Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றி தோழர்..👍

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

அக்னியஷ்த்ரா

மீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ்  மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது,  மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிட

அக்னியஷ்த்ரா

1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும்  கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை  அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்த

அக்னியஷ்த்ரா

காலம் மெதுவாக உருண்டோடிக்கொண்டிருக்க, மெதுவாக சபையிற்குள் நடக்க ஆரம்பித்திருந்த  விரும்பத்தகாத விடயங்கள் வில்லியின் காதில் விழத்தொடங்கியது, சில விடயங்கள் கையும் மெய்யுமாக வில்லியிடமே மாட்டிக்கொண்டன ,

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு கரிய உருவம் வளவின் வாயிலில் திடீரெண்டு தென்பட்டது, படுத்துக்கிடந்த நாயோ சரேலென்று எழும்பி 
அந்த உருவத்தின் முன்னே ஓடி வந்து அந்த குடவுன் அருகே நெருங்கவும், இழை அறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியை பரப்பவும் சரியாக இருந்தது, அந்த கரிய உருவமோ ஓட்டமா,நடையா என்று அனுமானிக்க முடியாத வேகத்தில் குடவுனை நெருங்கி உள்ளேசென்றதும் ரோனியோ இயந்திரம் கைகளால் சுற்றப்படும் சத்தம் மெதுவாக காற்றில் எதிரொலிக்க தொடங்கியது, அனைவரும் விறைத்துப்போய் நோக்கிக்கொண்டிருக்க 
அந்த நாயோ குடவுனை சுற்றி காவல் காக்க தொடங்கியது, அனைவரிடமும் இருந்த மிகப்பெரிய கேள்வி அந்த உருவம் நடந்ததா இல்லை காற்றில் மிதந்ததா என்பதே, சரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிடம் கழித்து அந்த உருவம் குடவுனிலிருந்து வெளிப்பட நாயோ வளவின் வாயிலுக்கு சென்று நின்றுகொள்ள மின்குமிழும் அணைந்துவிட்டது, மெதுவாக சென்ற உருவம் இவர்கள் இருந்து படிக்கும் மண்டபத்தின் பின்புறம் சென்று இருட்டில் கரைய, நாயோ சர சரக்கும் புதரினுள் புகுந்து வந்த வழியே மறைந்துவிட்டது, நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்த்து பயத்தில்  உலர்ந்து காய்ந்து போன வாயில் பேச்சுவராது ஆளையாள் பார்த்து  முழித்துக்கொண்டிருந்தனர் அனைவரும்,  ஐடியா மணிதான் மௌனத்தை கலைத்தான்     
மச்சான்ஸ்....இது யாரோ ஒருவன் நம்மட ஸ்கூலை தப்பா யூஸ் பண்றான் போல இருக்கு 
,நம்மட வொச்சரும் உடந்தை இல்லாட்டி எப்படி டெய்லி அண்ணருக்கு அரைப்போத்தல் ஊத்த காசு வருகுது .

 சுலக்சன் : "அப்பிடி என்ன நம்மடை பள்ளியில் செய்யப்போறான் " ,

ஐடியாமணி : 'மெஷின் சத்தம் கேட்கலையோ கள்ள நோட்டுகூட அடிக்கலாம் ' 

இது அவன்  :'டேய் அது ரோனியோ மெஷின் சத்தமடா ' 

ஐடியாமணி  : "நீ போய் கிட்ட நின்று பார்த்தநீயோ"

அவன்: "அப்போ கரண்ட் எங்கயிருந்து வருது "

ஐடியாமணி : "டேய் நிலத்திற்கு கீழாலையிருந்தும் கரண்ட் எடுக்கலாம்டா"

இதற்கு மேல் ஒருவருக்கும் தங்களது கருத்துக்களை வைத்து  எதிர் வாதம் செய்ய முடியவில்லை, அடுத்து என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கிக்கொண்டிருக்க சுலக்சன் தீர்க்கமாக சொன்னான், நாளைக்கு அவனை பிடிக்கவேண்டும், எல்லோரும் விறைத்து போய் திரும்பினர் 
ஐடியா மணியோ "உனக்கு லூசா அந்த நாயை தாண்டி எப்படி பிடிப்பாய் " 
சுலக்சன் "ஒழுங்காக கவனி வளவு வாசல் வரைக்கும் தான் நாய் வருகிறது, அதற்க்கு பிறகு ஆள் தனியாகத்தான் போகுது  நாளைக்கு நானும் ,அவனும் வாசல் தாண்டி மண்டபம் நோக்கிய ஒழுங்கைக்குள் ஒழித்து நிற்போம், ஆள் வாசல் தாண்டியதும் ஐடியா மணி மேல் மாடியிலிருந்து டார்ச்ச்சை இரண்டு முறை விட்டு விட்டு அடிப்பான், நாங்கள் பின்னால் விரட்ட நீங்கள் இருவரும் மண்டபத்தின் மூலையிலிருந்து முன்னாள் வரவேண்டும் ஆளை கோழி அமுக்குவது போல் அமுக்குகிறோம்  " 
தரமான திட்டம், எல்லோரும் தயார் ,ஆளாளுக்கு மெதுவாக கட்டிடத்திலிருந்து வெளியே வந்து தங்களது படிப்பை தொடர்ந்தனர் 

1952, இலங்கை கிழக்கு மாகாணம் 

வில்லியை பொறுத்தவரை சகலமும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது, காலையில் பாடசாலை, பிற்பகலில் 
கூடைப்பந்து பயிற்சி, தேவாலயம் இப்படி அவருக்கென்றே ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டார்,
பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வு பெறும் காலமம்  நெருங்கிக்கொண்டிருக்க, வில்லி ஒவ்வொருநாளும் தன்னை மேம்படுத்திக்கொண்டிருந்தார், அந்த நேரத்தில் தான் புதிய சகோதரர்  ஒருவர் அவரது மடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார், இந்தியாவில் பிறந்து வளர்ந்த  சுதேசியாக இந்திய  சபை பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டு ஒரு சிரேஷ்ட துறவியாக வளர்ந்திருந்த அவரது பெயர் பீலிக்ஸ் (Felix), சகோதரர் பீலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று கண்டிப்பான முரட்டு சுபாவம் கொண்டவர் தோற்றமும் அப்படித்தான்  இருக்கும், நாளடைவில் வில்லிக்கும் , பீலிக்சிற்க்கும்  நெருக்கம் ஏற்பட்டு பீலீக்சின் ஆன்மீக வழிகாட்டியாகவே மாறிவிட்டார் வில்லி.காலப்போக்கில் பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வுபெற்று மாற்றலாகி சென்றுவிட, வில்லி பாடசாலையையும்,  பீலிக்ஸ் சபை மட முதல்வராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டனர்,


(தொடரும்)    

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்னி இப்படி கதை எழுதும் போது பகலில் மட்டும் வாசிக்கவும் என்று முதல்லயே சொல்ல வேண்டும்.

இடைஇடையே பயப்புடுத்துற மாதிரி தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை...ஒரு முக்கிய திருப்பத்திலை நுழையப் போகின்றது போல உள்ளது..!

தொடருங்கள், அக்னி..!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலம் மெதுவாக உருண்டோடிக்கொண்டிருக்க, மெதுவாக சபையிற்குள் நடக்க ஆரம்பித்திருந்த  விரும்பத்தகாத விடயங்கள் வில்லியின் காதில் விழத்தொடங்கியது, சில விடயங்கள் கையும் மெய்யுமாக வில்லியிடமே மாட்டிக்கொண்டன , தொடர்ந்து அமைதி காத்த வில்லி ஒருகட்டத்தில் பொறுமை எல்லை மீற 
நேரடியாக சகோதரர் பீலிக்சிடமே சொல்லிவிட்டார், பீலிக்ஸும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு 
தான் அவற்றை கவனத்திலெடுப்பதாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார், ஆனால் காலப்போக்கில்  நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சொல்லப்போனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே சென்றது, வில்லியால் தொடர்ந்தும் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை ,
கடைசியாக தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த வில்லி, தொடர்ந்தும் இப்படி நீடித்தால் தீவு முழுவதற்கும்  பொறுப்பான சபை முதல்வரிடம்  முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பீலீக்ஸிடம்  சொல்லிவிட்டு எழுந்து செல்வதை பீலிக்ஸ் வெறித்துப்போய் நோக்கிக்கொண்டிருந்தார்,
1962, ஏப்ரல் 26 மதியம் 1  மணி 
சகோதரர் வில்லியும், மற்றைய சகோதர்களும் மத்திய உணவருந்திக்கொண்டிருந்தனர், 
வில்லி எப்போதும் மதிய உணவு முடிந்ததும் மிளகு ரசம் குடிப்பது வழக்கம், இந்த பழக்கம்  அவர் ஆசியாவிற்கு வந்ததும் அவரிடம் தொற்றிக்கொண்டது , உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்க தவறாது அதனை பின்பற்றிவந்தார், சமையல்காரியும் மிளகு ரசத்தை மேசையில் வைத்துவிட்டு போக வழமை போலவே 
அதனை எடுத்து ரசித்து குடிக்க ஆரம்பித்தார், இன்று என்னவோ ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது 
இருந்தாலும் வித்தியாசமான சுவையாக இருந்ததால் தொடந்து குடித்துவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட மாடியிலிருந்த அறைக்கு ஏறிப்போய் கட்டிலில் சரிந்தார்.  
சிறிது நேரத்தில் இதயத்தை கையால்  பிடித்து நெருக்குவது போல் உணர்வு, அப்படியே அடிவயிற்றிலிருந்து 
தொண்டை வரை எரியத்தொடங்கியது, கஷ்ட்டப்பட்டு எழுந்த வில்லி அருகிலிருந்த தண்ணீர் கோப்பையினை  எடுத்தார் உள்ளே காலியாக இருந்தது , எழுந்து கதவுப்பிடியை அடைவதற்கு முன் தடுமாறி விழுந்தார் வில்லி 
கடைவாயோரம் ஈரலிப்பாக அரித்தது , ஆட்காட்டி விரலால் வாயோரம் வருடி எடுத்தார் விரலில் இரத்தத்துளி , ஒருவாறு சுதாரித்து எழுந்த வில்லி பலம் கொண்டமட்டும் கதவின் பிடியை திருகினார்,அது வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தொடர்ந்து போராடமுடியாத வில்லி அப்படியே கதவோரமாக  உட்கார்ந்தார், வாயிலிருந்து இரத்தம் பீறிட கண்கள் மங்கிக்கொண்டு சென்றது, அந்த மங்கலினிடையே அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்துகொண்டிருந்தது, சரியாக 20 நிமிடம் கழித்து வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த  கதவு திறக்கப்பட இரண்டு சோடி கால்கள் உள்ளே நுழைந்தன, அதில் ஒன்று மெதுவாக தடி ஒன்றினை எடுத்து முன்னோக்கி சரிந்து கிடந்த வில்லியின்  தலையை உயர்த்தி பார்க்க நிலைகுத்தி நின்ற வில்லியின் வெளிறிப்போன கண்கள் அவர் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதை சொல்லாமல் சொல்லின. தடியை கொண்டு வில்லியை பரிசோதித்தவர்  அடுத்தவரிடம் "இன்னும் சரியாக இருபது நிமிடம் கழித்து நீ அலறப்போகும் அலறலில் ஒட்டுமொத்த இல்லமும் கதவின் முன் நிக்க வேண்டும், இனிமேல் நமக்கு பிரச்சினை இல்லை " என்று விட்டு வில்லியின் அறையிலிருந்து வெளிப்பட்டார் பீலிக்ஸ்.


2003 , இலங்கை கிழக்கு மாகாணம்     
எல்லோரும் இரவு  7:00 மணிக்கே பாடசாலைக்குள்  ஆஜராகிவிட்டனர், சரியாக பதினொன்றரை மணிக்கு தங்களது அதிரடி நடவடிக்கைக்கு உரிய முஸ்தீபுகளை இட்டவாறு ஒவ்வொருவரும் தங்களுடைய டார்ச்சை இயக்கிப்பார்ப்பதும், எதிர்பாராத வகையில் அந்த நபர் எதிர் தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு அதிரடிப்படையின் திடீர் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவதுபோல் தயாராகிக்கொண்டிருந்தனர்.
நேரம் 11:45 
இரவுக்காவலாளி இன்றைக்கும் (சுலக்சனின் உபயத்தில் ) அரைப்போத்தல் சோமபானம் மாட்டிய உட்சாகத்தில் போதையில் உழன்றுகொண்டிருந்தான்   
ஐடியா மணி கட்டிட மாடியில் நிலையெடுக்க, அவனும் சுலக்சனும் எதிரெதிராக இருந்த இரு  புதர்களின் பின்  
மறைந்து கொண்டனர் , இரண்டாவது குழு மண்டபத்தின் கடைக்கோடி மூலையில் நிலை எடுத்துக்கொண்டது.

நேரம் 12:40
நேற்றையதை போன்றே அதே கரிய உருவம் வளவின் வாசலில் தென்பட ஐடியா மணி சுதாரித்துக்கொண்டான், நாய் காவல் காக்கத்துவங்கியதும் உருவம் குடவுன் உள்ளே செல்ல மெஷின் இயங்கத்துவங்கியது, உருவம் உள்நுழைந்ததை தெரிவிக்க ஐடியா மணி ஒருதடவை டார்ச்சை ஒளிர்ப்பித்து காட்டினான், கட்டிடத்தை வைத்தகண்வாங்காது பார்த்துக்கொண்டிருந்த அவனும்,சுலக்சனும் நடவடிக்கைக்கு தயாராகினர்      
     
நேரம் 1:05
மாடியிலிருந்து இரண்டுமுறை டார்ச் ஒளிர அவனும் சுலக்சனும் தயாராகிவிட்டனர், சரியாக ஐந்துநிமிட இடைவெளியில் காற்றை கிழிப்பது போல் அந்த உருவம் இவர்களை கடக்க, புதரை விட்டு எம்பி குதித்த அவனும், சுலக்சனும் அந்த கரிய  உருவத்தை விரட்ட துவங்கினர், நிலையான வேகத்தில் காற்றில் மிதப்பது போல் வேகமாக  சென்று கொண்டிருந்த உருவத்தை எட்டிப்பிடிக்க தன் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன், சுலக்சனோ அவனது வேகத்திற்கு தாக்குபிடிக்கமுடியாமல் மெதுவாக பின்தங்கத்தொடங்கினான் 
ஒருவாறு உருவத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியபோது அவனும் உருவமும் மண்டபத்தின் கடைக்கோடியை நெருங்கிவிட்டிருந்தனர். சரியாக இவன் கையை நீட்டவும் உருவம் மூலையில் திரும்பவும் 
அடுத்தபக்கத்திலிருந்து மற்றைய இருவரும் வெளிப்படவும் சரியாக இருந்தது, கணப்பொழுதில் அவன் கைக்கெட்டிய தூரத்திலிருந்த அந்த உருவம் மறைந்துபோயிருந்தது.

"டேய் இப்பதான் விரட்டிக்கொண்டு வந்தனான்"

"உனது காலடி சப்தம் கேட்டுத்தான் நாங்கள்  ரெண்டுபேரும்  வந்தம் "

"டேய் நீங்க உண்மையாகவே காணவில்லையா ....?"

"விரட்டிக்கொண்டு வந்தன் எண்டுபோட்டு நீ மட்டும் வாராய் "  

அவனுக்கு தலை விறைத்தது, சரி சுலக்சனிடம் கேட்போம் என்று விட்டு திரும்பினால் சுலக்சனை காணோம் 
அந்த  கணத்தில் "ஐயோ அம்மா" என்று உச்சஸ்தாயியில் சுலக்சனின் அலறல் ,நாயின் உறுமலுடன் 
அந்த நிசப்தத்தில் எதிரொலித்தது. 
டேய் சுலக்சண்டா .. ஏக காலத்தில் அலறிய நால்வரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தனர்   
(தொடரும் )

  • Like 9
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விறுவிறுப்பு சுறுசுறுப்பை அடையுது.......இனி ஒரே பரபரப்புதான்.......பத்தி எரியட்டும் அக்னீ ......!  🔥

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடடா கதை முடிந்திருக்கும் என்று வாசிக்க ஆரம்பித்தால் இப்படி வந்து நிற்குதே. அருமை மர்மக்  கதை 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சப்தம் வந்த பாடசாலை குப்பைமேட்டு  திசையை நோக்கி ஓடினர் நால்வரும், ஐடியா மணியோ "மச்சான் சுலக்சனை நாய் முழுதும் குதறிப்போட்டுதோ தெரியாது, இண்டைக்கு நாய்க்கு வேட்டை தான் " என்று திகில்களத்திலும் கிளுகிளுப்பேற்றினான், அவனை முறைத்துவிட்டு நான்குபேருமாக டார்ச் ஒளியில் குப்பை மேட்டை நோட்டமிட துவங்கினர், அந்த இடத்தில் சுலக்சன் இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை, 
அப்போதுதான் குப்பை மேட்டை கூர்ந்து கவனித்தான் அவன் , ஓரிடத்தில் அழுத்தமாக இரத்த திட்டு தென்பட 
அந்த திசைவழியே நால்வரும் வெளிச்சத்தை பாய்ச்சினர் கொஞ்சம் தள்ளி இரத்தத்தடம் சற்று அதிகமாக காணப்பட்டது, இரத்தத்தடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்க ஆரம்பித்தது, இரத்தத்தடத்தில் இரத்தத்தின் அடர்த்தியும் மெதுவாக மெதுவாக அதிகரித்திருந்தது, நால்வருக்கும் விளங்கிவிட்டது எதுவுமே சரியாக்கப்படவில்லை.         
இரத்ததடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்கத்தொடங்கியது,
இவர்கள் சென்ற வழி ஆண்கள் மலசல கூடத்திற்கு செல்லும்வழி அந்த வழியிலிருந்த ஒரு சிறிய வகுப்பறையின்  மூலையில்  முனகல் சத்தம் அதிகமாக கேட்க  தமது டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினர், அங்கே இடது காலில் குருதி பெருக்கெடுக்க வலியில் முனகியவாறு சுலக்சன் சுவருடன் குந்ததவைத்து உட்காந்திருந்தான்,பெருக்கெடுத்த குருதியின் அளவிலேயே விளங்கிவிட்டது இது நாய் கடித்த காயத்தால் வந்ததல்ல பயபிள்ளை நாய் விரட்டியதும் தலைதெறிக்க ஓடிய ஓட்டத்தில் குப்பை மேட்டில் நீட்டிக்கொண்டிருந்த போத்தல் ஓடு ஒன்றின் மீது காலை வைக்க தயாராக இருந்த ஓடு பாட்டா செருப்பை துளைத்துக்கொண்டு தம்பியுடைய காலை பதம் பார்த்து விட்டது , தரமான கீறல் , இடது பாதத்தில் தசை கிழிந்து தொங்கியது, 

"இப்படியே பார்த்து கொண்டு நிக்காமலுக்கு தூக்குங்கடா, இன்னும்  கொஞ்ச நேரம் விட்டால் இரத்தப்போக்கில்  மயங்கிருவான் "

எல்லோரும் சேர்ந்து கைலாகு கொடுத்து சுலக்சனை தூக்க இவனோ ஐடியா மணியை பார்த்து சுலக்சனின் அப்பாவை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டுவருமாறு தகவல் அனுப்பிவிட்டு, சுலக்சனுடன் பாடசாலையிலிருந்து நடைதூரத்திலிருந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நோக்கி நடந்தனர் 

இவர்கள் வைத்தியசாலையை அடையவும் சுலக்சனுடயை அப்பா மோட்டார் சைக்கிளில் வரவும் சரியாக இருந்தது, வந்தவர் இவர்களை பார்த்து முறைத்துவிட்டு சுலக்சனுடன்  வைத்தியரை நோக்கி  சென்றுவிட. நால்வரும் வெளிச்சத்தில் வெளி நோயாளர் பிரிவு இருக்கைகளில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு உட்கார்ந்துகொண்டு நடந்தவைகளை அலச ஆரம்பித்தனர், 

அண்ணளவாக 15 நிமிடங்கள் கரைந்தித்திருக்கும், சுலக்சனை கொண்டு சென்ற அறையிலிருந்து வெளிப்பட்டார் அவனுடைய அப்பா, மெதுவாக நடந்து இவர்களை நோக்கி வந்தவர் அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்தவாறே கேட்டார், 

"டேய் நீங்களெல்லாம் படிக்கிறம் எண்டுபோட்டு இரவில் குப்பை மேட்டுப்பக்கம் என்ன செய்றிங்கள் ,
ஒண்ணுக்கு ஒதுங்குவது என்றால் பார்த்து ஒதுங்குறதில்லையா,ஆளுக்கு கால் நன்றாக கிழிஞ்சுபோட்டு எப்படியும் 15 தையலுக்கு மேல விழும் போல"   என்று விட்டு இவர்கள் முகத்தை பார்த்தார், நால்வரும் நடந்தவற்றை சொல்லவா முடியும்.? ஆளாளுக்கு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு தலையை குனிந்து கொண்டு உடகார்ந்திருந்தனர். 
சற்றைக்கெல்லாம் சுலக்சனுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது, காலை கெந்தியவாறே வெளிநோயாளர் பிரிவிலிருந்து வெளிப்பட்டான் சுலக்சன். 
நால்வரும் சுலக்சனை நோக்கிச்செல்ல, சுலக்சனின் அப்பாவோ நிறுத்திவிட்டு வந்த மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுவிட்டார், சுலக்சன் மெதுவாக "நடந்த ஒன்றையும் சொல்லவில்லை தானே ...?"
என்று கேட்க நால்வரும் ஏக காலத்தில் இல்லை என்று  தலையை ஆட்டினர், 
சுலக்சன் மெதுவான குரலில் "நான் உனக்கு பின்னால தான் ஓடிவந்து கொண்டிருந்தன் திடீரென்று பார்த்தால் முன்னாள் அதே நாய் மச்சான் , இரண்டி அடி முன்னாலே வைத்து பாய தயாராக நானும் திரும்பி குப்பை மேட்டுப்பக்கம் ஓட்டமெடுத்தேன் போத்தல் ஓடும் காலை பதம் பார்த்து விட்டது" என்றான் 

அவனோ "நான் திரத்திய கறுப்புருவத்தை கண்டனியோ...? என்று கேட்க "ஓமடா உனக்கு முன்னால சில அடிதூரத்தில் தானே ஓடிக்கொண்டிருந்தவன், பிடிச்சிட்டீங்களோ" என்று கேட்க "இல்லடா மண்டப  மூலையில் திரும்பினான் திடீரெண்டு ஆளை காணோம் ", "என்னடா சொல்றாய்...?" கால் வலியிலும் விறைத்து போய் நின்றிருந்தான் சுலக்சன், எல்லோரும் முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சுலக்சனின் அப்பாவும் மோட்டார்சைக்கிளுடன் வந்துவிட அவருடன் போய் தொற்றிக்கொண்டான் சுலக்சன். சுலக்சனையும் அவனது தந்தையையும் அனுப்பிவிட்டு திரும்பிய அவன் இன்றைக்கு படித்தது போதும் எல்லோரும் வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிமுடிக்க முதல் ஐடியா மணியோ "வேற இனி இந்த விளையாட்டே வேணாம் நான் இனி இரவில் படிக்க வரமாட்டேன்" என்று சொல்லவும் மற்ற இருவரும்  அதனை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினர் , நால்வரும் பாடசாலைக்கு திரும்பி தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஆளை விட்டால் போதும் என்றவாறு ஓட்டமெடுத்தனர்  

1962, இலங்கை கிழக்கு மாகாணம் 

வில் ......காற்றைக்  கிழித்துக்கொண்டு சென்றது, சமையல்காரியின் கூக்குரல், சற்று நிமிடத்தில் செய்தி தீயை போல் பரவ  முழு பாடசாலை ஆசிரியர்களும், ஊர் மக்களும் சகோதர்களது இல்லத்தில் முன் கூடிவிட்டனர், சகல சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வில்லியின் உயிரற்ற உடலை சவப்பெட்டியில் கிடத்தி மக்கள் பார்வைக்கு வைத்தனர், பீலிக்ஸோ வியர்த்து  விறுவிறுத்து காணப்பட்டார், கொரோனரிடம் வில்லியின் உடல் சென்றுவிடாமல் இருக்க செய்த பகீரத பிரயத்தனங்கள் அவரை அப்படி வியர்க்கவைத்துவிட்டது, வில்லியின் ஈமச்சடங்கில் முழு பாடசாலையும்,ஊரும் கதறியழுதது, ஒருவாறாக 
வில்லியை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த சகோதரர்கள்  தங்களது முழு  இல்லத்தையும் சுத்தம் செய்துவிட்டு  களைத்து போய் தூங்கச்சென்றார்கள், பீலீக்ஸும் களைத்துப்போய் வந்து கட்டிலில் சரிந்தார் அப்படியே தூங்கிப்போனார், திடிரென்று திடுக்கிட்டு முழித்த பீலீக்சிற்கு கொஞ்சம் தண்ணீர் சாப்பிடலாம் போல தோன்றவும் , ஒரு குவளையில் நீரை நிரப்பிகுடித்துக்கொண்டே மொட்டை மாடியில் நின்று நோட்டம் விட்டார்,
அங்கெ அவர்கண்ட காட்சியால் அவர் கை நடுநடுங்க கையிலிருந்த  குவளை தவறி விழுந்து உடைய அதனுள்ளிருந்த நீர் அவர் முகத்தில் தெறித்தது.    
(தொடரும்   )

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அங்கெ அவர்கண்ட காட்சியால் அவர் கை நடுநடுங்க கையிலிருந்த  குவளை தவறி விழுந்து உடைய அதனுள்ளிருந்த நீர் அவர் முகத்தில் தெறித்தது.    
(தொடரும்   )

நானும் எவ்வளவோ கதைகள் வாசித்திருக்கிறேன்...! ஆனால்...ஒரு கதைக்கு எந்த இடத்தில்...'தொடரும்..." போட வேண்டுமென்று, அக்கினியிடம் தான் படிக்க வேண்டும் போல உள்ளது!

தொடர் அருமையாக...அதே நேரம்...திகிலாகவும் போகின்றது!

தொடருங்கள்.....அக்கினி!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடத் தொட இதயம் துடிக்கும் தொடர்.......தொடரட்டும்.....!  🧐

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

டேய் நீங்களெல்லாம் படிக்கிறம் எண்டுபோட்டு இரவில் குப்பை மேட்டுப்பக்கம் என்ன செய்றிங்கள் ,

அப்பாவி அப்பா.
தொடருங்கள் அக்னி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கே சரியாக கூடைப்பந்தாட்ட மைதானத்தை ஒட்டியவாறு செல்லும் மின்விளக்கு கம்பத்தின் கீழ் வில்லி கைகள் இரண்டையும் தனது காட்சட்டை பையினுள் விட்டவாறு அந்த கம்பத்தின் மீது சாய்ந்து  நின்றுகொண்டு பீலீக்ஸை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார், பீலீக்சின் கண்களால் நம்பமுடியவில்லை கண்களை மீண்டும் கசக்கிவிட்டு பார்த்தார், அது வில்லியே தான் மின்விளக்கின் வெளிச்சத்தில் அவரது முகம் தெளிவாக தெரிந்தது  பீலீக்சின்  வாய் அவரையறியாமலே வி .....ல் .....லி என்று குழறியது, சற்று நேரம் அவரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லி மெதுவாக பின்னோக்கி  நடந்து அந்த இருட்டிலேயே கரைந்து போனார். வெளிறிப்போன முகத்துடன் திரும்பிய பிலீக்சின் மனச்சாட்சி உறுத்தியது இனிமேல் தான் உனக்கு இருக்கு என்று. 
ரெக்டராக இருந்தகாலத்திலேயே வில்லி அகாலமரணமடைந்தால், கல்லூரி யாப்பின் படி அடுத்த நிலையிலிருந்த பீலிக்ஸ் பாடசாலை ரெக்டரானார், தன்னுடன் ஒரு உதவியாளரையும் வைத்துக்கொண்டார்
ஆரம்பத்திலிருந்தே மூர்க்கத்தனம் அதிகமாக இருந்ததால் பாடசாலை முகாமைத்துவத்தில் பல சிக்கல்கள் உருவாக ஆரம்பித்தன, ஆசிரியர்களுடனும் சுமூகமான உறவு இல்லாமல் போக ஆரம்பித்தது, காலம் செல்லச்செல்ல பீலீக்ஸிடம் ஒரு தொய்வு தென்படத்தொடங்கியது, அந்தத்தொய்வு தானாக உருவாகியதல்ல, 
அவர் பார்க்கும் இடமெல்லாம் வில்லி அவருக்கு அருகிலிருந்து அவரையே உற்றுப்பார்த்து போல் தோன்றியது, இரவுகள் அவருக்கு எமனாகின, அந்த  நேரத்தில் வெளியே செல்ல நடுங்கினார், முதலில் எப்போதாவது மது அருந்தும் பீலிக்ஸ் பயத்தினை போக்க தொடந்து மது அருந்த நாளடைவில் ஒரு முழுநேர குடிமகனாகிப்போனார். பீலீக்ஸை இந்தப்பாடு படுத்தும் வில்லி சமையல்காரியை விட்டுவிடுவாரா என்ன...   
 வில்லி போட்டு வாட்டியெடுத்ததில் சொல்லாமல் கொள்ளாமல் அவள் இல்லத்தைவிட்டு ஓடியே போய்விட்டாள் அதற்க்கு பிறகு அவளுக்கு என்ன ஆனது என்று யாருக்குமே தெரியவில்லை.காலப்போக்கில் பீலிக்ஸ் ஒரு மன நோயாளி போல் நடந்து கொள்ளத்தொடங்கினார், இவையனைத்தும் ஒரு குறுகிய காலத்திலேயே நடக்க ஆரம்பித்துவிட்டது, ஒவ்வொரு நாளும் ஒரு கரிய உருவம் அவர் கண்முன்னே வில்லியின் அறையிலிருந்து அவரது தட்டு முட்டு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த குடவுன் நோக்கி நடந்து செல்வதும், அந்த குடவுனில் ரோனியோ இயந்திரம் இயங்கும் சத்தம் இவரது காதிற்கு அருகில் இயங்குவது போல் கேட்பதும் வாடிக்கையாகி போனது,

1962, இலங்கை கிழக்கு மாகாணம் 
கார்த்திகை  8
அன்று முழுவதும் பீலீக்ஸை காணக்கிடைக்கவில்லை, அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது,
பாடசாலைக்கும் பீலிக்ஸ் விடுப்பு அறிவித்திருக்கவில்லை, நீண்ட நேரமாக காத்திருந்தும் பீலீக்சிடமிருந்து எந்த தகவலும் வரவில்லையென்பதால் அவரது உதவியாளர் அவரை தேடி இல்லத்திற்கு வந்திருந்தார் 
நேரடியாக பீலீக்சின் அறைக்கு சென்ற அவர் கதவினை மெதுவாக தட்டினார், எந்த பதிலும் இல்லை 
சற்று நேரத்தின் பின் ஓங்கி தட்டினார், அப்போதும் எந்த பதிலும் இல்லை, பயந்து போனவர் 
பலங்கொண்டமட்டும் கதவினை தான் தோளினால் இடித்து தள்ளினார், கதவும் டமார் என்ற சத்தத்துடன் 
ஆவென்று திறந்து கொள்ள ,உள்ளெ வெறுமையாக இருந்தது, அங்கே பீலிக்ஸ் இருந்ததற்கான அடையாளமே இல்லை, அப்படியென்றால் எப்படி உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்கும் யார் தாழிட்டிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே மேல் மாடியிலிருந்த இன்னுமோர் சகோதரரிடம் விசாரிக்க அவரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார், அந்த சகோதரரின் அறை வில்லியின் அறையை விட்டு சற்று தள்ளி இருக்க  
வில்லியின் அறையை  , வில்லியின் அகாலமரணத்தின் பின் யாரும் பாவிக்க ஆரம்பிக்கவில்லை பெரும்பாலும் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டுதான் இருக்கும், உதவியாளர் கடக்கும்போதுதான் அவதானித்தார் இன்று அந்த அறை அரைகுறையாக மூடப்பட்டு கிடக்க கதவிடைவெளியினூடு யன்னல் வெளிச்சம் நிலத்தில் பட்டுக்கொண்டிருந்தது, யார் திறந்திருப்பார்கள் என்று கதவினை மூட முற்படும் போது 
எதேச்சையாக அவரது  பார்வை அந்த இடைவெளியினூடு செல்ல, அவர் கண்ட காட்சியில் இதயம் ஒருகணம் நின்று பின் அதிவேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது 

2003 , இலங்கை கிழக்கு மாகாணம் 
அன்று காலை பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனும் நண்பர்களும் அன்று நள்ளிரவு  இரவு நடந்த விடயங்களையே சிலாகித்துக்கொண்டிருந்தனர், எப்படி அந்த கரிய உருவம் கணப்பொழுதில் காணாமல் போயிருக்கும் என்ற கேள்வி அவனை உசுப்பிக்கொண்டே இருந்தது, 
அப்படியே அன்றைய பாடசாலை பொழுது கடந்துவிட ,
இண்டைக்கு டியூசன்  வகுப்பிற்கும் சுலக்சன் வரமாட்டான் வகுப்பு முடிந்ததும்  நோட்ஸ் கொப்பியை அவனுடைய வீட்டிற்கு கொண்டுபோய் கொடுப்போம் என்று மனதிற்குள் நினைத்தவாறே டியூட்டரியை நோக்கி தன்னுடைய மிதிவண்டியை மிதித்தான், சரியாக வகுப்பை நெருங்கும் தருணம் அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது, சற்று தொலைவில் சுலக்சனோ காலைக் கெந்திக்கெந்தி வந்துகொண்டிருந்தான்,

"என்ன மச்சான், இண்டைக்கு வரமாட்டாய் என்று நினைத்தேன், கால் எப்படி...?"

"கால் கொஞ்சம் பரவாயில்லை மச்சி, நாம எப்ப பள்ளியில் படிச்சிருக்கோம் அதுதான் காலையில் ஸ்கூலுக்கு வரவில்லை"

"எப்படி வந்தனீ"

"ஆட்டோவில் வந்தனான், டேய் இண்டைக்கும்  இரவு படிக்க வருவியா" 

"உனக்கு பைத்தியமா,நான் வரல்ல வீட்டில் உன்னை  விட்டுட்டாங்களா "

"நான் ஏற்கனவே சொல்லிப்போட்டன் அப்பா போகச்சொல்லி சொல்லிவிட்டார் , நீயும் வா மச்சான் ஒரு முக்கிய விடயம் சொல்லவேண்டும்"

"நான் வரல்ல"

"டேய் வா மச்சான், கொஞ்சம் முக்கியமான விஷயம் வாணி மடங்கிட்டாள் கனக்க இருக்கு கதைக்க  "

"என்னது வாணியை மடக்கிட்டியா, அப்போ கட்டாயம் வாறன் "

இருவரும் பேசி விட்டு வகுப்பு முடிந்ததும் இவன் சைக்கிளை எடுத்துகொண்டு  வரும் முன் சுலக்சன் 
சென்றுவிட்டான் 

(தொடரும் )
 

  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2021 at 05:44, அக்னியஷ்த்ரா said:

பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்  

ஆறுதலாக வாசிக்கவேண்டும் என்று சில பாகங்களுக்குப் பின்னர் இப்போதுதான் இங்கே வந்திருக்கின்றேன். ☺️

தமிழ்வாணனின் துப்பறியும் மர்மநாவல்களுக்குப் பின்னர் தமிழில் திகிலாகப் போகும் கதையை இப்போதுதான் வாசிக்கின்றேன். எழுத்துநடை அபாரம் அக்னி!!👏👏👏

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாணி , அவனது சக வணிகப்பிரிவு வகுப்பு மாணவி , வாணி என்பதற்கு பதில் வாயாடி என்று பெயர் வைத்திருக்கலாம், தப்பித்தவறி வாயை கொடுத்தால் கூட திருப்பி வாங்கமுடியாது,தொட்டால் சிவந்து விடும் தோல்  கொஞ்சம் குட்டையான பருமனான உடல் கிட்டத்தட்ட நித்தியா மேனன் போல இருப்பாள், அவனது வகுப்பு கனவுக்கன்னிகளில் ஒருத்தி, சுலக்சன் ஒரு பிஞ்சில் பழுத்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வாணியில் கண்ணை போட்டுவிட்டான், தடித்தாண்டவராயன் என்றாலும் மண்டைக்காய் அது ஒன்று போதுமே பெண்களை இழுத்தெடுக்க, சகட்டு மேனிக்கு பெண்களிடம் வழியும் பழக்கமும் உண்டு, உயர்தரத்திற்கு வந்ததும்  சாடை மாடையாக வாணியின் காதில் போட்டுவிட்டான், அவள் அதைக்கேட்டும் கேட்காதவள் போல் எந்த சலனமும் இல்லாமல் இருந்துவிட, பயப்பிள்ளை வாட்டியெடுப்பது அவனது நண்பர் குழாமைத்தான் ஒவ்வொருத்தராக தூது போயும் வேலைக்காகவில்லை,நண்பர் குழாமை விட அதிகமாக மாட்டுவது மைதிலி, அவனது வகுப்பு சகமாணவி, வாணியின் உற்ற நண்பி 
எப்போதும் சுலக்சனிடம் அவளுக்கு ராஜமரியாதை, பாடசாலை இடைவேளைகளில்  விசேட தீன்பண்ட உபசரிப்பும் நடக்கும், ஒரே வகுப்பு என்பதால் முழு நண்பர் குழாமின் வீடுகளுக்கும் மைதிலி நன்கு பரீட்சயம், இப்படி வாணியின் நண்பியை கைக்குள் போட்டும் சொல்லிக்கொள்ளக்கூடியவாறு எதுவுமே நடக்கவில்லை, நிலைமை இப்படியிருக்க இன்று சுலக்சன் புது கதை ஒன்றை சொல்கிறான். அவனுக்கோ  இருப்பு கொள்ளவில்லை, 

சரியாக இரவு ஏழுமணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு பாடசாலையை நெருங்க அங்கே என்றுமில்லாதவாறு சுலக்சன் இவனுக்கு  முதலிலேயே வந்து பாடசாலை நுழைவாயிலில் இருந்த படி ஒன்றில்  உட்கார்ந்து கொண்டு அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

"என்னடா நேரத்தோடை வந்திட்டபோல "      

"ம்ம் ...உனக்காகத்தான் வெயிட்டிங், வா மண்டபத்திற்குள் போவோம், நிறைய கதைக்கவேண்டியிருக்கு "

"வாணியை மடக்கிட்ட இனியென்ன"

"உன்னோட ஐடியா வேணும் மச்சி "

"சரி நடந்ததை சொல்லு அப்புறம் ஐடியா தறாதா இல்ல உன்னை போட்டு மிதிக்கிறதா என்று நான் சொல்றன்"
என்று அவன் சொல்லவும், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு நொண்டிக்கொண்டே முன்னோக்கி நடக்கத்தொடங்கினான்,

உள்ளே வந்ததும்  இருவரும் தங்களது படுக்கை விரிப்புகளை விரித்து விட்டு அதில் தங்களை கிடத்திக்கொள்ள முதலில்  சுலக்சன் ஆரம்பித்தான். 

"மச்சான் வாணி வீட்டடியால தானே பள்ளிக்கு வாறவள், உனக்கும் தெரியும்தானே டெயிலி அவளை முன்னால விட்டு தானே நான் பின்னால வரானான், நேற்று வாணி வார டைமில நானும் வந்து கேட் பக்கம் நின்டானான் ,எப்போதும்  ஒரு அசிப்பும் காட்டாமல் போறவள் நேற்று ஒரு இரக்கத்தோட ஒரு பார்வை பார்த்துவிட்டு காலில் என்ன என்று சைகையில் கேட்டாள்ரா"

"பார்ரா ...பிறகு "

" நானும் போத்தல் ஓடு கிழிச்சிப்போட்டு என்று மெதுவாக சொல்ல, எதோ சொல்ல வந்தவள் 
அம்மாவை காணவும் அப்படியே போய்ட்டாள் , பின்னேரம் அம்மா டேய் சுலக்சன் உன்னை தேடி மைதிலி வந்திருக்கிறாள் நோட்ஸ் கொப்பியை தர  வேணுமாம் என்று எழுப்பவும் போய் 
ஒரு லூசுவேலை பார்த்துவிட்டேன், பெரிய சத்தமாக எந்த நோட்ஸ் கொப்பிடீ...? என்று கேட்க அவளோ மெதுவாக என்று சைகை காட்டிவிட்டு, அவள் கையிலிருந்த கொப்பியை தருவது போல் அருகில் கூப்பிட்டு 
வாணி உன்னை விசாரித்தவள், ஆளுக்கு உன்னோட செம லவ் டா, அமசடக்கு வெளியில காட்டவில்லை,
உனக்கு காலில வெட்டு என்று என்னை இருக்க விடுறாளில்லை,போய் விசாரித்து விட்டு வரட்டுமாம், அதுதான் வந்தனான் அவளுக்கு  என்ன சொல்ல என்று கேட்டாள்  "  

"டேய் ..நீ கேடி டா சரி என்ன சொல்லி அனுப்பின நீ "

" அவளை கேட்ட என்றும் , நானும் அவள் ஞாபாகமாக தான் இருக்கிறன், கால் சுகமாகினதும் எங்க மீட் பண்ணலாம் என்று கேட்க  சொல்லி அனுப்பினனான் "

"சரி...இதில நான் என்ன  ஐடியா தாரது " இது அவன் 

"முதல் முதலாக சந்திக்கும்போது கிப்ட் ஒன்று வாங்கி கொடுக்கணும் மச்சான் அதுதான் என்ன வாங்கி கொடுக்கலாம் என்று உன்னிடம் கேட்போம் என்று தோணிச்சு "

"நானே இந்த விவகாரத்தில் தத்தி நீ என்னிடம் கேட்கிற..!, சரி எதுக்கும் அக்காவிடம் கேட்டு சொல்றன், அவவுக்கு  தான் உந்த வயசு பிள்ளைகள் என்ன விரும்பும் என்று தெரிந்திருக்கும் "

"டேய் நாசமாபோவானே வீட்டில  என்னை மாட்டிகொடுத்திடாதடா" என்று சுலக்சன் கூவவும் 

அவனோ "நான் இன்னொரு ஆளுக்கு என்று சொல்லித்தான் கேட்பன், உன்ன மாட்டிக்கொடுக்கிறதென்றால் உண்டை வீட்டிலேயே மாட்டிக்கொடுக்க வேணும் லவ் பன்றாராம் ...லவ்  "

"உனக்கு பொறாமை " என்று விட்டு சுலக்சன் புத்தகத்தை கையிலெடுத்தான்.

இவனிருக்கும் குஷியில் இண்டைக்கு நன்றாகதான்  படிப்பு இவனுடைய மண்டையில் ஏறப்போகிறது என்று நினைத்துக்கொண்டு அவனும் கையில் ஒருபுத்தகத்தை தூக்கினான், ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும் 
முன்னாலிருந்த சுலக்சன் புத்தகத்தை விட்டு மண்டபத்தையே சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தான் 
என்னத்தடா அப்படி பார்க்கிற என்று அவன் கேட்கவும், மச்சி படிக்கிற மூடில்லையடா என்று விட்டு சுலக்சன் 
மண்டபத்தின் மூலையிலிருக்கும் களஞ்சிய  அறையை நோக்கி நடக்க (நிற்க!) நொண்ட ஆரம்பித்தான், 
அந்த அறையை பாடசாலையின் வரலாறு என்று சொல்லலாம், கறையான் அரித்து இற்றுப்போன கதவிற்கு பின்னே வருடக்கணக்கான வரலாறு உறங்கிக்கொண்டிருக்கிறது, உண்மையில் அங்கே என்னென்ன தஸ்தாவேஜுகள், ஆவணங்கள்,புத்தகங்கள் ,பழைய பொருட்கள் இருக்கின்றன என்று அதிபருக்கே தெரியாது, தட்டு முட்டு பொருட்கள் என்று குவித்து குவித்து என்ன எங்கே இருக்கிறது, எப்படி உள்நுழைந்து உடலில் காயம் படாது திரும்புவது என்று யாருக்குமே  தெரியாது, அதிபர் யாரையும் அந்த களஞ்சிய அறைக்குள் அனுமதிப்பதில்லை ஒருவரை தவிர, அந்த ஒருவர் யாருமல்ல சாட்சாத் சுலக்சனே தான், அவன் கூட அதிபரின் மேற்பார்வையுடன் மட்டுமே உள்ளே செல்ல முடியும், சுலக்சனின் வீடு பாடசாலைக்கு மிக அருகாமையில் நடை தூரத்தில் இருப்பதால், எல்லா அதிபர்களுடைய எடுபிடிக்கான முதல் தேர்வு அவனாகவே இருப்பது வழக்கம்,

இந்த நேரத்தில் எதற்கு அந்த அறையை நோக்கி செல்கிறான் இவன்...? 
"டேய் எதற்கு அந்த பக்கம் போறாய் ...?" என்று பதறினான் அவன், சுலக்சனோ சாவகாசமாக திரும்பி 
"மச்சான் அறைக்கு  உள்ள ஒரு அயிட்டம் இருக்கு பொறு எடுத்துக்கொண்டு வாறன்", என்று சொல்லிவிட்டு 
கதவில் மாட்டியிருந்த பூட்டை இடது பக்கமும் வலது பக்கமும் இருமுறை அசைக்கவும் பூட்டு தன்னை விடுவித்துக்கொண்டு அவனது கையுடன் வந்துவிட்டது, அவனை நோக்கி திரும்பிய சுலக்சன் 
சிரித்துக்கொண்டே "இந்த பூட்டு சாட்டிற்குத்தான் எனக்கும் அதிபருக்கும் தான் இந்த விடயம் தெரியும்" 
என்று ஒற்றை கண்ணை அடித்துவிட்டு கதவை தள்ளித்திறந்தான்,  அப்படியெதனை சுலக்சன் அந்த அறையிலிருந்து லவட்டி  கொண்டுவரப்போகிறான் என்று அறியும் ஆர்வம் அவனுக்கும்  தொற்றிக்கொண்டது


1962, இலங்கை கிழக்கு மாகாணம் 
கார்த்திகை  8  
மெல்லத்தெரிந்த கதவிடைவெளியூடு பார்வையை படர விட்ட உதவியாளர், விறைத்துப்போனார்
வாயில் எச்சில் உலரத்தொடங்கியது, சரியாக அந்த அறையின் நடுவில் இருந்த விட்டத்தில் இறுகக்கட்டப்பட்டிருந்த கயிற்றில் பீலீக்சின் உயிரற்ற உடல் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது, 
கயிறு கழுத்தை மேல்நோக்கி இழுத்ததிலும் உடலெடை கீழ்நோக்கி இழுத்தத்திலும் பீலீக்சின் கழுத்துப்பிரதேசம் ஏகத்திற்கு நீண்டிக்க, வாயின் ஓரத்தில் துருத்திக்கொண்டிருந்த வெளிறிப்போயிருந்த  நாக்கு, நாளங்களில் இரத்தஓட்டம் எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டதை அறிவித்துக்கொண்டிருந்தது.
அதிர்ச்சியில்  அப்படியே சிலநிமிடங்கள் சுயநினைவற்று நின்ற உதவியாளர் நினைவிற்கு வந்தவராக 
அறையின் சுற்று முற்றும் நோட்டம் விட்டார், அறையின் ஓரத்திலிருந்த மேசை மேல் அவர் தேடிய பொருள் இருந்தது, அது பீலீக்சின் நாட்குறிப்பு, உடனடியாக அதனை நோக்கி பாய்ந்த அவர் வில்லி மரணமான அந்த நாளிலிருந்து இன்றைய தினம்வரை எழுதப்பட்டிருந்த அனைத்து பிரதிகளையும் கிழித்து தனது சட்டைக்குள் ஒழித்துக்கொண்டார், வடிந்த வியர்வையை துடைத்து தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு அடித்தொண்டையிலிருந்து அவர் எழுப்பிய ஓலத்தில் ஒரு கணம் அந்த முழு இல்லமும் அதிர்ந்தது       
சற்று நேரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள முழு இல்லமும் , 
ஆறு மாத இடைவெளியில்  இரு ரெக்டர்களை பறிகொடுத்த சோகத்தில்  பாடசாலையும் சோகமயமாகிவிட்டது,
நடந்த துர் சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே வந்த மக்களில் பலர் இந்த இல்லம் சபிக்கப்பட்ட இல்லமாக போய்விட்டது என்று பேசுவதையும் , பலர் இந்த இல்லத்தை இடித்துவிட்டு புதிய இல்லம் கட்டுவது சபைக்கு நல்லது என்று அவர்கள் கருத்தையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தனர்  
சற்று நேரத்தில் பீலீக்சின் உடல் சகல சம்பிரதாயங்களையும் முடித்து மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட 
பீலீக்சின் உதவியாளரோ எதுவுமே நடக்காதது போல் பீலீக்சின் பூதவுடலுக்கு அருகில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தார், அன்றிலிருந்து இரண்டு நாட்களில் பீலிக்சின் உடல்  நல்லடக்கம் செய்யப்பட, கொஞ்சம் கொஞ்சமாக வில்லி மற்றும் பீலீக்சின் ஞாபகங்கள் காலவோட்டத்தில் கரைந்து அப்படியே எல்லோரதும்  நினைவிலிருந்து  மறைந்து விட்டன    
 (தொடரும்)     

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திகிலாக நன்றாக போகின்றது அக்னியஷ்த்ரா, தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2003 , இலங்கை கிழக்கு மாகாணம்
சுலக்சனின் வரவை எதிர்நோக்கியவாறு கதவினை நோட்டம்விட்டுக்கொண்டிருந்தான் அவன், களஞ்சிய அறைக்குள் பாத்திரக்கடைக்குள் யானை புகுந்தது போல் ஒரே சத்தம், புகுந்திருப்பதும் ஒரு யானை தானே என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு நொண்டிக்காலன் என்ன செய்கிறானோ ஒரு தடவை எட்டிப்பார்ப்போம் என்று கதவோரத்தை நெருங்கிய கணத்திலேயே  சுலக்சன் கையில் ஒரு பொருளுடன் வெளிப்பட்டான், 
அது ஒரு நாட்குறிப்பு, 1962 என்று புழுதி படிந்த  அட்டை முகப்பில் ஆண்டு தெளிவாகவே தெரிந்தது.

என்ன மச்சான் இது ..? 

யாரோ ஒரு பழைய பிரதரின் டைரி போல...

அதுசரி...அதெப்பிடி உனக்கு கிடைச்சுது ...?

நான் தான் ஒவ்வொருநாளும் வாறனானெல்லோ என்று விட்டு அவனை பார்த்தான் சுலக்சன் 

போடா லூசு ஒவ்வொரு நாளும் வாறநீயோ...?  என்று அவன் கேட்கவும் ,ஒற்றைக்கண்ணடித்து சிரித்துவிட்டு 
சுலக்சன் மேலும் தொடர்ந்தான், 

"அது டா ஒருநாள் அதிபரோடு வந்து ஒரு அட்டைப்பெட்டியை தோண்டும் போது கையில் அகப்பட்டது, திறந்து பார்ப்போம் என்று பார்த்தால் வெளியே அதிபர், 
வாய்ப்பு கிடைக்கும் போது உருவிவிடுவோம் என்று அகப்பட்ட ஒரு மரப்பலகைக்கு கீழே சொருகி விட்டு வந்தேன், இண்டைக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது,அடுத்தவர்களோட டயரியை வாசிப்பதே தனி சுகம் இது வேற பழைய டயரி  வா சேர்ந்து வாசிக்கலாம் " 

அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள இருவரும் அருகிலுள்ள மேசையை மின்விளக்கிற்கருகில் இழுத்து போட்டுக்கொண்டு ஒற்றைகளை திருப்ப துவங்கினர்.

முதல் ஒற்றையில் உரியவரின் பெயர் கறுப்பு ஆங்கில கூட்டெழுத்தில் Rev.Bro Felix Rodrigez  என்று மினுமினுத்தது, பெயரை வாசித்துவிட்டு இந்தப்பெயரை இதற்க்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்து விட்டு சற்று தலையை உயர்த்திய அவனது கண்கள்  மண்டபத்தினுள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்த ரெக்டர்களது புகைப்படங்களை வரிசையாக மேய்ந்தன, அவனுக்கு பிடித்தமான 
Wilheim பிரதரது புகைப்படத்திற்கு அடுத்ததாக இருந்த புகைப்படத்தில் இதே பெயர் இருந்தது, ஓ இவரது நாள்குறிப்பா என்று நினைத்தவாறு ,ஒற்றையை பிரிக்கமுன் சுலக்சனோ பத்து பதினைந்து ஒற்றைகளை கடந்து வேறு எதுவொன்றையோ தேடுவது போல் படு சீரியஸாக வாசித்துக்கொண்டிருந்தான், 

என்ன மச்சான் இப்பிடி வேகமாக  பார்க்கிறாய் என்று கேட்கவும் சுலக்சனோ எழுதியிருக்கும்  எல்லாமே ஒரேமாதியாகவே இருக்கு டா அதுதான் கொஞ்சம் வேகமாக வசிக்கிறேன் என்று விட்டு ஒற்றைகளை பிரட்டுவதிலேயே குறியாக இருந்தான். இப்படியே சிறிதுநேரம் போயிருக்கும் சுவாரசியமாக எதுவுமில்லை 
அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான் நாளேடு பெரிதாக தோன்றினாலும் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது, இனி அவர்கள் படிக்கப்போகும் பக்கத்திலிருந்து தொடர்ந்து வர வேண்டிய அனைத்து ஒற்றைகளும் கையினால்  கோணல் மாணலாக அவசரமாக கிழிக்கப்பட்டிருந்தது.
இருவருக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ள கிழிக்கப்பட்டிருக்கும் ஒற்றைகளுக்கு மேலிருக்கும் கடைசி பக்கத்தை
கூர்ந்து படிக்க ஆரம்பித்தனர் 

"இன்று நான் செய்யப்போகும் செயல் எனது மனச்சாட்சிக்கும் சபைக்கு நான் கொடுத்திருக்கும் வார்த்தைப்பாடுகளுக்கும் எதிரானது, இருந்தும் எனது மானம்,மரியாதையை காத்துக்கொள்ள வேண்டுமென்றால் இதனை தவிர்க்கமுடியாது, அன்று மட்டும் Wilhem கண்ணில் நாங்கள் பட்டிருக்காவிடில் வரப்போகும் இரத்தப்பழி என்மீது இருக்கப்போவதில்லை, Wilheim  என்றாவது ஒருநாள் உன்னிடம் மன்னிப்பு வேண்டும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமானால் அது அடுத்த பிறவி என்றாலும் அன்று நிச்சயம் உனது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வேண்டுவேன் "  என்று முடிந்திருந்தது அந்த ஒற்றை 

இருவரும் ஆளை மாறி ஆள் விறைத்துப்போய் நோக்க , சுலக்சனோ அந்த ஒற்றையை திருப்பி பார்த்தான் 
அதன் பின் இருந்த ஒற்றைகள் முழுவதுமாக கிழிக்கப்பட்டிருந்தன, அப்போதுதான் அவன் கவனித்தான் 
கிழிக்கப்பட்ட ஒற்றையில் ஒன்று முழுவதுமாக கிழியாமல் ஒரு நூலிழையில் தொங்குவது போல் நாட்குறிப்பில் தொங்கிக்கொண்டிருந்தது, அவசரமாக கிழிக்கப்பட்டதால் கிழித்தவரும் அதனை கவனிக்கவில்லை போலும்,  நூலிழையில்  தொங்குவது போல் இருந்தததால் அது ஒரு பக்கம்  மடிந்து
நாட்குறிப்பின் கடைசி மட்டையில் இருந்த உறையினுள் புகுந்து விட்டிருந்தது, அந்த பக்கத்தை உருவி எடுத்த அவனும் சுலக்சனும் ஆர்வம் தாங்காது வாசிக்கத்தொடங்கினர்.
அதுவரை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள்  இந்த பக்கத்தில் இலகுவில்  வாசிக்க முடியாதவாறு மிகவும் அலங்கோலமாக எழுதப்பட்டிருந்தது.

இனிமேலும்  என்னால் முடியாது, உயிருடன் இந்த வேதனையை அனுபவிப்பதை விட நரக வேதனை எவ்வளவோ மேல், நீ என்னை விடப்போவதில்லை  என்று தெரிந்து கொண்டேன் Wilheim, எனக்கு அடிக்கடி அறிவுரை தரும் வேளையில் பாவத்தின் சம்பளம் என்ற வசனத்தை நீ பாவிப்பாய், அது உனக்கு பைபிளில் பிடித்த வசனமும்  கூட எந்த பாவமும் அறியா உனக்கு அந்த சம்பளத்தை அளித்த அந்த பாவத்திற்காக இன்று இரவு எனது பாவத்தின் சம்பளத்தை தேடிக்கொள்கிறேன், இதுவே இந்த ஜென்மத்தில் நான் எழுதும் இறுதி வாக்கியம் 

என்று முடிந்த அந்த ஒற்றையை இறுதிவரியின் பின் பேனா குத்திக்கிழித்திருந்தது. வாசித்து முடிந்து விட்டு நிமிர்ந்தான் அவன் அருகில் இருந்த சுலக்சனோ காணாமல் போயிருக்க, மண்டபத்திற்கு வெளியே சுலக்சனின் காலடியோசை கேட்டது, மெதுவாக எழுந்த அவன் மண்டபத்திற்கு வெளியே செல்ல சுலக்சனோ 
மண்டபத்தின் சுவற்றில் ஒருக்களித்தவாறு தனது இருகைகளையும் அவனது காட்சட்டை பையினுள் விட்டவாறு நிலவினை பார்த்துக்கொண்டிருந்தான், அவனது தோரணையே அன்று  வித்தியாசமாக இருந்தது 
மெதுவாக அருகில் சென்ற அவன், சுலக்சன் தோளில் கையை வைத்து 

"மச்சான் wilheim பிரதருக்கு  என்னடா நடந்திருக்கும்...? எதுவோ விவகாரமாக நடந்திருக்கிறது, முழுவிடயமும்   அந்த டயரியில இருந்திருக்கு யாரோ ஒருத்தன் சபையை காப்பாற்றவோ அல்லது பிலீக்சின் பெயரை காப்பாற்ற ஒற்றைகளை கிழித்திருக்கிறான் " என்று முடித்தான் 

சற்று நேரம் அதனை காதில்வாங்காதவன் போல் நிலவையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் அவனை நோக்கி திரும்பினான், அவனது கண்ணில் அப்படியொரு தெளிவும் ஈர்ப்பும்  இதுவரைக்கும் சுலக்சனின் கண்ணில் அப்படியொரு காந்தவிசையை அவன் கண்டதில்லை, இன்று என்னவோ சுலக்சன் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்துகொண்டேயிருக்கிறான், திரும்பிய சுலக்சன் அவன் தோளில் கையைவைத்து 

"உண்மை எப்போதாவது வெளிவந்தே தீரும் மச்சான் , இன்று இல்லாவிடினும் என்றாவது" என்று சொல்லிவிட்டு "அந்த பாவத்தின் சம்பளம் என்ற வசனம் நல்லாயிருக்கில்ல'  என்று அவனது கன்னத்தை தட்டிவிட்டு மண்டபம்  உள்ளே சென்றுவிட்டான்,

சற்று நேரத்தில் இருவரும் கண்ணயர , சிறிதுநேரம் கழித்து, 
"மச்சான் விடிஞ்சுபோட்டு பள்ளிக்கு பிள்ளைகள் வரப்போகினம் வா போவோம்" என்று அவனை உலுப்பினான்  சுலக்சன், கண்முழித்து நேரத்தைப்பார்த்தான் அதிகாலை 5:45 
சரி வா போவோம் என்று இருவரும் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற, சுலக்சனும் வீட்டைநோக்கி கெந்தி கெந்தி நடக்கும் பரிதாபம் பார்க்கமுடியாது அவனும் 
"சைக்கிளில் ஏறு டா கொண்டு போய் வீட்ட விடுறன்" என்று சொல்ல அவனோ  "ஓ இவ்விடத்தில் இருக்கும் வீட்டிற்கு சைக்கிள் ஒரு கேடு" என்று சிரித்துவிட்டு "நீ வீட்டை போ கொஞ்சநேரத்தில் பள்ளியில் சந்திப்போம் "
என்று விட்டு மெதுவாக நடந்து அவனது பார்வையில் இருந்து மறைந்து போக, சிறிது நேரம் அவனை பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக வீட்டை நோக்கி சைக்கிளை விரட்டினான்   

(தொடரும்)

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைய பாகத்துடன் முடியும். வேலைப்பளுவிற்கு மத்தியில் எழுதுவதால் தான் இந்த சுணக்கம், வாசக உள்ளங்களிடம் வருந்துகிறேன்

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2003 , இலங்கை கிழக்கு மாகாணம்
அன்றும் பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, என்னவாக இருக்கும் ...? இரவில்  படிக்கமட்டும் வருகிறான் 
சரி இன்று பாடசாலை முடிந்து போகும்போது ஒரு எட்டு அவனது வீடு சென்று ஏன் வரவில்லை என்று கேட்டு விட்டு வருவோம் என்று யோசித்தவாறே அன்றைய பொழுதை கடத்திக்கொண்டிருந்தான் அவன்.
மாணவத்தலைவன் என்பதால் பாடசாலை மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையை விட்டு வெளியேறவைத்து சைக்கிள் பாதுகாப்பு பகுதியின் படலையை மூடி சாவியை அதிபரிடம் கொடுத்துவிட்டு வர 
போதும் போதுமென்றாகிவிட்டது, கையைத்திருப்பி கடிகாரத்தை பார்த்தான் நேரமோ மதியம் 2:20

சரி போய் சுலக்சனை பார்த்துவிட்டுவருவோம் என்று சைக்கிளை சுலக்சனின் வீட்டினை நோக்கி செலுத்தி 
 சுலக்சனது மதில்  வாசலை நெருங்கவும் வாசலடியிலிருந்து மைதிலி வெளியேறவும் சரியாக இருந்தது, 

இவனை கண்ட மைதிலி சிரித்துவிட்டு செல்ல, சைக்கிளை விட்டிறங்கிய அவன் படலையை திறந்துகொண்டு 
சுலக்சனை கூப்பிட்டவாறு வீட்டினுள்  உள்நுழைந்தான், இவனது குரலை கேட்டு வெளியே வந்த சுலக்சனின் தாயார் "ஓ தம்பியா கொஞ்சம் பொறு மனே மைதிலி இப்பதான் வந்து அவனோட கதைச்சுப்போட்டு போறாள் இப்பதான் பாத்ரூம் பக்கம் நான் கொண்டுபோய் விட்டுப்போட்டு வாறன் முடிஞ்சதும் கூப்பிடுவான் நீ அங்க இரு"   என்று விட்டு குசினிப்பக்கம் செல்ல
சுலக்சனோ நன்றாக கெந்தி கெந்தி நடக்கிறான், இந்த மனிசி பாத்ரூமிற்கும்  தான் தான் கொண்டுபோய் விடுறன் என்று சொல்லுது, என்ன கூத்தடா  இது ..சரி வரட்டும் கேட்போம் என்று யோசித்தவாறே சோபாவில் அமர்ந்தான் அவன்.

"அம்மா" என்று கொஞ்சநேரம் கழித்து சுலக்சனின் குரல் கேட்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன்  "அன்ரி நீ ங்க வேலையை  பாருங்கோ  நான் போய் கூட்டிக்கொண்டுவாறன்" என்று சொல்லிவிட்டு  எழுந்து பாத்ரூம்பக்கம் போக லுங்கியை அக்குளிற்குள் இடுக்கியவாறு சுலக்சன் வெளிப்பட்டான்,
காலை நிலத்தில் வைக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தவன் , போதாக்குறைக்கு தண்ணீர்படாமல் இருக்க காயத்தை சுற்றி ஒரு சிவப்பு பொலித்தீன் பையையும் இறுகக்கட்டியிருந்தான்.

கைலாகு கொடுத்து மெதுவாக தூக்கிக்கொண்டு சுலக்சனை சோபாவில் கிடத்தி விட்டு பேச ஆரம்பித்தனர் இருவரும் 

"ஏனடா பள்ளிக்கு இண்டைக்கும் வரலை"

"நான் இருக்கும் நிலையை பார்த்தாய் தானே, ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதிற்கே அம்மா கொண்டுபோய் விட வேண்டிக்கிடக்கு "

"அப்போ நேற்று இரவு படிக்க வந்தது "

"மச்சான் நானில்லாத நேரத்தில்  எங்கேயும் கஞ்சாவை வாங்கி பள்ளிக்குள் இழுக்கியோ, நானெப்படா நேற்றுவந்தனான் விசரா உனக்கு "

"மச்சான் விளையாடாதடா, நீ நேற்று என்னவெல்லாம் சொன்னாய் என்று யோசித்துப்பார் "

"டேய் மனுசனுக்கு கடுப்பேத்தாத நானே வரவில்லை என்றன், இவரு பேசினாராம் " 
என்று விட்டு அம்மா  என்று கூப்பிட்டான் சுலக்சன் , சுலக்சனுடைய குரலை கேட்டு அவன் தயார்  எட்டிப்பார்க்கவும் "அம்மா நேற்று இரவு நான் என்னசெய்தனான்" என்று கேட்க 
சுலக்சனின் தாயாரோ பொரிந்துதள்ள துவங்கினார்.

"எடுத்தாலும் எடுத்தான் ஒரு காயத்தை எனக்கு தூக்கம் போச்சு, நேற்று இரவு மட்டும் ஆறுதடவை இவனை இழுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கம் போவதும் வருவதுமாக நித்திரையே போச்சு மனே "  என்று அவர் முடிக்கவும்,அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு தலைக்குள் சுரீர்...சுரீர் என்று வலிக்கத்தொடங்கியிருந்தது
மூளை கோணல் மாணலாக வேலை செய்துகொண்டிருந்தது அப்படியானால் இரவு என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார், பிரதர் wilheim ஆ இருக்குமோ, ஒவ்வொரு நாளும் மண்டபத்திற்குள் வருகிறேன் என்று நேற்று   சொல்லியது சுலக்சன் உருவிலிருந்த Wilheim ஆ...? அப்போ அந்த கரிய உருவம்  பிரதர் wilheim ஆ
எதற்கு என்னை தெரிவுசெய்தார்...? இப்படி கேள்விகள் அவனுடைய மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓட 
விறைத்துப்போயிருந்த அவனை கவனிக்காது சுலக்சன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  தொடர்ந்தான்.

"மச்சான் மைதிலியை கண்டனியோ " 

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது  " ம்ம்" என்றுமட்டும் முடித்துக்கொண்டான் அவன்  

"வாணியிடமிருந்து தகவல் எனக்கு கால் வெட்டப்பட்டதை தெரிந்து கொண்டு சுகம் விசாரிச்சு கேட்டனுப்பியிருக்கிறாள் "  என்று தொடர்ந்து நேற்று இரவு அவன் வாயினால் விபரித்த அனைத்தையும் மீண்டும் ஒன்றும் விடாமல் புதிதாக சொல்வதுபோல்  தொடர்ந்து விபரித்துக்கொண்டிருந்தான் சுலக்சன்
அவனது மூளை ஏற்கனவே கொள்ளளவுக்கு அதிகமாக அதிர்ச்சியினை உள்வாங்கிக்கொண்டு தளர்ந்து போயிருந்ததால் சுலக்சன் விபரித்த அனைத்தையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது, புள்ளிகள் எல்லாம் 
நேர்கோடுகளால் இணைய அவன் ஆழ்மனதில் Wilheim இன் புகைப்படம்  தோன்றி தோன்றி மறைந்தது.

எந்த சலனமும் இன்றி இருக்கையை விட்டு எழும்பியவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் கேட்டான்
"என்னடா ஒரு பதிலும் சொல்றாயில்லை "

"மச்சான் எனக்கு தலை சரியாக இடிக்கிது, உதைப்பற்றி நாளைக்கு கதைப்போம்"  என்று விட்டு அவனது பதிலையே எதிர்பாராதவனாக வெளியே வந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி விரட்டினான்,
இந்த  சம்பவம் நடந்து நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக இந்த அமானுஷ்யம் அவனது வாழ்வில் ஒரு இனிமையான நினைவாக மட்டும் மாறிப்போனது.
        

2020 , இலங்கை கிழக்கு மாகாணம்

 "தம்பி வாங்கோ", பாடசாலையின் தற்போதைய  அதிபர் அவனை இன்முகத்துடன் வரவேற்றார்,
"தம்பிகள் பழைய மாணவர் சங்கத்தினால் செய்யும் உதவிகளுக்கு பாடசாலை பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது, கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள் பள்ளியை சுற்றிப்பாருங்கோ நான் ஒரு இருபது நிமிஷத்தில் வாறன் " என்று விட்டு அதிபரும் நகர 

பதினைந்து வருடங்களுக்கு பிறகு கால்வைக்கும் அவனது  பாடசாலை இஷ்டத்திற்கு  முற்றுமுழுதாக மாறியிருந்தது, உயர்தரத்தில் அவன் படித்த வகுப்பறையை தவிர மற்றயதெல்லாம் இடிக்கப்பட்டு மாடிக்கட்டிடங்களாக மாறியிருந்தன, மெதுவாக பழைய விடயங்களை அசைபோட்டவனுக்கு அப்போதுதான் அந்த சம்பவமும் ஞாபகம் வர, அவனது கால்கள் அந்த குடவுன்  இருந்த திசையை நோக்கி தானாகவே நடந்தது, அங்கே அந்த கூடவுன் இருந்த அடையாளமே தெரியாமல் அந்த இடத்தில் இரண்டுமாடி கட்டிடமொன்று முளைத்திருந்தது,

இந்த குடவுனுக்கு என்ன ஆனது என அறியும் நோக்கத்தில், அந்த வழியால் சென்றுகொண்டிருந்த சிறுவனொருவனை கூப்பிட்டான் அவன், 
இவனது தோற்றத்தை பார்த்த சிறுவனும் பம்மிக்கொண்டு தயங்கி தயங்கி அவனருகில் வந்தான் 
"சேர்"
"தம்பி சேர் எல்லாம் இல்ல அண்ணன் என்றே கூப்பிடும், இந்த இடத்தில் ஒரு பாழடைந்த குடவுன் ஒன்று இருந்ததே அதை எப்ப இடிச்சவைங்க"

இவனை மேலேயும் கீழேயும் பார்த்த அவன் " அண்ணன்  கனகாலத்திற்க்கு இங்கால வரலை என்ன, அதை  இடித்து பத்து வருடத்திற்கு கூட இருக்கும் நான் பள்ளியில் சேர்ந்த காலத்தில் தான் இடித்தவை, இடித்துப்போட்டுத்தான் அந்த பெரிய கட்டிடத்தை கட்டினவங்கள்  "  என்று முடித்தான்.

"அப்போ ஏன் அந்த கட்டிடம் பூட்டியிருக்கு யாரும் பாவிக்கறதில்லயா...?"

"அது இரவில் யாரும் அங்காலைப்பக்கம் போறதில்லை, அடிக்கடி லையிட் தானாக எரியுறதும், மெஷின் இரைச்சல் வாறதுமென்று ஒருவரும் போறதில்ல,அப்படி துணிஞ்சும் போன நாலைஞ்சுபேர் நாய்க்கடியும் வாங்கியிருக்கினம் "

"சுற்றி மதில் போட்டிருக்கே நாய் எங்கயிருந்து வருகிறது "   

"தெரியாது அண்ணன், ஏழடி மதில் அப்படியிருந்தும் அந்தப்பக்கம் நாய்கள் ஏறி வருகிறது,பகலிலே மட்டும் எதாவது தேவைக்கு பாவித்துவிட்டு பொழுதுபட பூட்டிவிட்டு வந்துவிடுவோம் " என்று முடிக்க 

"என்ன தம்பி நம்மடை பாடசாலை எப்படியிருக்கிறது...?" என்று கேட்டுக்கொண்டே அதிபர்வரவும்
அதிபரை கண்ட பயத்தில் இவனை பார்த்து சிரித்துவிட்டு நொடிப்பொழுதில் சீட்டாய்ப்பறந்துவிட்டான் அந்த சிறுவன், அதிபரை நோக்கி திரும்பிய அவனும் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான், சற்றைக்கெல்லாம் அவனது வேலை முடிந்துவிட அதிபரிடம் விடை பெற்றுக்கொண்டு அதிபரின் காரியாலயத்தில் இருந்து வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க அவனது சிந்தனையோ அந்த சிறுவன் சொன்ன விடயங்களை சுற்றியே சுழன்றது, உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வரும்வரை பிரதர் Wilheim அமைதியாக இருக்கமாட்டார் என்று தோணியது ,அந்த உண்மைகள் கிழிக்கப்பட்ட பிரதிகளாக எங்கே ஒழிந்துகொண்டிருக்கின்றனவோ என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய வாகனத்தில் ஏறி இக்னீஷியனை உசுப்பினான், சிறிய கனைப்புடன் உயிர்பெற்ற வாகனம் மெதுவாக வேகமெடுத்தது  அவனது வாகன பக்ககண்ணாடியில் பாடசாலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்க அவனது நாவோ ஒரு வசனத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது  அது பைபிளில் பிரசித்தமான ஒரு வசனமான  "பாவத்தின் சம்பளம் மரணம்"     

(முற்றும் )

  • Like 9
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர்ந்து விடாமல் வாசிக்க வைத்த ஒரு வேகமான எழுத்துநடையுடன் கூடிய அமானுஷ்யக்கதை
யாழ் களத்தின் இன்றைய கதை நாயகன் அக்னி தான் 👏👏👏

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகச்சிறப்பான ஒரு திகில் கதையை தந்த அக்கினிக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்......!   🌹

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் சிறப்பான கதை .... மனமார்ந்த  பாராட்டுகளும் வாழ்த்துகளும்
அந்த கிழிந்த பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்ற குடைச்சல் தான் ....

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும்  நன்றிகள், நிச்சயமாக கிழிக்கப்பட்ட பிரதிகள் என்றோ ஒரு நாள் வெளிப்படும், பாகம் 2 இல்

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.