Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் டீன் ஏஜ் பெண்பிள்ளைகளை இலக்கு வைக்கும் கும்பல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் டீன் ஏஜ் பெண்பிள்ளைகளை இலக்கு வைக்கும் கும்பல்.

டெய்லி மிரர் பத்திரிகையில் இந்த கட்டுரை வந்துள்ளது.

15, 16 வயது பெண்களை சந்திக்கும், அவரது ஆண் நண்பர்கள், புத்தம்புதிய போனை கொடுத்து, உனக்கு வேண்டுமா என்று கேட்ப்பார்களாம்.

ஆம் என்று ஆர்வத்துடன் சொல்லும் பெண்ணிடம், அவரது, அந்தரங்க படங்களை பிடித்து கொண்டு வந்து காட்டினால் போன் உனக்கு என்று சொல்லி, படங்களை, போர்ன் தளங்களில் அப்லோட் செய்து பணம் சம்பாதித்து, பெண்ணுக்கு கொடுத்த போனின் பணத்தினையும் எடுத்து விடுகிறார்களாம்.

ஆனால், பெண்ணுக்கு, அதன் பின்னர் தான் தலைவலிகள் ஆரம்பமாகும் என்கிறது கட்டுரை.

ஒரு பெண், அது போன்ற தளங்களில் தனது படம் உள்ளது என அறிந்து, போலீசாரிடம் முறைப்பாடு செய்ய போக, அவரது இலக்கத்தினை பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், போன் செய்து தொந்தரவு செய்ய தொடக்கி விட்டாராம். 

முழு கட்டுரையையும் மொழிபெயர்க்க நேரமில்லை.

ஆனாலும், இங்கிலாந்தில் போலீசார் நல்ல ஒரு நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, பெண்களின் அந்தரங்க படங்களை இலத்திரனியல் ஊடங்களினூடாக அனுப்புவது குற்றம் என்றாலும், படங்கள், வன்முறையாக அல்லது பலாத்காரமாக எடுக்கப்படாவிடில், அதனை எடுத்து, அனுப்பிய பெண் மீது தான் குற்றம் என்றே சட்டம் பார்க்கும். 

இதுவே சரியாக படுகின்றது. 

இலங்கையில் புது போனுக்கு ஆசைப்பட்டு, படத்தை, சுஜமாக எடுத்து கொடுக்கும், பெண் மேலதான் தவறு சொல்ல வேண்டும்.   அதனை விடுத்து, அடுத்தவர்களை குறை சொல்லி என்ன பயன்.

http://www.dailymirror.lk/news-features/Porn-and-Nudes-Delving-into-Cyber-Exploitation-in-Sri-Lanka/131-206532

  • கருத்துக்கள உறவுகள்

மூவரிலும் குற்றமே,

பெற்றோர் கவனமாக அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டும், நாட்டு நடப்புகளை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்,

மகள் - தன் விருப்பங்களை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும், அளவுக்கு மீறிய ஆசை ஆபத்தானது, அந்தரங்களை படமெடுத்து அனுப்புமளவுக்கு அறிவில்லையா,

ஆண் - ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி இப்படிப்பட்ட செயலை செய்பவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

நமது சமூகம் ஏன் இப்படி மாறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

நமது சமூகம் ஏன் இப்படி மாறிவிட்டது.

தலைவன் இல்லா நாடும், தலைமை இல்லா வீடும் பாழ். இரண்டுமே அற்ற நமது சமூகம் மாறியதில் ஆச்சரியமில்லை.🤔 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nige said:

நமது சமூகம் ஏன் இப்படி மாறிவிட்டது.

இங்கு மட்டும்.உலகளாவிய பிரச்சனை. யூடியூபில் பணம் சம்பாதிக்கலாம் என்று புரிந்து விட்ட பிறகு, பல வழிகளில், ஆட்களை கவர, வியூ அதிகரிக்க முனைகிறார்கள்.

அண்மையில், சென்னையில் ஒரு கோஸ்டியினை கைது செய்துள்ளனர், போலீசார்.

அவர்கள் செய்வதும், மேலே உள்ள கட்டுரை போன்றதே. இளம்  பெண்களை பணம் கொடுத்து, மோசமாக கதைக்க வைப்பது. மோசமான, தனிப்பட்ட,அந்தரங்க, கேள்விகளை கேட்பதும்,அவர்களை மக்களே, பெண்களிடம் இருந்து எதிரிபார்க்காத பதில்களை வரவழைப்பதும் தான் அவர்களது வேலை. இந்த கேள்விகளும், அதன் மோசமான பதில்களும், இவர்களே முன்னதாக கொடுத்து விடுவார்கள். 

அய்யோ, இதெல்லாம் சொல்ல மாட்டேன் என்று முரண்டு பிடித்தால், 2000, 4000 ஆகும். ஆக பணம் வாங்கி நடிக்க வைப்பார்கள்.

ஆனாலும், ஒரு பெண், தவறை உணர்ந்து,போலீசில் முறையீடு செய்து, பணத்தினை தந்து தான் பேச சொன்னார்கள், ஆனால் கடைசியில் பயமுறுத்த தொடங்கி விட்டார்கள் என்று முறைப்பாடு, செய்ய, கம்பி எண்ணுகிறார்கள்.

போலீசாரின் எச்சரிக்கையினை அடுத்து, இப்படி கோஸ்டிகள்  பலர் மூடி விட்டு ஓடி விட்டார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஒரு Phone-க்காக Porn எண்டு சொல்லுங்க.

6 hours ago, Paanch said:

தலைவன் இல்லா நாடும், தலைமை இல்லா வீடும் பாழ். இரண்டுமே அற்ற நமது சமூகம் மாறியதில் ஆச்சரியமில்லை.🤔 

நமது சமூகத்தில்தான் இப்படி நடக்கிறது என்று செய்தியில் குறிப்பிடப்படவில்லையென்று நினைக்கிறேன்.

தொடர்பாடல்கள் வளராத காலத்திலயே புரோக்கர்கள் மூலம் பள்ளி மாணவிகளைகூட பாலியல் தொழிலில் இறக்குவது சிங்கள நகர பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. இப்போ சொல்லவும் வேண்டுமா?

சிங்கள ஏரியாக்களில். பாஷை தெரியாவிட்டாலும் பரவாயில்லை கழுத்தில் ஒரு சங்கிலியை வெளியே தெரியும்படி காண்பித்து ஒரேநாளில் ஜோடியை தேடிகிட்ட ரோமியோக்களும் இருந்திருக்கிறார்கள்

காலிமுக திடலிலும், தெஹிவளை மிருககாட்சி சாலையிலும் பல ஆயிரம்பேர் நடமாடிக்கிட்டிருக்கும்போதும், பார்த்து கொண்டு இருக்கும்போதும்  எதை பற்றியும் எவர்பற்றியும் கவலைபடாமல். என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

இந்த விஷயங்களில் வெள்ளைக்காரனைவிட ஒருபடி எப்போதோ அவர்கள் மேலே போய்விட்டார்கள்.

நமது சமூகத்திற்கும் இது படிபடியாக இனிமேல் பரவாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லைதான்.

6 hours ago, Nathamuni said:

இங்கு மட்டும்.உலகளாவிய பிரச்சனை. யூடியூபில் பணம் சம்பாதிக்கலாம் என்று புரிந்து விட்ட பிறகு, பல வழிகளில், ஆட்களை கவர, வியூ அதிகரிக்க முனைகிறார்கள்.

அண்மையில், சென்னையில் ஒரு கோஸ்டியினை கைது செய்துள்ளனர், போலீசார்.

அவர்கள் செய்வதும், மேலே உள்ள கட்டுரை போன்றதே. இளம்  பெண்களை பணம் கொடுத்து, மோசமாக கதைக்க வைப்பது. மோசமான, தனிப்பட்ட,அந்தரங்க, கேள்விகளை கேட்பதும்,அவர்களை மக்களே, பெண்களிடம் இருந்து எதிரிபார்க்காத பதில்களை வரவழைப்பதும் தான் அவர்களது வேலை. இந்த கேள்விகளும், அதன் மோசமான பதில்களும், இவர்களே முன்னதாக கொடுத்து விடுவார்கள். 

அய்யோ, இதெல்லாம் சொல்ல மாட்டேன் என்று முரண்டு பிடித்தால், 2000, 4000 ஆகும். ஆக பணம் வாங்கி நடிக்க வைப்பார்கள்.

ஆனாலும், ஒரு பெண், தவறை உணர்ந்து,போலீசில் முறையீடு செய்து, பணத்தினை தந்து தான் பேச சொன்னார்கள், ஆனால் கடைசியில் பயமுறுத்த தொடங்கி விட்டார்கள் என்று முறைப்பாடு, செய்ய, கம்பி எண்ணுகிறார்கள்.

போலீசாரின் எச்சரிக்கையினை அடுத்து, இப்படி கோஸ்டிகள்  பலர் மூடி விட்டு ஓடி விட்டார்கள்.

நீங்கள் சொல்வது சரிதான்.இந்த செய்தியை நானும் படித்தேன்.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலை மாறி எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, valavan said:

இந்த விஷயங்களில் வெள்ளைக்காரனைவிட ஒருபடி எப்போதோ அவர்கள் மேலே போய்விட்டார்கள்

இன்னும் இல்லை என நான் நினைக்கின்றேன். ஆனால் இனிவரும் காலங்களில் சாதனை படைப்பர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

அடுத்து வரும் காலங்களில் வீட்டில் இருக்கும் கணணிகளையோ தொலைக்காட்சிகளையோ நம்ப முடியாத காலம் வரும்.

ஐ மீன் சோபாவில் இருந்து மனிசி/காதலியோடை ரீவி பாத்துக்கொண்டு கையை சும்மா வைச்சிருக்கிறது பாதுகாப்பு. 😎

Vaadi Vethalai song | Veera Tamil Movie Scenes | Rajini | Roja | Janakaraj Vaadi Vethalai song, Veera Tamil Movie Scenes, Rajinikanth, Meena, Roja, veera tamil full movie, veera tamil full movie songs, veera movie video songs, veera tamil movie scenes, veera tamil movie comedy scenes, rajinikanth movies, rajini comedy scenes, rajinikanth songs, meena tamil movies, meena tamil songs, roja tamil movies, ilayaraja tamil hits, ilayaraja songs, rajini senthil comedy, janagaraj rajini comedy, livingston comedy, Mano hits, K S Chitra hits GIF

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

தொடர்பாடல்கள் வளராத காலத்திலயே புரோக்கர்கள் மூலம் பள்ளி மாணவிகளைகூட பாலியல் தொழிலில் இறக்குவது சிங்கள நகர பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. இப்போ சொல்லவும் வேண்டுமா?

80 களின் தொடக்கத்தில் பாடசாலை உடுப்புடன் யாழ் பஸ்தரிப்பு நிலையத்தில் எம்மவர்கள் இருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.