Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்: சபையில் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எனக்கான பாதுகாப்பை நான் கேட்காத போதும் எனக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் இப்போது எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது ஏன் என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், ஏதேனும் சூழ்ச்சிகள் மூலமாக எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை நீக்குவதன்  மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாக இது இருக்கலாம் என்றார். எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

download__2_.jpg

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கபட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை முன்வைத்தபோதும் இன்றைய காலத்திற்கு இது போதுமானதாக இல்லை. இன்றுள்ள வாழ்கை செலவுடன் நோக்குகையில் இரண்டாயிரம் ரூபாவேனும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றே கருதுகிறேன். எவ்வாறு இருப்பினும் ஆயிரம்  ரூபாய் உயர்வு கூட இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் எமது கோரிக்கைகளில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வும் ஒன்றாக முன்வைக்கப்பட்டது. எனினும் தகவலின் திரிபுகளை தவிர்க்கவும், சபையில் பதிவு செய்துகொள்ளும் நோக்கத்திற்காகவும் இந்த 10 கோரிக்கைகளையும் வாசிக்கிறேன்.

இவற்றில், தொடர்ச்சியான நில அபகரிப்பு, இந்து கோவில்களை அப்புறப்படுத்தி அதில் பௌத்த விகாரைகளை அமைத்தலின் மூலம் தமிழர்களின் வரலாற்று பகுதிகளை சிங்கள மயமாக்கல், யுத்தம் நிறைவுற்று 10 வருடங்களுக்கு மேலானாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்குதல் மற்றும் தமிழரின் பிரதேசங்களை பௌதீக ரீதியில் சிங்கள மயமாக்க அரச திணைக்களங்களை விசேடமாக தொல்பொருள் திணைக்களத்தினை உபயோகித்தாலும் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்தலும், மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகம் தொடர்பாக எதிர்க்கும் சிவில் சமுக ஆர்வலர்களையும் அரசு தொடர்ந்தும் இலக்கு வைத்தல், தமிழ் பண்ணையாளர்கள் தமது பசுக்களை கொண்டு செல்லும் மேய்ச்சல் தரையினை சிங்கள பண்ணையாளர்கள் ஆக்கிரமித்தல் மற்றும் பசுக்கள் கொல்லப்படல் போன்ற பிரச்சினைகள், மரித்த தமது உறவுகளை தமிழர்கள் நினைவு கூறும் உரிமை மறுக்கப்படுத்தல். மேலும், கல்லறைகள் மற்றும் நினைவு தூபிகள் என்பன அழிக்கப்படல், கொவிட்- 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம்களின்  ஜனாஸா அவர்களது குடும்பத்தின் விருப்புக்கும் சமய நம்பிக்கைக்கு எதிராகவும் வலுக்கட்டாயமாக எரிக்கப்படல், தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் பதியப்படாது 40 வருடங்களுக்கு அதிகமாக தடுப்பில் இருக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் இன்று முஸ்லிம் இளைஞருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றமை, அரசாங்கம் சிங்கள கைதிகளை கிராமமான முறையில் விடுதலை செய்து வருகின்ற போதும் எந்த ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படாமலும், வழக்குகள்  விசாரணைகளின்றியும்  இருத்தல், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ச்சியாக தமது உறவுகளுக்கான தீர்வினை வேண்டியும் அரசாங்கம் அவர்களுக்கான பதிலினை வழங்காதுள்ளமை,  மலையக தோட்ட தொழிலாளர் 1000 ரூபா சம்பள உயர்வினை கோரினாலும் அரசாங்கம் அதற்கு பதில் வழங்காதுள்ளமை என்ற பத்து கோரிக்கைகள்  வடகிழக்கு சிவில் சமூக சம்மேளனதின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகளாகும்.

இந்த பேரணியானது சிவில் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எமது கட்சியினாலும் ஆதரிக்கப்பட்டது. இவை நியாயமான கோரிக்கைகளாகவும் நீதிக்கான விடயங்களாகவும் காணப்பட்டதோடு, ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பினை நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோல் இந்த பேரணியானது சமாதானமான முறையில் நடைபெற்றதோடு, வெற்றிகரமாக நிறைவு செய்தனர். எனவே இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வடக்கு கிழக்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் பேரணி முடிந்த கணமே எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது. நான் பேரணியில் பங்குபற்றியதன் விளைவாக அரசாங்கம் என்மீது எரிச்சலடைந்திருக்கலாம். அல்லது, கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விடயங்கள் பொய்யாகவும் அரசு அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதாகவும் இருக்கலாம். அல்லது ஏதேனும் சூழ்சிகள் மூலமாக எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை நீக்குவதன்  மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாகவும் இருக்கலாம். 

எனவே இந்த விடயங்களால் எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார். 

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்: சபையில் சுமந்திரன் | Virakesari.lk

  • Replies 70
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறியே சுமந்திரன் தனது பாதுகாப்புக்கு விண்ணப்பித்தார். இதனை அடுத்து மகிந்த ஆட்சிக் காலத்திலேயே அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சுமார் 6 அதிரடிப்படையினர் அவரை சுற்றி நின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

Responsive image

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, பெருமாள் said:

விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறியே சுமந்திரன் தனது பாதுகாப்புக்கு விண்ணப்பித்தார். இதனை அடுத்து மகிந்த ஆட்சிக் காலத்திலேயே அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சுமார் 6 அதிரடிப்படையினர் அவரை சுற்றி நின்றார்கள். 

இதிலையிருந்து விளங்கவேணும் ஆள் எப்பிடிப்பட்ட கள்ளன் எண்டு...😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதிலையிருந்து விளங்கவேணும் ஆள் எப்பிடிப்பட்ட கள்ளன் எண்டு...😁

தனக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசுதான் என்கிறார் அப்படி பார்த்தால் சுமத்திரன்  புலிகளால் தனக்கு ஆபத்து இருப்பதை இன்னும் நம்புகிறார் என்றால் திரைமறைவில் தமிழர்களுக்கு  பாரிய துரோகம் இழைத்தபடியால் அதாவது பிரேமசந்திரன் .சித்தர்தனை விட மோசமான காரியம் செய்துள்ளார் அதனால் தனது  உயிருக்கு எப்பவுமே புலிகளால் ஆபத்து உண்டு என்று நம்பி அலறுகிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறியே சுமந்திரன் தனது பாதுகாப்புக்கு விண்ணப்பித்தார். இதனை அடுத்து மகிந்த ஆட்சிக் காலத்திலேயே அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சுமார் 6 அதிரடிப்படையினர் அவரை சுற்றி நின்றார்கள். 

தங்களுக்கு தமிழ் வாசிப்பதில் ஏதும் சிரமம் உள்ளதா?, அல்லது  பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம் நிலையில் உள்ளீர்களா?. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, zuma said:

தங்களுக்கு தமிழ் வாசிப்பதில் ஏதும் சிரமம் உள்ளதா?, அல்லது  பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம் நிலையில் உள்ளீர்களா?. 

நிச்சயமாக இரண்டாவது பிரச்சினை தான்!😂

அரசியல் கருத்துக்கள் பிடிக்காதவர்களை போட்டுத்தள்ளும் கொலைக் கலாச்சாரம் தற்போது தமிழரிடம்  இல்லாதத்து நிம்மதி. அதனால் தமிழர் தமிழர் தரப்பில் இருந்து சுமந்திரனுக்கான அச்சுறுத்தல் இல்லை என்றே நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

அரசியல் கருத்துக்கள் பிடிக்காதவர்களை போட்டுத்தள்ளும் கொலைக் கலாச்சாரம் தற்போது தமிழரிடம்  இல்லாதத்து நிம்மதி. அதனால் தமிழர் தமிழர் தரப்பில் இருந்து சுமந்திரனுக்கான அச்சுறுத்தல் இல்லை என்றே நினைக்கிறேன்.  

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்

இந்த கருத்தோடு எப்படி தமிழர் கொலை கலாச்சாரம் என்ற விசயத்தை சொருகுகிறீர்கள். 🤔
இந்த தலைப்பு, சிங்கள அரசாங்கமே இவரை போட்டு தள்ளுவதற்கு முதல் படியாக அவருடைய பாது காப்பை விளக்கியுள்ளதாகத்தான் அவரும் கருதுகிறார் என்று தான் நினைக்கிறன். அதனால் தான் அவர்கள் அதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்கிறார். 

1 minute ago, Sasi_varnam said:

நீங்களே தமிழர் தரப்பில் இருந்து இந்த அச்சுறுத்தல் இல்லை என்றும் சொல்கிறீர்கள்.
அப்படியென்றால் நீங்கள் இங்கே ஹைலைட் செய்யவரும் விஷயம் எது.

4 hours ago, பெருமாள் said:

தனக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசுதான் என்கிறார் அப்படி பார்த்தால் சுமத்திரன்  புலிகளால் தனக்கு ஆபத்து இருப்பதை இன்னும் நம்புகிறார் என்றால் திரைமறைவில் தமிழர்களுக்கு  பாரிய துரோகம் இழைத்தபடியால் அதாவது பிரேமசந்திரன் .சித்தர்தனை விட மோசமான காரியம் செய்துள்ளார் அதனால் தனது  உயிருக்கு எப்பவுமே புலிகளால் ஆபத்து உண்டு என்று நம்பி அலறுகிறார் .

உங்கள் புரிதல் தவறு என நினைக்கிறன் பெருமாள்.

16 minutes ago, Sasi_varnam said:

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்

இந்த கருத்தோடு எப்படி தமிழர் கொலை கலாச்சாரம் என்ற விசயத்தை சொருகுகிறீர்கள். 🤔
இந்த தலைப்பு, சிங்கள அரசாங்கமே இவரை போட்டு தள்ளுவதற்கு முதல் படியாக அவருடைய பாது காப்பை விளக்கியுள்ளதாகத்தான் அவரும் கருதுகிறார் என்று தான் நினைக்கிறன். அதனால் தான் அவர்கள் அதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்கிறார். 

உங்கள் புரிதல் தவறு என நினைக்கிறன் பெருமாள்.

எம்மிடம் உள்ள எதிர்மறையான விடயங்களை நாம் பேசுவது ஒன்றும் தவறு இல்லை ச‍சி. அதை எம்முள் பேசுவதால் எமக்கு எந்த இழப்பும் இல்லை.   மேலே இருவர் கூறிய கருத்துக்கு தான் அந்த பதில்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அரசியல் கருத்துக்கள் பிடிக்காதவர்களை போட்டுத்தள்ளும் கொலைக் கலாச்சாரம் தற்போது தமிழரிடம்  இல்லாதத்து நிம்மதி. அதனால் தமிழர் தமிழர் தரப்பில் இருந்து சுமந்திரனுக்கான அச்சுறுத்தல் இல்லை என்றே நினைக்கிறேன்.  

நன்றி துல்பன். 

நீங்கள் உங்களையறியாமலேயே உங்கள் சுய ரூபத்தைக் காட்டிவிட்டீர்கள். நன்றி. (சைக்கிள் கப்பில் கிடா வெட்டுதல்)

""உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகா""

என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம். 

😏

(ஐயோ, நான் யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை என்று ஓடி வராதீர்கள்.. 😂😂)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

தனக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசுதான் என்கிறார் அப்படி பார்த்தால் சுமத்திரன்  புலிகளால் தனக்கு ஆபத்து இருப்பதை இன்னும் நம்புகிறார் என்றால் திரைமறைவில் தமிழர்களுக்கு  பாரிய துரோகம் இழைத்தபடியால் அதாவது பிரேமசந்திரன் .சித்தர்தனை விட மோசமான காரியம் செய்துள்ளார் அதனால் தனது  உயிருக்கு எப்பவுமே புலிகளால் ஆபத்து உண்டு என்று நம்பி அலறுகிறார் .

சுமந்திரனின் பின்புலத்தை நுணுகி ஆராயும் யாரும்  அவருக்குள்ள உயிராபத்து உண்மை என்பதை இலகுவாக உணருவார்கள்.

அந்த ஆபத்து யாரால் என்பதும் மிகத் தெளிவாகவே புரியும்

இரண்டு பகுதியினரிடமிருந்துதான் உயிராபத்து சுமந்திரனுக்கு

1) இந்திய உளவுப் பிரிவினர்

2) சிறீலங்கா அரசாங்கம்.

எல்லாம் முடிந்த பின்னர்

இறுதியில் பழி முன்னாள் போராளிகள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் போடப்படும். 

அதை மறுதலிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ (வி.புலிகள்) எவரும் இல்லை.

உண்மையும் இதுதான்.

சுமந்திரன் சொல்லும் செய்தியும் இதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்

இந்த கருத்தோடு எப்படி தமிழர் கொலை கலாச்சாரம் என்ற விசயத்தை சொருகுகிறீர்கள். 🤔
இந்த தலைப்பு, சிங்கள அரசாங்கமே இவரை போட்டு தள்ளுவதற்கு முதல் படியாக அவருடைய பாது காப்பை விளக்கியுள்ளதாகத்தான் அவரும் கருதுகிறார் என்று தான் நினைக்கிறன். அதனால் தான் அவர்கள் அதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்கிறார். 

உங்கள் புரிதல் தவறு என நினைக்கிறன் பெருமாள்.

உண்மைதான் இரண்டாவது குழப்பியடித்து விட்டது .

STF பாதுகாப்பை விடுதலை புலிகளால் தனக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லியே பெற்று  கொண்டார் இதில் எதுவும் மாற்று கருத்து உண்டா இங்குள்ளவர்களுக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இல்லை. அவுசில் ரௌடிகள் முகத்தை மூடியபடி ரகளை செய்த பின்னர் அது நியாயமான கோரிக்கை தானே?

23 minutes ago, Kapithan said:

நன்றி துல்பன். 

நீங்கள் உங்களையறியாமலேயே உங்கள் சுய ரூபத்தைக் காட்டிவிட்டீர்கள். நன்றி. (சைக்கிள் கப்பில் கிடா வெட்டுதல்)

""உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகா""

என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம். 

😏

(ஐயோ, நான் யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை என்று ஓடி வராதீர்கள்.. 😂😂)

மன்னிக்கவும் கபிதன். நான் சாதாரணமாக தாயகத்திலோ இங்கோ பலருடனும் உரையாடும் போது  அறிந்தவைகளை  தமிழர்களில் 99 வீதமானோர் ஏற்றுக்கொண்ட விடயங்களை  இங்கு கூறிவிட்டேன். யாழ்களம் என்பது வேறு உலகம் என்பதை அவசரத்தில் மறந்து விட்டேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

மன்னிக்கவும் கபிதன். நான் சாதாரணமாக தாயகத்திலோ இங்கோ பலருடனும் உரையாடும் போது  அறிந்தவைகளை  தமிழர்களில் 99 வீதமானோர் ஏற்றுக்கொண்ட விடயங்களை  இங்கு கூறிவிட்டேன். யாழ்களம் என்பது வேறு உலகம் என்பதை அவசரத்தில் மறந்து விட்டேன்.  

இடம் பொருள் ஏவல் என்பவற்றை மனிதர் தங்கள்  இயல்பான தருணங்களில் தங்களையறியாமலேயே மறந்து விடுகின்றனர். 

அத்தருணங்கள் அவர்களை "யார்" "எதனை நோக்கி" என அடையாளம் காட்டிவிடுகிறது.

என்னை மன்னியுங்கள் துல்பன். சில வேளைகளில் உண்மைகளை கூறும்போது அது காயங்களை உண்டுபண்ணினாலும் நீண்ட நோக்கில் நன்மையைத் தருவன. 

7 minutes ago, Kapithan said:

உணமை தான் கபிதன். நீங்கள் கூறியபடி நீண்ட கால நன்மை தரும் என்பதலால் தான் நானும் சில வேளை உண்மைகளை அந்த உண்மைகள் கசப்பவர்களிடம் கூறிவிடுகிறேன்.  அந்த உண்மைகள் கசப்புடன் பார்க்கும் ஒரு சிறி குழு இங்கு  இருந்தாலும் பெருபாலான யாழ் வாசகர்கள் சாதாரண தமிழ் மக்கள் தானே.  

மற்றது என்னை உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்று நக்கல் அடித்திருந்தீர்கள். உண்மை தான் நான்  கோழிக்குஞ்சுகளை வேட்டையாடும் கோர பருந்தாக இல்லை தான். ஊர்க்குருவியாக இருப்பதால் தான் ஊர் மக்களின் மனவோட்டத்தை பிரதிபலிக்கிறேன். 😀 அதனால் ஊர்க்குருவியாக இருப்பதில் பெருமைபடுகிறேன்.  உயரப்பறந்து மக்களை விட்டு தூரப்போக வேண்டிய திருட்டுத்தனம் என்னிடம் இல்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

இல்லை. அவுசில் ரௌடிகள் முகத்தை மூடியபடி ரகளை செய்த பின்னர் அது நியாயமான கோரிக்கை தானே?

நாம் கேட்ட கேள்விக்கும் அவுசுக்கும் என்ன சம்பந்தம் ?

புலிகளால் தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லித்தானே STF பாதுகாப்பு பெற்றவர் அதிலும் மகிந்த அனுமதிக்கும் போது  ஆறாக இருந்த எண்ணிக்கை கோத்தா வந்தவுடன் 9 ஆக கூட்டியவர் அப்படி எண்ணிக்கையை கூட்டும் அளவுக்கு சுமத்திரன்  என்ன செய்தவர் ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

நாம் கேட்ட கேள்விக்கும் அவுசுக்கும் என்ன சம்பந்தம் ?

புலிகளால் தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லித்தானே STF பாதுகாப்பு பெற்றவர் அதிலும் மகிந்த அனுமதிக்கும் போது  ஆறாக இருந்த எண்ணிக்கை கோத்தா வந்தவுடன் 9 ஆக கூட்டியவர் அப்படி எண்ணிக்கையை கூட்டும் அளவுக்கு சுமத்திரன்  என்ன செய்தவர் ?

என்ன பெருமாள்? சட்டம் ஒழுங்கு நேர்மையான அவுசிலேயே ஒரு ரௌடிக் கூட்டத்தைக் கூட்டி ரகளை செய்ய முடிந்ததென்றால், இலங்கையில் யாரும் எதையாவது செய்து விட்டு புலிகளைக் கைகாட்டி விடலாம் என்று யோசிக்க அப்புகாத்து மூளை அவசியமில்லையே?  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

என்ன பெருமாள்? சட்டம் ஒழுங்கு நேர்மையான அவுசிலேயே ஒரு ரௌடிக் கூட்டத்தைக் கூட்டி ரகளை செய்ய முடிந்ததென்றால், இலங்கையில் யாரும் எதையாவது செய்து விட்டு புலிகளைக் கைகாட்டி விடலாம் என்று யோசிக்க அப்புகாத்து மூளை அவசியமில்லையே?  

ரகளை என்றால் என்ன ?

கேள்விகள் கடுமையாக கேட்டவர்கள்  திட்டியவர்கள்  அதொன்றும்  உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை அல்ல இங்கு உள்ள எம்பி மாருக்கு விழாத திட்டா சுமத்திரனுக்கு விழுந்தது சுமத்திரனை  பார்த்து கேள்வி கேட்டது குற்றமா ?

 அதென்ன முன்னாள் கைகால் இல்லாத புலிகளை தனக்கு கிளைமோர் குண்டு வைக்க முயற்சித்தவர்கள்  என்று சொல்லி மாட்டிவிட்டவர் இப்ப அவர்களும் கைதிகள்  அவர்களுக்கு விடுதலை இல்லை யார் அந்த அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிய விட்டது ? சிங்கள அரசா? சுமத்திரனா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2021 at 05:33, பிழம்பு said:

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எனக்கான பாதுகாப்பை நான் கேட்காத போதும் எனக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம்

சுமந்திரன் தான்  பாதுகாப்பு    கேட்கவில்லை என்று சொன்னதை செய்தி தெளிவாக போட்டிருக்கிறது.

57 minutes ago, பெருமாள் said:

STF பாதுகாப்பை விடுதலை புலிகளால் தனக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லியே பெற்று  கொண்டார் இதில் எதுவும் மாற்று கருத்து உண்டா இங்குள்ளவர்களுக்கு ?

தமிழுக்கு இழுக்கான தமிழறிவு செய்தியை திரித்து இருக்கிறது.

15 minutes ago, Justin said:

என்ன பெருமாள்? சட்டம் ஒழுங்கு நேர்மையான அவுசிலேயே ஒரு ரௌடிக் கூட்டத்தைக் கூட்டி ரகளை செய்ய முடிந்ததென்றால், இலங்கையில் யாரும் எதையாவது செய்து விட்டு புலிகளைக் கைகாட்டி விடலாம் என்று யோசிக்க அப்புகாத்து மூளை அவசியமில்லையே?  

ரௌடிக்கூட்டத்திடமே ரௌடித்தனம் ஏதோ தவறானது மாதிரி கேள்வி கேட்கிறீர்களே? ரௌடித்தனமும் கொலைகளும் அவர்கள் செய்தால் அவை தேசப்பற்றான சேவைகள். அவற்றை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால்.... ?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

நாம் கேட்ட கேள்விக்கும் அவுசுக்கும் என்ன சம்பந்தம் ?

புலிகளால் தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லித்தானே STF பாதுகாப்பு பெற்றவர் அதிலும் மகிந்த அனுமதிக்கும் போது  ஆறாக இருந்த எண்ணிக்கை கோத்தா வந்தவுடன் 9 ஆக கூட்டியவர் அப்படி எண்ணிக்கையை கூட்டும் அளவுக்கு சுமத்திரன்  என்ன செய்தவர் ?

உதை தான் OV-OP என்று சொல்லுவது..

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

ரௌடிக்கூட்டத்திடமே ரௌடித்தனம் ஏதோ தவறானது மாதிரி கேள்வி கேட்கிறீர்களே? ரௌடித்தனமும் கொலைகளும் அவர்கள் செய்தால் அவை தேசப்பற்றான சேவைகள். அவற்றை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால்.... ?

ரவுடிக்கூட்டம் என்ற அளவுக்கு தனிப்பட்ட தாக்குதல் நீங்கள்  செய்யலாம் ? நாங்கள் கொலைகள் செய்வதா ? 

மேலே மேலே இன்னும் இன்னும் ஸ்டார்ட் மியூசிக் ......................... டிங் டொங் 

 அதென்ன முன்னாள் கைகால் இல்லாத புலிகளை தனக்கு கிளைமோர் குண்டு வைக்க முயற்சித்தவர்கள்  என்று சொல்லி மாட்டிவிட்டவர் இப்ப அவர்களும் கைதிகள்  அவர்களுக்கு விடுதலை இல்லை யார் அந்த அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிய விட்டது ? சிங்கள அரசா? சுமத்திரனா ?

மேல் உள்ள கேள்விக்கு பதில் கருத்து போடாமல் வேறு என்னமோ எல்லாம் .

15 minutes ago, பெருமாள் said:

ரகளை என்றால் என்ன ?

மேலே உள்ள ரகளை என்றால் ஜஸ்டின் ஐயாவுக்கு தெரியாதாம் மற்றவர்கள் தெரிந்தால் சொல்லுங்க ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

உணமை தான் கபிதன். நீங்கள் கூறியபடி நீண்ட கால நன்மை தரும் என்பதலால் தான் நானும் சில வேளை உண்மைகளை அந்த உண்மைகள் கசப்பவர்களிடம் கூறிவிடுகிறேன்.  அந்த உண்மைகள் கசப்புடன் பார்க்கும் ஒரு சிறி குழு இங்கு  இருந்தாலும் பெருபாலான யாழ் வாசகர்கள் சாதாரண தமிழ் மக்கள் தானே.  

மற்றது என்னை உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்று நக்கல் அடித்திருந்தீர்கள். உண்மை தான் நான்  கோழிக்குஞ்சுகளை வேட்டையாடும் கோர பருந்தாக இல்லை தான். ஊர்க்குருவியாக இருப்பதால் தான் ஊர் மக்களின் மனவோட்டத்தை பிரதிபலிக்கிறேன். 😀 அதனால் ஊர்க்குருவியாக இருப்பதில் பெருமைபடுகிறேன்.  உயரப்பறந்து மக்களை விட்டு தூரப்போக வேண்டிய திருட்டுத்தனம் என்னிடம் இல்லை. 

உண்மையில் நக்கலடிக்கவில்லை, அது எனது கோபத்தின் பிரதிபலிப்பு(கொஞ்சம் நாகரீகமாக). 

நீங்கள்  "அரசியல் கருத்துக்கள் பிடிக்காதவர்களை போட்டுத்தள்ளும் கொலைக் கலாச்சாரம் தற்போது தமிழரிடம்  இல்லாதத்து நிம்மதி" என்று இப்படியொரு கருத்தை இங்கே கொட்டி பழைய காயங்களைக் கிளற வேண்டிய தேவையே இல்லை. 

( ஆயுததாரிகளின்கொலைக் கலாச்சாரம் வானத்திலிருந்து இறங்கி வரவில்லை. அது தமிழர்களிடம்தான் இருந்தது. இன்னமும் இருக்கிறது. நீங்கள் குற்றம் சொல்ல வேண்டுமென்றால் ஒட்டுமொத்த தமிழரையும்தான் குற்றம் சொல்ல வேண்டும் 😏)

1 minute ago, Kapithan said:

கபிதன் நானும் அதை தான் கூறுகிறன். தமிழ் அரசியலில் கருத்துகளுடன் ஒத்து போகாதவர்களை கொலை செய்யும் கொலைக்கலாச்சாரம் 1970 களின் ஆரம்பத்தில் தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை.

தமிழரசுக்கட்சி தலைவர் திரு செல்வநாயகம் மேடையில் இருந்த ஒரு கூட்டத்தில் தமிழரசுக்கட்சி பிரமுகர் காசி ஆனந்தன் உரையாற்றுகையில்,  "திரு.துரையப்பா,திரு.சுப்ரமணியம்,திரு.அருளம்பலம்,திரு.ஆனந்தசங்கரி ஆகியோர் தமிழ் இனத்தின் எதிரிகள். அவர்கள் இயற்கையான மரணத்திற்கோ அல்லது விபத்தான மரணத்திற்கோ தகுதியானவர்கள் அல்லர் என்றும், தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், அவர்கள் எப்படி மரணிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று", குறிப்பிட்ட போதே தமிழ் அரசியலில் கொலைக்கலாச்சாரத்தின் முதல் விதை விதைக்கப்பட்டது.

70 களில் முக்கிய பிரமுகர்களில் தொடங்கிய அந்த கலாச்சாரம் 1983 இன் பின்னர் சாதாரண தமிழ் மக்கள் மீது பதம் பார்க்க தொடங்கியது. ஐயோ மீண்டும் சாதாணர தமிழ் மக்களிடம் உரையாடுவது போல் இந்த யாழ் இணையத்திலும் பேசிவிட்டேன். மன்னித்தருள்க கபிதன்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.