது வீணாகச் செலவு என்பதே வலிப்பது போலத் தோன்றும். உழைக்கின்றபோது தானே கடினம் தெரியும்.

வாழ்க்கைச் சம்பவத்தை நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள். உண்மையில் அது இப்போது சிந்திக்க நகைச்சுவையாகத் தான் இருக்கும். கூடவே இனிமையாகவும்

Posted

ஆகா..இப்படியெல்லாம் ஐடியாக்கள் எப்பிடி வருது??

என்ன எல்லாம் அப்பா காசு தானே...இப்போ இதையே உங்க மகன் செய்தால்..கிழிஞ்சிடுமே :lol:

செய்றது பிழை எண்டாலும் சாத்திரி அண்ணாவின் எழுத்தும்...கதை நகர்வும் அதை சரியேண்டே வாதாட வைக்குது...

அதுசரி உங்கப்பா இப்ப எங்க இருக்கார் சாத்திரிஅண்ணா?? ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரியாரே! உமது சைக்கிளை பார்த்தவுடன் எனக்கு இன்னொரு சைக்கிள் ஞாபகத்துக்கு வந்தது. உங்களுக்குத் தெரியுமா? முன்பு சிரித்திரன் போல இன்னொரு சிரிப்புப் பத்திரிகை கலகலப்பு என்ற பெயரில் வந்தது. அதில் ஒருசைக்கிளைப் பற்றிய பாடல் ஒன்று வந்தது. பாட்டு ஓரிரு வரி மறந்திட்டம.;

அஞ்சிலே பள்ளி போகா

அடமூட சிறுவன் ஓர் நாள்

கெஞ்சியே அயல் வீட்டானின்

கேட்டதோர் சயிக்கிள் வண்டி!

அஞ்சிடா தெடுத்து வந்து

அயலிலுள்ள வீதி தன்னில்

மிஞ்சிய வேகத்தோடு

மேலிருந்து உழக்கலுற்றான்!

பெல்லில்லை, பிறேக்குமில்லை

பிடித்திடும் கான்றில் லோர்பால்

மெல்லவே இழுத்துச் செல்லும்

மேவிய பிறிவீல் கொத்வீல்!

பல்லில்லை படலும் சுற்றா

பழுதுற்ற செயின் சீற் வீழும்

பல் புலி குட்டை போலும்

பயந்துமே அகல்வோர் கண்டோர்!

------------ ------------ ---------- ------------

வேலி மீதினி;ல் மோதி வீழும்

பீதியால் எழுந்து நின்று

பின்னரும் உதைத்து செல்வன்!

பாதியில் மதகில் மோத

பாயுமே குருதி தானும்

சேதி கேட்டங்கு வந்து

சேர்ந்தனன் சயிக்கிள் காரன்!

கன்னத்தில் இரண்டு கையால்

கடுகடுத்திட்டான்-- அந்த

மின்னடி வேகத்தால் பையன்

மேலுமே மயக்கமுற்றான்!!!

எழுதியவர் பெயர் ஞாபகமில்லை. பாடலும் மறந்து ஒரு நன்பரிடமும் கேட்டு இதை எழுதினேன். நீங்கள் மதகில் விழுந்து ஓடியதை வாசிக்க இது ஞாபகம் வந்தது. :lol::lol:

;

Posted

suvyஉங்கள் பாடல் எனக்கு படித்ததாய் ஞாபகம் இல்லை ஆனால் அந்த கலகலப்பு பத்திரிகை படித்த ஞாபகம் ஆனால் சுந்தர்: அவர்களின் சிரித்திரன் பத்திரிகையின் வாசகன் நான் . மற்றும் பிரிய சகி எனது தந்தை இப்போது உயிருடன் இல்லை இந்திய இராணுவம் படுகொலை செய்து விட்டனர். அதனையும் ஒரு பதிவாக எழுத விருப்பம் தான் நேரம் வரும்போது எழுதுகிறேன். தூயவனிற்கும் நன்றிகள்.

Posted

நீங்கள் ஏசியா சைக்கிள் வாங்கிற சோக கதையை சொல்லிறீயள்.... நான் லீவில ஊருக்கு போகும் போது என்ர மச்சாள் வச்சிருந்த " லுமாலா" வை வாங்க பட்ட பாடுகள் எனக்குதான் தெரியும்.... அந்த கேவலங்களை எல்லாம் சொல்லி உங்களையும் ஏன் நோகடிப்பான்... விடுவம்,,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரியண்ணா

நிச்சயம் உங்களின் குடும்பத்தில் இந்திய இராணுவம் ஏற்படுத்திய பாதிப்புப் பற்றிச் சொல்ல வேண்டும். தவிரவும் அதனால் குட்மங்கள் எவ்வாறு சிதைந்தன, கஸ்டப்பட்டன என்று வெளிப்படுத்துவதன் மூலம் தான், ஏன் நாம் சிலவேளைகளில் மற்றவர்கள் மீது கோபம் கொண்டிருக்கின்றோம் என்பதையும், எம் போராட்டம் எவ்வளவு தூரம் நியாயமானது என்பதையும் புரிய வைக்கும்.

நீங்கள் ஏசியா சைக்கிள் வாங்கிற சோக கதையை சொல்லிறீயள்.... நான் லீவில ஊருக்கு போகும் போது என்ர மச்சாள் வச்சிருந்த " லுமாலா" வை வாங்க பட்ட பாடுகள் எனக்குதான் தெரியும்.... அந்த கேவலங்களை எல்லாம் சொல்லி உங்களையும் ஏன் நோகடிப்பான்... விடுவம்,,

பரவாயில்லை சொல்லுங்கள். உப்படி ஊர் புதினம் கேட்கின்றதில் எங்களுக்கு அலாதிப் பிரியம் கண்டியளோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமைபோல சாத்திரியின் சொந்த அனுபவக்கதை, விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.

தூயவன் சொல்வது போல, உங்கள் குடும்பத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பதியுங்கள். இந்தியா இராணுவத்தினர் செய்த அட்டுளியங்கள், இந்தியா இராணுவத்துக்கு பயந்து,87 - 90ல் ஈழத்தில் வந்த பத்திரிகைகளில் வெளிவரவில்லை.

Posted

நீங்கள் ஏசியா சைக்கிள் வாங்கிற சோக கதையை சொல்லிறீயள்.... நான் லீவில ஊருக்கு போகும் போது என்ர மச்சாள் வச்சிருந்த " லுமாலா" வை வாங்க பட்ட பாடுகள் எனக்குதான் தெரியும்.... அந்த கேவலங்களை எல்லாம் சொல்லி உங்களையும் ஏன் நோகடிப்பான்... விடுவம்,,

ஹீ ஹீ இந்த அனுபவம் நமக்கும் இருக்கு கடைசியில காத்த திறந்திட்டு டியூப் வால்வ தூக்கி குப்பைக்குள்ள போட்டுட்டு வந்திட்ட்ம்லே :lol::lol:

சாத்து கதை நல்லா இருக்கு

ஹீ ஹீ கிணத்துக்குள்ள விழுந்ததில சேதாரம் ஒன்னுமில்லையா? :P

Posted

அடுத்தநாள் பின்னேரம் அப்பா "டேய் வெளிக்கிடு உனக்கு சைக்கிள் வாங்க யாழ்ப்பாணம் ரவுணுக்கு போட்டு வருவம்" எண்டார் எனக்கு சந்தோசத்தில் என்னைச்சுற்றி ஆயிரம் இலையான்கள்.(சந்தோசத்திலை பட்டாம் பூச்சிதான் பறக்க வேணும் எண்டு சட்டமா??)

No comments. only :P :P :P

Posted

சாத்திரி உங்கள் கதை நன்றாக இருந்தது.

அந்த நாட்களில் பாவனையிலிருந்த முன்னணி துவிச்சக்கரவண்டிகளின்

பெயர்களுடன் பி.எஸ்.ஏ(B.S.A) மற்றும் றோட்மாஸ்டர்(Road Master) ஆகிய வண்டிகளின்

பெயர்களைத் தரத் தவறிவிட்டீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏசியா சைக்கிள் என்றவுடன் முதல் ஞாபகம் வருவது விடுதலைப் புலிகள் தான்.ஒரு காலத்தில் புதிய ஏசியா சைக்கிளில் கடும் நிற சேட்டும் போட்டுக் கொண்டு போனால் கண்ணை மூடிக் கொண்டு இவர்புலிஎன்று சொல்லலாம்.சாத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் அதைப்பற்றிய கதை என்று தான் பார்த்தேன்.

Posted

ஆஆஆ...எண்டு கத்திபோட்டு "சரியான குரங்குகள்" எண்டு திட்டவும் அந்த திட்டை ஒரு மகானின் வாயிலிருந்து வந்த வாழ்த்தைபோல நினைத்து பிறவி பெரும்பயனை அடைந்தது போல இளைஞர்களிற்கு ஒரு மகிழ்ச்சி.இவர்களை பேலவே நானும் றோலிங்பெல்பூட்டி சர்ர்ர்...எண்டு பிறேக்கடிச்சு குரங்கு எண்டு திட்டு வாங்க மனம் தவியாய் தவிச்சது.

சாத்திரி மாமா இப்ப தான் எனக்கு நிம்மதி நான் நினைத்தேன் எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் ஏசு விழுறது என்று உங்களுக்குமா இப்ப சந்தோசம்

:P :lol:

Posted

['Norwegian'

சாத்திரி உங்கள் கதை நன்றாக இருந்தது.

அந்த நாட்களில் பாவனையிலிருந்த முன்னணி துவிச்சக்கரவண்டிகளின்

பெயர்களுடன் பி.எஸ்.ஏ(B.S.A) மற்றும் றோட்மாஸ்டர்(Road Master) ஆகிய வண்டிகளின்

பெயர்களைத் தரத் தவறிவிட்டீர்களே.

Posted

பரவாயில்லை சொல்லுங்கள். உப்படி ஊர் புதினம் கேட்கின்றதில் எங்களுக்கு அலாதிப் பிரியம் கண்டியளோ :D

ஊர் புதினம் எண்டா பறவாய் இல்லை... இது வாயை வச்சுக்கொண்டு இருக்கேலாமல் செய்ததின் விளைவு...! எனக்கே சிலநேரம் கேவலமாய்த்தான் இருக்கிறது... இதைப்போய் இங்கை எல்லாம் சாச்சா வேண்டாம்....!

Posted

கந்தப்பு நான் இந்திய இராணுவ காலத்து நிகழ்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறேன் அதில் எனது குடும்பத்திற்கு நடந்ததையும் நிச்சயமாக எழுதுவேன்

நோர்வேஜியன் நீங்கள் சொல்லதான் அந்த சைக்கிள்களின் பெயர் ஞாபகத்திற்கு வந்தது

மற்றக்காமை உங்கட ஏசியாவை போட்டுட்டு வேலி பாஞ்ச கதையையும் சொல்லுங்கோ...! :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊர் புதினம் எண்டா பறவாய் இல்லை... இது வாயை வச்சுக்கொண்டு இருக்கேலாமல் செய்ததின் விளைவு...! எனக்கே சிலநேரம் கேவலமாய்த்தான் இருக்கிறது... இதைப்போய் இங்கை எல்லாம் சாச்சா வேண்டாம்....!

லண்டனிலும் சைக்கிளைத் தான் நீங்கள் கார் என்று நினைப்பதாக டன் சொல்வதைப் பார்க்கின்றபோது...... மச்சாளிடம் போய் "லூமாலாக் காரை ஒருக்கால் தாறியளோ?" என்று கேட்டுவிட்டியளோ? :D

எனியும் நீங்கள் சொல்லாவிட்டால் கூடாத கற்பனை வரும். தவிர்த்துக் கொள்ளுங்கள் அண்ணா! :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி உங்கள் கதை மிகவும் நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறீங்கள்.இதைவாசிக்கும

  • கருத்துக்கள உறவுகள்
Posted

. எனது நண்பர்கள் சிலரும் ஏசியா சைக்கிளை வாங்கி அதில் ஒரு றோலிங் பெல்லையும் பூட்டி மானிப்பாய் மகளிர் பாடசாலை விட்டதும் சைக்கிள் களில் போய்கொண்டிருக்கு மாணவிகளை கலைத்து கொண்டு போய் அவர்களிற்கு முன்னால் றோலிங் பெல்லை அடித்தபடி சர்ர்ர்ர்.....

இந்த மணி அடி தான் என்னையும் 3மணி நித்திரையில் இருந்து எழுபுறது

:P

Posted

இந்த மணி அடி தான் என்னையும் 3மணி நித்திரையில் இருந்து எழுபுறது

:P

வகுப்பிலை நாங்கள் காலை பாடத்துக்குதான் நித்திரை கொள்ளறனாங்கள் இதோடா புத்தன் பின்னேர படத்துக்கும் நித்திரை கொண்டிருக்கிறார் என்ன பிறவியோ :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நானூம் கொழும்பில லுமாலா சைகிள் வச்சிருந்தன் 8 ம் ஆண்டில் மவுண்டன் பைக் வாங்குவடற்காக இப்படி எல்லாம் செய்தேன் ஆனால் என் லுமாலாவை யாரும் கொண்டு போகல கடைசியில் உண்ணாவிரதம் இருந்து சாதிச்சன்.இன்று தெரியுது அன்று பெற்றோர் எவ்வலவு கஸ்டப்பட்டிருபீனம் என

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.