Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பார்வையில் 2020ஆம் ஆண்டு

Featured Replies

  • தொடங்கியவர்
7 hours ago, nedukkalapoovan said:

எவருக்கு எப்படியோ.. நமக்கு முன்னேற்ற கரமான ஆண்டு. கொவிட் 19 பீதி ஒன்றைத் தவிர. 

மகிழ்ச்சி நெடுக்ஸ். ஆக லண்டன் காரரின் சாபத்தில் ஒரு பகுதி குறைந்தது எனக்கு!😆 கருத்துக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!😊💐

17 hours ago, மல்லிகை வாசம் said:

தற்போது லண்டன் நகரில் வசிப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்துச் சாபமிட்டிருப்பார்களோ என்னமோ!

 

4 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

ஆஹா...! இன்னொரு லண்டன் ஆளின் சாபத்திலிருந்தும் தப்பித்தேன். மகிழ்ச்சி. 2019, 2020 போல் அல்லாமல் மிகச் சிறப்பான 2021ஆக அமைய வாழ்த்துக்கள் ரதி!😊💐 கருத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

இதைதான் சனாதன தர்மம் “தத்துவ மசி” என்கிறதாக சைவசமய புத்தகத்தில் படித்த நியாபகம்.

நீ அதுவாகிறாய்.

எதுவாகிறாய்? எதுவாக விரும்புகிறாயோ அதுவாகிறாய்😀.

இதைதான் law of attraction, power of the universe என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் ஆழ்மனதில் “ஐசடிக்கும் வேலை வேண்டும்” என பதிந்து விட்டால், ஐசடிக்கும் வேலை கிடைக்குமாம் 🤣.

பிறப்பிலேயே மஹா சோம்பேறி என்பதால் எனக்கு இப்படி அமைந்தது என நினைக்கிறேன்🤣

4 hours ago, குமாரசாமி said:

நான் ஓகே.....ஆனால் கோசான் அப்பிடி இல்லையே.....சும்மா  அவரை வம்புக்கு இழுக்காட்டில் பத்தியப்படாதோ?

இந்த விளக்கம் உங்களுக்கும் பொருந்துமோ🤣

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

6 hours ago, ரதி said:

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

  • தொடங்கியவர்
6 hours ago, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நல்லது உடையார், 2021ம் ஜாலியாகவும், வரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!😊💐நன்றி😊

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மல்லிகை வாசம் said:

மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

என்னுடைய வாழ்க்கை அனுபவத்தில்/ என்னைச் சார்ந்த நட்புவட்டத்தில் நான் கண்டது மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2021 at 18:43, மல்லிகை வாசம் said:

எனினும் அவற்றின் பாதிப்பின் அளவு, அதனை ஒருவரால் தாங்கிக் கொள்ளும் தன்மை, அதிலிருந்து கற்ற பாடங்கள் மற்றும் பாதிப்பாக இருந்தாலும் அதனால் ஏற்பட்ட நீண்ட கால நன்மை (அல்லது தீமை) போன்றனவே ஒவ்வொருவரும் வரமா, சாபமா எனத் தீர்மானிக்கும் என்பது என் கருத்து.

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

  • தொடங்கியவர்
46 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மதியானவர்களின் சதியால்/செயலால் மதியற்றவர்களின் வாழ்க்கையோ/மற்றவர்களுக்கு தீங்கு மனதாலும் நினையாதவர்களின் வாழ்க்கையோ தடம் மாறும் போது கடவுளும் பாராபட்சமாகதானே இருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எங்களை மீறி நடந்த/நடக்கும் விஷயங்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட ஏன் என்ற கேள்வி எழுவதையும் தடுக்கமுடியவில்லை

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சந்தேகம் உள்ளது.. 

பிரபா,

என் மனதிலும் இதே கேள்வி உண்டு; காலங்காலமாகப் பலராலும் கேட்கப்படும் கேள்வி இது.

மூத்தோர், ஞானிகள் சொன்னது, மற்றும் எனது குறுகியகால அனுபவங்களை வைத்துச் சொல்கிறேன், அநியாயமாகத் தண்டிக்கப்படும் 'நல்லோரும்' ஏதோ ஒரு காலகட்டத்தில் தவறிழைத்திருப்பர்; அத்தவறு முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது. ஜோதிடம், காண்டம் போன்றவற்றில் இந்த முற்பிறவி பாவ, புண்ணியங்களைக் குறிப்பிட்டு அவற்றின் விளைவே இப்பிறவியிலோ, மறுபிறவிகளிலோ குறிப்பிட்ட பலனை அனுபவிப்போம் என்று சொல்வார்கள். இது ஒரு சுழற்சி என நம்புகிறேன். 

இது தவிர அண்மைக் காலமாக எனது நம்பிக்கை, நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு. எனவே புறத்தில் நல்லவர்களாகத் தோன்றினாலும், நல்ல செயல்கள் செய்தாலும் கூட அவர்கள் சிந்தனையில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருந்தால் அதன் விளைவைப் பாதகமான சம்பவங்களாக அனுபவிப்பர் என்பது என் எண்ணக்கரு. நமக்குள்ளே இருக்கும் காந்த சக்தி தான் இதன் காரணம் என்பர். இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன என அறிகிறேன். எல்லாவற்றையும் ஆராய்வதைவிட, எது நடந்தாலும் ஏற்று முடிந்தவரை நன்மை மட்டுமே செய்து, விளைவை எமக்கு மேலான பிரபஞ்சப்பேராற்றலிடமே விட்டுவிட்டு, நன்றியுணர்ச்சி, அன்புணர்வு, மன்னிக்கும் உணர்வு இவற்றுடன், நேர்மறை எண்ணங்களை வளர்த்தால் என்றோ ஒரு நாள் அதற்கான சாதகமான விளைவை நாம் பெறுவோம் என்பது எனது சமீபத்தைய நம்பிக்கை! 😊

 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

உண்மை தான் பிரபா. பிறப்பாலும், வளர்ப்பாலும் வருவது என்பார்கள். (Nature & Nurture)

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மல்லிகை வாசம் said:

முற்பிறவியிலும் நிகழ்ந்திருக்கலாம்; அதன் விளைவை அவர்கள் நல்லவர்களாக வாழும்போது அனுபவிக்கையில், நமக்கு அது அநியாயமாகப்படுகிறது

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

32 minutes ago, மல்லிகை வாசம் said:

நமது எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நாம் நினைத்துப் பார்த்திராத சக்தி உண்டு

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

ஒவ்வொருவருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.. பாதிப்புக்களும் வித்தியாசமானவை..ஆனாலும் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையே.. எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதும் பாதிப்பை தாங்கிக்கொள்ளும் விடயத்தில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.. 

பிரபா.... நிச்சயமாக, இது, தான்... 
மற்றையவற்றுக்கு, முன்...  முதன் முதலாய்...
எமது மனதையும்,  உடலையும்  தயார் படுத்தும்.

  • தொடங்கியவர்
39 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. 

"எல்லாம் கர்மவினை தான்" என யாராவது என்னிடம் சொல்லும்போது இதே கேள்வியையே நான் கேட்டதுண்டு; என்ன தான் தவறு செய்தோம் எனக் கூறித் தண்டனையை உடனேயே தந்துவிட்டால் கர்மவினையும் சேராது, நம் தவறையும் நாம் உணரும் வாய்ப்பாகவும் அமையுமே என நினைப்பதுண்டு. ஆனால் அதைத் தீர்மானிப்பது நாமல்லவே எனச் சொல்வார்கள்; "இறைவனின் விளையாட்டில் நாம் எல்லாம் பொம்மைகள்; நம்மை ஆட்டுவிப்பவனின் முடிவு அது" என்பார்கள். அப்போது 'இறைவன் நல்லவரா? கெட்டவரா?' என்ற கேள்வி கூட என் மனதில் எழும். 'ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்' என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வரும். கீழே இணைத்துள்ளேன்:

வரிகள்:

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் 
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி 
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் 

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது 
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி 
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் 
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் 

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் 
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் 
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை 
நமக்காக நம் கையால் செய்வது நன்று 


ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் 
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை 
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் 
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் 


நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை 
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க 
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த 
வேதனையும் மாறும் மேகத்தை போல 

  • தொடங்கியவர்
57 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? 

மற்றோரைச் சபித்தோர், துன்புறுத்தியோர் தற்காலிகமாக நன்றாக வாழலாம் / அது போல் வெளி உலகிற்குத் தோன்றலாம்; ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்காது என்றோ அல்லது அதன் விளைவை அவர்கள் உண்மையில் அனுபவித்தாலும் வெளியில் நமக்குத் தெரிவதில்லை என்பார்கள் மூத்தோர். விளைவுகள் எதுவும் ஓர் இரவில் நடந்துவிடாது. சில நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம்; எப்படியோ இறைவன் உரியதை உரிய நேரத்தில், உரிய அளவில் திரும்பித் தருவான் என்பர். தம் ஆயுட் காலத்தில் பலவற்றைப் பார்த்த முதியோர், ஞானிகளின் இந்த அனுபவ மொழிகளை நம்புவதைத் தவிர நமக்கு ஏதும் மாற்று வழி உண்டோ! 😊

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள்

'மெய்யெனப்படுவது' பகுதி தானே! கேள்விகளால் நானும் கற்கிறேன். என் அறிவுக்கெட்டியதை நான் எழுதுகிறேன். நீங்களும் எழுதுகிறீர்கள். இங்கே என்னிலும் பல மூத்த அனுபவசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களயும் அறிய ஆவல். ஆரோக்கியமான விவாதத்தால் எல்லோரும் சேர்ந்து உண்மையை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதில் நான் திருப்தியடைகிறேன். ஆரோக்கியமான கேள்விகள், கருத்துக்களுக்கு நன்றி பிரபா. 😊

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:
22 hours ago, மல்லிகை வாசம் said:

 

 

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

உங்களது நேரத்திற்கும், நல்லதொரு
விளக்கத்திற்கும் மிகவும் நன்றி..

  • தொடங்கியவர்
21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை, எமது கண்களுக்கு தெரியாத சக்தியைவிட எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும். ஆனால் அதற்கும் ஏதாவது காரணங்களை கூறுபவர்களும் உண்டு.

பிரபா,

நீங்கள் குறிப்பிட்ட மனசாட்சி தான் கடவுள் என்றும் ஒரு சாரார் சொல்வர். கடவுள் எம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார், நம் ஆன்மாவும் கடவுளின் ஓர் வடிவமே என்றெல்லாமும் சொல்வார்கள். இன்னும், 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். இதுபோன்ற நோக்குகளின் பின்னால் ஒளிந்துள்ள உண்மை ஒன்றே என்பது என் எண்ணம்; அதாவது ஒரே உண்மையை அவரவர் உணர்ந்தபடி அவரவர் வார்த்தைகளில் சொல்லியிருக்கின்றனர் ஞானியர் என்பது என் எண்ணம். 

ஆகவே, நீங்கள் குறிப்பிட்டபடி 'எங்களுக்குள்ளேயே இருக்கும், நிழலைப்போல தொடர்ந்து வரும் மனசாட்சியின் படி வாழ வேண்டும்' என்பதும் என் பார்வையில் ஓர் ஆன்மீக உணர்வே! பார்வைகள் வேறெனினும், உங்களது இந்தக் கூற்றுடன் உடன்படுகிறேன்; தத்துவச் சிக்கல்கள் இல்லாத இக்கூற்று எளிமையாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் உள்ளது.😊

நல்ல கருத்தாடல். நன்றி பிரபா.😊

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎01‎-‎2021 at 02:30, உடையார் said:

மல்லிகை 2020 வரமே வரமே வரமே🙏

இங்கு கொரோணா இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்து ஒரே ஜாலிதான்

மொங்கோலியா போக இன்னும் ஒரு வருடமாகும், அதுவரை நல்ல ஜாலிதான் 

நன்றி பகிர்வுக்கு

ரதி இன்னும் 1 வருடத்துக்கு வெளியில போக முடியாது, தயவு செய்து எரிச்சல் படக்கூடாது😊

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ரதி said:

நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே 😁

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

 பத்த வைக்கிறார் மை லாட்....😆

🤣

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.