Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அப்ப அந்த நம்பிகையிலை தான் பொய் சொன்னீங்களா? 

நான் சொல்வது உண்மை இங்கு படிப்பவர்களுக்கு விளங்கும் முதலில் சைவ சமயம் பற்றி கொஞ்சமாவது படித்துவிட்டு இங்கு வந்து கருத்தாடுங்க .

ஊரில் எத்தனை  கோவில்கள் ஆகம விதிக்கு உற்பட்டு கட்டப்பட்டன ?

எந்த ஊரில் அதிக கோவில்கள் உள்ளன ?

  • Replies 98
  • Views 7k
  • Created
  • Last Reply
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

Lord கார்த்திகேயா என என்னுடன் வேலை செய்யும் வட இந்தியர் சொல்லகேட்டிருக்கிறேன்.. கார்த்திகேயன் என்றது முருகன் இல்லையா?

ஆதி தமிழர்கள் இயற்கையையும் வழிபட்டிருக்கிறார்கள்..

ஏன் வீண் வாதம், யாராவது ஐயனாரையும் தமிழ் கடவுளாக ஏற்க சொல்லி வழக்குபோடவும்..இப்படியே ஒவ்வொரு கடவுளாக வழக்கு போட்டுக்கொண்டு போகவும்..

இங்கே அந்த நீதிபதி கூறியது பல மொழிகள், மத நம்பிக்கைகள் உடைய மக்கள் வாழும் இடத்தில் இந்த மாதிரி அறிவிப்பது சரியானது அல்ல என்பதுதான்

யமன் யாருடைய கடவுள் என்றால்  ஒருவரும் உரிமை கொண்டாட முன்வர மாட்டார்கள். நீதிபதியே கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டினம். 😂😂 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

யமன் யாருடைய கடவுள் என்றால்  ஒருவரும் உரிமை கொண்டாட முன்வர மாட்டார்கள். நீதிபதியே கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டினம். 😂😂 

கதையை மாற்ற வேண்டாம் .விடயத்துக்கு வாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

Lord கார்த்திகேயா என என்னுடன் வேலை செய்யும் வட இந்தியர் சொல்லகேட்டிருக்கிறேன்.. கார்த்திகேயன் என்றது முருகன் இல்லையா?

ஆதி தமிழர்கள் இயற்கையையும் வழிபட்டிருக்கிறார்கள்..

ஏன் வீண் வாதம், யாராவது ஐயனாரையும் தமிழ் கடவுளாக ஏற்க சொல்லி வழக்குபோடவும்..இப்படியே ஒவ்வொரு கடவுளாக வழக்கு போட்டுக்கொண்டு போகவும்..

இங்கே அந்த நீதிபதி கூறியது பல மொழிகள், மத நம்பிக்கைகள் உடைய மக்கள் வாழும் இடத்தில் இந்த மாதிரி அறிவிப்பது சரியானது அல்ல என்பதுதான்

அப்ப, பிஜேபி என்னும் இந்துத்துவா கட்சியின், ஆட்சியில், இந்துக்களுக்கு சார்பாக, தீர்ப்பினை வாங்கி, பள்ளிவாசல் ஒன்றினை இடித்து, ராமர் கோவில் அமைப்பது குறித்த, இந்திய நீதிமன்றங்களின் நிலைப்பாடு சரியா?

முதலில், இந்திய நீதிமன்றங்களின் பச்சோந்தித்தனமான தீர்ப்புகளை தூக்கி பிடித்து ஆடுவதை விடுவோம். 

இந்த தீர்ப்பு, முருகன் இந்துக்கடவுள், தமிழ் கடவுள் அல்ல என்னும் பிஜேபி, பிராமண சித்தாந்தங்களுக்கு ஆதரவானது என்பது புரிந்து கருத்திடுகிறீர்களா?

ஸ்கந்தா என்பதே வட இந்திய வடிவம்.... உங்களுக்கு தெரிந்த ஒருவர் கார்திகேயர் என்று தெரிந்து வைத்திருந்தால்..... மன்னிக்க வேண்டும்... அது அப்பாவித்தனம்.

திருத்தணி தாண்டி, ஒரு முருகன் கோவில் காட்டி விட முடியுமா?

அதெப்படி, தமிழருக்கு பிள்ளையார் சிங்கள்... வட இந்தியாவில், சித்தி, புத்தி என்று இரு துணைகள்.

குறமகள் வள்ளியுடன் இருந்த முருகனை, பிராமணராக்க இந்திரன் மகள், தெய்வயானை முதலாவது துணைவி ஆகியது எங்கனம்? 

போனால் போகுது என்று, பிராமணரான முருகன், குறமகள் வள்ளியை கட்டினார்  என்று தானே சொல்ல வருகிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

பெருமாள் அண்ணா, நான் கதிர்காமத்தில் மட்டுமே அப்படி பார்த்திருக்கிறேன்.. மாவிட்டபுர கந்தசாமி கோவிலிலும் அப்படிதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஊரில் அனேகமான முருகன் கோவில்களில் அப்படியில்லை என்றுதான் நினைக்கிறேன்..

மேலதிக தகவல்களை அறிய ஆவல்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

யமன் யாருடைய கடவுள் என்றால்  ஒருவரும் உரிமை கொண்டாட முன்வர மாட்டார்கள். நீதிபதியே கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டினம்.

உங்களுக்கு அப்படியொரு நினைப்பு .

சைவர்களின் கடவுளாக எமனையும்  வழிபட்டார்கள் கோவிலும் உண்டு .

தேவையில்லாமல் ஓணானை தூக்கி ஆடவேண்டாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முருகன் தவிர வேறு தமிழ்கடவுள் இல்லையா?

முருகன்... பணக்காரத் தமிழ் கடவுள் என்ற படியால், 

கதிர்காமத்தில் சிங்களவன் தொடக்கம், இந்தியனும் அவரை எம்மிடமிருந்து பறித்து...

தமக்கு சொந்தம் கொண்டாடுகின்றார்கள். இதனை நாம் அனுமதிக்க முடியாது. 🙏🏽

5 minutes ago, பெருமாள் said:

கதையை மாற்ற வேண்டாம் .விடயத்துக்கு வாருங்கள் .

சரி விடயத்துக்கே வருகிறேன்.  கடவுள் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தார் என்ற உங்கள் தத்துவப்படி உலகத்தில்  மனிதரை படைக்கும் தொழிற்சாலையில் தமிழரை படைக்கும் production manager ஆக முருகன் இருந்தார். போதுமா. 😂😂😂😂😂😂😂😂😂 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பெருமாள் அண்ணா, நான் கதிர்காமத்தில் மட்டுமே அப்படி பார்த்திருக்கிறேன்.. மாவிட்டபுர கந்தசாமி கோவிலிலும் அப்படிதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஊரில் அனேகமான முருகன் கோவில்களில் அப்படியில்லை என்றுதான் நினைக்கிறேன்..

மேலதிக தகவல்களை அறிய ஆவல்

சாதி சமயம் எந்த இனம் என்று பார்க்காமல் உணவளிக்கும் அன்னதான  கந்தனை மறந்து விட்டீர்களே ?

1 minute ago, tulpen said:

சரி விடயத்துக்கே வருகிறேன்.  கடவுள் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தார் என்ற உங்கள் தத்துவப்படி உலகத்தில்  மனிதரை படைக்கும் தொழிற்சாலையில் தமிழரை படைக்கும் production manager ஆக முருகன் இருந்தார். போதுமா. 😂😂😂😂😂😂😂😂😂 

முதலில் என்னை பொய்யன் என்று சொன்ன விடயத்துக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

சாதி சமயம் எந்த இனம் என்று பார்க்காமல் அன்னதான  கந்தனை மறந்து விட்டீர்களே ?

நினைவுபடுத்தியமைக்கு நன்றி அண்ணா!

ஆனால் எல்லா முருகன் கோவில்களிலும் இப்படியா நடைபெறுகிறதா? தெரியவில்லை. 

34 minutes ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

அப்படி இல்லையே பெருமாள். இணுவில் கந்தசுவாமி கோயில், சிற்பனை முருகன் ஆலயம் (வேலணை ), நீர்வேலை கதிர்காமக் கோவில், சுதுமலை ஸ்ரீ முருகமூா்த்தி ஆலயங்களில் எல்லாம் சமஸ்கிருதத்தில் பூணூல் அணிதவர்களால் பூசை செய்யப்ப்டுகின்றன.

பிரபலமான செல்வச் சன்னிதியில் தான் கதிர்காமக் கோவிலைப் போன்று வாயைக் கட்டி பூசை செய்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

இணுவில் கந்தசுவாமி கோயில், சிற்பனை முருகன் ஆலயம் (வேலணை ), நீர்வேலை கதிர்காமக் கோவில், சுதுமலை ஸ்ரீ முருகமூா்த்தி ஆலயங்களில் எல்லாம் சமஸ்கிருதத்தில் பூணூல் அணிதவர்களால் பூசை செய்யப்ப்டுகின்றன.

பெருமாள் பொய் சொல்லியுள்ளார்.

25 minutes ago, tulpen said:

 மனிதரை படைக்கும் தொழிற்சாலையில் தமிழரை படைக்கும் production manager ஆக முருகன் இருந்தார். போதுமா. 😂😂😂😂😂😂😂😂😂 

production மனேஜர் முருகன் சரியான slow

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அப்படி இல்லையே பெருமாள். இணுவில் கந்தசுவாமி கோயில், சிற்பனை முருகன் ஆலயம் (வேலணை ), நீர்வேலை கதிர்காமக் கோவில், சுதுமலை ஸ்ரீ முருகமூா்த்தி ஆலயங்களில் எல்லாம் சமஸ்கிருதத்தில் பூணூல் அணிதவர்களால் பூசை செய்யப்ப்டுகின்றன.

ஆம் ஆனால் அவர்களின் சம்ஸ்கிருத மந்திரங்களில் முருகனுக்கு உரிய மந்திரங்கள் உண்டா என்று கேட்டுப்பாருங்க பொதுவாக பிள்ளையாருக்கு சொல்லும் மந்திரத்தை இங்கு முருகா என்று பெயரை போட்டு அடித்துவிடுவார்கள் மற்றபடி தீபாரதனை மந்திரம் எல்லா கடவுளுக்கும் பொதுவாகவே சொல்லுவார்கள் .அதே போல் அர்ச்சனை மந்திரங்களும் உங்கள் பெயரையும் நட்ச்சத்திரத்தையும் முன்னுக்கு போட்டு ஒரு அப்பு அவ்வளவுதான் தீபாரதனை பொழுது அங்கு பொது மந்திரத்துக்கு தாவி விடுவார்கள் . இங்குதான் விளையாட்டு முருகனுக்குரிய சம்ஸ்கிருத மந்திரங்கள் தேடிய அளவில் இல்லை நீங்கள்  கூறும் கோவில்களில் ஆரம்பத்தில் எப்படி வழிபட்டார்கள் என்று கேட்டுப்பாருங்க .

இங்கும் வேல்சில் உள்ள முருகன் கோவில் ஸ்தாபகர்  சிங்களவர் என்கிறார்கள்தமிழர் என்கிறார்கள் உறுதிப்படுத்த முடியவில்லை ஆரம்பத்தில் 90 களில்  வாய்கட்டி பூசைதான்  வெள்ளைகள் தான் அந்த கோவில் பராமரிப்பு தொடக்கம் வாய்கட்டி பூசை  மட்டும் 2019 ல் போய்  வந்தவர் சொன்னார் ஸ்தாபகர் இறந்த பின் கோவில் கொமிற்றி க்குள் வட இந்தியர் புகுந்து தமிழில் காணப்பட்ட அறிவிப்புகளை மாற்றி ஹிந்தியில் எழுதி வைத்துள்ளார்கள் அத்துடன் சம்ஸ்கிருத அய்யர்களை  இந்தியாவில் இருந்து இறக்கி சம்ஸ்கிருதத்தில் மூன்று வேளையும்  பூசை நடைபெறுகிறது என்கிறார்கள். மேல் உள்ளது உதாரணம் . 

20 minutes ago, பெருமாள் said:

சாதி சமயம் எந்த இனம் என்று பார்க்காமல் உணவளிக்கும் அன்னதான  கந்தனை மறந்து விட்டீர்களே ?

முதலில் என்னை பொய்யன் என்று சொன்ன விடயத்துக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ?

யாழ்பாணத்தில் எத்தனையோ கிராமங்கள் உண்டு அதில் எல்லாம் பல முருகன்  ஆலயங்கள் உண்டு. அங்கெல்லாம்,  சமஸ்கிரகத்தில் தான் பூசை நடக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பதால் முதலில் பதில் சொல்லவில்லை. நிழலி சிலவற்றை கூறியுள்ளார். நானும் கூறுகிறேன். பறாளய் முருகள் கோவில், மாதகல் நுணசை முருகன் கோவில், விசவத்தனை முருகன் ஆலயம். மற்றது யாழ்ப்பாணத்தின் எல்லா கிராமங்களில் இருந்தும் புலம் பெயர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸதிரேலியா ஆகிய கண்டங்களுக்கு வந்த மக்களால் உருவாகப்பட்ட கோவில்கள். இதுக்கு மேல் என்ன வேண்டும் பெருமாள். நீங்கள் சொன்ன பொய்யை வபஸ் வாங்குவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

. நீங்கள் சொன்ன பொய்யை வபஸ் வாங்குவீர்களா?

அது நடந்தால், உலகம் இயற்பியல் விதிகளை மீறிச் சுற்றும் நாள் வந்து விட்டது என்று அர்த்தம்!😂

(ஜன்னலுக்கே வெளியே பார்த்தால் குதிரைகள் பறப்பதைக் காணலாம்!)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

யாழ்பாணத்தில் எத்தனையோ கிராமங்கள் உண்டு அதில் எல்லாம் பல முருகன்  ஆலயங்கள் உண்டு. அங்கெல்லாம்,  சமஸ்கிரகத்தில் தான் பூசை நடக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பதால் முதலில் பதில் சொல்லவில்லை. நிழலி சிலவற்றை கூறியுள்ளார். நானும் கூறுகிறேன். பறாளய் முருகள் கோவில், மாதகல் நுணசை முருகன் கோவில், விசவத்தனை முருகன் ஆலயம். மற்றது யாழ்ப்பாணத்தின் எல்லா கிராமங்களில் இருந்தும் புலம் பெயர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸதிரேலியா ஆகிய கண்டங்களுக்கு வந்த மக்களால் உருவாகப்பட்ட கோவில்கள். இதுக்கு மேல் என்ன வேண்டும் பெருமாள். நீங்கள் சொன்ன பொய்யை வபஸ் வாங்குவீர்களா?

நான் சொன்னது புகழ் பெற்ற  முருகன் கோவில்கள் வீட்டுக்கு வீடு இருக்கும் முருகன் கோவில் அல்ல இங்கும் லூசியத்தில் சம்ஸ்கிருத அய்யர் தனது  சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்த கையோடு  கோவில் கட்டிய கொம்பனிக்கும் அய்யருக்கும் கொடுக்கல்  வாங்கல் பிரச்சனை இப்ப அங்கு கோவில் இல்லை .

17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் பொய் சொல்லியுள்ளார்.

நிரூபியுங்கள் ?

8 minutes ago, பெருமாள் said:

நான் சொன்னது புகழ் பெற்ற  முருகன் கோவில்கள் வீட்டுக்கு வீடு இருக்கும் முருகன் கோவில் அல்ல இங்கும் லூசியத்தில் சம்ஸ்கிருத அய்யர் தனது  சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்த கையோடு  கோவில் கட்டிய கொம்பனிக்கும் அய்யருக்கும் கொடுக்கல்  வாங்கல் பிரச்சனை இப்ப அங்கு கோவில் இல்லை .

நிரூபியுங்கள் ?

நான் கூறிய மூன்றும் வீட்டுக்கு வீடு உள்ள கோவில்கள் அல்ல. 

பறாளாய் முருகன், மாதகல் நுணசை புகழ் பெற்றது அல்லவா? யாழ்பாணத்தில் காவடிக்கு பெயர் பெற்றது நுணசை அல்லவா?

முருகன் தமிழ் கடவுள் என்றால் தமிழர்களால் எழுப்பப்பட்ட அத்தனை கோவிலிலும் சமஸகிரதம் நுளைந்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

நான் சொன்னது புகழ் பெற்ற  முருகன் கோவில்கள் வீட்டுக்கு வீடு இருக்கும் முருகன் கோவில் அல்ல இங்கும் லூசியத்தில் சம்ஸ்கிருத அய்யர் தனது  சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்த கையோடு  கோவில் கட்டிய கொம்பனிக்கும் அய்யருக்கும் கொடுக்கல்  வாங்கல் பிரச்சனை இப்ப அங்கு கோவில் இல்லை .

நிரூபியுங்கள் ?

"ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை" . 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் கூறிய மூன்றும் வீட்டுக்கு வீடு உள்ள கோவில்கள் அல்ல. 

பறாளாய் முருகன், மாதகல் நுணசை புகழ் பெற்றது அல்லவா? யாழ்பாணத்தில் காவடிக்கு பெயர் பெற்றது நுணசை அல்லவா?

முருகன் தமிழ் கடவுள் என்றால் தமிழர்களால் எழுப்பப்பட்ட அத்தனை கோவிலிலும் சமஸகிரதம் நுளைந்திருக்காது. 

முருகனுக்கு உரிய வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில்  உள்ளனவா ? அப்படி எழுதப்பட்டால்யாரால் என அறியதரவும்  எத்தனையாம்  ஆண்டு ? 

இடையில் புகுந்தவர்களால் சமஸ்கிருத  மொழியில் மற்றைய கடவுள்களுக்கு  கூறும் மந்திரத்தை கொப்பி  பண்ணி முன்னுக்கு முருகன் பெயரை போட்டு ஒரு அப்பு அப்படியான மந்திரங்கள் நிறையவே உள்ளன . விளக்கம் பத்தாமல் பெருமாள் பொய் சொல்லி விட்டார் என்று இயற்பியலையும் வாழ்கையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் .

மேல் உள்ள விளக்கம் இரண்டு முறை பதிந்து  விட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இலகுவாக என்றால் தைப்பூச திருவிழா ஏன் அனைத்து இந்துக்களும் கொண்டாடுவதில்லை ?

இதன் விடை வெள்ளிடை மலையாக உண்மையை உணர்த்தும் முருகன் யார் என்பது .

எனக்கு சமய நம்பிக்கைகளில் அளவற்ற ஈடுபாடு கிடையாது எப்படி என்றால் பார்ப்பனின்  கையால் என் நெற்றியில் திருநீறு பூச விடுவதில்லை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

முருகனுக்கு உரிய வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில்  உள்ளனவா ? அப்படி எழுதப்பட்டால்யாரால் என அறியதரவும்  எத்தனையாம்  ஆண்டு ? 

இங்க பிரச்சனை என்னவெண்டா, இந்திய நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை தந்துவிட்டார்களாம். அது இந்திய மத ஒருமைப்பாட்டினை காக்கும் சிறந்த தீர்ப்பாம்.

ராமர் கோவில் விசயத்தில் தீர்ப்பு சரியோ எண்டால், ஆட்களை காணம்.

இது தான் முந்தி இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். பக்கத்து வீட்டு, பிரச்சனைகளை தூக்கி கொண்டு நிப்பினம் உந்த ஈசி சேர் கோஸ்ட்டிகள்.

அங்க கொழும்பிலை சுதந்திர விழாவுக்கு மக்கள் கூடலாம், வடக்கு, கிழக்கில் கூடக்கூடாது, கொரோனவாம்.

அதே விசயத்தில் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்று மக்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இன்று தீர்ப்பு.

அது சிறப்பான தீர்ப்பு என்று சொல்ல, ஈசி சேரிலை இருந்து எழும்பாகினம்.

கருத்து வைக்கமுடியாவிடில், வெள்ளிக்கிழமை மத்தியானம்.... தண்ணியோ என்கிற, பெரிய மனிதத்தனம். 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

பல மதத்தவர்கள் வாழும் மாநிலத்தில் முருகனை தமிழ் கடவுள் என்று அறிவிப்பது மத சார்பின்மையை பாதிக்கும் என்றால், பல மதத்தினரை ஆளும் தமிழகத்தின் அரச இலச்சினையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் மட்டும் இருப்பது மட்டும் எந்த வகையில் நியாயம்?

இஸ்லாமியன் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டை அது இஸ்லாமிய நாடு என்கிறான், பிற மதத்தவரையும் தன் மதத்திற்கு மாற வற்புறுத்துகிறான்

பல மததவர் இனத்தவர் வாழும் இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்கள் பெளத்தநாடு,புத்தபிரானின்நாடு,சிங்கள தேசம் என்கிறார்கள் உலகநிலவரம் அப்படியிருக்கும்போது,

நீதி மன்றங்கள் அந்த மனுவை ஏற்குதோ நிராகரிக்கிறதோ வேறு விசயம், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் முருகனை தமிழ் கடவுள் என்று அழைக்க கேட்டு வழக்கு தொடுத்தது அவ்வளவு ஒன்றும் பாரிய குற்றமல்ல,

நானறிந்தவரை கதிர்காமம் செல்வசந்நிதி போன்ற ஆலயங்களில் வாய்கட்டி பூசை செய்கிறார்கள் அவர்களை கப்புறாளை என்று அழைப்பார்கள்

மனதில் தெய்வமாய் வரித்துக்கொண்டால் எந்த மொழியில் அதன் வழிபாடு நடந்தால்தான் என்ன?

அப்படிபார்த்தால் ஈழத்தில் உள்ள தேவாலயங்களனைத்திலும் இங்கிலீஷிலா வழிபாடு நடத்தபடுகிறது?.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் அரபியிலா தொழுகை நடக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இங்க பிரச்சனை என்னவெண்டா, இந்திய நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை தந்துவிட்டார்களாம். அது இந்திய மத ஒருமைப்பாட்டினை காக்கும் சிறந்த தீர்ப்பாம்.

ராமர் கோவில் விசயத்தில் தீர்ப்பு சரியோ எண்டால், ஆட்களை காணம்.

இது தான் முந்தி இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். பக்கத்து வீட்டு, பிரச்சனைகளை தூக்கி கொண்டு நிப்பினம் உந்த ஈசி சேர் கோஸ்ட்டிகள்.

அங்க கொழும்பிலை சுதந்திர விழாவுக்கு மக்கள் கூடலாம், வடக்கு, கிழக்கில் கூடக்கூடாது, கொரோனவாம்.

அதே விசயத்தில் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்று மக்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இன்று தீர்ப்பு.

அது சிறப்பான தீர்ப்பு என்று சொல்ல, ஈசி சேரிலை இருந்து எழும்பாகினம்.

கருத்து வைக்கமுடியாவிடில், வெள்ளிக்கிழமை மத்தியானம்.... தண்ணியோ என்கிற, பெரிய மனிதத்தனம். 🤦‍♂️

ஆரம்பத்தில் பாரிய முருகவணக்க ஸ்தலங்கள் என்ற துண்டை எழுதி இங்கு இணைக்கும்போது விடுபட்டு போனதால் வந்த வினை உள்ள முருகன் கோவில் லிஸ்ட் வந்து விட்டது .

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

பெருமாள் அண்ணா, நான் கதிர்காமத்தில் மட்டுமே அப்படி பார்த்திருக்கிறேன்.. மாவிட்டபுர கந்தசாமி கோவிலிலும் அப்படிதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஊரில் அனேகமான முருகன் கோவில்களில் அப்படியில்லை என்றுதான் நினைக்கிறேன்..

மேலதிக தகவல்களை அறிய ஆவல்

இங்கு மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் சிறிய வகுப்பில் சைவசமய நூலில் கதையாய்  இருக்கு மேட்கொண்டு இவ்வளவும் காணும் பிறிதொரு நேரத்தில் விவாதிப்பம் இப்ப காணும் இங்கு பெற்றோல் பவுசர்கள்  நிறைய திரியும்நாள்  வெள்ளிக்கிழமை. தொடங்கினாள் 10 பதினைந்து பக்கம் ஓடி நிழலி  தலையை விறாண்டிக்கொண்டு நிப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

மனதில் தெய்வமாய் வரித்துக்கொண்டால் எந்த மொழியில் அதன் வழிபாடு நடந்தால்தான் என்ன?

அப்படிபார்த்தால் ஈழத்தில் உள்ள தேவாலயங்களனைத்திலும் இங்கிலீஷிலா வழிபாடு நடத்தபடுகிறது?.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் அரபியிலா தொழுகை நடக்கிறது?

வளவன், இந்தக் கடைசிக் கருத்து மேலே நீங்களே சொன்னதற்கு முரணாக அல்லவா இருக்கிறது? 

கடவுளுக்கு மொழி இல்லை! இருந்தால் அது கடவுள் அல்ல என்பது எவருக்கும் புரிய வேண்டும்.

ஆனால் அப்படி நாம் மொழியையும் ஒரு கடவுளையும் இணைக்க முயற்சித்தால் ஏன் அந்த மொழியிலேயே அந்தக் கடவுளை அழைப்பதில்லை என்பது நியாயமான கேள்வி தானே? 

மேல் கருத்தாளர்களின் வாதப் படி பார்த்தால் இயேசு தான் தமிழ்க்கடவுள் என்று சொல்ல முடியும்! ஏனெனில் எங்கள் பெற்றோர் காலத்தில் இருந்தே தமிழில் தான் தேவாலயப் பூசை நடக்கிறது!

பள்ளிவாசலில் தமிழில் தொழுகை நான் கேள்விப்படவில்லை! நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 

1 hour ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

இத்த கூற்று  உண்மையல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.  

ஆகவே நீங்கள் பொய் கூறியதாக சொன்னதை நீங்கள்  உண்மை கூறவில்லை  என்று மாற்றி விடுவோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.